காத்திருப்பு : 29
மதியின் அழைப்பிற்கு இணங்க மதுரா இல்லத்திற்கு வந்திருந்த சூர்யாவும் குமாரும் பாட்டியின் அறைக்குள் வந்தனர். அங்கே மரகதம்மா தன் உடைமைகளை தயாராக எடுத்து வைத்திருந்தார்.
“என்ன அம்மா இது ?”
“என்ன குமார்”
“ஏன்மா பெட்டியெடுத்து வைச்சிருக்கீங்க?”
“நான் ஊருக்கு போகணும்பா”
“ஏன்மா கொஞ்சநாள் இருங்களன்மா”
“இல்லப்பாப நான் போயாகணும் வேலை இருக்கு”
“மதி வதனாவ கூப்டு”
வதனா வரவும்..
“வதனாமா பாட்டி ஊருக்கு கிளம்புறன்மா”
“ஏன் பாட்டி எங்க கூடவே இருங்க பாட்டி”
“இல்லடாமா உனக்குத் தெரியாததாடா அங்க இருக்கிற வேலை. அதுதான் நான் கிளம்புறன்டா. “
தன் பெற்றோர்தான் தன்னுடன் இல்லை பாட்டியாவது தன்னுடன் இருப்பார் என நினைத்த வதனாவிற்கு பாட்டி போவதாக கூற அழுகை வந்தது.
“வதனா பாட்டிக்கிட்ட வாடா”
தன்னருகில் வந்த வதனாவை அணைத்தார் பாட்டி. “பாட்டி” என்று அழுகையுடன் அவரது தோள்களில் சாய்ந்தாள்.
“வதனாமா அழக்கூடாது சரியா. நீ இப்ப சின்னபொண்ணுல்ல சரியா எதுக்கும் பயப்படக்கூடாது. எதுவா இருந்தாலும் பாட்டிக்கு போன் பண்ணு பாட்டி உன்ன பார்க்க வர்றன் சரியா?” பாத்து பத்திரமா இருடா கண்ணு”
“சரிப் பாட்டி”
“சூர்யா வதனாவ உன்ன நம்பி விட்டுட்டு போறன் பத்திரமா பார்த்துக்கோ சரியா? உன்னோட கோவத்தை நீ அவ மேல காட்டிடாத சரியா?”
“சரிப் பாட்டி என்னோட மனைவிய நான் பத்திரமா பார்த்துக்குவன் “
“குமார்ர மதி நான் போயிட்டு வர்றன்.”
“சரிம்மா “
“சரி அத்தை”
“நான் உங்கள ஸ்ரேஷன்ல விட்டுட்டு வர்றன் வாங்கம்மா”
“சரிப்பா வா போலாம்”
“பாட்டி போயிட்டு போன் பண்ணுங்க”
” சரிடாமா வதனா”
பாட்டி சென்றதும் மதியிடம் சொல்லிக்கொண்டு வதனாவை அழைத்துக்கொண்டு கெஸ்ற்கவுஸ் வந்தான் சூர்யா.
“வது முதல்ல சாப்பிடுவம் சரியா?”
“சரிங்க”
இருவரும் சாப்பிட்டதும் வதனாவை தங்களது அறைக்கு அழைத்துச் சென்றான்.
“வது நான் என்னப்பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்டா. “
“சொல்லுங்க”
“நான் படிச்சது எல்லாம் அப்ரோட்லடா. எனக்கு கல்யாணம் பிடிக்காது. ஏன்னா அங்க பிடிச்சா சேர்ந்திருப்பாங்க பிடிக்கலனா விட்டுட்டு போயிடுவாங்க. அதனால எனக்கு அது பிடிக்காம போயிட்டு. எனக்கு உயிர்தோழன்னா அது கமலேஷ். அடுத்த பிரண்டுனா கீர்த்தி.
ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு வேலைல உதவியா இருப்பா . நீ கமலேஷ்கூட நல்லா பேசுற. எனக்கு ரொம்ப happy. அதே போல கீர்த்திகூடவும் நல்ல பிரண்டாக முயற்சி பண்ணுடா.
அப்புறம் இவங்க ரெண்டு பேரையும் பற்றி யாரும் எங்கிட்ட ஏதாச்சும் தப்பா சொன்னா நான் நம்பவே மாட்டன் வது.
நான் உன்ன முதல்ல தடவை பார்த்தப்போவே நீ என்ன டிஸ்ரப் பண்ணினா. ஆனா நான் அத பெருசா எடுத்துக்கல. உனக்கு ஒண்ணு தெரியுமா வதுமா நான் என்னோட கோவத்தை யார்கிட்டையும் காட்ட மாட்டன். உங்கிட்ட மட்டும்தான் அன்னைக்கு காட்டிட்டன். அதுக்கு சாரிடா.
உன்ன நான் ரொம்ப லவ் பண்றன் வது. நீ இல்லன்னா என்னால இருக்க முியுமானு கேட்டா எனக்கு சொல்லத் தெரிலடா. உனக்கு என்ன பிடிச்சிருக்குனு தெரியும். அது காதல்தான்னு நீ உணரும் வரை நான் காத்திடேடு இருப்பேன் வது.
அப்புறம் நைட் நடந்ததுக்கு சாரி வது. நீ எனக்கு பொருத்தமானவ இல்ல. எங்கேயாவது போக விட்டுடுங்கன்னு சொன்னதும் என்னவிட்டுட்டு நீ போயிடுவியோன்னு பயத்துல அப்பிடி நடந்துக்கிட்டன்டா இனிமேல் உன்னோட விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது சரியா.
என்ன புரிஞ்சுக்கோடா வது. இதுதான் நான் உங்கிட்ட சொல்ல நெனச்சது. நீ ஏதாச்சும் சொல்லணுமாடா?”
“ம்…”
“கேளுடா வதுமா”
“நீங்க நேற்று ஏன் என்கிட்ட சொல்லாம போயிட்டீங்க?”
“ஹா….ஹா.. அதுதான் மேடம் நான் வரும்போது அழுதிட்டு இருந்தீங்களா?”
“இ.ல்.. (இவரு கீர்த்தி பேசினதப்பற்றி சொன்னா நம்பமாட்டாரு. அதனால சொல்ல வேணாம். அவ பிரச்சனை பண்ணா பாட்டிக்கிட்ட சொல்லலாம். அவ இவர லவ் பண்ணை என்ன இவரு என்னத்தானே லவ் பண்றாரு அது போதும் என நினைத்தாள்.)
“ஆமா”
“நான் கீர்த்திகூட பேசிட்டு இருக்கும் போது போன் வந்திச்சுடா அவகிட்ட உங்கிட்டையும் பாட்டிக்கிட்டையும் சொல்லவிடுனு சொல்லிட்டுத்தான் நான் போனேன்டா. அவ சொல்லலையா?”
“இல்ல”
“ஓ… மறந்திருப்பா போல. வேற என்ன கேக்கணும் வது?”
“நீ..ங்..க ஏன் கண்..ணம்மானு நேற்று காலைல சாப்பிட்ட அப்புறம் இருந்து என்னை கூப்பிடல?” என கேட்டாள் தயங்கியவாறு.
“ஹா…ஹா….ஹா.. என சிரித்தவன் அவளது கையினை பிடித்து இழுக்க அவனது மார்பில் வந்து விழுந்த வதனாவை அணைத்தவன் பேச ஆரம்பித்தான்.
“என்னோட வதுமாக்கு நான் கண்ணம்மானு சொல்லாதது கஸ்ரமா இருக்காடா?”
“ம்… என்றவளுக்கு அழுகை முட்டியது.”
“அழாதடா கண்ணம்மா” என்றான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் கண்களில் குறும்புடன் பாரத்துக்கொண்டிருந்தான். குனிந்து அவளது நெற்றியில் குனிந்து முத்தமிட்டான்.
“என்னோட காதல் அழைப்புத்தான் வது கண்ணம்மா.நான் உன்மேல வைச்சிருக்கிற காதல நீ உணரணும்டா. அதுக்கு முதல் நான் அப்பிடி கூப்டா உனக்கு பிடிக்குமோ தெரியாதுனுதான் நான் கூப்பிடலடா”
“இல்ல நீங்க அப்பிடி கூப்டது புடிச்சிருக்கு ” என்றாள் வெட்கத்துடன்.
அவளது வெட்கத்தை இரசித்தவன். “சரிடாமா நான் உன்ன கண்ணமானே கூப்பிடுறன் சரியா?”
“சரிங்க”
“சரி கண்ணம்மா நீ மட்டும் ஏன் என்ன மாமானு கூப்டல?”
“நீங்க கண்ணமானு சொல்லலாதானே அதுதான்.”
“சரிடா சரி கண்ணம்மா என்ன உனக்கு பிடிச்சிருக்காடா?”
“மாமா எனக்கு உங்கள பிடிச்சிருக்கு அது காதலானு தெரியல ரெண்டே நாள்ல காதல் வருமா மாமா? “
“ஹா… காதல் எப்போ எப்பிடி வரும்னு யாருக்கும் தெரியாதுடா கண்ணம்மா?”
“நான் உங்கள கணவனா ஏத்துக்கிட்டன் மாமா நான் கிராமத்தில வளர்ந்தவ. தாலி கட்டினவன் எப்பிடிப்பட்டவனா இருந்தாலும் அவன கணவனா ஏத்துக்கணும்னு இருக்கிறவங்ககூட வாழ்ந்ததால நானும் அப்டித்தான் இருப்பன் மாமா. ஆனா அதையும் தாண்டி உங்கள ரொம்ப பிடிக்கும் மாமா. நீங்க சொல்ற லவ் எப்போ எனக்குள்ள வரும்னு தெரியாது. அதோட எனக்கு நான் உங்களுக்கு பொருத்தமானவளா என்ற கேள்வி இருக்கு மாமா?”
“இங்க பாருடா உன்னோட காதலுக்காக நான் எப்பவும் காத்திட்டு இருப்பன்டா சரியா? நீ மட்டும்தான்டி எனக்கு பொருத்தமானவ.”
“நான் உங்கள விட்டு போயிட்டா என்ன பண்ணுவீங்க மாமா?”
“அப்பிடி சொல்லாத கண்ணம்மா எனக்கு இங்க (தனது நெஞ்சை தொட்டுக் காட்டியவன்) வலிக்குதுடி ” என்றான்.
“மன்னிச்சிடுங்க மாமா. ஆனா நான் போயிட்டா……” என்றவளை அடுத்த பேச அவன் அனுமதிக்கவில்லை. அவள்அவள இதழோடு இதழ் பதித்தான். தன்வலியை அவளிடம் காட்டினான். அவளும் அவன் முத்தத்தில் உருகி நின்றாள். இருவரும் மூச்சுக்காற்றுக்கு ஏங்கும் வரை அது நீடித்தது.
“இனி இப்பிடி பேசின நான்ன செத்துருவன்டி””
“அவனது வாயில் தன் கையை வைத்து மூடியவள். இல்ல மாமா நான் சொல்லல. ஆனா கொஞ்சம் நான் சொல்றத கேளுங்க மாமா. நான் இல்லன்னா நீங்க உடைஞ்சி போயிடக்கூடாது சரியா. நீங்க எப்பவும் கம்பீரமா இருக்கணும்.”
“சரிடா ஆனா நீ எப்பவும் என்ன விட்டு போக நான் விடமாட்டன் சரியா?
“சரிமாமா “
“கண்ணம்மா நான் உன்னோட அப்பாகிட்ட…”
“வேணாம் மாமா நீங்க அவங்ககிட்ட எதுவும் சொல்ல வேணாம். “
“அதுக்கில்லடா”
“அதப் பற்றி பேசாதீங்க”
“சரிடா”
“இருங்க மாமா நான் குடிக்க ஏதாச்சும் கொண்டு வர்றன். “
“எனக்கு காப்பி கொண்டு வாடா”
“சரி மாமா ” என்ற வதனா சமையலறைக்குள்ள சென்றாள். தனது அறையிலிருந்த சூர்யா கமலேஷ்க்கு போன் பண்ணினான்.
“மச்சான் “
“மச்சான் தேவி எப்பிடி இருக்கா?”
“நல்லா இருக்காடா வதனா எப்பிடி இருக்கா ?”
“நல்லா இருக்காடா .”
“என்ன மச்சான் போன் பண்ணிருக்கா ?”
“நீ வேலையா இருக்கியாடா?”
“வேலை முடிஞ்சிதுடா வீட்ட போகணும் ஏன்டா?”
“நீயும் தேவியும் நம்ம கெஸ்ற்கவுஸ்கு வந்திடுங்க”
“சரிடா ஆனா எதுக்கு?”
“நீ வா நான் சொல்றன்”
“சரிடா வந்திர்றம்” என்றவன் தேவிக்கு போன் பண்ணினான்.
“சொல்லுங்க டாக்டர்சார்”
“ரதிமா என்ன பண்றடா”
“என்ன பண்ணுவாங்க டீவி பார்க்குறன்”
“சரி நீ ரெடியாகு சூர்யா நம்மள கெஸ்ற்கவுஸ்க்கு வரச் சொல்லிருக்கான்டா”
“அண்ணாவா? எதுக்குங்க?”
“தெரியலடா நீ ரெடியாகு நான் வந்திர்றன்”
“சரிங்க”
“மாமா அண்ணாவும் தேவியும் வர்றாங்களா?” எனக் கேட்டபடி வந்தாள்.
“ஆமாடா கொஞ்சம் பேசணும் அதுதான் வரச்சொன்னன்டா”
“சரி மாமா”
சில நிமிடங்களில்……..
“சூர்யா”
“வாடா…. வா வதனா கீழ போலாம் வந்திட்டாங்க”
“தேவி” என்றபடி வதனா தேவியை அணைத்துக்கொண்டாள்.
“எப்பிடி இருக்க தேவிமா?”
“நல்லா இருக்கன் அண்ணா”
“வதனா எப்பிடி இருக்கடா?”
“நல்லா இருக்கன் அண்ணா”
“எதுக்கு சூர்யா வரச்சொன்ன?”
“பேசணும்டா வது போய் ரெண்டுபேருக்கும் காப்பி கொண்டு வாடா”
“சரி மாமா”
“நில்லுங்க அண்ணி நானும் வர்றன்”
“என்ன தேவி அண்ணினு புதுசா சொல்ற?”
“நீங்க என்னோட அண்ணனோட மனைவி. அப்போ அண்ணினுதானே கூப்டணும்”
“தேவி நான் உனக்கு இப்பவேணாம் அண்ணியா இருக்கலாம் ஆனா முன்னாடி நம்ம நல்ல தோழிகள். அதனால நீ எப்பவும் போல வதனானே கூப்டு”
“இல்ல இல்ல இல்ல நான் அண்ணினுதான் கூப்டுவன் பாருங்க அண்ணா”
“ரெண்டு பேருமே முடிவெடுங்க”
“போண்ணா அத்தான் பாருங்க”
“ரதிமா நானும் சூர்யா சொன்னதுதான்.”
“போங்க ரெண்டுபேரும் போய் காப்பி கொண்டு வாங்க”
“சரி” என்றபடி தேவியும் வதனாவும் உள்ளே சென்றனர்.
“மச்சான் அது என்னடா அத்தான்?” என்றான் சூர்யா கேலியாக.
“மாமாவ விடவாடா மச்சான்” என்றான் கமலேஷ் சூர்யாவைப் பார்த்து அதே கேலியாக.
இருவரும் சிரித்துக்கொண்டிருக்கும் போது சூர்யா கமலேஷிடம் கேட்ட கேள்வியில் கமலேஷ் சூர்யாவைப் பார்த்து விழித்துக்கொண்டிருந்தான்.
சூர்யா கமலேஷிடம் என்ன கேட்டான்???
காத்திருப்புத் தொடரும்…………….