வருவாயா என்னவனே : 46

5
(5)

காத்திருப்பு : 46

 

விக்கியிடம் வந்த காளி “ஐயா நம்ம சரக்கு ஏற்றிவந்த lorry ஐந்தும் எரியுதுங்க”

 

“என்ன சொல்ற காளி யாரோட வேலை அது?”

 

“ஐயா தெரியல “

 

“போலீஸா”

 

“இல்லை ஐயா இன்னைக்கு நம்ம சரக்கு வர்றது யாருக்குமே தெரியாது”

 

“அப்புறம் எப்பிடிடா நடக்கும்?”

 

“நான் காலைல விசாரிக்கிறன் ஐயா:

 

“சரி அந்த சூர்யா எங்க?”

 

“அவன் கோட்டைக்கு போயித்தான் ஐயா”

 

“தனியாவா?”

 

“இல்லை பொண்டாட்டி புள்ளை அம்மா கூட போயிருக்கான்”

 

“சரி அவன் ஊருக்கு வரட்டும் அவனுக்கு இருக்கு கச்சேரி”

 

“நான் போகட்டுமா ஐயா?”

 

“போ காலைல வா காளி”

 

“சரி ஐயா” என்றவன் செல்ல விக்கி யோசனையுடன் தூங்கச் சென்றான்.

 

மதுரா இல்லம்………..

 

தன்னவன் மார்பினை மஞ்சமாக்கி தூங்கிக்கொண்டிருந்த வதனா மெதுவாக கண் விழித்தாள். நேரத்தைப் பார்க்க மணி ஏழைக் காட்டியது. அதில் அடித்துப்பிடித்து எழ முயன்றவளை தடுத்தது அவளவனின் கரங்கள்.

 

“மாமா விடுங்க நேரமாச்சி”

 

“எனக்கு தூக்கம் வருது கண்ணம்மா பேசாம இரு”

 

“நீங்க தூங்குங்க மாமா. நான் போறன் என்னை விடுங்க. அத்தை என்ன நினைப்பாங்க மாமா?”

 

“ஒண்ணும் நினைக்கமாட்டாங்க. நான் தூங்க நீ வேணும் கண்ணம்மா”

 

என்றவனிடமிருந்து முயன்று எழுந்தவள் குளியலறைக்குச் சென்றாள். ஒரு சிரிப்புடன் தலையணையை கட்டிக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தான் சூர்யா. குளித்துவிட்டு கீழே வந்த வதனாவிடம் “காப்பி தரட்டுமாடா?”

 

“இல்ல அத்தை வேண்டாம் ஆதி எங்க?”

 

“தீரா போன் பண்ணாமா பேசிட்டு இருக்கான்”

 

சரி அத்தை நான் போய் பார்த்திட்டு வர்றன்

 

“நதிமா அழக்கூடாது. நான் சொன்னா கேப்பாதானே”

 

“ஆமா”

 

“அப்போ அழாம சமத்தா இருக்கணும் நான் சீக்கிரமா வந்திடுவன் சரியா?”

 

“சரி எப்ப ஆதி வருவ?”

 

“சீக்கிரமா வந்திர்றன்டா சரியா அத்தம்மா எங்க?”

 

“பக்கத்தில இருக்காங்க”

 

“போனை குடு நதிமா”

 

“சரி அம்மா ஆதி பேசணுமாம்”

 

“ஆதி கண்ணா”

 

“அத்தைமா நதிய அழ வைக்காம இருங்க சரியா?”

 

“நான் என்னடா பண்ணன்”

 

“அவ லேட்டா எந்திரிச்சனு திட்டினன் அது தப்பாடா?”

 

“பரவால்ல அத்தம்மா அவ சின்ன பொண்ணுதானே அவள நீங்க திட்டினா நான் எங்க கூட கூட்டிட்டு வந்திடுவன்”

 

“சரிடா இனி திட்டலை சரியா”

 

“குட் அத்தைமா”

 

“நதிகிட்ட குடுங்க”

 

“இந்தாடி”

 

“ஆதி”

 

“நதிம்மா நீ இனிமேல் அம்மா திட்டமாட்டாங்க சரியா?”

 

“சரி ஆதி”

 

“நான் அப்புறம் பேசுறன் சரியா?”

 

“சரி bye”

 

“bye”

 

“ஆதி என்ன பண்றீங்க?”

 

“அம்மா நதிகூட பேசிட்டு இருந்தன் என்ற ஆதி நடந்தவற்றை சொன்னான். அதைக் கேட்டு சிரித்த வதனா “சரிடா தங்கம் போய் உங்க அப்பாவ எழுப்பிவிடுங்க”

 

“சரிமா ” என்றவன் தந்தையின் அறைக்குள் வந்தான்.மெல்ல கட்டிலில் ஏறியவன் தந்தை அருகில் வந்து “அப்பா எந்திரிங்க ” என்றான் சூர்யா எழும்பவில்லை.

 

தனது தந்தையின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டு “அப்பா டைம்மாச்சி எந்திரிங்க” என்றதும் தன் மகன் முத்தத்தில் எழுந்தான் சூர்யா.

 

“ஆதி கண்ணா என்னடா புதுசா முத்தம்கொடுத்து எழுப்புற அப்பாவ?”

 

“அம்மா இப்பிடித்தான்பா என்ன எழுப்புவாங்க”

 

“ஹா…….ஹா….. சரிடாமா இருங்க அப்பா குளிச்சிட்டு வர்றன்”

 

“சரிப்பா நான் வெயிட் பண்றன்”

 

சூர்யா குளித்துவிட்டு வந்தவன் வாடா கண்ணா போலாம் என்றவன் மகனை கீழேஅழைத்து வந்தான். தன்னவளை காணாது “கண்ணம்மா” என்றான்.

 

சமையலறையிலிருந்த வதனா “மாமா இருங்க வர்றன்” என்றாள். தன் மகன் கண்ணம்மானு அழைத்ததிலேயே இருவருக்கும் இடையிலான பிரச்சனை முடிந்துவிட்டது என்பதை உணர்ந்த மதி சந்தோசமடைந்தார்.

 

“மாமா வாங்க சாப்பிடலாம்.ஆதி வாடாமா”

 

“சரி அம்மா எங்க கண்ணம்மா”

 

“அத்தை சாப்பாடு எடுத்து வைக்கிறாங்க வாங்க”

 

அனைவரும் ஒன்றாக இருந்து சாப்டனர்.

 

சாமிமலை……

 

“டேய் என்னடா சொல்ற?”

 

“ஆமாங்க ஐயா நம்ம சரக்கு வண்டிய கொளுத்தினது சூர்யாவோட ஆளுங்கதான்.”

 

“சூர்யா உன்ன சும்மா விடமாட்டன்டா. நான் எப்பவும் உங்கிட்ட தோத்துப்போயிட்டு இருக்கன் இந்த தடவை தோத்துப்போகவே மாட்டன். காளி”

 

“ஐயா”

 

அவனிடம் ஏதோ சொன்னான். “ஐயா இப்போ எப்பிடி முடியும்”

 

“முடியும் நான் சொன்னத செய்ய தயாரா இரு மத்ததை நான் பார்த்துக்கிறன்”

 

“சரி ஐயா”

 

தேவி வீட்டில்……….

 

“ரதிமா இன்னைக்கு செக்கப் இருக்கு மறந்திராதடா”

 

“உங்க கூடவே வர்றனே அத்தான்.”

 

“இல்லடாமா எனக்கு இன்னைக்கு முக்கியமான கேஸ் இருக்குடா. அதுதான் உன்ன கூட்டிட்டு போறது கஸ்ரம்டா”

 

“போங்க நான் வரமாட்டன்”

 

“என்ன ரதிமா “

 

“அண்ணா நீங்க கவலப்படாதீங்க அண்ணிய நான் கூட்டிட்டு வர்றன்”

 

“ஓகே சந்தனா. ரதி வந்திடு”

 

“அப்பா நானும் வரட்டுமா?”

 

“நீ எதுக்குடாமா நான் இன்னொருநாள் கூட்டிட்டு போறன்.”

 

“சரிப்பா”

 

“தனா”

 

“சொல்லுங்க தேவ் நான் கம்பனிக்கு போயிட்டு வர்றன் “

 

“சரிங்க மதியம் அண்ணிய கூட்டிட்டு hospital போகணும் வாங்க”

 

“சரிமா “

 

“வர்றன் தேவிமா”

 

“சரிணா.”

 

“bye தீராகுட்டி”

 

“bye மாமா”

 

மதுரா இல்லம்…….. 

 

“அப்பா”

 

“சொல்லுடா தங்கம்”

 

“நம்ம எப்பப்பா ஊருக்கு போறம்?”

 

“ஏன் ஆதி கேக்கிற?”

 

“நதிய பார்க்கணும்பா “

 

“ரெண்டுநாள்ல போலாம் ஆதி”

 

“சரிப்பா”

 

“தீராகூட பேசினியா ஆதி?”

 

“ஆமாப்பா காலைல பேசினன்.”

 

“சரிடா கண்ணா” எனும் போது போன் வர அதை on பண்ணி காதில் வைத்த சூர்யா அதில் சொன்ன செய்தியைக் கேட்டவன்.

 

“வது நாம உடனே சாமிமலை போறம் அம்மாகிட்ட சொல்லி சீக்கிரம் ரெடியாகு” என்றவன் யாருக்கோ போன் பண்ண சென்றான்.

 

 

சூர்யாவுக்கு போனில் சொன்ன செய்தி என்ன???

 

காத்திருப்புத் தொடரும்…………….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!