வதைக்காதே என் கள்வனே..!!
கள்வன்-01
ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ.. என ஆடி பாடி கொண்டிருந்தவளை சட்டென இழுத்து அவளுடைய இதழை கவ்விக் கொண்டான் ஓர் திடகாத்திரமான ஆடவன்.
“ஆஆஆஆஆ..” என அலறியவாறு எழுந்து அமர்ந்த மங்கைக்கோ அப்போது தான் தான் கண்டது கனவு என்பது புரிந்து கொஞ்சம் ஆசுவாசமானாள்.
“ச்சே கனவு அது சரி யாரா இருக்கும் அவன். அவ்வளவு ஆக்ரோசமா கிஸ் பண்றான் லூசுப் பய ஆனாலும் அந்த கண்கள் ப்பா என்னாஹ் ஒரு ஈர்ப்பு..” என்று கனவில் வந்த ஆடவனைத் திட்டுகிறாளா அல்லது பாரட்டுகிறாளா என்று புரியாது தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு இருந்தாள் அவள். அவள் வெண்மதி.
எஸ்.ஆர் டெக்னாலஜி என்ற கம்பெனியில் இரண்டு மாதமாக வேலை பார்க்கிறாள். ஜுரோ சைசில் இருபத்தி நான்கு வயதிற்குரிய அழகுடன் இருப்பாள். பேரழகி என்றெல்லாம் கிடையாது. இருக்கும் அழகை மெயின்டன் பண்ணுவாள்.
“ஏய் மதி என்ன காலையிலேயே பேய் மாதிரி கத்துற நா தூங்க வேண்டாமா..?” என்று மழலை கொஞ்சும் மொழியில் அழகாகவே பேசியது. அவளுக்கு இருக்கும் ஒரே உறவு, ப்ரண்ட், எப்படி வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளலாம். அது தன் உடல் முழுவதும் பசுமையை நிறம் பூசிக்கொண்டும் கொஞ்சி பேசும் இதழ்களோ அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். சொல்லித்தான் தெரிய வேண்டுமா..? ஆம் அது பச்சைக்கிளி. பார்க்க தான் கிளி ஆனால் வாயோ வாய்க்கால் வரை நீளும். சளைக்காமல் பேசும். “என்ன லியா நா என்ன பண்ணேன் உன்ன..?”
“என்ன பண்ணியா..? உன்னால என் தூக்கமே போச்சு போடி..”
என்று முறுக்கிக் கொண்டது லியா.
“சரி சரி கோச்சிக்காத இன்னைக்கு என் ஆபிஸ்ல இருந்து டூர் போறதா ப்ளான் பண்ணிருக்காங்கல்ல நா உன்னையும் கூட கூட்டிட்டு போகலாம்னு நெனச்சேன். நீ என்னடான்னா கோவமா போற.. சரி நா மட்டும் கிளம்புறேன்..” என்றாள் மதி.
‘அச்சச்சோ அவசர பட்டுட்டியே பரட்ட சரி சமாளிப்போம்..’ என்று எண்ணிக் கொண்ட லியா, “என்ன மதி நாம என்ன அப்படியா பழகிருக்கோம். சரி விடு மன்னிச்சிட்டேன். நாம ஒன்னாவே போலாம். நாம ரெண்டு பேரும் என்னைக்கு ஒருத்தர் இல்லாம ஒருத்தர் இருந்துருக்கோம் சொல்லு..” என்று ஜர்க்கா வாங்கியது லியா.
“ஓகே சரி கிளம்பு நேரம் ஆச்சு அங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க..”
“நா ரெடி நீதான் இன்னும் கிளம்பல.. போ பேசி டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் ரெடியாயிட்டு வா..”
“சரிடி வாயாடி இதோ வந்துடுறேன்..” என்று ஒருவாறு காலையிலேயே இருவரும் முட்டி மோதிக் கொண்டு அவள் வேலை செய்யும் ஆபீசுக்கு வந்தடைந்தனர்.
எஸ்.ஆர் டெக்னாலஜி என்று ஆங்கில எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்த அந்த ஐந்து மாடி கட்டிடம் முன்பு தன் ஸ்கூட்டியை நிப்பாட்டியவள் லியோ உடன் உள்ளே சென்றாள். அவர்களது ஆபிஸில் வருடத்திற்கு ஒருமுறை அங்கு பணி புரிபவர்களை கம்பெனி மூலமாக ஒரு வார ட்ரிப்பாக எங்காவது அழைத்துச் செல்வது வழக்கம். அதுபோலவே இப்போதும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களை ஒரு வாரம் ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக டூர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வெண்மதியோ இங்கு வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்களை ஆன நிலையில் அவளை மட்டும் விட்டுவிட்டா செல்வார்கள்..? அதனால் அவளும் அந்த பயணத்தில் கலந்து கொண்டாள். அவளுடன் லியாவும் தொற்றிக் கொண்டது. அவர்களது பயணம் இனிதாக தொடங்கியது ஊட்டியை நோக்கி.
*****
அதிகாலை வேலைகள் சூரியன் கடலில் குளித்து தன் வேலையை செய்வதற்கு கிளம்பிய நேரம் அங்கு கடற்கரையில் ஒருவன் சம்மணம் இட்டு அமர்ந்து கண்களை இறுக மூடி யோகாசனம் செய்து கொண்டிருந்தான்.அமைதி என்றால் என்ன என்று அறியாத ஆடவனோ தன்னுடைய கோபத்தை கொஞ்சமாவது குறைக்க எண்ணி இரண்டு வாரமாக இந்த யோகாசனம் மேற்கொள்கிறான். அந்த அமைதியான சூழலில் அவன் காதுகளில் ஒலித்தது அவனுடைய பீ.ஏ நந்தாவின் குரல்.
“பாஸ் நம்ம டார்கெட் இருக்கிற இடத்தை கண்டு பிடிச்சாச்சி.. இப்ப போனா நம்மளால அதை அடைய முடியும்..” என்று சொன்னவுடன் அந்த ஆடவனின் கண்களோ சட்டென திறந்து கொண்டது. எதிரே இருந்த தன் பீ.ஏவை நோக்கி திரும்பியவன், “லெட்ஸ் கோ..” என்று கூற, சிறிது நேரத்தில் கிட்டத்தட்ட பத்திற்க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அதில் ஐந்தாவதாக சென்று கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்தான் அந்த ஆடவன். அவன் கண்களில் எரியும் தீ ஜூவலையுடன் முன்னால் தெரியும் வீதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்போது தன் இறை கையில் அகப்படும் என்று.
இங்கு ஊட்டி சென்று கொண்டிருக்கும் அந்த வாகனத்தில் ஆடல் பாடல் என அந்த வாகனமே செம ஜாலியாக ஊட்டி சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் இருந்த அனைவரின் முகத்திலும் நாளைய நாள் வருவதில்லை. ஆகையால் இன்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ..? அப்படி அவர்களது அனைவரின் முகத்திலும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. லியாவும் படு குஷி. இன்னும் சற்று நேரத்தில் அந்த சந்தோஷம் இருக்க போவதில்லை என்பதை அறியாமல் அந்த பயணத்தை ரசித்தார்கள் அனைவரும். இன்னும் அரை மணி நேரத்தில் ஊட்டியை அடைந்து விடும் என்று இருக்கையில் திடீரென அவர்கள் வந்த அந்த நீளமான பஸ்ஸோ சடன் ப்ரேக் போட்டு நின்றது. சீட்டில் உட்கார்ந்து இருந்தவர்கள் முன் சீட்டில் மண்டை இடிபட, நின்று ஆடிக்கொண்டு இருந்தவர்களோ முன்னோக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்து வாரினார்கள். பாவம் இந்த நெருக்கடியில் பாடலுக்கு ஏற்ப தன் றெக்கையை விரித்து மணிதர்களுக்கு டஃப் கொடுத்து ஆடிக்கொண்டிருந்த லியாவோ ஒரு தடியனின் கை சந்து இடுக்கில் மாட்டிக் கொண்டு, இது தான் தனது இறுதி மூச்சாக இருக்குமோ என்று க்கீ க்கீ க்கீ என்று கத்திக் கொண்டு இருந்தது. மதியோ தான் எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு பாதி மயக்கத்திற்கு சென்றிருந்தாலள். ஏனென்றால் பஸ் நின்ற வேகத்தில் முன் சீட்டில் மண்டை இடிக்கப்பட்டு அரை மயக்கத்திற்கு போயிருந்தாள். ஆகவே லியாவை அவளால் பார்க்க முடியவில்லை. இங்கே லியாவோ அந்த தடியனின் கைக்குள் மாட்டிக் கொண்டு தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.
“டேய் காட்டுப் பன்னி கையை எடுடா.. மூச்சு முட்டுது செத்துருவேன் போல இருக்குடா பன்னி பயலே..” என்று வாய்க்கு வந்தபடி அவனை சத்தமாகவே திட்டிக் கொண்டிருந்தது.
அந்த தடியோ
“ஹேய் உன் சைசுக்கும் நீ பேசுற பேச்சுக்கும் கொஞ்சமாவது சம்மந்தம் இருக்கா. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனா புழிஞ்சுருவேன் பாத்துக்க..” என்று அவனும் லியாவுடன் வாக்கு வாதம் பண்ணிக் கொண்டு ஒருவழியாக அனைவரும் தங்களை சமப்படுத்திக் கொண்டு இருக்கையில் பத்துக்கும் மேற்பட்டோர் கையில் துப்பாக்கியுடன் தடதடவென பஸ்ஸிற்குள் நுழைய, பஸ்ஸில் இருந்த அனைவருக்கும் பயப்பந்து உருளத் தொடங்கியது.
“டோண்ட் மூவ் எல்லாரும் நாங்க சொல்றத கேட்டு நடந்தா யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை..” என்று துப்பாக்கி வைத்திருந்த ஒருவன் கூறினான். அதன் பின்னர் அந்த பாடிகார்ட்ஸ் பஸ்ஸில் இருந்த அனைவரையும் சட்டென வெளியே அழைத்து வந்தார்கள் வெண்மதி தவிர. அரை மயக்கத்தில் இருந்தவளுக்கு என்ன நடக்கிறது என்று கூட புரியவில்லை. அந்த சமயத்தில் ஆறடியில் மாநிறம் கொண்ட திடகாத்திரமான ஆடவன் கண்களில் கோபம் கொப்பளிக்க அவளை நோக்கி வேக எட்டு வைத்து நெருங்கியவன் அரை மயக்கத்தில் இருந்தவளை பின்னங்கழுத்தோடு கையிட்டு அவள் தலைமுடியை கொத்தாகப் பிடித்தவன் அவளை தரதரவென பஸ்ஸை விட்டு வெளியே இழுத்து வந்து தன்னுடைய காரில் போட்டுக்கொண்டு அந்த இடத்திலிருந்து புயல் வேகத்தில் கிளம்பினான். வந்தது யார்..? ஏன் வெண்மதியை இழுத்துச் செல்ல வேண்டும். கள்வன் களவாட வருவான்..
nice