காத்திருப்பு : 22
தேவியின் அம்மா என்ற குரலுக்கு மதியும் குமாரும் ஓடி வந்தனர்.
“என்னம்மா தேவி ஏன் இப்பிடி கத்தின?”
“இங்க பாருமா வதனா முகத்தை” வதனாவின் மதிமுகத்தில் சூர்யாவின் ஐந்துவிரல்களும் பதிந்து கன்னம் வீங்கி இருந்தது.
“என்ன மதி இரு இப்பிடி அறைஞ்சிருக்கான். தேவி முதல்ல கமலேஷ்கு போன் பண்ணி வதனா பற்றி சொல்லி சீக்கிரமா வரச்சொல்லுடா”
“சரிப்பா”
“அவனுக்கு கோவம் வந்தா இப்பிடித்தாங்க. இருங்க அத்தைட்ட சொல்லிட்டு வர்றன். இந்த தேவி சத்தம்போட்டதில பயந்திருப்பாங்க”
“ஹலோ கமலேஷ்”
“சொல்லு தேவி “
“வதனா பற்றிச் சொன்னவள் சீக்கிரமா வாங்க”
“இரு வர்றன்” என்றான்.
“என்ன மதி ஏன் தேவி கத்தினா வதனாக்கு என்னம்மா?”
“அ..த்…த…. அ…து…வ…ந்…து… சூர்யா அடிச்சதில வதனா கன்னம் வீங்கிருக்குப் பாட்டி”
“வதனாவ அவ அப்பாகூட அடிச்சதில்ல. என்ன நம்பித்தானே சுந்தரம் அவள அனுப்பிவைச்சான் இப்ப என்ன செய்ற டாக்டர வரச்சொல்லிட்டயா?”
“ம்…கமலேஷ் வர்றன்னு சொன்னான்” எனும்போதே “பாட்டி எங்க வதனா?” எனக் கேட்டவாறு வந்தான் கமலேஷ்.
“வாப்பா மேல வதனா றூம்ல இருக்கா வா”
“சரி அத்தை”
வதனா அறையில்……
வதனாவைப் பார்த்த கமலேஷ் அதிர்ந்தேவிட்டான். “எப்பிடி அடிச்சிருக்கான் பாரு இருடா வர்றன் உனக்கு” என நினைத்தவன். வதனாவின் கன்னத்தை தொட்டான். அவனது தொடுதலில் வலியினால் “அம்மா” என சொல்ல வாயசைத்தாள் ஆனால் வாயைத் திறக்க முடியவில்லை.
வதனாவை இப்பிடி பார்த்த தேவி அழுதாள்.
“வதனா கொஞ்சம் கண்ண திறம்மா” மெதுவாக கண் விழித்தாள் வதனா.
“கொஞ்சம் இரும்மா ” என்ற கமலேஷ் அவளை பரிசோதித்துவிட்டு வலிதெரியாமல் இருக்க ஊசி போட்டான். கன்னத்தில் பூச மருந்தும் கொடுத்தான்.
“வதனா சாப்பிட ஏதும் கொண்டு வரயாடி”
“”வேண்டாம்” என்று தலையசைத்தாள்.
” தேவி சாப்பாடு அவளால சாப்பிட முடியாது ஜூஸ் எடுத்து வா யாரும் அவள டிஸ்ரப் பண்ண வேணாம் அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.”
“சரி கமலேஷ் வா மதி போலாம். வதனா அவனுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறம்மா”
“தலையை அசைத்து வேண்டாம் “என்றாள்.
“நாங்க அப்புறம் வர்றம்மா”
தேவி ஜூஸ் எடுக்கச் செல்ல கமலேஷ் சூர்யாவைப் பார்க்கச் சென்றான்.
சூர்யா அறையில்……
“டேய் சூர்யா வதனாவ பார்த்தியாடா?”
“நீ போகலயா மச்சான் வா வா என்ன கேட்ட அவள பாக்கலனா அவள ஏன்டா நான் பாக்கணும்?”
“ம்…. நீ அறைஞ்ச அறையில அவ கன்னம் வீங்கிருக்குடா உன் விரல் ஐஞ்சும் பதிஞ்சிருக்கு பாக்கவே பாவமா இருக்குடா “
“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”
“உனக்கு இவ்வளவு கோவம் நல்லதுக்கில்லடா அவ ரொம்ப நல்ல பொண்ணுடா”
“உனக்கு எப்பிடித் தெரியும் அவ நல்ல பொண்ணுனு?”
“தெரியும்டா சூர்யா உனக்கு ஒன்னு தெரியுமா என்றவன் தேவியை பற்றி நர்ஸ் பேசியதையும் அதுக்கு வதனா செய்ததையும் சொன்னவன். இப்ப சொல்லுடா அவ கெட்டவளா? நீ இப்பிடி இருக்க மாட்டியே சூர்யா என்னாச்சி சூர்யா உனக்கு?”
“இவ்வளவு நடந்திருக்கு ஏன்டா எங்கிட்ட சொல்லல. அந்த குடிகாரன்மேல இருக்கிற கோவத்தை இவ மேல காட்டிட்டன்டா”
“அது முடிச்சிபோச்சிடா நீ இவ்வளவு சின்ன விசயத்துக்கு இவ்வளவு கோபப்படமாட்டியேடா உனக்கு என்ன பிரச்சனை? எந்த உரிமையில அவள அடிச்ச?”
“தெரியல மச்சான் அவ என்ன டிஸ்ரப் பண்றாடா?”
“சூர்யா என்ன சொல்ற?”
“ஆமாடா எல்லோர்கூடவும் நல்லா பேசுறா என்ன பாத்து பயப்படுறாடா என்ன பாத்து வழியிற கேர்ல்ஸ்ஸ பார்த்திருக்கன்டா பட் இவ ரொம்ப வித்தியாசம்டா “
” மச்சான் என்னடா சொல்ற?”
“எனக்கு அவள பார்த்தா ஒரு வித்தியாசமான feel வருதுடா”
“என்ன மச்சான் லவ் பண்றியா?”
“தெரிலடா நான் நேற்றுதானே வந்தன் அதுக்குள்ள எப்பிடிடா?”
“மச்சான் லவ் எப்ப வரும் யார் மேல வரும்னு யாராலயும் சொல்ல முடியாதுடா”
“பார்க்கலாம் மச்சான் இது லவ்வானு”
“உனக்கு வதனாதான் மச்சான் என்றவன் நீ வந்தப்ப தேவி ஆர்த்தி எடுத்தது முதல் வீட்டினர் பேசியது வரை அனைத்தையும் சொன்னான். நீ வதனாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா ரொம்ப happyda ஆனா உன்னோட கோவத்த வதனா மேல எப்பவும் காட்டக்கூடாது”
“சரிடா மச்சான். “
( பாவம் சூர்யை தன் கோபத்தாலே தன்னவள் தன்னைவிட்டு போகப்போறாள் என்று தெரியாமல் சரினு சொன்னான்.)
“சரிடா நான் கெளம்புறன்டா”
“மச்சான் யார்கிட்டயும் இதப்பத்தி சொல்லாதடா”
“சரிடா மச்சான்”
“மச்சான் வதனாக்கு எப்பிடி இருக்கு?”
“அவளால வாயை திறக்கவே முடிலடா ஊசி போட்டிருக்கன் தேவிய ஜூஸ் குடுக்க சொல்லிருக்கன்டா சரிடா நான் அப்புறமா வர்றன்”
“சரிடா போய்டு வா”
“என்ன நான் அவள லவ் பண்றனா? அதெப்பிடி ரெண்டே நாள்ல சரி பார்க்கலாம். அவள போய் பார்க்கலாமா? இப்ப வேணாம் நைட் போலாம்” என யோசித்தவாறு இருந்தவன் தனது வேலையில் மூழ்கினான்.
தேவி கொடுத்த ஜூஸை குடிக்க முடியாமல் குடித்தாள் வதனா. சரி வதனா நீ தூங்கு நான் பக்கத்தில இருக்கன்.
“வேணாம் தேவி நான் இருந்துப்பன்”
“தேவி தேவி “
“என்னம்மா?”
“சாயந்தரம் கோவிலுக்கு போகணும்மா”
“இப்ப எப்பிடிமா வதனாவ விட்டுட்டு?”
“பரவால்ல தேவி நீ போயிட்டு வா நான் இருந்துப்பன்”
“வதனா தப்பாப நினைக்காதம்மா இவக்காக ஒரு பூஜை செய்யணும்மா கட்டாயம் போகணும்மா “
“ஐயோ அத்தை தப்பா நினைக்க ஒண்ணுமில்ல நீங்க போயிட்டு வாங்க நான் இருந்துப்பன்.”
“அம்மா போயிட்டு நைட்டுக்குள்ள வந்திரலாமா?”
“ஆமாடா வந்திரலாம் “
“யார் யாரு போறம்மா?”
“எல்லோரும் போகணும்மா நம்ம வள்ளிய வதனாவ பாத்துக்க வரச்சொல்லிருக்கன்மா வதனா மன்னிச்சிருமா சூர்யா இப்பிடி பண்ணிருக்காட்டி நீயும் வந்திருக்கலாம்”
“பரவால்ல அத்தை நீங்க மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு விடுங்க அத்தை நல்லபடியா போயிட்டு வாங்க”
“சரிமா தேவி போய் ரெடியாகுமா நான் சூர்யாகிட்டையும் சொல்லிட்டு வர்றன்”
“வதனா உன்ன விட்டுட்டு போக விருப்பமில்லடி”
“பரவால்ல தேவி கமலேஷ் அண்ணா வேற வர்றாங்க போயிட்டு வாடி”
“சரிடி ரெடியாயிட்டு வர்றன்”
“ம்…போடி”
“சூர்யா”
“என்னம்மா?”
“சாயந்தரம் கோவிலுக்கு போகணும் ரெடியாகு”
“யார் யாரு போறீங்க?”
“வதனாவ தவிர எல்லோரும் போறம் உன்னாலதான் இல்லன்னா வதனாவும் வந்திருப்பா”
“கோவத்தில அடிச்சிட்டன்மா நான் வரல நீங்க போயிட்டு வாங்க”
“ஏன் வரல?”
“எனக்கு ஒரு மீட்டிங் இருக்குமா”
“நீ வராம எப்பிடிடா சூர்யா? பிளீஸ்டா”
“சரி மீட்டிங் முடிஞ்ச பிறகுதான் வருவன் சரியா?”
“சரி நாங்க முன்னாடி போறம் நீ வந்திருடா”
“சரிம்மா”
மாலையானதும் எல்லோரும் கோவிலுக்குச் செல்ல ரெடியாகி வந்தனர். கமலேஷ் வரவும் வதனாவிடம் சொல்லிவிட்டு காரில் ஏறினர். சூர்யா வர்றன்னு சொன்னதால் மல்லியும் நீலூவும் கோவிலுக்குச் செல்ல வந்தனர். அனைவரும் அமர்ந்ததும் கார் கிளம்பியது.
சூர்யா தனது அறையில் ஸ்கைப்பில் மீட்டிங்கில் கலந்து கொண்டான். ஒருமணி நேரத்தின் பின்பே மீட்டிங் முடிந்தது. இதற்குப் பிறகு கோவிலுக்கு போக விரும்பாத சூர்யா தாயை அழைத்தான்.
“சொல்லுப்பா”
“அம்மா கோவிலுக்கு போயிட்டிங்களா?”
“ஆமாப்பா இப்பதான் வந்துசேர்ந்தம் நீ கிளம்பிட்டியா?”
“இல்லம்மா நான் வரல இப்பதான் மீட்டிங் முடிஞ்சிதுமா மழை வேற வர்ற மாதிரி இருக்குமா “
“அப்பிடியா சரிப்பா பத்திரமா இரு வதனாவ கொஞ்சம் பாத்துக்க என்றவர் முடிஞ்சா பாத்துக்கோடா என்று சேர்த்து சொன்னார். மேலும் அவள பாத்துக்க வள்ளிய சொன்னன். அவ வர்லயாம்னு சொல்லிட்டாப்பா. நாங்க வர மட்டும் பாத்துக்கோ.”
“சரிமா நான் வைக்கிறன்.”
சிலநிமிடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. சூர்யா காப்பி குடித்தான். அப்போது வதனாவின் நினைவு வர அவளுக்கும் காப்பி எடுத்துக்கொண்டு அவள் அறைக்குச் சென்றான். தூங்கும் அவளையே பார்த்தபடி இருந்தான் கன்னம் வீங்கி இருந்தது.
தனது ஐந்து விரலும் அதில் பதிந்திருக்க பார்த்தவன் மெதுவாக வதனா அருகில் அமர்ந்து அவளது கன்னத்தை தொட்டான். வலியில் முகத்தை சுளித்தாள் வதனா. அதைக் கண்டு வருந்திய சூர்யாவுக்கு தன் மீதே கோவம் வந்தது.
“வது (வதனா சூர்யாக்கு மட்டும் வது) எழுந்திரும்மா”
சூர்யாவின் குரலில் பதறி எழுந்தவள் தன்னருகில் இருப்பவனைக் கண்டதும் பயத்தில் நடுங்கினாள். அதைக் கண்ட சூர்யா
” பயப்படாத வது நான் ஒருத்தன் மேல இருந்த கோவத்தை உங்கிட்ட காட்டிட்டன் என்ன மன்னிச்சிடு”
சூர்யா வது என்று அழைத்ததை பயத்தில் வதனா கவனிக்கவில்லை.
“பரவால்லங்க விடுங்க” என்று கஸ்ரப்பட்டு பேசினாள்.
“காப்பி குடி வதனா”
( அது அவரு லவ்வ சொல்லிட்டுதான் வதுனு சொல்லுவாராம் அப்போ எமோஷன்ல சொல்லிட்டாராம்)
“சரி” வாங்கிக் குடித்தாள் வதனா.
“வதனா தூங்கப்போறியா கொஞ்சம் பேசலாமா?”
“பே…ச….லா…ம்…”
“ஏன் என்னப் பாத்து பயப்படற”
“நீ…ங்..க ச..த்..த..மா பே..சு..றீ..ங்..க அ…து…தா..ன் ப..ய..மா.. இ..ரு..க்…கு”
“சரி நான் உங்கிட்ட இனிமேல் மெதுவா பேசுறன் என்கூட பேசுறியா?”
“ம்… ஆ..னா.. நீ..ங்..க…ப.ட்…டி..க்…கா..டு..னு…. சொ…ல்..ல…க்..கூ..டா..து”
“சரி நான் இனிமேல் உன்ன கோவமா பட்டிக்காடுனு சொல்லாம செல்லமா சொல்றன் சரியா?”
“ச..ரி..”
இவங்க பேசட்டும் நாம கோவிலுக்கு போனவங்கள பார்க்கலாம் வாங்க
“அத்தை இன்னைக்கு ஒரு முனிவரு கோவிலுக்கு வர்றாராம் நாம பாத்திட்டு போலாமா?”
“சரிமா மதி பாத்திட்டு போலாம்”
அனைவரும் கோவிலில் அமர்ந்துபேசிக்கொண்டிருக்கும் போது முனிவர் வந்தார். வந்த முனிவர் கொஞ்சப்பேரை அழைத்து வாக்குச் சொன்னார். பின் தேவியை அழைத்தார். தேவி அம்மாவைப் பார்க்க “போ தேவி ” என்றார்.
“வாம்மா தேவி கணவனுடன் தீர்க்கசுமங்கலியாக நலமுடன் வாழ்வாய். “என்றவர் கமலேஷை அழைத்தார்.
“மனைவி மழலையுடன் மகிழ்வுடன் வாழ்வாய்.உற்ற நண்பனுக்கு வரும் ஆபத்திலிருந்து நீயே அவனை காப்பாற்றிஅவன் மனதிற்குரியவளை திருமணம் செய்ய உதவுவாய்” என்றார்.
பின் மதி, குமார், மரகதம்மாவை அழைத்தார். முனிவர் சொன்ன செய்தியைக் கேட்ட மதி மயங்கி விழுந்தார்.
மதி மயங்கி விழுமளவிற்கு முனிவர் என்ன சொன்னார்??
காத்திருப்புத் தொடரும்……………
♥️♥️♥️
❤️❤️❤️
👌👌👌👌
❤️❤️❤️