அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 4🔥🔥

4.9
(16)

பரீட்சை – 4

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

எங்கே போனாயோ…

என்றுன்னை

தேடி தேடி

என் ஆவி

திரியுதடி

 

குழல் விட்டு

போனதே

இசை காற்று…

 

மலர் விட்டு

போனதே

நறுமணம்..

 

திரி விட்டு

போனதே

தீப ஒளி …

 

உடல் விட்டு

போனதே

என்னுயிர் …

 

#############

 

எங்கே போனாயோ..? என்னுயிரே..!!

 

“நான் தேஜுவை கூப்பிட்டேனா?” என்று கேட்ட ராம் சரணைப் பார்த்து மகாவும் அதிர்ச்சிக்குள்ளானாள்..

 

“ஆமா.. அவ தான் சொன்னா.. என் ஆளு கூப்பிட்டிருக்காருன்னு.. அதனால நீங்க தான் கூப்பிட்டீங்கனு நான் நினைச்சேன்” என்றாள் மகா.. பிறகு திடீர் என்று நினைவு வந்தவளாக “ஹான்.. எதோ சர்ப்ரைஸ் கொடுக்க போறீங்கன்னு சொன்னா” என்றாள்..

 

“சர்ப்ரைஸா?” என்று கேட்டவனின் முகத்தில் குழப்ப முடிச்சுக்கள் விழுந்தன.. சட்டென தன் கைபேசி எடுத்து பார்த்தான்.. அதில் தேஜூவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு பிறகு அழிக்கப்பட்டிருந்தது..

 

“மகா என் ஃபோன்ல இருந்து யாரோ தேஜுக்கு மெசேஜ் அனுப்பிட்டு அதை டெலிட் வேற பண்ணி இருக்காங்க எனக்கு தெரிய கூடாதுன்னு.. ” என்று அவன் சொல்லவும் “ஐயோ அப்படின்னா இதை யாரோ வேணும்னே அனுப்பி இருக்காங்களா?” என்று கேட்டாள் மகா..

 

“யார் இப்படி பண்ணி இருப்பாங்க? காலையிலிருந்து என் கூட சிவா தான் இருந்தான்.. அப்புறம் நாங்க டீ கடைக்கு போனோம்.. கரெக்ட்… அங்க தான் ஒருத்தர் என் ஃபோன் மாறி போச்சுன்னு சொல்லி எடுத்துட்டு போயிட்டாரு.. அப்புறம் அஞ்சு நிமிஷம் கழிச்சு கொண்டு வந்து என்கிட்ட திருப்பி கொடுத்தார்.. அப்படின்னா அவன் தான் அனுப்பிச்சிருக்கணும்.. மகா தேஜூவை யாரோ கடத்திட்டாங்கன்னு நினைக்கிறேன்” படபடப்பாய் கூறினான் ராம்சரண்..

 

“ஐயோ.. என்ன சொல்றீங்க ராம்? நீங்க சொல்றதை கேட்டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. யாரும் எதுக்கு அவளை கடத்தணும்? அவளுக்கு யாரு எதிரி?” புரியாமல் கேட்டாள் மகா..

 

“தெரியல மகா.. அவளை மாதிரி ஒரு ஸ்வீட் பர்சன் இந்த உலகத்திலேயே கிடையாது.. அப்படி இருக்கும்போது அவளை யார் கடத்திருப்பாங்கன்னு தெரியல.. சரி.. நம்ம டிலே பண்ண வேணாம்.. நான் உடனே போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வரேன்.. நடந்ததை சொல்லி..”

 

அவன் கிளம்பவும் சட்டென்று திரும்பியவன் “அப்புறம் மகா.. இந்த விஷயம் இப்போதைக்கு ஸ்கூல்ல யாருக்கும் தெரிய வேண்டாம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்.. அவசரப்பட்டு யாருக்கும் இதை சொல்லிடாதீங்க.. இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள போலீசால ஏதாவது கண்டுபிடிக்க முடியுதான்னு நான் பார்க்கிறேன்..”

 

மகாவிடம் சொல்லிவிட்டு காவல் நிலையம் நோக்கி தன் வண்டியை செலுத்தினான் ராம்சரண்..

 

############

 

 

 

சுவற்றில் தான் யாரோ ஒருவனுடன் சேர்ந்திருப்பது போல் இருந்த படத்தை பார்த்த தேஜஸ்வினி அப்படியே மயங்கி விழுந்தாள்.. அவளை அப்படியே தன் இரு கைகளால் தூக்கி சென்று அங்கே இருந்த படி வழி இறங்கி ஒரு அறைக்குள் இருந்த கட்டிலில் அவளை பூ போல கிடத்தினான் அந்த படத்தில் தேஜூவுடன் இருந்த அருண் என்கிற அருண்குமார்…

 

அங்கிருந்த ஒரு குவளையில் இருந்து தண்ணீரை எடுத்து அவள் கண்களை துடைத்து விட்டவன் அவள் எழும்பியதும் “இப்ப பரவாயில்லையா அஸ்வினி டியர்?” என்று கேட்டான்..

 

தேஜூவோ அதிர்ச்சியில் அப்படியே எழுந்து அமர்ந்தவள் “அஸ்வினி டியரா? ய்..ய..யா..யாருடா நீ? என்னை எதுக்கு இங்க கொண்டு வந்து இருக்க?” பயந்தவளாய் கண்களை விரித்து விழித்து கேட்டாள்..

 

அவள் கன்னத்தில் தன் கையை வைத்து “டென்ஷன் ஆகாதமா.. ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதே..”

 

அவன் மென்மையாய் சொல்லவும் அவன் கையை தட்டி விட்டவள் “டேய்.. மேல கை வச்ச கொன்னுடுவேன்..”

 

அவனை பிடித்து தள்ளி அந்த கட்டிலில் இருந்து இறங்கி வாசல் நோக்கி ஓடினாள்..

 

அப்போது அவள் பின்னிருந்து அவன் அழைத்த பெயரை கேட்டதும் அவள் தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது..

 

“கொஞ்சம் நில்லுங்க மிஸஸ். தேஜஸ்வினி அருண்குமார்.. ” என்று அவளை அழைத்திருந்தான் அவன்..

 

அப்படியே நின்ற இடத்தில் உறைந்தவள் மெல்ல திரும்பி அவனை பார்த்து “தேஜஸ்வினி அருண்குமாரா..? ஏய்.. என் புருஷன் பேரு ராம்சரண்.. டேய் ராஸ்கல்.. முதல்ல என்னை கொண்டு போய் என் புருஷன் கிட்ட விடு..” என்றாள் தீ பறக்கும் கண்களோடு..

 

“நீ உன் புருஷன்கிட்டதான்மா இருக்க.. நான் தான் உன் புருஷன்..” என்று கூலாய் சொன்னான் அவன்..

 

“நீ யாருன்னே எனக்கு தெரியல.. நீ என் புருஷன்னு சொல்ற? உனக்கு ஏதாவது பைத்தியம் புடிச்சிருக்கா? ஏண்டா இப்படி பண்ற? யாருடா நீ? இப்ப நீ என்னை வெளில விடல.. நானே வெளியில போய் போலீஸ் கிட்ட சொல்லி உன்னை புடிச்சு கொடுத்துடுவேன்..”

 

சத்தமாக சிரித்தவன் “அஸ்வினி செல்லம்.. நீ இப்ப வெளியில போனேனா கோவிலுக்கு போய் இருக்கிற உன்னோட ஸோ கால்ட் மாமனார் மாமியார் திரும்பி வீட்டுக்கு போக மாட்டாங்க.. பரவாயில்லையா? ” என்று தன் நெற்றியை இரு விரலால் வருடியபடி கேட்டான்..

 

அப்படியே தன் கையை எடுத்து வாய் மேல் வைத்தவள் “ஐயோ.. ப்ளீஸ்.. அவங்களை எதுவும் பண்ணிடாத.. நான் எங்கேயும் போகல.. தயவு செஞ்சு அவங்களை ஒன்னும் பண்ணிடாத…” பதறினாள் அவள்..

 

“ரொம்ப நாள் கழிச்சு என் வைஃப் என் வீட்டுக்கு வந்திருக்கே… நான் இதை செலிப்ரேட் பண்ணனும்னு நினைக்கிறேன்.. வா.. நம்ம போய் கேக் கட் பண்ணலாம்” என்று சொன்னவன் வந்து அவள் கையை பிடிக்க அவன் கையை உதறியவள் அவனை தீயாய் முறைத்தாள்..

 

“எனக்கு ரெண்டு சின்ன சின்ன பசங்க இருக்குடா.. அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல்ல இருந்து வந்து என்னை தேடுவாங்க.. ப்ளீஸ்.. என்னை விட்டுடு.. திடீர்னு எங்க இருந்துடா வந்த.. யாருடா நீ? என்னை எதுக்கு இப்படி கடத்தி வச்சிருக்க?”

 

அவள் சரமாரியாக கேள்வி கேட்க “உன்னோட எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.. அதுக்கு முன்னாடி என்னோட வந்து கேக் கட் பண்ணி என்ஜாய் பண்ணு.. குழந்தைங்க பத்திரமா வீட்டுக்கு போய்டும்.. அவங்களை பத்தி நீ கவலையே பட வேண்டாம்..” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு போய் அந்த கேக் முன்னே நிற்க வைத்து பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து அவளிடம் கொடுத்தான்..

 

இப்போது அதில் எழுதி இருந்த அஸ்வினி என்ற பெயரை பார்த்ததும் அவளுக்கு வெறுப்பாக இருந்தது.. கத்தி எடுத்தவள் அந்த கேக்கை குத்தி குத்தி கிளறினாள்..

 

“நான் இங்க என் புருஷனை விட்டுட்டு பிள்ளைகளை விட்டுட்டு எதுக்கு இங்க வந்திருக்கோம்னு தெரியாம பைத்தியக்காரி மாதிரி துடிச்சிட்டிருக்கேன்.. உனக்கு கேக் வெட்டிக் கொண்டாடணுமா? இதே கத்தியால உன்னை குத்தி கொன்னுடுவேன்டா.. மரியாதையா என்னை விடுடா.. ” என்றாள் அவள் கத்தியை அவனை நோக்கி நீட்டிக்கொண்டு..

 

“அஷ்ஷு டியர்… யாருக்கும் தெரியாம உன்னை கொண்டு வந்து இவ்வளவு பெரிய வீட்ல வெச்சிருக்கேன்.. எனக்கு உன் பிள்ளைகளையோ உன்னோட அந்த டெம்ப்ரரி மாமனார் மாமியாரையோ கொண்டுவந்து உன் கண்ணு முன்னாடி இங்க வச்சு எதுவும் பண்ணறதுக்கு முடியும்.. இது உனக்கும் புரியும்ன்னு நினைக்கிறேன்.. அனாவசியமா அவங்க மேல எனக்கு ஏற்கனவே இருக்கிற கோவத்தை இன்னும் அதிகப்படுத்தாத.. ஏற்கனவே உன்னோட வாழ வேண்டிய வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிறேன்.. இன்னொரு முறை நான் அதை இழக்க தயாரா இல்லை.. சரி.. கேக்கை நல்லா கிளறி விட்டுட்டே.. இப்ப என்ன பண்ற உன் கையாலே அதை எடுத்து என் வாயில ஊட்டி விடுறே..”

 

அவள் “முடியாது” என்று மறுக்க தன் கைப்பேசியை காட்டியவன் அதில் உள்ள காணொளியில் அவளுடைய மாமனாரும் மாமியாரும் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்க எதிரே ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது.. அதை பார்த்தவள் அப்படியே மூச்சடைத்து போய் நிற்க அவள் கைகளோ தானாக கேக்கை எடுத்து அவன் வாயில் ஊட்டியது..

 

“தட்ஸ் லைக் மை டியர் கேர்ள்.. சோ ஸ்வீட்.. உன் கை பட்டு இந்த கேக் கூட அவ்வளவு ஸ்வீட்டா இருக்கு..” என்றவன் தானும் ஒரு துண்டு கேக் எடுத்து அவள் வாயில் ஊட்டினான்..

 

அதன் பிறகு அவளை நோக்கி தன் கையை நீட்டியவன் “கம் ஆன் மை டியர்” என்றவனை ஒரு பெருமூச்சு விட்டு அவன் கையோடு தன் கையை சேர்த்துக் கொண்டாள்.. அப்போது ராம் சரணை நினைத்து அவளுக்கு மனமே வெடித்து விடும் போல இருந்தது.. ஆனாலும் அவள் கையை பிடித்துக் கொண்டு அவன் அழைத்துப் போனபோது வாய் பேசாமல் அவன் பின்னே சென்றாள்..

 

தன் குடும்பத்தினருக்கு இவனால் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று அப்போதைக்கு அவன் சொல்வதெல்லாம் கேட்டு நடந்தாள்.. தன் பெண்மைக்கு ஆபத்து வராத வரை அவன் செல்வதை செய்து கொண்டிருக்கலாம்.. அதற்குள் ராம் தன்னை தேடி வந்து விடுவார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது..

 

அவளை அழைத்து சென்றவன் ஒரு பெரிய மேஜையில் பலவித உணவு வகைகள் அடுக்கப்பட்டிருக்க அவளை ஒரு இருக்கையில் அமர வைத்து ஒரு தட்டை அவள் முன்வைத்து அழகாக ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எப்படி பரிமாறுவார்களோ அது போல் அவளுக்கு உணவினை பரிமாறிக் கொண்டிருந்தான்..

 

“அருண் அட் யுவர் சர்வீஸ் மை டியர்.. இன்னும் ஏதாவது வேணும்னாலும் கேளு.. கொடுக்கிறேன்.” என்று அவன் சொல்லவும் “எனக்கு என்னோட ராம் வேணும்.. குடுக்குறியா?” என்று அவள் கேட்டாள்…

 

“ராம் தானே.. கொண்டு வரேன்.. தலையை மட்டும் கொண்டு வரவா…? இல்ல கை கால் தனித்தனியா கொண்டு வரவா..?” என்று அவன் கேட்கவும் அப்படியே தன் காதுகளை கைகளால் பொத்திக்கொண்டவள் கண்களில் வழிந்த கண்ணீரோடு அவனை பார்த்தாள் ..

 

“என்ன பேச்சு பேசுகிறான்.. இவனால் எல்லோருக்கும் ஆபத்து வந்துவிடுமோ?” என்றெண்ணியவள் “இல்ல வேண்டாம்.. நான் சாப்பிடறேன்.. ” என்று தன் முன்னே இருந்த உணவை மெதுவாக சாப்பிட்டு முடித்தாள்..

 

“எப்படி இருந்தது டியர்? நல்லா இருந்ததா…? எல்லாம் உனக்கு பிடிச்ச ஐட்டமா பண்ணி வச்சேன்.. உனக்கு பிடிச்சிருந்தது தானே ..?”என்று அவன் கேட்கவும் அப்போதுதான் அவள் கவனித்தாள்..

 

அவள் உண்ட அத்தனையும் அவளுக்கு பிடித்த பதார்த்தங்களாய் இருந்தது.. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. இவனுக்கு எப்படி எனக்கு என்னென்ன பிடிக்கும் என்று தெரியும் என்று யோசித்தவாறே அவனை விழித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..

 

############

 

காவல் நிலையத்துக்குள் நுழைந்த ராம்சரண் நேரே இன்ஸ்பெக்டரிடம் சென்று “சார்.. என் வைஃபை யாரோ கடத்திட்டாங்க சார்..” என்று சொன்னான்..

 

“முதல்ல கொஞ்சம் உட்காருங்க.. பதட்ட படாதீங்க.. உங்க வைஃபை கடத்திட்டாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களுக்கு ஏதாவது மிரட்டல் கால் வந்துச்சா?” என்று அவர் கேட்கவும்

“இல்ல சார்..”  என்றவன் காலையிலிருந்து நடந்த அத்தனையும் அவரிடம் சொன்னான்..

 

அதை பொறுமையாக கேட்டவர் “உங்க ஃபோன் மாறிடிச்சுன்னு உங்ககிட்ட கொண்டு வந்து கொடுத்தார்ன்னு சொன்னீங்களே.. அவரைப் பார்த்தா உங்களால அடையாளம் காட்ட முடியுமா?” என்று கேட்டார்..

 

“முடியும் சார்..  எனக்கு அவர் ஃபேஸ் நல்லா ஞாபகம் இருக்கு..” என்றான் அவன்..

 

“ஓகே தென்.. உங்க வைஃபோட போட்டோ.. அவங்களோட ஃபோன் நம்பர்.. இதெல்லாம் கொடுங்க.. அவங்க ஃபோனை வச்சு ஏதாவது ட்ரேஸ் பண்ண முடியுமான்னு நாங்க பார்க்கிறோம்..” என்றார் அவர்..

 

“ஓகே சார்..” என்றவன் தேஜஸ்வினியின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்தான்..

 

“இதுதான் சார் என் வைஃப்போட போட்டோ.. கொஞ்சம் சீக்கிரம் கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. எங்களுக்கு அஞ்சு வயசுல ரெண்டு பசங்க இருக்காங்க சார்.. அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துருவாங்க.. அவங்க கேட்டா நான் என்ன பதில் சொல்றதுன்னு கூட எனக்கு தெரியல.. அம்மா இல்லாம ரெண்டு பேரும் அழுவாங்க.. கொஞ்சம் வேகமா கண்டுபிடிங்க சார்..”

 

“எனக்கு உங்க நிலைமை புரியுது சார்.. நாங்களும் தீவிரமா முயற்சி பண்ணுவோம்.. பார்க்கிறோம்.. நிச்சயமா ஒரு நாளைக்குள்ள உங்க வைஃப்ப கண்டுபிடிக்க ட்ரை பண்றேன்.. இந்த ஒரு நாள் எப்படியாவது சமாளிச்சுக்கோங்க..”

 

“தேங்க்ஸ் சார்..” என்றவன் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தான்..

தன் பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும் நேரம் ஆகிவிட்டதால் அவசரமாக அவர்கள் பள்ளிக்கு அவர்களை அழைத்து வர ஓடினான்..

 

அவர்களோ பள்ளி வாயிலில் நின்று கொண்டிருந்தார்கள்.. அவர்களைப் பார்த்ததும் அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவனிடம் “அப்பா.. அம்மா எங்கப்பா?” என்று கேட்டார்கள் குழந்தைகள் இருவரும்..

 

“அம்மா ஊருக்கு போய் இருக்காங்க டா.. ஒரு 2 டேஸ் இருந்துட்டு அப்புறம் வந்துருவாங்க.. அது வரைக்கும் அப்பா கூட சமத்தா இருங்க..” என்று சொன்னான் குழந்தைகளிடம்..

 

அப்போது பூஜா அவனிடம் “ஓ.. அம்மா.. நியூ அப்பா வீட்டுக்கு போய் இருக்காங்களாப்பா?” என்று கேட்கவும் அவனுக்கு அவள் என்ன கேட்கிறாள் என்று புரியாது அவளைப் பார்த்து விழித்துக் கொண்டு இருந்தான்..

 

“என்னமா கேக்கற? நியூ அப்பாவா?”

 

“ஆமாம்ப்பா.. இன்னைக்கு ஸ்கூல் விட்டு வெளிய வந்து உங்களுக்காக எப்பவும் வெயிட் பண்ணுவோமே அங்க நின்னுட்டு இருந்தோமா? அப்போ ஒருத்தர் வந்தாரு..  வொயிட் கோட்… வொயிட் பேண்ட்.. அப்புறம் பெரிய ஹேட் .. இதெல்லாம் போட்டிருந்தாரு.. வந்து எங்க கிட்ட ரெண்டு சாக்லேட் கொடுத்தாரு..  நீங்கதான் எங்களை யார் எது கொடுத்தாலும் வாங்க கூடாதுனு சொல்லி இருக்கீங்க இல்ல? அதனால எங்களுக்கு வேண்டாம்ன்னு சொன்னோம்.. ஆனா அவரு ஒரு ஃபோட்டோ காமிச்சாரு.. அதுல அம்மா அவரை ஹக் பண்ணிட்டு இருந்தாங்க… அப்பதான் அவர் சொன்னாரு.. நான்தான் உங்களோட புது அப்பா.. என்கிட்ட சாக்லேட் வாங்கிக்கிட்டா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கனு சொன்னாரு.. அதனாலதான்பா நாங்க வாங்கிக்கிட்டோம்..” என்று சொல்லி தன் பையிலிருந்து அவன் கொடுத்த சாக்லேட்டை எடுத்து ராம்சரணிடம் காண்பித்தாள்…

 

ராம்சரணோ எதுவும் பேசத் தோன்றாது அப்படியே அமர்ந்திருந்தான்..

 

தொடரும்….

 

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன் என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 4🔥🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!