Home Novelsசெந்தனலாய் பொழிந்த பனிமழை

செந்தனலாய் பொழிந்த பனிமழை

2) செந்தனலாய் பொழிந்த பனிமழை

by Kowsalya Velmurugan
5
(1)

“குடும்ப உணவக ரெஷார்ட்டின் பணியாளர்கள் அனைவரும் அன்பரசியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.  அன்பரசி மற்றும் இன்பரசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மூன்று வாரம் கடந்துவிட்டது.

 

தன்னுடைய இளம்பிஞ்சு கையை சற்று முன்பும் பின்புமாக அசைத்து கொண்டிருந்தான்‌ ஆண்பிஞ்சு.

 

பாருங்களே…இன்பா ஐயா மாதிரி எப்படி துடுக்கா கைகால அசச்சிட்டு இருக்கான்…

 

ரெஷார்ட்டின் பணியாளர்கள் ஒருவர் கூறி அந்த பிஞ்சிற்கு முத்தம் இட்டார்.

 

ஹான் அப்படிதான் போல…என்று இன்பரசரும் நெகிழ்ந்தார்.

 

குழந்தை தொட்டிலில் அவனை ஆட்டிவிட்ட படி நைட்டியோடு படுத்திருந்தவளை காண வந்தாள் ஶ்ரீஜா.

 

நாளை கொலு வைத்து பூஜை செய்வதால் அன்பரசியின் அன்பு கட்டளையால் வந்திருந்தாள் அவள்.  இந்த மூன்று வார்த்தில் ஶ்ரீஜாவும் சங்கீதா மற்றும் அன்பரசியோடு இணைந்து கொண்டாள்.

 

தகுந்த நேரத்தில் உதவி கரம் கொடுத்தவளை மறவாமல் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும் வரை கூடவே இருந்தாள்.  சங்கீதாவுக்கும் அவளோடு பழகுவது இலகுவாகி விட்டது.

 

வாங்க ஶ்ரீமா….

 

வந்துட்டங்க்கா என்றதோடு சிலைகளை அடுக்கி வைத்துவிட சென்றாள்.  அத்தோடு கொலு விழா முடியும் வரை கூடவே இருந்து தெரியாதவற்றையும் கற்று கொண்டாள்.

 

இதற்கிடையில் நாளும் வேலை தேடி அலைந்து ஓய்வின்றி தொய்வு அடைந்திருந்தான் பாஸ்கர்.

 

ச்சை… எங்க போனாலும் இப்ப வேக்கன்ட் இல்ல… அப்புறமா வாங்கப்பான்னு சொல்லுறாங்க ஶ்ரீ.  அதுவும் ஒரு கடையில நல்லா வேலை செய்யுறையானு சாம்பிள் காட்டுன்னு காலைல இருந்து இப்ப வரை வேலை வாங்கிட்டு நீ ஒழுங்காவே கஸ்டமர் கிட்ட வியாபாரம் செய்ய மாட்றன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.  மனசே கஷ்டமா போச்சு.  வேலையும் இல்லாமல் உன்னையும் நம்ம குழந்தையையும் எப்படி நான் காப்பாத்த போறனு தெரியலையே ஶ்ரீ.

 

ஒரு கணவராகவும் ஒரு குழந்தையின் தகப்பனாகவும் சற்று மனமுடைந்து தான் போனார்.

 

இப்பயும் கூட இப்படி பட்ட மனுசங்க இருக்காங்களா… வியப்பாக கேட்ட மனைவியிடம் ஆமென்று சொல்லி அடைக்களம் ஆனான்.

 

என்னங்க இப்படிலாம் பேசுறிங்க.  அப்படிலாம் பேசாதிங்‌க.  நாளைக்கு உங்களுக்கு கண்டிப்பா வேலை கிடைச்சிடும் பாருங்க என்று தலையை வருடிக் கொடுத்தாள்.

 

மறுநாளின் விடியல்பொழுது பறபறப்போடு துவங்கியது அன்பரசிக்கு.  அவர்கள் குடும்ப உணவக ரெஷார்ட்டிற்கு இன்று முன்னால் எம்.எல்.ஏ வரப்போகிறாராம் குடும்பத்தோடு.

 

வால்பாரியின் அடிவாரத்தில் தான் இன்பரசன் மற்றும் அன்பரசியின் ரெஷார்ட்டும் உள்ளது.  அங்கே மூன்று நாள் பேக்கேஜாக அவர்கள் போட்டிருந்தவை முன்னால் எம்.எல்.ஏவிற்கு பிடித்து போய்விட ஒரு பொழுதுபோக்கிற்காக புக்கிங் செய்தவரின் பேக்கேஜ் இன்று.

 

இன்பரசனின் பதட்ட முகம் அன்பரசியையும் ஒட்டிக்கொள்ள இப்ப என்னங்க பண்றது…நான் வேணா ஆள் ரெடி பண்ணிப் பாக்குறேன் என்று சொல்லி அலைப் பாய்ந்தாள் மொபைலோடு.

 

ரெஷார்ட்டிற்கு புக் செய்த எம்.எல்.ஏவின் முக்கிய அறிவிப்பு டிரிப் சுற்றி பார்ப்பதற்கு துணையாளாக ஆண்தான் வர வேண்டும் என்று.  ஆனால் அந்த பணியில் ஒரு பெண்ணை தான் இன்பரசரும் அன்பரசியும் அமர்த்தி இருந்தனர்.

 

அவரது கட்டாய வேண்டுகோளுக்கு இணங்கி போவதாக ஒப்புக்கொண்ட இன்பரசருக்கு இப்போது என்ன செய்வது ஏது செய்வது என்று புரியவில்லை.

 

நல்ல வேலையாக சங்கீதா வந்ததும் அம்மா ஶ்ரீம்மாவோட வீட்டுகாரர் வேலை தேடிட்டு இருக்குறதா சொன்னாங்களே.  அவங்கள எதுக்கும் கேட்டு பார்க்கலாமா?..என்று யோசனையும் கொடுத்தாள்.

 

நல்ல யோசனை கீதா.  போய் உடனே ஶ்ரீய கூப்பிட்டு வா என்று அனுப்பி வைத்த ஐந்தே நிமிடத்தில் ஆஜரானார்கள் மூவரும்.

 

அன்பரசியும் பக்குவமாக விளக்கினாள்.

 

நாங்க போட்டு இருந்த மூணு நாள் பேக்கேஜ் எக்ஸ் எம்.எல்.ஏ சார்க்கு ரொம்ப புடிச்சிருக்காம்.  பட் அதுக்கு டிரிப் ஆர்கனைஸ் பண்றவங்க ஆணா இருக்கனும்னு சொல்லிட்டாரு ஶ்ரீ.

 

நீ தப்பா நினைச்சிக்கலனா உங்க வீட்டுக்கார இந்த மூணு நாள் மட்டும் இந்த வேலையை செய்ய சொல்றையா?..

 

உரிமையோடு ஆரம்பித்து சங்கோஜமாக முடித்தவரின் கையை ஆறுதலாக பற்றிய ஶ்ரீஜாவும் அவரு கண்டிப்பா செய்வாங்க. நீங்க ஏன் எங்ககிட்ட கேட்க இவ்வளவு தயக்கம் என்று முறைபட்டு கொண்டாள்.

 

அதன் பின் தான் இருவரும் சீர்மையாக மூச்சு இழுத்து விட்டார்கள்.

 

இந்த மூன்று நாட்களில் பாஸ்கரின் பணி தூய்மையாகவும் எண்ணற்ற இடங்களை சுற்றி காட்டியதாலும் எக்ஸ் எம்எல்ஏ விற்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

 

இன்பசரிடமும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள தவறவில்லை.  கண்டிப்பா என்னோட பிரெண்ட்ஸ் அண்ட் கொலிக்ஸ் எல்லாத்தையுமே நான் இங்க வந்து சுத்தி பாத்துட்டு போக சொல்லுவேன் பிகாஸ் பாஸ்கர் இஸ் த மாஸ்டர் ஆஃப் டிரிப்பர் ட்ரைனர் என்று சொல்லி அவரை பாராட்டினார்.

 

பின்னர் அந்த ரிசார்டின் ஆண் டிரிப் ஆர்கனைசராக நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டார் மிஸ்டர் பாஸ்கர்.

 

ஸ்வீட் எடு கொண்டாடு என்ற விதமாக ஶ்ரீயிடமும் பகிர்ந்தவன் அன்பரசிக்கும் தயங்காமல் நன்றியை‌ தெரிவித்து கொண்டார்.

 

நாட்களும் அதன் வேகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நகர்ந்து குட்டி தம்பியின் பெயர் சூட்டு விழாவில் ஜொலிக்க தொடங்கியது.

 

இன்பரசன் மற்றும் அன்பரசியின் வீட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் ஒரு நாள் டிரிப் பயண சீட்டோடு விழாவை தொடங்கினார்கள் .

 

குழந்தையை தொட்டிலில் வைத்திருந்த அன்பரசி தனது கையில் வைத்து தங்களின் விருப்பமான மற்றும் ஐவரின் கூட்டு‌ யோசனையின் பெயரில் “ஆதிரன்” என்று பெயர் சூட்டி விழாவின் சிறப்பாக இந்த பேக்கேஜையும் அனைவருக்கும் கொடுக்க அங்கே பலத்த கரகோசங்கள்.

 

அன்பரசியோடு ஸ்ரீயை கண்ட அன்பரசியின் சொந்த பந்தங்கள் அவளைப் பற்றி இல்லாதது பொல்லாததுமாகவும் சொல்லிவிட்டு சென்றார்கள்.  அன்பரசிக்கு தான் அவள் எப்படிப்பட்டவன் என்பது நன்கு தெரியுமே.

 

வலது காதில் வாங்கியவற்றை இடது காதில் அனுப்பிவிட்டால் வெளியே.  பூம் பூம் மாடு போல கேட்பாரின் பேச்செல்லாம் அவளிடம் எடுபடாது.

 

ஸ்ரீஜாவிற்கும் அப்போது ஏழாம் மாதம் தொடக்கம்.

 

பாஸ்கரன் மற்றும் ஸ்ரீஜா உணவு உண்டு கொண்டிருந்த சமயத்தில் அங்கே ஒரு பெண் வந்து அவர்களிடம் குசலம் விசாரித்தாள்.

 

நீங்க ரெண்டு பேரும் வேற வேற இனத்தவங்களா.  அதான் உங்க வீட்ல இன்னும் உங்களை ஏத்துக்கலையா.  உடனே அன்பரசி வீட்ல நல்லா ஒட்டிக்கிட்டிங்க போலயே.

 

குசலம் விசாரிப்பது போல அவர்களின் மனதை புண்படுத்தி விட்டு சென்றாள் உறவுக்கார பெண் ஒருத்தி.  அவள் வேறு யாரும் இல்லை அன்பரசியின் சித்தப்பா வீட்டுப் பெண்ணான தீபா.

 

ஆள் தான் பார்ப்பதற்கு சிறியவள். பேச்சு எல்லாம் பெரிய மனுஷிக்கு ஈடு கொடுத்து பேசும் அளவிற்கு இருக்கும். இருந்தும் அவற்றில் எந்த பயனும் இல்லை.  சொத்தையான கத்திரிக்காய் போல மற்றவர்களின் மனதை காயப்படுத்துவதில் வல்லவள் அவள்.

 

தீபா ஸ்ரீஜாவிடம் பேசிக் கொண்டிருந்ததை கவனித்த அன்பரசி அவர்கள் அருகே வந்து இவள் பேசி அனைத்தையும் கேட்டு விட்டார்.

 

அத்தோடு விடாமல் தீபாவை நிறுத்தி வேற வேறவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என்ன தீபா.  அவங்க மனசு ஒத்து போய் கல்யாணம் பண்ணி இருக்காங்க.  யார் ஏத்துக்கிட்டாலும்  ஏத்துக்குலைனாலும் அவங்க இனிமே ரொம்ப சந்தோஷமா தான் இருப்பாங்க.

 

கூடவே அவங்க வந்து என்கிட்ட ஒட்டிக்கல நாங்க தான் போய் அவங்ககிட்ட ஒட்டிக்கிட்டம்.  அவங்களோட அன்பாளையும் அரவணைப்பாளையும் அவங்க கிட்ட இருந்து மீள முடியாத ஒரு அன்புங்கிற அழகான வட்டத்துக்குள்ள நாங்க போய் ஒட்டிக்கிட்டோம்.  இதற்கு மேல் ஸ்ரீஜாவையும் பாஸ்கரனையும் பற்றி தவறாக பேசினாய் எனில் எனது கையானது உனது கன்னத்தில் கரம் பார்க்கும் என்பதை தெரிந்து விட்டு நகர்ந்தாள்.

 

அன்பரசிக்கு அவர்களை தாழ்வாக நடத்துவது சுத்தமாக பிடிக்கவில்லை.  அதே நேரம் தீபாவின் திமிர் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் அல்லவா.  ஸ்ரீஜாவும்  பாஸ்கரனும் வேற்று ஆட்கள் அல்ல என்பதையும் உங்களைக் காட்டிலும் அவர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதையும் இப்போது அவளது பேச்சில் காட்டி விட்டாள்.

 

என்னம்மா பேசுது பாரு இந்த அம்மா என்று தீபாவும் முகத்தை சுளுக்கிக் கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியேறினாள்.

 

என்னங்க எங்களுக்காக அவங்கள நீங்க திட்டிட்டீங்க….

 

ஸ்ரீஜாவின் பதட்டமான கேள்வி.

 

என்ன ஸ்ரீஜா நீயும் நானும் வேறயா என்ன.  உன்னை இனிமேல் யார் காயப்படுத்தினாலும் அது என்ன காயப்படுத்தற மாதிரி தான்.  அதுவும் இல்லாம தீபாவுக்கு நீங்க எங்க கூட நெருங்கி பழகுறது சுத்தமா பிடிக்கல போல.  அதான் உங்களை குத்தி காட்டிட்டு போறா.  இப்படியே அவளை விட்டா உங்க மேல ஏறி குதிச்சுடுவா.  அதனாலதான் அவளை தட்டி அடக்கி வச்சிருக்கேன்.

 

எதனால் தீபாவை திட்டினோம் என்றும் இனிமேல் நீங்கள் எங்களுக்கு எப்படிப்பட்டவர்கள் என்றும் அவ்விருவருக்கும் புரிய வைத்து விட்டாள்.

 

இதோ கோடை காலம் இருந்து குளிர்காலம் நகர்ந்து மழைக்காலம் தொடர்ந்து விட்டது.

 

இதற்கு இடையில் ஸ்ரீஜாவின் வயிறும் பெருத்துப் போய் ஒன்பதாம் மாதத்தை அடைந்தது.

 

ஸ்ரீஜாவிற்கு வளைகாப்பு செய்து பார்க்க வேண்டும் என்று அன்பரசிக்கு பெருத்த ஆசை இருந்தது.  அது தன் கணவரிடமும் மறவாது கூறி அவற்றிற்கு ஏற்பாடு செய்திருந்தால் அவள்.

 

எதுக்கு இதெல்லாம் என்று சினுங்கினாலும் அவற்றை சிலாகித்து ரசித்து கொண்டிருந்தால் ஸ்ரீஜா.

 

கை நிறைய வளையல் சத்தம் முகம் முழுவதும் சந்தன வாசம் அத்தோடு குங்குமம் ஆங்காங்கே திலகம் இட்டு இருக்க உருண்டு போன முகத்தில் ஊர் முழுக்க சிரிப்பு என்பது போல அவளது முகம் இப்போது பிரகாசித்து கொண்டிருந்தது.

 

இவற்றை சற்று தொலைவில் இருந்து கைகட்டி நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் பாஸ்கரன்.

 

இருவருக்கும் யாரோவாக இருந்தவர்கள் இப்போது எல்லாமுமாக மாறிப் போன சமயத்தில் அவனது மனதிற்குள் சொந்த பந்தங்களாக உருவெடுத்துனர் அன்பரசியும் இன்பரசனும்.

 

இந்த உறவை வலுப்படுத்தும் விதமாக ஒன்பதாம் மாதத்தின் இறுதி நாட்களில் வெளிவர துடித்த அந்த சிசுவின் உதையால் வீச்சென்று கத்திய ஸ்ரீஜாவை ஏ வி எஸ் ஹாஸ்பிடல் இன் அட்மிஷன் செய்து எப்படி அன்பரசன் பரிதவிப்போடு காத்துக் கொண்டிருந்தாரோ அதே போல இப்போது பாஸ்கரனும் நடமாடும் பூனையாக காத்திருந்தார்.

 

பாஸ்கரனை இறுக்கி அணைத்த அன்பரசனும் பயப்படாத எல்லாம் நல்லதே நடக்கும் என்று சொல்லி தைரியப்படுத்திக் கொண்டிருந்தார்.

 

கைக்குழந்தையோடு நற்செய்தியை மொபைல் வழியாக கேட்டுக் கொள்ள வீட்டில் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார் அன்பரசி.

 

இதோ அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விடாமல் வெளியே வந்து சிரித்துக்கொண்டிருந்தார் ஒரு சின்னஞ்சிட்டான பெண் குழந்தை.

 

கையோடு அணைத்து இருந்த மருத்துவரும் குழந்தையை சுத்தம் செய்து அவற்றை இன்குபேட்டரில் படுக்க வைத்து விட்டு வெளியே அவரது பெற்றவர்களுக்கு பதில் சொல்ல வந்து விட்டார்.

 

பாஸ்கரனை தாண்டி கொண்டு இன்பரசன் மருத்துவரிடம் நெருங்கி என்னங்க என்ன ஆச்சு என்று பதறி கேட்டார்.

 

சக்ஸஷ்… பெண்குழந்தை என்று சொல்ல பாஸ்கரனை கட்டி அணைத்துக் கொண்டார் இன்பரசன்.

 

முதல் பிரசவத்தில் நட்பை நெருங்கி தொழில்வாரியமாக நட்பை பெருக்கிக் கொண்டவர்கள் இப்போது மறுபிரசவத்தில் மீண்டும் ஒன்றாகி குதூகளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

பட் ஒன் சிக்… பேபிக்கு மூச்சு விடுறது கொஞ்சம் பிரச்சனையா இருக்கு.  ஒரு மூணு நாள் இன்குபேட்டர்ல வைக்கனும்.  சோ இப்போதைக்கு நீங்க பேபிய பாக்க முடியாது.  பிளீஸ் வெய்ட் …

 

சொல்லியதும் நகர்ந்த மருத்துவரின் பின்னால் இருந்த இருவரும் அணைத்து இருந்தவாறு ஒருவரை ஒருவரை பார்த்தார்கள்.

 

என்ன இது?… குழந்தையின் நிலை இப்படி என சோகமாகிய முகத்தோடு அன்பரசியின் எண்ணிற்கு அழைத்தார் இன்பரசன்.

 

சொல்லுங்க…

 

பாப்பா பிறந்திருக்குடா…பட் பாப்பா மூச்சு விட கஷ்ட படுதாம்.  சோ வீக்கா இருக்காம்..

 

அங்கே இருந்த அனைவரின் நிம்மதியும் பறிபோனது.

 

செந்தனலா?… மழையா?…

 

கௌசல்யா வேல்முருகன் 💝..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!