Home Novelsசெவ்வானம் தீண்டிய பனிக்காற்று

செவ்வானம் தீண்டிய பனிக்காற்று

2) செவ்வானம் தீண்டிய பனிக்காற்று

by Kowsalya Velmurugan
5
(1)

ஐந்து வருடத்திற்கு முன்பு என் நினைவு ஏன் மீண்டும் அலை பாய்கிறது என்று தனது தலையை உலுக்கி கொண்ட ஆரவ் இன்றைய முக்கியமான மீட்டிங்கிற்காக தயாராகி விமான நிலையத்தில் காத்திருந்தான்.

 

வாரத்தில் இவ்வாறு மூன்று முறையாவது மீட்டிங் என்று தனது ஆபீஸ் இடம்பெற்றுள்ள சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் என்று அலைப்பாயும் பறவை அவன்!…

 

அவன் புறப்பட வேண்டிய விமானம் இப்பொழுது கிளம்புவதற்கு பத்து நிமிடம் தாமதம் என்று அறிக்கை வரவே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு சொல்லவொணா எண்ணங்களும் அழகிய பிம்பங்களும் வந்து போயின.

 

இதோ இன்று நினைத்தால் கூட அவனுக்கு இனிப்பை கூட்டக்கூடிய அவளது நினைவுகள் நெஞ்சுக்கூட்டில் புதைந்து காணப்படுகிறது.

 

நீ என் கூட நிரந்தரமா இருந்திருக்கலாம்.  உன் ஸ்பரிசும் இல்லாமல், உன் மூச்சு காத்து என் மேலபடாமல், உன் கிட்ட சின்ன சின்ன சண்டை போடாமல் என் வாழ்க்கையே வெறுச்சோடி போய்டுச்சு.

 

மனதிற்குள் நினைத்தாலும் ஆவி இடமா அவன் பேசுவான் என்று என் மனசாட்சி அவனை கேள்வி கேட்டது.

 

ஆவியா பூதமா அவை எதுவும் இல்லை என்ற வண்ணத்தில் இதோ அவன் கண்முன் அவளது அழகிய தேவதை தெரிவது போன்ற பிம்பம்.

 

மதுரை விமான நிலையத்தில் அந்நேரம் பார்த்து கொட்டிய மழையில் அங்கு ஏகப்பட்ட கூட்டங்கள்.  மழைநீர் தெறிக்காமல் இருக்கும்படி சிலர் தன்னை ஒதுங்கி நிறுத்தி வைத்துக் கொண்டார்கள்.  பலரோ குடைகளை நீட்டியும், துண்டு மற்றும் தனது புடவை முந்தானையினால் தங்களது தலையினை மூடி கொண்டிருந்தார்கள்.

 

அப்பேர்ப்பட்ட கொரோனா பரவும் சமயத்தில் கூட இவ்வளவு கூட்டம் என்று அவன் மனம் வேண்டுமா என மனதிற்குள் பேசினான்.

 

அண்ணா ரெண்டு ஐஸ்கிரீம் வித் பட்டர் ஸ்காட்ச் என்ற அதே வார்த்தை மீண்டும் அவனது செவியில் விழுந்தது.

 

ஐஸ்கிரீம் வித் பட்டர் ஸ்காட்ச் ஓட சாப்பிடறது என்னோட ஃபேவரிட். உனக்கும் வேணுமா?  சான்சே இல்ல நீ கேட்டாலும் நான் வாங்கி தர மாட்டேன்.  பிகாஸ் இது என்னோட டேஸ்ட். நான் மட்டுமே அனுபவிக்கணும் நினைக்கிற என் டேஸ்ட்.

 

ஏற்கனவே பழக்கப்பட்ட குரல் போல இருக்க அவன் அது  என்று அவனுடைய இரு விழிகளும் அந்த குரலுக்கு சொந்தக்காரியை தேடி அலைபாய்ந்தது.

 

அங்கும் இங்கும் அலைபாய்ந்த அவனது விழியில் விழுந்தவள் அந்தப் பெண்!

 

விமான உடையில்  மழையில் நனைந்தவாறு ஐஸ்கிரீமை கையில் பிடித்து சுவைக்க காத்து கொண்டிருந்தாள்.

 

படபட வென தனது காலடிகளை எடுத்து வைத்துக்கொண்டு அவள் அருகாமையில் சென்றவன் நீ என்று கையை நீட்டினான்.

 

யார் இவன் என்பது போல அவ்விரு விழிகளும் நோக்க,  அதற்குள் அவனே அவள் அணிந்திருந்த மாஸ்கினை அகற்றினான்..

 

ஒருவேளை அவளாக இருப்பாளோ என்று யோசித்து வேகமாக அடி எடுத்து வந்தவன் எதையும் எதிர்பார்க்காமல் செய்த செயல் அது.

 

ஆர் யூ மேட்?  இடியட்…

 

அந்த ஐஸ் கிரீமை உண்ணும் பெண் இவ்வாறு பேசவும் அவனுக்கு சுரத்தற்று காணப்பட்டது முகம். பாவம் ஏமாந்து போனான்.

 

ஏனோ தன் ஐந்து வருடத்திற்கு முன்பான வாழ்க்கையின் சொந்தக்காரிக்கு சொந்த குரல் போல இருக்க தேடி அலைப்பாய்ந்த அவனுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.

 

அந்தப் பெண்ணும் விமானி தான்.  விமான பயணம் செய்யும் அனைவரையும் பாதுகாப்பிற்காகவும் அனுசரிக்கும் பெண்.  ஆனால் சென்னை டூ மதுரையின் விமான ஊழியர் அல்ல அவள்.

 

சாரிங்க நான் நீங்க எனக்கு தெரிஞ்சவங்கனு நினைச்சு தப்பு பண்ணிட்டேன்.

 

அவளை ஏளனமாக பார்த்தவள் பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டு சாரிங்கன்னு சொல்றியா.  இந்த மாதிரி வேற எந்த பொண்ணு கிட்டயும் பண்ணி வைக்காம போய் உன் வேலையை பார் என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

 

நல்ல வேலையாக தப்பித்தோம் என்று ஆரவும் அவளும் பேசிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்தார்கள் கயலும் சுபாவும்.

 

மாட்டி இருந்திருக்கலாம்.

 

தன் துணை இறந்து ஐந்து வருடம் ஆகிவிட்டது என்று சாங்கியம் செய்து கொண்டிருக்கும் அவனுக்கு அதிலிருந்து விடுதலையாவது கிட்டி இருக்கும்.

 

இங்கே என்னடா பண்ற?  இது அவனது தோழன் சக்திவேல்.

 

நெடு நெடுவென்று வளர்ந்த உயரம்.  கண்களின் புருவமோ கேள்வி துளைகளை துளைத்தது போன்று இருக்கும்.   கணீர் என்று பேசும் அவனது குரல் ஆரவிற்கு பக்கபலமானது.

 

இல்லடா நான் கயல இங்க பார்த்த மாதிரியே எனக்கு ஒரு இலியூஷன்டா.

 

அதான் நீயே சொல்லிட்டியேடா இலியூஷன்னு.  அந்த பொண்ணு இறந்து அஞ்சு வருஷம் ஆயிடுச்சு.  வருஷா வருஷம் நம்ம காரியம் பண்ணும் போது கூட உனக்கு உயிரோட இருக்கான்ற நினைப்பு தான் இருக்கா.

 

இல்ல சக்தி அவளோட அந்தக் குரல், அது மட்டும் இல்லாம அவளோட ஸ்பரிசத்த நான் உணர்ந்தேன்.  எனக்கு என்னமோ என்னோட கயல் உயிரோட இருக்கானு தோணுது.

 

நீ காதல், கல்யாணம், குடும்பம் என்ற குட்டையில ஊறி போயி எழுந்து வந்தவன்டா.  உனக்கு அதனால அப்படி தோணலாம்.  ஒரு கணவனா உன் மனைவிக்கு கொல்லி வைத்தது மறந்து போச்சா.  உன் குழந்தையை சாம்பலா பாத்தியே அதுவும் மறந்து போச்சா.

 

எதுவும் எனக்கு மறக்கலடா.  ஆனாலும் என் உள்ளுணர்வு என்னோட கயல் உயிரோடு தான் இருக்கான்னு சொல்லுது.

 

போதும் போதும் உன் கயல் புராணம்.  மீட்டிங்க்கு தேவையான எல்லா ப்ராப்பர்ட்டீஸும் எடுத்துட்டியா?  பிரிப்பர் பண்ணிட்டியா மீட்டிங்க்கு?  மீட்டிங்ல எவ்ளோ பெரிய இம்பார்டன்ட் ஆன ஆளுங்களாம் வரப்போறாங்கன்னு உனக்கு தெரியுமில்ல.  இந்த ஒரு மீட்டிங் தான் நம்மளோட அடுத்த பிரான்ச் ஓப்பனிங் காரணம்.  தயவு செஞ்சு இதுல மட்டும் நீ உனக்கு ஏற்படுற இலியூஷன்ஸ் ஏதாவது எலிவேஷன் பண்ணி காட்டிராத.  அப்புறம் நம்ம கட்டி வச்சிருக்க மனக்கணக்கெல்லாம் இடிஞ்சு விழுந்துரும்.  கவனமா இரு ஆரவ்.

 

ஏனோ இந்த ஐந்து வருடத்தில் கயல் தன் முன்பு வந்து செல்வது போன்று நிகழ்வுகள் நிறைய முறை அவனுக்குத் தோன்றியுள்ளது.  அதை தனது தோழன் சக்திவேலிடமும் கூறி இப்படித்தான் வாங்கி கட்டிக் கொள்வான்.

 

ஒரு நல்ல தோழனாக அவனுக்கு இப்போதைக்கு எது தேவையோ அதில் அவனை கவனம் செலுத்துவதில் உந்துகோலாக இருந்தான் அவனது தோழனும்!…

 

காதலித்து மணமுடித்தவன்! அந்தக் காதல் முறிவு அடையும் சமயத்தில் குழந்தை பெயர் பெற்றவன்!  பின்பு அந்த கல்யாணத்தில் பெருமகிழ்ச்சி அடைந்து இரட்டை உயிரடைந்தவன்!  மொத்தமாக அவர்கள் இருவரையும் இழந்தவன்!

 

இப்பேர்ப்பட்ட இலியூஷன்கள் அனைத்தும் அவனுக்கு இல்லாமல் போனால் தான் தவறு.

 

பின்னர் கோவை கிளம்பிய விமானத்தில் ஏறி அமர்ந்தவர்கள் மதுரையில் இருந்து புறப்பட்டு விட்டார்கள்.

 

நான் தான் சொன்னேன்ல சுபா இந்த இடம் எனக்கு ரொம்ப டேஞ்ஜரஸ்னு.  இப்ப மட்டும் நான் அவன் கண்ணுல பட்டு இருந்தேன் என் நிலைமை என்னாகும்னு தெரியுமா? என்ன சும்மா விட்டு இருக்க மாட்டான் கொன்னே போட்டு இருப்பான்.

 

சும்மா மாமா மேல தப்பு சொல்லாத அக்கா.  இப்ப கூட நீயா இருக்க கூடாதா என்று எவ்வளவு தவிச்சு போயிட்டாரு பாத்தியா இல்லையா? மாமா ரொம்ப நல்ல மனசுக்காரன்கா.

 

என்னையவே எதிர்த்து பேசுற அளவுக்கு உங்க மாமா நல்ல மனசுக்காரரா சுபா.

 

பின்பு அவள் அமைதியாகி போனாள்.

 

சுபாவும் கயலும் உடன் பிறந்த அக்கா தங்கையர்.  ஆத்தூரில் உள்ள கெங்கவல்லியூரில் மணிமாறன் மற்றும் கிருத்திகாவின் துணைக்கு பிறந்த இரட்டைச் செல்வங்கள்.  செல்லப்பானால் ஒரு ஐந்து நிமிடம் முன்பின் பிறந்தவர்கள் எனலாம்.

 

இருவருக்கிடையே இருக்கும் ஒரே வித்தியாசம் வாய் துடுக்குகள் தான்.  முக ஜாடை எல்லாம் ஒன்று போல எல்லாம் இருக்காது.  ஒருத்தி அப்பா போல, இன்னொருத்தி அம்மா போல!

 

மிகவும் தாழ்த்தப்பட்ட குளத்தில் பிறந்தவர்கள் அவர்கள்.  இருந்தும் காதலித்து தனது காதலை நிலை நிறுத்துவதற்காகவே அவனை மணம் முடித்தாள்.

 

அதன் பின் நடந்த அனைத்தையும் நினைத்தவளுக்கு தனது நெஞ்சை அடைப்பது போன்று இருந்தது.

 

சுபா முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்.  உங்க மாமாக்கு எப்ப பாத்தாலும் சப்போர்ட் பண்றத நிறுத்திட்டு என் நிலைமை என்னன்னு புரிஞ்சுக்கோடி.  நான் உங்க மாமாவுக்கும் சரி எனக்கும் சரி கெட்டது செய்ய மாட்டேன்.  இப்போதைக்கு நம்ம அவரு கண்ணுல படக்கூடாது.  நம்ம பட்டுட்டோம் கண்டிப்பா நம்மளோட உயிர் பரலோகம் போயிடும்.  அடுத்த டைம் மதுர விமானத்துல யாராவது லீவுனா நீயும் சரி நானும் சரி போக போறதில்லைன்னு முன்னாடியே சொல்லி வச்சுரலாம்.  நம்ம எவ்வளவு விபரீதமானதெல்லாம் சந்திக்க வேண்டி இருக்கு.

 

மதுரை விமான நிலையத்தில் ஆரவும் கயலும் ஆரத்தழுவி நடந்த நாட்கள் சென்று இப்போது அவனை கண்டு விடக்கூடாது என்று பயந்து போய் உள்ளால் கயல்.

 

காதலித்து கல்யாணம் முடித்து குழந்தை பெற்றவன் மீது எதற்கு இந்த பயம் கயலுக்கு.

 

நிமிடப் பொழுதில் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறி அமர்ந்து கொண்டார்கள் இருவரும்.

 

உணவு உண்டு விட்டு புறப்படலாம் என்று எத்தனை முறை மற்றவர்கள் அனைத்தும் வேண்டாம் என்று இருவரும் மறுத்து அமர்ந்திருந்தார்கள்.

 

பின்னர் பயணிகள் ஏறவும் தங்களின் பணியை சிறப்பாக மேற்கொண்டார்கள்.

 

அதேநேரம் கயலின் கணவன் என்ற பட்டத்தை பெற்றவன் மீட்டிங்கில் பிஸியாக இருந்தான்.

 

இந்த மாதிரி பேபி ப்ராடக்ட்ஸ்ல பி ஹெச் மெயின்டனன்ஸ் பண்ற சோப் கம்பெனியா நம்ம கம்பெனி ஓவரால் ஃபர்ஸ்ட்ல இருக்கு.  இதை விட பெட்டரா இந்த பவுடர்லையும் பி ஹெச் மெயின்ட் டைன்  க்ரீம்னு எல்லாமே பேபிஸ்க்கு அடாப்ட் ஆகுற மாதிரி தயாராகிட்டு இருக்கு.  இது எல்லாம் சென்சிட்டிவான ஸ்கின்க்கும் ஏற்புடையதா அமைக்கப்படுது.  அதைவிட இதால எந்த அலர்ஜியோ ராசிசோ ஏற்பட வாய்ப்பே இல்லை.    இது 100% கிளீனிகளி டெஸ்ட்டேடு.  ரிசர்ச் பண்ணி பி.ஹெச் மெயின்டைன் பண்ணி பவுடர் அண்ட் சோப் ஜெல்ஸ் அண்ட் ஆயின்மென்ட் எல்லாமே ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கோம்.

 

இப்போ இருக்குற எங்களோட பிரான்ச் மூணு இடத்தில ரொம்ப சிறப்பா போயிட்டு இருக்கு.  உங்களோட சப்போர்ட் இருந்தா நெக்ஸ்ட் பிரான்ச் நாங்க ஓமலூர் தாண்டி இருக்க பொம்மிடில  ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கோம்.

 

இப்போ எல்லாம் பேபிஸ் ஓட ஸ்கின் டைப் பொறுத்துதான் சோப் அண்ட் பவுடர் ஆயில்மெண்ட்ஸ் எல்லாமே சேல் ஆகுது. சோ என்னோட கணக்குப்படி பார்த்தா நம்ம போட்டு இருக்க திட்டம் பர்ஃபெக்டா மேட்ச் ஆகும்.  அதே மாதிரி நமக்கு தேவையான விளம்பரத்தை டீவி மூலமாக டெலிகாஸ்ட் பண்ணிக்கலாம். அதுக்கும் மேல வேணும்னா நம்ம யூடியூப், இன்ஸ்டாகிராம் அப்படின்னு நிறைய இன்ப்ளுயன்சர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு தேவையான பணத்தை கொடுத்து செட்டில் பண்ணிட்டா நம்ம சொல்ல வேண்டியத கரெக்ட்டா சொல்லிடுவாங்க.

 

இதுக்கு முன்னாடி நம்ம ப்ராடக்ட் பயன்படுத்தன பேபீஸ் ஒருத்தருக்கு கூட எந்த ஸ்கின் அலர்ஜி, ஒவ்வாமை ஏற்பட்டதா நம்ம ஹிஸ்டரியில இல்லை.

சோ நம்ம அதை விளம்பரப்படுத்துறதுனால நமக்கு நிறைய கஸ்டமர்ஸ் கிடைப்பாங்க.  இது வந்து நம்மளோட முன்னேற்றத்துக்கான அடுத்த அடியா இருக்கும்.  நீங்க எல்லாம்  டிஸ்கஸ் பண்ணிட்டு ஒரு த்ரீ டேஸ்ல முடிவ சொல்லுங்க.  பிகாஸ் டைம் ரொம்ப வேகமா ஓடிட்டு இருக்கு.  எனக்கு நேரம் தாமதிப்பது சுத்தமா பிடிக்காது.

எவ்வளவு மென்மையாக மீட்டிங்கை தொடங்கினானோ அதே போல கரராக முடித்தும் வைத்தான்.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!