காத்திருப்பு : 20
நானும் உங்களோட உக்காரலாமா என்ற குரலில் திரும்பிய தேவி கண்டது தன்னவனைத்தான்.
“நீங்க எப்பிடி கமலேஷ் இங்க?”
“ஒரு பிரண்ட் வர்றன் என்னு சொன்னான் அப்புறம் வேலை வரலடா என்று சொல்லிட்டான். சரி கிளம்பலாம்னு பாத்தா நீ வர்ற அதுதான் பாத்திட்டு போலாம்னு வந்தன்”
“சரி வாங்க பிரண்ட்ஸ் இது கமலேஷ்வர் என்னோட வருங்காலக் கணவர். கமலேஷ் இவங்க என்னோட பிரண்ட்ஸ்.”
“hello”
“hi sir”
“sir எல்லாம் வேணாம் friendlyya பேசுங்கம்மா”
“சரி அப்போ அண்ணானு கூப்பிடுறம்”
“ok “
வதனா யாருனும் பேசாது அமைதியாக இருந்தாள். அதனைப் பார்த்த கமலேஷ்
“என்ன என்னோட செல்ல தங்கைச்சி அமைதியா இருக்கா?”
“ஒண்ணுமில்ல அண்ணா”
“சரி சரி சாப்பாட ஓடர் பண்ணலாம்” என்ற நீலூ பேரரை அழைத்து சாப்பிடுவதற்கு தேவையானதை சொன்னதும் சாப்பாடும் சீக்கிரமாக வந்தது. அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அங்கேதான் வதனாக்கு பிரச்சனை வந்தது. அனைவரும் spoon கொண்டு சாப்பிட வதனா கையால் சாப்பிட ஆரம்பித்தாள். இதனைப் பார்த்த நீலூ வாய்ப்பை பயன்படுத்தினாள்.
“என்ன வதனா இது கையால சாப்பிடுற? இது five star hotel இப்பிடி சாப்பிட்டா என்ன நினைப்பாங்க?”
அனைவரும் அப்போதுதான் வதனாவை கவனித்தனர். தேவியின் தோழிகளில் ஒருத்தியை நீலூ விலைபேசிவிட்டாள். அவளும் தன் பங்கிற்கு
“ஏன் தேவி அவங்கள கூப்டு வந்த பாரு டீசன்ட் இல்லாம சாப்பிடுறாங்க”
பேச வாயெடுத்த தேவியின் கையைப் பற்றிய வதனா எதுவும் பேசாத என்று தலையசைத்தவள். அவளுக்குத் தெரியும் நீலூ இப்ப இங்க நடந்தத அப்பிடியே மல்லிகாட்ட சொல்லும் அவங்க வீணா தேவி கூட பிரச்சனை பண்ணுவாங்க என்று அதனாலதான் தேவியை அமைதியாக இருக்கும் படி தலையசைத்தாள்.
“வதனா வா நாம போலாம் அவங்க டீசண்டா சாப்டட்டும்”
“இல்ல அண்ணா பரவால்ல நீங்க எல்லோரும் சாப்டு வாங்க நான் வெளில இருக்கன்”
“தேவி வதனாவ கூட்டிட்டு வா போலாம் ” என்ற கமலேஷ் ” நீங்க இங்க இருந்து டீசண்டா சாப்பிடுங்க என்றவன் பக்கத்து டேபிளுக்கு செல்ல எழ,
“வேண்டாம் அண்ணா இங்கையே சாப்பிடலாம்” என்றவள் யாரும் எதுவும் சொல்லவருவதற்கு முன் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தாள். தேவியும் அவள் பின்னால் செல்ல எழுந்தவள்
வதனாவை பேசிய தன் தோழியிடம்
“உங்கிட்ட இருந்து இப்பிடி எதிர்பார்கல என்னோட முகத்திலே முழிக்காத.” பிரண்ட்ஸ் நான் உங்களுக்கு அப்புறமா போன் பண்றன்” என்றவள் வெளியே வந்தாள்.
“ஏன் வதனா என்ன பேச விடல?”
“என்னால வீணா ஏன்டி பிரச்சனை அதுதான் சரி போலாமா அண்ணா எங்க?”
“இங்க இருக்கன் என்றவன் கையில் ஜஸ்கிறீமுடன் வந்து வதனாக்கும் தேவிக்கும் கொடுத்தான். இருவரும் சாப்டதும் அனுப்பி வைத்தான்.
ஹோட்டலில் நடந்தவற்றை நீலூ தாயிடம் சொல்லி பாராட்டைப் பெற்றாள். வதனா தனக்குள்ளே கவலையை வைத்துக்கொண்டாள். அன்றைய நிகழ்வுக்கு பிறகு அவள் வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை.
நாட்களும் சென்றது தேவி கமலேஷ் காதல் சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. மதியும் வதனாவை புகழ்ந்துகொண்டே இருந்தாள்.
மல்லிகாவும் நீலூவும் வதனாவைப் பழி வாங்குவதற்காக தக்க சமயத்தை எதிர் பார்த்திருக்க சூர்யாவும் தாய் நாட்டுக்கு வரவேண்டிய நாளும் வந்தது.
“குமார் சூர்யாவ அழைச்சிட்டு வர யாருப்பா போவா?”
“நான் போறன்னு சொன்னன்மா ஆனா கமலேஷ்தான் தான் போய் கூட்டிட்டு வர்றன்னு சொன்னாரு”
“சரிப்பா கமலேஷ் போய்டானாப்பா?”
“ஆமாம்மா இந்நேரத்துக்கு வந்திட்டு இருப்பாங்க “
“சரிப்பா “
Colombo airport ……
ஆறடி உயரத்தில் பேரழகனாய் வரும் தன் நண்பனை பார்தபடி நின்றிருந்தான் கமலேஷ். அவனருகே வந்த சூர்யா “டேய் நான் தேவில்லை தேவியோட அண்ணன்டா இப்பிடி பார்க்குற”
“மச்சான் ” என்றவன் தன் நண்பனை கட்டியணைத்தான். நீண்ட நாட்களுக்குப்பின் பார்ப்பதால் நண்பர்கள் இருவரும் சில நிமிடங்கள் அணைத்தபடியே இருந்து பின் விலகினர்.
“போலாமா சூர்யா”
“போலாம்டா”
“சரி வாடா”
“ஏன் அப்பா வரல?”
“நான்தான்டா நீங்க வராதீங்க மாமா நானே கூப்டு வர்றன்னு சொன்னன்”
“சரிடா “
இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கார் சத்தத்தில் எல்லாரும் வெளியே வந்தனர். தன் மகனைக் கண்ட மதியின் கண்கள் பனித்தன.
“சூர்யா ” என்றார் கரகரத்த குரலில்
“அம்மா ” என்றவாறு வந்து தாயை அணைத்தவன். தாயின் கண்ணீரைத் துடைத்தான்.
“வதனா ஆர்த்தி தட்ட எடுத்திட்டு வாமா”
“எதுக்குப் பாட்டி இது “
“சும்மா இரு சூர்யா எங்கேயோ இருந்து வந்தவளுக்கெல்லாம் ஆர்த்தி எடுத்துதானே உள்ள கூட்டி வந்தாங்க நீ இந்த வீட்டு புள்ளதானே உனக்கெடுக்காம இருந்தா நல்லா இருக்காது”
“அத்தை என்னோட அம்மாக்கு எது சரினு தெரியும் அவங்களுக்கு யாருக்கு எடுக்கணும்னு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்க”என்று சத்தமிட வீட்டினுள்ளே இருந்த வதனா அவனின் சத்தத்தை கேட்டு பயந்தே விட்டாள்.
(சூர்யாக்கு மல்லிகாவின் குணம் தெரியும் அதனால்தான் அவன் அப்பிடி சொன்னான்)
“வதனா என்னமா செய்ற?”
“இதோ வந்திட்டன் அத்தை என்றவாறு ஆர்த்தி தட்டுடன் வந்தவளை இமையசைக்காது பார்த்தான் சூர்யா.( மனதிற்குள் பட்டிக்காட்ல இருந்து வந்தவ மாதிரி இல்லையே இவ இப்பிடி அழகா இருக்காளே)
“கொடும்மா ” என்றவர் சூர்யாக்கு ஆர்த்தி எடுக்க போகும் போது
“நிறுத்துங்க”
“ஏய் என்னடி தேவி “
“நான்தான் அண்ணாக்கு ஆர்த்தி எடுப்பேன்”
“அண்ணா கல்யாணமாகி வரம்போது நீ எடுடி”
“பரவால்ல நானே எடுக்கன்”
“தேவி…”
“விடுங்க அம்மா தேவிமாவே எடுக்கட்டும்”
“அது என்னோட செல்ல அண்ணா” என்ற தேவி ஆர்த்தி தட்டை வாங்கி ஆர்த்தி எடுக்க மதிக்குப் பக்கத்தில் வர அவருக்கு அருகில் நின்ற வதனா சூர்யாக்கு அருகில் நின்றாள்.
தேவி சூர்யா வதனா இருவருக்கும் சேர்த்தவாறு ஆர்த்தி எடுக்க இதனைக் கண்ட ஒரு ஜோடி விழிகள் புன்னகை பூக்க இரு ஜோடி விழிகள் அனலை கொட்டியது.
“தேவி நீ போய் ஆர்த்திய கொட்டிட்டு வாடா”
“சரிபாட்டி “
“நீ உள்ள வா சூர்யா”
“சரி பாட்டி ” என்றவாறு அவன் உள்ளே செல்ல வர அப்போது வதனா சீக்கிரம் வாடா சமையல் கொஞ்சம் செய்யணும் என்று மதி அழைக்க அவளும் உள்ளே செல்ல வர ஒரே நேரத்தில் சூர்யாவும் வதனாவும் வீட்டினுள் நுழைந்தனர். வதனா எதையும் பார்க்காது சமையலறைக்குச் செல்ல சூர்யா
“நான் போய் குளிச்சிட்டு வர்றன் எனக்கு குடிக்க ஏதாவது றூமுக்கு அனுப்புங்க மா கமலேஷ் இருடா வர்றன் பாட்டி அப்பா குளிச்சிட்டு வர்றன்” என்றவன் தனது அறைக்குச் சென்றான். ஏனையோர் hallல் இருந்தனர்.
“அம்மா என்னமா சூர்யா இப்பிடி பேசுறான்?”
“ஆமாடி இவனுக்கு குறுக்கு வழிதான் சரி இரு பாத்துக்கலாம்”
என்று மல்லியும் நீலூவும் தமது அறைக்குள் இருந்து பேசிக்கொண்சிருந்தனர்.
இங்கே hallல்…..
“என்னம்மா எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க?”
“ஆமா குமாரு இப்ப நடந்ததை கவனிச்சயா?”
“என்ன நடந்தது?”
“பாட்டிமா நான் கவனிச்சன்”
“என்ன கமலேஷ் கவனிச்ச ?”
“சூர்யா வதனாவ பார்த்து ஜெர்க்காகி நின்னத்த”
“ஓ அப்பிடியா அதுமட்டுமில்ல கமலேஷ். தேவி ஆர்த்தி எடுக்கும் போது ரெண்டு பேரும் ஒண்ணா எடுத்தா அதுமட்டுமில்ல ரெண்டுபேரும் ஒண்ணாத்தான் வீட்டுக்குள்ள வந்தாங்க “
“பாட்டி நீங்க பெரிய ஆளுதான் போங்க”
“அம்மா அப்பிடி நடந்தா சந்தோசம்தான்”
“ஆனா என்னோட தோழி பாவம் அப்பா”
“ஏன் என் புள்ளைக்கு என்ன கொறச்சல்?”
“அப்பா வதனா கோவம்னா என்னனு கேக்கிறவ அண்ணாக்கு கோவத்த தவிர எதுவும் தெரியாது அப்பா பிறகு எப்பிடி?”
“கடவுள் என்ன நெனச்சிருக்காருனு யாருக்கும் தெரியா தேவிமா”
“அம்மா நீங்க சுந்தரத்துகிட்ட பேசிப்பாருங்கம்மா”
“சரிப்பா தேவி கல்யாணம் முடிஞ்சதும் பேசிருவம்”
சமையலறையில்………
“வதனாமா இந்த ஜூஸை சூர்யாக்கு கொடுத்திட்டு வர்றியாமா?”
“நானா அத்தை தேவி கொடுக்கட்டுமே”
(சூர்யா சத்தமிட்டதைக் கேட்டதிலிருந்தே அவனைப் பார்த்து பயந்தாள் வதனா அவளால் எப்பிடி அவனுக்கு ஜூஸ் கொண்டுபோக முடியும்?)
“இல்லம்மா மாப்பிள்ளை இருக்காரு எல்லாரும் பேசிட்டு இருக்காங்கடா”
“சரி அத்தை குடுங்க”
“அவன் சத்தம் போட்டதில பயந்திட்டியாடா பயப்படாத வதனா அவன் எவ்வளவு கோவக்காரனோ அவ்வளவுக்கு பாசமானவன். சரியா”
“சரி அத்தை” என்றவள் ஜூஸை எடுத்துக்கொண்டு வதனா மாடியிலிருக்கும் அவன் அறைக்குச் சென்றாள். இதனை hallல் இருந்து பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.
சூர்யாவின் றூம் கதவைத் திறந்து உள்ளே வந்த வதனா அதிர்ச்சியில் ஜூஸை தவறவிடப்போனாள்………
வதனாவின் அதிர்ச்சிக்கு காரணம் என்ன???
காத்திருப்புத் தொடரும்……….
🥰🥰🥰
❤️❤️❤️
👍🙂👍
❤️❤️❤️