காத்திருப்பு : 16
வதனாவை யார் உள்ளே வரவேண்டாம் என்பது என்று பார்த்த பாட்டி புன்னகைத்தார்.
“என்ன கல்யாணப் பொண்ணே ஏன் வதனாவை உள்ள வரவேண்டாம் என்று சொல்ற?”
“இருங்க பாட்டி முதல் முதல் நம்ம வீட்ட வர்ற வதனாவ வரவேற்க வேண்டாமா?” என்றவள் அவளுக்கு ஆரத்தி எடுக்க வதனா குழப்பத்துடன் இருந்தாள். அனைவரும் புன்னகைத்துக்கொண்டிருக்கும் போது அதை கலைப்பதற்காகவே வந்தார் மல்லிகா.
(மல்லிகா பானுமதியின் ஒன்றுவிட்ட அண்ணனின் மனைவி. பானுமதியின் சொந்தங்களில் இவர் மட்டுமே மதியுடன் தொடர்பில் உள்ளவர். தேவியின் திருமணத்தினை அறிந்தவர் உடனே தனது மகளை அழைத்துக்கொண்டு காலையிலேயே வந்துவிட்டார். அவரது மகள் நீலு.
இவர்கள் இருவருக்கும் சூர்யாவின் பணத்தின் மீது பேராசை. நீலுவை சூர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்பதே இவரது திட்டம். பாவம் இவர்களுக்கு இறைவனின் திட்டம் தெரியவில்லை. அவர்கள் வந்த போது வரவேற்க தேவி வரவில்லை.ஆனால் இந்தப் பட்டிக்காட்டுப் பெண்(வதனா பாவாடை தாவணி ஆணிந்திருப்பதால்) வந்ததும் வரவேற்கிறாளே என்ற கோபத்துடன் அங்கே வந்தார்.)
“என்ன தேவி அத்தை நான் வந்தப்போ என்ன வரவேற்க வரல. ஆனா இந்த பட்டிக்காட்டுப் பொண்ண ஆரத்தி எடுத்து வரவேற்கிற?”
“அத்தை என்னோட உயிர்த்தோழி அவ. அவள எப்பிடி வேணாலும் நான் வரவேற்பன் ok. அதோட ஒண்ணும் அவ பட்டிக்காடு இல்ல. அவளும் படிச்சிருக்கா”
“பாக்க பட்டிக்காடு மாதிரி இருந்தா அப்பிடித்தான் சொல்லணும் ஆளும் அவ உடுப்பும்”
“ஓ அப்போ உங்க பொண்ணபோல அரைகுறையா உடுத்தணுமா? என பக்கத்தில் நின்ற நீலுவைக் காட்டிக் கேட்டாள்
“ஏய் ” என்று ஏதோ சொல்ல வந்தவரை அடக்கியது மரகதம்மாவின் குரல்.
“இங்க பாரு மல்லிகா கல்யாணத்துக்கு வந்தோமா கலந்துகிட்டோமா போனமா என்னு இருக்கணும் அதவிட்டுட்டு என்னோட வதனாவப் பத்தி ஏதும் பேசின தொலைச்சிடுவன்” என்றவர் தன்கையை பற்றியபடி நடுக்கத்துடன் நின்ற வதனாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவர் தன்னருகிலே வதனாவை வைத்துக்கொண்டார்.
“என்னமா அந்தக் கிழவி இப்பிடி பேசிட்டு போகுது?’
“உனக்கும் சூர்யாவுக்கும் முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் இதுங்களுக்கு இருக்கு நீ சூர்யாவ விட்டுடாத சரியா?”
“சரிமா”
உள்ளே அனைவரும் அமைதியாக இருக்க குமார்தான்,
“மதி குடிக்க ஏதாச்சும் கொண்டுவாடா”
“சரிங்க” என்றபடி எழுந்தவரிடம்
“கொஞ்சம் பொறுமா மதி”
“ஏன் அத்தை”
“மாப்பிள்ளை உங்களுக்கு வேலை இருக்கா?”
“பாட்டி நான் எப்பவும் உங்க கண்ணாதான் மாப்பிள்ளை என்று சொல்லாதீங்க பாட்டி எனக்கொரு மாதிரியா இருக்கு என்றவன் ஒரு வேலையும் இல்ல பாட்டி நான் freeதான்”என்றான்.
“சரிடா கண்ணா என்றவர் மதியிடம் “எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைமா யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க சாப்பிடுவம். நானும் வதனாவும் குளிச்சிட்டு வந்திர்றம். உங்களுக்கு பிரச்சனை இல்லையே”
“இல்லம்மா நீங்க வாங்க நாங்க wait பண்றம்”
“தேவி நீ வதனாவுக்கு அவளோட றூமைக் காட்டு நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன்”
“சரிமா” என்றவள் எழ
“தேவி நீ மாப்பிள்ளை கூட பேசிட்டு இரு நான் வதனாவ கூட்டிட்டு போறன்” என்ற பாட்டி வதனாவை தன்னோடு அழைத்துச் சென்றார்.
குமாரும் கமலேஷிடம் “இருப்பா கமலேஷ் போன் பேசிட்டு வர்றன்.” என்று எழுந்து சென்றார்.
அனைவரும் சென்றதும் hallல் தனித்து விடப்பட்ட இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் இருக்க தேவியே அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தாள்.
“பாவம் வதனா”
“ஆமா என்ன பேச்சு பேசுறாங்க. ஆமா வதனா உனக்கு எப்பிடி பழக்கம்?”
“அதுவா நான் பாட்டிய பார்க்க ஊருக்கு போகும்போது பழக்கம். ரொம்ப நல்லவள். சரியான பயந்தாகொள்ளி . கோவமே அவளுக்கு வராது. அவ்வளவு நல்லவ.”
“அப்பிடிப் பட்ட நல்ல பொண்ணு உன்னோட எப்பிடி ரதி பழகினா?”
அவனது ரதி என்ற அழைப்பில் முகம் சிவந்தவள் அவன் தன்னைக் கலாய்பதை உணர்ந்தவள்
“என்ன டாக்டர் என்ன கலாய்கிறீங்களா? கொன்னுடுவன்”என முறைத்தாள்.
அவனின் அழைப்பில் சிவந்த அவளது முகத்தைப் பார்த்தவன் அதனை ரசித்தபடியே “ஆமா நான் ரொம்ப பயந்திட்டன் ரதி ” என சொல்ல இப்பிடியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
வாங்க நாம வதனாவை பார்க்கலாம்.
தனது அறைக்கு வந்த வதனா அறையைப் பார்த்து பிரம்மித்தாள். அவளது வீடும் சற்றுப் பெரியதுதான். ஆனால் இந்த வீடும் அவளது அறையும் அவளை பிரம்மிக்க வைப்பதற்கு மாறாக அச்சுறுத்தியது. ஏனென்று தெரியவில்லை அவளுக்கு. அதைவிடுத்தவள்.
குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு வந்தவள் சுடிதாரினை அணிந்தாள். பட்டணத்துக்கு வருவதனால் பாட்டியும் அவளது தந்தையும் சில சுடிதார்களை வாங்கி கொடுத்தனர். அவற்றுள் ஒன்றை அணிந்தவள் தயாராகி பாட்டியிடம் சென்றாள்.
“பாட்டி”
சுடிதாரில் அழகோவியமாய் வந்த வதனாவை ஒரு நிமிடம் பார்த்தவர்.”வதனா சுடிதாரில் ரொம்ப அழகா இருக்கடா என்று கன்னத்தில் முத்தமிட்டார்.
“போங்க பாட்டி நான் எப்பவும் போலதான் இருக்கன்”என்றாள் வெட்கத்துடன்.
சிரித்தபடி” சாப்பிட போலாமாடா?”
“போலாம் பாட்டி”
“இங்க பாருமா வதனா மல்லிகாவும் நீலுவும் உன்ன கஸ்ரப்படுத்துற மாதிரி நடந்துக்கிட்டா நீ கண்டுகாத எங்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறன்.”
மெலிதாக முறுவலித்த வதனா கீழ போலாம் பாட்டி என்றாள். சிரித்தபடி அவளுடன் சென்றார் பாட்டி.
அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
“வதனா ஊரு எப்பிடிடி இருக்கு?”
“நல்லா இருக்கு தேவி நம்ம கஸ்தூரி கன்னு போட்டிருக்கு”
“ஐ சுப்பர் வதனா நான் ஊருக்கு வரும் போது அவளப் பாக்குறன்டி”
“என்னது கஸ்தூரி கன்னு போட்டிருக்கா?”
“ஆமா டாக்டர் ”
“என்ன ரதி கஸ்தூரி எப்பிடி கன்னு போடும்?”
“என்ன டாக்டர் இது தெரியாதா?”
“தேவி மாப்பிள்ளைய டாக்டர்னு சொல்லாம அத்தான் இல்லன்னா மாமானு கூப்டு பழகு சரியா?”
“அட என்ன பாட்டி டாக்டர டாக்டர் என்று சொல்லாம அத்தான் மாமா என்னு சொன்னா நல்லா இருக்குமா?”
“மத்தவங்க டாக்டர்னு சொல்லலாம் கட்டிக்க போற நீ அப்பிடி சொல்லக்கூடாதுடா”
“சரிபாட்டி கல்யாணத்துக்கு அப்புறம் அப்பிடியே கூப்டுக்கிறன்”
“அத விடுங்க பாட்டி கஸ்தூரி எப்பிடி கன்னு போடும் அது கன்னு போடுறத்துக்கு மாடா என்ன?”
“ஆமா மாடுதான்”
“என்ன சொல்ற ரதி கஸ்தூரி என்றது மாடா அப்போ பொண்ணோட பேரு இல்லையா?”
“ஹா ஹா ஹா சிரித்தது தேவி மட்டுமல்ல வதனாவுமே ”
(தேவியின் சிரிப்பை ரசித்தபடி இருந்தான் கமலேஷ். வதனாவின் சிரிப்பை பார்த்து கோபப்பட்டார் மல்லிகா)
“என்ன சிரிப்பு ”
“வதனா அவ வளக்குற எல்லாத்துக்குமே பேரு வைச்சிருக்கா கஸ்தூரி அவ மாட்டோட பேரு ”
“அப்பிடியா ரொம்ப நல்லம் தங்கச்சி ”
“என்னையா அண்ணா தங்கச்சினு சொன்னீங்க?”
“ஆமாடா ”
“ரொம்ப நன்றிணா”
“ஏன் தங்கச்சி?”
“அதுவா வதனாக்கு அண்ணானு கூப்பிட ரொம்ப ஆசை but அவளுக்குஅண்ணா இல்ல அதுதான் நீங்க தங்கச்சி என்றதும் எமோஷ்னலாயிட்டா”
“அப்டியா சரி வதனா உன்ன என்னோட தங்கச்சியா நான் இந்த நிமிஷத்தில இருந்து தத்தெடுக்கன் சரியா?”
“சரிணா”
“அப்பா இந்த பாசமலர என்னால பாக்க முடியல என்ற தேவியின் குரலில் மகிழ்ச்சியே இருந்தது”
“வதனாமா நீ என்னோட தங்கச்சி அதனால தேவிக்கு உன்னோட நாத்தனார் கொடுமைய சிறப்பா செஞ்சிடுமா”
“சரிணா அப்பிடியே செஞ்சிடுவம்”
“என்னடி இப்பிடி மாறிட்ட நான் உன் உயிர்த்தோழி இல்லையா?”
“அண்ணாவ உயிர்தோழியானு வரும் போது அண்ணாதான்டி முக்கியம்” என்றாள் சிரித்தபடி.
“என் வீட்டு கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி ஏன் மார்பில் முட்டுதடி” என பாட்டுப் பாடினாள் தேவி. பாட்டுப் பாடினாலும் அவளது முகமே அவளது மகிழ்ச்சியைக் காட்டிக்கொடுத்தது. மகிழ்ச்சியோடு சாப்பிட்டு முடித்த அனைவரும் hallல் ஒன்று கூடினர்.
“மாமா நான் போயிட்டு வர்றன்”
“என்னப்பா கொஞ்சநேரம் இருந்திட்டு போப்பா”
“இல்லப்பா hospital இருந்து message வந்திருக்கு வரச்சொல்லி”
“அப்டியா சரிப்பா போயிட்டு வா ஆமா எதுல போவா?”
“நான் கேப் புக் பண்றன் மாமா”
“வேணாப்பா நானே விட்டுட்டு வர்றன்”
“உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் மாமா நானே போறன்”
“அதில என்னப்பா இருக்கு நானே வர்றன்.”
“சரிமாமா”
“அப்பா நான் விட்டுட்டு வரட்டுமா?”
“நீயா தேவிமா?”
“ஆமாப்பா எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு”
“இருந்தாலும்…”
“என்ன குமார் இழுக்குற தேவி நீ போயிட்டு வாடா”
“தங்ஸ் பாட்டி வதனா இரு நான் சீக்கிரமா வந்திருவன் அப்புறம் நாம நெறைய பேசலாம் ok”
“சரி தேவி”
“வர்றன் தங்கச்சி”
“சரிணா பத்திரமா போயிட்டு வாங்க”
இருவரும் காரில் சென்றனர்.
“என்னம்மா கல்யாணத்துக்கு முதல் ரெண்டு பேரும் ஒண்ணா போறது சரியாமா?”
“நீ எந்தக் காலத்தில குமாரு இருக்க. இந்தக் காலத்தில அவங்க ஒண்ணா போறது பெரிய விஷயமே இல்ல எனக்கு எம் புள்ளைங்க மேல நம்பிக்க இருக்கு அதுதான்அனுப்பி வைச்சன். தேவி ஏதோ பேசணும்னுதான் தான் விட்டுட்டு வர்றன்னு சொன்னா. வாழப்போற அவங்க பேசி அவங்க ரெண்டு பேரும் புரிஞ்சிக்கட்டுமேபா”
“சரிமா நான் கம்பனிய போய் பாத்திட்டு வர்றன்”
“சரிப்பா”
“மதி நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறன். வதனா நீயும் வாறியாடா”
“இல்ல பாட்டி நான் அத்தை கூட பேசிட்டு இருக்கன்”
“சரிமா” என்றபடி பாட்டியும் செல்ல வதனாவும் மதியும் பேசிட்டு இருந்தனர்.
வாங்க கார்ல போனவங்களப் போய்ப் பார்ப்போம்…..
காரில் மௌனமாக சென்றுகொண்டிருந்தனர் இருவரும். அப்போது கமலேஷ் தேவியைப் பார்த்து கேட்ட கேள்வியில் சட்டென்று வண்டியை நிறுத்தினாள் தேவி.
மல்லிகா நீலுவின் திட்டம் நிறைவேறுமா?
கமலேஷ் தேவியிடம் என்ன கேட்டான்?
காத்திருப்புத் தொடரும்………
Nice 🥰🔥
Thank you da😊