எல்லாம் பொன் வசந்தம்..(4)

5
(3)

அத்தியாயம் 4

 

காதல் சொல்லி கொண்டு வருவதில்லை. அதேபோல் தான் சொல்லிக்கொண்டு விடை பெறுவதுமில்லை!…

 

மாலினி கொடுத்த வழக்கால் பட ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.  அவள் எண்ணியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்ற கொண்டாட்டத்தில் அவள் சைன் செய்த படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு இருந்தாள்.

 

இவற்றில் மட்டும் வெற்றி கண்டு விட்டால் இத்தனை திறமையையும் விலை பேசி கெடுத்த சதிகாரன் எனவும் திலீப்பை சொல்லலாம் என்றும் அவள் திட்டம் தீட்டினாள்.

 

வெறும் பண மோசடி மட்டும் போதாது என்பதால் என்னை அவரது இச்சைக்கு இணங்கும் படி கேட்டு கொண்டார் என்றும் ஒரு விபரீதமான குற்றச்சாட்டை திலீப் மீது அவள் போடவும் இந்தப் படம் மட்டும் அல்ல அவன் புதுப்படம் தயாரிப்பிலும் கூட சிக்கல் ஏற்பட்டது.

 

ஆமா சார் இத சொல்ல எனக்கு கூட்சமா தான் இருக்கு. பட் எனக்கு நியாயம் கிடைக்கும்ன்ற நீதிமன்றமா தான் நான் இந்த செய்தியை பாக்குறேன் என்று அவள் போட்ட நாடகத்தில் அனைவரின் கோபமும் பத்தொன்பது படத்தில் திலீப் சேர்த்து வைத்த நற்பெயரை குலைத்தது.

 

நல்லா பட எடுக்குறான்னு பார்த்தால் எவ்வளவு பெரிய மோசடிகாரனா இருக்கான் .  இவனுக்கு அக்கா தங்கச்சி இருக்க மாட்டாங்க..‌இல்ல இவங்க அம்மா இவன  இப்படி தான் வளரத்தாங்களோ என்று ஆதி முதல் அண்டம் வரை அனைத்தும் சபித்து பேசும் அளவுக்கு கொண்டு வந்தாள்.

 

பெண்ணின் உணர்வோடு விளையாடி உள்ளார் என்று கேரள போலீசால் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட திலீப் லோகேஷின் உபயத்தால் வெளிவந்தான்.

 

சில்வியாவும் இதற்கு ஒரு காரணம்…அவனது குணம் நன்கறிந்தவள். திருமண ஆகி ஒரு வருடம் முழுவதும் முடிந்தும் திரைப்படம் தாண்டி அவனது நிழல் கூட தன் மீது விழாமல் இருப்பதை லோகேஷிடம் சொல்லி விட்டாள்.

 

இத்துனை நாளாய் இருவருக்கும் பிணக்கல்  என்று நினைத்திருந்தவனும் சில்வியாவின் பதிலால் நிலைகுலைந்து போனான்.  

 

தன்னாலே தனது சகோதரிகளின் வாழ்வு அந்தரத்தில் நிற்கிறது என்ற அவனது மனசாட்சி மட்டும் அவனை குத்தி கிழித்தது.

 

சில்வியா டைலாக் ரைட்டர் என்ற காரணத்தால் அனைவரிடமும் உரையாடும் அழைப்பை ஆட்டோமேடிக் ரெக்கார்ட் தான் வைத்திருப்பாள்.  எல்லாரிடமும் திரைப்படம் சார்ந்த வகையில் தான் உரையாடுவதால் எதாவது ஒரு வாக்கியம் அல்லது எதாவது சொல் பட வசனத்திற்கு உதவும் என அவள் செய்தது இன்று திலீப்பை காப்பாற்றி சிறையில் இருந்து மீட்டு வந்தது.

 

மாலினியின் வாக்குறுதி படி திலீப்குமார் அலைபேசியில் தான் என்னை ஆபாசத்திற்கு அழைத்தான் என்று கொடுத்திருந்தாள்.  இப்போது அவை முழுவதும் பொய் என்று தெரிய வரவும் மாலினியின் முகம் செத்துவிட்டது.

 

அவன் சிறை வாசலில் இருந்து வெளி வந்ததும் அவள் சைன் செய்து நடித்து கொண்டிருந்த படத்திலிருந்து அவளை விலக்கி விட்டார்கள் என்ற செய்தியும் அவளை எட்டியது. இம்முறை அதிர்ந்து நின்றது மாலினி தான்.

 

கடவுள் நல்லவங்கள சோதிப்பாரு கை விட மாட்டாரு… அளவோடு ஆசைப்படி நல்லது நடக்கும் என்று திரைப்பட வசனம் எல்லாம் சொல்லி மேலும் அவளை வெறுப்பேற்றி  அவள் கொந்தளித்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்ததோடு கிளம்பினான் திலீப்.

 

நீ இன்னைக்கு ரிலீஸ் ஆக சில்வியா தான் மச்சி காரணம் – லோகி

 

இப்ப என்னடா உன் தங்கச்சிக்கு கோவில் கட்டி கொண்டாடனுமா?..பட ரிலீஸ் ஒன் வீக்கா நின்னு கடக்கு அது பெருசா தெரியல. சில்வியா காப்பாத்துனாலாம் என்று அவனிடம் பேசியவன் கார் கண்ணாடி வழியாக பாதையை ரசித்தான்.

 

இந்த கேரளாவில் தங்களின் பொன்னான நினைவுகளை சுமந்த இந்த மனம் இப்போது ரணமான விஷயங்களை சுமக்கிறது என்று எண்ணியவனின் கண்கள் சற்று உறக்க கலக்கத்தில் மூழ்கியது.

 

இரண்டு நாட்கள் சிறையில் அடைபட்டு இருக்கும் அவனை போலீசார்கள் மரியாதை நிமித்தமாக நடத்தாததால் உறங்க கூட இடம் ஒதுக்கவில்லை.

 

உண்மை என்று மாலினி சொன்னதை நம்பியவர்கள் இவனை அருவெறுப்பாக பார்த்து ஒதுக்கி வைத்தார்கள்.. இன்னும் சிலர் எல்லா பட ஹீரோயின் கிட்டயும் இந்த பேவர் யூஸ் பண்ணி இருப்பல்ல. ரொம்ப பெரிய மச்ச காரன் தான் நீ  என்று வாய் கூசாமல் பேசிய காவலாளிகளும் அங்கிருந்தவர்கள்.

 

உறக்கம், உணவு, இருப்பிடம் என்று எதுவும் சரியாக இல்லாமலும் ஏற்கனவே பட எடிட்டிங்கிற்கு உறங்காமல் இருந்ததும் வேறு அவனை ஒன்றாக சேர்த்து வாட்டி எடுத்தது தான் உண்மை.

 

மாலினியை அவளது பாலோவர்ஸ்க்காக மட்டும் புக் செய்து அவன் பட்ட பாடு பெரும் பாடமாக அமைந்தது அவனுக்கு.

 

இனிமேல் அழகோடு சேர்த்து தெளிவாக பேசுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சிந்தனையோடு உறங்கி போனவனை பொன்மலை ரெசார்ட்டில் வந்த பின் தான் எழுப்பினான் லோகேஷ்.

 

சில்வியாவும் தனது அறையை தாண்டி செல்லும் திலீப்பை பார்த்து விட்டு கதவை படாரென அடைத்து கொண்டாள்.

 

இரு நாட்களில் குளிக்காத சகதியில் இருப்பதை போல் உணர்ந்த திலீப் மனம் மாறும் வரை குளித்தான். என்ன தான் தைரியம் உடையவர்களாக இருந்தாலும் கூட பார்ப்போர் மற்றும் பழகுவோர் என்று அனைவரும் அவனை இலகுவாக பாவித்த சமயம் தீயில் விழுந்த புழுவை போல தனது நிலையை உணர்த்த முடியாது ஒடுங்கி ஒதுங்கி நின்றானே அதற்குள்ளாக மறைந்து செல்லுமா?…

 

மன உளைச்சலுக்கு ஆளானவன் குளித்து முடித்து விட்டு நாளை மாலினி மீது நாம் வழக்கு தொடுக்க போகிறோம் என்று லோகேஷிடம் சொல்லி அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தான்.

 

மச்சி எதையும் யோசிச்சு பண்ணுடா…

 

என்ன யோசிச்சு பண்ணனும். சில்வண்டுங்க கூட என்ன அருவருப்பா பார்த்தாங்க..ஏன் போலீஸ் ஸ்டேசன்ல ஒரு லேடி கம்பிளைன்ட் கொடுக்க வந்தாங்க. என்ன பார்த்ததும் கேஸ் ஃபைல் பண்ண அடுத்த நொடியே அவங்க உடைய சரி பண்ணிகிட்டு என்ன பார்த்து காரி துப்பிட்டு போனாங்க. அதுக்கு அந்த ஒன் மில்லியன் கேர்ள் எதுவும் அனுபவிக்க வேண்டாம். அவளோட வாயாலையே என்ன நடந்துச்சுன்னு சொல்ல வச்சா தான் நான் இழந்த சுயமரியாதை திரும்ப வரும் என்று லோகேஷிடம் தனது கர்ஜனையை சொல்லி கொண்டு உணவை விண்டு கை கழுவிவிட்டு, மெத்தை மீது பொத்தென படுத்தவனின் தலையை ஒரு பெண் சிரித்த முகத்தோடு ஒரு உறங்குவதற்கு அழைத்தாள் கனவில்.

 

வந்துட்டன் செல்லம். எத்தனை நாளைக்கு அப்புறம் நீ கனவுலகில் வந்திருக்க என்று சில்வியாவை தவிர்த்து வேறு ஒரு பெண்ணுடன் கனவு உலகில் காதலித்து கொண்டிருந்தான் திலீப்குமார்.

 

மறுநாள் விடியல் காலையில் வந்த தாயின் அழைப்பையும், மாமனாரின் அழைப்பையும் ஏற்று எந்த வித ஊறுதலும் இல்லை என்பதை புரிய வைத்து அழைப்பை துண்டிப்பதற்குள் நேரம் எட்டை தொட்டது. அதன் பின் தயாராகி வந்து அதே கேரளத்து போலீசாரிடம் மாலினியின் மீது வழக்கு தொடுத்தான்.

 

திலீப் குமார் காவல் நிலையத்தில் இந்த பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்க, லோகேஷ் படப்பிடிப்பு மற்றும் பாடல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று மீண்டும் ஒருமுறை செக் செய்து கொண்டிருந்தான்.

 

நிச்சயம் நீதிமன்றத்தில் இருந்து படம் ரிலீஸ் செய்யப்படலாம் என்ற நற்செய்தி தான் வரும் என்ற நம்பிக்கையோடு லோகேஷும் அடுத்த கட்டத்தில் எடுத்து வைத்து விட்டான்.

 

திலீப்பின் அடுத்த படம் திகில் நிறைந்ததாக இருப்பதால் அதற்குத் தேவையான பங்களாவையும் தேவையான கதைகளையும் எழுதுவதற்காக ஒரு மாத காலங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

 

அதற்குள் தான் இப்படம் வெளியாவதற்குள்ளே ஏகப்பட்ட பிரச்சனைகள் மாலினியால் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அவற்றில் இருந்து திலீப் வெளிவந்து மீண்டும் இந்த படத்தில் இணைந்தாலே ஒரு மாத காலம் ஓடோடி விடும். அதனால் படப்பிடிப்பிற்கு தேவையான மற்ற அனைத்து சமாச்சாரங்களையும் இப்பொழுது தயார்படுத்திக் கொண்டால் திலீப் ஃப்ரீ ஆன பின்னர் ஒரு இரண்டு வாரங்கள் கழித்து படத்தை தொடங்கி விடலாம் என்று படப்பிடிப்பு குழுக்களும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 

டைரக்டர் என்ற பொறுப்பை இப்பொழுது லோக்கேஷை தட்டிச் செல்ல மற்ற நால்வர்கள் துணை டைரக்டர்களாக இருந்தார்கள்.

 

இதன் முழு கதையையும் எழுதிக் கொடுத்தவன் திலீப் குமார் என்றாலும் எந்தெந்த இடத்தில் எவ்வகையான சீன்கள் வைக்கப்பட வேண்டும் என்பதில் மற்ற டைரக்டர்களுக்கும் பங்கு இருப்பதினால் குழுக்களாக சேர்ந்து இணைந்து அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தொடர் படங்களை.

 

எப்படத்தையும் போல இப்படத்திலும் சில்வியா தான் வசனக்காரர்…

 

மற்ற படத்தில் தீவிரமான வசனம் இருக்க வேண்டும். ஆனால் இதில் சத்தம் தான் அதிகம் இருக்க வேண்டும் என்பதால் இம்முறை இசையமைப்பாளர்களிடம் அதிக பொறுப்பு இருந்தது.

 

மியூசிக் மட்டும் பக்கவா அமைந்துவிட்டது என்றால் இந்த படம் நமக்கு ஜாக்பேட் தான்… அதுக்கப்புறம் திலீப்சாரும் லோகேஷ் சாரும் சேர்ந்து நமக்கு ட்ரிபிள் மடங்கு கூட சம்பளம் கொடுப்பாங்க என்று வாயார புகழ்ந்து கொண்டு இருந்தான் நால்வருல் ஒருவர்.

 

திலீப் கொடுத்திருந்த வழக்கின் காரணத்தால் மாலினியை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள்.

 

சரியான ட்ராமா காரியா இருப்ப போலமா. உன் பேச்சைக் கேட்டு திலீப் சாரை நான் கூட தப்பா நினைச்சுட்டேன்.

 

காவல் அதிகாரி ஒருவர் மாலுனியிடம் சண்டைக்கு எகிரி கொண்டிருந்தார். 

 

உண்மை உடைந்து விட்டதால் முகத்தில் ஏற்பட்ட கருப்பை மறைத்துக் கொள்வதற்காக தலையை குனிந்து கொண்டாள். அவளது பி.ஏவும் அவளோடு வந்திருக்க அன்று அழைத்துப் பேசிய அவளும் உண்மையை சொல்லி விட மாலினியை திட்ட துவங்கினார் அந்த காவல் அதிகாரி.

 

சார் நேரத்துக்கு தகுந்த மாதிரி மாத்தி பேசுறது நீங்க. இப்ப அந்த பொண்ண விசாரிச்சு உண்மைய வாங்குங்க தேவையில்லாம பேசாதீங்க.

 

பின்னர் என்ன முன்பு தான் தவறு செய்து விட்டேன் என்று ஒரு யூகத்தில் தன்னை இழைத்து பேசினார்கள். இப்போது அந்த மாலினியை இழைத்து பேசுகிறார்கள். யார் தவறு செய்கிறார்கள் என்றெல்லாம் நீங்க பொருள் அல்ல தவறு செய்து விட்டார்கள் என்று நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ ஒருவர் தவறு என்று சொல்லிவிட்டால் அது உண்மை என்று நினைத்து தன் போக்கில் என்னவெல்லாம் பேசக்கூடாதோ அனைத்தையும் பேசி விடுவது. பின்னர் அது அப்படி இல்லை என உணர்ந்ததும் கொஞ்சம் கூட வெட்கம் இன்றி மன்னிப்பு கேட்டு விட்டு, அடுத்தவர்களை இழிவு பேசுவதற்கு கிளம்பி விடுவது என்று நொடிந்து கொண்டான்.

 

முந்தின தினங்களில் அவன் இந்த காவல் அதிகாரிகளிடம் வாங்கிய பேச்சுக்கள் அனைத்தும் தேள் கொட்டும் விஷமாக அவனை கொட்டியது. 

 

தொலைக்காட்சிகளில் கூட மாலினி தனது உண்மை முகத்தை சொல்லி விடவும் இப்போது திலீப்பை தூற்றுவார் அனைவரும் தலை குணிந்து கொண்டார்கள்.

 

நீதிமன்றத்திலும் கூட படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற ஆர்டர் வந்து விடவும் படபடவென்று இன்றி மாலை நான்கு மணிக்கு பட ரிலீஸ் என்ற அறிவிப்பும் கொடுத்திருந்தார்கள் லோகேஷ் மற்றும் திலீப் இருவரும் சேர்ந்து.

 

முதல் காட்சி காலையில் தான் ஏற்படுத்த முடியும் என்பது வழக்கம் தான்.  திரை உலகத்தையே மாற்றி அமைத்தான் இந்த திலீப் குமார்!…

 

உண்மையை ஒப்புக்கொண்ட பின்னரும் மாலினியால் அமைதியாக இருக்க இயலவில்லை. ஊடகங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் அத்தோடு இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற வலைதளங்களிலும் கூட திலீப் சார் பத்தி அவதூறா பேசி இப்ப நீ வாங்கி கட்டிக்கிட்டியா? உன்னை மாதிரி கேடு கெட்டவங்களுக்கு எல்லாம் இப்படித்தான் இப்படிப்பட்ட நிலைமை வரும் எனக்கு முன்னமே தெரியும்… இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் தானே இப்படி கூப்பிட்டாலும் ஒன்னும் தப்பு இல்ல. நீங்க ஒன்னும் அவ்வளவு பெரிய உத்தமி கிடையாது மேடம். திலீப் சாரோட இணைந்து ஒரு படம் ஒழுங்காக கொடுத்திருந்தீங்கன்னா இப்ப நீங்க ஹிட் அடிச்சு இருக்க வேண்டியது. போராத காலம் திலீப் சார் உங்ககிட்ட இருந்து தப்பிச்சிட்டார்…

 

போன்ற கமெண்ட்களினால் அவள் தூக்கிலிட்டு தொங்கிவிடலாம் என்ற அளவிற்கு முடிவெடுத்து விட்டாள்…

 

சமூக வலைதளங்களில் எந்த அளவுக்கு பாசிட்டிவிட்டி கிடைக்கிறதோ அதைவிட இரு மடங்கு நெகட்டிவிட்டி ஆன் தி வேயில் கிடைத்துவிடும்…

 

மாலினியின் பெற்றோரும் கூட அவள் செய்த செயலினால் தலை குனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்… இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் மில்லியன் கணக்கில் இருந்த அவளது பாலோவர்ஸ் லட்சக்கணக்கில் குறைந்து போனது தான் லாபம்…

 

இவளது புண்ணியத்தினால் ஒரு மில்லியனில் இருந்த திலீப் குமாரின் அக்கவுண்டானது இப்பொழுது ஆறு மில்லியனை தொட்டுவிட்டது.

 

அன்றைய தினம்  நான்கு மணிக்கு ரிலீசான படத்தில் ஒவ்வொரு சீன்களும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் காக உருண்டை வடிவில் அனைவரது மொபைலிலும் இடம் பெற்றது.  இதிலும் சில நபர்களின் ரிங்டோன், காலர் டியூன் மற்றும் ப்ரோபைல் என்ற இடத்தை தழுவிச் சென்றிருந்தார்கள் சில திலீப் மற்றும் சில்வியாவின் போட்டோக்கள்….

 

நிஜம் போன்ற நிழல் உலகில் இருவரும் ஜொலித்துக் கொண்டு இருக்க, நிஜ உலக வாழ்வில் பிரிந்து செல்ல தேவையான முயற்சிகளில் ஈடுபட காத்திருந்தார்கள் என்பதுதான் நிதர்சனம்!….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!