காத்திருப்பு : 04
ட்ரெயின் நிறுத்தப்பட்டதும் அனைவரும் என்ன நடந்தது? ஏன் ட்ரெயின் நின்றது என்று அனைவரும் கேள்வியெழுப்பினர். அச் சத்தத்திலேயே சுய நினைவடைந்தவள் ட்ரெயின் நிறுத்தப்பட்டிருப்பதை உணர்ந்தாள்.
தான் சாய்ந்திருந்த ஜன்னலின் வெளிப்புறம் தன் பார்வையை செலுத்தியவள் அதிர்ந்தாள்.ஆம் அவளவன் அங்கே வந்துகொண்டிருந்தான். தன்னை அழைத்துச் செல்லத்தான் வந்திருக்கிறாரா என்று எண்ணியவள் மனம் நெகிழ்ந்தது.
வாசுவும் ஏன் ட்ரெயின் நிற்கிறது என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தான். அப்போது அவனது போன் சத்தமிட்டது. சூர்யாதான் அழைத்திருந்தான்.போனை எடுத்து காதில் வைத்தான்.
“சார் சொல்லுங்க ”
“வாசு இப்போ ட்ரைனை நிப்பாட்டினது நான்தான்”
“ஏன் சார் ”
“வாசு N.S.K.கம்பனி manager ஒரு முக்கியமான file இப்பதான் கொண்டுவரச் சொல்லி சொன்னாரு அதைக் கொண்டு வந்தனான் அதை அவர்கிட்ட குடுத்திடு ”
“ஓகே சார் இருங்க வெளியே வாறன்” என்றபடி வந்து ஃபைல்ஐ வாங்கி வந்தான்.
நடந்த எதையும் அறியாத வதனா தன்னவனை இமைக்காது ரசித்துப் பார்த்து தனது மனப் பெட்டகத்துள் அவனின் விம்பத்தை சேமித்தாள்.
இனிமேல் அவனை இப்பிடி பார்க்க மாட்டாள் என்பதை அறிந்தவள் போல் பார்த்துக்கொண்டிருந்தாள். ட்ரெயின் புறப்படும் வரை அவனையே பார்த்திருந்தாள்.
ட்ரெயின் புறப்பட்டதும் சூர்யாவிற்கு மனம் மிகவும் வலித்தது.ஏன் இப்பிடி இருக்கு என்று யோசனை செய்தவனை கலைத்தது தொலைபேசி. போனைப் பார்த்தவன் முகம் பிரகாசித்தது. உதடுகளில் குறுநகை தவழ்ந்தது. போனை காதில் வைத்தான்.
“மாமா….”என்றது தீராவின் குரல்.
“குட்டிமா சொல்லுடா”
“மாமா எப்பிதி இருக்கிற?”
“மாமா நல்லா இருக்கிறன்டா குட்டிமா எப்பிடி இருக்கீங்க?”
“நான் நல்லா இதிக்கன் மாமா நான் ஒது விஸயம் சொல்லோணும்”
“அப்பிடி என்ன சொல்லப்போறீங்க madam?”
“மாமா வீத்த ஒரு பாப்பா வதப்போகுதாம் எண்து அம்மா சொன்னாங்க”
“அப்பிடியாடா குட்டி மாமாக்கு ரொம்ப சந்தோசம் சரியா? அம்மாவும் அப்பாவும் எங்கடா?”
“சதி அவங்க சமைக்கிதாங்க மாமா நீ எப்ப மாமா வருவா உன்ன பாக்கணும் போல இதுக்கு மாமா சீக்கிதமா வா மாமா”
“கண்ணா மாமா திங்கள் அங்கே வாறன் சரியா குட்டிமாவைப் பார்க்க. குட்டிமா மாமா சொன்னா கேப்பீங்களா?”
“ம் கேப்பேனே சொல்லு மாமா ”
“குட்டி அம்மாவ கரச்சல்படுத்தக் கூடாது (தொல்லை). அம்மாவ கவனமா பாத்துக்கொள்ளணும். அம்மா கூட சண்ட போடக் கூடா சரியாடா?”
“சதி மாமா நான் அம்மாவ பாத்துக்கொள்ளுதன் ”
“சரி செல்லம்”
“சதி மாமா நான் பிதகு பேசுதன் bye உம்மா”
“ok கவனமா இருக்கோணும்டா bye உம்மா”
(தீரா அப்படித்தான் நல்லதோ கெட்டதோ முதல்ல மாமாட்டதான் சொல்லுவாள்.)
போனை வைத்தவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
வாங்க ட்ரெயின்ல என்ன நடக்குது என்று பார்ப்போம்……….
வதனா ஜன்னலில் தலையை சாய்த்தபடி மகனை மடியில் வைத்திருந்தாள். ஆதிக்கு ஒரு இடத்திலே அமர்ந்திருப்பது கஸ்ரமாக இருந்தது. அதனால் தாயின் மடியிலிருந்து மெதுவாக இறங்கினான்.
இறங்கியவன் மெதுவாக நடந்து நடந்து ரெயின் கதவை அடைந்தான். அடுத்த காலை வைத்தால் கீழே விழுந்திடுவான். ஆனால் அவனுக்கு அது தெரியாமல் காலை வைத்தவனை வலிமையான இரு கரங்கள் தாங்கின.
தனக்கு எதிரே இருந்த ஆதியின் குழந்தை முகத்தைப் பார்த்து அதில் ஈர்க்கப்பட்டான் வாசு. ஆதியை வைத்திருந்த வதனாவைப் பார்த்தான்.அவளோ இவ்வுலகில் தான் இல்லை என்பதைப் போல வெளியே பார்த்தபடி இருந்தாள். அவளின் நிலை அவனுக்கு கவலையளித்தது.
ஆதியை பார்த்துக் கொண்டிருந்தவன் அவன் வெளியில் செல்வதை உணர்ந்தவன் தானும் அவன் பின்னால் வந்தான். அவன் வந்ததும் நல்லதாயிற்று. கதவருகில் ஆதி செல்ல அதைக் கண்டவன் விரைந்து வந்து அவனை தூக்கினான்.
பயந்த ஆதி அழ ஆரம்பித்தான்.வாசுவோ “ஒண்டுமில்லடா குட்டி இங்க மாமாவ பாருங்க”
வாசுவின் கழுத்தைக் கட்டிக்கொண்ட ஆதி “எனக்கு பயமா இதிக்கி அம்மாட போகணும்” என்று அழத் தொடங்கினான். ஆதியின் அழுகுரல் வதனாவின் செவிகளில் விழுந்து அவளின் தற்போதைய நிலையை உணர்த்த தன் மடியிலிருந்த மகனைத் தேடினாள்.
“ஆதி எங்கடா இருக்கிறா?”என்றவாறு இருக்தையை விட்டெழுந்து வெளியில் வந்தாள்..
“அழாதடா குட்டி அம்மாட்ட போகலாம் வா” என்றவாறு அவனை தூக்கியபடி வந்தான் வாசு.
ஆதியை ஒருவன் தூக்கி வருவதைக் கண்ட வதனா ஓடி வந்து ஆதியை வாங்கி தன்னுடன் அணைத்தாள்.அம்மாவிடம் வந்ததும் ஆதியின் அழுகை வலுப்பெற்றது.
“கண்ணா என்னடா நடந்த ஏன் அழுறா?”
“அ…ம்…மா….ஆ….தி…. கீ….ழ….கீ….ழ” என்று பயத்தில் உளரினான்.
“குட்டி நடந்துட்டே வந்தவன் கதவுக்கு வெளிய கால வைக்கப் பார்த்தான் நான் தூத்கிட்டன் அதுதான் பயந்துத்துட்டான்.”என்றான் வாசு.
“ரொம்ப நன்றீங்க என்னோட பிள்ளதான் என்னோட வாழ்க்கை நான் வாழ்றதே இவனுக்காகதான் என்னோட உயிரையே காப்பாத்திட்டீங்க ரொம்ப நன்றீங்க” என்று கைகூப்பினாள் வதனா.
“பரவால்லமா முதல் போய் இருக்கையில இருப்பம் வா” என்றபடி வதனாவை முன்னே செல்லவிட்டு பின் சென்றான் வாசு.
இருக்கையில் அமர்ந்த பின் அழும் ஆதியை சமாதானப்படுத்தி உறங்கச் செய்தாள் வதனா.சிறிது நேரத்திலே நித்திரையானான் ஆதி.
“sir உங்களுக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் அது போதாது sir.” என்றாள் வதனா.
“விடும்மா எத்தனை தடவை நன்றி சொல்லுவா விடுமா”
“sir என்னோட மடியில இருந்து ஆதி இறங்கினது எனக்கே தெரியாது… உங்களுக்கு எப்பிடி தெரியும்”
“நான் அவன பார்த்தால் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது அதுதான் அவனையே பார்த்திட்டு இருந்தனான். ரொம்ப நேரமா ஒரே இடத்தில இருக்க முடியாமல் மடியில இருந்து இறங்கி போனதைப் பார்த்தனான். அதுதான் பின்னாடியே போனன். உனக்கு எப்பிடிமா தெரியும் நீ தான் இந்த உலகத்தில இல்லயே”
“இனி இப்பிடி இருக்க மாட்டன் sir”
“என்னமா வார்த்தைக்கு வார்த்த sir என்று சொல்ற என்னோட பேரு வாசு.. வாசுதேவன் மா நீ என்ன அண்ணா என்று சொல்லு தங்கச்சி”
“சரி அண்ணா “என்றாள் கண்கள் கலங்க.
(வதனா யாருடனும் எளிதில் பழக மாட்டாள். ஏனோ வாசு கெட்டவன் இல்ல என்று தோன்றியதால் பேசினாள்.)
“சரிமா தங்கச்சி உன்னோட பேரென்ன? என்ன செய்ற? எங்க போற? ஆதியோட பேரு ஆதிமட்டும்தானா? என்னடா இப்பிடி கேட்க்கிறான் என்று நினைக்காதமா நைட்ல பிள்ளயோட தனியா போற அதான் கேட்டனான்மா”
“என்னோட பேரு சந்திரா. நான் V.K கம்பனில வேலை செய்றன் அண்ணா இப்போ மாற்றலாகி ஹற்றன்ல இருக்கிற அந்த கம்பனியோட ஒரு கிளைக்கிதான் போறன் அண்ணா. ஆதவன்தான் ஆதியோட முழு பேரு.
(ஏனோ அவளுக்கு வதனா என்று சொல்ல மனம் வரவில்லை. தன்னவன் தன்னை கூட்டிச்செல்லவே வந்திருக்கிறான் என்று நினைத்தவள் அவன் தன்னை கூட்டிப்போக வரல வேற வேலையா வந்திருக்கிறான் என்பதை அறிந்தவுடனே அவள் உடைந்துவிட்டாள்.
புது ஊரில் மகனுக்காக மட்டுமே வாழவேண்டும் கணவனை நினைக்க கூடாது என்று நினைத்தவள். வதனா என்ற பெயரை புகையிரதநிலையத்திலே விட்டுவிட்டாள்.எனவேதான் வதனா வாசுவிடம்
சந்திரா என்றாள். அவள் வதனா என்று சொல்லியிருந்தால் பின்னால் ஏற்படவிருக்கும் பிரச்சினைகளை தடுத்திருக்கலாம். விதி யாரை விட்டது)
“ரொம்ப நல்ல பேருமா நீ ஹற்றன்ல எங்க இருக்க போற?”
“”கம்பனில வீடு கொடுத்திருக்கிறாங்க அண்ணா நீங்க என்ன பண்றீங்க?”
“நான் ஒரு கம்பனில எம்டிக்கு P.Aவா இருக்கிறன் மா. எங்களோட எம்டி இப்ப ஹற்றன்ல இருகிற N.S.Kகம்பனிய வாங்யிருக்கிறாரு. திங்கள் அதைப் பொறுப்பெடுக்கப்போறாரு அதுக்கு வேலை இருக்கு அதான் நான் இன்னைக்கு போறன்மா” என்றான்.
(வாசுவும் தான் வேலை செய்யும் கம்பனியின் பெயரை இன்றே கூறியிருக்கலாம் என்று அவன் வருந்தப்போவதை அவன் உணரவில்லை.)
“எங்கண்ணா தங்க போறீங்க?”
“”சுவாமிமலையில மா”
“அண்ணா நானும் அங்கதான் தங்கப்போறன்ணா”
“நல்லதும்மா எத்தனையாம் நம்பர் வீடு?”
“ஒன்பது அண்ணா நீங்க?”
“wow super மா நான் பதினாலுமா பக்கத்திலதான்”
“ஆமாண்ணா யாருமில்லாத எனக்கு புது ஊரில புது அண்ணா கிடைச்சிருக்கிறீங்க.”
“எனக்கும் ஒரு தங்கச்சி ஒரு மருமகன் கிடைச்சிருக்கிறான் ரொம்ப சந்தோசம்மா உனக்கு யாரும் இல்ல என்று சொல்லாத இந்த அண்ணா இருப்பான் சரியாடா?”
“சரிணா”
“சரிடா இன்னும் 4மணித்தியாலம் இருக்கு நாம போக கொஞ்ச நேரமாகும்…. தூங்குடா நானும் தூங்குறன்.”
“சரிணா குட்நைட்”
“குட்நைட் மா”
வாங்க friends சூர்யா வீட்ட என்ன நடக்குது என்று பார்ப்போம்……
காரை செட்டில் நிறுத்திவிட்டி வீட்டினுள் நுழைந்தான் சூர்யா.
“சூர்யா “என்ற தாயின் அழைப்பில் நின்றான்.
“சாப்பிடலயாப்பா?”
“இல்லமா பசிக்கல வேணாம்”என்றவன் தனது அறையை அடைந்தான்.
மகனின் வாழ்க்கையை எண்ணி பெருமூச்சு விட்டவாறு உறங்கச் சென்றார் மதி.
ஹற்றன் சாமிமலை தேவியின் வீட்ட போகலாம் வாங்க friends…..
கமலேஷ் கடந்த ரெண்டு வருசமா சாமிமலையில் ஒரு வைத்தியசாலையை ஆரம்பித்து நடாத்தி வருகிறான். இது நம்ம வதனாக்குத் தெரியாது.)
“தீரா என்னடி பேசினா மாமாவோட?”
“மா மாமாட்ட வீத்த பாப்பா வதப்போகுது எண்து சொன்னான். ”
“அதுக்கு மாமா என்னடா சொன்னாரு?”
“மாமாக்கு ரொம்ப சந்தோசமாம். அம்மாவ கவனமா பாத்துக்கொள்ளோணுமாம். அம்மாவ கரச்சல்படுத்தகூதாதாம் மா திங்கள் மாமா என்ன பாக்க வதுவாதாம்” என்றாள்.
“உண்மையா மாமா அம்மாவ பாத்துக்க சொன்னாராடா குட்டி”
“ஆமா அம்மா. சதி மா நான் தூங்க போதன் குத்நைத் பா ” என்றபடி தூங்கச் சென்றாள் தீரா.
“பாத்தீங்களா அத்தான் அண்ணாக்கு என் மேல பாசம் அதிகம்”
“தெரியும்டா அவன் தன்னைத் தானே தனிமைப்படுத்துறான். வதனா அவன விட்டுப் போனத அவனால ஏத்துக்க முடியல. வதனா போகும் போது அவன் இங்க இல்லையே நாமதானே இருந்தம்… நாம அவள போகவிட்டுட்டம் என்ற கோபம் அவனுக்கு அந்த கோவத்த நம்மள்ட காட்டுறான். சரியாயிரும்மா”
“சரிங்க வாங்க சாப்பிட” என்றபடி தேவி செல்ல கமலேஷ் அவள் பின்னே சென்றான்.
அதிகாலை நேரக் குளிர் உடலை தீண்டிச் செல்ல குழந்தையை அணைத்துப் பிடித்தபடி கையில் பெட்டியுடன் ஹற்றன் புகையிரத நிலையத்தில் வந்து இறங்கினாள் சந்திரா.(ஹற்றனில் வதனாவை சந்திரா என்றே அழைப்போம்.)
“வாம்மா சந்திரா இங்க இருந்து சாமிமலைக்கு ஆட்டோல போகணும் போகலாமா மா?”
” சரிணா வாங்க போகலாம்”
“பெட்டிய தாம்மா ”
“வேணாம் அண்ணா”
“பரவாயில்லமா பிள்ளயோட பெட்டியும் கஸ்ரம் தாம்மா பெட்டிய ”
“சரிணா ” என்றவாறு பெட்டியை கொடுத்தாள்
(சாமிமலையில் பல பிரச்சினை அவளுக்காக காத்திருப்பதை அறியவில்லையவள்.)
மதுரா இல்லம்…………
அதிகாலையிலே வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.
ஜோக்கிங் போவதற்காய் படியிலிருந்து இறங்கிய சூர்யா “யாரு இந்த விடியக்காலைல”என்றவாறு கதவை திறந்தவன் பேச்சற்று நின்றான்.
காத்திருப்புக்கள் தொடரும்…………..
சூர்யா யாரைப் பார்த்து பேச்சற்று நின்றான்??
சாமிமலையில் வதனாக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன???
❤️❤️❤️❤️
Very nice 👍
Thank you akkachi 😍😍
திவி மா ❤️❤️❤️😘😘😘😘
Nice. Interesting