எல்லாம் பொன் வசந்தம்…(6)

5
(3)

அத்தியாயம் 6

 

காதலின் ஆழம் எப்போது தெரியும் எனில்  இருவரிடமும் நிலவும் உண்மையும் புரிதலும் கலந்துரையாடலும் தான் உணர்த்தும்!…

 

திலீப்குமார் நிலைமை தலைகீழாய் மாறிப்போனது. படங்கள் வரிசையாக குவிந்து இருந்த சமயத்தில் மாலினி செய்த வேலையால் அவனுக்கு மீண்டும் சில்வியா மீது கோபம் ஊற்றெடுத்தது.

 

எதோ இந்த படம் மூலம் முகம் கொடுத்து பேசும் அளவு மட்டும் பழகி இருந்த இருவருக்குள்ளும் மீண்டும் நாரதர் வேலையை பார்த்து விட்டு சென்றவள் தான் மாலினி.

 

திருமணமாகி ஒரு வருடம் ஆனபோதும் அவன் பேசாமல் இருந்தும் இப்போது திரைப்படத்திற்காகவாவது தன்னை பற்றி பெருமையாக பேசிக் கொள்கிறான் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் சில்வியாவும். பாதகத்தி மாலினி அதற்கும் பொறுக்கவில்லை அவளுக்கு.

 

இந்த படத்தின் வெற்றி விழாவும் கோலாகலமான இந்த விளம்பரமும் மாலினியின் நல்ல குணத்தை குழி தோண்டி புதைத்து விட்டு தீய குணத்திற்கு அடித்தளம் போட்ட சமயம் தான் திலீப்குமார் தந்தையிடம் பேச சென்றிருந்தான். 

 

 நேற்றைய தினம் திலீப் குமாரின் தந்தையான கிருஷ்ணனும் அவருடைய மனைவி ராஜேஸ்வரியின் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த போதுதான் மாலினியை சந்தித்தார்கள்.

 

அன்போடு அவள் பேசிய வார்த்தைகளை நம்பி திலீப்பின் கதை முழுவதையும் சொல்லிவிட்டார் கிருஷ்ணன்.  ராஜேஸ்வரி மருத்துவரை ஆலோசித்து விட்டு வருவதற்குள் அனைத்தையும் போட்டு வாங்கி விட்டவளின் முகத்தில் அத்துனை பிரகாசம்.

 

ராஜேஸ்வரி அனைத்தையும் ஆற அமர யோசித்து பேசுபவர்.  ஆனால் கிருஷ்ணன் வெள்ளந்தியான மனுசன் என்பதை உணர்ந்த மாலினி ராஜி இல்லாத போது அவரிடம் பேசி அனைத்தையும் வாங்கி விட்டாள்.

 

மாலினியோடு கிருஷ்ணன் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த ராஜியின் நெற்றியில் யோசனை கோடுகள் சூழ்ந்தன‌.

 

அந்த யோசனை கோடுகளின் விளைவை இப்போது தொலைக்காட்சி மூலமாக இருவரும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். கிருஷ்ணரோ மொபைலில் திலீப்பிடம் திட்டு வாங்கிக் கொண்டுள்ளான். இந்தச் செய்தி வெளியே வந்த உடனே யார் மூலமாக வந்துள்ளது என்பதை விசாரித்தவன் தந்தைக்கு அழைத்தான். 

 

அடப்பாவி மகவளே நல்ல பொண்ணு மாதிரி பேசி எல்லாத்தையும் வாங்கிட்டு இப்படி போட்டு கொடுத்துட்டாளே என்று மனதில் திட்டி கொண்டு இருந்தார் கிருஷ்ணன்.

 

தன் மகனோட படத்தை நானே கெடுத்துட்டனே என்றும் புலம்பி கொண்டு இருந்தார்.

 

அவரது யோசனை போலவே தான் திலீப்குமாரின் அனைத்து படங்களும் ரத்தாகி போய்ஷவிட தனது உடைகளை எடுத்து கொண்டு வீடு புறப்பட்டான்.

 

பேச்சு சத்தமின்றி கேரளாவில் ஏறி அமர்ந்தவன் கள்ளக்குறிச்சியில் அவனது பிறந்தகம் உள்ள வீடு வரும் வரை ஏதும் பேசாது அமைதியாக அமர்ந்து யோசனையோடு வந்து சேர்ந்தான் அவனது இல்லைத்தை.

 

வீட்டை அடைந்த உடன் மாலினியோட பேசுனவங்க யாரு? என்று சாந்தமாக கேள்வி கேட்டவன் கிருஷ்ணர் முழிக்கவும் அவர் தான் என்று முடிவு செய்து கொண்டு வீட்டின் ஹாலில் இருந்த மீன் தொட்டியை தள்ளிவிட்டு உடைத்தவனின் கைகளிலும் இரத்தம் கொட்டியது.

 

உன்னால தான் எப்பவுமே என்னோட லைஃப் நாஸ்தி ஆகுது என்று தந்தையை மரியாதையின்றி சத்தமிட்டவன் சொட்டும் இரத்தத்தோடு மாடியேறி அறையை அடைந்தவன் ஸ்னோபர் என்று அழைத்தான். அழகாக படியேறி திலீப்பின் அறைக்குள் நுழைந்து அவனது காலடியில் அமர்ந்து அவனது காலினை தன் நாவால் வருடியது.

 

தனது அறையில் தன் விருப்பமானவளின் முன்பு உடைந்து அழுதான் திலீப்குமார் என்று திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகன்.

 

நான் தோத்துட்டன் ஸ்னோபர்‌‌. அவளால நான் மறுபடி தோத்துட்டன். என் வாழ்க்கையைவே நாஸ்தி பண்ணிட்டு கூடவே ஒட்டிக்கிட்டு இருந்தா. இப்ப என் லைஃப் கரியரையே ஃபாய்ல் பண்ணிட்டா ஸ்னோபர் என்று அந்த மூன்று வயது நாய் குழந்தையை கட்டி அழுதான். 

 

அவனது தற்போதைய கால ஆறுதல் அந்த ஸ்னோபர் என்ற சொல்லை தாங்கிய செல்லப்பிராணி மட்டுமே!…

 

இன்று அதோடு புலம்பி தீர்த்து விட்டான். என்னையும் ஸ்னோபரையும் நீ கூட்டிட்டே போயிருக்கலாம்டி என்று வீடே அதிரும் அளவு கத்தினான்.

 

திலீப் போட்ட சத்தத்தில் அவர்களின் தாயும் தந்தையும் மனமுடைந்து போனார்கள். கிருஷ்ணன் தலையில் அடித்துக் கொண்டு என் மக நிம்மதியே இல்லாமல் இருக்கான். கடவுளே இதுக்கு ஒரு முடிவு இல்லையா என்றவன் அவரது அறைக்குள் சென்று அடைபட்டு கொண்டார்.

 

கிருஷ்ணாவை திலீப் வெறுத்து ஒதுக்கினாலும் திலீப்பின் மீது எல்லையில்லா நேசம் கொண்டவர் இவர்.

 

ராஜேஸ்வரி உடல் தளர்ந்து போய் இருந்தாலும் சில்வியாவின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தாள்.

 

அவளும் லோகேஷூம் சிரித்த வண்ணமாக வீடு வந்து சேர்ந்த போது ராஜேஸ்வரியை கண்டு சிலை போல நின்றார்கள்.

 

அவனும் நீயும் இன்னும் சந்தோஷமா வாழவே ஆரம்பிக்கலையாம்மா என்று வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இடைவெளி விட்டு பேசியவர் கண்ணீருடன் நகர்ந்து சில்வியாவை நோக்கி இது தப்புன்னு உனக்கு புரியலையா. என் மகனோட வாழ்க்கை கெடுக்கணும்னு யோசனைல வந்து இருக்கியா. 

 

அப்படியெல்லாம் இல்லம்மா இது ரெண்டு பேருமே எடுத்து இருக்க முடிவு. புரிதலுக்கான பேய்கள் மட்டுமே தவிர பிரிஞ்சே போயிடுவாங்கன்னு அர்த்தமல்ல.

 

அமைதியோடு நின்ற சில்வியாவால் பதில் பேச இயலவில்லை.

 

லோகேஷ் அவளை அணைத்து ஆசுவாசப்படுத்தி அறைக்கு அழைத்து சென்று கதவை திறக்க ஸ்னோபருடன் அழுது தோய்ந்து உறங்கி கொண்டிருந்த திலீப்பின் சிறிது வீங்கிய முகம் சில்வியாவை பதர வைத்தது.

 

அண்ணா நான் தப்பு பண்ணிட்டன். இவன நான் கல்யாணம் பண்ணாமல் இருந்து இருந்தால் ஆவது நிம்மதியா இருந்திருப்பான்னு தோணுது….

 

என்ன சில்லுமா அவன் இப்ப கொஞ்சம் தெளிவா இருக்குறதே உன்னால தான். நீ என்னடான்னா என்னென்னவோ பேசிட்டு இருக்க- இது லோகேஷ்.

 

இல்ல அண்ணா என்னால தான் அவன் இவ்வளவு கஷ்டப்படுறான்னு என் மனசாட்சி குத்திட்டே இருக்கு…

 

டேய் சில்லுமா அது ஜஸ்ட் ஒன் ஆக்சிடன்ட்டா. முடிஞ்ச விஷயத்துக்கு இப்பவும் முடிச்சு போட்டு பேசாதமா என்று அவளது தலையை வருடிக் கொடுத்தான்.

 

தனது சகோதரன் எத்தனை தான் சமாதானம் செய்தாலும் இதோ திரைப்படத்தில் கொடி கட்டு பறக்கும் திலீப் குமார் கன்னம் வீங்கும் அளவிற்கு அழுவதற்கு காரணம் நானே என்று எண்ணி அவளும் வாடினாள். 

 

பின்னர் தனது பிரியமான தங்கை வருந்துவதை எப்படி ஏற்று கொள்வான்‌.

 

சரிண்ணா பார்த்து வீட்டுக்கு போ…நான் மதிக்கு கால் பண்ணி பேசுறேன்…என்று அவனுக்கு டாட்டா பாய் பாய் சொல்லி அனுப்பி விட்டு திலீப்பை தூக்கி பெட்டில் படுக்க வைத்தாள்.

 

தூக்க கலக்கத்தில் அவனோ “வைஷியா, வைஷியா” என்று முணகல் கொடுத்தான். நானும் உன் கூட வரன் என்னையும் கூட்டிட்டு போடி…எனக்கு நீ இல்லாமல் இங்க இருக்க முடியல…காலம் முழுக்க ஒன்னா இருக்கலாம்னு சொல்லிட்டு இப்ப என்ன விட்டுட்டு போயிட்டையே….என்று அவன் பிதற்றிய ஒரு ஒரு வார்த்தையும் ஊசி குற்றுவது போல சில்வியாவை குத்தியது..‌

 

வைஷூ நீ ரொம்ப லக்கி.‌‌…பட் நான் அப்படி பண்ணிருக்க கூடாது..‌..உன்ன விட திலீப்க்கு நான் பொருத்தமே இல்லைன்றது நல்லாவே புரியுது.‌‌..

 

என்று மன வருத்தத்தை கொட்டி தீர்த்து விட்டு அவளும் அந்த அறையில் பெட் ஒன்றை எடுத்து போட்டு படுத்தவளும் உணவு உண்ணவில்லை, உறக்கமும் தழுவவில்லை. 

 

 உடை கூட மாற்றாமல் படுத்திருக்கும் திலீப் குமாரையே பார்த்துக் கொண்டிருந்தாள்

 

நள்ளிரவில் உறக்கம் தழுவிய சில்வியாவின் மீது அதீத கோபத்துடன் உறங்கி இருந்தான் திலீப்.

 

மறுநாள் சூரிய வெளிச்சம் ஜன்னல் வழியாக திலீப்பின் மீது விழுந்த பின் தான் துயில் கலைந்தான்.  விடிந்து எழுந்ததும் அவனது அறையில் கண்ணாடி முன் தயாராகி கொண்டிருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்து முறைத்து விட்டு இன்னைக்கு எங்க ஊர் சுத்த கிளம்பிட்ட என்று வாய் கூசாமல் பேசினான்.

 

என்னோட அடுத்த படம் நம்ம ஊருல தான் திலீப்.  அதான் பியூட்டிசன் அண்ட் டிரஸ் கோர்டிங்கர்லாம் அரேன்ஜ் பண்ண ப்ரொடியூசர் பாக்க போறேன் என்று பொறுமையாக பதில் அளித்தாள்.

 

ஓஓஓஓ ஒருத்தன் லைஃப் அழிச்சது பத்தல மேடத்துக்கு, இன்னொருத்தன் வாழ்க்கைய அழிக்க எவ்ளோ வேகமா ரெடி ஆகிட்ட பாரேன் என்று துளி அளவு கூட அவள் மீது இரக்கமில்லாமல் அவளை காயப்படுத்தினான்.

 

விடிந்ததும் அதுவும் ஆசைப்பட்ட ஒருவனின் வாயில் இருந்து இப்படி பட்ட வார்த்தைகள் வாங்குவதெல்லாம் ரணமான விஷயம்.

 

தினம் இது போல் வாங்கி கட்டி பழகியவளுக்கு இன்று அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் பெரியது அல்ல.

 

இரண்டாவது டைமா படுத்தில் நடிக்க போறேன். நல்லபடியா பேசுறேன் கூட பரவால்ல இப்படி கெட்டபடியா தான் பேசுவியா திலீப்.

 

கெட்டவளா இருக்க உனக்கு கெட்டபடியா தான் பேசணும்.

 

 அவன் அப்படி தான் என்பதை உணர்ந்தவள், சரி நான் போயிட்டு வரேன் திலீப் என்றவளை எங்கையோ போய் தொலை என்று வழி அனுப்பி வைத்தான்.

 

சிறிது கலங்கிய கண்ணீருடன் அறையில் இருந்து வெளியேறியவள் மதிக்கு அழைத்தாள். என்னடி கிளம்பிட்டையா என்றவளிடம் ஆன் தி வே அக்கா நீ சீக்கிரம் கீழ வா உன் ஹிட்லர் புருசன் பாக்குறதுக்குள்ள ஓடவிடலாம் என்றவளிடம் அடியே உன் மாமாவ அப்படிலாம் பேசக்கூடாது என்றவளை புருசன விட்டு கொடுக்க மாட்டையே என்று மதி சொல்லிக் கொண்டே வந்தும் சேர்ந்தாள்.

 

சில்வியாவின் தாய் வீடும் அதே வீதியில் தான் உள்ளது என்ற போதிலும் இந்த மொபைல் கான்வர்சேசன்.

 

கிளப்புடி வண்டிய என்று சொன்ன சில்வியாவிடம் என்னக்கா வாங்க வேண்டியதலாம் வாங்கிட்டையா?….

 

அதுலாம் வாங்கிட்ட டி‌..‌

 

எப்படிக்கா பெருமையா சொல்ற…

 

பழகிடுச்சு டி இதுலாம் என்ற இருவரும் சிட்டாக பறந்தார்கள்.

 

தினமும் இது போன்ற சொற்களை வாங்குவதும் தன் தங்கையிடம் சொல்லிக் கொண்டு புலம்புவதும் என்று அவளது வாழ்க்கை பொழுதெல்லாம் சளிப்பாகி விட்டது.

 

என்றோ அவள் செய்த செயலால் இன்றளவும் மனதால் பாதிக்கும் அளவு தினம் தினம் தனது சொற்களாலும் செயல்களாலும் அவளை காயப்படுத்தி அதை ரசித்து கொண்டிருக்கிறான் இந்த திலீப் என்ற நாயகன்.

 

என்னை காயப்படுத்துவதற்கு உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்பதைப் போல அவன் எத்தனை முறை காயப்படுத்தினாலும் அவனை மீண்டும் மீண்டும் காதல் செய்கிறாள் இந்த பேதை.

 

அவனைத் தவிர வேறு யாரும் வேண்டாம் என்று எண்ணும் சில்வியாவையும், அவளை மட்டும் வேண்டாம் என்று சொல்லும் திலீப் குமாரையும் இணைத்து வைக்க காலம் எத்தனை மெனக்கெடுமோ!

 

             தொடர்வேனே!…

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!