எல்லாம் பொன் வசந்தம்…(9)

5
(3)

அத்தியாயம் (9)

 

காதலிக்க தெரிந்த மனதுக்கு நல்லது கெட்டது என்று பிரித்து பார்க்கும் பகுத்தறிவு சற்று குறைந்தே காணப்படும்!…

 

அடுத்த நாள் விடியலின் வெளிச்சம் சில்வியாவின்  முகத்தில் பூத்து செழித்தது.  

 

எப்போது என் மனதில் இருப்பவன் என் அண்ணனிடம் தங்களின் காதலை தெரிவிப்பான். அதன் பின் தன்னிடம் எப்படி காதலை சொல்வான் என்று கோடி கனவுகளை கண்டு சிலாகித்து கொண்டிருந்தாள்.

 

கடவுளே எப்போது தான் அந்த நிமிடம் வரும் என்று இறைவனிடம் வேண்டினாள்.

 

லோகேஷ் கூட நண்பனின் வருகையையும் வைஷியாவின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.

 

இன்று எப்படி திலீப் ஒரு விசயத்தை சொல்லப் போகிறானோ அதே போல் அவர்களின் இரண்டாவது சார்ட் ஃப்ளிம் தொடக்கமும் இன்றே ஆரம்பம்!..

 

சில்வியாவும் மதியும் கூடிஸகூடி பேசி சிரித்த வர்ணம் வீட்டை உலாவி வந்தார்கள். மதியிடம் சில்வியா தான் நினைத்தது இன்று நடக்கப்போவது என்று அனைத்தையும் சொல்லி முடித்த போது தான் அந்த சிரிப்பு சத்தம்.

 

சூப்பர் சில்லு. திலீப் அண்ணாவும் நல்ல அண்ணா தான், பட் பெரியவ இருக்கும் போது உன்ன லவ் பண்றாரா?..என்று புருவ முடிச்சுடன் வினவ,

 

காதலுக்கு கண்ணு இல்லடி, இப்படி தான் யார் மேல் வேணாலும் எப்ப வேணாலும் வரும் மதி.  சோ பெருசா டென்ஷன் ஆகாமல் இன்னைக்கு நடக்க போறத பார்க்க தயாரா இரு செல்லம் என்று அவளுடைய கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள்.

 

என்னமோ சொல்லுற பார்ப்போம் என்று சொல்லிவிட்டு மதியும் அடுத்த வேலைக்கு சென்று விட, சில்வியாவின் முகம் தான் குழப்பத்தில் சூழ்ந்தது.

 

திலீப் என்ன தான் லவ் பண்ணுவாரு… பண்ணனும் என்று தீர்க்கமாக முடிவு எடுத்தவள் பண்ணனும் என்ற வார்த்தையில் அதீத அழுத்தத்தை நிறுத்தி இருந்தாள்.

 

அவளது குழப்ப முகத்தை பார்த்த படியே முகப்பு வாசலில் வந்து நின்றான் ஆலிவ் வர்ண சட்டைக்காரன். அன்று அவனது முகத்தில் பூத்திருந்த புன்னகையில் அவளது குழப்ப முகத்தை மறந்தாள்.

 

இந்த சிரிப்பில தான் விழுந்துட்டேன் என்று அன்று மருத்துவமனையில் அவன் தேம்பி தேம்பி அழுத சமயத்தில் கூட அவனது சிரித்த முகத்தை பார்த்து இரசித்ததை ஒரு நிமிட இடைவெளியில் நினைத்து பார்த்து சிரித்தாள்.

 

திலீப்பின் புன்னகையை கண்டதும் காதல் கொண்ட அந்த இளவயது சிறுமியின் காதல் வெற்றி பெற்று விடும் என்று சந்தோசத்தில் மிதந்தாள்.

 

மோகனும், செல்வியும் அவர்களின் முதல் குறுபட வெற்றியில் அவர்கள் நண்பர்களிடம் கூட பகிர்ந்து பெருமை பட்டு கொண்டார்கள்.

 

வாப்பா திலீப் அடுத்த படத்தக்கு ரெடியாகிட்ட போல..

 

என்றபடி முந்தானையில் கையை துடைத்து கொண்டு வந்தார் செல்வி.

 

ஆமாம்மா என்ற படி சிரித்தான்.

 

சரி சரி வாப்பா சாப்பிடலாம் என்று மோகனும் அழைக்க சிரிப்போடு காலை உணவை அனைவரும் உண்டார்கள்.

 

ஆல் தி பெஸ்ட்… டூ வெல் அகைன் என்று பாராட்டிய மதி தயிரை எடுத்து கலந்து பருப்போடு பிணைந்தாள்.

 

அதை வித்தியாசமாக திலீப் பார்க்க, என்ன திலீப்பண்ணா அப்படி பாக்குற இப்படி சாப்பிட்டு பாரு செம்ம ருசியா இருக்கும் என்று சொப்பு கொட்டியவளை போலவே அவனும் ஊற்றி சாப்பிட்டு பார்த்து சூப்பர் என்று கை அசைத்தான்.

 

அனைவருமே உணவு உண்டு கிளம்பும் முன் லோகேஷிடம் ஒரு கடிதத்தை கொடுத்தாள் சில்வியா.

 

அண்ணா உங்க ப்ரண்டும் நானும் லவ் பண்றம்…அத சொல்ல தான் இன்னைக்கு உன் கிட்ட பேசணும்னு சொல்லிப்பாரு..எனக்கு இதுல விருப்பம் தான் அண்ணா…அக்காக்கு கல்யாணம் ஆன அப்பறமே நான் திலீப்ப கல்யாணம் பண்ணிக்கிறன் அண்ணா.  உனக்கு ஓக்கேன்னா அப்பா அம்மாகிட்டையும் இப்பவே பேசிடலாம் என்று அனைத்தையும் அதில் எழுதி இருந்தாள்.

 

லோகேஷிற்குமே இது நற்செய்தி தான்.  அக்காவின் கனவு நிறைவேற நேரமாகும் என்பதால் அவளது திருமணம் தள்ளி போகிறது.  தங்கைக்காவது திருமணத்தை முடித்து விடலாம் என்று அவனும் அடுத்த கட்ட யோசனைக்கு சென்று விட்டான்.

 

வா மச்சி கிளம்பலாம் என்று அவனையும் அழைத்து கொண்டு அடுத்த கதையை தயார்படுத்த பசுமையான புல்வெளி நிறைந்த இடத்தில் அருவி வழிந்தோடிய படி அமைந்தது. அங்கே தான் சென்றார்கள்.

 

இது காதல் கதை. ஏற்கனவே திலீப் இப்போது காதல் கிரக்கத்தில் தான் திரிகிறான்.  இதில் காதல் கதையெனில் சும்மா விட்டு வைப்பானா?…

 

முதல் நாள் சூட்டிங் ஒரே முறையில் எடுத்தாயிற்று!…

 

சூப்பர்டா மச்சி இன்னைக்கு தான் மொத டேக்கே சூப்பரா வந்திருக்கு. இந்த லோகேஷும் மனமார பாராட்டி விட,  உன் கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சனேடா என்று இழுத்த திலீப்பிடம் ஆல்ரெடி என் தங்கச்சி சொல்லிட்டாள்.  இருந்தாலும் நீயே சொல்லு அப்ப தான் என் மனசு அடங்கும். 

 

சில்வியா சொன்னவை தான் உண்மை என்று நம்பிய லோகேஷ், திலீப் கூறப் போவதை எண்ணி ஆவலாக காத்துக் கொண்டிருந்தான்.

 

ஆலிவ் வர்ண புடவையில்  தயாராகி இருந்த அவளையும் அழைத்தான் திலீப்.

 

தன் தங்கையும் இங்கே அழைத்து வந்து விட்டானா என்று சந்தேகித்த லோகேஷ் திலீப் அழைத்த பெயரினை கண்டு வியந்தான்.

 

வைஷியா இங்க வாடி…

 

இதோ வரன் திலீப்…

 

என்னடா லோகேஷ் உனக்கு ஷாக்கான நியூஸ் அக்கா கொடுத்தனா.  என்னடா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு கொஞ்சம் லேட் ஆகட்டும்னு சொல்லிட்டு இருந்த நான் இப்படி பேசுறேன்னு நினைக்கிறாயா?.. எல்லாம் உன் ப்ரண்டு செஞ்ச மாய மந்திரம் தான்.  அவனோட கேரிங் அவனோட பிரசன்ட் எல்லாமே அவன் மேல எனக்கு இப்போ அன்பு வர காரணமா அமைந்துவிட்டது.. அந்த ஈர்ப்பு நாளடைவில் காதலா மாறி அவன் நம்ம வீட்டோட ஒன்றி விட்டான்.  அந்த சமய நம்ம அம்மா கூட இந்த மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்க ஒரு மகராசி கொடுத்து வச்சு இருக்கணும் என்று சொல்ல அந்த மகராசி நானா இருக்கக் கூடாதுன்னு என் மனசுல விழுந்தது.  அம்மா சொன்ன அடுத்த நாள் திலீப் வந்து என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணான். திலீப்ப பத்தி எனக்கு தெரிஞ்சதனால உடனே கொஞ்சம் யோசிச்சேன்.

 

என்ன விட ஆறு மாசம் சின்ன பையன நான் எப்படி லவ் பண்றதுன்னு யோசிச்சேன்.  காதலுக்க கண்ணு காது மட்டுமா இல்ல . இப்பல்லாம் வயசு வித்தியாசம் கூட இல்லைங்கிறத எங்க ரெண்டு பேரோட ஒற்றுமையான உணர்வுகளும், எண்ணங்களும் புரிய வைத்து விட்டது எனக்கு.  சோ உன் அக்காவுக்கு உன் ப்ரண்ட் திலீப்ப ரொம்ப பிடிச்சிருக்கு.  எங்க ரெண்டு பேரோட இந்த விருப்பம் உனக்கும் பிடிக்கும்னு நான் நம்புறேன்.  என்ன ஓகே தானே…

 

என்று தங்கள் இருவருக்குள்ளும் நிலவும் உறவு முறைகளை அழகுற எடுத்து புரிய வைத்தவள் திலீப்பிடம் கேட்டாள் நான் சரியா பேசிட்டனா?…

 

பக்காவா பேசிட்ட…என்று பாராட்டியவன்,

 

ஆமாம் லோகேஷ் எனக்கு உங்க சிஸ்டர் வைஷியாவ ரொம்ப  ரொம்ப புடிச்சிருக்கு.  என்னோட வாழ்க்கை இனிமே அவங்களோட தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்.  இனிமே என் வைஃப் என் லைஃப் எல்லாமே அவங்க மட்டும் தான் என்று தீர்க்கமாக தனது முடிவை சொல்லிவிட்டான்.

 

காலையில் சில்வியா தானும் திலீப்பும் காதலிக்கிறோம் என்று சொன்னாள். ஆனால் இப்போது வைஷியா தானும் திலீப்பும் காதலிக்கிறோம் என்கிறாள்.  இதில் எது உண்மை… அல்லது என் இரு சகோதரிகளிடமும் அவன் விளையாட்டு காட்டுகிறானா என்ற சந்தேகம் எழுந்தது லோகேஷிற்கு .

 

என்ன தான் நட்பாக இருந்தாலும் சகோதரி என்னும் போது அவன் மூன்றாம் பட்ச மனிதன் தானே!…

 

திலீப் நீ யார லவ் பண்ற?…

 

உங்க அக்காவடா…

 

நெஜமாவே வா?…

 

உனக்கு வேற அக்கா வேற இருக்காங்களா என்ன?..உன்ன விட மூத்த பொண்ணு வைஷியாவும் நானும் ஒரு மாதமாக லவ் பண்றம்.  கல்யாணம் பண்ணிக்க ஆசப்படுறோம்டா என்று திலீப் சொன்ன அனைத்தும் ஒன்று விடாமல் புறங்கை கட்டியிருந்த லோகேஷின் மொபைலில் ஆடியோ பதிவில் பதிவாகி கொண்டிருந்தது.

 

அப்படியெனில் சில்வியா அவளும் இவனை காதலிக்கிறாளா என்று அப்போது அவன் சரியாக யூகித்தான்.

 

இதுவரை நடந்தது அவனோடு அவள் பழகிய விதம், அவனுக்காக அவள் மெனக்கெட்டது,  அவனோடு மட்டுமே நேரம் செலவழித்தது, அவனை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருந்தது என்று அனைத்தையும் மீண்டும் நினைவு கூர்ந்தவனின் முன் வந்து நின்ற ஒரே பதில் சில்வியாவின் விளையாட்டுகள் அனைத்தும் திலீப் சிறுபிள்ளையின் ஆசை என்று நினைத்து கொண்டான்.  ஆனால் திலீப்பின் அன்பு மற்றும் அக்கறையை சில்வியா காதல் என்று எண்ணிக் கொண்டு கடலில் இறங்கி விட்டாள் என்பதை புரிந்து கொண்டவன் பெருமூச்சு விட்டான்.

 

அத்தோடு பதிவு செய்யப்பட்ட பதிவினை தாமதமின்றி சில்வியாவின் எண்ணிற்கு பரிமாற்றமும் செய்து விட்டான்.

 

சிறுபிள்ளை உண்மை அறிந்து கொண்டால் தான் பின்வரும் விளைவுகளை தடுக்க முடியும் என்பதை உணர்ந்தவன் உடனடியாக அவற்றை பகிர்ந்து விட்டான்.

 

தங்களின் காதலை தெரிவித்திருப்பான் என்று காத்திருந்த சில்வியா இந்த ஆடியோவை கேட்ட போது அவளது வதனம் செத்துவிட்டது.

 

உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவளது மனதையும் நான் இல்லையா என்று கேள்வி எழுப்பும் மூளையையும் கட்டுபடுத்த இயலாது தவித்து போனாள்.

 

இந்த வைஷியாவே தான் இந்த வீட்டின் செல்லப்பிள்ளை என்ற பிணக்கலோடு சேர்த்த என் மனம் கவர்ந்தவனை பறித்து கொண்டவள் என்று இரட்டிப்பு வகையில் அவள் மீது கோபம் எழுந்தது சில்வியாவிற்கு.

 

தலைகால் புரியாமல் வந்த கோவத்தில் அவளோடு எடுக்கப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் எடுத்துடைத்தாள்.  நான் என்ன செகண்ட்டிங்கா அவ யூஸ் பண்ண அப்புறம் தான் எல்லா பொருளும் எனக்கு வரும்.  இப்ப திலீப் கூட என்று கடும் கோவத்தில் வைஷியாவின் வருகைக்காக காத்திருந்தாள்.

 

அந்நேரம் பார்த்து வந்திருந்த மதி என்ன சில்லு லவ் ஓக்கே ஆகிடுச்சு..இனிமேல் எப்ப டும் டும் என்கவும் அவள் மீது பச்சை தண்ணீரை முகத்தில் ஊற்றி அவளையும் எரிச்சல் செய்து விட்டாள்.

 

வைஷியாவும் திலீப்பும் பேசிய வண்ணம் வீட்டினுள் நுழைய  அவர்கள் பின்னால் சில்வியாவின் பார்வையை தாங்கியவாரு நுழைந்தான் லேகேஷ்.

 

லோகேஷிடம் கொடுத்திருந்த கடிதம் வேறு பறந்து சென்று கிட்சனில் விழுந்ததில் செல்வி எடுத்து மோகனிடம் காட்டலாம் என்று வெளியே வந்து பார்க்கவும் சரியாக அமைந்தது.

 

                தொடர்வேனே!…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!