வருவாயா என்னவனே : 11

4.6
(17)

காத்திருப்பு : 11

சாமிமலையை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர் சூர்யா குடும்பத்தினர்.

சாமிமலை……..

“தீராக்குட்டி எழும்புடா ஸ்கூலுக்கு போக நேரமாச்சி”

” நான் ஸ்கூல்ல போலமா மாமா ஏங்கித்த சொல்லாம போயித்தாரு so நான் போல”

“தீராம அதான் மாமா தாத்தா பாட்டி எல்லோரும் வர்றாங்களேடா ”

“இல்ல நான் போமாத்தன் மாமாக்கு பனிஷ்மென்ட் குதுக்கணும்”

“ஸ்கூலுக்கு போயிட்டு வந்து கொடுடா”

“இல்லை”

“அப்போ ஆதி தனியா இருப்பானேடா நீ ஸ்கூல்ல போலாட்டி”

“ஆமாம்மா பாவம் ஆதி”

“அப்போ ஸ்கூல் போடா கண்ணா மாமாவ ஸ்கூல் விட்டு வந்ததும் பனிஷ்ட் பண்ணலாம் சரியா?”

“சதி மா ”

சந்திரா வீடு………

“அம்மா நான் ரெதியாய்தன் மா”

“என்னக் கண்ணா இன்னைக்கு சீக்கிரமாவே ரெடியாயிட்ட?”

“ஆமாம்மா நதி earlyya ஸ்கூல் வந்திருவா அதுதான்மா நானும் போனாத்தானே விளாடலாம்”

“அது சரி… இரு கண்ணா அம்மா ரெடியாயிட்டு வந்திர்றன்.

“அப்பா நான் ஸ்கூல் பொயிட்டு வாரன் bye ” சூர்யாவின் போட்டோவில் முத்தமிடன் ஆதி.

வாசுவிடமும் சொல்லிவிட்டு வந்த ஆதியை அழைத்துக் கொண்டு ஸ்கூலில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றாள்.

வாசலில் கார் சத்தம் கேட்கவும் விரைந்து வந்தாள் தேவி.

“அப்பா எப்பிடி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கன் தேவிமா நீ எப்பிடி இருக்க? தீராக்குட்டி எங்கடா?”

“நல்லா இருக்ன்பா அவ ஸ்கூல் பொயிட்டாப்பா”

“அம்மா வாம்மா உள்ள போலாம். அண்ணா எங்கம்மா? கீர்த்தி அக்காவும் வந்திருக்காங்களா? எல்லோரும் உள்ள வாங்க”

எல்லோரும் வந்து சோபாவில் அமர்ந்ததும் வள்ளிய டீ கொண்டு வரச் சொன்னாள்.

டீ குடிச்சதும் எல்லோரும் போய் ரெஸ்ட் எடுங்க நான் சாப்பாடு ரெடி பண்ணிட்டு கூப்பிடுறன் என்றாள் தேவி. சரிமா என்றபடி அனைவரும் அறைக்குச் சென்றனர்.

“அண்ணா எங்கங்க?”

“அவன் கம்பனிக்குப் போயிட்டான் மதியம் சாப்பிட வர்றன் என்னு சொன்னான்.”

“சரிங்க நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் வர்றன்.”

“நீ இப்பவே வா ”

அறைக்குள் வந்தவன் ரதிம்மா என அவளை கட்டியணைத்தான். மிஸ் யூ டி என கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவனைத் தள்ளி விட்டவள்.

“பார்டா நாங்க மிஸ் யூ சொன்னா கலாய்பாராம் இப்ப அவரே சொல்லுவாராம். தள்ளுங்க எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு.”

“ஏய் நான் அங்க வைச்சி சொல்லிருந்தா நீ இன்னும் கவலப்பட்டிருப்ப அதுதான்டா “என மீண்டும் அவளை அணைத்தான்.

“ஏய் நேற்று எத்தன தடவை அத்தான் அத்தான் என கூப்பிட்ட இப்போ ஏண்டி அமைதியா இருக்க”

“அப்போ நீங்க பக்தத்தில இல்ல நீங்க கூட இருக்கிறமாதிரி இருக்கணும்னு அப்பிடி கூப்டன். இப்பதான் பக்கத்திலேயே இருக்கீங்களே பிறகென்ன ”

“உன்ன இருடி” என்றவன் அவளை தூக்கிவந்து கட்டிலில் இட்டான்.

“என்னங்க விடுங்க சமைக்கணும் வீட்ல எல்லாரும் இருக்காங்க விடுங்க”

“ஏய் நீ நான் இல்லாம நைட் சரியா தூங்கிருக்க மாட்ட so கொஞ்சநேரம் பேசாம தூங்கட்டும்ணுதான் தூக்கிட்டு வந்தன். நீ என்ன நெனச்ச பொண்டாட்டி” என நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“ம் இதைத்தான் நெனச்சன் என்றவள் அவனின் இதழ் பற்றினாள். எப்போது அவள்வேலையை அவன் எடுத்துக்கொண்டானோ தெரியாது.அவள் சுவாசத்திற்கு ஏங்கவும் அவளை விட்டவன் அவளை அணைத்துக்கொண்டு தூங்க அவளும் தன்னவன் மார்பை தலையணையாக்கி தூங்கினாள்.

S.V கம்பனி…..

“Good morning sir”

“Good morning வாசு இன்னைக்கு புரோகிரம் ஏதும் இருக்கா?”

“ஆமா சேர் V.K கம்பனியோட எம்டியோட evng meeting இருக்கு.”

(V.K கம்பனி எம்டி வெற்றிவேலோட பையன் விக்னேஷ்வரன். பார்க்க ஸ்டைலா இருப்பான். பொண்ணுங்கனா அவனுக்கு போதை. )

“சரி வாசு நீங்க போய் வேலையப் பாருங்க”

“ok sir”

அப்போது சூர்யாவின் போன் அழைத்தது. யாரென்று பார்த்தவன் வந்த எண்ணைப் பார்த்ததும் வேகமாக ஆன் பண்ணி

” சக்தி ஏதாச்சும் தெரிஞ்சுதாடா?”

(சக்திவேல் சூர்யா மற்றும் கமலேஷின் நெருங்கிய நண்பன். டிடைக்டீவா இருக்கான்.)

“மச்சான் நைட்தான் போன் பண்ணின பிறகு காலைலேயே இப்பிடி கேக்கிற கொஞ்சம் பொறுடா எனக்கு உன்ன நேர்ல பாத்து பேசணும் எப்ப வர?”

“நான் இப்ப சாமிமலைல இருக்கன்டா நீ இங்க வரமுடியுமா?”

“நான் கேஸ் விஷயமா கண்டி வந்தன்இங்க இருந்து 2hoursதான் வந்திர்றன் நீ எங்க வரணும்னு சொல்லுடா”

“சரிடா நீ nelu hotel வந்திட்டு போன் பண்ணு நான் வர்றன்.”

“சரிடா மச்சான் bye”

“byeடா”

(நேற்று சூர்யா போன் பண்ணது சக்திக்குத்தான். வதனாவ தேடுறத்துக்கு சக்திய கூப்டான். தன்னாலதான் அப்பாவுக்கு இந்த நிலமை என நினைத்தவன் வதனாவைத் தேட நினைத்தான்.)

V.K கம்பனி………..

சந்திரா நேற்று வேலைக்குச் சேர்ந்த போது விக்கி(விக்னேஷ்வரன்) கம்பனிக்கு வரவில்லை. அதனால் இன்னைக்கு ஆபிஸ் வந்ததுமே சந்திராவை அழைத்தான். கதவைத் தட்டி அனுமதி கேட்ட பின்பு உள்ளே வந்தாள் சந்திரா.

“good morning sir”

“good morning சந்திரவதனா. நீங்க பெருசாப் படிக்கல பிறகு எப்பிடி managerவேலை கிடச்சிது?”

“sir நான் ரெண்டு வருஷம் சாதாரண வேலதான் பாத்தன் பிறகு தபால்ல டிகிரி முடிச்சன். பிறகு என்னோட திறமைய நான் வளத்துக்கிட்டன். அதனால உங்களோட அப்பா என்ன அங்க managerராக்கினார் sir ” என கூறியவளை துகிலுரயும் பார்வை பார்த்தான்.

அவனது பார்வை அவளுக்கு அருவெறுப்பை உண்டாக்க “நான் போலாமா sir” என்றாள்.

அவனோ அவளை நன்றாக பார்த்தபடி சரி என்றான்.

அவனை ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்துவிட்டே வெளியேறினாள்.

தன்னிடத்துக்கு வந்தவள் தனது நிலையை எண்ணி வருந்தினாள். அந்த ஆபிஸில் இப்பிடி யாரும் அவளைப் பார்த்ததில்லை.

” நீங்க எங்கூட இருந்திருந்தா அவன் இப்பிடி பாப்பானா இல்ல நீங்க தான் விட்டுடுவீங்களா? நீங்க என்ன தேடி வரவே மாட்டிங்களா என மனதிற்குள் தன்னவனை நினைத்து அழுதாள். சிறிது நேரத்தில்ல தன்னைத் தேற்றியவள் தனது வேலையைத் தொடர்ந்தாள். அப்போதும் விக்கி தனது அறையில்ல இருந்த CCDV மூலம் அவளைப் பார்த்தவன் என்னையவே முறைக்கிறியா உன்ன என்ன பண்றன் பாருடி என சவால்ல விட்டான்.

S.V கம்பனி…..

“சூர்யா நான் வந்திட்டன் நீ வர்றியா?”

“ok நான் இப்பவே வர்றன்டா” என போனில் பேசிக்கொண்டே வெளியே வந்தவனிடம் வந்த வாசு,

“excuse me sir”

“yes சொல்லுங்க வாசு”

“sir evng V.K கம்பனி எம்டி கூட meeting இருக்கு”

“ohhh sorry வாசு meetinga cancel பண்ணிடுங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு ok ”

“ok sir ”

Nelu hotel…….

ஒரு அறையில் சக்தி முன்னால் தலையைத் தாங்கியபடி இருந்தான் சூர்யா. நண்பனை இவ்வாறு பார்க்க முடியாத சக்தி

“சூர்யா பேசுடா”

“மச்சான் என்னால முடிலடா எனக்கு ஏன் வது வேணும்டா”என நண்பனை அணைத்து சிறு பிள்ளை போல அழுதான்.

(கமலேஷிடம் கூட காட்டாத உணர்வை சக்தியிடம் காட்சினான். கமலேஷிடம் காட்டினால் அவனும் சந்தோஷமா இருக்கமாட்டான் என்றே அவனுடன் பேசாமலே இருந்தான். இதுதான் காரணமென கமலேஷ்கு தெரியாது.)

“சூர்யா அழாதடா உன்னோட வதுவ உங்கிட்ட சேத்துவைக்கிறது என்னோட பொறுப்படா அழாதடா”

“நீ நெஜமாவே வதுவ எங்கூட சேத்துவைச்சிருவியா என சிறு பிள்ளைப் பாவனையில் கேட்டவனைக் கண்ட சக்தியின் விழிகளிலும் நீரே இருப்பினும் நொடியில் தன்னை சமன் செய்தவன் அவனிடம்,

“சூர்யா யாருடா வது?”

“வது யாரா அவ என்னோட உயிருடா என் பொண்டாட்டிடா”

“என்ன பொண்டாட்டியா? எப்ப மச்சான் கல்யாணம் பண்ண?”

“தேவி கல்யாணம் நடந்த அன்னைக்குடா”

“டேய் என்ன கொழப்பாம தெளிவா சொல்லுடா”

“சந்திரவதனாடா அவ பேரு……………..”

விக்கியினால் வதனாவுக்கு ஆபத்து வருமா?

காத்திருப்புத் தொடரும்…………

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

8 thoughts on “வருவாயா என்னவனே : 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!