வருவாயா என்னவனே : 21

4.6
(11)

காத்திருப்பு : 21

சூர்யாவின் அறைக்கதவைத் திறந்த வதனா பதற்றத்தில் ஜூஸ்ஸை தவறவிட்ப்போக அதனைப் பார்த்த சூர்யா விரைந்து வந்து ஜூஸைப் பிடித்தான்.

“ஏய் என்னாச்சினு ஜூஸ்ஸை கீழ போடப் பார்த்த?”

அவனைக்கண்டதிலேயே பயந்த வதனா அவன் சத்தமிட்டதும் அழத் தயாரானாள்.

“ஸ்… ஏன் இப்ப அழப்பாக்குற?”

“நீ….ங்…..க…..ஏ…..ன்.. இ….ப்….பி…டி….நி…..க்….கு…றீ…..ங்…..க?”

“எப்பிடி ” என்றவன் அப்போதுதான் தன்னைப் பார்த்தான். குளித்துவிட்டு இடையில் கட்டிய துண்டுடன் இருந்தான். குளித்ததற்கு அடையாளமாக வெற்றுமார்பினில் காணப்பட்ட நீர்த்துளிகளுடன் இருந்தான்.

பின்பு வதனாவைப் பார்க்க அவளோ அவனைப் பார்க்காது திரும்பி நின்றாள். இவளுக்கு என்னாச்சி ஏன் இப்பிடி குனிஞ்சிட்டு நிக்கிறாள் என நினைத்தவன்

“ஏன் குனிஞ்சிட்டு நிக்கிறா நிமிர்ந்து என்ன பாரு”

“இல்லங்க……….நீங்க…… இப்பிடி…. இருக்கும்…… போது…… எப்பிடி?…… நான்……. போறன்க……”

“இதுக்கென்ன நல்லாதான் இருக்கன்.”

“எங்க…ஊரில….. இப்பிடி…… இருக்கமாட்டாங்க…. எனக்கு…… ஒரு….. மாதிரி……இருக்கு ” என்றாள்ள குனிந்தபடியே நின்று.

“ஓ…பட்டிக்காட்டில இப்பிடி இருக்கமாட்டாங்கதான் ஆமா நீ படிச்சிருக்கியா?”

“படிச்சிருக்கன். நான் போறன்க”

“சரி போ “

அம்மாடியோ ஒரு வழியா வந்திட்டம் என்றபடி கீழே வந்தாள். அங்கு சூர்யாவோ இவ என்ன ரொம்ப வித்தியாசமா இருக்கா முகத்த பார்த்துக்கூட பேசுறா இல்ல. சரி நம்ம வேலைய நாம பாப்பம் என்றவன் ரெடியாகச் சென்றான்.

கீழே மதியிடமும் வதனா சூர்யா பற்றி பேசியிருந்தனர் அனைவரும். மதிக்கும் வதனா தனது மருகளாவது விருப்பமே.

“கமலேஷ் போலாமா”என்றபடி வந்தான் சூர்யா.

“ம்… போலாம்டா “

“மா பாட்டி நான் வெளில போயிட்டு வர்றன்.”

“சரிப்பா பாத்து போயிட்டு வா சாப்பிட வந்திருங்க ரெண்டுபேரும்.”

“சரி ” என்றபடி இருவரும் சென்றனர்.

மதி சூர்யாக்கும் கமலேஷ்கும் பிடித்த உணவையே சமைப்பதற்காகச் செல்ல வதனா உதவச் சென்றாள்.

“தேவிமா பத்திரிக்கை குடுத்து முடிஞ்சிதாமா?”

“ஆமாப்பா எல்லோருக்கும் குடுத்திட்டன்.”

“சரி தேவி நீ போய் ரெஸ்ட் எடு நாளையில இருந்து வீட்ல நம்ம சொந்தக்காரங்க வர ஆரம்பிச்சிருவாங்கடா “

“சரி பாட்டி “

“அம்மா சுந்தரம் எப்ப வர்றாங்களாம்?”

“மூணு நாள்ல வந்திருவாங்கப்பா”

“சரிமா நான் போன் பேசணும் பேசிட்டு வர்றன்”

“சரிப்பா நானும் போய் கொஞ்சம் தூங்கப்போறன் உடம்பு அசதியா இருக்கு”

“சரிமா”

காரில்………

“சூர்யா எங்க போறம்டா?

“சும்மாதான் மச்சான் ரொம்பநாளாச்சே நம்ம ஊர பார்த்து அதுதான் சும்மா ஒரு லோங்ரைவ்”

“அப்புறம் மச்சான் பாரின் எப்பிடி?”

“பரவால்லடா மச்சான் நம்ம ஊரப்போல வருமாடா?”

“அதென்னவோ உண்மதான்டா “

“மச்சான் வதனா இருக்காளே அவ பேசவே பயப்படறாடா”

“அவ கிராமத்தில வளர்ந்த பொண்ணுடா அதுதான் அப்பிடி இருக்கா ஆனா எங்கூட அண்ணா அண்ணானு நல்லா பேசுவாடா”

“ஓ…. அப்பிடியா” என்று கமலேஷைப் பார்த்தபடி கூறியவனின் காரில் ஒரு மோட்டார்சைக்கிள் வந்து மோதியது.

“யார்டா அது”

“தெரியல மச்சான் இறங்கு பார்ப்பம்”

“ஏய் யாரு நீ ஏன் என்னோட வண்டில வந்து விழுந்த?”

“நா….ன்…யா…ரா…? …நீ….யா…ரு…டா?”

“அடேய் இவன் குடிச்சிட்டு வந்து வண்டிய ஓட்டிருக்கான்டா “

“ஆமாடா வா போலாம்”

“ஏ….ய்…. எ….ங்….க….. போ…..ற…..” என்றபடி சூர்யாவின் கையைப் பிடித்தவன் சூர்யா மீதே வாந்தி எடுக்க சூர்யா தன் நெற்றிக்கண்ணை திறந்தே விட்டான்.

“டேய்…. சீ…. குடிச்சா வீட்ல இரண்டா நாயே “

“ஏ….ய்….. யா….ரு….டா……நா….ய்…..நீ…தா…ன்…டா…..நாயி.”

“பளார்” வேற யாரு சூர்யாதான் அடித்துவிட்டான்.

“மச்சான் போலாம் வாடா”என சூர்யாவைப் பிடித்தான் கமலேஷ்.

தன் சேட்டைக் கழற்றி வீசிய சூர்யா மேலும் அவனை அடிக்க போனான். கமலேஷ்தான் இழுத்துவந்து காரினுள் அமர்த்தி தானே காரை ஓட்டினான். குறையாத கோபத்துடன் காரில் இருந்தான் சூர்யா. கமலேஷ்க்கு சூர்யாவை பார்க்கவே பயமாக இருந்தது.

வீட்டில்……

“வதனாமா போய் தேவிய கூட்டிட்டு வாடாம்மா”

“சரி அத்தை” என்றவள் தேவியைப் போய்ப் பார்க்க தேவி நித்திரையிருந்தாள். வதனா எவ்வளவு முயன்றும் தேவி எழவில்லை. என்ன செய்வது என்று யோசித்த வதனாவின் கண்களில் பட்டது தண்ணீர்போத்தல். புன்னகையுடன் தண்ணீரை எடுத்து தேவியின் முகத்தில் ஊற்ற தேவி, 

“ஐயோ வீட்டுக்குள்ள மழை” என கத்தியபடி எழுந்தவள் வதனைவைக் கண்டதும் நடந்தது விளங்க கண்ணிமைக்கும்நேரத்தில் அருகிலிருந்த மற்றைய தண்ணீர் போத்தலால் வதனாவைக் குளிப்பாட்டினாள்.

மீண்டும் வதனா தேவிக்கு நீரூற்ற தண்ணீர் போத்தலுடன் துரத்தினாள். வதனாவிடம் சிக்கிடாமல் கீழே ஓடினாள். அவளை துரத்தியபடி வந்தாள் வதனா.

அப்போது காரை நிறுத்திவிட்டு வீட்டினுள்ள வந்தனர் கமலேஷ்ம் சூர்யாவும். தேவிக்கு வதனா தண்ணீர் ஊற்ற வர தேவி விலகவும் சூர்யா மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.

“அடியாத்தி ஏற்கனவே ரொம்ப சூடா வந்தானே இப்ப என்ன நடக்கப்போகுதோ” என கமலேஷ் நினைத்துக்கொண்டிருக்கும் போதே சூர்யா வதனாவை அறைந்துவிட்டான்.

அதிர்ந்து நின்றவளிடம்

” ஏய் பட்டிக்காடு அறிவில உனக்கு வந்தமா இருந்தமா போனமானு இருக்காம உன்னோட இஸ்டத்துக்கு விளையாடிட்டு இருக்க. சீ…. போ…. அங்கிட்டு ” என்றவன் அவளைத் தள்ளிவிட அவன் அடித்ததால் அதிர்ந்து நின்றவள் அவன் பேசிய வார்த்தைகளால் காயப்பட்டாள்.

அப்போது சூர்யாவை அறைந்தது ஒருகை.

“பாட்டி”

“பாட்டிதான் உன்னோட பாட்டிதான்டா என்னடா இது பொண்ணுமேல கைநீட்டுற”

“அவ என்மேல தண்ணி ஊத்தினா பாட்டி”

“அவ தேவி மேல ஊத்த வந்தாள் நீ எதிர்ல வந்ததால உனக்கு பட்டுடிச்சி அதுக்காக அவள அடிப்பியாடா”

“என்னவிட எங்கேயோ இருந்து வந்தவள் உங்களுக்கு முக்கியமா போயிட்டாளா?”

“ஆமாடா எனக்கு வதனாதான் முக்கியம் தனியா நான் அங்க இருக்கும் போது அவதாண்டா என் கூடவே இருப்பா.”

“பாட்டி விடுங்க “

“நீ சும்மா இரு வதனா. சூர்யா நீ அடிச்சதுக்கும் அவள பேசினதுக்கும் வதனாக்கிட்ட மன்னிப்பு கேளு”

“வாட்? என்ன? நான் போயும் போய் இவகிட்ட மன்னிப்பு கேக்கணுமா முடியாது பாட்டி”

“மன்னிப்பு கேளு சூர்யா”

“பாட்டி வேணாம் விட்டுடுங்க பாட்டி என்மேலதான் தப்பு பாட்டி. அவங்க மேல தப்பில்ல”

“சூர்யா நீ மன்னிப்பு கேட்டா இங்க இருப்பன் இல்ல நான் ஊருக்கே போறன் வா வதனா போலாம்”

“பாட்டி “

“நீங்க போக வேணாம் நான் மன்னிப்பு கேக்கிறன் மன்னிச்சிரு வதனா” என்றவன் அடுத்தநொடி தனது அறையிலிருந்தான்.

கண்கள் குளமாக நின்ற வதனா அருகில் சென்ற கமலேஷ்.

“அவன் பண்ணதுக்கு நானும் மன்னிப்பு கேட்டுக்கிறன்மா”

“என்னண்ணா நீங்க எங்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு அத விடுங்கண்ணா நான் போய் ரெஸ்ஸ மாத்திட்டு வர்றன்.

“சரிடாமா எதுவுமே பேசாது அசையாது நின்ற தேவியை உலுக்கியவன் வதனாவ கூட்டிட்டு போ தேவி நீயும் ரெஸ்ஸ மாத்திட்டு வா” என அனுப்பி வைத்தவன் சூர்யா அறைக்குச் சென்றான்.

“அம்மா என்னம்மா சூர்யா இவ்வளவு கோவக்காரனா இருக்கான்?”

“அவன் அப்பிடியே பாட்டிக்கிழவி போல நீலூ. அந்தக் கிழவிக்கும் கண்ணுமண்ணு தெரியாம கோவம் வரும். நான் என்ன பிளான் வேணாலும் பண்ணி உன்ன இந்த வீட்டு மருமகளாக்கிறன் நீலூ”

“சரிமா நான் மட்டும் மருமகளாகட்டும் அப்புறம் இருக்கு அந்த தேவிக்கும் கிழவிக்கும்”

சூர்யா அறையில்……..

“டாமிற் என்னயவே மன்னிப்பு கேக்க வச்சிட்டல உன்ன சும்மா விடமாட்டன்டி உன்ன அழவச்சே தீருவான்டி இந்த சூர்யா என சபதமிட்டவன். அறையிலிருந்த பொருட்களை போட்டு உடைத்தான்.

“என்ன சூர்யா இது”

“நீ எதுக்குடா வந்த”

“டேய் போ போய் முதல்ல குளி அந்த குடிமகன் வேற உன்மேல அபிஷேகம் பண்ணிட்டான் “

“இருடா வந்து இருக்கு உனக்கு” என்றவன் குளியலறைக்குச் செல்ல கமலேஷ் வேலைக்கார பையனை அழைத்து றூமை சுத்தம் செய்தான்.

வதனா அறையில்…….

“sorry வதனா என்னாலதானே அண்ணா உன்ன அடிச்சிட்டாரு”

“ஏய் தேவிமா உன்னால எதுவும் இல்லம்மா அவரு யாருமேல உள்ள கோபத்தையோ என்கிட்ட காட்டிட்டாரு அதவிடு நான் குளிச்சிட்டு வர்றன் நீயும் குளிச்சிட்டு வா”

“சரி வதனா “

குளியலறையில் தண்ணீரின் அடியில் நின்றவள் கதறி அழுதாள். தன் கண்ணீரையும் கவலையையும் யாரிடமும் காட்டாதவள் தண்ணீரிலே கரைத்தாள்.

“நான் கிராமத்தில பிறந்தது ஏன் தப்பா? கிராமம் என்டா ஏன் இப்பிட கேவலமா பேசுறாங்க? பட்டிக்காடு….பட்டிக்காடு……

பட்டிக்காடு இந்த வார்த்தைய வந்ததில் இருந்து கேட்டவள் இப்போ சூர்யாவும் அதையே சொல்ல அந்த வார்த்தையையே வெறுத்தாள்.

“சீக்கிரமா நாம இங்க இருந்து போயிடணும். இனிமேல் அவரு கண்ணுல படவேகூடாது” என முடித்தவள் குளித்துவிட்டு வெளியே வர தேவி வரவும் சரியாக இருந்தது.

“தேவி நான் உன்னோட மடியில கொஞ்சம் தூங்கட்டுமா? அம்மா ஞாபகமாவே இருக்குடி”

“என்ன வதனா நீ அதை கேக்கணுமா வாடி” என்றவள் கட்டிலில்ல அமர்ந்து தான் தாயாக மாறி வதனாவை மடியில் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தாள்.

(நண்பர்களிடமும் தாயை எம்மால் உணர முடியும்.)

“சூர்யா பாவம்டா வதனா”

“என்னடா நீயும் அவளுக்கு சப்போட் பண்ற நான் எப்பவாவது யார்க்கிட்டையாவது மன்னிப்புக்கேட்டு நீ பாத்திருக்கியாடா? சொல்லுடா “

“இல்லடா “

“அப்பிடிப்பட்ட என்ன அவகிட்ட மன்னிப்பு கேக்க வச்சிட்டாளேடா”

“டேய் பாட்டிதான்டா கேக்க சொன்னாங்க அவள் சொல்லலயேடா?”

“அவகிட்டதானே கேட்டன். என்னோட வாழ்க்கையிலேயே இன்னைக்குத்தான்டா முதல் தடவ மன்னிப்பு கேட்டிருக்கன் “

“அதுக்கென்னடா இப்போ எதுக்கும் முதல்தடவ என்று இருக்குடா விட்டுட்டு வேலைய பாருடா பிரச்சனைய பெருசாக்காம”

“என்ன நான் விடணுமா இந்த சூர்யா யாருனு காட்டுறன்டா அவளுக்கு”

“டேய் அவ பாவம்டா”

“போடா நான் சொன்னா சொன்னதுதான்”

“வேணாம் சூர்யா வேற ஏதும் புதுப்பிரச்சனை வரப்போகுதுடா.”

“பரவால்லடா எது வந்தாலும் பரவால்ல அவ இதுக்கு பதில்சொல்லியே ஆகணும்”

” வதனா பாவம்டா ஆவளுக்கு ஒண்ணுமே தெரியாதுடா”

“ஆமா பச்சைமண்ணு போடா அவளுக்கு பாடம்கத்துக்குடுக்காம விட்டா நான் சூர்யா இல்லடா”

அவனை சமாதானப்படுத்துவது தெரியாமல் நின்றான் கமலேஷ்.

“அம்மா என்ன சொல்றீங்க சூர்யா வதனாவ அடிச்சிட்டானா? அவன என்ன பண்றன்னு பாருங்க” என்று எழ

“இரு குமாரு சூர்யாவை நான் வதனாகிட்ட மன்னிப்பு கேட்க வைச்சிட்டன்”

“அம்மா சூர்யா மன்னிப்பு கேட்டானா?”

“கேக்கமாட்டன்ணு சொன்னான் நீ கேக்கலனா நான் வதனாவ கூட்டிட்டு ஊருக்கு போயிருவன்னு சொன்னன். அதுக்கப்புறம்தான் கேட்டான்”

“அம்மா அவன் இதுவரைக்கும் யார்கிட்டையும் மன்னிப்பே கேட்டதில்லமா”

“சரி விடுப்பா எப்பவும் அப்பிடியே இருக்கமுடியாதில்ல”

“அதுவும் சரிதான்மா”

“அத்தை வாங்க சாப்பிடலாம் நீங்களும் வாங்க”அவர்களை அழைத்த மதி கீழே இருந்து சூர்யா கமலேஷ் தேவி வதனா எல்லோரும் சாப்பிட வாங்க என அழைத்தாள்.

சூர்யாவும் கமலேஷூம் வந்தனர்.

“வதனா எழுந்திரு அம்மா சாப்ட கூப்டாங்க”

“எனக்கு வேணாம் தேவி நீ சாப்டு” என்றவள் கட்டிலில் சரிந்து படுத்தாள்.

“வா வதனா பிளீஸ்”

“எனக்கு பசிக்கலடா நீ சாப்டு போ கமலேஷ் அண்ணாவேற இருக்காங்க போடி நான் அப்புறம் சாப்ட வர்றன்” என்றவள் தேவியை கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தாள்.

“என்ன தேவி நீ மட்டும் வர்ற வதனா எங்க?”

” அவளுக்கு பசிக்கலயாம்மா. தூங்கப்போறாளாம். நான் எவ்ளோ சொல்லிப் பாத்தன் வரலமா”

“நான் போய் கூப்டு பாக்கட்டுமா?”

“மதி”

“அத்தை”

“அவள விடும்மா அவ தூங்கட்டும். அப்புறம் சாப்டட்டும்”

“சரி அத்தை” என்றார் பின் அனைவரும் சாப்டபின் சூர்யாவுக்கு போன் வர அவன் எழுந்து சென்றான். கமலேஷூம் வேலை இருக்கு அப்புறம் வர்றன் என்று செல்ல மதி பாட்டி தேவி குமார் அனைவரும் நீண்ட நேரம் வதனா பற்றியும் தேவி கல்யாணம் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தனர். பின் தேவி

“அம்மா நான் போய் வதனாவ பாத்திட்டு வர்றன் “

“சரிமா பாத்திட்டு வா சாப்பாடு அங்க எடுத்துட்டு போறியா?”

“இல்ல மதி அவள பாத்திட்டு வந்து எடுத்திட்டு போகட்டும் நீ போய் பாரு தேவி அவ வர முடியாதுனு சொன்னா நீ சாப்பாட எடுத்திட்டு போ. கொஞ்சம் பாத்துக்கோமா தேவி வதனாவ என்னால மாடிப்படி ஏற முடியாது இல்லன்னா நானே பாத்துக்குவன்”

“என்ன பாட்டி நீங்க அவள் என்னோட தோழி நானே பாத்துக்கிறன்” என்று வதனா அறைக்குச் சென்ற தேவி

“அம்மா” என கத்தினாள்.

தேவி கத்தக் காரணம் என்ன????

வதனாவை பழிவாங்குவானா சூர்யா???

காத்திருப்புத் தொடரும்………………..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “வருவாயா என்னவனே : 21”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!