61
ஆதவனின் செங்கதிர்கள் பச்சை வண்ண நெற்கதிர் மேனி தழுவி நிலமகள் பாதம் அடைய..
துயில் தேவன் விலகி செல்ல விழிகளை திறந்திருந்தான் உறக்கத்தை விடுத்தவனாய் இன்னுழவன்.
இமை தட்டி விழித்தவன் விழிகளுக்குள் சிக்கினாள் அழகிய மலர் பதுமையாய் அவனின் மணாட்டி.
அவனின் வெற்று மார்பில் பெண்மை களைந்த கோலத்தில், மேனியில் இரவு நடந்த கூடல் யுத்தத்தில் செங்குருதியாய் ஆங்காக்கே சின்னஞ் சிறு விழுபுண் ஏற்றுயிருக்க..
அவன் கையணைப்பில் வாகுவாக கோழி குஞ்சாய் சுருண்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் அவனின் மழை தேவதை.
அதை பார்த்தவனுக்கோ வெட்க புன்னகை உதட்டில் ஒட்டிக் கொள்ள, “இரத்தம் கட்டுற அளவுக்காடா கடிச்சி வைப்ப” என்றவன் மனசாட்சியே அவனைக் காரி உமிழ்ந்தது.
அவள் முகமதே ஆக்கிரமித்து இருந்த கேசக் கால்களை விரல் கொண்டு வருடி செவிமடல் பின் அவன் சேர்க்க…
அதன் வருடலின் கூச்சத்தில் அவளோ தேகம் நெளிந்தாள் உறக்கம் கலையாது அவனின் திடகாத்திரமான மார்பில் சிசுவாய் முகம் சுணங்க.
அவள் பொன்மலர் நெற்றியில் இதழ் பதித்தவன், “ஏஞ்சல்…” என்றான் இதழ் குவித்து அவனின் மூச்சுக் காற்றை அவள் முகமதில் மெலிதாய் தெளித்து.
“ம்ம்… சிணுங்கியவள் உழவா… நான் தூங்கணும். நைட்டு ஃபுல்லா பேசுறேன் பேசுறேன்னு தூங்கவே விடல” என குற்றம் சாடியவள் அவனுக்குள் மேலும் புதைய அவனோ சிரித்தான் குரும்பாய் இரவு முழுதும் அவள் பேசினேன் என்று கூறிய செயலை எண்ணி வெட்கத்தின் பிடியில்.
தன்னோட புதைந்தவளை தட்டிக் கொடுத்து மீண்டும் அயர்ந்த உறக்கத்திற்கு கூட்டிச் சென்றவன் அவளை விட்டு மெல்ல எழுந்தான்.
அவளின் அடி முதல் நுனிவரை போர்த்தி விட்டு அவன் நிமிர அவனின் செயினை ஒத்தை விரல் கொண்டு இழுத்து தன் முகத்தை நெருக்க வைத்திருந்தாள் மேக விருஷ்டி.
விழிகளை மெல்ல திறந்தும் திறக்காத வண்ணம் இருந்தவளோ “எங்க போறீங்க உழவா…” முழுதும் உறக்கம் விடுக்காது.
உடையவள் பிடியில் உடல் வளைத்து நின்றவனோ குருநகையுடன், “ஹேய் ஏஞ்சல் தூங்கலையா நீ…” தலை வருட
“தூக்கம் வருது ஆனா நீங்க எங்க போறீங்க வாங்க…” அவனை தன்னோடு இழுக்க,
“வரேன்… வரேன்… நீ தூங்கு ஏஞ்சல்” என அதரத்தில் அதரம் பதித்து மீண்டும் தட்டிக் கொடுத்து உறங்க வைத்து…
குளியலறை புகுந்தவன் அடுத்து வந்த பத்து நிமிடத்தில் குளித்து தன்னை சுத்தப்படுத்தி வேறு உடையில் வெளியே வர அழைத்தது அவனது அலைபேசி.
அலைபேசியை விழிகள் சுருங்க பார்த்தவனோ அதற்கு உயிர் கொடுத்து காதில் வைத்தான்.
குரலை செரும்ப, “ஹலோ…”
“ஹலோ மாமா…”
“ம்… சொல்லுடா நிவர்த்தனா…”
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனா, சாரி மாமா…”
“ப்ச் அதெல்லாம் இல்லடா. என்ன விஷயம் காலையிலே கூப்பிட்டு இருக்க?”
“அது மாமா நான் இன்னைக்கு இப்ப சென்னை கிளம்புறேன். சொல்லிட்டு போலாம்னு வீட்டுக்கு வந்தேன். நீங்க வீட்ல இல்லைன்னு அப்பத்தான் சொன்னுச்சி. அதான் போன்ல கூப்பிட்டேன்.”
“ஏன் டா காலங்காத்தாலே பயணம்? ஏதும் அவசரமா? என் ஊருனு வீர வசனம் எல்லாம் பேசுன..”
“இல்ல மாமா ஒரு முக்கியமான அப்பாயின்மெண்ட். கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே கேட்ட அப்பாயின்மெண்ட்.
நான் கொஞ்சம் இம்போர்ட்டண்ட் சர்ஜரி அண்ட் அவுட் ஆஃப் கன்ட்ரில இருந்ததால அத என்னால ஃபாலோ பண்ண முடியல.
போன வாரமே அப்பொய்ன்மெண்ட் கொடுத்துட்டேன் இன்னைக்கு பார்த்துறலாம்னு.
சோ பேஷன்ட ரொம்ப நாள் காத்து வச்சிருக்க முடியாதுல்ல இன்னைக்கு கண்டிப்பா போயே ஆகணும்.
அவங்க ஆப்டர்நூன் மேல வரேன்னு சொல்லி இருக்காங்க. இப்போ நான் கிளம்புனா சரியா இருக்கும் மாமா.”
“ஓகே டா எப்படி போற கார்ல தானே. அவ்ளோ தூரம் கார்ல போய்டுவியாடா.. நான் டிரைவர் ஏதும் அரேஞ்ச் பண்ணட்டுமா?”
“இல்ல மாமா பைவ் ஹவர்ஸ் தான ஐ வில் மேனேஜ் நான் போயிருவேன். அப்புறம் சிசி கிட்டையும் சொல்லிருங்க மாமா”
“அவ தூங்குறா… எழுப்பட்டுமாடா…”
“இல்ல பரவால்ல அக்கா தூங்கட்டும். ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் அப்புறமா அக்காகிட்ட பேசிக்கிறேன். நீங்க இன்பார்ம் மட்டும் பண்ணிருங்க”
“சரி பார்த்து போ போ… ரீச் ஆனதும் எனக்கு கூப்பிடு டா”
“சரி மாமா…” என நிவர்த்தனன் அழைப்பை துண்டித்தவன் பாதம் தழுவிய வேஷ்டியை மடித்து கட்டியபடி காலை நேர வேலைக்காக வயலில் இறங்கிக் கொண்டிருந்தவர்களை கண்காணிக்க சென்றான் இன்னுழவன்.
“என்னடா டாக்டரு கிளம்பிட்டியா…?” வந்தார் அம்பிகாமா.
“இந்தாப்பா காபி எடுத்துக்கோ” என கோதாவரியும் வர…
“தேங்க்ஸ் அத்தை” என இன்முகத்துடன் தேநீரை பெற்றுக் கொண்டவன் ஒரு மிடறு விழுங்கியவனாய் “ஆமா அப்பத்தா கிளம்பிட்டேன்” என்றவன்,
“அப்படியே நீயும் என் கூட வர்றது. எந்த நாள் தான் இந்த வாய்க்கா, வரப்பு,தோட்டம்,துறவுன்னு பார்த்துகிட்டே இருப்ப. அப்பிடியே அங்க வந்து இந்த பீச்ச மால்ன்னு பாத்துட்டு வரலாம் இல்ல” நிவர்த்தனன் வினவ.
“ஆமா டா பேராண்டி நானும் உன் கூட அடுத்த டைமு வாரேன். இந்த ஊரு ரொம்ப போர் அடிக்குது.
அங்க வந்தாவாது என் வயசுக்கும் அழகுக்கும் ஏத்தப்புல நாலு எங்கு ஸ்டர பார்த்து சைட்டு அடிச்சிகிட்டு..
அந்த முட்டு அளவு குட்ட பாவாடைய போட்டு நடந்தா குளுகுளுன்னு இருக்கும். இந்த 16 மூல சீலைய சுத்திக்கிட்டு அப்பப்ப என்ன பாடு” என சலித்துக் கொண்டார் அம்பிகாமா.
அதில் சத்தமாக சிரித்தவனோ, “அப்புறம் சென்னை என்ன அப்பத்தா ஆஸ்திரேலியா போகும்போதே உன்ன கையோட கூட்டிட்டு போறேன்.
அங்க இன்னும் வசதியா ஜாலியா இருக்கும் உனக்கு. அங்க போய் நீ பண்ற அலம்பெல்ல மேல போன தாத்தாவே கீழ வந்துருவாரு உன்ன சைட் அடிக்க…” என்றான் நிவர்த்தனன் வாயெல்லாம் பல்லாக அம்பிகாமா தோள் பற்றி.
“ம்க்கும்… ஆமா ஆமா அந்த மனுஷன் வந்துட்டாளும். சரி… சரி… நீ காலாகாலத்துல நல்லபடியா போயிட்டு ரீச்சப்பு(ரீச்) ஆனதும் என்னோட வாட்டு சப்பு (வாட்ஸாப்) பண்ணு ஓகேய்”
என்றவர் அவன் தோள் தட்ட… “ஓகே அப்பத்தா…” என்றவன் கண்கள் துலாவியது அவனவளை வீட்டை சுற்றிலும்.
“தோட்டத்துல காத்து கொஞ்சம் பலமா அடிக்குது. அந்த பக்கமா போகும் போது பார்த்து பார்த்துட்டு போ பேராண்டி” என்றார் பேரனின் விழி தேடும் புரிதலை புரிந்து அம்பிகாமா.
நிவர்த்தனனும் அவரின் பொடி வைத்த சூச்சமாக பேச்சில் தன் பார்வைக்கு கேட்காது பதில் அளித்தத்தை அறிந்து கொண்டவன் இதழ் விரியா புன்னகையுடன்..
“தேங்க்ஸ் அப்பத்தா, காத்து ஓவரா இருந்தாலும்” அப்போது சக்திவேல் அவர்களை கடந்து செல்ல…
அவரின் மீதும் ஒற்றை பார்வையை அழுத்த பதித்து மீட்டவன், “ஏன் சூறாவளியே வந்தாலும் அதெல்லாம் தாண்டி வருவேன்” என்றான்.
“டேய் பேராண்டி தாண்டிலாம் வர வேண்டாம். அப்போ கையில சிக்கிர உனக்கானத தூக்கிட்டு வாடா போதும்” என்றார் அவனுக்கு ஈடாக அப்பத்தா.
“அது என்ன இங்கே இல்லாத காத்து தோட்டத்துல மட்டும் அடிக்குது. அவன் தாண்டி வர்றேங்க.. நீங்க தூக்கிட்டு வான்னு சொல்றிங்க.. என்னத்த பேசுறீங்க எனக்கு ஒன்னுமே புரியல” என்றார் கன்னத்தில் கை வைத்து கோதாவரி புரியாத பார்வையில் இருவரையும்.
“டேய் குறுக்க உன் மாமியார மறந்துட்டோமே டா…” என முணுமுணுத்து இப்பொழுது அவர் புறம் திரும்பிய அம்பிகாமாவோ,
“அடியே இவளே… நாங்க எங்கு ஸ்டர்ஸு டி. எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ ஓல்ட் லேடி உனக்கு ஒன்னும் புரியாது. உனக்கு விம்மு போட்டு விலக்க என்கிட்ட சீவன் இல்ல.
போய் வழக்கமா உன் புருசனுக்கு கிண்டி வைப்பியே கலி, அத கிண்டு போ…” என்றார் அவரை அங்கிருந்து தூரத்தாத குறையாய்.
“ஆனா வரவர உங்க ரவுசு தாங்கல அத்த…” என அங்கலாயிப்புடன் உள்ளே சென்றார் கோதாவரி.
“சரி அப்பத்தா அப்படியே நான் தோட்டத்துல காத்து வாங்கிட்டு ஊருக்கு கிளம்புகிறேன்” என அம்பிகாமாவை கட்டி அணைத்து தோட்டத்தை நோக்கி நகர்ந்தான் நிவர்த்தனன்.
இங்க தோட்டத்தில் குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தாள் இனிதுழனி.
“என் சக்கர கட்டி இங்க இருக்கியா…” என நிலத்தைப் பார்த்து நடந்து கொண்டிருந்தவளின் முன் சென்று நின்றான் நிவர்த்தனன்.
மிக நெருக்கமாக இருவர் மேனியும் உரசி கொள்ளும் அளவிற்கு.
அதில் சட்டென்று அதிர்ந்தவளின் வேகம் மூச்சுகள் அவனின் மார்பை துளைக்க, நிமிர்ந்து பார்த்தவளின் செவ்விதழ்களை அடுத்த கணம் கவ்வி இருந்தான் நிவர்த்தனன் வன்மையாக.
அதில் மேலும் அதிர்ந்தவள் சுற்றி இருக்கும் நிலைக்கண்டு அவன் மார்பில் அழுத்த கரம் பற்றி திமிறினாள்.
அவனோ விடாப்பிடியாக தனக்குள் அடக்கிப் பிடித்தவன் மேலும் ஆழமாக ஊடுருவ ஆரம்பிதான் அவளின் இதழ் வழியாக தன் இதழ் கொண்டு.
ஒரு நிமிடம் அதிர்த்தலும் திமிறுதலுமாக இருந்தவள் அடுத்த கணம் கண்ணாளன் கொடுக்கும் ஆழ்ந்த இதழ் தீண்டலை தனக்குள் உள்வாங்க ஆரம்பித்தாள் அவனில் உருகி அவனிடன் இயைந்து.
அதை அவதானித்தவனுக்கு உள்ளுக்குள் கர்வமான நிறைவு புன்னகை.
காதலி ஒத்துழைப்பில் ஒரு கை இடை அழுத்தி பிடிக்க, மறுக்கை அவள் பிடரி பிடித்து தன்னோடு இணைத்திருக்க மேலும் ஆழமாக அவள் இதழுக்குள் அவன் இதழை மூழ்கடிக்க.. அவளின் கரத்தாள் அவனின் சட்டை கசங்கியது நேர்த்தியாய்.
சிறிது நேரம் இதழ் திண்டலுக்கு பின் விடுவிக்க மனமில்லாதவன் விடுவிக்க, கன்னங்கள் செந்நிறம் ஏற அப்பொழுதும் இதழ் தீண்டலில் விக்கித்து விழிகள் மூடி நின்றாள் இனிதுழனி காதலன் அணைப்பில்.
அதை கொடுப்புக்குள் நகைத்து இரசித்தவன், “கண்ண திறந்து பாரு டி…” என்றவனின் காந்த குரலில் தெளிந்தாள்.
தெளிந்தவளுக்கோ விழிகள் இரண்டிலும் மோகம் விலக கவலை ஆக்ரமிக்க விழி நீர் கோலம்.
பெருமூச்சுடன் அவளின் கன்னங்களை பற்றி நீர் திரண்டு நின்ற விழிகளில் மென் முத்தமிட்டவன், “எதுக்கு டி இப்பிடி இருக்க. இந்த குட்டி மூளைக்குள்ள அப்பிடி என்னத்த போட்டு யோசிச்சு உன்ன நீயே கஷ்ட படுத்திகிட்டு இருக்க இனிதுமா.
எதுவா இருந்தாலும் நான் இருக்கேன் இனிதுமா… பத்திரமா இரு, உன்கிட்ட நான் பேச வேண்டியது நிறைய இருக்கு” என்றவன் பார்வை அவள் கழுத்தின் வரி தழும்பினை ஆராயாமல் இல்லை.
“ஆனா நீ பேசவே மாட்டேங்குற. என் பழைய இனிது இது இல்ல. அவள பார்க்கணும் எனக்கு ஆசையா இருக்கு டி…” என்றவன் ஏக்கம் அவள் உயிர் கூட்டை உடைத்தது உமையாய்.
என்னால் உன் ஏக்கம் தீர்த்து மீண்டும் பழையது போல் பேச முடியாது மன்னவனே என்றவள் உள்மன உளைச்சலின் இயலாமையில் எச்சில் வற்ற நாவு வறண்டு தொண்டை குழி அடைத்தது விழி நீர் கோர்க்க.
மேலும் அவனோ “இப்ப நான் அவசரமா போகணும். போயிட்டு கண்டிப்பா திரும்ப வரும் போது கண்டிப்பா வீட்ல நம்ம கல்யாணத்தப் பற்றி நான் பேசுவேன்” என்றவன் கூறும்பொழுதே அவளின் விழி நீரோ இமை கடந்து கன்னத்தை தாண்டி கழுத்திறங்க…
தலையை தானாக ஆட்டினாள் வேண்டாம் என்ற பாணியில் அவசரமாக இனிதுழனி.
அதனை புருவம் வளைய பார்த்தவன், “வேண்டாம்னா…! கல்யாணம் வேண்டாமா…? இல்ல நானே வேண்டாமா டி…?” என்றவன் குரலில் ஏகத்துக்கு கடுமை விரவியிருந்தது.
அத்தியாயம் 27
நிவர்த்தனன் கேள்விகளுக்கு இனிதுழனியின் பதிலோ தலை குனிந்த மௌனம் தான்.
அவனுக்கும் அவளிடம் பேச வேண்டிய நிறைய இருந்தும் அவள் ஏதோ ஒன்றை நினைத்து தன்னிடம் மறைத்து ரணத்தில் வாடுகிறாள் என்பதை அவதானித்தவனுக்கு கோவமது எழுந்தாலும் அதனை புறம் தள்ளி பொறுமையை கடைபிடித்தான் இழுத்து பிடித்து.
அதற்கு முதலில் முதல் போல் அவளை தன்னிடம் பேச வைக்க வேண்டும் என எண்ணினான்.
எனினும் தன் அருகாமையிலும் தன் தொடுகையிலும் மனமுவர்ந்து உருகி கரைப்பவள், தனக்கு ஏதும் நேர்ந்தால் வருந்துப்பவள் எதற்காக பேசாது மௌனம் சாதிக்கிறாள் என்ற கேள்வி நொடிக்கொரு முறை சிந்தையில் அவனில் எழும்பாதும் இல்லை.
அவளின் நாடி பிடித்து உயர்த்தி விழிகளோடு விழிகளை கலக்க விட்டவன், “இங்க பாரு இனிது உனக்கு நான் வேண்டாம். ஆனா, எனக்கு நீ மட்டும் தான் வேணும் டி. அவ்ளோ சீக்கிரம் எல்லாம் உன்ன விட மாட்டேன் டி…” என அவள் உச்சந்தலையில் அவனின் உறுதி அச்சாரத்தை இதழ் கொண்டு பதித்தான்.
அவளும் விழிகளை மூடி அதை தனக்கு ஸ்ரீகரித்து கொள்ள, “போய்ட்டு வரேன். கண்டிப்பா வருவேன்” அவள் விழி பார்த்து அழுத்தக் கூறி இறுக்க அணைத்து விடுவித்து சென்றான் நிவர்த்தனன்.
செல்லுமவன் முதுகை வெறிக்க பார்த்து நின்றாள் இனிதுழனி தன்னிலையை கூற முடியாது உள்ளம் வெறுமையாய்.
இதயம் முழுவதும் மனதை கவர்ந்த நிவர்த்தனன் மையலிட்டு இருந்தாலும், அதற்கு மறுப்பு என்ற முள் வேலி இட்டாள் தன்னையே நிந்தித்து.
இங்க காலை நேர வயலில் வேலை ஆட்களுக்கு வேலைகளை பிரித்து கொடுத்து விட்டு மீண்டும் பண்ணை வீட்டிற்கு வந்தான் இன்னுழவன்.
அறை கதவை திறந்து உள்ளே வந்தவனுக்கு வெறும் அறையே காட்சியளித்தது.
“ஏஞ்சல்…”
“ஹான்… இங்க இருக்கேன் உழவா…” என குளியலறையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டியிருந்தாள் மேக விருஷ்டி குளித்து முடித்து ஈரம் தோய்ந்த வதனதுடன்.
“குளிக்கிறியா ஏஞ்சல்…”
“குளிச்சி முடிச்சிட்டேன் உழவா”
“அப்புறம் அங்க என்ன பண்ற ஏஞ்சல் வெளியில வா…” அவன் அழைக்க,
“ஹீம்… ஹிம்…” என தலையசைத்தாள் வெளியே வர மாட்டேன் என்று குழந்தை முக பாவனையில்.
இதழ் கடித்து சிரித்தவன் “அப்ப நான் வரவா… ” அடிமேல் அடி வைத்தவன் நெருங்க,
“ப்ச்… உழவா… வேண்டாம். வாராதீங்க”
“அப்போ நீ வா ஏஞ்சல்” என்றவனின் அவளை நோக்கிய நடை நிற்கவில்லை.
“உழவா நீங்க வந்தா நான் உள்ள போயிருவேன். உங்களால தான் நான் இப்பிடி நிக்கிறேன் போங்க”
“ரெண்டு பேரும் சேர்ந்து உள்ள போலாம் ஏஞ்சல்”
“நோ…” அவள் கதவை அடைக்க போக உள்ளே நுழைந்திருந்தான் அவன்.
உள்ளே சென்றவன் விழிகள் மின்னியது, அப்பொழுதே குளித்து முடித்த நீர் துளிகள் அவள் அங்கம் நிறைத்து இருக்க மருந்துக்கும் ஆடை இல்லாது உடையவள் நிற்கும் பாவனைக் கண்டு.
“ரெயினி… ஏஞ்சல்…” என்றவன் காந்த பார்வை அவளை அடி வரை துளைக்க, அவளுக்கோ அடி வயிற்றில் மின்னல் வெட்ட நிலத்தில் புதைந்து கொள்ளும் நிலை தான் நாணத்தில்.
“ப்ளீஸ் உழவா அப்பிடி பாகாத்திங்க” என்றவள் அவன் பாதத்தில் ஏறி ஏம்பி அவன் கண்ணை மறக்க முயல, அவள் முயற்சியோ தோல்வியே தழுவியது.
சத்தமாக சிரித்து அவள் கைகளுக்கு அடை போட்டு தன்னோடு மேலும் அணைத்து பிடித்தவன் “அள்ளுது ஏஞ்சல்… காலைல இப்பிடி ஒரு தரிசனம் தினமும் கிடைக்குமா!” என்றவன் வசீகர பார்வை அவளை செஞ்சாந்தாய் சிவந்து சில்லிட வைத்தது முதுகு தண்டை.
“ஹ்ம்… க்கும்… உழவா… அப்பிடி பார்க்காதீங்க. எனக்கு வெக்கமா இருக்கு” சிணுங்கியவள் அவனையே ஆடையாக மாற்றினாள் மார்புக்குள் புதைந்து.
“ஹேய் ஏஞ்சல் உன் வெக்கம் என்ன பித்து பிடிக்க வைக்கிதே டி…” என்றவன் அவளை அப்படியே நகர்த்தி இருந்தான் மீண்டும் ஒரு கூடல் கலந்த குளியலுக்கு அடித்தளமிட்டு.
ஆடவனின் ஆட்கொள்கையில் அவனோடு ஒன்றிய செந்தூரமாய் சிவந்த பெண்ணவளின் முனங்கல் சத்தம் நிலம் தொட்ட நீர் துளியின் சத்தத்தை மிஞ்சியது.
அவனோ அவளிடம் மிஞ்ச… அவள் அவனிடம் கெஞ்ச… மேனிகள் இரண்டு பசையாய் ஒட்ட… விழிகள் நான்கும் சொக்க… இடையில் இருவர் இடையும் அதிர… என இரண்டற இன்பமாய் கலந்தனர்.
தன்னில் கலந்து களைத்தவளை கைகளில் அள்ளி குளியலறையிருந்து வெளியே வந்திருந்தான் இன்னுழவன்.
கீழே இறக்கியவள் அப்பொழுது அவனை விட்டு நகராது நெருங்கி நிற்க, “ஹேய் ஏஞ்சல் என்ன இங்கயே இருக்கணுமா உனக்கு” என்றவன் இதழ் அச்சாரம் ஓயிந்த பாடில்லை அவள் வெண்மதி முகமதில்.
அவன் மார்பின் மயிர் கால்களை சுருட்டி வருடியவள், “ஹிம்… இப்பிடியே… இங்கேயே… இப்பிடி மூச்சுக்கும் இடம் இல்லாம… நெருக்கமா… இருப்போமா உழவா… எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சி இருக்கு. வீடு வேணாம்” என்றாள் குரல் தழைய.
“எனக்கும் ஆசை தாண்டி உன்கூட இங்கயே இருக்க. ஆனா ஓரு முக்கியமான வேலை இருக்குடி இன்னைக்கு எனக்கு” என்றான் இன்னுழவன் தீவிரமாக.
“அப்பிடி என்ன முக்கியமான வேலை உழவா…”
“ஹிம்… இனிதுழனிய இன்னைக்கு சென்னை கூட்டிட்டு போகணும் ஏஞ்சல் ஹாஸ்பிடலுக்கு. போயிட்டு வந்து நம்ம திரும்ப இங்க வரலாம்” என்றவன் கரம் பூத்துவாலை கொண்டு அவள் ஈரத்தலையை துவட்டியது.
அப்பொழுதே மேக விருஷ்டி பற்றிய எண்ணம் வர உடன் தன் தமையனின் காதல் விவகாரமும் மனதில் நினைவு கூர்ந்தது.
சிலையென மேக விருஷ்டி நிற்க, “என்ன ஏஞ்சல்” அவளை அவன் உலுக்க,
“இனிக்கும் எப்பிடி இப்பிடி ஆட்சி உழவா?” என்றவள் கேள்விக்கு அவனிடம் ஒரு பெரும் மூச்சு.
“அத அப்புறமா நான் சொல்றேன் ஏஞ்சல். இப்ப கிளம்பலாம் நேரம் ஆகுது. நீயும் எங்க கூட வேணா வாயேன் ” என்றவன் அவளுக்கு அவன் சட்டையையும் ட்ராக் பேண்டையும் அணிவிக்க…
அதற்கு இயைந்து அவன் தோள் பிடித்து நின்று தன் உடலை வாகுவாக கொடுத்தாள் சிந்தனையோடே மேக விருஷ்டி.
உடையவளுக்கு உடையணிந்து தானும் உடையணிந்து கொண்டவன் கொண்டு வந்த இளநீரை வெட்டி கொடுத்தான் மேக விருஷ்டியிடம்.
அமைதியாக நிவர்த்தனன், இனிதுழனி பற்றி யோசித்து இருந்தவள் இது எதுக்கு என்னும் விதமாய் பார்க்க, “குடி ஏஞ்சல் சூட்ட தனிக்கும்” என அவனே ஊட்டி விட்டான்.
“என்ன யோசிக்கிற ஏஞ்சல்?”
“இல்ல நிவர்த்தனன், இனி காதல பற்றி தான்” என்றவள் உளறினாள்.
“என்னது நிவர்த்தனன் இனிய லவ் பண்றானா…!” கேட்டான் கூர் விழிகளுடன் இன்னுழவன் அழுத்தமாக.
அப்பொழுதே தான் கூறியது நினைவு வர.. குடித்த இளநீர் கொப்பளிக்க புரை ஏறியதவளுக்கு.
“ஹேய் ஏஞ்சல் பாத்து குடிப்பா” என தலையை தட்டி விட்டவன், “என்ன சொன்ன ஏஞ்சல் இப்போ நீ” என்றான் மீண்டும் அதே பிடியில்.
” நான் என்ன சொன்னேன் ஒன்னும் சொல்லலையே… ” அவள் மழுப்ப…
“நிவர்த்தனன் இனி லவ்ன்னு ஏதோ சொன்னியே ஏஞ்சல் என்கிட்ட இருந்து ஏதும் மறைக்கிறியா…?”
இதழ் பிரியா புன்னகையுடன், “மறைக்கிறேனா…! உங்ககிட்ட நான் என்னத்த மறைக்க போறேன். இனி பற்றியும் நிவர்த்தனன் பற்றியும் யோசிச்சிட்டு இருந்தேன்.” இன்னுழவன் பார்வை வலு பெற…
அழுத்த விழிகளுடன், “தனித்தனியா தான் யோசிச்சிட்டு இருந்தேன். அப்பதான் ஏதோ யோசனையில உளறிட்டேன் மத்தபடி எதுவும் இல்ல.” என அப்போது நிலைமையை சமாளித்து விட்டாள்.
உண்மையை கூறிவிடலாம் தான். எனினும் தமயனின் காதல் நிலையின் ஆழம் பற்றி முழுதும் தெரியாது இப்போது கூறுவது சரியல்ல என நினைத்துக் கொண்டவள், முதலில் நிவர்த்தனனிடம் இனிதுழனி பற்றியும் அவர்கள் கொண்ட காதலை பற்றியும் பேச வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள் உள்ளுக்குள்.
இப்பொழுதே கூறியிருந்தால் பின்னால் இதனால் தங்களுக்குள் வர போகும் பிரிவையும் தடுத்திருக்கலாமோ என்னவோ!
உடையவள் லாபகமாக அதை சமாளித்தாலும் அதை மனதினுள் குறித்து வைத்துக் கொண்டான் இன்னுழவன் வெளியில் காட்டிக்காது.
அவனுக்கும் மனதில் இனிதுழனி, நிவர்த்தனன் பற்றி பிசுரு தட்டாது இல்லை.
நிவர்த்தனன் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றானே தங்கையின் நடவடிக்கைகளை.
“சரி போலாமா ஏஞ்சல்” இன்னுழவன் வினவ…
“போலாம் ஆனா இப்படியேவா நான் வர்றது” என அவன் உடுத்தி விட்ட ஆடையை காண்பித்தாள் சங்கடமாய்.
“ஹிம்… உனக்கு எது கம்ஃபர்ட்டபிளா இருந்தா இதுலையே வா. இல்லனா நேத்து கட்டிட்டு வந்த சாரிய கட்டிக்கோ. இங்க சாரி எதுவும் இருக்காது நம்ம அப்புறமா இங்க கொஞ்சம் சாரி கொண்டு வந்து வச்சுக்கலாம்” என்க,
“ஏது அந்த சாரிய வா…!” என்றவள் இடுப்பில் கைவைத்து முறைத்தாள் அவனை நுனி மூக்கு சிவக்க.
அதை இரசித்தவன் “ஹிம் அதுக்கு என்ன குறைச்சல் ஏஞ்சல்” என்றவன் நகைக்க,
“குறைச்சல் இல்ல மிஸ்டர் இன்னுழவன். நேத்து உங்க கை வண்ணத்துல ஒரே கிளிஞ்சல்.” என்றாள் முகத்தை சுழித்து.
அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன், “நானா கிழிச்சேன்” என்றான் பிடரி வருடி.
“பின்ன நானா…!”
அவள் இடை பிடித்து தன்னோடு நிறுத்தியவன் பார்வையில் வசிகரம் தொத்திக் கொள்ள, “உன்ன யாருடி அத்தனை பின் போட்டு கட்ட சொன்னா” குற்ற பத்திரிக்கை வாசித்தான் அவள் கழுத்து வருடி.
“ஹலோ நான் மொத்தமே மூணு பின் தான் யூஸ் பண்ணிருந்தேன். அத எடுக்க கூட உங்களுக்கு பொறுமை இல்லை” என்றவள் கோவ மூச்சி அவன் வெற்று மார்பு துளைத்து.
“மூணு பின்னே அதிகம் டி… அதுமட்டும் இல்லாம உன்ன யாருடி அங்க பின் குத்த சொன்னா மனுசனோட அவசரம் புரியாம…” என்றவன் கை அவள் இடையை சுட்டிக்காட்டி ஓவியம் வரைந்தது அங்கு உள்ள கோலி குழியில்.
அதில் மீண்டும் வெட்கத்தின் பிடியில் சிக்கியவள் “ஹான் அத்தமா தான் கால் தடுக்கும் அங்க பின் குத்துனா கொசுவ சேலை கீழ வராது கால் வாராதுன்னு சொன்னாங்க” என்றாள் வார்த்தைகள் தந்தியடிக்க அவன் வருடலின் கூச்சத்தில் வில்லாய் உடல் நெளிந்து.
தந்தியடித்த அவ்விதழை மென்மையாய் கவ்வி விடுவித்தவன், “அப்போ என் ஏஞ்சலுக்கு சாரி கட்ட தெரியாதா…?” அவன் விழிகளில் ஆர்வம்.
அவன் மார்பில் நாடி குற்றி நிமிர்ந்து பார்த்து தெரியாது என்றவள் உதடு பிதுக்க…
பிதுங்கி நின்ற அவள் இதழில் மேலும் ஒரு இதழ் அச்சாரத்தை அழுத்த பதித்தவன், “இனி நானே கட்டி விடுறேன் என் ஏஞ்சலுக்கு. உங்க அத்தமா வேணாம்” என்றான் ஏகாந்த மன்மதனாய் கொடுப்புக்குள் நகைத்து.
“போங்க உழவா என்ன பிளஷ் பண்ணிகிட்டே இருக்கீங்க… நீங்க எப்பிடி கட்டி விடுறிங்கன்னு நானும் பார்க்குறேன்” என்றவளுக்கு அதனை நினைக்கையிலேயே அடிவயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க, கன்னம் குங்குமமாய் சிவக்க அவன் மார்புக்குள் புதைந்தாள்.
அவனோ சத்தமாக சிரித்தவன் தனக்குள் புதைத்தவளுக்குள் மீண்டும் தன்னை புதைத்து மஞ்சத்தில் சரித்து மீண்டும் களைத்தவளை மீட்டு அழைத்து கொண்டு புறப்பட்டான் வீட்டை நோக்கி இன்னுழவன்.
செங்கோதை மணம் வீசும்…