நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 04

4.8
(12)

காதல் : 04

“நீ வேற யாரையாவது விரும்புறியா….?” என சக்தி சத்தியாவிடம் கேட்டான். 

அதற்கு சத்தியா “ஐயோ இல்லை… பெரியையா…..” என்றாள். 

“அப்பிடியா.. அப்போ நம்ம கல்யாணம் நடக்கட்டும்….” 

“பெரியையா… நான் என்ன சொல்றேன்னா….?” 

“எதுவும் சொல்ல வேணாம்… வெள்ளிக்கிழமை கல்யாணத்துக்கு தயாரா இரு….” என்று அழுத்தமாகக் கூறினான். 

“சரி பெரியையா…..” 

“இருட்டிட்டு வருது நேரத்திற்கு வீட்டுக்குப் போ…..”

“சரி….” 

அவள் சென்றதும் யோசனையில் ஆழ்ந்தான். 

பெரிய வீட்டில்………………

“எதுக்குப்பா அவனுக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கிறீங்க…..?”

“வேற என்னடா பண்ணச் சொல்ற….? அவன் இங்க இருந்தா எங்களோட உயிருக்கு ஆபத்து என்று யோசியர் சொன்னதால சின்ன வயசில இருந்தே வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்க வச்சி படிக்க ஏற்பாடு செஞ்சேன்… பிறகு வெளிநாடு போனான்.. அங்க என்ன நடந்திச்சினு தெரியாது திரும்ப இங்க வந்திட்டான்… வந்ததில இருந்து அவன் எங்கிட்ட வித்தியாசமா நடந்திக்கிட்டு இருக்கிறான்.. அவனை எப்பிடியாவது இந்த வீட்ல இருந்து அனுப்பணும்னு பார்க்கிறன் ஆனால் முடியலை… 

அவன் இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் அது எனக்கு ஆபத்துதான்…. அந்த யோசியர் சொன்னா சொன்ன மாதிரி நடக்கும்… அதுதான் இதை பயன்படுத்திக்கிட்டன்…. ஏற்கனவே குடிகாரனா இருக்கிறான்…. இப்போ பொண்ணு பிரச்சனை வேற….. இவனுக்கு கல்யாணம் பண்ணணும்னு உங்க அம்மா சொல்லிட்டு இருக்கிறா….. இவனுக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க….? அதுதான் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவெடுத்தோம்.. இன்னொன்னு தெரியுமா….? அவன் இனிமேல் இந்த வீட்டிற்கே வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டான்…..”

“அதுவும் நல்லதுதான் அப்பா….” என்றவன் தனது அறைக்குச் சென்றான்.. 

“என்ன சத்தியா சொல்ற……?”

“ஆமா அம்மா.. பெரியையாவே சொன்னாரு இந்த கல்யாணம் நடக்கும்… எதுவும் பேசாம இருட்டுறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போ என்றாரு அம்மா….”

“என்ன சொல்றதுனே தெரியல்லை சத்தியா…..”

“விடும்மா… பாவம் பெரியைய்யா….” 

“உண்மைதான் சத்தியா…. சக்தி ஐயாவை யாருமே நம்புறாங்க இல்லை.. ஐயா ஏதோ ஒரு காரணத்துக்காகதான் அந்த வேலையை விட்டுட்டு வந்திருக்கிறாரு…. அது இவங்களுக்கு புரியலை……”

“நம்மளால என்னம்மா செய்ய முடியும்…..?”

“சத்தியா நீ சக்தி ஐயாவை நல்லா பார்த்துக்க சரியா…. அவரு கோவப்பட்டாலோ உன்னை அடிச்சாலோ நீ அவர நல்லபடியா பார்த்துக்க… அவருக்கு பிடிக்காத எதையும் செய்யாத சரியா…..?”

“சரி அம்மா…..”

அறைக்குள் வந்த ரகு யாருக்கோ அழைப்பு விடுத்தான்… 

“என்ன ரகு…..?”

“இங்க நான் ஒன்னு நினைச்சா வேற ஒன்னு நடக்குது என்ன பண்ணட்டும்….?”

“கொஞ்ச நாளைக்கு எதுவும் பண்ணாத… ஆனால் சக்தியை உன்னோட குடும்பத்தவங்க வெறுக்கிறமாதிரி பண்ணிட்டே இரு……”

“இங்க அம்மா மட்டும்தான் அவனுக்கு சப்போர்ட்…. தாத்தா அப்பா எல்லாம் என்னோட பக்கம்தான்…..” 

“சரி மீதியை நாம மீட் பண்றப்போ பேசலாம்……” 

“சரி நான் போனை வைக்கிறேன்…..”

“ம்….” 

“அம்மா பசிக்குது சாப்பாடு…..” என்றான் ரகு. 

“வா எடுத்து வைக்கிறன்…. “

“அப்பா… தாத்தா.. வாங்க சாப்பிடலாம்……”

“ம்ம்ம்…. வர்றோம்…” என்றவர்கள் வந்து அமர அவர்களுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தார் சகுந்தலா. 

“நீங்க சாப்பிடலையா அம்மா…..?”

“இல்லை ரகு சக்திக்கு சாப்பாடு அனுப்பிருக்கேன்… அவன் சாப்பிட்டானா இல்லையானு தெரியாது பிறகு எப்பிடி நான் சாப்பிடுறது……?”

“போங்க அம்மா அவன் தான் யாரும் தேவையில்லை என்று சொல்லிட்டானே…. பிறகு எதுக்கு அவனுக்கு சாப்பாடு அனுப்பினீங்க…?” 

“ஆயிரம்தான் இருந்தாலும் அவன் என் பிள்ளை…” என சொல்லிக்கொண்டிருக்கும் போது கந்தன் வந்தான்.. 

“என்ன கந்தா சக்திக்கு சாப்பாடு குடுத்திட்டயா… சாப்டானா….?”

“குடுத்தேன்மா… ஆனால் ஐயா சாப்பாடு வேணாம் எடுத்துட்டு போனு சொல்லிட்டாரு…..”

“சரி நீ போ…..”

“சரிம்மா……”

“பார்த்தீங்களா உங்க பிள்ளையை… நீங்க பாசமா குடுத்தீங்க… ஆனால் அவன் வேணாம்னு அனுப்பிட்டான்….. நீங்க சாப்பிடுங்க முதல்ல……” என்றவன் சென்றுவிட்டான்… 

சகுந்தலா எதையும் சாப்பிடாது எடுத்து வைத்து விட்டு போய் படுத்துவிட்டார்… 

இரவு நேரத்தில் வானில் தெரியும் விண்மீன்களை பார்த்தபடி தோட்டத்து வீட்டிற்கு முன் இருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தான் சக்தி… அவனது மனசுக்குள் பலவித எண்ணங்கள்… பலவிதமான உணர்வுகள்….. 

“ஏன் என்னை யாரும் புரிஞ்சிக்கிறாங்க இல்லை… என் மேல உண்மையான அன்புகாட்ட யாரும் இல்லையா……? இல்லை சக்தி உனக்கு யாரும் வேணாம்…… இங்கே உண்மையான பாசம் காட்டுறவங்க யாரும் இல்லை….” என்று நினைத்துக் கொண்டு இருந்தான். அதை நினைத்து அவன் கவலைப்படவில்லை. மாறாக கோபமே வந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

அந்த அமைதியான நேரத்தில் கொலுசு சத்தம் கேட்டது. கொலுசு சத்தம் கேட்டதும் அவன் எண்ணங்களில் வந்து சென்றாள் சத்தியா. ‘அவள் எப்படி இந்த நேரத்தில வருவாள்…..? வேற யாரோ போல…’ என்று நினைத்தவன் திரும்பிப் படுத்துக் கொண்டான். 

ஆனால் சத்தம் மிக அருகில் கேட்டது. அங்கே பார்க்க அவனருகில் வந்து நின்றாள் சத்தியா. அவளைப் பார்த்ததும் ஒருநிமிடம் நிம்மதி வந்தது. பின் சற்று முன் நினைத்தது ஞாபகம் வந்தது. உடனே தனது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான். 

“இங்க எதுக்கு வந்த…..?” 

“சாப்பாடு கொண்டு வந்தேன் பெரியையா….” 

“எனக்கு எதுக்கு நீ சாப்பாடு கொண்டு வந்த……?” 

“இல்லை நீங்க சாப்பிடலைனு கந்தன் அண்ணே சொல்லிச்சி அதுதான் கொண்டு வந்தேன்….” 

“கந்தனை நீ எங்க பார்த்த…..?” 

“அதுவந்து… நான் எங்க ஆட்டுக்குட்டியை காணலைனு தேடிட்டு வரும்போது கந்தன் அண்ணனை பார்த்தேன்…. அப்போதான் சொன்னாரு… அதுதான் உடனே வீட்டுக்கு போய் இருந்ததை வச்சி சமைச்சிக் கொண்டு வந்தேன்……”

“எனக்குப் பசியில்லை.. சாப்பாடு வேணாம்…..”

“ஐயா அப்பிடிச் சொல்லாதீங்க… ராத்திரி சாப்பிடாம படுத்தா பத்து யானையோட பலம் குறைஞ்சிடும்னு சொல்லுவாங்க…. நல்ல தூக்கமும் வராது….”

“அதுதான் சொல்றேன்ல வேணாம்னு…” என்று சத்தமிட்டான். 

“என்னை சத்தம் போடுங்க… வேணும்னா ரெண்டு அடி கூட அடிங்க… ஆனால் சாப்பிடாம மட்டும் இருக்காதீங்க…..” என்றாள் அவனை இறைஞ்சும் பார்வை பார்த்தபடி. அவளது பார்வை அவனைத் தாக்க. 

“சரி எடுத்து வை” என்றான்… 

“சரி பெரியையா…” என்றவள் வேகமாக இலை வைத்து அதில் சாப்பாட்டை பரிமாறினாள். அவனும் வயிறு நிறைய சாப்பிட்டான். சாப்பாடு எப்படி இருந்தது என்று சத்தியாவும் கேட்கவில்லை. சாப்பாடு பற்றி சக்தியும் எதுவும் சொல்லவில்லை. சாப்பிட்டு முடித்தான்.

“பெரியையா நான் ஒண்ணு சொல்லட்டுமா…..?” 

“என்ன….?” 

“நீங்க தப்பா நினைக்கலைனா நான் நாளைக்கும் சாப்பாடு எடுத்திட்டு வரட்டுமா…..?” 

“சரி…” 

“சரி நான் போயிட்டு வர்றேன்……” 

“இரு கொஞ்ச தூரம் நானும் வர்றேன்…..” 

“உங்களுக்கு எதுக்கு சிரமம் பெரியையா நானே போயிடுவன்…” 

“இந்த இருட்டில தனியா போயிடுவியா…..? ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடுச்சினா… பேசாம வா நானே வீடுவரைக்கும் வந்து விட்டுட்டு வர்றேன்….” என்று அழுத்தமாக கூறினான். அவளும் எதுவும் கூறாமல் “ம்….” என்றாள்.. 

அவன் முன்னே நடக்க இவள் பின்னால் வந்தாள். 

“பெரியையா என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா…..?”

“உன் மேல எதுக்கு கோபப்படணும்….?”

“இல்லை என்ன காப்பாத்த நீங்க வந்ததால்தானே இந்த நிலமை….”

“அப்பிடி இல்லை… உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா…? இல்லை அவங்க உன்னை மிரட்டினாங்களா…..?” 

“மிரட்டலை பெரியையா… ஆனால் கல்யாணம் பண்ணியேயாகணும்னு அம்மாகிட்ட சொன்னாங்களாம்….”

“அதனால்தான் நீ சம்மதிச்சியா…? இல்லைனா இந்த குடிகாரன கல்யாணம் பண்ணிக்க எப்பிடி நீ சம்மதிப்ப…..? நீ இல்லை வேற யாரும் சம்மதிக்க மாட்டாங்க…..”

“இல்லை பெரியையா… இப்போ குடிக்காதவங்கனு யாரு இருக்கா…? அவங்க சொன்னதால மட்டும் நான் சம்மதிக்கலை… உங்களை வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்லை பெரியையா அதனால எதுவும் சொல்லலை….” 

அவளது பதிலைக் கேட்ட சக்திக்கு வியப்பாக இருந்தது. ‘இந்த ஊரில இருக்கிற பெரும்பாலான ஆட்கள் என்னை குடிகாரனாகப் பார்க்கிறாங்க. ஆனால் இவ மட்டும் ஏன் இப்பிடி சொல்றா….’ என நினைத்தவனை கலைத்தது அவளது குரல் 

“பெரியையா அதோ வீடு வந்திருச்சி.. நான் போயிட்டு வர்றேன்….”

“சரி… “

“நீங்க கவனமா போங்க பெரியையா….” 

“ம்…” என்றவன் சற்று தள்ளி இருந்த அவளது வீட்டிற்கு அவள் போகும் வரை பார்த்திருந்துவிட்டே சென்றான்… 

“என்னடி ஐயா சாப்டீங்களா….?” 

“முதல்ல வேணாம்னு தான் சொன்னாரு….. பிறகு ஒரு மாதிரியா சாப்பிட வச்சிட்டன்மா…”

“சரி பிள்ளை…. நீ போய் படு…..” 

“சரி அம்மா….” 

“கடவுளே என் பொண்ணோட வாழ்க்கை நல்லா இருக்கணும்…” என்று கடவுளை வேண்டிக் கொண்டு படுத்தார்…

அடுத்த நாள் காலை விடிந்தது…… 

“அம்மா நான் டவுன் வரைக்கும் போயிட்டு வர்றேன்…….” 

“சரி ரகு சாப்பிட்டு போ….” 

“இல்லை அம்மா எனக்கு வேண்டாம்… எனக்கு முக்கியமான வேலை இருக்கு… நான் வேலையை முடிச்சிட்டு டவுன்லேயே சாப்பிடுறேன்…..” 

“ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லது இல்லை ரகு….” 

“அம்மா சொன்னா புரிஞ்சிக்கோங்க அம்மா… நான் அங்கேயே சாப்பிடுறேன்…. நேரமாகுது நான் போயிட்டு வர்றேன்….”

“சொன்னா கேட்கவா போற….? கவனமா போயிட்டு வா….”

“சரி அம்மா……”

காலை சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்துவிடும் சக்தி இன்று சூரியன் உதித்த பின்னரே எழும்பினான். 

“நல்ல தூக்கமா ஐயா…..?”

“நீ எப்ப கந்தா வந்த…..?”

“நீங்க தான் ஐயா தோட்டத்திலே வேலை இருக்கு நேரத்துக்கே வரச் சொன்னீங்க….? நான் வந்து பார்த்தன் நீங்க தூங்கிட்டு இருந்தீங்க ஐயா…..” 

“தூங்கினா எழுப்புறதானே கந்தா….” என்று கத்தினான்.. அதில் பயந்த கந்தன் 

“ஐயா நான் எழுப்பலாம்னு வந்தேன்… ஆனா.. சத்தியா பிள்ளை பெரியையா அசந்து தூங்குறாரு எழுப்பாதீங்க அண்ணா… அவங்களா எழுந்துக்கட்டும்….” என்று சொன்னா ஐயா. 

“அவ இங்க வந்தாளா…..?”

“ஆமா ஐயா…. வந்து உங்களுக்கு சாப்பாடு குடுத்திட்டு நீங்க எழும்பின பிறகு குடுக்க சொல்லிட்டு போயிட்டா…..”

“ம்…. நீ போய் தோட்டத்தில களை எடுக்கிற வேலையை பாரு… நான் குளிச்சிட்டு வர்றேன்…..” என்றவன் குளித்துவிட்டு சத்தியா கொண்டுவந்த உணவையும் உண்டுவிட்டு களை எடுக்கச் சென்றான்.. 

ஹோட்டல்……………. 

“ஹாய் ரகு…….”

“ஹாய் ஜீவி…..”

“என்ன ரகு….. அங்க என்ன நடக்குது…?”

“அதை ஏன் கேக்கிற ஜீவி….” என்றவன் ஆரம்பத்தில் இருந்து சொல்லாமல் சத்தியா என்ற பொண்ணுக்கும் சக்திக்கும் வெள்ளிக்கிழமை கல்யாணம் என்று சொல்லி முடித்தான்.. 

“என்ன சொல்ற சக்திக்கு கல்யாணமா…..?” 

“ஆமா ஜீவி…… நீ வீறாப்பாக உன்னை அவனால மறக்க முடியாது… உன்னையே நினைச்சிட்டு பைத்தியம் மாதிரி திரிவான்னு சொன்னே…..?” 

“ஆமா ரகு….. அப்பிடி என்னை அவன் சுத்தி சுத்தி லவ் பண்ணான்….. ஆனால் எனக்கு அவன் மேல இன்ரெஸ்ட் இல்லை… உன்னை தான் நான் லவ் பண்ணேன்….”

“அது எனக்கு தெரியாதா…..? ஆனால் நாம லவ் பண்றது அவனுக்கு தெரியாது ஜீவி……”

“அது நமக்கு நல்லது… இப்போ நான் சொல்ற மாதிரி செய் சரியா….?” என்றவள் தனது திட்டத்தைக் கூறினாள். 

“சரி ஜீவி அப்பிடியே பண்ணிடலாம்…..” என்றான் ரகு. 

ஜீவிதாவின் திட்டம் என்ன?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!