உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Leave a Comment / E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்), உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் / By Competition writers 4.8 (9) அத்தியாயம் 26 ஃபோன் சத்தம் கேட்டு கண் விழித்தான் அரவிந்த்.. அழைத்தது என்னவோ ரகு தான்.. கால் அட்டெண்ட் செய்து ” ஹாய் சார் எப்படி இருக்கீங்க? அப்புறம் மேரேஜ்க்கு வரவே இல்லையே?” சாரி அரவிந்த் அந்த மர்டர் கேஸ்ல கொஞ்சம் பிஸி.. ஹேப்பி மேரிட் லைஃப்..பிரகதி இருக்காங்களா நான் விஷ் பண்றேன் என்று கேட்க? சார் அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா.. நான் எங்க வீட்ல இருக்கேன் என்றான்.. வாட் கல்யாணம் ஆகி ரெண்டு நாள் தான் ஆகுது அதுக்குள்ள என்ன ஆச்சு மேன் என்று கேட்க? நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்.. ஓ மை காட் எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது பா.. சார் கிண்டல் பண்றீங்களா? ஓகே அத விடு நான் ஒரு விஷயமா தான் கால் பண்ணேன். அந்த மர்டர் பண்ண ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணிட்டோம்.. இந்த வீக் கேஸ் கோர்ட்க்கு போகும்.. அந்த டைம்ல பிரகதி வந்து சாட்சி சொல்லனும்.. நீங்க பிரகதிய அழைச்சிட்டு வரணும் என்றான் ரகு.. அரவிந்த் யோசித்தான்.. என்ன யோசனை? நீங்க ரெண்டு பேரும் பேசிக்க சான்ஸ் தானா அமையுது என்று ரகு கூற. அப்படியா சொல்றீங்க என அரவிந்த் யோசித்தான்… ஆமா இந்த பொண்ணுங்க எல்லாம் பொண்டாட்டி ஆயிட்டா நாம் தான் மன்னிப்பு கேட்கனும் என்றான் ரகு.. சரி அனுபவசாலி சொல்றீங்க நான் ட்ரை பண்றேன் என்றான் அரவிந்த்.. பை த வே என் வைஃப மஹி அண்ட் உங்க வைஃபை பிரகதி கிளாஸ் மேட்ஸ்.. யுஜி ஒரே காலேஜ் தான்.. பிரகதி கண்டின்யூ பண்ணல கான்டேக்ட் விட்டு போயிட்டுசுன்னு சொன்னா… உங்க மேரேஜ்க்கு கூட்டிட்டு போலன்னு ஒரே சண்டை.. பேசவே இல்லை… இன்னைக்கு தான் சாமாதானம் செய்யனும் என்று கூறி சிரித்துக் கொண்டான்.. புதன் கேஸ் ஹியரிங் வருது.. நாம் வியாழன் மீட் பண்ணலாம்.. உங்க மேரேஜ்க்கு ஒரு சின்ன ட்ரீட் என்றான் ரகு.. சார் நான் தான் ட்ரீட் தரனும் ஆனா என்று கூறி முடிப்பதற்குள்.. அரவிந்த் உங்கள பார்த்தா ஒரு ப்ரதர் ஃபீல் வருது.. யாரு ட்ரீட் கொடுத்தா என்ன எனக்கு என் வைஃப் சந்தோசம் தான் முக்கியம் என்றான்.. இது அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆஹ் இருக்கட்டும் என்றான்.. நான் ப்ளேஸ் எதுன்னு கண்ஃபோர்ம் பண்ணிட்டு சொல்றேன் என்று சொல்லி, சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.. ரகு வீட்டில்; ஏய் மஹி ஒரு காஃபி குடு டி என்றான்..அவன் அருகே அமர்ந்து தான் அவளும் காஃபி குடித்துக் கொண்டு இருந்தாள்; அவன் கூறியது அவள் கேட்டது போலவே தெரியவில்லை… இவளோட முடியல என்று சலித்துக் கொண்டே அவளுடைய காஃபி கப்பை அவளிடம் இருந்து வாங்கி அவன் குடித்தான்.. அவனை முறைத்தாள்.. என்ன டி முறைப்பு.. நீ வேற காஃபி போட்டுக்கோ என்று சிரித்துக்கொண்டே… இன்னொரு காஃபி போடலாம் என்று கிட்சனுக்கு சென்றாள்.. கபோர்டில் இருந்து காஃபி பவுடரை எடுத்து திரும்ப அவன் மிக அருகில் நின்று இருந்தான்.. இதை சற்றும் எதிர்பாராத மஹி விருட்டென்று உடல் தூக்கி போட்டது.. நான் தான் டி ஜஸ்ட் ரிலாக்ஸ் என்றான்.. அப்படியே அவளை சுவற்றில் சாய்ந்து மூக்கோடு மூக்கு உரச நின்றான்… இப்ப பேசுங்க மேடம் என்று இரண்டு கைகளாலும் அவளுக்கு அணை கட்டினான்.. இப்ப சொல்லு காஃபி குடுக்க மாட்டியா? இவ்வளோ பக்கத்துல தான் கேக்கனுமா? ஆமா டி ! அப்படியா! இந்தாங்க என்று அவன் கன்னத்தை திருப்பி நறுக்கென்று கடித்து விட்டாள்.. ஏய் ரௌடி ! இப்ப பாரு டி என்று அவளை தூக்கிக்கொண்டு வேறு அறைக்குள் சென்று கட்டிலில் அவளை படுக்க வைத்து விட்டு கதவை லாக் செய்தான்… உனக்கு ஆபிஸ் டைம் ஆகலையா? இன்னும் டைம் இருக்கு. நீ சொல்லு எனக்கு காஃபி ஏன் தரல? நீ கொடுக்கல அதான் நானே தரேன் என்று அவளுக்கு முத்தத்தில் ஆரம்பித்து மொத்தமாக கொடுத்தான்..அவனை அனைத்துக் அவள் படுத்திருந்தாள்… உச்சியில் முத்தம் கொடுத்து ” உனக்கு இந்த வீக் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” எனக்கும் புதன் வரைக்கும் கொஞ்சம் பிஸி .. என் கூட சண்டை போடக்கூடாது ஓகே ஆஹ்.. ம்ம் சரி? உன் ஃப்ரெண்ட் மேரேஜ் அப்ப நான் எவ்ளோ பிஸின்னு தெரிஞ்சும் நீ பேசமா இருந்த தான.. சாரி டா ஹர்ட் பண்ணிட்டனா? இல்லை இனி மேல் இப்படி நிறைய சண்டை போடுவியாம் நான் உன்கிட்ட வந்து இந்த மாதிரி காஃபி குடுப்பனாம் சரியா? ச்சீ போங்க என்று இன்னும் இருக்கமாக அணைத்துக்கொண்டாள்… அரவிந்த் வீட்டில்; அவன் தயாராகி கீழே வந்தான்… சுகுமார் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.. தேவகி அழுத கண்களை துடைத்துக் கொண்டாள்… அப்பா கடைக்கு போகலையா? இல்லை ப்பா பாத்துக்க சொல்லிட்டு வந்திருக்கேன்.. இங்க வந்து உட்காரு டா.. ஏதாவது பேசணுமா அப்பா? ஆமா , பிரகதியோட அப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை பெங்களூர் ஹாஸ்பிடல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்காங்க… அவங்க பெரியப்பா பெரியம்மா ஒரு ஃபங்ஷன்க்கு போகனும்.. முக்கியமான உறவாம்.. எப்படியும் ஒன் வீக் ஆகும்.. நீ போயிட்டு பிரகதி கூட ஸ்டே பண்றியா? ஏன்னா அந்த கேஸ் கோர்ட்டுக்கு வருதாம் ; காலையில அருணாச்சலம் கூப்பிட்டு பேசினாரு… இதையெல்லாம் தேவகி கேட்டுக்கொண்டே தான் இருந்தார்.. ஆனாலும் எதுவும் சொல்லவில்லை.. அவர் கூறினாலும் இப்போது கேட்கும் நிலையில் யாரும் இல்லை; அதனால் அமைதியாக இருந்தார்… நீயும் ஒன் வீக் லீவ் தானே என்று கேட்டார்… நான் சொல்றத கேக்காமல் போனா தானே.. நான் மட்டும் எதுக்கு போகனும் ப்பா! அது தப்பு தான்.அதுக்காக இப்படியே இருக்க முடியுமா? அவங்க இங்க கொண்டு வந்து விடறேன் ன்னு தான் சொன்னாங்க… நான் தான் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிக்க நல்லா இருக்கும்னு சொன்னேன் என்றார் சுகுமார்.. கண்களை மூடி யோசித்தான்.. உனக்கு பிடிக்கலன்னா வேண்டாம்.. நான் அவங்க கிட்ட சொல்லிடறேன்.. ரொம்ப சீன் போட வேண்டாம்.. அப்புறம் அப்பா மனசு மாறிடுவார்… சரி நீங்க சொல்றதுக்காக நான் போறேன்.. அவங்க எப்ப கிளம்பிறாங்க? இன்னைக்கு ஈவினிங் தான் கிளம்பிறாங்க… சரி ஓகே பா.. அபி கிட்ட பேசுறீங்களா? பேசிட்டேன் டா.. இப்ப அங்க கொஞ்சம் ஓகே தான்.. அவன் வொர்க் ஃப்ரம் ஹோம் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டான்… ஓகே அப்பா நான் 3மணிக்கு கிளம்பி போறேன் என்றான்.. உன் அம்மா கிட்ட சொல்லிட்டு போ ! நான் கடைக்கு போயிட்டு வரேன் என்று கிளம்பி விட்டார்… அர்விந்த் சாரி ப்பா.. நான் ஏதோ ஒரு ஆதங்கத்தில பேசிட்டேன்.. என்ன மன்னிச்சிடு.. அவன் எதுவும் பேசவில்லை.. நான் மதியம் பிரகதி வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று அவர் முகத்தை கூட பார்க்காமல் அவன் அறைக்கு சென்று விட்டான்.. மனதிற்குள் ஒரே குத்தாட்டம் தான்.. சந்தர்ப்பம் தானா அமையுது டா! இந்த சான்ஸ் கரெக்டா யூஸ் பண்ணிக்கோ டா அரவிந்த் என்று பழைய குறும்புத்தனமான அரவிந்தாக யோசித்தான்.. என்ன விட்டு போறியா.. இரு டி ஐயா வந்து உன்ன வெச்சு செய்யறேன் என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.. இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்? Click on a star to rate it! Submit Rating Average rating 4.8 / 5. Vote count: 9 No votes so far! Be the first to rate this post. Post Views: 643