வருவாயா என்னவனே : 15

5
(12)

காத்திருப்பு : 15

தூக்கத்தில் பயந்து எழுந்தாள் வதனா. எழுந்த வதனாவின் உடல் சில்லிட்டு இருந்தது. அருகில் இருந்த நீரைக் குடித்தவள் சிறிது தெளிந்தாள். மீண்டும் தூங்குவதற்கு மனம் வராமையினால் ஜன்னல் ஓரத்தில் நின்று நிலாவைப் பார்த்தாள். அவளது கனவே மீண்டும் மீண்டும் வந்தது. ஆம் வதனா பயந்து எழக் கனவே காரணம். அது என்ன கனவு என்று பார்ப்பம்.

வதனா ஓர் அறையில் வேலை செய்து கெண்டிருக்கிறாள். அப்போது யாரோ அழைக்க வேகமாக வந்தவள் புடவை தடுக்கி விழப் போகிறாள். ஆனால் விழவில்லை காரணம் யாரோ அவள் விழுந்து விடாதவாறு இடையைப் பற்றிப் பிடித்தனர்.

யாரென நிமிர்ந்து முகம் பார்த்தாள். அவனது முகம் கடுகடுவென இருந்தது. எழுந்து நின்றவளை பார்த்தவன் எதிர்பாராதவிதமாக பளாரென அறைந்தான். அதிலேதான் நிஜத்தில் பயந்தெழுந்தாள் வதனா. கனவில் அவன் பிடித்த இடை இப்போதும் குறுகுறுத்தது. அவளால் அந்த ஸ்பரிசத்தை உணரமுடிந்தது.

கனவை நினைத்தபடி இருந்தவளை “வதனா என்னம்மா தூங்கலயா?” என்று தங்கம்மாவின் குரல் நடப்புக்கு கொண்டுவந்தது.

“இல்லம்மா தூங்கினன் கனவு கண்டு பயத்தில எழுந்திட்டன்”

“சாமிய கும்பிட்டுட்டு விபூதி பூசிட்டு தூங்குடா”

“சரிமா” என்றவள் விபூதி பூசிட்டே தூங்கினாள்.

மதுரா இல்லம்……..

கமலேஷூடன் பேசலாமா என்று யோசனையில் இருந்தவளை கலைத்தது சூர்யாவின் அழைப்பு

“அண்ணா சொல்லுணா”

“தேவிமா எப்பிடி இருக்க?”

“நல்லா இருக்கன் அண்ணா நீங்க எப்பிடி இருக்கீங்க அண்ணா?”

“நான் நல்லா இருக்கன்டா உனக்கு கமலேஷ கல்யாணம் பண்ணிக்க இஷ்மாடா?”

“ஆமாண்ணா உங்க எல்லோருக்கும் okணா எனக்கும் ok தான்”

“சரிடாமா ”

“அண்ணா நீ கண்டிப்பா வரணும்னா”

“கண்டிப்பா வர்றன்டா”

“சரிணா பாட்டியும் வதனாவும் ரெண்டு நாள்ள வர்றாங்க”

“யாரந்த வதனா?”

“சோலையூர்ல என்னோட பிரண்டு அண்ணா”

“நம்மட லெவல்க்கு ஒரு பட்டிக்காட்டு பொண்ணோட friendship வைச்சிருக்க”

“அண்ணா அவ ரொம்ப நல்ல பொண்ணுணா”

“என்னமோ பண்ணு சரி நான் அப்புறம் பேசுறன்”

“சரிணா”

இரண்டு நாட்களின் பின்……..

சோலையூர்…..

” வதனா பத்திரமா இருக்கணும் அங்க ரொம்ப பெரிய இடத்தாக்கள் வருவாங்க கவனமா இருக்கணும். தனியா இருக்க கூடாது. பாட்டியோடவே இருக்கணும். சரியாடா?”

“சரிமா ”

“போலாமா வதனா என்றபடி வந்தார் பாட்டி”

“போலாம் பாட்டி”

“உங்கள நம்பித்தான்மா நாங்க எங்க பொண்ண அனுப்பிவைக்கிறம் பத்திரம்மா”

“அவளுக்கு எதுவும் நடக்காம நான் பாத்துக்கிறன்பா ”

இருவரும் ரெயினில் புறப்பட்டனர். வதனாவுக்கு மனசே சரியில்லை. பெற்றோரை முதன்முதலில் பிரிந்து வருவதனால் அப்பிடி இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டாள். இருவரையும் அழைத்துச்செல்ல குமார் வந்திருந்தார்.

“பயணம் எப்பிடி இருந்தது”

“நல்லம்பா ஒரு பிரச்சனையும் இல்ல”

முதன்முதல் நகரத்திற்கு வந்த வந்தனா அங்குள்ள சனநெரிசலைப் பார்த்து பயந்தவள் பாட்டியுடன் ஒன்றினாள்.

“வதனா என்னமா?”

“பயமா இருக்குப் பாட்டி”

“ஒண்ணும்மில்லடா பயப்படாத வா”

“போலாமா மா”

“சரி குமார்” மூவரும் அமர வண்டி புறப்பட்டது.

வதனா பாட்டியின் கைகளைப் பிடித்தவாறு வெளியே பார்த்தபடி வந்தாள்.

“குமார் கல்யாண வேலை தொடங்கியாச்சாப்பா?”

“பத்திரிக்கை மட்டும் அடிக்க குடுத்திருக்கு மற்ற வேலைகள நீங்க வந்தப்புறம் கேட்டுச் செய்யவாம் என்று மதி சொன்னா”

“சரிப்பா மாப்பிள்ளைய பாத்திட்டுப் போவமா?”

“இப்பதானேமா வந்தீங்க அப்புறம் பாப்பமே உங்களுக்கும் களைப்பா இருக்கும்”

“எனக்கு ஒண்ணும் இல்லப்பா பாத்திட்டே போலாம்”

“சரிமா” என்றவர் “driver T.P hospital போப்பா”

“சரிங்க sir”

“வதனா உனக்கு பிரச்சனை இல்லையே”

“இல்லம்மா”

T.P hospital வந்ததும் receptionல கேட்டுப்பார்ப்பம் என்றவாறு வந்த குமார்க்கு போன் வரவும் நீங்க போங்கம்மா நான் போன் பேசிட்டு வரன் என்றவர் வெளியேற வதனாவுடன் வரவேற்புக்கு வந்தார் மரகதம்மா. பார்க்க கிராமத்து பெண்மணியைப்போல இருந்தவரைப் பார்த்த வரவேற்பில் இருக்கும் பெண் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

“இங்க கமலேஷ் டாக்டர் இருக்காராமா”

” நீங்க யாரு?”

“அது உங்களுக்குத் தேவையில்ல கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க”

“யாரென்று தெரியாம சொல்ல முடியாது” என்றாள் திமிராக.

“அப்பிடியாமா சரி டொனேஷன் வாங்க வரச்சொன்னாருமா”

“ஓ டொனேஷன் கேட்டா அதுக்கு இவ்வளவு சீன்”

“காரணம் சொல்லித்தேன் டாக்டர் இருக்காரா என்று சொல்லலையே”

“பெரிய S.R கம்பனியோட எம்டி இவங்களுக்கு நாங்க உடனே பதில் சொல்லணும் பட்டிக்காட்டு கூட்டம்”

“கொஞ்சம் மரியாதையா பேசுமா”

“பட்டிக்காட்டு கூட்டத்துக்கு என்ன மரியாதை”

“shut up mind your words you know who am I? I’m marakathammal my son is nithyakumar owner of S.R group of company.”

(வாயை மூடு நான் யாரென்று உனக்குத் தெரியுமா மரகதம்மாள் S.R group of companyயோ எம்டி நித்யகுமாரோட அம்மா)

“என்ன பட்டிக்காட்ல இருந்து வந்தவ english பேசுறாவு என்று பாக்கிறியா அது ஒரு மொழி அவ்வளவுதான். முதல் பெரியவங்களுக்கு மரியாதை குடுக்க கத்துக்கோ”

இப்பிடி கம்பீரமாய் நின்று பெண் சிங்கமாய் கர்ச்சிக்கும் மரகதம்மாள் வதனாவுக்கு புதிது.

“sorry mam doctor உள்ளதான் இருக்காரு”

“ஓ பெரிய இடத்து மனிஷங்க என்று தெரிஞ்சதும் பதில் வருது அப்போ ஏழைங்க வந்தா உங்கட பதிலுக்கு காத்துக்கிடக்கணுமா?”

“sorry mam இனிமேல் இப்பிடி நடக்காது”

“இனிமேல் இப்பிடி நடக்காது அது எனக்கும் தெரியும். ஏன்னா நீ இங்க இனிமேல் வேலை பார்க்க மாட்ட” என்றார்.

பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்த வதனாவின் கைகள் நடுங்கியதைக் கண்ட மரகதம்மாள் தனது குரலை மாற்றி

“என்னடாம்மா?” என்றார் சற்றுமுன் அப்பிடிப்பேசியவர் தன்னிடம் கனிவாக பேசுவதை கேட்ட வதனா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

அவரது பார்வையை உணர்ந்த பாட்டி புன்முறுவலுடன் நீ என் கொழந்தடா உனக்கு இப்பிடியெல்லாம் பேச வராது பாத்தியா எப்பிடி இந்தப் பொண்ணு எப்பிடி பேசினானு அவளுக்கு இப்பிடித்தான்டா பேசணும் நீ பயப்படாத என்றவர் மீண்டும் பேச எடுக்கும் போது,

“பாட்டிமா” என்றவாறு வந்து அவரை அணைத்தான் கமலேஷ்.

(மதியம் சாப்பிடுவதற்காக வெளியே வந்த கமலேஷ் மரகதம்மாள் வரவேற்பில் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டவன் வேகமாக வந்தான்.)

(கமலேஷ்க்கு பாட்டியை மிகவும் பிடிக்கும் தாய் தந்தை இறந்தபின் மரகதம்மாளே அவனைத் தேற்றினார். அதுமட்டுமல்லாமல் குமாரிடம் சொல்லி சூர்யாவைப்போலவே இவனையும் வளர்த்தார். அதனாலே கமலேஷ்க்கு பாட்டியை பிடிக்கும்)

“கமலேஷ் இந்தப் பொண்ணு இங்க வேலை பார்க்க கூடாது”

எப்பவும் கண்ணா என்று அழைக்கும் பாட்டி இன்று கமலேஷ் என்று அழைத்ததும் ஏதோ உணர்ந்தவன். அந்தப் பெண்ணை நீக்க வேண்டும் என்றதைக் கேட்டவன்

” பாட்டி நான் இந்த hospitalல வேலை பாக்கிறன். இந்த hospital எம்டியாலதான் வேலையை விட்டு நீக்க முடியும்” என்றான்.

“அப்போ மரியாதை குடுக்கத் தெரியாத இடத்தில நீ வேலை பார்க்க வேணாம் வா போலாம்”

“சரி பாட்டி”

“என்னம்மா இங்க என்ன பிரச்சனை?”

“குமார் இந்தப் பொண்ணு என்றவர் நடந்ததைச் சொன்னதும் குமாருக்கு கோவம் வந்தது. பின் அம்மா கமலேஷ் ஏன் போகணும் இந்தப் பொண்ணு போகட்டும்”

“sorry sir pls sir வேலைய விட்டு தூக்கிடாதீங்க sir” என்று அழுதாள். அதனைப் பார்த்த வதனாவுக்கு கவலையாக இருக்க

“பாட்டி”

“என்னடாம்மா”

“இவங்கள ஒரு தடவ மன்னிச்சிருங்க பாட்டி பாக்க பாவமா இருக்கு”

“சரிடா உனக்காக மன்னிக்கிறன் இனிமேல் இப்பிடி நடந்துக்க கூடாது என்றவர் வதனாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல கமலேஷூம் குமாரும் பின்னாடியே வந்தனர்.

“அம்மா நீங்க எப்பிடிமா வதனா சொன்னதும் கேட்டீங்க நாங்க சொன்னாக்கூட கேட்க மாட்டீங்களே”

“வதனா எனக்கு கொழந்த மாதிரிடா அவ சொன்னா என்னால தட்ட முடியாது அதே போல நான் என்ன சொன்னாலும் வதனா தட்ட மாட்டா”

“நல்ல ஆளுமா நீ எங்க அம்மாவையே மாத்திட்ட”

“அப்பிடி இல்ல மாமா ”

“பாட்டிமா எதுக்கு hospital வந்தீங்க இந்தத் தங்கச்சி யாரு”

” உன்னப்பாக்கத்தான் வந்தன் கண்ணா. இவ வதனா நீயே சொல்லிட்டியே தங்கச்சி என்று வதனா இவருதான் தேவியோட மாப்பிள்ளை”

“வணக்கம் அண்ணா”

“வணக்கம்மா தங்கச்சி”

“சரிமா வீட்டுக்கு போலாமா? மதி பார்த்திட்டு இருப்பா அதுவும் தேவி வதனாவ ரொம்ப எதிர்பாப்பா”

“போலாம்பா நீயும் எங்க கூட வாப்பா”

“இல்ல பாட்டிமா நான் வரல”

“பரவால்ல வாப்பா பாட்டி கூப்றன்ல”

“சரி பாட்டிமா போலாம்”

“நால்வரும் காரினுள் அமர கார்ர புறப்பட்டது.

மதுரா இல்லம்…..

“அண்ணா என்ன பண்றா? சாப்டியா?”

“இப்பதான் மீட்டிங் ஒண்ணு முடிஞ்சிது இனிமேதான் சாப்பிடணும் நீ சாப்டியா?”

“நான் சாப்டன்ணா பாட்டியும் வதனாவும் வர்றாங்க அவங்களத்தான் பாத்திட்டு இருக்கன்”

“பாட்டி வந்ததும் போன் பண்ணு எனக்கு சரியா”

கார் வருவதைப் பார்த்த தேவி அண்ணா வதனா வந்தாச்சி நான் அப்புறம் பேசுறன் என்றவள் அவன் சொல்ல வந்ததைக்கூட கேட்காமல் போனை கட் பண்ணினாள்.தான் சொல்ல வந்ததைக் கேட்காமல் போனை கட் பண்ணிய தேவி மேல் வர வேண்டிய கோவம் வதனாமேல் வந்தது.

எல்லாம் இந்த வதனாவாலதான் என்னோட போன நான்ன சொல்ல வர்றத கூட கேட்காம போன கட் பண்ணிட்டாதேவி. என்று முகம் தெரியாத வதனா மீது கோபம் கொண்டான்.

இது எதுவும் அறியாது காரில் இருந்து இறங்கிய வதனா அந்த வீட்டின் தோற்றத்தைப் பார்த்து அதிசயித்து நின்றாள். அவளது தோற்றத்தைக் கண்ட பாட்டிமா என்ன வதனா அப்பிடியே நின்னுட்ட உள்ள போலாம் வாம்மா என்றார். சரி பாட்டி என்றவள் உள்ளே வர காலெடுத்து வைக்கபோகும் போது

“அங்கேயே நில் உள்ள வராத ” என்ற குரலைக் கேட்டவள் உள்ளே செல்லாமல் நின்றாள்.

வதனா மீது சூர்யா கொண்டுள்ள கோபம் விலகுமா?

வதனாவை உள்ளே வர வேண்டாம் என்றது யார்?

காத்திருப்புத் தொடரும்………

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “வருவாயா என்னவனே : 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!