வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௰௫ (15)

5
(8)

அம்பு – ௰௫ (15)

“இன்னும் கொஞ்ச நாள்ல மறுபடியும் நேஷனல் சாம்பியன்ஷிப் ஈவன்ட் வருது கா.. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்..”

வில்விழிக்கோ வித்யாவை கண்டு வியப்பு மேலிட்டது.. ஒரு பெண்ணால் இத்தனை கொடுமைகளை அனுபவித்த பிறகு எப்படி இவ்வளவு விரைவில் அதிலிருந்து மீண்டு இப்படி சாதாரணமாக பேச முடிகிறது..?

இத்தனைக்கும் வில்விழி மிகவும் தைரியமான பெண் என்று பெயர்.. அவள் கூட தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் நிச்சயம் உடைந்து நொறுங்கியே போயிருப்பாள்..  அதிலிருந்து மீளவே ஒரு வாழ்க்கை முழுவதும் தேவைப்பட்டிருக்கும்..

ஆனால் இந்தப் பெண் எவ்வளவு நம்பிக்கையோடு பேசுகிறாள் என்பது அவளுக்கு வியப்போடு சேர்ந்து மகிழ்ச்சியையும் தந்திருந்தது..

“வாவ் சூப்பர்.. ஆல் தி பெஸ்ட்.. நிச்சயமா இந்த முறை நீ தான் நேஷனல் சாம்பியன்..”

அவள் வித்யாவின் கன்னத்தை தட்டி சொல்ல வித்யாவோ கண்களில் ஒளி மின்ன “தேங்க்ஸ் கா” என்றாள்..

அப்போது அங்கு தூரத்தில் லக்ஷ்மனோடு பேசிக் கொண்டிருந்த இந்தரை பார்த்து வித்யா சற்றே கண்கள் கலங்க “ஆக்ச்சுவலா அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு ரொம்ப நொறுங்கிப் போய்  முடங்கி போயிட்டேன்கா.. நான் அகாடமிக்கு வராதப்போ நீங்க என்னை தேடி வந்து எனக்கு ஆறுதல் சொல்லி அந்த பொறுக்கிங்க மேல கேஸ் போட்டு என்னை கோர்ட்டுக்கு வந்து நடந்ததை சொல்ல சொன்னீங்க.. ஆனா என்னால கோர்ட்டுக்கு வர முடியல..”

அவள் உண்மையான வருத்தத்தோடு சொல்ல வில்விழியோ “ஹான்.. இந்தர் சொன்னாரு.. நீ ஏன் வரலன்னு.. இட்ஸ் ஓகே.. நீ அந்த இன்ஸிடன்ட்டை கடந்து வந்ததே பெரிய விஷயம்..” என்றாள்..

“உங்களுக்கு என் மேல எவ்வளவு கோவம் இருந்திருக்கும்ன்னு எனக்கு தெரியும்.. அதான் மனசு கேட்காம உங்களுக்கு ஃபோன் பண்ணி ஏன் வரலன்னு சொல்லிடலாம்னு பண்ணினேன்.. ஆனா உங்க ஃபோனை ரீச் பண்ண முடியல..  அப்பதான் இந்தர் சாருக்கு ஃபோன் பண்ணி அவங்க அந்த வீடியோவை வெச்சு மெரட்டுனதெல்லாம் சொன்னேன்.. இனிமே இந்த பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்னு சொல்லி அதோட எல்லாத்துக்கும் முழுக்கு போட்றலாம்னு தான் இருந்தேன்..”

அவள் கண்ணில் ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.. அதைத் துடைத்து விட்டாள் வில்விழி..

“ஆனா இந்தர் சார்.. நீங்க.. ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் அக்கா.. நீங்க எப்படி  எனக்கு நடந்து கொடுமையை பத்தி தெரிஞ்சப்ப எனக்கு ஆறுதல் சொல்லி என்னை அதில இருந்து மீட்க முயற்சி பண்ணிங்களோ அதே போல தான் அவரும்.. அவர் மட்டும் மறுபடி என்னை தேடி வந்து இருக்கலைன்னா அப்படியே என் வீட்டிலேயே அடைஞ்சு கிடந்து மனப்புழுக்கத்திலேயே செத்துப் போயிருப்பேன் கா..  ஆனா அவர் என்னை அப்படி இருக்க விடல.. என் வீடு தேடி வந்து எங்க அம்மா அப்பாவை சமாதானப்படுத்தி என்னையும் மோட்டிவேட் பண்ணி மறுபடியும் ப்ராக்டிஸ்க்கு வர வச்சாரு.. நான் இதையெல்லாம் தாண்டி நேஷனல் சாம்பியன் ஆனா தான் உலகத்தையே என் பக்கம் திரும்பி பார்க்க வைக்க முடியும்னு சொன்னார்.. இப்போ லக்ஷ்மண் சார் தான் எனக்கு கோச்சிங் பண்ணிட்டு இருக்காரு.. இந்த முறை நிச்சயம் வின் பண்ணிடுவேன் கா..”

“அதான் எனக்கு தெரியுமே..” அவள் தலையை வாஞ்சையோடு வருடியவளுக்கு தன்னவனை நினைத்து பெருமை பிடிபடவில்லை.. அவன் மீது இருந்த காதல் இன்னும் இன்னும் பன்மடங்காய் பல்கி போனது..

வித்யா அங்கு இருந்த மற்றொரு மாணவியோடு அவள் ஏதோ கேட்கிறாள் என்று பதில் சொல்ல திரும்ப அந்த நேரம் தன்னவனை காதலோடு விழுங்குவது போல் பார்த்திருந்தவளின் பார்வை தன் மீது படிவதை உணர்ந்து அவள் புறம் திரும்பினான் இந்தர்..

முதலில் அவனிடம் மாட்டிக் கொண்டோமே  என்று ஒரு கண்ணை மூடி “ஸ்ஸ்.. ஹைய்யோ.. சொதப்பிட்டியேடி விழி..” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு நாக்கை கடித்துக் கொண்டவள் அடுத்த நொடியே பளீரென அவனை பார்த்து புன்னகைத்தாள்..

அவனோ அவளின் ஆழப் பார்வையின் அர்த்தம் புரியாது இரு புருவங்களையும் உயர்த்தி என்னவென்று கேட்க

தலையை இடவலமாய் ஆட்டி ஒன்றும் இல்லை என்றவள் தன் கட்டை விரலையும் சுட்டு விரலையும் இதய வடிவில் சேர்த்து காண்பித்து அவனை மொத்தமாய் திக்கு முக்காட செய்திருந்தாள்..

அதற்குள் அவள் புறம் திரும்பியிருந்த வித்யா “ஆமா.. நீங்க எங்க அக்கா போயிருந்தீங்க இவ்வளவு நாளா? நீங்க இல்லாம சார் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு கா.. அகாடமி பக்கமே வரலை.. அப்படியே வந்தாலும் எதிலயும் கவனம் இல்லாம ஒரு மாதிரி வாழ்க்கையே சூனியமான மாதிரி ரொம்ப விரக்தியா இருந்தாரு.. இப்பதான் அவர் மூஞ்சில அந்த பழைய லைட்டை பாக்க முடியுது.. ரொம்ப சந்தோஷமா இருக்கு கா..”

“ம்ம்.. எனக்கும் புரியுது.. நான் ஆஸ்திரேலியால இருந்தேன் டா.. சம்யுக்தா அகாடமி இருக்குல்ல..?”

“தெரியும்.. அப்போ.. அந்த வர்ல்ட் சாம்பியன்ஷிப்ல சில்வர் மெடல் வாங்கின வில்விழி நீங்கதானா? நான் முகத்தை சரியா பாக்கல.. பேரை மட்டும் கேட்டுக்கிட்டேன்.. முகத்தை பார்த்திருந்தேனா நீங்கன்னு தெரிஞ்சிருக்கும்..”

“ம்ம்.. ஆமா.. எவ்ளோ தடைகள் வந்தாலும் அதை உடைச்சு நம்ம கனவை ஜெயிக்கிறது நம்ம கைல தான் இருக்கு.. நான் என் கனவை அடைஞ்சிட்டேன்.. ஆனா அதுக்கு நிறைய சாக்ரிஃபைஸ் பண்ண வேண்டி இருந்தது.. ஆனா உன்னோட லாஸ் ரொமப பெரிசு.. இந்த ஆர்ச்சரிக்காக நீ இழந்தது ரொம்ப அதிகம்..  உனக்கு இந்த சாம்பியன்ஷிப் அவார்ட்ஸ் இதெல்லாம் தான் உன் வாழ்க்கையில மறுபடியும் அந்த பழைய சந்தோஷத்தை மீட்டு கொடுக்கும்.. அதை விட்டுறாதே.. எதுக்காகவும் விட்றாத.. மேலமேல முன்னேறி போயிட்டே இரு.. யாரு எது சொன்னாலும் கவலைப்படாத.. நீ உயரத்தை ரீச் பண்ண அப்புறம் எல்லாரும் உன் பின்னாடி வருவாங்க..”

அவள் சொன்னதை கேட்ட வித்யாவுக்கு மனதில் புது தெம்பே கிடைத்தது..

“நிச்சயமா கா.. இந்த வாட்டி கோல்ட் மெடல் ஜெயிச்சுட்டு தான் வருவேன்..” என்று தன்னம்பிக்கையோடு சொன்னவளை பெருமையாய் பார்த்தாள் வில்விழி..

“தட்ஸ் லைக் மை கேர்ள்..” என்று சொல்லி அவளை தீவிரமாய் பயிற்சி செய்ய சொல்லிவிட்டு வெளியே லக்ஷ்மனுடன் பேசிக் கொண்டிருந்த இந்தரிடம் வந்தாள்..

“ஹாய் லக்ஷ்மன்.. எப்படி இருக்கீங்க..?”

ஒரு  சினேகமான புன்னகையுடன் அவள் கேட்க “நல்லா இருக்கேன் மேடம்.. நீங்க எப்படி இருக்கீங்க? நீங்க திரும்பி வந்தது ரொம்ப சந்தோஷம் மேடம்.. இப்ப தான் சார் முகத்திலயும் திரும்ப உயிர் வந்த மாதிரி இருக்கு..” என்றான்..

அவன் எப்போதுமே அதிகமாக பேச மாட்டான்.. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் அவன்..

“சரி மேடம்.. நான் போய் பசங்களை பார்க்கிறேன்..” என்று சொல்லிவிட்டு வழக்கம் போல அங்கிருந்து நழுவிக்கொண்டான்..

“சரி.. வாங்க வீட்டுக்கு போலாம்.. வீட்டுக்கு போய் சக்தியை அழைச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போகணும்..” எனவும் இருவரும் அவர்கள் புல்லட்டை விட்டு இருந்த பார்க்கிங்கிற்கு வந்தார்கள்..

அவன் வண்டியை எடுக்க போக அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் அவள்..

“என்னடி.. இப்போவும் நீ தான் ஒட்ட போறியா? நீயே ஓட்டு.. நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேன்..” என்று நகர போனவனை மறுபடியும் பிடித்து இழுத்தவள் அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள்..

அவனுக்கு அவள் கண்கள் கலங்கியது போல் தோன்ற அவள் முகம் நிமிர்த்தி பார்த்தான் அவன்.. நினைத்தது போலவே அவள் கண்கள் கலங்கித் தான் இருந்தன..

“என்னம்மா என்ன ஆச்சு? சொல்லுடா.. யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா? வித்யா கிட்ட தானே பேசிகிட்டு இருந்தே.. அவ ஏதாவது சொன்னாளா?”

அவள் நாடி பிடித்து அவன் கேட்க “இல்ல.. நான் தான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. வித்யாவை மோட்டிவேட் பண்ணி மறுபடியும் விளையாட வச்சது ரொம்ப பெரிய விஷயம்.. ரொம்ப பெருமையா இருக்கு.. ஐ ஆம் சோ ப்ரவுட் ஆஃப் யூ இந்து..” என்றவள் அவன் கன்னத்தில் கை வைத்து  மற்ற கன்னத்தில் எக்கி நின்று ஆழமாய் இதழ் பதித்தாள்..

“ஏய் என்னடி.. அகடமி டி இது.. மேடம் ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் இது ஆஸ்திரேலியா இல்ல இந்தியா..” என்றான் அவன் கிண்டலாக..

ஆனால் உள்ளுக்குள் படபடவென சந்தோஷ சரவெடி வெடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு..

“தெரியும்.. அதான் இங்க யாரும் இல்லையே.. அப்படியே இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. என் புருஷன்.. எனக்கு முத்தம் கொடுக்கணும் போல இருந்தது.. கொடுத்தேன்..  ஆனா ஒருவேளை இந்த முத்தத்தை எனக்கு திரும்ப கொடுக்கணும் போல இருந்தா அது..க்..கு…… யூ ஆர் ஸ்ட்ரிக்ட்லி நாட் அலவுட் ஜென்டில்மேன்.. ரூல்ஸ் ஆர் ரூல்ஸ் மிஸ்டர்.இந்தர்”

அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து இதழுக்குள்  புன்னகைத்த படி அவன் கன்னத்தை விரலால் வருடி சொன்னவள் அவன் மார்பில் தன் சுட்டு விரலை வைத்து அவனை தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்திவிட்டு “வாங்க போலாம்..” என்று சொல்லி வேகமாய் வண்டியை நோக்கி நடந்தாள்..

இப்போதும் அவள் திமிர் அவனை ஈர்க்கத்தான் செய்தது..

“ஷிட்.. ஐ லவ் ஹர் மேட்லி..”

தன் கேசத்தை முன்னிருந்து பின்னாய் கோதியபடி சொன்னவன் அவளை பின்தொடர்ந்து போனான்..

இருவரும் வீட்டுக்கு வந்து சக்தியை அழைத்துக் கொண்டு விழியின் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டார்கள்..

மார்க்கண்டேயன் ஹால் சோஃபாவில் அமர்ந்து இருந்தார்..

“ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?  போறதுக்கு முன்னாடி எங்க போறீங்கன்னு வீட்ல சொல்லிட்டு போகணும்னு தெரியாதா?”

எப்போதும் இருக்கும் மிடுக்கோடு மார்க்கண்டேயன் கேட்க விழி “சொல்லிட்டேனே மாமா..  யார் கிட்ட சொல்லணுமோ அவங்க கிட்ட சொல்லிட்டேன்..” என்க

அவரோ சகுந்தலாவை திரும்பி பார்க்க “ஆமாங்க.. இப்பதான் அகடமிக்கு போயிட்டு வந்தப்புறம் சொன்னாங்க.. நான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு தான் நினைச்சேன்.. அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க..”

சகுந்தலா சொன்னதை கேட்டவர் “அகடமிக்கு போனாங்களா?” என்று கேட்க “ஆமா மாமா.. அதையும் அத்தை கிட்ட சொல்லிட்டு தான் போனோம்..”

முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சகுந்தலாவை பார்த்தபடி அவள் சொல்ல மார்க்கண்டேயனோ சகுந்தலாவை பார்க்க “அது.. இந்தர் கூட இங்க இருக்கிற அகாடமிக்கு தானே போறான்னு உங்ககிட்ட சொல்லலைங்க..” சங்கடமாய் தயக்கத்தோடு சொல்லி இருந்தார் சகுந்தலா..

“எதுக்கு மாமா சொல்லணும்? முன்னெல்லாம் வெளியே போகிறப்போ உங்ககிட்ட தான் பர்மிஷன் வாங்கிட்டு போவோம்.. அப்பல்லாம் நீங்க என்ன ஒவ்வொரு முறையும் அத்தையை கூப்பிட்டு சொல்லிக்கிட்டா இருந்தீங்க..? சில சமயம் இந்தரையும் ப்ருத்வியையும் ஆஃபீஸ்லருந்து நேரா வெளியூருக்கு அனுப்பிருவீங்க.. அவங்களுக்கு நைட்டு சாப்பாட்டையும் செஞ்சி வச்சுட்டு அத்தை காத்திட்டிருப்பாங்க.. அப்புறம் ரெண்டு பேரும் எங்களுக்கு ஃபோன் பண்ணி சொன்ன பிறகு நாங்க அத்தை கிட்ட சொல்லுவோம்.. இப்ப அத்தை மட்டும் எதுக்கு மாமா உங்ககிட்ட சொல்லணும்?”

ஒவ்வொரு முறையும் இந்தரும் பிருத்வியும் வெளியூருக்கு போகும் போது மார்க்கண்டேயனிடம் சொல்லிவிட்டு தான் செல்வார்கள்.. ஆனால் சகுந்தலாவிடம் அதைப் பற்றி மூச்சு கூட விட மாட்டார் அவர்..  அப்படி சொல்வது அவரை பொறுத்தவரை கௌரவ குறைச்சல்..

“ஆனாலும் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லணும்னு தோணுது மாமா.. இன்னிக்கு நைட் இந்தர் என்னோட எங்க அம்மா வீட்டுல தங்க போறாரு.. “

அவள் பேசியதை கேட்டு அதிர்ந்து கண்ணை மூடி திறந்த மார்க்கண்டேயன் படித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை அப்படியே அங்கிருந்த மேஜை மேல் தூக்கிப் போட்டுவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்..

அந்த வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று.. தங்கள் மனைவியின் பிறந்த வீட்டிற்கு இந்தரும் சரி பிருத்வியும் சரி மார்க்கண்டேயனின் அனுமதி கேட்டு செல்லலாம்.. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது.. இரவு  மனைவியின் பிறந்த வீட்டில் தங்குவதெல்லாம் அந்த வீட்டை பொறுத்தவரை மன்னிக்க முடியாத குற்றம்..

அப்படியான நேரங்களில் தன் தந்தையின் முன் பேசாது அவருக்கு ஆமாம் சாமி போடும் இந்தர் சொன்னது போலவே அவளை பிறந்த வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்து விடுவான்..

ஆனால் இரவு எல்லோரும் தூங்கிய பிறகு யாருக்கும் தெரியாமல் வில்விழியின் பிறந்த வீட்டிற்கு  வருபவனை வில்விழி வாசலோடு நிறுத்தி திரும்பி போய்விடும் படி சண்டை இடுவாள்..

“பொண்டாட்டியோட பொறந்தவீட்டுக்கு ஏதோ சின்ன வீட்டுக்கு வரப்போல எதுக்கு ஒளிஞ்சு ஒளிஞ்சு வரணும்..? போய் உங்கப்பா கிட்ட சொல்லிட்டு வாங்க.. இல்லன்னா அங்கயே இருந்துக்கங்க..” என்று சொல்லி அவனை வீட்டு வாசலில் நிறுத்தி வைப்பாள்..

வில்விழியின் அன்னை வாசுகியோ கணவன் மனைவி இடையி்ல் நிற்காமல் அவர்களுக்கு தனிமை கொடுத்து உள்ளே சென்று விடுவார்..

அவனோ தன் தந்தையின் முன் மட்டுமே நல்ல பிள்ளையாய் அடங்குபவன் ஆயிற்றே.. அவளை பார்த்தால் எப்போதும் போல முரட்டு காதலனின் அவதாரத்தை  எடுத்து விடுவான்.. அவளுடைய அன்னை விலகி சென்று தனிமை கிடைத்த நொடி அதிரடியாய் வீட்டுக்குள் நுழைபவன் அவளை அப்படியே தன் கையில் ஏந்தி அவளின் அறைக்கு தூக்கி சென்றுவிடுவான்..

“இந்தர்.. விடுங்க..” என்ற படி அவனுடைய அன்பு கட்டிலிருந்து வெளிவர திமிறுவாள் தான்.. ஆனால் ஒரு நாளும் அவளால் அதிலிருந்து வெளி வர முடிந்ததே இல்லை.. அவளின் அறைக்குள் அவளை தூக்கி வருபவன் அவனோடு வார்த்தை போரிடும் அவள் அதரங்களை தன்  இதழ்களால் அடைத்து முத்தப்போர் புரிய தொடங்கி விடுவான்..

அதன் பிறகு அவள் எங்கே சண்டையிடுவது.. வாரத்தை யுத்தம் காதல் போராகி கட்டில் போராகி விட அவனின் அடாவடி காதலில் மொத்தமாய் தோற்று போவாள் மலரவள்.. விடியும் வரை அவளை தன் அணைப்புக்குள் இறுக்கியபடியே உறங்கி போவான் அவனும்..

சில நேரங்களில் இந்த அதிரடி அணைப்புகளையும் இதழ் ஆக்கிரமிப்புகளையும் தாண்டி அவனோடு சண்டையிட்டு அவள் தனியாக தரையில் படுப்பாள்.. ஆனால் எப்போதும் போல அவளை தூக்கி கட்டிலில் தன் மார்புக்கூட்டுக்குள் பூட்டியபடி உறங்கிடுவான்.. அல்லது தானும் தரையில் படுத்து  பின்னாலிருந்து அவளின் இடைவளைத்து அணைத்து அவள் முதுகோடு அட்டை போல ஒட்டிக்கொள்வான்..

பின் கழுத்தில் அவன் மூச்சுக்காற்றின் வெப்பமும் அவன் மெல்லிய இதழ் உரசல்களும் அவளின் பேச்சுரிமைக்கு மொத்தமாய் தடை போட்டு விடும்.. அவள் கோவத்தின் சூட்டை மொத்தமாக தணித்துவிடும் அந்த மோக தாக்குதல்கள்..

இரவு முழுவதும் தன் அணைப்புக்குள்ளேயே அவளை சிறைப்படுத்தி வைப்பவன் அடுத்த நாள் விடியலில் தன் வீட்டுக்கு வந்து விடுவான்..

அவனின் இந்த அடாவடி அன்பு தான் வில்விழியின் பலவீனம்.. அவன் அதிரடியாய் அவளை இப்படி ஆளும்போது அவளால் அந்த ஆளுமையை எதிர்த்து உடைத்து வெளிவர முடிவதில்லை.. அதனால் தான் மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது தன்னவனை சேர்ந்தாலும் அவனுடைய அதிரடி அன்பு தன்னை பலவீனப்படுத்த விடாமல் அவர்களுக்குள் ஒரு எல்லை கோட்டை வரைந்து அவனை சற்று தள்ளியே நிறுத்தி இருந்தாள்..

இப்போது இந்தருக்கு தன் தந்தையின் கோப முகம் பார்க்க நேர்ந்தாலும் இப்படி அவரிடம் சொல்லிவிட்டு வில்விழியின் பிறந்த வீட்டிற்கு செல்வது சற்று நிம்மதியை தான் தந்திருந்தது..

அந்த நொடி முன்னர் விழியின் வீட்டிற்கு போகும்போதும் இப்படியே தன் தந்தை கோவமுகம் காட்டினாலும் அதை எதிர்கொண்டு அவரிடம் ப்ருத்வி நேரடியாய் சொல்லிவிட்டு போவது போல போயிருக்கலாமோ என்று முதல் முறையாக யோசித்தான்..

வில்விழியின் பிறந்த வீட்டிற்கு சக்தியோடு கிளம்பினார்கள் இருவரும்.. அவர்களுக்கு வில்விழி திரும்பி வந்தது கூட தெரியாது.. அதுவும் அவள் இரண்டு வயது குழந்தையோடு திரும்பி வந்திருப்பதை அறியும்போது அவர்கள் எதிர்வினை எப்படி இருக்குமோ என்ற படபடப்போடும் எதிர்ப்பார்ப்போடும் இந்தரோடும் சக்தியோடும் தன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் வில்விழி..

அம்பு பாயும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!