வருவாயா என்னவனே : 10

4.9
(11)

காத்திருப்பு : 10

“சூர்யா” என்ற அழைப்பில் தலையினை நிமிர்ந்து பார்த்த சூர்யா எழுந்து நின்றான்.

கமலேஷ் வந்திருந்தான். அவனது முகமே கவலையையே எடுத்துக் காட்டியது.

“என்னாச்சுடா?”

“சூர்யா ” என்று அவனை அணைத்துக்கொண்டான்.

“என்னடா மச்சான்” நீண்ட நாட்களுக்குப் பின் வந்த மச்சான் அழைப்பினைக் கேட்டு மகிழும் நிலையில் கமலேஷ் இல்லையே.

“நான் சொல்றத கொஞ்சம் பதட்டப்படாம கேளுடா”

“என்னடா முதல்ல சொல்லுடா”

“மா…மா…க்….கு….”

“அப்பாக்கு என்னடா?”

“மாமாவ hospitalla சேர்த்திருக்காங்களாம்டா”

“என்னடா சொல்ற அப்பாக்கு என்ன நடந்திச்சு ?”

” மெளனம் ”

“வாயத்தொறந்து சொல்லுடா”

“அ…..து…..வ…ந்….து ”

“டேய் சொல்லித் தொலடா”

“மாமாக்கு heart attack ”

“அப்பா நல்லாத்தானே இருந்தாரு “என்றவன் கதிரையில் தொப்பென்று விழுந்தான்.

“சூர்யா….. டேய்…. மச்சான்….” என்று சூர்யாவை அசைத்தான் கமலேஷ்.

“மச்சான்”என்று அவனை இடையோடு கட்டி அழுதான் எதிரிகளுக்கு சொப்பனமாக விளங்குபவன். கமலேஷ்கு தெரியும் சூர்யா இப்பிடித்தான் செய்வான் என்று. சூர்யாவுக்கு தந்தை மீது அதிக பாசம். அதனால் இதை அவனிடம் போனில் சொன்னால் தாங்கமாட்டான் என்றே நேரில் வந்தான்.

“சூர்யா கெளம்பு போலாம்”என்றவன் வாசுவை அழைத்து நடந்தவற்றைக் கூறி சூர்யாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான்.

“ரதிமா நீ இந்த நிலமையில வர்றது சரியில்லமா நான் அங்க போய் பாத்திட்டு சொல்றன் சரியா?”

“இல்லங்க நான் அப்பாவ பாக்கணும்”

“நான்தான் சொல்றனேடா நான் நிலமைய பாத்திட்டு வந்து உன்ன கூட்டிட்டு போறன்”

“சரிங்க போன உடனே போன் பண்ணணும் சரியா அண்ணாவ பாத்துக்கோங்க ”

“சரிடா நீ கவனமா இரு தீராவ கூட்டிட்டு வர driver போவாரு அவர்ட சொல்லிட்டன் சரியா byeda” என்றவன் நெற்றியில் முத்தமிட்டவன் பத்திரமா இருடாஎன்று சூர்யாவுடன் கோட்டை நோக்கி பயணித்தான்.

மாலையில் ஆதியைக் கூப்பிட வந்த சந்திரா ஆதியையும் நட்சத்திராவையும் பார்த்து சிரித்தபடி அவர்களருகில் வந்தாள்.

“அம்மா”

“அத்தம்மா”

“hi செல்லம்ஸ்” ஏனோ நட்சத்திராவை அவளுக்கு பார்த்ததும் பிடித்துவிட்டது.

“அம்மா இன்னைக்கு நாங்க தெண்டு பேதும்தான் சாப்பித்தம்மா பிதகு விளாடினம்”

“ஆமா அத்தம்மா தொம்ப ஜாலியா இதுந்துச்சி”

“சரிடா ரெண்டு பேரும் எப்பவும் சண்டபோடக் கூடாது இப்டியே இருக்ணும்.”

“சதி மா”

“சதி அத்தம்மா”

“நீ யாரோட நதிமா போவ?”

“அப்பா வதுவாதம்மா”

“அம்மா நதி அப்பா வத மடத்தும் நாம இதுப்பமா மா?”

“சரிடா கண்ணா ” இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். தேவியோட கொழந்தையும் என்ன இப்பிடி அத்தமானுதானே கூப்பிட்ருப்பா?ம்…..எனக்கு அதுக்கு குடுத்து வைக்கலயே”

“அத்தம்மா கார் வந்துத்து”

“அப்பா வதல uncle வந்திதுக்காதுமா”

“சரிடா நதிமா பத்திரமா போயிடுவியா?”

“அம்மா ஐயா வரலனா நான்தான் பாப்பாவ கூட்டிட்டு போவன்” driver

“சரி பத்திரமா கூட்டிட்டு போங்க ”

“bye நதி”

“bye ஆதி”

“byeda”

“bye அத்தம்மா”

ஆட்டோவை அழைத்த சந்திரா ஆதியோடு வீட்டை நோக்கிச் சென்றாள். வீட்டிற்கு வந்து தானும் குளித்து விட்டு ஆதியையும் குளிப்பாட்டி விட்டு ஆதிக்கு டீ கொடுத்தாள்.

“அம்மா வாசு மாமாவ பாத்துத்து வாறன்”

“பத்திரம் கண்ணா”

சற்று நேரத்தில்ல திரும்பி வந்தான் ஆதி.

“ஆதிக் கண்ணா மாமாவ பாத்தாச்சா?”

“மாமாவ காணோம் அம்மா”

“அப்பிடியா மாமா வேலை விட்டு வரல போலடா வந்ததும்போலாம் சரியா?”

“சதி மா ”

“ஸ்கூல் எப்பிடி இருந்திச்சி?”

“நல்லா இருந்திச்சிமா”

“குட்டி “என்றவாறு வந்தான் வாசு.

” மாமா ” என்று ஆதி கட்டிக்கொண்டான்.

“அண்ணா வேலை அதிகமாணா முகம் வாட்டமா இருக்கு? ஆதி உங்கள பாக்க வந்தான் கதவு மூடி இருக்கவும் திரும்ப வந்திட்டான்.

” நான் இப்பதான்மா வந்தன். வேலை அதிகம் இல்லமா எங்க முதலாளியோட அப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லமா அதுதான் கஸ்ரமா இருக்கு. நல்ல ஆளுமா அவரு.”

“கவலப்படாதீங்க அண்ணா சரியாயிடுவாரு”

“சரிமா ஆதி புது ஸ்கூல் எப்பிடி இருக்கு?”

“மாமா தொம்ப நல்லாருக்குமா நதியும் அந்த ஸ்கூல்தான் மாமா”

“ஓ அப்பிடியா ரெண்டு பேரும் friends ஆகியாச்சா?”

“ஆமா மாமா”

“அண்ணா டீ”

“thanks ma”

“சரிமா நான் போயிட்டு வாறன்.”

“அண்ணா நைட்டுக்கு சாப்பிட வாங்க”

“உனக்கு எதுக்குமா ஸ்ரமம்”

“இதுல ஒண்ணும் இல்லண்ணா நீங்க வாங்க”

“சரிமா ஆனா நீ things வாங்கும் போது நானும் பணம் தருவன் அதுக்கு நீ சரி சொன்னா நான் சாப்பிட வாறன்.”

” அத அப்புறம் பாத்துக்கலாம் வாங்கண்ணா”

“சரி மா ஆதி மாமா கூட வர்றியா?”

“சதிமாமா வாங்க”

“வாறம்மா”

“சரிணா ஆதி மாமாவ தொல்ல பண்ணக்கூடா சரியா?”

“சதிமா bye”

இருவரையும் அனுப்பியவள் சமைப்பதற்காக சென்றாள்.

கோட்டை………

கொழும்பு பிரபல hospitalலை வந்தடைந்தனர் ஆதியும் கமலேஷும். அங்கே ஒரு அறைக்கு வெளியே மதி அழுதவாறு இருக்க கீர்த்தி அருகில் இருந்தாள். இவள் எப்பிடி இங்க என்று யோசித்தவாறே வந்தான் கமலேஷ்.

(கமலேஷ்கு கீர்த்தியைப் பிடிக்காது சூர்யா பேசுவதால் தானும் அவளுடன் பேசுவான்.)

“அம்மா”

“பாத்தியா சூர்யா உங்க அப்பாவ சீக்கிரம் கண்ண தொறக்க சொல்லுடா”என்று அழுதார் மதி.

“அம்மா” என்று தானும் அழுதான்.

“அத்தை அழாதீங்க நான் டாக்டர பாத்திட்டு வர்றன். சூர்யா நீ அழுதா அம்மாவ யார் பாத்துப்பா ”

” நானும் வாரன்டா உன்கூட”

“சரிவா ”

“hello டாக்டர் I’m கமலேஷ்வரன். இதயசிகிச்சை நிபுணர். இது சூர்யா குமார் மாமாவோட பையன். மாமாக்கு என்னாச்சு டாக்டர்?”

“well Mr.கமலேஷ்வரன்.அவருக்கு இது முதல் attack. எதையோ மனசுக்குள்ளே வைச்சி வைச்சி யோசிச்சிட்டே இருக்காரு அதுதான் இப்பிடி attack வரக் காரணம்.”

“இப்ப அப்பா எப்பிடி இருக்காரு டாக்டர்?”

“tablet குடுத்திருக்கு கொஞ்ச நேரத்தில கண்முழிச்சிருவாரு. அவர யோசிக்க விடாதீங்க அவர வெளியூர் கூட்டிட்டுப் போங்க. மலைப்பிரதேசம்னா betterஆ இருக்கும். நீங்க ஒரு டாக்டர் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்ல. பாத்துக்கேங்க.

“டாக்டர் நாங்க எப்போ கூட்டிட்டு போலாம்?”

“அவர கண் முழிச்சதும் கூட்டிட்டுப்போலாம். அவரு இப்ப okதான்”

“Thanks doctor”என்றவாறு வந்தவர்கள் மதி பக்கத்தில் அமர்ந்தனர்.

“என்னப்பா சொன்னாரு டாக்டர்?”

“பயப்படத் தேவல அத்த மாமாக்கு ஒண்ணும் இல்லை கொஞ்சநாளைக்கு வெளியூர்ல இருந்தா நல்லமாம் அத்தை”

“சரிப்பா அப்போ நாங்க உங்க வீட்டுக்கு வரட்டுமா?”

“என்னத்தை இது கேட்டுட்டு இருக்கீங்க அது உங்க வீடு அத்தை நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம்.”

“சூர்யா நீ என்னப்பா பேசாம இருக்கிற”

அப்போது நர்ஸ் வந்து பேஷண்ட் கண்முழிச்சிட்டாரு வந்து பாருங்க என்றாள்.

அனைவரும் உள்ளே சென்றனர்.

“என்னங்க”

“மதிமா அழாதடா”

“நான் ரொம்ப பயந்துட்டன்ங்க”

“பயப்படாதடா எனக்கு ஒண்ணுமில்லை”

“மாமா இப்போ எப்பிடி இருக்கீங்க?”

“இப்ப ok மாப்பிள்ள”

“சரிமாமா ரெஸ்ட் எடுங்க நான் நீங்க கண்முழிச்சத டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றன்.

“கீர்த்தி நீ அத்தைய கூட்டுட்டு போய் கேண்டின்ல டீ வாங்கிக்குடு” என்றவாறு அனைவரையும் அழைத்துச் சென்றான் கமலேஷ். எல்லோரும் போனதும் தந்தையின் பக்கத்தில் வந்து இருந்த சூர்யா அவரது கைகளைப்பிடித்தான்.

“சூர்யா” என்றார்.

“அப்பா ” என்று அவரது கையைப் பற்றியபடி அழுதான்.

“அழாதடா எனக்கு ஒண்ணுமில்லடா”

“அப்பா என்னாலதானே எல்லாம்”

“உன்னால எதுவும் இல்லடா கண்ணா அழாத”

“அப்பா மன்னிச்சிருங்க அப்பா”

“அட அட என்ன ஒரு பாசம்” என்றவாறு வந்தான் கமலேஷ்.

“உனக்கென்னடா என்னோட அப்பா என்னோட பேசுறாரு”

“மச்சான் நீ இப்பிடி பேசி எத்தின வர்ஷம் ஆச்சிடா?”என்று கண் கலங்கினான்.

” என்ன மன்னிச்சிருடா”

“மன்னிப்பா உனக்கா நெவர் உன்ன நான் மன்னிக்கணும்னா நீ எங்களோடயே தங்கிக்கணும் சரியா?”

“சரிடா மச்சான்”

“மாமா டாக்டர்ட பேசிட்டன் நம்ம வீட்டுக்கு போலாம் மாமா”

“சரிப்பா ”

அப்போது வந்த மதியையும் கீர்த்தியையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். குமார் ரெஸ்ட் எடுக்கச் செல்ல கீர்த்தி வெளியே சென்றாள். சூர்யா தனது அறைக்கும் கமலேஷ் தேவிக்கும் போன் பண்ண சென்றனர்.

கீர்த்தி ஒரு hotelலில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாள்.

” நந்தன் ஏதாச்சும் தகல௺வல் கிடைச்சுதா?”

“இல்ல கீர்த்தி வதனாவப் பற்றி எதுவும் கிடைக்கல அவள் இங்க இருந்து அவளோட ஊருக்கு போயிருக்கா ஆனா இப்போ அவ ஊர்லேயே இல்ல”

“அப்பிடி எங்க போயிருப்பாள் அவள நான் பாத்தன் கொன்றுவன் நந்தன்.”

“கீர்த்தி கூல் அவள சீக்கிரமாவே கண்டுபிடிச்சிடலாம். சூர்யா வீட்ல எப்பிடி இருக்கா?”

“fine நந்தன் சூர்யாவோட அம்மாநல்லா பேசுது. அப்பா என்ன ஒரு பொருட்டாவே மதிக்குதில்ல திமிர் பிடிச்சது. சூர்யா பேசுறான். வதனாவப் பற்றி மட்டும் பேசாத என்றான். அவன் வதனாவ தேடவேயில்ல அதுமட்டுமில்ல வேற யாரையும் தேடவிடல்ல அதுதான் எனக்கு புரியல”

“அவன் எவ்வளவு பெரிய ஆள் அவனோட தகுதிக்கு அந்த பட்டிக்காட கட்டிவைச்சா எப்பிடி?அதுதான் தொலைஞ்சவள் தொலைஞ்சே போகட்டும்ணு விட்டிருப்பான்.”

“இருக்கலாம் ஆனா அந்த வந்தனா நானே அவர போனாலும் அவரு என்னத் தேடி வருவாரு அத நீ பாப்ப என்று எங்கிட்டயே சவால் விட்டாள். பாவம் வதனா” என சிரித்தாள் கீர்த்தி. அவளுடன் சேர்ந்து சிரித்தான் நந்தன்.

“நீ அவளப் பற்றி தேடு நான் உன்ன அப்புறமா வந்து பாக்கிறன் bye”

“ok bye ”

மதுரா இல்லத்தில்…….

“ரதிமா மாமாக்கு ஒண்ணுமில்லடா. என்றவன் டாக்டர் சொன்னவை நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.”

“உண்மையாவா அத்தான் எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்ல இருக்க போறமா?”

“ஆமாடா ”

“ரொம்ப சந்தோஷம் அத்தான்”

“என்னடி நான் பக்கத்தில இல்லேணு வார்தைக்கு வார்த்தை அத்தான் என்ற?”

“ஆமா அப்பிடித்தான் அத்தான் சொல்லுவன் அத்தான். என்ன பண்ணுவீங்க அத்தான்?”

“நாளைக்கு வந்து உனக்கு இருக்குடி”

“பாக்கலாம் பாக்கலாம்”

“தீரா குட்டி எங்கடி”

“அத ஏங்க கேக்குறீங்க நாம அன்னைக்கு பாத்தோமே வாசு அண்ணாவோட மருமகன் ஆதி அவன் தீரா ஸ்கூல்லதான் சேர்ந்திருக்கானாம் என்று அதப்பற்றியே பேசி என்ன ஒரு வழிபண்ணிட்டு இப்பதான் தூங்குறா”

“சரிடா நம்ம தீரா யார் கூடவும் இப்பிடி பேசமாட்டா ஆதியோட மட்டும் எப்பிடி ஏதோ ரெண்டு பேரும் சண்ட போடாம இருந்தா சரி”

“ஆமாங்க நீங்க எப்போ புறப்படுவீங்க?”

“நாங்க காலைல ஒரு பத்துமணிக்குள்ள வந்திருவம்டா”

“சரிங்க சாப்டீங்களா?”

“இன்னும் இல்லா நீ சாப்டு தூங்கு காலைல வள்ளி(வேலைக்காரி) வந்ததும் றூம்ஸ சுத்தம் பண்ணி வைடா”

“சரிங்க bye மிஸ் யூங்க”

“ஏண்டி காலைலதானே வந்தன் அதுக்குள்ள மிஸ் யூவா ?”

“ஆமா நான் உங்கள மிஸ் பண்றேங்க”

“சரிடா நான் வந்து உன்ன பாத்துக்கிறன் லவ் யூடா பத்திரம் ”

“லவ் யூ டூ அத்தான் நான் போன வைக்கிறன்.”

சாமிமலை……..

வாசு சூர்யாவிடம் பேசினான். அப்போது குமார் நல்லா இருப்பதாகவும் எல்லோரும் நாளை சாமிமலை வருவதாகவும் தேவி வீட்டில் தங்குவதாகவும் கூறினான். அதன் பிறகே ஆதியை தூக்கி வந்தான் சந்திரா வீட்டிற்கு.

“அண்ணா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா ?”

“சரிமா வா”

ஆதிக்கும் ஊட்டியவாறு தானும் சாப்பிட்டு வாசுவுக்கும் பரிமாறினாள். எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் பாத்திரங்களை சுத்தப்படுத்திவிட்டு வந்தவள். ஆதியை மடியில் போட்டு தட்டிக்கொடுத்தவாறே,

“அண்ணா அந்த sirக்கு எப்பிடி இருக்கு?”

“நல்லா இருக்காம்மா எல்லாரும் நாளைக்கு வாறாங்க இங்க”

“ஓ அப்பிடியாண்ணா இந்த இயற்கையோட இருந்தாலே நோய் வராதுண்ணா”

“ஆமாம்மா சரி நான் வாறன்மா நாளைக்கு கம்பனிக்கு சீக்கிரமா போணுமா குட்நைட்மா குட்நைட் குட்டி”

“குட்நைட் அண்ணா”

“குட்நைட் மாமா” வாசு சென்றதும் கதவை தாளிட்டுவிட்டு வந்து மகனுடன் கட்டிலில் படுத்தாள்.

“அம்மா அப்பாகிட்ட இன்னைக்கு நடந்தத சொல்லிட்டு வர்றன்மா ” என்றவன் சூர்யாவின் போட்டோவை எடுத்து வந்து கட்டிலில் வந்து படுத்தபடி இன்று ஸ்கூலில் நடந்தவற்றைச் சொன்னவன். குட்நைட்பா என்று தந்தையின் முகத்தில் முத்தமிட்டான்.

“அம்மா குட்நைட்” என்று தாயிடமும் சொல்லி முத்தமிட்டான். அவளும் குட்நைட் கண்ணா என மகனை முத்தமிட்டாள்.

“நீங்க எங்கள தேடி வரவே மாட்டிங்களா? அப்போ அவ சொன்னமாதிரி பட்டிக்காடு வேணாம்னுவிட்டுடீங்களாங்க?” என்று அவனுடன் பேசியவாறு உறங்கினாள்.

மதுரா இல்லம்…….

எல்லோரும் சாப்டு முடிந்ததும் .

“நாளைக்கு காலைல சீக்கிரமாவே சாமிமலைக்கு கெளம்பலாம்”

“சரிப்பா ”

“சரி எல்லாரும் நேரத்திற்கு போய் தூங்குங்க அப்போதான் நேரத்திற்கு போகலாம்”

“நானும் உங்க கூட வரமாமா? தேவியப் பாத்து ரொம்பநாளாச்சி”

“அதுக்கென்ன வா கீர்த்தி”

“thanks மா”

எல்லோரும் தூங்கச் சென்றனர்.

“சூர்யா யாருக்கோ போன் செய்து பேசிவிட்டு வந்து தூங்கினான்.

அதிகாலை வேளை மதுரா இல்லத்திலிருந்து சாமிமலை நோக்கி புறப்பட்டனர் அனைவரும்.

சூர்யா யாருடன் பேசினான்?

நந்தன் யாரு?

சாமிமலையில் வதனாவைக் காண்பார்களா?

காத்திருப்புத் தொடரும்………….

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “வருவாயா என்னவனே : 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!