எல்லாம் பொன் வசந்தம்..(2)

5
(3)

அத்தியாயம் 2

 

சண்டை மற்றும் ஈகோ என்ற பெயர்ச்சொல்லின் அர்த்தம் இரு உறவுகளின் பிரிவை அளவுகோல் இன்றி அருத்தெரியும். 

 

படப்பிடிப்பு அன்றைய தினம் மாலினி வராமல் எந்த தடங்களும் இன்றி நடைபெற்றது.

 

சில்வியாவின் இருபது பட அனுபவம் அவளுக்கு எந்த அளவு நடிப்பு தேவை என்பதை தெளிவுபடுத்தி இருக்க எந்தவித சலனமும் இன்றி ஷுட்டிங் முடிந்தது.

 

இன்னைக்கு ரிகர்சல் இல்லாமல் முடிஞ்சு போச்சு… பிகாஸ் ஸ்டார்டிங் சீன் நீ கொஞ்சம் சின்னதான ஆக்டிங்…பட் நாளைல இருந்து ரொம்ப அதிகமா நீ நடிக்கிற மாதிரி இருக்கும்.

 

உன் மூவி…நீ ரூல்ஸ் போடதான் செய்வ…

 

கண்டிப்பா உனக்கு இஷ்டம் இருந்தாலும் இல்லைனாலும் உன் கடமையை முடிக்கனும்.. பிகாஸ் நீ நியூ ஹீரோயினியா சைன் பண்ணிருக்க, மறந்துடாதீங்க என்று சொல்லி விட்டு நகர்ந்தவன் அவளது வருகைக்கு காத்திராமல் தனது காரில் விருட்டென கிளம்பிவிட்டான்.

 

காலையில் இருந்து ஐந்து முறைக்கு மேல் தொடரப்பட்ட ஷூட்டினால் களைத்து போய் இருந்தாள். அவளை அழைத்து செல்லாமல் செல்லும் திலீப்குமார் மீது அளவு கடந்த கோபமும் அவளிடம் பிறந்தது.

 

தயாராகி கல்லூரிக்கு செல்லும் மாணவி போல கல்லூரி கேட்டின் முன்பு வரவேண்டும் நாயகி இதுதான் இன்றைய ஷூட்டிங்.

 

நாளைய தினம் நாயகியை அங்குள்ள சீனியர்கள் ராகிங் செய்வார்கள் அதை சமாளிக்கும் விதமாக நாயகன் வருவான்.

 

முதல் நாள் ஸ்கிரிப்ட் ஆரம்பிக்கும் விதம் கல்லூரியில் இருந்து கொண்டு செல்லலாம் என்று திலீப்குமார் சொன்ன விதத்தால் அவ்வாறே தொடங்கப்பட்டது இந்த படம்.

 

திடீர் நாயகியாக உருமாறிய சில்வியாவும் தன்னால் முயன்ற அளவு கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கொடுத்தாள்… இருந்தாலும் அவளுக்கு களைப்பு அதிகம் ஏற்பட்டுவிட்டது.

 

அவள் அருகே வந்த லோகேஷ் என்னம்மா இன்னைக்கும் விட்டுட்டு போயிட்டானா?…

 

ஆமாண்ணா உன் ப்ரண்டுக்கு எப்ப தான் புத்தி வருமோ தெரியல.. என்ன பொண்டாட்டிய நடு ரோட்டில் விட்டுட்டு போறதும், போற இடத்துல தெரியாம மறந்துட்டு போறதும் தான் அவருக்கு வழக்கம்…

 

அப்படி சொல்லாத சில்விமா உன்னோட காதல் அவர கண்டிப்பா மாத்திடும்.

 

எப்படி புரிய வைப்பேன் என் அண்ணன் இடத்தில். என்னை பொறுத்த மட்டில் இன்னும் ஆறு மாதத்தில் பிரிய போகும் உறவுகள் தான் எங்களின் இந்த திருமணமே என்பது தான் அவனது எண்ணம் என்று.

 

சரிவா உன்ன டிராப் பண்ணிடுறேன்… டயலாக் சூப்பரா ப்ராக்டிஸ் எடுத்துக்கோ பிகாஸ் எல்லா சீன்கும் டயலாக் எழுதி இருப்ப… நீ மறந்து இருப்ப சோ நீ மெமரி பண்ணனும்ல… 

 

அண்ட் கைய்ஸ் நீங்களும் முடிஞ்ச அளவுக்கு ரெஸ்ட் எடுத்துட்டு டைமுக்குள்ள வந்துருங்க இன்னைக்கே திலீப்குமார் திடீர்னு நாயகியை மாத்திட்டான் பாத்தீங்களா…

 

லோகேஷ் மற்றவர்களுக்கும் கட்டளையிட்டு விட்டு தனது தங்கையை அழைத்துச் சென்றான்.

 

என்ன இருந்தாலும் திலீப் ரொம்ப ஓவர் கோவம்… அந்த மாலினி பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு கூட அவன் விசாரிக்கவில்லை பாரேன்.  

 

அண்ணனும் தங்கையும் காரில் பறக்கும் போது இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள்.

 

உன்னோட நண்பன் கூட இத்தனை வருஷம் இருந்துமா நீ ஏதோ அவன் இப்ப பண்றது எல்லாம் புதுசு மாதிரி ஃபீல் பண்ற.. எப்பவும் நடக்கிறது தான்.

 

இந்த டைம் ரொம்ப சேஞ்ச் என்னன்னா ஷூட்டிங்ல அவங்க பண்ற மிஸ்டேக்க காரணம் காட்டி ஹீரோயினியை மாத்துவான்…பட் இந்த மூவிக்கு கொஞ்சம் டிஃபரண்ட். 

 

திலீப் ப்ரொடியூசர் சார் கிட்ட கேட்காமலே அவன் என்ன திடீர்னு  ஹீரோயினியா போட்டது ப்ராப்ளம் ஏதாவது கொண்டு வந்து விடுமான்னு பயமா இருக்கு லோகி…

 

நீ எதுக்கும் பயப்படாத சில்வியா எது வந்தாலும் நானும் அவனும் பார்த்துப்பம்… ஒரு ப்ரொடியூசர் கிட்ட இன்பார்ம் பண்ணாம மூவில நம்மளால எந்த டிஸிஸனும் எடுக்க முடியாது.  அவன் ஆல்ரெடி அவங்க கிட்ட பேசிட்டுதான் முடிவு பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு….யூ டோன்ட் வொரி அபௌவ்ட் சில்வி…வருத்தப்படும் தங்கைக்கு ஆறுதல் சொன்னவன் வந்து காரை நிறுத்திய பகுதி பொன்மலை ரெசார்ட்டில் நிறுத்திவிட்டு தங்களின் அறைக்கு உணவு கொண்டு வந்து விடுமாறு பணித்துவிட்டு கிளம்பினான்.

 

கேரளாவில் பிரசித்தி பெற்ற பொன்மலை ரெசார்ட் சினிமா துறை சார்ந்தவர்களுக்கு பிரசித்தி பெற்றயிடம்.  

 

இருந்த களைப்பில் போனவுடன் மெத்தை மீது சரிந்தவள், உடையை கூட மாற்றாமல் உறங்கி போனாள்.  ரூம் சர்வண்ட் உணவிற்காக வந்து கதவை தட்டும் வரை அவளிடம் எந்த வித அசைவுமில்லை.

 

ஒரே நாளில் தங்கை இந்த அளவு சோர்ந்து போய்விடுவால் என்று அறிந்தாலும் தன் நண்பனிடம் பேசி பார்க்காமல் அமைதி காத்தான் லோகேஷ். தந்தையின் இறுதி ஆசை என்றதால் போனால் போகட்டும் என்று திருமணம் செய்து கொண்ட திலீப்குமார் இப்போது அவளுடன் சிரித்தவாறு இருப்பதும் சிறந்தது என்று மனதை தேற்றி கொண்டான்.

 

சில்வியாவின் தந்தைக்கு ஏற்பட்ட முதல் இதய அட்டாக்கினால் அவரது வேண்டுதலால் தீடீரென திருமணம் நடந்தப்பட்டது.  என்னவோ சில்வியாவின் வாழ்வில் அனைத்தும் திடீர் உபயம் தான் போலும்!…

 

கண்ணு என் மகள கல்யாணம் பண்ணிக்கப்பா…அவளோட ஆசையாவது நிறைவேறட்டும் என்று கைகூப்பி கேட்ட தனது தந்தையை பற்றி சிந்தித்த லோகேஷ் கண்கள் கலங்கி தான் போயின. என்ன இருந்தாலும் எனது தந்தையின் இந்த திடீர் வேண்டுதலுக்கு அவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என எதிர்பார்த்த போது, அவன் சரியென திருமணம் செய்த கதை நிமிடத்தில் அவன் கண்முன் வந்து சென்றன.

 

லோகேஷ்…. இன்னைக்கு எடிட்டிங் எப்படி போயிட்டு இருக்குன்னு போன் பண்ணி கேளுடா… அப்புறம் டிலே ஆகிட்டால் ப்ரொடியூசர் சத்தம் போடுவாரு. முதலில் விசாரி என்றவன் அவனது அறையில் தலைக்கு குளித்துவிட்டு துவட்டிய வண்ணத்தில் வெளிவந்திருந்தான்.

 

அமைதியாக அவன் சொன்ன அனைத்தையும் கேட்டவன், கல்யாணம் ஆகியும் பேட்சுலரா என்கூட இருக்க… எனக்குலாம் உன்ன மாதிரி பெரிய மனசு இல்ல… கல்யாணம் ஆகிட்டா மூவி எடுக்க வரும் போதுலாம் என்னோட மனைவியோட வந்து வியூபாய்ண்ட்ச நான் என்ஜாய் பண்ணுவேன்.  நீ தான் தத்தி…- லோகேஷ்

 

அதனால தான் நீ இன்னும் கட்ட பிரம்மச்சாரியா இருக்க லோகி.  முதல்ல சொன்னத செய் அப்புறம் வந்து இதெல்லாம் பேசு என்றவன் டீ-சர்ட் மாற்றி விட்டு அறையை விட்டு வெளியேறி தனது பணியாளுக்கு அழைத்து தாயிடம் கொடுக்கும் படி கேட்டான்.

 

சாப்பிட்டாச்சா?…ஸ்னோபர் சாப்பிட்டானா என்று குறுவிசாரிப்போடு அழைப்பை முடித்து கொண்டவன் சில்வியா இருக்கும் அறையின் பக்கம் மறந்தும் திரும்பாமல் அறையில் வந்து ஐக்கியமானான்.

 

மகனின் இந்த குறுவிசாரிப்பு அவருக்கு கசப்புணர்வை கொடுத்தாலும் சிரித்து சமாளித்து விட்டு அவனுடைய அன்பு ஸ்னோபருக்கு உணவு வைத்து விட்டு தனது அறையில் சென்றடைந்தார்.

 

ரூம் சர்வண்ட் உணவோடு வந்து கதவை தட்டும் சத்தத்தில் திகைத்து எழுந்து வந்து அவற்றை வாங்கி கொண்டு  மேஜையின் மீது வைத்து விட்டு குளித்து உடைமாற்றி வந்தவளின் மனதில் திலீப் சாப்பிட்டு இருப்பானா என்று கேள்வி எழும்பி மறைந்தது.

 

திலீப் அவளது கழுத்தில் கட்டிய தாலியை மறைத்து வைத்திருந்த அவள் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்ததை எடுத்து வேண்டி கொண்டவள் கண்களில் ஒற்றி கொண்டு உணவை சாப்பிட்டாள்.

 

திருமணம் முடிந்து இந்த ஒரு வருடத்தில் ஒரு நாள் கூட ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணவில்லை.  சிரித்தும் பேசவில்லை.  என் மீது வந்த கோபம் காலம் போக போக குறையும் என்று நினைத்தால் நாளுக்கு நாள் அதிகரித்து என்னிடம் இருந்து திலீப்பை நிரந்தரமாக பிரித்து விடுமா என்றும் பயந்தாள் சில்வியா.

 

அவளை பொறுத்தவரை இது அழகிய காதல் திருமணம்.  அவளாக ஏங்கி ஏங்கி நேசித்த ஒருவனை மணந்து கொண்டேன் என்ற திருப்தியிவ் அலைபாயும் மனதை கட்டிப்போட்டவள் நித்ராதேவியிடம் சரணடைந்தாள்.

 

சில்வியாவினை நாயகியாக உருமாற்றிய திலீப்குமார் ப்ரொடியூசரிடம் சரமாறியாக திட்டு வாங்கி கொண்டு இருந்தான்.

 

அந்த பொண்ணு வரலைன்னா உடனே உன் ஓட்ட ஒடிசல் ஆளுங்கள வச்சு மேனேஜ் பண்ணிப்பையா?..உனக்கு முதல்ல எங்ககிட்ட சொல்லனுங்கிற பேசிக் சென்ஸ் கூடவா இல்லை..‌இருபது படம் நடிச்சாதல்ல தலைகணம் ஏறிடுச்சா திலீப்குமார்.  இது என்னுடைய ஃபேவரட் கதையில ஒன்னுன்றதால்ல தான் இப்ப வரைக்கும் உங்ககிட்ட நான் பேசிட்டு இருக்க…அந்த மாலினி பொண்ணுக்கு ஒன் மில்லியன் பாலோவர்ஸ் இருக்காங்கனு சொன்னிங்க…இப்ப அவங்கள கேன்சல் பண்ணிட்டு இன்னொரு பொண்ணு…அது யாரு என்று ஏகத்துக்கும் திட்டிய ப்ரொடியூசர் ராஜூபாய் இறுதியாக தான் நாயகியை பற்றி விசாரித்தார்.

 

நம்ம பட டைலாக் ரைட்டர் தான் சார்…எங்க எல்லா கதைக்கும் அவங்க தான் டைலாக் மேக் பண்ணுவாங்க…ரொம்ப பர்பெக்ட்டா பண்ணுவாங்க..‌அதை விட இந்த கதைக்கு தகுந்த விதத்தில அவங்களும் இருப்பாங்க… வேண்டுமானால் நேரில் கூட சந்தித்து பாருங்கள் என்று சில்வியாவிற்காக பரிந்து பேசினான் திலீப்குமார்.

 

காதலும் அல்ல அன்பும் அல்ல!…

 

மாலினியின் இடத்தை நிரப்புவதற்காக சில்வியாவை நாயகியாக்கி விட்டான்.  இதன் பின் தன் தரப்பை நியாயப்படுத்தினால் மட்டும் தான் ப்ரொடியூசர் ஒப்பு கொள்வார் என்பதால் சில்விக்காக பேசினான்.

 

சரி நான் நாளைக்கு ஷூட்டிங் பார்ட்டில் வந்து பார்க்கிறேன்… பட் எனக்கு பிடிக்கலைன்னா ஷூட்டிங் ஸ்டாப் பண்ணிட்டு நியூ ஹீரோயினிய பிக்ஸ் பண்ண வேண்டியது தான்…

 

சரிங்க சார்…

 

அழைப்பு துண்டிக்கப்பட்ட சத்தம் டப்பென்று கேட்டது…

 

நறநறவென பற்களை கடித்தவன் இந்த படம் நல்லா வரும்…அதும் இவளால வரும் என அவனது வாயாலே சொல்லும் நிலை வந்து விட்டது என எண்ணி வெட்கப்பட்டு கொண்டான்.

 

அவனது இந்த திட்டுக்கு சொந்தகாரி இமை மூடி நித்ராதேவியின் மடியில் அமர்ந்திருந்தது தான் மாயம்.

 

என்னடா ப்ரொடியூசர் சார் கிட்ட சொல்லாம கூட ஃபிக்ஸ் பண்ணிட்டையா?…நாளைக்கு அவர் வந்து செக் பண்ணிட்டு வேண்டானுட்டா?… இது லோகேஷ்

 

அனைத்தும் அவன் எதிர்மறையாக கேள்வி கேட்க திலீப் நெற்றி புருவங்கள் வெறித்தனம் கொண்டது.

 

நாளைக்கு ப்ரொடியூசர் சார் மட்டும் அவங்கள பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லிவிட்டார் எனில் இதையே சாக்காக வச்சு டிவேர்ஸ் அப்ளை செய்வேன் என‌ சிந்தித்தான்.

 

சரியான காரணமாக இருந்தால் 

எந்த நீதிபதியும் என் பக்கம் தான் பேசுவாங்க என்றவன் வலது புறமாக தனது உதட்டை வளைத்து ஒரு புன்னகை சிந்தினான்.

 

அதே புன்னகையோடு சில்வியாவின் கனவு உலகில் அவளை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டவனை  அவளும் கட்டி அணைத்து கண்ணார கண்டது போல எண்ணி நிஜ உலகில் மென்மையான புன்னகை புரிந்தாள் சில்வியா.

 

                 தொடர்வேனே!…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!