எல்லாம் பொன் வசந்தம்..(14)

5
(1)

அத்தியாயம் 14

 

காதலினன் ஓசையில் மகிழ்வது என்பது யுத்தத்தில் அம்மா ராகம் கேட்பதை போன்று!

 

நால்வரும் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழித்தார்கள். அன்றைய தினத்தில் அவர்கள் அருகிலிருந்த அருவிக்கு சென்று விளையாடுவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று குதூகலித்தார்கள்.

 

கூடுதல் இணைப்பாக லோகேஷூம் திலீப்பின் செல் அழைப்பால் இணைந்து கொள்ள மதியை தான் மற்றவர்கள் கிண்டலடித்து கொன்று விட்டார்கள்.

 

மனம் முழுவதும் நேசத்தோடு திலீப்பும் வைஷியாவும் கண்களாலே உரையாடி கொண்டிருந்தார்கள்.

 

காலையில் சென்றவர்கள் இரவு வீடு திரும்பிய நேரம் காத்திருந்தது பெரிய அதிர்ச்சி. 

 

ஜாக்கி ஸ்னோபரின் கடியை தாங்க முடியாமல் இறந்து விட்டான் என்பது தான் அது. 

 

சில்வியா இந்த செய்தியை கேட்டதில் இருந்து  துடிதுடித்து போய் விட்டாள்.

 

உடனடியாக அந்த நாய்க்குட்டியை ஓடிப் பார்த்தவள் தன் பின்புறம் வைஷியா நின்று கொண்டு இருப்பதை அறிந்த உடனே காலையிலையே சொன்ன நீ கேட்டையா? புடிச்சி அத கட்டிப்போடுன்னு… அப்ப என் நாய் குட்டி சாகனும்னு தானே நீ பண்ணி இருக்க… உனக்கு கொஞ்சமாவது மனசாட்சியே இல்லடி… எல்லாரும் சொல்ற மாதிரி நீ எங்களுக்காக வாழ்ந்த இத்தனை நாளா அதுக்காக என் கோபத்தை கண்ட்ரோல் பண்ணனும்னு நினைக்கிற அப்பல்லாம் சீனி சீண்டி விடுறியே உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி கிடையாதா?…

 

இரு இளம் நாய்களும் சண்டையிட்டுக் கொண்டது வைஷியாவின் நேரமா என்ன?…

வைசியாவிற்கான கெட்ட நேரம் சொல்லிக் கொண்டு வரவில்லை. 

 

காலையில்  காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து இப்போது நிகழ்ந்தது வரை அவளை பேசி தீர்த்து விட்டாள்.

 

மேடத்துக்கு சொகுசு கார் தான், சொகுசு வாழ்க்கை தான் ஊன்னு சொன்னா ஓடோடி உழைக்கிற புருஷன் தான்…. இதெல்லாம் கிடைச்சும் கூட உன்னோட ஆசை அடங்கவில்லை பார்த்தையா… உன்னோட பேராசை என்னோட ஜாக்கியவே பழி வாங்கிருச்சு… நல்லா இரு நீ நல்லா இரு என்று தீர்க்கமாக சாபமிட்டவள் தன் உடன் பிறந்தவள் தான் அவள் என்பதை மறந்து அறைந்து விட்டாள்…

 

சில்வியாவின் இந்த அடங்கா கோபத்தை கண்டு அப்படி நான் என்ன செய்து விட்டேன் என்று அவளை உலுக்க ஆரம்பித்து விட்டாள் இவளும். எத்தனை நாள் தான் பொறுமையாக செல்லுவாள். 

 

தங்கையாக பிறந்து விட்டால் போனால் போகட்டும் என்று ஆரம்பத்தில் இருந்து பொறுத்துப் போனவள் இப்பொழுது சிறு நாய்க்குட்டியின் இறப்பிற்கு கூட தான் காரணம் என்றால் எந்த பெண்ணால் ஒப்புக் கொள்வாள்.  

 

பைத்தியக்காரியாடி நீ ….இந்த இந்த வீட்ல விசேஷம் நடந்தாலும் நான் தான் காரணம், கெட்டது நடந்தாலும் நான் தான் காரணம், நீ என்னையவே நீ திட்டிட்டு இருக்கியே உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?… மனசாட்சிய இருக்கட்டும் உன்னை விட மூத்தவங்க வேற மரியாதை உனக்கு கொஞ்சமாவது இருக்குதா?… போனா போகட்டும் சின்ன பொண்ணுன்னு பொறுத்த பொறுத்து போனா வாயும் கையும் ஒவரா மீறுது. 

 

எல்லாம் ஓர் அளவுக்கு தான் பொறுத்துப் பார்க்க முடியும் சில்வியா.

பார்த்து மரியாதையா நடந்துக்க… வைஷியாவும் சில்வியாவினை தனது பங்கிற்கு திட்டிவிட்டு அந்நாய் குட்டிக்காக மனம் வருந்தினாள்.

 

பேசுவடி பேசுவ மரியாதையா பேசுனா இன்னும் நல்லா பேசுவ… தங்கச்சி ஆசைப்பட்டவன் மேல ஆசைப்பட்டவ… தங்கச்சி வளர்த்த நாய் மேல வெறி புடிச்ச மாதிரி ஆசைப்பட்டவ இப்ப அத கொன்னுட்டு வாய் வேற பேசுறியா?…

 

இரு அக்காக்கள் அடித்துக் கொள்வதை பார்த்த மதி இந்த நேரத்துல கூட உங்க ரெண்டு பேத்துக்கும் சண்டை தான் முக்கியம் இல்ல… நம்ம வீட்டுக்கு வந்த ஒரு உயிர் இப்ப நம்ம கூட இல்லைங்கிற ஒரு உணர்ச்சி கூட இல்லாம ஆளாளுக்கு சண்டை போடுறீங்களே இதெல்லாம் குடும்பமா?… முதல்ல அதுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துங்க.. நம்ம குடும்பத்துக்கு வந்து தான் உயிர் விடனும்னு அதுக்கு எழுதியிருக்கு…

 

காலையிலேயே ஸ்னோபர புடிச்சு கட்டி தானே வச்சிருந்தாங்க சில்வியா. அப்ப ஜாக்கியா போய் தான் அவன் கிட்ட கடி வாங்கி இருக்கான்.  நானும் பொறுமையா போன்னு உன் கிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன்.  வீட்ல சண்ட, சச்சரவு இல்லாம இருக்குறது தான்  நல்லது என்று நான் நினைக்கிறேன்.  இதுக்கு மேலயாவது யார் மேல யாரும் கோபப்படாமல் நடக்க வேண்டியது நடத்துங்க…

 

இவ்விருவராலும் கோபப்பட்ட மாதிரி அவர்கள் இருவரையும் மிரட்டி விட்டு நாய்க்குட்டிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தால் அழுகையோடு மதி…

 

வந்த பத்து நாட்களும் நாய்க்குட்டிகளோடு இருந்த தருணங்கள் அனைத்தும் அவர்களுக்கு கண்களில் வந்து சென்றது.  பின் நாய்க்குட்டிக்கு தங்களது தோப்பிலே மண்  போட்டு புதைத்து விட்டு அமைதியாக நால்வரும் சென்று அமர்ந்தார்கள். 

 

அப்போதுதான் வெளியில் சென்று இருந்த செல்வியும் மோகனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். 

 

கைகளில் புத்தாடை நிரம்பிய பைகளும் இனிப்பு பண்டங்களும் இருந்தது. 

 

அப்பப்பா துணி எடுக்கறதுக்குள்ள ஜவுளி முடிஞ்சு போச்சு எனக்கு உங்க அப்பாவுக்கும் டிரஸ் தேடி தேடி எடுக்குறதுக்குள்ளேயே பாதி நாள் போயிருச்சு… இவ்வாறு உலறியபடியே செல்வி வந்து  திண்ணையில் அமர்ந்தார்.

 

ராசாத்தி சில்லு கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா…. மோகன் 

 

வாடிய முகத்துடன் தண்ணீரை கொண்டு வந்து நீட்டியவளை கண்டதும் ஏதோ நடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டார்கள் அவ்விருவரும். 

 

பொத்தம் பொதுவாக ஏன் எல்லாம் டல்லா இருக்கீங்க என்று மட்டும் தான் கேட்டார் ஓஓஓஓவென என்று அழுதவள் ஜாக்கிய ஸ்னோஃபர் கொன்னுட்டான்பா… சில்வியா 

 

இவ திருந்தவே மாட்டா‌என மனதிற்குள் நினைத்துக் கொண்ட மதி இல்லப்பா காலையில இருந்து ரெண்டு நாய்க்குட்டிக்கு விளையாடிட்டு இருந்ததில்ல ஏதோ அடிபட்டுருச்சி போல ஜாக்கி இருந்துட்டான்… நடந்தவற்றை விளக்கமாக சொல்லி முடித்தால் அவள். 

 

ஓ ஜாக்கி‌ இறந்ததுனால உங்க எல்லாருக்கும் அவ்ளோ அசால்ட்டா இருக்குதுல்ல. இதை ஸ்நோபரா இருந்தா ஊரையே கூப்பிட்டு வச்சிருப்பா இந்த அக்காக்காரி என்று அவளை குறை கூறிவிட்டு தனது அறைக்கு போய் கதவை படார் என  அறைந்து சாத்திக் கொண்டாள்.

 

இவ இப்பல்லாம் ரொம்ப சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவப்பட்டுட்டு இருக்கா… இது எங்க கொண்டு போய் முடிக்க போது தெரியல என்று லோகேஷ் மனிதருக்குள் யோசித்துக் கொண்டிருந்தான். 

 

திலீப்பிற்கு கூட சில்வியாவின் மீது கோபம் பிறக்க ஆரம்பித்து விட்டது. பின் தன் வருங்கால மனைவியை திட்டுவதோடு சேர்த்து தன் கண்முன்னே அறைந்தால் யாருக்குதான் கோபம் வராது.

 

இவ்வாறு முகப்பினக்கல்களோடு நாட்களும் கரைந்து போனது.  அந்த வீட்டில் குடியேறி இருந்த மகிழ்ச்சி சில நாட்களுக்கு வெளியேறிவிட்டது போன்று சூழ்நிலை. 

 

யார் முகத்திலும் அவ்வளவு நிம்மதி இல்லை.  தங்கையை வேறு திட்டி விட்டோமே என்று வைஷியாவிற்கு வருத்தம்.  ஜாக்கி இறந்து விட்டானே என்று சில்வியாவகற்கு வருத்தம்.

 

மதிக்கும் இரு அக்காள்களும் அடித்துக் கொள்கிறார்களே என்று வருத்தம்… வீட்டில் இருந்த மற்றவர்க்கும் குடும்பம் சீர்குலைந்து கொண்டிருக்கிறதே என்று வருத்தம்…

 

 

மனிதர்களின் மனநிலை அப்படியே இருந்தாலும் நாட்கள் என்ன பிறக்காமல் இருந்துவிடும்…

 

இதோ இன்னும் 15 நாட்களில் திருமணம் என்ற சூட்டோடு நாட்கள் ஆரம்பித்தது. 

 

இன்னும் மூன்று சகோதரிகளும் உடை வாங்கவில்லை… ஏன் மணப்பெண் மாமா மாப்பிள்ளைக்கு கூட இன்னும் வாங்கவில்லை அவர்களிடையே நேர்ந்த மோதலால்.

 

பின்னர் அனைவரிடமும் பேசி திலீப் தான் ஒரு நாள் ஷாப்பிங் செல்வதற்காக ரெடியாகி கொண்டிருந்தார்கள். 

 

இதில் ஓரளவு சில்வியா திலீப்பிடம் காரியவாதியாக கார் ஓட்ட கற்றுக்கொண்டாள்.

 

ஆனால் இதற்கு இடையில் சில்வியாவின் தோழி அன்று வீட்டிற்கு வருவதால் நீங்கள் இருவரும் முன்பாகவே செல்லுங்கள் நாங்கள் சிறிது நேரம் கழித்து விட்டு வருகிறோம் என்று சொல்லி வைஷியா, திலிப்பையும் மோகனின் ஸ்கூட்டியில் அனுப்பி வைத்தார்கள்.

 

சின்னஞ்சிறுசுங்க கார்ல போனா அவ்வளவுக்கு ரொமான்ஸ் பண்ண முடியாது இல்லடி இதுல போகட்டும் ரொமான்ஸ் பண்ணட்டும் என்று சில்வியா தனது அக்காவிற்காக யோசித்ததை தனது மதியிடம் சொன்னாள்…

 

சில்லு நீ மனசு மாறிட்டியா அப்பா நீ என்னைக்கு அம்பியா இருக்க என்னைக்கு ரெமோவா இருக்க என்னைக்கு அண்ணியனா இருக்குன்னு தெரியலடி… ஏதோ நல்லது நடந்தா சரி என்று பெருமூச்சு விட்ட மதியும் இருவரும் சேர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்கள். 

 

அதற்குள் சில்வியாவின் தோழியும் வந்துவிட அவளின் பிறந்தநாளை இங்கே இவர்களின் வீட்டில் சிறப்பாக கேக் கட் செய்து கொண்டாடினார்கள்.

 

சரிடி நாங்க இன்னொரு நாள் வீட்டுக்கு வரம் அக்கா கிட்டயும் நாங்க அப்புறமா வரேன்னு தான் சொன்னோம் என்று சில்வியா கிளம்ப பாத்து பத்திரமா போ பழசு ஏதும் மனசுல வச்சுக்காத என்று அறிவுரையை சொல்லி வழி அனுப்பினாள் தோழியும்.

 

இங்குள்ள அனைவரும் தனது வார்த்தையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நன்கு கவனித்துக் கொண்டால் சில்வியா.  அனைவரும் எத்தனை தான் சொன்னாலும் நம் புத்தி ஏன் மழுங்கிப் போய் செயல்படுகிறது என்று தன்னை நொந்து கொண்டு காரை ஸ்டார்ட் செய்தாள்.

அவள் பொல்லாத நேரமும் என்னமோ கார் ஸ்டார்ட் ஆகவில்லை. 

வெகு நேரம் கழித்து ஸ்டார்ட் ஆக நம்ம வேணும்னா இன்னொரு ஸ்கூட்டில கிளம்பிடலாமா சில்லு கொஞ்சம் பயமா தான் இருக்கு என்று பயப்பட்ட மதி இடம் என்னடி அக்கா வண்டி ஓட்றதனால உயிர் பயமா?..

 

பின்ன இருக்காதா?.. எனக்குன்னு இருக்கிறதே ஒரே ஒரு உசுரு நீயாவது லவ்வுக்குன்னு ஒரு ஃபீலிங்கை ஸ்டார்ட் பண்ணி அதை அறுந்து விட்டு போயிடுச்சு . எனக்கு அந்த பீலிங் என்னன்னு கூட தெரியாதுடி. அதுதான் கொஞ்சம் பார்த்து பண்ணுடி என்று சங்தடிசாக்கில்‌ சில்வியாவை கலாய்த்தால் மதி.

 

அடிப்பாவி உங்க அக்காவுக்கு லவ் பெயிலியர் என்கிறத மறந்துட்டு பேசுறியாக்கும்… காதல் கத்திரிக்காய் நமக்கு செட் ஆகாதுடி வேணும்னா உன் உயிரை வேணும் கார் ஓட்டி வாங்கிக்கலாம் என்று அவளும் எதிரெதிர் வாதங்களோடு காரை ஓட்டிக்கொண்டு சென்றாள். 

 

அதே நேரம் ஒரு கிலோமீட்டர் திலீப்பும் வைஷியாவும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு நடுரோட்டில் ஆக்சிடென்ட் ஆகி இருந்த ஒரு நாய்க்கு முதலுதவி சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள்.

 

சிறிது நேரம் மிதமாக மெல்லிசையோடு காரை ஓட்டிக் கொண்டு வந்தவளுக்கு பக் பக் என்று அடிக்க துவங்கியது….

 

எதிரில் வேறு கூட்டங்கள் சேர்ந்து இருந்த சமயம் அங்கு அவளுக்கு நடந்தவை அனைத்தும் சில வினாடி பொழுதில் நிகழ்ந்தது போன்று இருக்க அதிர்ந்து தான் போய்விட்டால் சில்வியாவும் மதியும்.

 

 

  தொடர்வேனே!….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!