வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – இறுதி அத்தியாயம்

5
(21)

அம்பு – இறுதி அத்தியாயம்

ஆண்கள் சமையலறையில் அன்று மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.. பெண்களோ ஊர்மி நிச்சயதார்த்தத்துக்கு கடைக்கு சென்று வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியல்.. பத்திரிகைகளை அனுப்ப வேண்டிய நபர்களின் பட்டியல்.. சமையல் அலங்காரம் இவை எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்வது என்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்..

இதில் எல்லாம் ஆண்கள் மூவரும் தலையிட கூட இல்லை.. லக்ஷ்மணுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாததால் வில்விழியினா அன்னை தந்தையே அவனுக்கு பெற்றோராக இருந்து அந்த கல்யாணத்தை நடத்தி வைக்க முன் வந்தனர்..

இதில் லக்ஷ்மனுக்கு தனக்கு அன்னை தந்தை கிடைத்துவிட்ட சந்தோஷம்.. அவர்களை நிஜமாகவே தன் பெற்றோராக எண்ணினான் அவன்..

அவர்களும் லட்சுமணனை கடைக்கு அழைத்து போய் அவனுக்கு வேண்டியதெல்லாம் வாங்கினர்.. அவனின் சகோதரிகளாய் வில்விழியும் மான்விழியும் அவனுக்கு வேண்டியதெல்லாம் செய்தவர்கள் இந்தப் பக்கம் மார்க்கண்டேயனின் மருமகள்களாய் ஊர்மியின் அண்ணிகளாய் பெண் வீட்டு வேலைகளையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்..

ஆண்கள் மூவருமே அவர்கள் பொருட்களை வாங்கியதும் பையை தூக்க வருவதோடு சரி.. ஊர்மி எம்பிஏ படித்திருப்பதால் அவர்களின் கம்பெனியின் வரவு செலவுகளை பார்க்கும் வேலையை அவள் பார்த்துக் கொண்டாள்..

இப்போது இந்த்ர தனுஷ் அகாடமியிலீ வில்விழியும் இந்தரும் சரி சமமான பங்குதாரர்கள்.. அதுபோல ப்ருத்வி ஆர்ச்சரி மேனுஃபேக்சரர்ஸ் கம்பெனியில் மான்விழியும் பிருத்வியும் சமமான பங்குதாரர்களாக இருக்க பிருத்வி மேனுஃபேக்சரஸ் புதிய கிளை ஊர்மிளா ஏரோ மேக்கர்ஸ் கம்பெனியில் ஊர்மிளாவும் லக்ஷ்மணும் சம பங்குதாரர்கள் ஆனார்கள்..

மார்க்கண்டேயர் எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொண்டார்.. மார்க்கண்டேயரின் வீடு மட்டும் சகுந்தலா மார்கண்டேயர் இருவர் பெயரிலும் இருந்தது..

இப்போது சகுந்தலாவிடம் நிறைய வழக்குகள் குவிந்திருந்தன..

மார்க்கண்டேயர் அவரின் திறமையை பார்த்து வியந்து போனார்..

அன்று.. சகுந்தலாவும் மார்க்கண்டேயரும் கோயிலுக்கு சென்று இருந்தார்கள்..

எல்லோரும் வேலைக்கு சென்றிருக்க மான்விழி குழந்தைகளை பார்த்துக் கொள்ள வீட்டிலேயே இருந்தாள்.. அன்று தாமதமாக மார்க்கண்டேயரும் சகுந்தலாவும் வீட்டுக்கு வந்த பிறகு கம்பெனிக்கு செல்லலாம் என்று இருந்தாள் அவள்..

அவள் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த சமயம் சக்தியும் சின்ட்டூவும் ஷ்யாம் கர்ணாவோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

சிறிது நேரத்தில் அவர்களுக்கு உணவு கொடுக்க கையில் கிண்ணத்தோடு வெளியே வந்த மான்விழி சரியாக அவள் வெளியே வந்த நேரம் யாரோ இருவர் வீட்டுக்குள் நுழைந்து குழந்தைகள் இரண்டையும் தூக்கி ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போக அதன் பின்னாலேயே ஓடி சென்றவள் “ஏய்.. யாருடா நீங்க..? எதுக்குடா குழந்தைகளை தூக்கிட்டு போறீங்க? டேய் படுபாவிங்களா..”

 தன் கையில் இருந்த கிண்ணத்தை கீழே போட்டுவிட்டு கத்திக் கொண்டே சென்றவள் அவர்களை பின்தொடர முடியாமல் திரும்பவும் வந்து வீட்டுக்குள் பார்க்க வீட்டிற்குள் எந்த வண்டியும் இல்லை..

 ஷ்யாம் கர்ணாவோ தன் கயிற்றை எப்படியாவது அறுத்துக் கொண்டு குழந்தைகளை காப்பாற்ற போக வேண்டும் என்று விழைவது போல் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டு பெரிதாய் கனைத்தபடி தவித்துக் கொண்டிருந்தான்..

அவன் கனைக்கும் சத்தத்தில் அவன் புறம் திரும்பி பார்த்த மான்விழி அவர்களின் குழந்தைகளின் கதறல்கள் மட்டுமே கண்களில் நிறைந்திருக்க சட்டென தன் பயத்தை உதறித் தள்ளியவள் வேகமாக சென்று தன் கைபேசியை தன் இடையில் சொருகிக்கொண்டு ஷ்யாம் கர்ணாவின் கயிற்றை கழட்டி விட்டவள் ஒரே தாவலில் அவன் மீது ஏறி பழைய மான்விழியாக அவனை அந்த கடத்தல்காரர்கள் போன திசையை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தாள்..

சட்டென தன் கைபேசியில் முதலில் இருந்த எண்ணுக்கு அழைத்தவள் அந்த பக்கம் வில்விழி அழைப்பை ஏற்கவும் “மலரு.. நீதானா..? இங்க பாரு.. யாரோ நாலு பேரு ஜீப்ல வந்து நம்ம குழந்தைகளை கடத்திட்டு போயிட்டாங்க.. நான் ஷ்யாம் கர்ணாவோட அவங்களை துரத்திகிட்டு போயிட்டு இருக்கேன்.. இப்ப நான் தெரு முனையில தான் இருக்கேன்.. என் கண்ணுக்கெட்டற தூரத்தில் தான் அவங்க இருக்காங்க.. இன்னும் கொஞ்சம் வேகமாக போனேனா அவங்க வண்டி கிட்ட போயிருவேன்.. நான் என் லைவ் லொகேஷன் ஷேர் பண்றேன்.. நீ உடனே நான் எங்க இருக்கனோ அங்க வந்துரு..”

அவள் சொன்னதைக் கேட்ட வில்விழியோ படபடத்துப் போனாள்..

 “மானு.. நீ குதிரை ஓட்டுறியா?” என்று கேட்க “அடியேய் இப்ப அதெல்லாம் பேச டைம் இல்லடி.. நான் அவனுங்களை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்.. என்னால இதுக்கு மேல பேச முடியாது.. நீ சீக்கிரம் வா..” என்று சொல்லிவிட்டு கைபேசியை அது இருந்த இடத்திலேயே வைத்து அந்த வண்டியை தொடர்ந்து போனாள்..

அவள் சொன்னது போல லைவ் லொகேஷன் போட்டு இருக்க அதை பார்த்தபடியே அவள் இருக்கும் இடத்திற்கு இந்தரையும் கூட்டிக்கொண்டு விரைந்தாள் வில்விழி.. பிருத்விக்கும் ஊர்மிக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு சரியாக பத்து நிமிடத்தில் மான்விழி இருந்த இடத்தை அடைந்து இருந்தாளா அவள்..

அவள் வண்டியில் வில்லும் அம்பும் இருந்தன..மான்விழிக்கு முன்னால் ஒரு ஜீப் போய்க்கொண்டிருந்தது.. அதிலிருந்து அவர்கள் குழந்தைகளை அடக்கிப் பிடித்து வைத்திருக்க அவர்களும் அம்மா சித்தி என்று மாறி மாறி மான்விழியை கதறி அழைத்துக் கொண்டு இருந்தார்கள்…. வில்விழி வந்து கொண்டிருந்த வண்டி திடீரென நின்று விட என்ன கோளாறு என்று தெரியாமல் தவித்து போனாள் வில்விழி..

சட்டென தாமதிக்காமல் “இந்தர் நீங்க வண்டியை பார்த்து அதை ஸ்டார்ட் பண்ணி கொண்டு வாங்க.. நான் மான்விழியோட அவங்களை ஃபாலோ பண்றேன்..” என்று அவசரமாய் சொல்லிக்கொண்டே காரை விட்டு இறங்கி ஓடினாள்..

 அவன் “நீ எப்படி டி போவ?” என்று கேட்டுக் கொண்டிருக்க அவன் கேட்டது காற்றில் கரைந்து போனது.. வேகமாக நாலு கால் பாய்ச்சலில் ஓடி சென்று குதிரையை அடைந்தவள் “மானு.. ஒரு நிமிஷம்.. நான் உனக்கு பின்னாடி..ஏறிக்கறேன்.. என்று சொல்ல ஷ்யாம் கர்ணாவும் ஒரு நொடி நிதானித்தான்..

 அந்த இடைவெளியில் சட்டென அவன் மேல் ஏறிய வில்விழி மான்விழியின் பின்னால் அமர்ந்து கொண்டாள்..

அதேநேரம் பிருத்வியும் ஊர்மியும் வந்த கார் இந்தர் கார் அருகில் வர அவனும் பிருத்வியின் காரில் ஏறிக்கொண்டான்..

ப்ருத்வி தன்னவள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் அழகை பார்த்துக் கொண்டே மெய் மறந்து வண்டியை பின்னாலேயே மெதுவாக ஓட்டி சென்று கொண்டிருந்தான்..

இந்தரோ “டேய் நம்ம குழந்தைங்க அங்க டேஞ்சர்ல இருக்காங்க டா.. இப்பதான் பொண்டாட்டியை பார்த்து மயங்கிட்டு இருக்கான்.. ஃபாஸ்டா போடா..” என்க அப்போதுதான் நிலைமையை உணர்ந்தவன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான்..

இங்கு மான்விழி ஜீப்புக்கு மிக அருகில் சென்று இருக்க வில்விழியோ முன்னால் சென்று கொண்டிருந்த வண்டியில் ஓட்டி கொண்டிருந்தவனின் வெளியே தெரிந்த காலை நோக்கி அம்பை செலுத்தி இருந்தாள்..

சரியாக அவன் காலில் அம்பு பாய அம்பு பட்டவுடன் வலியில் துடித்து போனவன் வண்டியை தாறுமாறாக செலுத்த தொடங்க அதில் வண்டி கொஞ்சம் வேகம் குறைந்தது.. அதற்குள் வண்டியை அடைந்திருந்தான் ஷ்யாம் கர்ணா..

சட்டென இறங்கிய இரு சகோதரிகளும் ஓடிச்சென்று ஒரு மரத்தில் மோதி நின்ற வண்டியில் இருந்து குழந்தைகளை பறித்து எடுக்க அவர்களோ வில்விழியையும் மான்விழியையும் சரமாரியாக தாக்க தொடங்கினார்கள்..

இரண்டு பேரும் அவர்களை எதிர்த்து எவ்வளவு போராடியும் ஒரு நிலையில் அவர்களால் நான்கு பேரை சமாளிக்க முடியவில்லை.. சரியாக அப்போது இந்தரும் பிருத்வியும் அங்கு வந்து சேர அவ்வளவுதான் நான்கு பேரையும் சுற்றி வளைத்து அடித்து துவைத்து கொத்தாக பிடித்திருந்தார்கள் குடும்பமாய் சேர்ந்து..

அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் இந்த கடத்தலுக்கு காரணமாய் சொன்ன பெயர் விஷ்வாவும் அவன் நண்பர்களும்..

மான்விழி அருகில் வந்த ப்ருத்வி.. “இந்த சீனை பாக்க எவ்வளவு நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமாடி? என் மானு பழையபடி ஹார்ஸ் ரைட் பண்றா.. என்ன ஸ்டைலு.. என்ன ஸ்பீடு.. சான்சே இல்லடி.. அப்படியே எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு.. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இனிமே எனக்கு ஒரு ரைடிங் பார்ட்னர் கிடைச்சாச்சு..”

அவன் மகிழ்ச்சியாய் சொல்ல “ஹா..ன்.. அதெல்லாம் செல்லாது.. எனக்கு தனியா ஒரு குதிரை வாங்கி கொடுங்க.. அதுக்கு தேஜஸ்வின்னு பேர் வச்சு நான் ஒட்டிக்கிறேன்.. ஷ்யாம் நல்லா தான் ஓடுறான்.. ஆனா அப்பப்ப கொஞ்சம் அவன் இஷ்டத்துக்கு வேலை செய்றான்.. எனக்கு நான் சொல்ற மாதிரி கேக்குற.. குதிரை தான் வேணும்..”

“நீ சொல்ற மாதிரி கேக்குற புருஷன்.. வேணும்.. நீ சொல்ற மாதிரி கேக்குற குதிரை வேணும்.. நீ சொல்ற மாதிரி கேக்குற புள்ள வேணும்.. அப்படித்தானே..”

 “அதான் புள்ள பொறந்துட்டானே.. இனிமே பொண்ணுதான் வேணும்..” அவள் சொல்ல பிருத்வியோ விழி விரித்து “அடிப்பாவி.. என்னை விட ஃபாஸ்ட்டா இருக்கியேடி.. இன்னைக்கே ப்ராஜெக்ட்டை ஆரம்பிச்சுடுவோம்..” என்க.. அவளோ அதைக் கேட்டு கன்னம் சிவந்தாள்..

“அப்பப்பப்பா.. நம்ம ஃபேமிலில ஒரே வீர மங்கைகளா இருக்காங்க.. இதை கொண்டாடணுமே..” என்றான் ப்ருத்வி..

“ஆமா.. விழி ஒரே ஏரோல அந்த ஆள மொத்தமா சாச்சுட்டா.. செம ஷாட்.. சும்மாவா ஐயாவோட டிரைனிங் ஆச்சே..” என்றான் இந்தர்..

அவளோ இந்தரை முறைத்தாள் “அவர் சும்மா ஓட்டுறாரு.. லக்ஷ்மண் தான் என்னை இவ்வளவு நல்லா ட்ரெயின் பண்ணது.. எல்லா பேரையும் தானே தட்டிட்டு போக பார்க்கிறார் இவரு.. இவரு கத்துக் கொடுத்திருந்தா நான் இன்னும் இருக்கிற ஸ்கில்ஸையும் மறந்திருப்பேன்..”

அவள் சொல்ல பிருத்வியோ “என்ன விழி இப்படி சொல்ற.. வித்யா என்ன போடு போடுறா..” என்க இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள் வில்விழி..

 இந்தரோ தன் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டவன் அவள் காதருகே குனிந்தவன் “என்ன ஓட்டுறேன்னு செமையா சிக்கிட்டயே டி.. இப்ப பதில் சொல்லு பார்ப்போம். .ஏன்டி உனக்கு இந்த வேலை” என்று கிசுகிசுக்க

அவளோ “அது என்னவோ தெரியல பிருத்வி.. உங்க அண்ணா சொல்லிக்கொடுத்தா மட்டும் எனக்கு எதுவும் வர மாட்டேங்குது.. இதோட ரகசியம் என்னனு உங்க அண்ணாவையே கேட்டுக்கோங்க ..” சட்டென இந்தரையே சிக்க வைத்தாள் அவள்..

“இனிமே அந்த விஷ்வா என்ன வேணா பண்ணிக்கட்டும்.. நம்ம வீட்டு பொண்ணுங்க இவ்வளவு தைரியமா இருக்கிற வரைக்கும் நமக்கு எந்த கவலையும் இல்லை.. அவன் என்ன பண்ணாலும் அவனை சாச்சி ஜெயிச்சுட்டு வருவாங்க.. என்ன கேர்ள்ஸ் அப்படித்தானே..?”

 இந்தர் கேட்க மூன்று பெண்களும் கோரசாக “யெஸ்… வீ ஆர் பவர் கர்ள்ஸ்..”

என்றார்கள்..

அன்று மூன்று ஆண்களும் வேலை எல்லாம் முடித்து அலுத்து போய் வரவேற்பறையில் அமர அங்கே வந்து அமர்ந்த வில்விழி மூவரிடமும் ஒரு கேள்வியை கேட்டாள்..

“நாங்க பண்ணின வேலை எல்லாம் பண்றதுக்கு ரொம்ப சிரமமா இருக்கு போல..” என்று அவள் கேட்க இந்தரோ “ஆமா பேபி.. இவ்ளோ வேலைகளை எப்படித்தான் நீங்க பாத்துக்கிட்டிங்களோ.. இதை முடிச்சுட்டு நீ அகடமிக்கு வேற வந்த ..ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. ஆனாலும் நீங்க எல்லாம் ரொம்ப பவர்ஃபுல் டி.. பெண்கள் எல்லாம் வீக்கர் செக்ஸ்ன்னு சொல்றவங்கள முதல்ல அடிச்சு போடணும்.. நீங்க தான்டி ரொம்ப ஸ்ட்ராங்.. நாங்க எல்லாம் ரொம்ப வீக்.”.

இந்தர் சொல்ல பிருத்வி “ஆமாமா.. நைட் படுக்கும் போது உடம்பு வலி பின்னி எடுக்குது..”

வில்விழியோ இந்தரிடம் குனிந்து ரகசியமாய் “இவ்வளவு வேலை பண்ணிட்டு எங்களுக்கும் அப்படித்தான் உடம்பு வலி பின்னி எடுக்கும்.. ஆனாலும் நைட்டு சில்மிஷம் செஞ்சு செஞ்சு தூங்கவே விட மாட்டீங்க இல்ல..? இப்ப புரியுதா எங்க கஷ்டம்.. ஐயா என் பக்கத்துல வந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகுது.. ரூமுக்குள்ள வந்த உடனே அப்படியே குப்புற படுத்து தூங்கிட வேண்டியது..”

அவள் சொன்னதை கேட்டவன் “ஆமாம்டி எனக்கே தெரியுது.. ரொம்ப மிஸ் பண்றேன் உன்னை..” என்றவன்.. “ஆனா ஒரு விஷயம் இருக்கே.. நைட் தூங்க விடலன்னாலும் அப்ப வேலை செஞ்சு உழைக்கிறது எல்லாம் நாங்க தானே.. நீ என்னடி வேலை செய்ற?”

அவன் கேட்க “நான் இங்க வந்த அன்னைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போனோம் இல்ல..? அப்ப நான் செஞ்ச வேலை எல்லாம் அதுக்குள்ள மறந்து போச்சா? இன்னிக்கு இன்னொரு ரவுண்டு போவோமா?” அவள் ரகசியமாக கேட்க

“அடியேய் கொன்னுடுவேன்டி உன்னை.. மறுபடியும் என் கைய கட்டற வேலையெல்லாம் வச்சுக்காத… சத்தியமா அந்த கட்டுக்கு அடங்கி இருக்க மாட்டேன்.. கட்ட அறுத்துடுவேன்..” அவன் பல்லை கடித்துக் கொண்டு ரகசியம் பேச அவளோ விழி விரித்து அவனைப் பார்த்தாள்..

பிறகு தொண்டையை செருமியவள் “இந்தர் அவருக்கு ரொம்ப கஷ்டம்னு தான் இவ்வளவு நேரம் புலம்பி தள்ளிட்டு இருந்தாரு.. மத்தவங்க எல்லாம் எப்படி?” என்று கேட்க

“ஆஹான்.. அதைத்தான் இவ்ளோ ரகசியமா இவ்வளவு நேரமா பேசிட்டு இருந்தீங்களா?” பிருத்வி கிண்டலாக கேட்டான்..

“இப்ப அதுவா மேட்டரு.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..” என்றாள் வில்விழி..

“கஷ்டமா தான் இருக்கு.. ஆனா என்ன செய்ய முடியும்? இன்னும் ஆறு மாசத்துக்கு பண்ணி தான் ஆகணும்..”

“மாமா நீங்க என்ன சொல்றீங்க..?”

“அவர் இதை போன மாசமே இரண்டாவது நாளே சொல்லிட்டாரு.. நீ தான் ரொம்ப லேட்டு..” என்றான் இந்தர்..

களுக்கென சிரித்தவள் “சரி நாங்க பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.. உங்களுக்கும் இது ஓகே னா நம்ம இனிமே நான் சொல்ற சிஸ்டத்துக்கு மாறிக்கலாம்.. விருப்பம் இல்லன்னாலும் சொல்லிடுங்க.. உங்க இஷ்டம் தான்..”

“எதுக்கு இவ்வளவு பீடிகை போடுற.. விஷயம் என்னன்னு சொல்றியா?”

“சொல்றேன்.. நீங்க வீட்டு வேலை எல்லாம் இன்னும் ஆறு மாசத்துக்கு பாக்கணும்.. அதுதான் என்னோட கண்டிஷன்.. இதுக்கு பதிலா நாங்க உங்களுக்கு இன்னொரு ஆப்ஷன் தரோம்.. நாங்களும் நீங்களும் வீட்டு வேலையை ஷேர் பண்ணி செய்யலாம்.. ஆனா அதுல ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு..”

அவள் சொல்ல ஆர்வமாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தார்கள் மூன்று ஆண்களும்..

“என்ன ட்விஸ்ட்னா.. அப்படி நாங்க ஷேர் பண்ணி செய்யறதா இருந்தா இனிமே காலம் முழுக்க மென் கேர்ள்ஸ் ரெண்டு பேரும் ஷேர் பண்ணி தான் செய்யணும்.. இந்த ஆறு மாசம் கணக்கெல்லாம் அப்புறம் கிடையாது.. இதுல எது வேணும்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க.. ஆறு மாசத்துக்கு எல்லா வேலையும் செய்றீங்களா? இல்ல காலம் முழுக்க ஷேர் பண்ணி செய்றீங்களா..?” அவள் கேட்டு முடிக்கவில்லை மார்க்கண்டேயன் சட்டென பதில் சொல்லி இருந்தார்..

“இல்ல ஷேர் பண்ணி செய்ய வேண்டாம்..” யோசிக்காமல் சொல்லி இருந்தார் மார்க்கண்டேயன்..

அங்கிருந்த எல்லோர் முகமும் அதைக் கேட்டு சுருங்கியது.. அவரே தொடர்ந்து பேசினார்..

 “ஷேர் பண்ணி செய்ய வேண்டாம்.. காலம் முழுக்க நாங்களே இந்த வேலையெல்லாம் செய்றோம்.. முடிவை எல்லாமே குடும்ப தலைவிங்களா நீங்களே எடுங்க..” அவர் சொல்ல சகுந்தலாவின் விழிகள் நீர் கொண்டு நிறைந்தது..

தன்னவனை பெருமையாக பார்த்திருந்தார் அவர்..

சந்தோஷ மிகுதியில் பக்கத்தில் அமர்ந்திருந்த வில்விழியை இறுக்கமாய் அணைத்துக் கொண்டார்..

 “என் வாழ்க்கையில நீ எவ்வளவு பெரிய சந்தோஷத்தை தந்து இருக்கேன்னு உனக்கு தெரியாது.. இந்த வீடு உனக்கு தந்ததெல்லாம் பெரிய பெரிய கஷ்டம் மட்டும் தான்.. அதுக்கு பதிலா இந்த வீட்டுக்கு முழுக்க முழுக்க சந்தோஷத்தை வாரி வாரி கொடுத்து இருக்க.. நீ என் புள்ளையோட காலம் முழுக்க சந்தோஷமா வாழணும்.. இந்த வீடு உனக்கு எப்பவுமே சந்தோஷத்தை மட்டும் தான் தரணும்..” நெகிழ்ந்து பேசினார் அவர்..

மார்க்கண்டேயனும் “ஆமாம்மா விழி.. என்ன மன்னிச்சிடுமா.. உன்னை ரொம்ப கொடுமை படுத்திட்டேன்.. உங்களை எல்லாம் அடக்கி வைக்கணும்னு நினைச்சேனே தவிர உங்களை எல்லாம் ஆள வைக்கிறதுல இருக்குற சந்தோஷம் என்னன்னு எனக்கு புரியல.. இப்போ அந்த சந்தோஷம் நல்லாவே புரிஞ்சிடுச்சு.. காலம் முழுக்க இந்த வேலைகள் எல்லாம் நாங்களே செய்யறோம்.. அப்பதான் இந்த சந்தோஷம் காலம் முழுக்க எங்களுக்கு கிடைக்கும்.. அப்பத்தான் இத்தனை நாள் உங்களை அடிமையா நடத்துனதுக்கு நான் பரிகாரம் செஞ்ச மாதிரி இருக்கும்..”

அவர் சொன்னதைக் கேட்ட வில்விழி “மாமா உங்களுக்கு எங்க வேதனையை புரிய வைக்கணும்னு நினைச்சேனே தவிர உங்களை பழி வாங்கணும்னு நினைக்கல.. எப்ப நீங்க செஞ்ச அடக்குமுறைகளும் கொடுமைகளும் தப்புன்னு புரிஞ்சிட்டீங்களோ அதுவே போதும் மாமா.. அதுக்கு மேல வேற எதுவும் எனக்கு வேண்டாம்.. காலம் முழுக்க இனிமே ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லாம இந்த வீட்ல நம்ம எல்லாரும் வேலைகளை ஷேர் பண்ணி செய்யலாம்.. மத்தவங்க கஷ்டத்தை புரிஞ்சுக்க ட்ரை பண்ணலாம்.. ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட்டா எமோஷனல் பில்லரா இருக்கலாம்.. அப்புறம் நம்ம குடும்பத்துல கஷ்டமே வராது மாமா..” என்றாள்..

அவளை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தான் இந்தர்..

அடுத்த நாள் காலையிலிருந்து அந்த வீட்டின் சூழ்நிலையே மாறி இருந்தது.. சமையல் வேலையை ஒரு ஜோடியும் துவைக்கும் வேலையை ஒரு ஜோடியும் பாத்திரம் கழுவும் வேலையை ஒரு ஜோடியும் பார்த்துக்கொள்ள குழந்தைகளை பார்க்கும் வேலை அப்போதைக்கு கல்யாணம் ஆகாத ஊர்மிளாவின் தலையில் விழுந்தது..

“ஊர்மி குழந்தைகளை நல்லா பார்த்துக்கிட்டு ட்ரெயின் பண்ணிக்கோ.. நாளைக்கு கல்யாணம் ஆனா உனக்கும் வசதியா இருக்கும்..” மான்விழி கேலி செய்ய தன் வயிற்றை யாருக்கும் தெரியாமல் வாஞ்சையோடு தடவிக் கொடுத்துக் கொண்டாள் ஊர்மிளா..

முற்றும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!