காத்திருப்பு : 07
S.R புடவைக் கம்பனிக்குச் சென்ற சூர்யா அதிர்ச்சிக்குள்ளானான். ஆம் அவனது புடவை களஞ்சிய அறை தீயினால் கருகிய வண்ணம் இருந்தது.அவனைக் கண்டதும் சூர்யாவிற்கு போன் பண்ணிய ஆள் அருகில் வந்தான்.
“ஐயா நம்ம கஸ்ரப்பட்டு தயாரிச்ச புடவை. நாளைக்கு அனுப்ப வேண்டியது எல்லாம் போச்சி ஐயா”என்று அழுதான்.
சூர்யாவுக்கும் கவலையளித்தது. அவனது கவலையை பிறர் அறியாது மறப்பதில் பெயர்பெற்றவனாயிற்றே. பிஸ்னஸ் சாம்ராஜியத்தில் முடி சூடா மன்னன் சூர்யா. அடுத்து நடக்க வேண்டியவற்றை செய்ய கட்டளையிட்டான்.
நடந்த தீ விபத்தில் தொழிலாளிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.ஏனென்றால் தேநீர் இடைவேளையின் போதே இது நடைப்பெற்றுள்ளது. போலிஸ் கம்ளைண்ட் கொடுத்து விட்டு தனது நண்பன் சக்தியிடமும்(டிடைக்டீவ்) தெரிவித்து விட்டு வீடு வந்தான்.
“என்ன சூர்யா முகமெல்லாம் வாடியிருக்கு என்னாச்சி?” என்றார் மதி.
“ஒண்ணுமில்லம்மா நம்ம புடவைக் கம்பனில fire accident அதுதான் யாரு செஞ்சிருப்பாங்க என்று யோசனையாவே இருக்கு”
“என்னப்பா சொல்ற எப்ப நடந்த? யாருக்கும் எதுவும் ஆகலயே? எல்லாரும் நல்லாத்தானே இருக்கிறாங்க?”
“யாரிக்கும் எதுவும் ஆகலமா இடைவேளை நேரம் பாத்து பண்ணிருக்கு தற்செயலா நடந்த விபத்து இல்லம்மா ஆனா இத பண்ணினவங்க எங்கிட்ட கிடைச்சாங்க செத்தாங்க” என கண்கள் சிவக்க கர்ஜித்தான்.
வெளியே சென்ற கீர்த்தி சூர்யா பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே உள்ளே வந்தாள்.
“hi சூர்யா ”
“hi கீர்த்தி எங்க போன?”
“என்னோட பிரண்ட பாக்க போனன் சூர்யா. sorry சூர்யா என்னால நீ சாப்பிடாம பொயிட்ட”
“பரவால்ல கீர்த்தி sorry நானும் உன் மேல கோபப் பட்டிருக்க கூடாது”
“சூர்யா நீ ஏன் வதனாவ தேடக் கூடாது?”
“கீர்த்தி pls அதப் பற்றி மட்டும் பேசாத”என்றவன் தன்னறைக்துச் சென்றான்.
சாமிமலை……..
N.S.K கம்பனி….
“Hello sir I’m Vasuthevan. from S.R company எம்டி Mr. சூர்யகுமார் P.A”
“Hello sir welcome. I’m கிருஷ்.manager from this company.
“sir நீங்க ஏதோ file கேட்டதாம். அத sir கொடுக்க சொன்னார்.”
“oh thanks வாசுதேவன்”
“வாசுதேவன் வேணாம் வாசுனே கூப்பிடுங்க sir”
“அப்போ நீங்களும் கிருஷ்னே என்ன கூப்டலாம்”
“ok கிருஷ் sirda ஏதும் சொல்லணுமா?
“ஆமா வாசு இந்த கம்பனிய S.R கம்பனி வாங்கியாச்சு அப்போ கம்பனி name மாத்தணுமே ஏதும் பேர் வைக்க போறீங்களா இல்ல S.R னே வைக்கவா ? அத சொன்னா நாங்க name board மாத்த வசதியாயிருக்கும்”
“நான் sirda கேட்டுட்டு nightkku போன் பண்றன் கிருஷ். ”
“ok வாசு”
ok கிருஷ் நாளைக்கு meet பண்ணலாம். sorry தப்பா நினைக்காதீங்க தங்கச்ச வெளில கூட்டுட்டு போறன். so time இல்ல ”
“it’s ok வாசு நாம நாளைக்குப் பேசலாம்”
“thanks கிருஷ் bye”
“bye வாசு”
(கிருஷ் வாசு இருவருக்கும் இடையில் நட்பு தோன்றியது)
சந்திரா வீட்டில்……
“ஆதிக் கண்ணா எங்கடா இருக்கா?
“அம்மாவால உன்ன கண்டுபிடிக்க முடியலயே கண்ணா”
“அம்மா அவுட் வாடா கண்ணா” என்று கூறியதுதான் தாமதம். சோபாவின் பின்னாலிருந்து தாயிடம் ஓடி வந்தான் ஆதி”
(ஆமாங்க ரெண்டு பேரும் கண்ணாம்மூச்சி விளையாறாங்க. ஆதிய தேடின சந்திரா அவன பார்த்தும் பார்காதது போல இருந்து தன்னால் ஆதியை பார்க்க முடியவில்லை என கூறி மகனிடம் தெரிந்தே தோற்றாள். தாயினால் மட்டுமே தெரிந்தே தன் பிள்ளைகளிடம் தோற்றுப்போக முடியும்.)
“அம்மா நான்தானே ஜெயிச்சன்?”
“ஆமாடா கண்ணா. நீ தான் ஜெயிச்சடா.என் ஆதிதான் எப்பவும் ஜெயிப்பான்.”
“அம்மா அப்பாவும் இப்பிதி எல்லாத்திலயும் ஜெயிப்பாதாம்மா?”
“ஆமாடா கண்ணா உன்னோட அப்பா எதிலயுமே தோத்ததில்லடா. ”
“அம்மா அப்போ நானும் அப்பிதிதான் இதுப்பன் அம்மா ”
“கண்டிப்பாடா ஆனா நீ அப்பாவோட மட்டும் போட்டிபோடக் கூடாது. அப்பாட்ட மட்டும்தான் நீ தோத்துப்போகணும் வேற யார்கிட்டயும் நீ தோத்துப்போகக் கூடாது அம்மாவும் தோத்துப்போக விடமாட்டன்.”
“சரிமா அப்பா பாவம்தானேமா அதனால நான் அப்பாட்ட மட்டும் தோத்துப்போறன்மா. ”
இதைக் கேட்டவள் சூர்யாவுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடலை நினைத்துப்பார்த்து அதில்ல மூழ்கினாள். அவள் அப்பிடி இருக்கும் போது ஆதி அவளை டிஸ்ரப் பண்ண மாட்டான். அம்மா தன் அப்பாவைப் பற்றி நினைக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். சந்திரா ஆதிக்கு அவனது அப்பா பற்றி சொல்லிச் சொல்லியே வளர்த்தாள். அவள் இப்பிடி யோசிக்கும் போதெல்லாம் ஆதி அமைதியாக அன்னையையே பார்த்தபடி இருப்பான். இன்றும் அப்பிடியே இருந்தான்.
( “நீங்க எப்பிடிங்க எல்லாத்திலயுமே ஜெயிக்கிறீங்க?
“நான் ஜெயிக்க பொறந்தவன்டி. என்னால தோத்துப்போகவே முடியாது. எப்பவும் எதிலயும் தோக்க மாட்டன்டி.”
“யார்டயாவது தோத்துப்போற நிலமை வந்தா?”
“நிச்சயமா மாட்டன்”
“உங்கள தோக்கடிக்க யாரும் வராமலா இருப்பாங்க?”
“உன்ன தவிர என்ன யாராலயும் தோக்கடிக்க முடியாதுடி. ஆனா நீ அப்பிடி செய்ய மாட்ட”
“ஏன் என்னால செய்ய முடியாது நான் உங்கள தோக்கடிப்பேன்” என்றவளை நெருங்கிய சூர்யா தன் கரங்களால் அவளது மெல்லிடை பற்றி தன் புறம் இழுத்தான்.
“எ…ன்…ன…ங்…க?”
“என்னடி வார்த்த தடுமாறுது? நான் உன்ன கட்டிப்பிடிச்சாலே நீ தடுமாற நீதான் என்ன தோக்கடிப்பயா? போடி. நான் உன்ன லவ் பண்றத்த விட நீ என்ன ரொம்ப லவ் பண்ற அதனால உன்னால முடியாதுடி ”
“சரிதான் ஏன் உங்க புள்ள உங்கள தோக்கடிச்சிட்டா?”
“என் புள்ளட்ட சந்தோசமா தோத்துப்போவன்டி ஆனா நீ அவன்ட கூட என்ன தோத்துப்போக விட மாட்டா ஏன்னா நீ அப்பிடித்தான் அவன வளப்பா”
“சரிதாங்க என்னோட அத்தான் யார்டயும் தோத்துப்போகக் கூடாது அத்தான். நான் உங்க கூட இருந்தாலும் இல்லாட்டியும் நீங்க மாறவே கூடாது அத்தான்.”
“ஏய் என்ன விட்டு நீ எங்கடி போயிருவ அப்பிடி போகத்தான் உன்ன விட்றுவனா?”
“எப்ப என்ன நடக்கும் என சொல்ல முடியாது அத்தான்”
விளையாட்டுக்குக் கூட என்ன விட்டு போயிடுவன் என்று சொல்லாத கண்ணம்மா என்னால தாங்க முடியாது” என அவளது தோள் வளைவில் தன் முகம் பதித்தபடி கூறியவன் விழிகளிலிருந்து விழுந்த கண்ணீர் அவளை தீண்டியது.
தன்னிடமிருந்து அவனை பிரித்தவள் தன்னவனது கலங்கிய முகம் பார்த்தாள் தன்னால் தனக்காகதானே அவனின் விழிகளில் கண்ணீர் என எண்ணியவள்.
“என்னத்தான் இது நான் தெரியாம பேசிட்டேன மன்னிச்சிருங்கத்தான்” என்றவள். தன் கரங்களால் தன்னவன் முகம் பற்றியவள் முத்த மழை பொழிந்தாள்.
“என்னடா குட்டி உங்கம்மா உக்காந்திட்டே தூங்குறா?” என்றபடி வந்தான் வாசு.
“மாமா சூ சத்தம் போதாதீங்க”
“ஏண்டா ?”
“மாமா அம்மா அப்பாவப் பத்தி நினைக்கிதாங்க டிஸ்ரப் பண்ண வேணாம்”
“நல்ல பையண்டா நீ ” என்ற வாசு
“சந்திரா “என அவளை அழைத்து நிகழ்காலத்தை உணர்த்தினான்.
“அண்ணா எப்ப வந்தீங்க?”
“நான் வந்து ரொம்ப நேரமாச்சுமா அப்பிடி என்ன யோசன?”
“ஒண்ணுமில்லண்ணா உங்களுக்கு குடிக்க என்ன வேணும்ணா?”
“நல்லா பேச்ச மாத்திரம்மா உனக்கு எப்ப சொல்லணும்ணு தோணுதோ அப்ப சொல்லுடா இப்ப வெளில போலாம் சீக்கிரம் ரெண்டு பேரும் ரெடியாகுங்கடா.”
“சரிணா” என்றவள் பத்து நிமிடத்தில் மகனுடன் ரெடியாகி வந்தாள். பின் இருவரும் அங்கிருக்கும் பெரிய மால் ஒன்றுக்கு வந்து சேர்ந்தனர். மாலில் சில பொருட்களை வாங்கிவிட்டு திரும்பிய சந்திரா அங்கே வாயில் கதவினை திறந்தவாறு வந்துகொண்டிருப்பவரைக் கண்டு அதிர்ந்தவள். பின் சட்டென்று ஆதியை வாசுவிடம் அழைத்துச் சென்றாள்.
“அண்ணா ஆதிய கொஞ்சம் பாத்துக்கோங்க”
“ஆதி மாமாகூட இரு”
என்றவள் அவர்களது பதிலைக் கேட்காது சென்றாள்.
சந்திரா யாரைப் பார்த்து மறைந்தாள்?
சூர்யா புதுக் கம்பனிக்கு புதுப் பெயர் வைப்பானா?
காத்திருப்புக்கள் தொடரும்……….
❤️❤️❤️
Thanks ma😊