அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 6🔥🔥

5
(16)

பரீட்சை – 6

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

எனக்கு தெரியாத

பல விஷயங்கள்

என்னை பற்றி

நீ அறிந்திருப்பதை

எண்ணி எண்ணி

 

மனம் குழம்பி

புத்தி பேதலித்து

ஒன்றும் புரியாத

மடந்தையாய்

ஊமையாய்

தவித்திருக்கிறேன்…

 

எங்கிருந்தோ வந்து

அணு அணுவாய்

என்னை உன்

சொற்களால்

செய்கையால்

சித்ரவதை செய்தாய்…

 

ஒவ்வொன்றாய் நீ

எடுத்துச் சொல்ல

எனக்கும் உனக்கும்

நடுவில் இருக்கும்

மர்ம முடிச்சு

என்னவென்று

அறியாமல்

 

விழிகளில் ஓராயிரம்

விடையில்லா

கேள்விகளுடன்

விழித்திருந்தேன்

உன்னெதிரில்…

 

##############

 

மர்ம முடிச்சு…!!

 

 

அவன் மாட்டி இருந்த ஆளுயர படம் காணாமல் போனதை பார்த்தவுடன் “பரவால்ல அஷ்ஷு.. உன் டெம்ப்ரரி புருஷன் நீ இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிட்டான் போல..”

 

அவன் ஆச்சரியப்படுவது போல் சொல்லவும் அவளையும் அறியாமல் அவள் மனம் துள்ளி குதித்தது.. ” என் ராம் என்னை தேடி வந்துட்டாரு..” என்று சந்தோஷப்பட்டவளை அவன் ஒரு ஏளன புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..

 

“உன்னோட ராம் உன்னை தேடி வந்தாரு.. ஆனா.. உன்னை பார்க்கவே இல்லையே.. உன்னை பார்க்காமயே திரும்பி போயிட்டாரே.. ஐயோ.. ஏன் போயிட்டாரு?” ஒரு பொய்யான சந்தேக பாவனையோடு நாடியில் விரல் வைத்து குரலில் கிண்டலும் கேலியும் கலந்திருக்க கேட்டான் அவன்..

 

அவளும் அதையேதான் யோசித்துக் கொண்டிருந்தாள்.. இவ்வளவு தூரம் வந்தவன் கீழே உள்ள  அறையில் இருக்கும் தன்னை தேடி பார்த்து அழைத்துக் கொண்டு போகாதது ஏன் என்று அவள் மனத்திலும் ஒரு கேள்வி இருந்தது..

 

“ரொம்ப யோசிக்காத பேபி.. அது ஏன்னு நான் சொல்றேன்.. நம்ப கீழ ஒரு ரூமுக்கு போனோம் இல்ல? அதுக்கு மேல அந்த படியில் இறங்கி போறதுக்கு ஒரு கதவை திறந்து தான் நாம போகணும்.. நாம இறங்கி போனப்புறம் அந்த கதவு அப்படியே மூடிக்கும்.. நீ வேணா நீ ஏறி வந்த படியை போய் எட்டிப் பாரு” என்றான்..

 

தான் ஏறி வந்த படியின் அருகே போய் பார்க்க அதன் மேல் ஒரு கதவு திறந்து இருந்தது..

 

“நம்ம இதுவரைக்கும் இருந்தது அன்டர்க்ரௌண்ட்ல… இந்த டோரை மூடிட்டன்னு வச்சுக்கோயேன்.. அங்க படி இருக்கறதும் தெரியாது.. அங்க ஒரு டோர் இருக்கிறதும் தெரியாது.. அப்படியே சாதாரணமா ஒரு தரை மாதிரி தான் இருக்கும்.. யாருக்கும் சந்தேகம் கூட வராது.. ஆனா இந்த வீட்டுக்கு அடியில உனக்காக நான் இன்னொரு வீடே கட்டி வச்சிருக்கேன் அஷ்ஷு.. இனிமே அதுதான் நம்ம வீடு.. நாம அங்க தான் வாழ போறோம்… ஓகேவா?”

 

அவன் மிக சாதாரணமாக கேட்கவும் அவளுக்கு நிமிடத்திற்கு நிமிடம் கண்களில் கலவரம் ஏறிக் கொண்டே போனது..

 

“நாம எதுக்குடா சேர்ந்து வாழணும்? நீ யாருடா? ஏன் என்னை இப்படி கொல்ற?” அவனை கொன்றுவிடும் ஆத்திரத்தோடு அவள் கேட்கவும் “நம்ம தான் சேர்ந்து வாழணும் ஸ்வீட் ஹார்ட்.. திரும்ப திரும்ப எத்தனை வாட்டி சொல்றது..? நான் உன் புருஷன்… நீ என் பொண்டாட்டி.. அப்ப நம்ம ரெண்டு பேரும் தானே சேர்ந்து வாழணும்..?”

 

“ஹைய்யோ….. எத்தனை வாட்டி நான் உனக்கு சொல்றது? ப்ளீஸ்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. என் புருஷன் ராம் சரண்.. எனக்கு ரெண்டு பிள்ளைகளும் இருக்காங்க… தயவு செஞ்சு என்னை விட்டுடு.. ப்ளீஸ்..” அவள் கெஞ்சினாள்.. மன்றாடினாள்.. ஆனால் அவனோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை..

 

“ஏண்டா பேபி… உன்னை விடறதுக்கா இவ்ளோ கஷ்டப்பட்டு பிளான் போட்டு இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன்? இனிமே உன்னை எந்த காலத்திலும் விடமாட்டேன்.. உன்னோட வாழறதுக்காக நான் ரொம்ப நாளா காத்திருந்தாச்சு.. இனிமே என்னால காத்திருக்க முடியாது.. வா.. நம்ம ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கே போகலாம்..” என்றவன் அவள் கையை பிடித்துக் கொள்ள  அவனிடமிருந்து அவள் திமிற அவளை அப்படியே தூக்கிக் கொண்டான்.. அந்த படியில் இறங்கி கதவை சாத்திவிட்டு கீழே இறங்கி போய் அவளைக் கொண்டு போய் அந்த அறையில் இருந்த கட்டிலில் கிடத்தினான்..

 

“இதை பாரு அஷ்ஷு செல்லம்.. எனக்கு உன்னை கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு ஆசை இல்ல.. நீயா என்னை புரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கிறேன்.. அதுக்கு நீ எவ்வளவு டைம் வேணா எடுத்துக்கோ.. ஆனா என்கிட்ட நீ உன் டெம்பரரி புருஷனை பத்தி பேச பேச எனக்கு இன்னும் கோவம் அதிகமாகும்.. அதனால உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.. நீ என் உயிராச்சே.. ஆனா நீ இப்படியே பேசிக்கிட்டிருந்தேன்னா உன்னோட அந்த டெம்ப்ரரி புருஷனுக்கும் மத்தவங்களுக்கும் தான் பாதிப்பு இருக்கும்..  இனிமே உன் டெம்பரரி புருஷனை பத்தி பேசறதுக்கு முன்னாடி பத்து வாட்டி யோசிச்சிக்கோ”

அவளை நோக்கி தன் சுட்டு விரலை நீட்டி அழுத்தமான குரலில் சொன்னான்..

 

” சரி.. இனிமே மத்தவங்களை பத்தி நாம பேச வேண்டாம்.. நம்ம கதைக்கு வருவோம்.. நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? இந்த க்ரீன் கலர் டிரஸ்ல இப்பவே அப்படியே உன்னை எனக்குள்ள புதைச்சு வச்சுக்கணும்னு தோணுது… ஆனா உன் சம்மதம் இல்லாம அதை நான் பண்ண மாட்டேன்.. அதுக்காக உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கவும் என்னால முடியாது.. அதனால நம்ம இப்போ சின்னதா ஒரு டான்ஸ் ஆடலாமா?” என்று அவன் கேட்கவும் அவள் விழி விரித்து பார்த்தாள்..

 

“டான்ஸ் ஆ.. எனக்கு டான்ஸ் எல்லாம் ஆட வராது..” எரிச்சலுடன் சொன்னவள் இவனோட டான்ஸ் ஆடுறது தான் இப்ப கொறச்சல்..” முணுமுணுப்பாய் பல்லை கடித்து கொண்டு புலம்பினாள் அவள்..

 

“யாரு சொன்னது? நீ சூப்பரா டான்ஸ் ஆடுவ..  பார்க்கிறயா? ” என்று சொன்னவன்.. அவளை நோக்கி தன் கையை நீட்டினான்..

 

அவள் அப்படியே அமர்ந்து கொண்டிருக்க “நீ எவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுவேன்னு உனக்கு தெரிய வேண்டாமா? டான்ஸ் ஆடிப் பார்த்தா தானே தெரியும்.. கையை குடு” என்று கேட்டான் அவன்..

 

அவனிடம் என்னவோ புதிர் இருக்கிறது என்று அவளுக்கு தெரிந்து விட்டது.. எப்படியாவது அந்த புதிருக்கு விடை கண்டுபிடித்து இங்கிருந்து செல்லும் வழியை பார்க்க வேண்டும் என்று எண்ணினாள்.. அவன் அவ்வளவு நம்பிக்கையோடு தனக்கு நடனமாட தெரியும் என்று கூறுவது எண்ணி யோசித்துக் கொண்டிருந்தவளின் கையை சட்டென பிடித்து தன் பக்கம் இழுத்தான்..

 

அவன் இழுத்ததில் அவன் நெஞ்சில் போய் விழுந்தவள்.. அப்படியே நிமிர்ந்து அவனை எரித்து விடுவது போல் முறைத்தாள்.. “டான்ஸ் ஆட போறோம்மா பேபி” என்று சொன்னவன் “ஒன்.. டூ.. த்ரீ..” என்று அவள் காதருகில் சொல்லவும் இசை தட்டு ஒலிக்க ஆரம்பித்தது..

 

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறுது வானிலை

பெண்ணே உன் மேல் பிழை

 

நில்லாமல் வீசிடும் பேரலை

நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

பொன் வண்ணம் சூடிய காரிகை

பெண்ணே நீ காஞ்சனை

 

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி

என் உயிரை உயிரை நீ ஏந்தி

ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி

இனி நீதான் எந்தன் அந்தாதி

 

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்

தூக்கி சென்றாய்

ஏக்கங்களை தூவிச் சென்றாய்

உன்னை தாண்டி போகும் போது

போகும் போது

வீசும் காற்றின் வீச்சு வேறு

 

நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே

நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே

காதல் எனை கேட்கவில்லை

கேட்டால் அது காதல் இல்லை

 

என் ஜீவன் ஜீவன் நீதானே

என தோன்றும் நேரம் இதுதானே

நீ இல்லை இல்லை என்றாலே

என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

 

பாடல் முழுவதும் அவள் கைபிடித்து அவளை சுற்ற வைத்து இந்த பக்கமும் அந்த பக்கமும் அவளை ஆட வைத்து இறுதியாக தன் கையில் சாய்த்து ஏந்தி கொண்டு நின்றான்..

 

அவன் கண்ணிலோ அத்தனை காதல் தெரிந்தது.. அந்த காதலில் பொய்யில்லை.. ஆனால் அவளால் தான் அதை ஏற்க முடியவில்லை.. என் ராமை தவிர வேறு யாரும் என்னை காதலிக்க முடியாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்..

 

ஆனால் அவளுக்கு புரியாத புதிராய் இருந்தது என்னவென்றால் ஒரு தேர்ந்த நடன கலை நிபுணி போல் அவ்வளவு அழகாக நளினமாக அவள் ஆடியது தான்.. தனக்கு நடனமாட தெரியும் என்பதே அவளுக்கு இப்போதுதான் தெரியும்.. இது நாள் வரை அப்படி ஒரு முயற்சியை அவள் செய்திருக்கவில்லை.. அந்த அதிர்ச்சியில் இருந்தும் ஆச்சர்யத்திலிருந்தும் அவள் மீளாமல் அப்படியே உறைந்து இருந்தாள்..

 

“என்ன ஆச்சு பேபி? உன்னையே உன்னால நம்ப முடியலையா? நீ எவ்ளோ அழகா கிரேஸ்ஃபுல்லா ஆடின பார்த்தியா? ஏன்னா உனக்கு டான்ஸ் பண்ண தெரியும்.. உன்னை டான்ஸ் கிளாஸ் கூட்டிட்டு போனதே நான்தான்..” அவன் சொன்னதை கேட்டு அவளுக்கு மண்டையே வெடித்து விடும் போல இருந்தது..

 

ஒவ்வொரு முறையும் அவன் பேச பேச அவள் ரத்த கொதிப்பு ஏறிக் கொண்டே போனது.. இந்த மர்ம முடிச்சு எங்கு கொண்டு போய் தன்னை விட போகிறதோ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள் அவள்..

 

“ஓகே ஸ்வீட் ஹார்ட்.. உனக்கு எப்படியோ எனக்கு தெரியல.. நான் இந்த டான்ஸை நல்லா என்ஜாய் பண்ணேன்.. நான் கொஞ்சம் வெளியில போகணும்.. வேலை இருக்கு.. நீ என்ன பண்ற? அப்படியே இந்த வீட்டை சுத்தி பார்த்துகிட்டு இரு..” என்றவன் “ம்..ஹும்.. தனியா இருந்தா உனக்கு போர் அடிக்கும் இல்ல? அதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்றேன்” என்று சொன்னவன் தன் கைபேசி எடுத்து யாரையோ அழைத்தான்.. அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஒரு வயதான அம்மாள் அங்கே வந்தாள்..

 

“கல்யாணி அம்மா.. எப்படி இருக்கீங்க?” என்று கேட்கவும் “நல்லா இருக்கேன் தம்பி.. நீ எப்படி இருக்கப்பா?” என்று கேட்டாள் அந்த கல்யாணி.. “நானும் நல்லாவும் இருக்கேன்.. இப்ப ரொம்ப சந்தோஷமாவும் இருக்கேன்.. அப்புறம் இவ பேரு அஸ்வினி.. தேஜஸ்வினி அருண்குமார்.. என் வைஃப்.. இவளை நீங்க பத்திரமா பாத்துக்கணும்.. இவ இங்கிருந்து வெளியில போகாம பாத்துக்கோங்க… இவளுக்கு என்ன வேணுமோ எடுத்து குடுங்க.. ஆனா நான் வர வரைக்கும் இவ இங்க தான் இருக்கணும்.. வெளியில போறதுன்னா என் கூட தான் போகணும்.. நான் எது சொன்னாலும் நீங்க அப்படியே செய்வீங்கன்னு எனக்கு தெரியும்.. அதனால தான் உங்களை கூப்பிட்டேன்..” என்றான் அவன்..

 

“நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா அருண் தம்பி.. அப்படி நீ சொல்லி நான் செய்யாம இருந்தேன்னா.. என்னை விட ஒரு நன்றி கெட்டவ இந்த உலகத்திலேயே இருக்க முடியாது.. நீ போயிட்டு வா தம்பி.. நான் அவங்களை பத்திரமா பாத்துக்கறேன்..” என்று சொன்னாள் கல்யாணி..

 

அதன் பிறகு அவன் அங்கிருந்து போய் விட்டான்.. அவனிடம் தன்னை வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன கல்யாணியை அவளோ முறைத்து எரித்து விடுவது போல பார்த்து கொண்டு இருந்தாள்..

 

“இன்னொருத்தன் பொண்டாட்டியை.. ரெண்டு குழந்தைங்களுக்கு அம்மாவை.. அவன் கூட்டிட்டு வந்து இங்க கைது பண்ணி வெச்சிருக்கான்.. நீங்க என்னடான்னா அவனுக்காக என்னை பார்த்துக்கிறேன்னு சொல்றீங்க..? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாதா?” என்று கல்யாணி அம்மாவிடம் சூடான எண்ணெயில் இட்ட கடுகாய் பொரிந்தாள் தேஜு…

 

“மனசாட்சி இருக்கிறதுனால தான் அவர் சொல்றதெல்லாம் செய்யறேன்ம்மா.. அவர் சொல்றபடி உன்னை பாத்துக்கலன்னா தான் நன்றி கெட்டவ ஆயிடுவேன்..  அந்த தம்பி தப்பு செஞ்சிட்டான்னு சொன்னா நீ எமதர்மனையே தப்பு செஞ்சான்னு சொன்ன மாதிரி… அந்த தம்பிக்கு தப்பு செய்ய தெரியாதுமா.. அது எல்லாருக்கும் நல்லது தான் செய்யும்.. உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்குன்னா அதுக்கு கூட ஏதாவது காரணம் இருக்கும்.. நிச்சயமா அது பக்கம் நியாயம் இல்லாம அது இப்படி செஞ்சிருக்காது.. சரி.. உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா சொல்லு.. செஞ்சு தரேன்..” ஏதோ வீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிப்பது போல் கேட்டார் கல்யாணி அம்மாள்..

 

“கொஞ்சம் விஷம் இருந்தா குடுங்க..” முகத்தை திருப்பி குரலில் ஆத்திரம் பொங்க சொன்னாள் தேஜஸ்வினி..

 

“அதை நான் கொடுக்க முடியாது.. ஆனா அந்த தம்பி உனக்கு அதை கொடுக்க சொன்னா யோசிக்காம கொடுத்துடுவேன்” என்று சொன்னாள் கல்யாணி அம்மாள்.. அப்படியே அவள் சொன்ன பதிலை கேட்டு வாயடைத்து போய் நின்றாள் தேஜஸ்வினி..

 

##########

 

இரவு 8 மணி ஆகிவிட்டது.. தன் தேஜு எந்த வீட்டில் தொலைந்தாள் என்று இன்ஸ்பெக்டர் சொன்னாரோ அந்த வீட்டில் போய் பார்த்தும் அவள் அங்கு இல்லாது போனதால் ஏமாற்றத்துடன் திரும்பிய ராம்சரண் “ஐயோ கடவுளே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? எதுக்கு என் தேஜூவை இப்படி என்கிட்டே இருந்து பிரிச்சே? அவ எங்க இருக்காளோ தெரியல.. என்ன கஷ்டப்படுறாளோ தெரியல.. தேஜு.. என்னை மன்னிச்சுடு தேஜு.. உன்னை காப்பாத்த முடியாத ஒரு கையாலாகாதவனா நான் இருக்கேன்.. என்னை விட வேற யாராவது இன்னும் கொஞ்சம் உன்னை நல்லா பொக்கிஷமா காப்பாத்துறவங்க உனக்கு புருஷனா கெடச்சிருக்கலாம்.. உன்னை இப்படி தொலைச்சுட்டு நிக்கறேனே” தன்னையும் மீறி புலம்பி அழுது கொண்டு இருந்தான் அவன்.. அப்போது அவன் கைபேசிக்கு இன்ஸ்பெக்டரிடம் இருந்து அழைப்பு வந்தது..

 

உடனே எடுத்தவன் “சொல்லுங்க இன்ஸ்பெக்டர்..” என்று சொல்லவும் “என்ன சொல்ல சொல்றீங்க? அந்த ஃபோட்டோவை செக் பண்ண சொன்னீங்க இல்ல? அந்த ஃபோட்டோ ஒரிஜினல் ஃபோட்டோ தான்.. அதுல எந்த ஃபோட்டோ ஷாப்பும் பண்ணல… சாரி டு சே திஸ்.. இந்த கேஸை நாங்க இதோட க்ளோஸ் பண்ண வேண்டி இருக்கும்.. இனிமே  தொடர்ந்து நாங்க இந்த கேஸை நடத்த முடியாது.. எங்களுக்கு தெரிஞ்சு உங்க மனைவி அவங்க விருப்பப்படி தான் அந்த ஆளோட போய் இருக்காங்க.. அதனால நீங்களும் அவங்களை தேடறதை விட்டுட்டு உங்க பிள்ளைங்களை பார்க்கிற வழியை பாருங்க.. இல்ல.. உங்க பிள்ளைகளை  உங்களால தனியா சமாளிக்க முடியலன்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க.. அதை விட்டுட்டு இனிமே எங்களை வந்து அவங்களை தேடுங்கன்னு சொல்லாதீங்க.. இனிமே அவங்களை தேடுறது வேஸ்ட்.. மனசை தேத்திக்கோங்க மிஸ்டர் ராம்..” என்று சொன்னவர் கைபேசி இணைப்பைத் துண்டித்தார்..

 

தொடரும்…

 

வாசகர்களுக்கு வேண்டுகோள்:

உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!