காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 27 🖌️

0
(0)

“ஐய்யய்யோ கண்டுட்டாளே…” என்று போனை எடுத்து காதில் வைத்து கேஸ்ஸுவலாக கையை மரத்தில் தாங்கிப் பிடித்து போன் பேசுவதாக சமாளித்து வைத்தான் ஆதி.

“உங்க துணி எல்லாம் எங்க இருக்கு? உங்களுக்கு துவைக்க கஷ்டமா இருக்குன்னா கொடுங்க… நான் துவைச்சு தரேன்.” என அவள் தலையைக் குனிந்து கேட்டதும்

“எதுக்கு?” என்றான் எரிச்சல் கலந்த கோபத்துடன்.

“இல்… நீங்கதான் கோபமா போனீங்கல்ல? அதுதான் கஸ்டப்படுவீங்க. துவைச்சு தரலாம்னு.” என்றாள் புன்னகையுடன்.

“அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. யூவி ஹெல்ப் பண்றா.” என்றுவிட்டான் அவளை மாட்டி விடும் நோக்கில்.

“யூவி சக்தி சேர்ட்டதானே துவைக்கிறா.” என்றதும் அவனுக்கும் நன்றாகவே புரிந்தது அவள் ஏன் அப்படி கூறினாள் என்று.

“No thanks. You can go.” என்று கையைக் காட்ட அவளுக்கு முகத்தில் அறைந்தது போல ஆனது. அவள் மனம் உடைந்து போய் சென்றுவிட்டாள்.

மீண்டும் யூவியிடம் வந்தவன் “எதுக்கு இது சக்தி ட்ரெஸ்ஸுன்னு பொய் சொன்ன?” என்றாள் கோபமாக. அவள் தோய்த்துக் கிழிந்து போன அந்த சேர்ட்டை மறைத்துவிட அதை நன்றாகவே கண்டுவிட்டான் ஆதி.

“என்ன மறைக்கிற? என்ன அது காட்டு.” என்று அவன் கத்த அண்டமும் இருண்ட உணர்வு யூவிக்கு.

“ஒன்னும் இல்ல.” என மழுப்பினாள்.

“இப்போ காட்ட போறியா இல்லையா?” என சீறியதும் மெதுவாக அந்த சேர்ட்டை தயக்கத்தோடும் திருட்டு முழியோடும் அவன் முன் காட்டினாள்.

அவன் தலை ஓட்டையினுள் தென்பட்டது. “அடிப்பாவி. நான்தான் துவைக்கிறேன்னு சொன்னேன்லடி… பின்ன எதுக்குடி இப்படி பண்ண? எனக்கு தெரியாது. நான் வர்ரதுக்குள்ள என் சேர்ட் சேர்ட்டா இருக்கனும். இல்லன்னா… நடக்குறதே வேற.” என்றுவிட்டு அவளை கை நீட்டி எச்சரித்தவன் முறைத்தவாறே சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

“என்னால எல்லாம் முடியாது… ரொம்பதான் பண்றான்.” என்றவள் மீதியிருந்த அவன் சேர்ட்களை காலால் தண்ணீருக்குள் உதறிவிட்டு சென்றாள்.

“இவன… அப்படியே அடிச்சே கொல்லனும் போல இருக்கு. குரங்கு…” என்று அவனை அர்ச்சித்தவாறே வந்தவளின் கண்கள் மின்னின. புளியமரத்தில் தொங்கிய புளியங்காய்களை பார்த்தவள் நாக்கை சுழற்றியவாறே மரத்தில் ஏறி அமர்ந்தவாறே புளியங்காய்களை சாப்பிட்டாள். நாக்குள் புளி சுளெள்னு ஏறியது. அப்போதுதான் அங்கே ஆதியும் பல்லவியும் வந்தார்கள். ஆதிதான் ஏதோ பேச வேண்டும் என்று அழைத்து வந்தான்.

“நான் சொல்றது உனக்கு கஸ்டமாதான் இருக்கும். ஆனால் கொஞ்சம்… மனச கட்டுப்படுத்திக்கோ. எனக்கு வேற வழி தெரியல.” என்று முடித்தவனை கண்கள் விரித்து பார்த்தாள் பல்லவி.

“உன்ன எனக்கு சுத்தமா பிடிக்காது பல்லவி. உன் மேல காதல் எல்லாம் இல்லை… வெறும் வெறுப்புதான் இருக்கு. இத சொல்லி உன் மனச கஷ்டப்படுத்த எனக்கு இஷ்டமில்லைதான். ஆனால்… நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன். அவளதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.” என்றதும் அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. காதல் இல்லை என்று சாதாரணமாக சொன்னால் கூட தாங்கிருப்பாளோ என்னவோ… வெறுக்கிறேன் என்றதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதை விட இத்தனை நாள் மனதில் வளர்த்து வைத்த ஆசையை மொத்தமாய் கொன்றுவிட்டான். வேறு பெண்ணை காதலிக்கிறேன் என்றதை ஏற்க மனமே வரவில்லை.

“விளையாடாதீங்க மாமா. விளையாட்டுக்குதானே தானே இப்படி எல்லாம் பேசுறீங்க?” என அவள் பயத்தை மறைத்துக் கொண்டு உண்மையாக இருக்கக் கூடாது என்று நம்பக புன்னகைக்க இதை எல்லாம் மேலே இருந்த கேட்டுக் கொண்டிருந்தாள் யூவி.

“வரேஹ்…வாஹ்… யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் காலம் வரும்ல? இப்போ வந்துடுச்சுடா ஆதி. ஆட்டமாடா ஆடுன… இனி ஆடுடா பாக்கலாம். லவ் பண்றியோ… வேற ஒருத்திய… இனி நீ கதம் ஹோகயாதான்.” என்றவள் தனது போனில் அவர்கள் பேசுவதை வீடியோ ரெக்கோர்ட் செய்து கொண்டிருந்தாள்.

“இது ஒன்னும் ஜோக் இல்ல. உண்மையிலேயே நான் வேற ஒரு பொண்ண விரும்புறேன். அவளதான் கல்யாணம் பண்ணிப்பேன். நான் எக்ஸ்ஸிடன் ஆகி உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது தேவதை மாதிரி வந்து ப்ளட் கொடுத்தா. அதனால அவ தந்த இந்த வாழக்கையையே அவளுக்காக நான் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.” என்று அவன் உமிழ்நீரை எடுத்து கண்களில் இலேசாக யாரும் அறியாத வண்ணம் வைத்துக் கொண்டு அழுவது போல் விரல்களால் கண்களை கசக்கியவனைப் பார்க்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது பல்லவிக்கு.

“சந்தோசமா இருங்க மாமு.” என்றுவிட்டு அழுதவாறே மனமுடைந்து போய் ஓடிவிட்டாள்.

“ஹப்பாடா இவக்கிட்ட கஸ்டப்பட்டு ஒரு பொய்ய அவுத்து விட்டாச்சு.” என்றுவிட்டு  நிம்மதியாக சென்று விட்டான்ஆதி.

“ஆதி… இனிமேல் உன் எதிர்காலம் என் கையில.” என போனைக் கையில் வைத்துச் சிரித்தாள் யூவி.

யூவி தனது போனில் ஆதி பல்லவியிடம் கூறிய விடயங்களை வீடியோ ரெக்கோர்ட் செய்து வைத்துக் கொண்டு திமிராக வீடு வந்து சேர்ந்தாள்.

அவள் பின்னாலேயே ஆதியும் “ஏய்… நீ என்னடி நினைச்சிட்டு இருக்க? என் ட்ரெஸ்ஸெல்லாம் தூக்கி ஆத்துல போட்டுட்டு வந்துட்ட… இடியட். உனக்கு என்ன அவ்ளோ திமிராடி… இருடி பாட்டிக்கிட்ட சொல்றேன்.” என்று கத்திக் கொண்டு வந்தவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை அவள்.

“சரி சொல்லு… I don’t care.” என்றாள் மிடுக்காக அவனைத் திரும்பிப் பார்க்காமலே.

அவனுக்குதான் ஆச்சரியமாய் போனது. அவளை விநோதமாக பார்த்தவன் “நான் பாட்டிக்கிட்ட உன்ன பத்தி சொன்னா என்ன ஆகும்னு தெரியுமா?” என கண்கள் சுருக்கி மிரட்ட

“தம்பி… உன் கதைய நான் பாட்டிக்கிட்ட சொன்னா என்ன ஆகும்னு தெரியுமா?” என்று அவள் கேட்டுக் கண்ணடித்தாள்.

“என் கதையா?” என குழப்பத்தில் மூழ்கினான் ஆதி.

“நீயே பாருடா தம்பி.” என தனது கைப்பேசியிலிருந்த காணொலியை எடுத்தூக் காட்டியவள் அவன் தோளில் இடித்தாள் தன் தோளால்.

அவன் பேசிய அணைத்தும் ரெக்கோர்ட் ஆகி இருக்க வியந்து போனவனுக்கு கோபம் எழ “ஏய்… என்னடி இது… இத எப்படி நீ?” என்றான் அதிர்ச்சி மாறாத முகத்துடன்.

“ஏன் உன் கதை ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கா? ஒரே கல்லுல ரெண்டு மாங்காய். ஐ மீன்… பாட்டிக்கிட்ட இத காட்டுனா நீ இந்த வீட்டுல இருக்க மாட்ட. எட் த சேம் டைம் பல்லவிக்கிட்ட இது ஒரு ட்ராமான்னு சொன்னா அவ திரும்பவும் உன்ன டோர்ச்சர் பண்ண ஆரம்பிச்சிடுவா. எப்படி வசதி?” என அவள் கண்களை சிமிட்டி அவனை புருவம் தூக்கி கேட்டு அவன் கையிலிருந்த தன் போனைப் பறித்துக் கொண்டாள்.

“ஏய்… மரியாதையா அத கொடுத்துடுடீ. நீ மட்டும் கொடுக்கல…” என்று சீறினான்.

“கொடுக்கலன்னா என்னடா பண்ணுவ? சொல்லு என்ன பண்ணுவ?” என அவன் அருகில் வந்து திமிராக கேட்டதும் அவள் கையிலிருந்த போனை பறித்து  கீழே போட்டு காலால் மிதித்து உடைத்துவிட்டான்.

அடுத்த நிமிடம் வாய் விட்டு சிரித்தவன் “என்ன போச்சா? இனிமேல் எப்படிடீ சொல்லுவ?” என்று அவள் இடையைப் பிடித்து இழுத்து அவள் கீழுதட்டை விரலால் இழுத்துவிட்டு கேட்டவனின் உணர்ச்சிகள் அவள் அருகாமையில் கிளர்ந்தெழுந்தன. அவளை திமிராகப் பார்க்க அடுத்த நொடி அவனை வேகமாக பிடித்து தள்ளிவிட்டவள் சிரித்திருந்தாள்.

அவள் சிரிப்பில் எரிச்சலாகி பின்னந்தலையை கோதிவிட்டவன் “ஹேய்… எதுக்குடீ சிரிக்கிற நீ இப்போ?” என்று அவள் கையைப் பிடித்து இழுத்து முறுக்கினான்.

“ஹெலோ… நான் என்ன உன்ன மாதிரி முட்டாளா? இத உடைச்சா என்ன? என்கிட்ட இன்னொன்னு இருக்கே… தம்பி… உன் கதைய ஓல்ரெடி சிப்ல சேவ் பண்ணி வெச்சிட்டேன்.” என்று கூறிவிட்டு சிரித்தவள் அவள் தாடையைப் பிடித்து அவன் கன்னத்தை இடது வலமாக திருப்பியவள்

“மிரட்டுற… இனி நீ மிரளுவடா…” என்று அவன் கன்னத்தை பிடித்து இழுத்து அவன் தாடையைப் பிடித்து கொஞ்சினாள் யூவி.

“ஹேய்… இங்க பாருடி… இது ரொம்ப ரொம்ப பெரிய விசயம். நீ மட்டும் இதுல விளையாடினன்னா எல்லாருமே கஸ்டப்படுவாங்க. இது ஒன்றும் அவ்ளோ சின்ன விசயம் இல்லை. ரொம்ப வருசத்துக்கு அப்றமா… இப்போதான் பழைய மாதிரி என் பெமிலி என் கூட அட்டேச்ல இருக்காங்க.” என அவன் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவனின் முகத்தில் வியர்வைத் துளிகள் திரண்டு ஓடின. அடுத்த நிமிடம் அவள் முகம் இறுகியது.

“அப்போ என்னோட விசயம்? என் அப்பாவ பத்தின விசயங்கள்? நான் யாருன்னு தெரியும் போது என்னையும் இப்படி தானே மிரட்டின நீ? அப்போ அது சின்ன விசயமா? அடுத்தவங்களுக்குன்னு வரும் போது அது சின்ன விசயம்… ஆனால் உனக்குன்னு வரும் போது வலிக்கிதா? எவ்ளோ செல்பிஸ் நீ. என் உணர்வுகளோட விளையாடிட்டல்ல நீ? எனக்கு இவங்க எல்லாரையும் ஏமாத்தனும்னு ஆசையா என்ன? இல்ல… சத்தியமா இல்ல. எனக்கு தெரியும். பாட்டிக்கு நான்தான் ஆதித்ய வர்மா பொண்ணுன்னு தெரிஞ்சா என்ன மொத்தமா வெறுத்துடுவாங்கன்னு. சின்ன வயசுல இருந்தே அம்மா, அப்பா ரெண்டு பேரோட அன்பு மட்டுமே கிடைச்சது. உறவுகளோட வேல்யூ தெரியல. ஆனா நிறைய நாள் ஏங்கியிருக்கேன். அதுக்காகதான் இங்க வந்தேன். அந்த பாசத்தை தேடிதான் வந்தேன். வேற எந்த நோக்கமும் எனக்கு இல்ல. உறவுகளை இழக்குறதோட வலி என்னன்னு உனக்கு தெரியுமா? ஆனால்… எனக்கு தெரியும். உன்ன சுத்தி எல்லா உறவுகளும் இருக்குறதால உனக்கு அதோட அருமை தெரியல. ஆனால் எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ஏன்னா நான் ஒரு அநாதை. தனியா தனி மரமா நிக்கிறேன். ஒரு வாய் சாப்பிட்டியான்னு கேட்க கூட யாரும் இல்ல. அந்த வார்த்தைக்காகதான் இந்த பொய்ய சொன்னேன். அது தப்பா? என்ன பொறுத்த வரையில எங்க அப்பாவ அவர் ஒருத்தங்கள காதலிச்சாருன்ன ஒரே ஒரு ரீசனுக்காக வீட்ட விட்டு வெளிய போக சொன்னது நியாயம்னா நான் இப்போ பண்ணிட்டு இருக்குறதும் நியாயம்தான். ஒருத்தங்களை காதலிக்கிறது பாவமா? சொல்லு. தன் வாழ்க்கை துணைய தேடிக்கிறது அவங்க அவங்க உரிமை தானே. ஆனால்… எங்க அப்பா அவங்க கொடுக்காத உரிமைய தானாகவே எடுத்துக்கிட்டாரு. பாட்டி மட்டும் அதை புரிஞ்சிக்கிட்டாங்கன்னா நான் ஏன் இப்படி பொய் சொல்ல போறேன்? அன்னைக்கு என் அப்பா பக்கம் ஒருத்தர் நின்னிருந்தா நான் ஏன் இப்படி பொய் சொல்லி எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்திருக்க போறேன்? ஆனால் உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? நீதான் மனசாட்சிய மதிக்காதவனாச்சே. முதல்ல உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா? உன்ன பாத்தாலே எனக்கு பக்திக்கிட்டு வருது ஆதி. தயவு செஞ்சு என் கண்ணு முன்னாடி வந்து நிக்காத. என் மூஞ்சில முழிக்காத. உன்னப் பாத்தாலேயே வெறுப்பா இருக்கு.” என்று அவனிடம் மனவேதனையுடன் கூறியவள் கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டாள். அவள் பேச்சில் உறைந்து போனான் ஆதி.

பின் ஒரு நிமிடம் தான் செய்தது எவ்வளவு தவறு என்று உணர்ந்தவன் “யூவி… ஒரு நிமிசம்… ஒரு நிமிசம் நான் சொல்றத கேளு யூவி…” என்று கத்திக் கொண்டே அவள் பின்னே சென்றான். அவள் அவன் பேசுவதை காதில் கூட வாங்கவில்லை. ஒற்றையடி பாதையின் இரு பக்கங்களிலும் மரங்களால் சூழ்ந்து காணப்பட்டிருக்க அதன் வழியே அழுது கொண்டே கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தாள் யூவி.

“யூவி… ப்ளீஸ்… கொஞ்சம் நில்லேன்… உன்கூட பேசணும்.” என்று கத்தியவனிடம் திரும்பிப் பார்க்காமலே

“நீ எதுவும் சொல்லாத. அதுதான் உன்ன பத்தி இன்னைக்கு நான் நல்லா தெரிஞ்சிக்கிட்டேனே. அடுத்தவங்க துக்கத்துல சந்தோசம் காணுறவன் தானே நீ?” என்று மறம் நொந்து போய் அவள் கேட்ட கேள்வியில் துடித்துப் போனான் ஆதி.

“ஏன் யூவி இப்படி பேசுற? நான் ஒருத்தங்க மேல உண்மையா பாசம் வெச்சா கண்டிப்பா என்னால அவங்கள காயப்படுத்த முடியாது யூவி.” என்று அவன் அடிமனதிலிருந்து அவன் வார்த்தைகள் அவனை அறியாமலேயே வெளியே வந்தன.

“அப்போ எதுக்காக என்ன காயப்படுத்தின? என்ன கை நீட்டி அறைஞ்ச. காச கொடுத்து அவமானப்படுத்தின. மூஞ்சில கொதிக்க கொதிக்க கறிய ஊத்தின. சாப்பிட விடாம பண்ண. என் கைய உன் கால்ல வெச்சி மிதிச்ச. மீனோட முள்ள தந்து சாப்பிட சொன்ன. இருட்டு ரூம்ல அடைச்சி போட்ட. எவ்ளோ டோர்ச்சர் பண்ண? இதெல்லாம் என்ன? புரிஞ்சு போச்சு. அது சரி… நான் உனக்கு யாருன்னு நீ என் மேல உண்மையான பாசம் காட்டுவ? நீ சொந்த தங்கச்சிக்கிட்டேயே உண்மையான பாசத்தை காட்டல. ஆப்டரோல் நான் உனக்கு யாரு? ஜஸ்ட் மாமா பொண்ணு. அதுவும் இத்தனை வருடமா இல்லாதவ. கொஞ்ச நாளைக்கு முன்ன பரீட்சயமானவ. சோ… உன்கிட்ட நான் எப்படி உண்மையான அன்பு எல்லாம் எதிர்பாக்குறது?’ என்றவள் நொடிக்கு நொடி அவனை வார்த்தைகளால் குத்திக் காயப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அவனிடம் திரும்பியவள்  கை எடுத்து கும்பிட்டு  “தயவு செஞ்சு என் வாழ்க்கைக்குள்ள நுழையாத.” என்றுவிட்டு முன்னேறி சென்றாள். அவனுக்கு மனம் கனத்துப் போனது  அவனால்தான் அவளுக்கு கஷ்டம் என்று அறியவும் துடித்துப் போய்விட்டான் ஆதி.

“நான் சொல்றத கொஞ்சம் கேளேன்மா.” என்று கேட்டவனுக்கு இத்தனை நாளும் தான் அனுபவிச்ச தனிமை எவ்வளவு கொடியது என்று தெரியாமலா இருக்கு?

“இப்போ கூட நீ உன் பிஹேவியர நியாயப்படுத்ததான் காரணம் தேடுற ஆதி. ஆனால் உன் தப்ப உணர்ந்து ஒரு சோரி கேட்க தோனலல்ல? அந்த அளவு ஈகோல்ல உனக்கு? குற்ற உணர்ச்சியே இல்ல. ச்சீ…” என்று வெறுப்பை உமிழ்ந்தவள் வார்த்தைகளில் மொத்தமாக உடைந்து போனான். அவனை அறியாமலேயே காதலித்துவிட்டான். இத்தனை நாளும் தனிமையில் தனித்தவனுக்கு அவளைப் பார்த்த பிறகு… அவளிடம் பழகிய பிறகு… மனம் இலேசான உணர்வு. அவன் எல்லாரிடமும் ஒரே போன்றுதான் இருக்கிறான். ஆனால்… அவளருகில் மாத்திரம்தான் தனக்குள் ஏதோ மாற்றத்தை உணர்கிறான். தான் தானாகவே இருப்பது போல் வசதியாக உணர்கிறான்.

அவனால் எதையும் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் அவளது புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும்… தனிமையில் உளழ அவனுக்கு விருப்பமில்லை. இங்கு வந்த இத்தனை நாளும் எத்தனை உறவு இருந்தும் போலியான பாசத்தைத்தான் உணர்வது போலிருந்தது. ஆனால்… அவளிடத்தில் மாத்திரம் ஏதோ ஓர் விசித்திரமான வகையான உணர்வுகளை அவனால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஏன்? இதுவரை வாழ்வில் பார்த்த பெண்களில் வித்தியாசமானவளாகத் தெரிந்தான்ள்.

“யூவி… என்ன வேணாலும் சொல்லு பட்… ச்சீன்னு மட்டும் சொல்லாதடி. மறசு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று அவன் அவளது கைப் பிடித்து இழுத்தவனின் கண்களில்தான் எத்தனை வலியும் வேதனையும். அதை எதுவும் யோசிக்க்தவள் அவன் கையை உதறியவளிட்டு முன்னேறிச் சென்றாள்.

அதில் எரிச்சலானவன் “ஆமாம்டி… உன்னை தொல்லை பண்ணதான் அப்படி செஞ்சேன். இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற? அதுதான் சொல்றேன்ல… விளையாட்டாதான் பண்னேன்னு. புரிஞ்சிக்க மாட்டியா? இடியட்.” என்றான் அவள் முகத்தினருகே நெருங்கி கனல் விழியோடு.

“உனக்கு விளையாட்டா? என் வாழ்க்கை உனக்கு விளையாட்டா?” என கத்தியவளைப் பார்த்துவிட்டு அப்போதுதான் உணர்ந்தான் வழி மாறி வந்ததையும் சூரியன் மேற்கில் மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்து கொள்வதையும். செவ்வானம் மஞ்சள் பூசி மேகங்கள் கலைய ஆரம்பாத்தன.

அவள் பார்வை வானத்தை நோக்குவதைப் பார்த்தவன் தன்னிலை வந்து “யூவி… ரொம்ப இருட்டிடுச்சு. இது காட்டு வழிப் பாதை. நாம வழி தவறி வந்துட்டோம்னு நினைக்கிறேன். சோ… நீ அப்படியே வந்துடு… இருட்டாகுறதுக்குள்ள நாம வீட்டுக்கு போய்டனும். இல்லன்னா ஆபத்து.” என்றதும் அவள் அதை காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.

அவள் முன்னேறி நடக்க கடுப்பானான் ஆதி. “வீட்டுக்கு வந்து எவ்ளோ சண்டை வேணாலும் போடு. இப்போ வாடீ. இங்க ஆபத்தான சிறுத்தை இருக்குன்னு சொல்றாங்க. ஏற்கனவே ஏழு பேற அது கொன்னுட்டதால யாரையும் இந்த காட்டுப் பகுதிக்கு போக வேணாம்னு சொன்னாங்க. என்ட் வைல்ட் லைப் டிப்பார்ட்மென்ட்னால யாராவது இந்த சிறுத்தைய கொன்னா ஜெய்ல் தண்டனைன்னும் தெரிவிச்சிருக்காங்க. சோ… நம்மள அது அட்டேக் பண்ண வந்தாலும் நம்மால எதுவும் பண்ண முடியாது யூவி.” என்றதும் அவனைத் திரும்பிப் பார்த்தவள்

“பொய்… பொய்… பொய்… வாய திறந்தா பொய்.” என கத்தியவள் சற்று தூரம் செல்ல

“நான் சொல்லிட்டே இருக்கேன். நீ போய்ட்டே இருக்க. நில்லுடி… நில்லு… ஏய் லூசு…” என்று பல்லைக் கடித்தவனுக்கு அவளுக்கு ரெண்டு அறை வைக்க வேண்டும் போலிருந்தது.

“யாருடா லூசு? யாருடா லூசு? நான் லூசுன்னா அப்போ நீ யாருடா?” என அவள் அவன் அருகே வந்து நின்று அவனுக்கு மேல் எகிறினாள். அடுத்த கனம் சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. உடனே தனது காதை தேய்த்தவள்

“என்ன அந்த சத்தம்?” என்றாள் அவனிடம்.

“சிறுத்தை…. அப்போ ஏழு பேர். இப்போ ரெண்டு பேர். மொத்தம் ஒன்பது பேர். நாளைய நிவ்ஸ்ல வரப் போது. நீயும் நானும்… அப்படின்னு.” என்றான் நக்கலாக. அவளுக்கு திக்கென்று ஆனது. இருந்தாலும் அவனை நம்ப முடியவில்லை.  இவன் சொல்கிறான் என எண்ணி அவனை முறைத்து விட்டு முன்னேறிச் சென்றவள் சில நிமிடத்தில் உறைந்து அப்படியே நின்று விட்டாள்.

தொண்டை வரண்டு தாகத்தில் விக்கல் எடுத்தது. அருகிலிருந்த நீரோடை சலசலவென சத்தமிட்டு ஓடுவதை கூர்ந்து கேட்டவளுக்கு இன்னும் தாகம் எம்பியது. எந்த ஒரு பயமும் இல்லாமல் தண்ணீர் குடிப்பதற்காக சென்றாள் காட்டினுள்ளே.

“நான் சொல்ல சொல்ல கேட்காம நீ போற. ஆனால் நீ சிறுத்தை கிட்ட வசமா மாட்ட போற பாருடீ…” என்றுவிட்டு தைரியாக சொல்லியவன் அங்கேயே நின்றுவிட்டான்.

அவள் உள்ளே சென்று ஓடும் நதியில் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்க பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. பின்னால் திரும்பி பார்க்காமலே “நீ வருவன்னு எனக்கு தெரியும். உனக்கு என்னதான் பிரச்சினை? அதுதான் என் மூஞ்சில முழிக்காதன்னு சொல்றேன்ல?” என்று திட்டியவாறே திரும்பி பார்த்தாள்.

நூலிடைவெளியில் நின்றிருந்தது அந்த வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கலந்த சிறுத்தை. சிறுத்தையை கண் எதிரில் நூல் இடைவெளியில் பார்த்தவளுக்கு பயம் அல்லு விட்டது. இதயத் துடிப்பு கண்ட மாதிரி எகிற உயிர் தன்னிடமில்லை. சிறுத்தை அழகாக இருந்தாலும் அதன் அழகை ரசிக்கத்தான் முடியவில்லை. கண்ணு முழி பிதுங்கியது. கைகள் நடுங்கின. உதடுகள் பயத்தில் கடகடவென்ளு ஆடின. அது தனது வலது கையை உயர்த்தி யூவியின் முகத்தில் கீற எத்தனித்து வாயை பிளந்து கோரமாக இரத்தம் படிந்திருந்த பற்களைக் காட்ட

“ஆஆஆஆ…” என்பதை தவிர யூவிக்கு வாயில் எதுவுமே வரவில்லை.

“ஆதிஇஇஇஇஇ…” என கையால் காதைப் பொற்றி கண்களை மூடி குட்டி நாக்கு தெரியுமளவு கத்திவிட்டாள்.

“இவ சொல்ல சொல்ல கேட்காம உள்ள போயிட்டா. இன்னும் திரும்பி வரலயே. ஒரு வேளை… சிறுத்தை…” என்று யோசித்தவனுக்கு அவள் குரல் கேட்க

“ஐய்யய்யோ…” என்றவாறு உள்ளே ஓடினான். வேகமாக ஓடி வந்து ப்ரேக் போட்டது போல நின்றவனின்ன கால்கள் இலைச் சருகுகளில் சருக்கிக் கொண்டு வந்து நான்றது. தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவளின் அருகே கொலைப் பசியோடு நின்றது சிறுத்தை.

ஆதியைக் கண்டதும் சிறுத்தையிடமிருந்து காலையும் கையையும் தள்ளித் தள்ளி பின்னால் நகர்ந்து சென்றவள் “ஆதி… ப்ளீஸ்… காப்பாத்து… காப்பாத்துடா… ப்ளீஸ்டா…” என பயத்தில் நடுங்கியவாறே கத்தியவளுக்கு கண்களில் உயிர் பயம் உறைந்து போனது.

“சொல்ல சொல்ல கேட்காமலாடி போன… கொஞ்ச நேரம் மரண பயத்துவ சாவுடீ…” என அருகிலிருந்த மரக் கட்டையில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

“அடப் பாவி இது என் உயிர் பிரச்சினைடா… சரியான நேரத்துல கால வாரி விட்டுடாதடா… நமக்குள்ள இருக்கிறத வேற மாதிரியும் தீத்துக்கலாம். ஆனால் ப்ளீஸ் இந்த சிறுத்தைக்கிட்ட மாட்டி துடிச்சு துடிச்சு சாக நான் விரும்பலடா. ப்ளீஸ்டா… காப்பாத்துடா…” என கெஞ்சி நடுங்கியவளை இன்னும் கோரமாக பார்த்து நாக்கை வெளியே நீட்டியது சிறுத்தை.

மரத்திலிருந்து ஒரு கட்டையை உடைத்தவன் யூவியின் முகத்தை கீற குறி பார்த்து நிற்கும் அச் சிறுத்தையின் பின்னால் எறிந்து அதை திசை திருப்பினான். சத்தம் வந்ததை எண்ணி அதுவும் ஆதியின் பக்கம் திரும்பிக் கொண்டது.

அவள் இதுதான் நேரம் என்று ஓடிவிட்டாள் ஒரே ஓட்டம். பயம் உயிரை உருவி எடுக்க ஒரு மரத்தின் பின் சென்று ஒழிந்து கொண்டவள் அப்போதுதான் அவனைப் பற்றி யோசித்தாள். “நம்மள காப்பாத்த போய் அவன் மாட்டிக்கிட்டானே. இப்போ எப்படி இவன காப்பாத்துறது?” என யோசித்தவாறே மரத்தின் பின் நின்று எட்டிப் பார்த்தாள்.

கோபம் கொண்ட சிறுததை ஒரே பார்வையில் அவன் மீது பாய்ந்து விட்டது.
“காப்பாத்தினதும் எஸ்கேப் ஆகிட்டேல்லடி… இங்க நான் எப்படி போனாலும் உனக்கு கவலை இல்லல்ல…” என அவன் மார்பின் மீது காலை வைத்த சிறுத்தையைப் பார்த்து அவளை வஞ்சித்தான்.

“இவனுக்காக யோசிச்ச என்ன சொல்லனும்.” என்று மனதில் நினைத்தவள்

“ஹா… அப்படிதான். நீ எப்படி போனா எனக்கு என்ன? I don’t care.” என்று வேண்டும் என்றே வெறுப்பேற்றினாள்.

அவளை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் கண் எதிரே கொலை வெறியில் அவன் மார்பில் கை அவன் மேல் ஏறி நின்று கொண்டிருந்த சிறுத்தையின் முகத்தில் வேகமாக கையாலேயே உச்ச கட்ட ரௌத்திரத்துடன் பல்லைக் கடித்து ஓங்கி குத்த அதன் வாய் கோணிக் கொண்டு இரத்தம் சொட்டியது.

வலித்ததில் இன்னும் கோபமான சிறுத்தை தன் முன்னம் கையால் அவன் தோள்ப் பட்டையை வேகமாக பாய்ந்து கிழிக்க தசைகள் கிழிந்து இரத்தம் தெறித்தது. “ஆஆஆ….” எனக் கதறியவன் தோள் பட்டையை பிடித்துக் கொள்ள அதே போல் கழுத்தையும் கிழித்து விட்டது.

இனிமேல் விட்டால் சிறுத்தை அவனை கொன்றுவிடும் எனத் தெரிந்தவள் அவனுக்கு எதிரில் வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் “யூவி நீ தப்பிச்சு போய்டு. இது ரொம்ப கொடூரமானது. நம்மல்ல யாராவது ஒருத்தர் உயிரோட இருந்தாகனும். அதனால ப்ளீஸ் சொல்றத கேளு. நீ போடி… இன்னொரு ஜென்மம்னு இருந்தா சந்திப்போம்.” என்று அவன் கூறியதும் அவளுக்கு கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. அவளுக்காக இப்படி வந்து சிறுத்தையிடம் மாட்டிக் கொண்டானே. அவன் சொல்ல சொல்ல கேட்காமல் உள்ளே சென்ற அவளைத்தான் அவள் மனம் திட்டித் தீர்த்தது.

“நீ எப்படி அப்படி சொல்வ? என்னால முடியாது. நான் உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன். என்னாலதானே எல்லாமே. நீ சொல்றத கேட்காம நான்தான் காட்டுக்குள்ள வந்துட்டேன். அதுக்காக நீ சாகுறத என்னால அனுமதிக்க முடியாது.'” என அழுதவள் தன் கைகள் இரண்டையும் தட்டி சிறுத்தையை தன் பக்கம் திசை திருப்பினாள்.

“யூவி… நீ பைத்தியம் மாதிரி பண்ணிட்டு இருக்காதடி. முதல்ல இங்க இருந்து போ… நான் செத்தேன்னா எங்க வீட்டுல யாரும் கவலை பட மாட்டாங்க. ஏன்னா அவங்க யாருக்கும் என் மேல பாசம் இல்லை. ஆனா… உனக்கு எதுவும் ஆச்சுன்னா எல்லாருமே கவலைப்படுவாங்க யூவி. ப்ளீஸ்… இங்க இருந்து போய்டுடி…” எனக் கத்தியவனுக்கு அவள் மேல் கோபம்தான் எழுந்தது.

“இன்னும் கொஞ்ச நாள்ல நானே செத்து போய்டுவேன்டா. அதுக்கு இப்போவே செத்தாலும் பரவாயில்லை. பட் நீ ரொம்ப நாள் வாழ வேண்டியவன். உன்ன என்னோட சுயநலத்துக்கு நான் இரையாக்க மாட்டேன்.” என மனதில் யோசித்தவள்

“என்ன மன்னிச்சிடுடா. நீ வாழனும். உனக்காக நிறைய பேர் இருக்காங்க. நீ இல்லன்னாலும் இருப்பாங்க. ஆனால் எனக்காக யாரும் இல்ல ஆதி. என் விதி இதோட முடியனும்னு எழுதியிருக்கு. எனக்காக நீ ஒன்னே ஒன்னு பண்ணா போதும். அதுதான் என் கடைசி ஆசன்னு கூட வெச்சிக்கோ. பல்லவிய கல்யாணம் பண்ணிக்கோ.” என அவள் கூறியதும் சிறுத்தை அவள் மேல் பாய்ந்தது.

அவனுக்கு ஆத்திரம் இன்னும் உச்ச எல்லைக்குப் போனது. நரம்புகள் விடைத்தன. “நீ இப்படி எல்லாம் பேசினேன்னா நானே உன்ன கொன்னுடுவேன்டீ… ஏன்னா நான் என் மனசு சொல்றத மட்டும்தான் கேட்பேன். இது எங்க அக்கா சொல்லி கொடுத்தது.” என்றவன் யூவியின் கழுத்தை பிடித்து கீறிக் கொண்டிருந்த சிறுத்தையை தன் பின் போக்கெட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து லோர்ட் செய்து குறி வைக்க

“வேணாம்… தயவு செஞ்சு அத கொன்னுடாத. அதுவும் ஒரு உயிர்தானே.” என வலியில் உதட்டைக் கடித்தவள் அவனிடம கூறியதும் அவன் அதை எல்லாம் கேட்காமல் அதனது காலில் சூட் செய்திருந்தான்.

குண்டடிபட்ட வேகத்தில் சிறுத்தை வலியில் பாய்ந்து கீழே மடிந்தது. இன்னும் கோபம் கொண்ட சிறுத்தை அவன் மேல் பாய்ந்து பயங்கரமாக தாக்க உடனே அதன் கழுத்தை பிடித்து தள்ளி நிலத்தில் சாய்த்தவன் இரத்தம் சொட்ட சொட்ட அதன் முகத்தில் குத்தி அதை தடுமாற செய்தான்.

அது வலியில் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் “சீக்கிரம் வாடீ.” என அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான் காட்டுக்குள். அதுதான் விடுவதாக தெரியவில்லை. நொன்டி நொன்டி அவர்களின் பின்னே படுவேகமாக துரத்திக் கொண்டிருந்தது. இருவராலும் அதன் வேகத்திற்கு தாக்குப் பிடிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் யூவியால் சுத்தமாக முடியவில்லை. கால் தடக்கி கீழே விழுந்து விட்டாள். மூச்சுத் திணறலும் தலைசுற்றலும் மயக்கமும் சேர்ந்து முற்றிலும் பாதிக்கப்பட்டாள்.

நோயின் காரணமாக அதிகமாக வியர்வை சிந்தக் கூடாது, மூச்சு வாங்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட கூடாது, அதிகமாக ஓடக் கூடாது என்ற வைத்தியரின் அறிவுரையை மீறியதால் வந்த விபரீதம்…

அவள் தலையை மடியில் போட்டுக் கொண்டவனுக்கு அவள் நிலை கண்டு உயிர் போய் உயிர் வந்தது. அவளின் வேகமாக துடிக்கும் இதயத்தின் லப் டப் சத்தம் அவன் காதிற்குள் எதிரொலித்தது. “என்னாச்சு? Are you okay?” என அவன் பதறிப் போய் கேட்க

“நோ… என்னால என் கால அசைக்கவே முடியல. I think, loss of function.” என்றதும் துடிதுடித்துப் போய்விட்டான். கண்களில் வேதனை வெம்பி வழிந்தது. மனம் பாரத்தை சுமப்படு போல் கனமாயிருக்க இதயத்திற்குப் போகூம் மூச்சுக் குழாய் அடைத்தது போல் உணர்வு.

அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “வாட்? இங்க பாரு… நம்ம உடனே இங்க இருந்து தப்பிச்சு ஆகனும். இல்லன்னா செத்துடுவோம். அது வேற கொலை வெறில துரத்திட்டு இருக்கு. சோ… ட்ரை பண்ணு ப்ளீஸ். உன்னால முடியும்டி.” என்றான் அவனுக்குள் இருந்த வலியை மறைத்துக் கொண்டு.

“என்னால முடியாது. நான் சாகதான் போறேன். நீ என்ன விட்டுடு. இங்க இருந்து நீயாவது தப்பிச்சி போ. உனக்கான வாழ்க்கை இன்னும் மிச்சம் இருக்கு. ஆனால் எனக்கு அப்படி இல்ல. எனக்காக நீ உன் உயிர ஆபத்துல போட வேணாம். ப்ளீஸ்… இங்க இருந்து போ ஆதி. உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்.” என்று பதறித் துடித்தவளின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

“இங்க பாரு… செத்தா ஒன்னாவே சாவோம். வாழ்ந்தா ஒன்னாவே வாழ்வோம். என்னால எல்லாம் உன்ன இப்படி தனியா விட்டு போக முடியாது. சாவுக்கு ஒன்னும் எனக்கும் பயம் இல்லை.” என்று அவள் கன்னத்தைத் தட்டியவன் அவளில்லாமல் வாழவே முடியாது என்ற முடிவுக்கே வந்துவிட்டான். அவள் வாயிலிருந்து இரத்தம் வெளியேறியது.

“யூவி… உனக்கு ஏன் இப்படி எல்லாம் பண்ணுதுடி…” என்று பயத்தில் உறைந்தவன் கை முழுக்க இரத்தம்
அதிக இரத்தம் உடலிலிருந்து வெளியேறியதால் மயங்கி விழுந்துவிட்டாள்.

அவன் விடுவதாக இல்லை. அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டவன் ஒரு முடிவோடு வாழ்வா சாவா என்ற நிலையில் ஓட ஆரம்பித்தான். ஓடினான்… ஓடினான்… ஓடிக் கொண்டே இருந்தான். ஒரு வழியாக அந்த சிறுத்தை அதிக இரத்த இழப்பில் கீழே சுருண்டு விழுந்துவிட்டது.

அருவியின் அருகில் இருந்த ஓர் மரத்தின் அடியில் அவளை படுக்க வைத்தான் ஆதி. இருள் சூழ்ந்து கொண்டது. எங்கும் இருட்டு. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யாரும் இல்லை. முழு நிலவின் வெளிச்சம் மாத்திரம் பரவியிருக்க ஓநாய்கள் ஊளையிடும் சத்தம் ஒரு விதமான கிலியைப் பரப்பிக் கொண்டிருந்தது. முழுநிலவின் வெளிச்சம் பட்டுத் தெறித்து வைரமாய் ஜொலித்த அவள் மாசற்றை மூகத்தைப் பார்த்து அப்படியே இதயம் உருகிப் போனான்.

“எழுந்துடுடி சீக்கிரம். பயமா இருக்கு.” என்று தூங்கிக் கொண்டிருந்தவளின் இதழில் அழுத்தமாக முத்தம் பதித்தவனுக்கு அவள் நிலை கண்டி உயிர் உள்ளே பனியாய் உருகியது.

“யூவி… யூவி…” என மெதுவாக அவள் முகத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான். அவள் எழும்புவதாகவே இல்லை. பயந்து போனவன் அருகிலிருந்த நதியில் நீரை அள்ளி அவள் முகத்தில் தெளித்தான். அப்போதும் அவள் எழும்புவதாக தெரியவில்லை. அவளது கைகளைப் பிடித்து நாடியை பரிசோதித்துப் பார்த்தான். அவள் இதயத் துடிப்பு தெரியாததால் அவன் இதயமே நின்றுவிட்டது.

“யூவி… யூவி….” என்று முனகியவன் பதறி அவசரமாக அவளது இதயத்தின் அருகே காதை வைத்து இதயத் துடிப்பை கேட்டான். துடிப்பும் இருந்ததாக அறிகுறியில்லை.

“நோ… நோ… யூவி… எதுக்காக இப்படி பண்ண? ஏன்டி என்னை விட்டுட்டுப் போன? ஏன் என்ன தனியா விட்டு போய்ட்டி? நீ இப்படி பண்ணுவேன்னு நான் சத்தியமா எதிர்ப்பாக்கவே இல்லையேடி யூவி. நான் உன்னை எவ்ளோ…” என நிறுத்தியவன்

“நான் உன்ன எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுமாடீ… I love you… I love you…” என அவள் கையை எடுத்து நெஞ்சில் வைத்து கத்தி அழுது கரைந்தவன் நெஞ்சம் வெடிப்பது போல் இருந்தது.

“உனக்குதான்டி ஏன் மேல காதலே இல்லை. இப்படி எதுக்காகடி பண்ண? என்னோட அக்காவ உன் உருவத்துல பாத்தேன் தெரியுமா? ஆனால் நீயும் கடைசில என்ன தனியா விட்டு போய்ட்டியேடீ… தனிமை எவ்ளோ கொடுமையான தண்டனை தெரியுமா? அத நீ எனக்கு கொடுத்திருக்க கூடாதடி. நான் எவ்ளோ மோசமானவனா இருந்தேன் தெரியுமா? அதுக்கு காரணம் தனிமைதான்டி. ஆனால் நீ என்கூட சண்ட போட்டு என் தனிமையை போக்கின. எனக்குள்ள இருந்த உண்மையான ஆதிய திரும்பவும் வெளில கொண்டு வந்துட்ட. என்னோட அக்கா செத்தப்போ எவ்ளோ வலிச்சதோ அவ்ளோ வலிக்கிதுடி யூவி. எனக்குன்னு இருந்த ஒரே ஒரு உறவும் நீதான். இப்போ நீயும் என்ன விட்டு போய்டடா நானும் செத்துருவேன்டி. நான் உன்கிட்ட ஜஸ்ட் விளையாடினேன் யூவி. அவ்ளோதான். எனக்கு நீதான் ஆதித்யா மாமா பொண்ணுன்னு ஏற்கனவே தெரியும்டீ.” என அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் அவள் முகமெங்கும் முத்தமிட்டு கண்ணீர் விட்டுக் கரைந்தான்.

தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!