ஆனா கொஞ்ச நாள் சோர்வா இருந்தா.. இன்னைக்கு செக்கப் வரலாம்னு இருந்தோம் இப்படி ஆயிடுச்சு என வருத்தப்பட்டான்..
வாட் இஸ் திஸ் அபிஷேக் அது கூட தெரியாதா உங்களுக்கு?
இல்ல டாக்டர் தம்பிக்கு நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுது.. அந்த வொர்க் அலைச்சல தான் டயர்டா இருக்குன்னு நெனச்சோம் என்றான்..
எனிவேய்ஸ் அவங்களும் கொஞ்சம் வீக்கா இருக்காங்க…
நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்..
பார்த்துக்கோங்க வரேன் என்று சென்று விட்டார்…
சார் இந்த மெடிசின் எல்லாம் வாங்கிட்டு வாங்க..
இன்னும் கொஞ்ச நேரத்தில முடிச்சிட்டு வாங்க; ஜூஸ் மாதிரி குடுங்க; சலைன் போட்டு விட்டிருக்கோம் பாத்துக்கோங்க..
அதற்குள் விஷயம் அறிந்து சுகுமார் மற்றும் அரவிந்த் பிரகதி, குழந்தையுடன் வந்தனர்…
வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார் தேவகி.
வா ம்மா வந்ததும் எங்க வீட்டு வாரிசு அழிஞ்சு போச்சு..
நான் அப்போவே சொன்னேன் இவ வேண்டாம் ன்னு..யாரு கேட்டிங்க..
அம்மா என்ன பேசறீங்க.. நீங்க பேசறது ரொம்ப தப்பு அரவிந்த் கூற..
வேண்டாம் தேவகி கொஞ்சம் அமைதியா இரு சுகுமார் கூற..
என்னால முடியாது…
அமைதியா இருந்தே எல்லா செய்யறா..
இன்னும் என்ன எல்லாம் செய்ய காத்திருக்காளோ..
இன்னும் என்னென்னவோ வரம்பு மீறி பேசி விட்டார்..
அப்பொழுது தான் விஷயம் கேள்விப்பட்டு பிரகதி யின் பெற்றோர் வர தேவகி பேசுவதை கேட்டு அதிர்ந்தனர்..
கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆச்சு அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா என்று அதிர்ச்சி..
சம்பந்தி அம்மா நீங்க எங்க பொண்ண பத்தி தெரிஞ்சும் இப்படி பேசறீங்க..
கௌசல்யாவும் திரும்பி பேச; வாக்குவாதம் ஏற்பட்டது… இறுதியில்
வா நம்ம வீட்டுக்கே போகலாம் என்று கௌசல்யா பிரகதி கையை பிடித்துக் கொண்டு சென்று விட்டார்… அம்மா கைய விடுங்க என்று விடுவிக்க முயன்று கொண்டே கூற..
நீ அமைதியா வா.. இந்த அம்மா உன்ன பேசியே ஒரு வழி ஆக்கிடுவாங்க..
பிரகதி என்று அரவிந்த் அழைக்க..
அதை சட்டை செய்யாமல் அவளை இழுத்துக் கொண்டே சென்று விட்டார் கௌசல்யா..
பிரகதி கெஞ்சியது கண்டு கொள்ளவே இல்லை…
அரவிந்த் அவளை அழைப்பதற்கு போக..
பாத்தியா அவளே நீ வேண்டாம்னு அவ அம்மா கூட போறா? நீ ஒன்னும் அவள கூப்பிட வேண்டாம்..
அவங்க பொண்ண அவங்களே வெச்சிக்கட்டும்…
அம்மா என்ன பேசறீங்க?
இவ்வளோ வன்மம் இருக்கக்கூடாது என்று அவன் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்…
சம்பந்தி எங்கள மன்னிச்சிடுங்க என்று சுகுமாரிடம் கையெடுத்து கும்பிட…
தப்பு ரெண்டு பக்கமும் தான் இருக்கு..
இதுல யாரு யாரை குற்றம் சொல்லறது…
நாங்க எல்லாம் பிரகதிக்கு தானே சப்போர்ட்டா இருந்தோம்..
எதுக்கு இந்த அவசர முடிவு…
தேவகி பேசுனது தப்பு தான் அதுக்காக விட்டுட்டு போனா சரியா போயிடுமா?
என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்பாக நின்று இருந்தார்கள் அருணாச்சலதின் குடும்பம்…
கண்ணன் அரவிந்த் அருகே சென்று ” மாப்பிள்ளை எங்கள மன்னிச்சிடுங்க” முதல்ல இங்க பாருங்க; இந்த பிரச்சினை முடிஞ்ச அப்புறம் நாங்க பேசறோம் என்று சென்று விட்டார்கள்..
ஆசை ஆசையாக திருமணம் செய்து ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டதா?
அவர்கள் சென்ற பிறகும் அவர்களை பேசிக் கொண்டிருந்த தேவகியை பார்த்து நிஜமாவே நீங்க என் அம்மா தானா.. உங்க கிட்ட நான் இத எதிர் பார்க்கல.. நீங்க எடுக்குற முடிவு யாரையும் கஷ்டப்படுத்தாது..
ஆனா இப்போ என்ன ஆச்சு..
எனக்கு அவள தான் பிடிக்கும் ன்னு தெரிஞ்சும் இப்படி பேசறீங்க
என்று கூறி கோவமாக வெளியேறி விட்டான்…
அப்பொழுது
தான் மெடிக்கலில் மருந்து வாங்கிக்கொண்டு மேலே வந்தான் அபிஷேக்..