வருவாயா என்னவனே : 30

4.6
(9)

காத்திருப்பு : 30

வதனாவும் தேவியும் சமையலறைக்குச் சென்றனர். அப்போது கமலேஷூம் சூர்யாவும் பேசிக்கொண்டிருக்கும் போதே சூர்யா கமலேஷைப் பார்த்து “மச்சான் நீங்க உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டீங்களா?”எனக் கேட்டான்.

சூர்யாவிடமிருந்து இந்தக் கேள்வியை கமலேஷ் எதிர்பார்க்கவில்லை. “ம..ச்..சா…ன்.அ…து…வ…ந்..து……..”

“மச்சான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“இல்ல மச்சான்”

“ஏன்”

“திடீர்னு கல்யாணமாயிட்டுது.அதுதான் கொஞ்ச நாளைக்கு நல்லா லவ் பண்ணிட்டு….”

“மச்சான் உனக்கு ஏங்கிட்ட பொய் சொல்ல வராதுடா”

“அது…வந்துடா…..”

“நீ கஸ்ரப்படாதடா நானே சொல்றன். நானும் வதனாவும் ஒண்ணா சேர்ந்து வாழ்க்கைய ஆரம்பிச்சதும் நீங்க உங்க வாழ்க்கைய ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறீங்க சரியா?”

“ஆ….மா….டா…. மச்சான் உங்கிட்டஇதுக்குமேல மறைக்கலடா நாங்க. நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருந்தால்தானேடா நாங்களும் சந்தோசமா இருப்போம். அதுதான் மச்சான்.”

“ரெண்டுபேரும் சேர்ந்து எடுத்த முடிவா மச்சான்.”

“ஆமாடா”

“சரிடா இப்போ நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ நாங்க எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சிட்டம்”

“உண்மையா மச்சான் இல்ல எங்களுக்காக சொல்றியா?”

“உண்மைதான் மச்சான்.”

“என்ன அண்ணா உண்மை ” என்றபடி தேவி வந்தாள்.

“சும்மா பேசிட்டு இருந்தம்மா”

“சரி அண்ணா எதுக்கு வரச்சொன்னீங்க?”

“உங்களுக்கு ஹனிமூன் போக டிக்கட் போட்டிருக்கன் போயிட்டு வாங்கடா”

“எங்கடா மச்சான்”

“ஹற்றன்”

“போலாம்டா பிரச்சனை இல்ல ஆனா நீங்களும் எங்ககூட வரணும்”

“இல்லடா நீங்க போயிட்டு வாங்க நாங்க வரலடா”

“அண்ணா நீங்க வரலனா நாங்களும் போகல”

“சரிடா எல்லாரும் போலாம். “

“எப்போ போலாம்ணா?”

“ரெண்டு நாள்ல போலாம்”

“சரிடா என்ன வதனா அமைதியா இருக்கா?”

“ஒண்ணுமில்லண்ணா”

“சரிடா சூர்யா நாங்க கிளம்புறம்.”

“சாப்டு போங்கண்ணா”

“இல்ல அண்ணி வீட்ல சாப்பாடு இருக்கு இங்க சாப்டா அது வேஸ்ட்டாயிடும் இன்னொருநாள் சாப்பிட வர்றன் அண்ணி”

“அப்போ ஓகேடா தேவிமா “

“அப்போ நாங்க வர்றம்”

“பத்திரமா போயிட்டு வாங்க”

இருவரும் சென்றதும் வதனா சமைப்பதற்காக சமையலறைக்குச் சென்றாள். அவள் பின்னே வந்த சூர்யா

“கண்ணம்மா உனக்கு ஹற்றன் போறதில ஏதும் பிரச்சனை இருக்காடா?”

“இல்ல மாமா நாம போகலாம்”

“நீ முன்னாடி போயிருக்கியாடா?”

“இல்ல மாமா நான் ஊரவிட்டு முதல்தடவை வந்தது இங்கதான்”

“சரிடா நான் உன்ன எல்லாஇடத்துக்கும் கூட்டிட்டு போறன் சரியா?”

“சரிங்க மாமா”

“என்ன பண்ணப்போற கண்ணம்மா?”

“தோசை மாமா”

“சரிடா கண்ணம்மா.” என்றவன் அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன மாமா அப்பிடி பார்த்துட்டு இருக்கீங்க?”

“நான் என்னோட பொண்டாட்டிய பார்த்துக்கொண்டிருப்பன். உனக்கென்ன?”

“சரி சரி நான் எதுவும் சொல்லல மாமா”

சில நிமிடங்களின் பின் மாமா வாங்க சாப்பிடலாம். என்றவள் சூர்யாவை அழைத்து வந்தாள். இருவரும் அமர்ந்ததும் சூர்யாக்கும் தனக்குமாக ரெண்டு தட்டை எடுத்து வைத்தாள். சூர்யா தனது தட்டை கவிழ்த்து வைத்தான்.

“என்ன மாமா “

“எனக்கு ஊட்டிவிடு கண்ணம்மா”

“என்ன மாமா நீங்க நான் எப்பிடி?”

“நீ என்னோட மனைவி. So ஊட்டிவிடுடா”

“சரி மாமா” என்றவள் ஊட்டிவிட்டாள். அவனும் தட்டில் இருந்ததை எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான். அவளும் வாங்கிக் கொண்டாள்.

“கண்ணம்மா நாம இன்னைக்கி இங்க தங்கிட்டு போலாமாடா”

“வே..ணா..ம்… மா…மா..”

“ஏன்டா?”

“பாட்டியும் ஊருக்கு போயிட்டாங்க அத்தை தனியா இருப்பாங்க மாமா அதுதான்.”

“நான் இங்கயே இருப்பம்னு சொன்னா?”

“இங்கேயே இருந்திடுவன் மாமா”

“ஏன்டாமா?”

“நீங்க எங்க இருக்கணுமோ அங்கதான் நான் இருக்கணும் மாமா”

“சரிடா என் செல்லம் நாம வீட்டுக்கே போலாம்”

“சரிமாமா”

இருவரும் மதுரா இல்லம் திரும்பினர்.

வாங்க கமலேஷ் தேவிய பார்க்கலாம்.

வீட்டில்……

“என்னங்க அமைதியா இருக்கிறீங்க?”

“சூர்யா மாதிரி ஒரு நண்பனை பார்க்கவே முடியாதுடி”

“என்னாச்சு அத்தான்”

“சூர்யா நம்மள எதுக்கு கூப்டானு தெரியுமா?”

“ம்…ஹனிமூன் போகச் சொல்லத்தானே”

“அதுமட்டும் இல்ல ரதிமா”

“என்ன சொல்றீங்க?”

“ஆமாடா நம்ம வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கலைனு அவனுக்குத் தெரியும். என்றவன் சூர்யா கேட்டதையும் சொன்னதையும் சொன்னான்.”

“உண்மையாவா அத்தான்”

” ஆமாடா ரதிமா. சரி அப்போ நம்ம ஆரம்பிக்கலாமா ” என அருகில் வந்தவனை தள்ளிவிட்டவள் அதையெல்லாம் அங்க போய் பார்த்துக்கலாம். என்றவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்தவன் “சரிடா ரதிம்மா இப்டியே தூங்கு ” என்றான்.

மதுரா இல்லம்……….

“என்னப்பா வந்திட்டீங்க நைட் தங்கிட்டு வந்திருக்கலாமே”

“உங்க மருமகதான்மா சொன்னா வீட்டுக்கு போலாம் அத்தை தனியா இருப்பாங்கன்னு”

“அப்பிடியாடா வதனாமா”

“அத்தை ” என்றவள் தலையை வருடிவிட்டார்.

“அம்மா நாங்களும் கமலேஷ் தேவியும் ஹற்றன் போறம்மா.”

“சரிப்பா நல்ல படியா போயிட்டு வாங்கப்பா. எப்ப போறீங்க?”

“ரெண்டு நாள்லம்மா”

“சரிப்பா போய் தூங்குங்க.”

“சரிமா “

“சரி அத்தை”

“கண்ணம்மா நீ தூங்கு எனக்கு முக்கியமான project வேலை இருக்குடா”

“சரி மாமா” என்றவள் கட்டிலில் சென்று படுத்தாள். ஆனால் தூக்கம் வரவில்லை.

சூர்யா தனது லப்டொப்பை எடுத்துவந்து அவளருகில் வந்திருந்து வேலையைச் செய்தான்.

வதனா தூக்கம் வரமால் புரண்டு புரண்டு படுத்தாள். “என்ன கண்ணம்மா தூங்கலயா?”

“தூக்கம் வரலைங்க”

“ஏன்டா ?”

இருநாட்களாக அவனது அணைப்பில் துயின்றவழுக்கு இன்று அவனணைப்பின்றி தூக்கம் வரவில்லை. அதை எப்படி அவனிடம் சொல்ல முடியும்.

“தெரியலை மாமா” என்றாள்.

“சரிடா எதையும் போட்டு குழப்பிக்காம தூங்குடா “என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

அவளும் தூங்குவதைப்போல் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் தூங்கவில்லை. நீண்ட நேரத்தின் பின் தன் projectஐ முடித்த சூர்யா வதனா புறம் திரும்பினான். அவளது கண்மணிகள் மூடிய இமைகளுக்குள் உருண்டுகொண்டிருந்தன. அதிலேயே அவள் உறங்கவில்லை என்பதை உணர்ந்தவன் சத்தம் போடாமல் தூங்குவதைப்போல் படுத்தான்.

சூர்யா தூங்கியதை உணர்ந்தவள் அவனருகில் சற்று நகர்ந்து அவனது நெஞ்சில் சாய்ந்த சில நிமிடங்களில் தூங்கிவிட்டாள். அவளது செயலை பார்த்தவன் உதடுகளில் புன்னகை விரிந்தது. பின் அவளது உச்சியில் முத்தமிட்டவன் அவளை அணைத்துக்கொண்டு தூங்கினான்.

காலையில் கண்விழித்த வதனா தனது அருகில் தூங்கிய கணவனைக் காணவில்லை. “மாமா எங்க போயிட்டாரு?” என்ற கேள்வியுடனே குளித்து தயாராகி கீழே வந்தாள். கீழேயும் சூர்யாவைக் காணவில்லை .

மதி வரவும் அவரிடம் கேட்கவும் “நம்ம கம்பனில ஏதோ பிரச்சனையாம் என்று போன் வந்திச்சுடா நேரத்துக்கே போயிட்டான். நீ எழும்பின பிறகு சொல்லட்டாம்னு சொன்னான். உனக்கு அவன் போன் பண்றன்னு சொன்னான்மா.”

“சரி அத்தை”

“வதனா நாளைக்கு போறத்துக்கு தேவையான பொருட்களை எடுத்து வைடா”

“சரி அத்தை ” என்றவள் மேலே அறைக்கு வந்தாள். ஊஞ்சலில் சிறிது நேரம் இருந்தவள் பின் பெட்டியடுக்கத்தொடங்கினாள். அதையும் செய்து விட்டு கீழே சென்று மதிக்கு உதவினாள். சூர்யா வதனாவுக்கு போன் பண்ணவேயில்லை. எப்ப போன் பண்ணுவாருனு வதனா காத்துக்கிட்டே இருந்தாள். ஆனால் சூர்யா எடுக்கவேயில்லை. வதனாக்கு அதை நினைத்து அழுகை வந்தது.

இரவு ஒன்பது மணியானது வதனா தூங்காமல் hallலயே இருந்தாள். அங்கே வந்த மதி “என்னம்மா வதனா சூர்யாய போன் பண்ணாணா?”

“இல்ல அத்தை” என்றவளுக்கு அழுகை முட்டியது. அதைக்காட்டாது மறைத்தாள். 

“அவன் வேலைனு வந்திட்டா எல்லாத்தையும் மறந்திருவான்மா நீ கொஞ்சம் அனுசரித்துப் போடாமா”

“சரி அத்தை”

“சரிடா நீ போய் தூங்குடா அவன் வந்தா நான் அனுப்பிவைக்கிறன்.”

“இல்லை அத்தை….”

“பரவால்லடா நீ தூங்குடா போ”

“சரி அத்தை” என்றவள் அறைக்குள் நுழைந்ததும் பால்கனியில் உள்ள ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள். கண்களிலிருந்து நீர் வடிந்த வண்ணமே இருந்தது.

கல்யாணமாகி இந்த மூன்று நாட்களில் சூர்யா இப்படி பேசாமல் இருக்கவில்லை. திடீர் என்று அவன் பேசாது இருப்பது அவளுக்கு கஸ்ரமாக இருந்தது. தன்னை மறந்து ஊஞ்சலில் நீண்ட நேரம் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தாள்.

அவர்களது அறைக் கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தவள் சூர்யாவைக் கண்டதும் பாய்ந்தோடிச் சென்று அவனை அணைத்துக்கொண்டாள். சூர்யாவும் அவளை அணைத்துக்கொண்டான்.

“மாமா இனிமேல் என்கூட பேசாம இருக்காத மாமா. எனக்கு கஸ்ரமா இருக்கு மாமா. “

“ஏன்டா கஸ்ரமா இருக்கு?”

“நீ பேசாம இருந்தது மாமா”

“அதுதான்டா நான் பேசாம இருந்தா உனக்கு ஏன் கஸ்ரமா இருக்கு?”

“ஏன்னா நான் உங்கள லவ் பண்றன் மாமா” என்றவள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

(அவன் அவளது ஒருமைப் பேச்சில்ல ஒருவித உரிமை உள்ளதை அறிந்து கொண்டான். அவளுக்கு தன்மேல் காதல் உள்ளது என்பதை அறிந்திருந்தான் . ஆனால் அவளோ அதை உணரவில்லை. அவளை எப்பிடியாவது உணரச்செய்ய வேண்டுமென நினைத்தான். ஆனால் அவன் எதுவும் செய்யாமலே இப்பிடி அவள் உணர்ந்துகொண்டதை நினைத்து ஆனந்தமடைந்தான்.)

“கண்ணம்மா “

“மாமா”

“என்ன லவ் பண்றியாடா?”

“மாமா இன்னைக்கு முழுதும் உங்கள பார்க்கல பேசல. அது ரொம்ப கஸ்ரமா இருக்கு மாமா. அதுக்கு பேரு லவ்னா நான் உங்கள லவ் பண்றன் மாமா”

“லவ் யூ கண்ணம்மா”

“மாமா நானும்”

“என்னடி நானும்” என்றவன் அவளது முகத்தை நிமிர்த்தினான். அதில் அவள் அழுததால் ஏற்பட்ட தடம் காணப்பட்டது.

“கண்ணம்மா அழுதியாடா?”

“ம்…”

“ஏன்டா?”

“நீ ஏன் மாமா காலைல சொல்லாம போன. போன் பண்றன்னு சொல்லிட்டு பண்ணல. மனசுக்கு கஸ்ரமா இருந்திச்சு அதுதான்…” என்றவளுக்கு இப்போதும் கண்ணீர் வந்தது.

அவளது கன்னத்தில் முத்தமிட்டவன். “அழாதடா கண்ணம்மா என்னப் பாருடா.இங்க பாருடா கம்பனில ஒரு பிரச்சனைடா அதுதான் நேரத்துக்கு போயிட்டன். நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதுதான் எழுப்பல சரியாடா?”

“சரி மாமா.”

“சரிடா நாளைக்கு நாம போறத்துக்கு எல்லாம் ரெடியா எடுத்து வைச்சிட்டியாடா?”

“ஆமா மாமா”

“சரிடா நீ போய் தூங்கு நான் குளிச்சிட்டு வர்றன்.”

“சரி மாமா” என்றவள் அவன் குளித்துவிட்டு வரும்வரை காத்திருந்தாள்.

“கண்ணம்மா தூங்கலயாடா” என்றபடி அருகில் வந்து அமர்ந்தவன் தோள் மீது தானாகவே சாய்ந்தாள்.தன் தோள் மீது சாய்ந்தவளை தன் மார்பில் சாய்த்தான்.

“மாமா”

“என்னடாம்மா?”

“என்ன விட்டு போயிடுவியா?”

“ஏன் கேக்கிறாடா?”

“இல்ல மாமா நான் உனக்கு பொருத்தமில்லை மாமா அத நெனச்சி நீ எப்பவாவது கவலப்பட்டு என்ன போனு சொல்லமாட்டல்ல?”

“நீ என்னோட உயிருடி நீ இல்லாம எப்பிடிடி நான் இருப்பன். எப்பவும் உன்ன விட்டு போமாட்டன்டா. சரியா?”

“சரி மாமா”

“சரி கண்ணம்மா. ” என்றவன். அவளது கண்களைப் பார்த்து உனக்கு சம்மதம்னா நம்ம நம்ம வாழ்க்கையா நிதானமா ஆரம்பிக்கலாமாடா?”

சம்மதம் என அவளது கண்கள் உணர்த்தியதும். அவளை ஆனந்தத்துடன் தன்னவளாக்கிக்கொண்டான். கூடல் முடிந்ததும் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்கினான்.

கதிரவனும் வானில் உலாவ விருப்புடன் எழுந்து வந்தான். மதுரா இல்லத்தில் மதி hallல் இருந்தபடி மேலேயே பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது கமலேஷ்ம் தேவியும் வந்தனர்.

“என்னம்மா மேலேயே பார்த்திட்டு இருக்க?”

“வதனா இன்னும் வரலமா?”

“அதுக்கென்னம்மா ?”

“சூர்யா நேற்று காலைல போனவன் நைட் பத்து மணிக்கு வந்தான். வதனாக்கு போனும் பண்ணல்ல. அவள் யோசிச்சிட்டே இருந்தாடா. பிறகு நான்தான் அவள தூங்க அனுப்பிவைச்சன். அவங்க இன்னும் வரல அதுதான் பயமா இருக்கு”

“நான் போய் எழுப்பவா?”

“வேணாடா நீங்க இருங்க நான் டீ எடுத்திட்டு வர்றன்.”

“அத்தை எனக்கு காப்பி”

“சரி கமலேஷ்”

சூர்யா அறை……..

எப்போதும் நேரத்திற்கு எழும் சூர்யா இன்று எழவில்லை. முதலில் எழுந்தது வதனாதான். எழுந்தவள் தன் நிலையை எண்ணி வெட்க்கியவள் சூர்யாவை விட்டு விலகி குளியலறைக்குள் சென்றாள்.

அவள் சென்றதும் கண்விழித்த சூர்யா பக்கத்து அறைக்குள் சென்று ரெடியாகி வந்தான். வதனா கண்ணாடி முன் நின்று தலைசீவிக்கொண்டிருந்தாள்.

அவளது அருகில் வந்தவன் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்துவிட்டு முத்தமிட்டான். அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது. அவளது வெட்கத்தை இரசித்தவனை போன் கலைத்தது.

“ஹலோ”

“மச்சான் என்னடா பண்ற சீக்கிரம் போகணும்டா கீழ வாடா”

“நீ எங்கடா இருக்க?”

“உன் வீட்லதான்டா வாடா”

“இதோ வர்றன்டா” என்றவன் வதனாவையும் அழைத்துக்கொண்டு பெட்டியையும் தூக்கி வந்தான்.

பின் தாயிடமும் தந்தையிடமும் சொல்லிவிட்டு ஆசிர்வாதம் வாங்கிவிட்டு காரில் இருக்க போனார்கள். கார் கதவைத் திறந்த வதனாவின் முகம் காரில் இருந்தவரைக் கண்டதும் கவலையடைந்தது.

வதனா யாரைப்பார்த்து கவலையடைந்தாள்??

காத்திருப்புத் தொடரும்………….

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!