நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 07

5
(12)

காதல் : 07 

“சுமதி இங்க தங்கிக்கிறயா…..?” என சுமதியிடம் சக்தி கேட்டான். அதற்கு சுமதி, “இருக்க இடமே இல்லாத எனக்கு இந்த குடிசையும் கோயில்….” என்றாள். இவளது பதிலைக் கேட்ட சத்தியாவும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். 

“உங்களுக்கு பிரச்சனை இல்லைனா நீங்க இங்கேயே எங்ககூடவே இருங்க…..”

“சரி…..” 

“சத்தியா இவங்ககூட பேசிட்டு இரு நான் பக்கத்து வீட்டுக்கு கொஞ்சம் போயிட்டு வர்றேன்…..”

“நீங்க எதுக்கு போறீங்கனு தெரியும்…. எங்களுக்கு எதுவும் வேண்டாம்…. நாங்க வார வழியில டீ குடிச்சிட்டு தான் வந்தோம்…..”

“அதில்ல பெரியையா….”

“சொன்னா கேளுங்க…..”

“சரி ஐயா…….”

“சரி நான் வர்றேன்…. சுமதி இங்க இரு….. உனக்கு ஏதும் தேவைப்பட்டா எங்கிட்ட கேளு…. இப்போதைக்கு வெளியே வராத சரியா…..”

“சரி……”

“பார்த்துக்கோங்க……”

“சரி பெரியையா…..”

“இங்க வாங்க……” என்று சரஸ்வதியை அழைத்தவன். தான் வாங்கி வந்த சில்க் புடவை இரண்டை அவருக்கு கொடுத்தான். 

“இது என்ன ஐயா……?”

“கல்யாணத்துக்கு கட்டிக்கோங்க…..”

“ஐயோ! இதெல்லாம் வேண்டாம் ஐயா…..”

“நான் சொல்றதைக் கேளுங்க….” என்றான். அதன் பின்னரே சரஸ்வதி வாங்கிக்கொண்டான். 

“இது உனக்கு கல்யாணத்துக்கு கட்ட பட்டுப்புடவையும் அப்புறமா கட்ட இரண்டு சில்க் புடவையும் இருக்கு…..” 

“பெரியையா எதுக்கு இப்பிடியெல்லாம்…..?” 

“பேசாம வாங்கிக்கிறயா…..” 

“சரி பெரியையா உங்களுக்கு….?” 

“எடுத்தாச்சு……”

“பெரியையா இவங்களுக்கு……?”

“எடுத்து குடுத்துட்டேன்…….”

“சரி……” 

சக்தி சென்றதும் சத்தியா சுமதி அருகில் சென்றாள். 

“உங்க பேரு சுமதியா….? என்னோட பேரு சத்தியரூபா என்னை எல்லோரும் சத்தியானு கூப்பிடுவாங்க….. நீ இங்க உன் வீட்ல இருக்கிற போல இருக்கலாம்…. என்ன நாங்க வசதியில குறைஞ்சவங்க…..” 

“ஐயோ இருக்கவே இடம் இல்லாத எனக்கு இந்த இடம் கிடைச்சதே பெரிய விசயம்….. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு…..”

“அப்பிடியா அதுசரி.. நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே…..”

“இல்லை சொல்லுங்க……”

“பெரியையாவுக்கு சாப்பாடு எடுத்திட்டு போகணும் நான் போய் சமைக்கிறேன்….. நீங்க இங்க உட்காந்திருக்கிறீங்களா……? சாப்பாடு குடுத்திட்டு வந்த பிறகு நாம பேசலாம்……”

“நான் வேணும்னா உங்களுக்கு உதவி பண்ணவா………?”

“நீங்க உட்காருங்க நான் பார்த்துக்கிறேன்…..” 

“அம்மா…..”

“என்னம்மா எதுவும் பேசாம இருக்கிறீங்க…..?”

“இந்த பிள்ளை இங்க எப்பிடி தூங்கும்னு யோசிக்கிறேன்……”

“ஐயோ அதை யோசிக்காதீங்க அம்மா.. நான் உங்களை அம்மானு கூப்பிடலாமா…..?”

“தாராளமா கூப்பிடுமா….. நீயும் எனக்கு சத்தியா மாதிரிதான்….”

“நானும் உங்ககூட இங்கையே தூங்குறேன். அதையெல்லாம் யோசிக்காதீங்க…..”

“சரிமா சுமதி……”

“அம்மா நீயும் சுமதியும் பேசிட்டு இருங்க நான் சமையல் வேலையை பார்க்கிறேன்……” என்றவள் சமையல் வேலையை பார்க்கச் சென்றாள். 

சுமதியை சத்தியா வீட்டில் விட்டு வந்த சக்தி தோட்டத்து வீட்டில் இருந்தான். 

சுமதியைப் பார்த்ததால் பழைய ஞாபகங்கள் வந்தன. அதை மறைப்பதற்காக குடிக்க நினைத்த சக்தி வீட்டினுள் சென்று பியர் போத்தலை எடுத்து வந்து குடிக்க ஆரம்பித்தான். 

குடித்தும் பழைய நினைவுகள் வருவதை தடுக்க முடியவில்லை. இதனால் சக்திக்கு கோபம் அதிகரித்தது. கோபத்தோடு மொத்த போத்தலையும் குடித்து முடித்தான். 

“அம்மா….. சுமதி…… நான் போய் பெரியையாவுக்கு சாப்பாடு குடுத்திட்டு வர்றேன்….. நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க……” 

“மழை வார மாதிரி இருக்கு சத்தியா குடைய எடுத்திட்டுப் போ…..” 

“அதெல்லாம் வராது….. குடை தேவையில்லை அம்மா…. ” 

“சொன்னாக் கேளுடி……” 

“சரி சரி சத்தம் போடாத குடையை எடுத்திட்டுப் போறேன்…..” என்றவள் குடையையும் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு சக்தியின் தோட்ட வீட்டிற்கு சென்றாள். 

அங்கே சக்தியின் கைகளில் ரெத்தம் வருவதைப் பார்த்தவள் சாப்பாட்டை திண்ணையில் வைத்துவிட்டு அவனருகே ஓடினாள். 

“என்ன பெரியையா நடந்திச்சி….? ஐயோ கையில இரத்தம் வருகுதே….. கையை காட்டுங்க ஐயா…..”

ஏற்கனவே கோபத்தில் இருந்த சக்தி சத்தியா அவனது கையைப்பிடிக்கவும் அவளை தள்ளி விட்டான். 

“ஏய் தள்ளிப் போ….. என்னைத் தொடாத…..” 

“சரி பெரியையா நான் பக்கத்தில வரலை….. ஆனால் வாங்க மருந்து போடலாம்…..” 

“என்ன என்மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிறியா……?”

“என்ன ஐயா இப்பிடி சொல்றீங்க…..?” 

“வேற எப்பிடி சொல்ற… என்கூட நல்லா பேசுவீங்க அப்புறம் வேற ஒருத்தனைப் பார்த்ததும் அவன் பின்னாடியே போயிரு வீங்க….” 

“பெரியையா என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க…. ஆனால் முதல்ல காயத்துக்கு மருந்து போடலாம்… பெரியையா ரொம்ப இரத்தம் போகுது பெரியையா….” என்று கதறினாள். 

சக்திக்கு கோபம் அடங்கவில்லை. ஒரு மனசு அவள் பக்கம் சாய்ந்தாலும், மறு பக்கம் அவன் பட்ட கஷ்டம் ஞாபகம் வர அவள் புறம் சாய இருந்த மனதை இறுக்கி பிடித்தான். 

எதுவும் பேசாமல் நின்ற சக்தியை பார்த்த சத்தியா யோசிக்காமல் அவன் காலில் விழுந்தாள். “பெரியையா உங்க கால்ல விழுந்து கேட்கிறேன் கைக்கு மருந்து போட வாங்க……” என்று அழுதாள். 

தனது காயத்திற்கு மருந்திட தனது காலிலையே விழுந்து அழும் சத்தியாவைப் பார்த்த சக்திக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, எதுவும் பேசாது தனது கையை அவள் புறம் நீட்டினான். 

அவன் கையை நீட்டியவுடன் அதைப் பிடித்துப் பார்த்த சத்தியா தனது தாவணியின் நுனிப்பகுதியை கிழித்தாள். அதை வைத்து இரத்தத்தை முழுமையாக துடைத்தாள். 

பின்னர் சக்தியை அழைத்துச் சென்று வீட்டினுள்ளே இருந்த கயிற்றுக் கட்டிலில் அமர வைத்தவள், சமையலறைக்குச் சென்று மஞ்சள் கொஞ்சம் எடுத்து வந்து காயத்தின் மீது வைத்துவிட்டு, கட்டுப்போட துணியை தேடினாள். அங்கே துணி எதுவும் தென்படாததனால் மீண்டும் தனது தாவணியின் நுனிப் பக்கத்தினை மீண்டும் கிழித்து அவனது கைக் காயத்திற்கு கட்டுப்போட்டாள். 

இதையெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான் சக்தி. அவன் என்ன நினைக்கிறான் என்று சத்தியாவுக்கு புரியவில்லை. அவனது காயத்திற்கு கட்டுப்போட்டு விட்டு நகர்ந்து நின்ற போதுதான் அவளுக்கு வித்தியாசமான ஒரு வாசனை வந்தது.. 

மூக்கினால் வாசம் பிடித்து பார்த்தாள். எங்கிருந்து வருகிறது என்று சுற்றிமுற்றிப் பார்த்தாள். 

“என்ன பண்ற நீ……?” 

“இல்லை பெரியையா….. ஏதோ ஒரு வாசம் வருகுது….. அது எங்க இருந்து வருகுதுனு பார்க்கிறேன்……” 

தனது தலையில் அடித்துக்கொண்ட சக்தி “அது எங்கிட்ட இருந்துதான் வருது……..” 

“உங்ககிட்ட இருந்தா வருது…….?” 

“ஆமா…. நான் குடிச்சிருக்கேன் அந்த வாசம்தான் அது……”

“போங்க பெரியையா பொய் சொல்லாமல்….. குடிச்சா இப்பிடி வாசம் வராது….. அது வேற மாதிரி வரும்…..”

“ஓ… உனக்கு அதெல்லாம் தெரியுமோ…….?” 

“தெரியும் பெரியையா…….” 

“உனக்கு எப்பிடித் தெரியும்……? நீ குடிச்சிருக்கிறயா…..?”

“நான் குடிக்கலை பெரியையா…. நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பா குடிச்சிட்டு வருவாரு…. அப்போ ஒரு மாதிரி வாசம் வரும். எனக்கு குமட்டிட்டு வரும் பெரியையா….. அதனால எனக்கு தெரியும் குடிச்சா எப்பிடி வாசம் வரும்னு……”

“ஏய் அது சாராயம் டி…. இது பியர் இதுல அந்தளவுக்கு வாசம் வராது…..”

அவன் அவளை உரிமையாக டி போட்டு அழைத்ததை அவளும் உணரவில்லை அவனும் உணரவில்லை. 

“ஓ… அப்பிடியா பெரியையா எனக்கு தெரியாது……”

“உனக்கு என்னதான் தெரியும்……?”

“எனக்கு அது தெரியாமல் இருக்கிறது நல்லதுதானே பெரியையா… சரி சாப்பிடலாம் வாங்க…… “

“எனக்கு பசிக்கலை…. சாப்பாடு வேண்டாம்……” 

“இரவில் சாப்பிடாமல் படுக்க கூடாது பெரியையா… வாங்க நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்……”

“நான் இந்த கையோட எப்பிடி சாப்பிடறது…..? எனக்கு வேண்டாம்…..” 

“அதுதான் உங்களுக்கு பிரச்சனையா……? கொஞ்சம் இருங்க வர்றேன்……” என்றவள் ஒரு தட்டில் இடியப்பம் வைத்து கறியும் சம்பலும் ஒருபுறம் வைத்து கொண்டு வந்தாள். சக்தி அருகே நின்றவள், 

“ம்…. வாயை திறங்க பெரியையா…..” என்றபடி தனது கையால் சாப்பாட்டை எடுத்து அவனுக்கு ஊட்ட தயாரானாள். சக்தி திகைத்தபடி சத்தியாவைப் பார்த்தான். 

“என்ன பெரியையா பார்க்கிறீங்களா….? நீங்க இந்தக் கையோட எப்பிடி சாப்பிடுவீங்க….? அதுதான் நான் போய் இப்பிடி கொண்டுவந்தேன்….. நான் ஊட்டுறன் நீங்க வாயை திறந்து வாங்கிக்கோங்க பெரியையா……” 

“இல்லை… வேண்டாம்……” 

“பெரியையா இந்த கையோட நீங்க சாப்பிடுறது கஸ்டம்… ஆபத்துக்கு பாவம் இல்லை பெரியையா வாங்கிக்கோங்க……”

“ம்…….” என்றவன் வாயைத் திறந்து சத்தியா குடுத்த உணவை வாங்கிக்கொண்டான். 

இதனை பார்த்த இருவிழிகள் வேகமாக அங்கிருந்து சென்றது. 

“அப்பா… தாத்தா…. வேகமா இங்க வாங்க…..”

“என்னடா இப்பிடி சத்தம் போடுற…..?” என்றபடி வந்தார் முத்து.

“ஏன்டா கத்துற…..?”என்றபடி வந்தார் சௌந்தர பாண்டியன். 

“ஐயோ உங்க ரெண்டுபேருக்கும் ஒரு விசயம் தெரியுமா…… ?” 

“என்னனு சொன்னால் தானேடா தெரியும்……” 

“தாத்தா அங்க தோட்ட வீட்ல நடக்குற கூத்தை நீங்களே வந்து பாருங்க…..” 

“இந்த நேரத்தில அங்க எதுக்குடா….? அங்கதான் அந்த வீணாப்போனவன் இருக்கிறானே…..”

“அப்பா எங்கூட கொஞ்சம் வாங்க….?” 

“எதுக்குடா இந்தப்பாடு படுத்துற….?”

“பிளீஸ் தாத்தா.. அப்பா வாங்க போகலாம்…..”

“சொன்னா கேட்கவா போற…. சரி வா……”

“வாங்க சீக்கிரமா…..” என்றவன் அவர்களை அழைத்துக்கொண்டு தோட்ட வீட்டிற்கு வந்தான். 

சக்திக்கு சாப்பாட்டினை ஊட்டி விட்டு கைகழுவி வந்த சத்தியா தனது கையினால் குனிந்து நின்று சக்தியின் வாயினை துடைத்தாள். 

சக்தி கட்டிலில் இருந்ததான் சத்தியா குனிந்து நின்று அவனது வாயைத் துடைத்தாள். இதனை வெளியில் நின்று பார்த்த ரகு மற்றும் இருவருக்கும் சக்தியும் சத்தியாவும் முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது போல இருந்து. மூவருக்கும் கோபம் வர, 

“என்ன கூத்து இங்க நடக்குது……?” என்று முத்துப்பாண்டி போட்ட சத்தத்தில் திரும்பி பார்த்தாள் சத்தியா. சக்தியும் அவர்களை பார்த்துவிட்டு சத்தியாவைப் பார்த்தான். பின், 

“என்ன இப்ப நடந்ததுன்னு சத்தம் போடுறாங்க……?” 

“கல்யாணத்துக்கு முன்னாடியே இப்பிடி கூத்தடிக்கணுமா…..?” 

“இங்க யாரு என்ன பண்ணாங்க…?”

“அதுதான் நாங்க கண்ணால பார்த்தமே ரெண்டுபேரும் முத்தம் கொடுத்திட்டு இருந்ததை….. ” 

“ஐயா….. அப்படியில்லை…” என்று நடந்ததை சொல்ல வந்த சத்தியாவை தனது பார்வையாலேயே பேசாமல் இருக்குமாறு கூறிய சக்தி பேச ஆரம்பித்தான். 

“அதுதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ல பிறகு நாங்க எப்பிடி இருந்தா உங்களுக்கு என்ன….? நீங்க எதுக்கு இங்க வந்தீங்க….?”

“கல்யாணத்துக்கு முன்னாடியே இப்பிடி இருக்கிறத யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க…..? இந்த குடும்பத்தோட கௌரவம் என்னாகும்…..?” 

“ஓ… கௌரவம் அதைப்பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை….

இது என்னோட வீடு நான் இங்க எப்பிடி வேணும்னாலும் இருப்பேன் அதை கேட்கிற உரிமை யாருக்கும் கிடையாது…..” என்றான் சக்தி. 

இங்கு நடப்பதை பார்த்து பயந்துகொண்டிருக்கும் சத்தியாவைப் பார்த்த ரகு அவளை அவமானப்படுத்த நினைத்து, 

“அப்பா ஆம்பளைனா அப்பிடி இப்பிடித்தான் இருப்பான்…. ஆனால் இவ, அது கல்யாணத்துக்கு முன்னாடி இப்பிடி இருக்கிறது தப்புன்னு சொல்ல வேண்டாம்….. இவளும் பேசாம இருக்கிறா…. இதுலையே தெரிய வேண்டாம், இவ எப்பிடி பட்டவன்னு…..” என்று சத்தியாவைப் பற்றி ரகு தப்பாக பேச சத்தியா அழ சக்திக்கு வந்த கோபத்தில் ரகுவுக்கு பளார் பளார் என அறைந்து கொண்டிருந்தான்.

“யாரைப் பார்த்து என்ன சொல்ற….?” என்றவன் அவனது கன்னங்களில் மாறி மாறி அறைய ஆரம்பித்தான். முத்துப்பாண்டி, சௌந்தர பாண்டி இருவராலும் அவனை தடுக்க முடியவில்லை ரகுவைப் புரட்டி எடுத்து விட்டான். ஏற்கனவே காயம் பட்ட சக்தியின் கையிலிருந்து இரத்தம் வருவதைப் பார்த்த சத்தியா அவனருகில் வந்து “வேண்டாம் பெரியையா விட்டுடுங்க….. உங்க கையில் இருந்து இரத்தம் வருது பெரியையா விட்டுடுங்க…..” என்றாள். 

சத்தியா கூறிய பிறகும் மேலும் இரண்டு அறைகளை கொடுத்துவிட்டே ரகுவை விட்டான். 

“இங்க நீங்க நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலை….. ஆனால்…..” என்றவன் செய்த செயலில் அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!