வருவாயா என்னவனே : 12

4.9
(12)

காத்திருப்பு : 12

வயல்களும் பூஞ்சோலைகளும் நதிகளும் என நிறைந்திருக்கும் கிராமமே சோலையூர். எங்க பாட்டி மரகதம் அங்கதான் இருக்காங்க. அந்த ஊரிலேயே செல்வாக்கான குடும்பம் ரெண்டு. ஒன்னு என் பாட்டி அடுத்தது வதனாவோடது. அவ வீட்டுக்கு ஒரே பொண்ணு அப்பா சுந்தரப்பிள்ளை. அம்மா தங்கம்மா. அப்பா கொஞ்சம் கோவக்காரரு. அம்மா சாந்தமானவங்க வதனானா அவங்களுக்கு ரொம்ப இஷ்டம்டா.

பாட்டி வீட்டுக்கு அடிக்கடி எல்லாரும் போவாங்க நான் ஸ்கூல்னால போறல்ல. லீவு நாள்லயும் போகாம கமலேஷ் கூடவே இருந்திருவன்டா.

“நீ ஏன்டா அங்க போறல”

“நான் சிட்டிலே இருந்ததால எனக்கு கிராமமே பிடிக்காதுடா. ஒரு தடவ அங்க போயிட்டன்டா டவர் இல்ல டீவி இல்ல அதோட போறத விட்டுட்டன். அப்பிடியே பழகிட்டன்டா. அப்புறம் நான் படிக்கிறதுக்கு அப்ரோட் போயிட்டன். நான் திரும்ப வந்ததே தேவி கல்யாணத்துக்குத்தான்டா.ஆனா தேவி மட்டும் அடிக்கடி போவா அவளுக்கு வதனாவ ரொம்ப பிடிக்கும்டா. லீவுநாளே ஊர்லதான் இருப்பா.

“டேய் ஏங்கிட்ட அடி வாங்காதடா நீ அங்க போகல பிறகு எப்பிடி வதனாவ கல்யாணம் பண்ண?”

“பொறுடா சொல்றன்.” என்றவன் தொடர்ந்தான்.

“வதனா வதனா எங்கடி இருக்கா?”

“என்ன தேவி ”

“எங்கடி போன?”

“மாட்டுக்கு வைக்கோல் போட போனன்டி”

“ஓ ஏய் நான் உனக்கொரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்திருக்கன்.”

“ஏய் என்ன கம்பஸ் போக சொல்லாதடி எனக்கு டவுனுக்கு எல்லாம் முடியாதுடி ”

“ஏண்டி உன்ன எவ்வளவு கஸ்ரப்பட்டு படிக்க வைச்சன் இப்ப ஏண்டி கம்பஸ் போக முடியா என்ற அங்க போக முடியல எண்டு எவ்வளவு பேரு கவலப்படுறாங்க தெரியுமா?”

“இல்லடி நான் வரலடி எனக்கு பயமா இருக்கு”

“ரெண்டு பேருக்குமே ஒரே கம்பஸ்தான்டி வாடி”

“இல்ல தேவி நான் வரல”

“நான் சொன்னா கேக்க மாட்ட பாட்டிட சொல்றன்”

“பாட்டிட மட்டும் வேணாடி அவங்க எது சொன்னாலும் என்னால அத பண்ண முடியா என்று சொல்ல முடியாடி ”

“சரி உன் விருப்பம். ஆனா படிக்கலயேனு நீ வருத்தப்படப்போறடி”

“நான் ஏண்டி வருத்தப்பட”

(அவளுக்கு அப்போது தெரியவில்லை பின்னால் அவள் படிக்காமல் இருப்பதற்கு வருந்தப்போகிறாள் என்று)

” சரிடி அத விடு நீ எப்ப போற ?”

“நான் நாலு நாள்ள போறன்டி”

“யாரு மாமா வருவாங்களா?”

“ஆமாடி சரி நேரமாச்சு நான் வர்றன்டி”

நான்கு நாட்களின் பின்……

“வதனா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவன்டி அங்க எனக்கு லீவு கிடைக்குமோ தெரியாது கிடைச்சா வர்றன்டி” என்று கண் கலங்கினாள்.

” நானும் உன்ன மிஸ் பண்ணுவன்டி நல்லா படி அடிக்கடி போன் பண்ணு” என்றவள் தேவியை அணைத்துக்கொண்டு அழுதாள்.இருவரும் அழ மரகதம்மாதான் இருவரையும் தேற்றி தேவியை அனுப்பி வைத்தார்.

வதனாவுக்கு பாட்டியை மிகவும் பிடிக்கும் நீண்ட நேரம் பாட்டி கூடவே இருப்பாள். தனியாக இருக்கும் மரகதம்மாளும் வதனா மீது அதீத பாசம் வைத்திருந்தார்.

நாட்கள் அதன்போக்கில் செல்ல ஒருநாள் தேவியின் தாய் தேவியின் ஜாதகம் பார்க்க சென்றார். அதனைப் பார்த்த ஜோசியர்

“அம்மா உங்க பொண்ணுக்கு ரெண்டு வாரத்தில கல்யாணம் பண்ணணும்மா அப்பிடி இல்லாட்டி உங்க பொண்ணோட உயிருக்கு ஆபத்துமா”

“என்ன சாமி இப்பிடி பேசுறீங்க?”

“உண்மையதான்மா சொல்றன்”

“சரிசாமி இதுக்கு வேற பரிகாரம் இல்லையா?”

“இல்லமா கல்யாணம் நடந்தேயாகணும்”

“சரிசாமி நீ வீட்ல பேசிட்டு வாரன்”

“நல்லதே நடக்கும் போயிட்டு வாங்க”

வீட்டில்……

“மதி….. மதி……”

“மௌனம்”

“மதி ….. மதிமா…..”

“மௌனம்”

“மதிதிதிதிதிதி….” என்றவாறு மதியை அசைத்தார்.

“என்னங்க எப்ப வந்தீங்க?”

“நான் வந்தது இருக்கட்டும் உனக்கென்ன யோசன?”

“அதுவா தேவி ஜாதகம் பார்க்க போனன்”

“என்ன சொன்னாரு சாமி?”

“அது என்றவர் அனைத்தையும் சொல்லி முடித்தார். இப்ப என்னங்க பண்றது?”

“கல்யாணம் பண்ணிடுவம்மா நீ என்ன நினைக்கிற?”

“எனக்கும் அதுதான் சரினு தோணுதுங்க நம்ம பொண்ணுதான் நமக்கு முக்கியம்க”

“சரிமா இரவைக்கு சூர்யாகிட்ட பேசுவம்”

“சரிங்க”

சோலையூர்……

“பாட்டி நான் ஒண்ணு கேக்கட்டுமா?”

“கேளுடா கண்ணா”

“நீங்க ஏன் இங்க தனியா இருக்கீங்க மாமாகூட இருக்கலாமே பாட்டி”

“அங்க எனக்கு சரியா வராதுடா”

ஏன் பாட்டி?”

“அந்த சூழல் வேறடா அங்க பணக்காரவங்க இருப்பாங்க பணம் மட்டும்தான் அவங்க நோக்கமாவே இருக்கும்டா நல்லவங்களும் இருப்பாங்கா ஆனா இயந்திரம் மாதிரி ஓடிட்டே இருக்கணும்.அது எனக்கு பிடிக்காது அதான் நான் போகல”

“ஓ சரி பாட்டி ”

” சரிடா நீ இங்க சாப்பிடுடா”

“இல்ல பாட்டி வீட்ல அம்மா பாத்திட்டு இருப்பாங்க நான் வர்றன் பாட்டி”

“சரிடா கண்ணா ”

போன் சத்தமிட்டது…

“சொல்லுமா மதி எப்பிடி இருக்க குமார் எப்பிடி இருக்கான்?”

” நாங்க நல்லா இருக்கம் அத்த நீங்க?”

“நானும் நல்லாத்தான்மா இருக்கன்”

“அத்த உங்கள்ட ஒன்னு சொல்லணும்”

“சொல்லுமா என்ன?”

“அத்த அதுவந்து என்றவள் சாமியாரிடம் போனதிலிருந்து அனைத்தும் சொல்லி முடித்தாள்”

“நல்லதம்மா நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணிடுங்க பிறகு அவள் படிக்கட்டும்”

“சரி அத்த ஆனா உடனே எப்பிடி மாப்பிள பாக்குற?”

“நான் ஒண்ணு சொல்றன் நம்ம சூர்யாவோட பிரண்டு கமலேஷ் இருக்கான்ல அவன பாருங்க”

“என்ன அத்த திடீர்னு இப்பிடி சொல்றீங்க?”

“அவன் ரொம்ப நல்ல பையன் மதி உங்களுக்கு பேச தயக்கமா இருக்குணா நான் பேசவா?”

“நான் சூர்யாகிட்டயும் கேக்கணும் அத்த ”

“சரி அவன்ட கேட்டுட்டு சொல்லு ”

“சரி அத்த அவனோட பேசிட்டு உங்களோட பேசுறன்.”

“சரிமா நான் வைக்கிறன்”

“சரி அத்த”

போனை வைத்த மதி சூர்யாவுக்கு போன் பண்ணினார்.

“அம்மா சொல்லுங்க எப்பிடி இருக்கீங்க?”

“நல்லா இருக்கன்பா நீ எப்பிடி இருக்க?”

“நான் நல்லா இருக்கன்மா என்னமா போன் பண்ணீங்க?”

“அது என்றவர் மரகதம்மா சொன்னதுவரை சொல்லி முடித்தார்.”

” அம்மா இந்தக் காலத்திலயும் இதெல்லாம் நம்புறீங்களா?”

“என்ன சூர்யா இப்பிடி சொல்றா எனக்கு பயமா இருக்குபா”

“அம்மா தேவிக்கு எதுவும் ஆகாது சரியா?”

“சாமியார் சொன்னது நடந்திருக்குப்பா”

“ஒண்ணு ரெண்டு நடந்தா எல்லாம் நடக்குமாம்மா?”

“உனக்கு எப்பதான் இதில நம்பிக்க இருந்திருக்கு? ஒருவேளை நம்ம கல்யாணம் பண்ணி வைக்காம தேவிக்கு ஏதும் நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டன் சூர்யா”

“அம்மா ஏன் இப்பிடி பேசுறீங்க. சரி உங்க இஸ்டப்பியே தேவி கல்யாணம் நடக்கட்டும். ”

“சந்தோஷம்பா கமலேஷ்கிட்ட பேசுவியாப்பா? இல்ல பாட்டி பேசட்டுமா ?”

“நான் பேசிட்டு சொல்றன் அப்புறம் பாட்டி பேசட்டும்”

“சரிப்பா நீ நாளைக்கு பேசிட்டு சொல்லு நான் வைக்கட்டுமா?”

“சரிமா அப்பாவ கேட்டதா சொல்லுங்க” என்றவன் போனை கட் பண்ணினான்.

“அத்த நான் சூர்யாகிட்ட பேசிட்டன்”

“என்னம்மா சொன்னான்?”

“நடந்ததை சொன்னவர் அவன் பேசின பிறகு உங்கள பேசட்டுமாம் அத்த ”

“சரிமா நான் அவன் பேசின பிறகே பேசுறன்”

“சரி அத்த எல்லாம் நல்லபடியா நடந்தா சரி அத்த”

“கவலப்படாத மதி எல்லாம் நல்ல படியா நடக்கும்”

“சரி அத்த நான் நாளைக்கு பேசுறன்”

“சரிமா நான் வைக்கிறன்.” என்றவர் போனை வைத்தவர் தூங்கச் சென்றார்.

கமலேஷ் என்ன சொல்லுவான்????

காத்திருப்புத் தொடரும்………..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “வருவாயா என்னவனே : 12”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!