அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 7🔥

4.9
(15)

பரீட்சை – 7

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

 

உன்னைப்போல்

நல்லவன்

உலகத்தில்

இல்லை என்று

உறுதியாய் நம்பும்

ஒருத்தி..

 

உன் ஒரு

சொல்லில்

இன்னொரு உயிரை

எடுக்கவும்

துணிகிறாள்..

 

என் ஆவியானவனை

என்னிடமிருந்து பிரித்து

என்னை அவன்

எட்டிப் பிடிக்க

முடியா

இடத்தில் வைத்து

 

கள்ளத்தனமான இந்த

விளையாட்டுக்கு

காதல் என்று பெயர்

சொல்கிறாய்..

 

விடை தனை

வறையறுக்க

முடியாத

புரியாத புதிராய்

நாளும்

வேறுபட்டுக் கொண்டே

போகிறாய்..

என் பார்வையில்…

 

##############

 

புரியாத புதிராய்…..!!!!!

 

 

இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயத்தை கேட்ட ராமுக்கு தன் தேஜூவை சுற்றி யாரோ சதி வலை பின்னி கொண்டிருக்கிறார்கள் என்று சந்தேகம் வந்தது..

 

“என் தேஜூவை சுத்தி ஏதோ மர்மமா நடக்குது.. அந்த ஃபோட்டோ ஒரிஜினல்னு இன்ஸ்பெக்டர் சொல்றாரு.. ஆனா அது எப்படி ஒரிஜினலா இருக்க முடியும்? ஒரு வேளை தேஜு மாதிரியே வேற யாராவது இருப்பாங்களோ? தேஜூ முகம் அவங்களை மாதிரியே இருக்கறதுனால அவளை கடத்திட்டு போய் வச்சிருக்கானோ? என்னன்னு தெரியலையே? ஆனா என்னவோ தப்பா நடக்குது.. என்ன நடக்குதுன்னு புரியல.. தேஜூமா.. நீ எவ்ளோ கஷ்டப்படுறியோ தெரியலையே.. எங்க இருக்க? எனக்கு ஒரு க்ளூ கெடச்சுதுன்னா கூட உன்னை எப்படியாவது கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துருவேன்… நீ இல்லாம எனக்கு எதுவுமே ஓடலை தேஜுமா.. ஏதோ உயிரே இல்லாம சுத்திக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்குடி… சீக்கிரம் வந்துடு என்கிட்ட” அழுதுக்கொண்டே இருந்தான் ராம்..

 

“பேசாம இன்ஸ்பெக்டர்கிட்ட அந்த ஃபோட்டோவை வாங்கிட்டு வந்து அது மூலமா ஏதாவது கண்டுபிடிக்க முடியுமானு பார்க்கலாமா? அதான் சரி..” என்று நினைத்தவன் உடனே காவல் நிலையத்துக்கு கிளம்பினான்..

 

அங்கு சென்று இன்ஸ்பெக்டரை பார்த்து “சார் நீங்க கேஸை எப்படியும் க்ளோஸ் பண்ணிட்டீங்க.. எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க.. அந்த ஃபோட்டோவை மட்டும் என்கிட்ட தருவீங்களா? நான் அதை வெச்சு என் வைஃப் பத்தி ஏதாவது கண்டுபிடிக்க முடியுமான்னு பார்க்கிறேன்”

 

“அந்த ஃபோட்டோவை என் மொபைல்ல நான் ஃபோட்டோ எடுத்து இருக்கேன் சார்.. உங்களுக்கு அந்த ஃபோட்டோ தர்றதுல எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல.. எடுத்துக்கோங்க..” என்று சொன்னவர் அந்த புகைப்படத்தை அவனுக்கு அனுப்ப வைத்தார்…

 

“ஆனா உங்களுக்கு என்னோட அட்வைஸ்.. அவங்களை பத்தி இனிமே நீங்க கவலைப்படாதீங்க.. எனக்கு என்னவோ அவங்க அவரை புடிச்சு போய் தான் அவரோட போய் இருக்காங்கன்னு தோணுது..” என்று அவர் சொல்லவும் “சார்.. இதுவரைக்கும் நீங்க இந்த கேஸை இன்வெஸ்ட்டிகேட் பண்ணிட்டு இருந்தீங்க… அதனால நீங்க சொன்னதெல்லாம் நான் காது கொடுத்து கேட்டுட்டிருந்தேன்.. ஆனா இந்த மாதிரி என் மனைவியை பத்தி தப்பா இனிமே ஒரு வார்த்தை கூட என்னால கேட்க முடியாது.. அவளை பத்தி எனக்கு தெரியும்… தயவு செஞ்சு இன்னொரு முறை அவளை பத்தி இந்த மாதிரி பேசாதீங்க.. அந்தக் கடவுளே வந்து அவளை பத்தி தப்பா சொன்னாலும்.. ஏன்.. அவளே அவளை பத்தி தப்பா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்..” அவர் கண்களை உறுதியாக பார்த்து சொல்லி விட்டு வெளியே வந்தான்…

 

அப்போது அவனுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.. எடுத்து பார்த்தவன் தன் மாமனாரின் எண் அதில் ஒளிரவே அந்த அழைப்பை ஏற்றான்..

 

“சொல்லுங்க மாமா.. எப்படி இருக்கீங்க?” என்றான் தன் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு..

 

“நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை.. அப்புறம் தேஜூ எப்படி இருக்கா? குழந்தைங்க எல்லாம் எப்படி இருக்காங்க? உங்க அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா?” எப்போதும் போல நலம் விசாரித்தார் அவர்..

 

“எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா.. என்ன திடீர்னு ஃபோன் பண்ணி இருக்கீங்க?”

 

“மாப்பிள்ளை.. நான் முதல்ல தேஜூவுக்கு தான் ஃபோன் பண்ணேன்.. ஆனா அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப் லேயே இருக்கு… என்ன ஆச்சு ஏதாவது சார்ஜ் போட மறந்துட்டாளா?”

 

“அது.. தேஜூ ஃபோன் ரிப்பேரா இருக்கு மாமா.. நானும் வெளியில இருக்கேன்.. இப்போ தேஜுவோட இல்ல.. என்ன விஷயம் மாமா? சொல்லுங்க.. நான் தேஜூ கிட்ட சொல்றேன்..”

 

“அது ஒன்னும் இல்ல மாப்ள.. இந்த வாரம் சென்னையில் ஒரு கல்யாணம் இருக்கு.. நாங்க அட்டென்ட் பண்ண வரோம்.. அதான் அப்படியே உங்களையும் தேஜூவையும் குழந்தைகளையும் பார்த்துட்டு போலாம்னு நினைச்சோம்… அதை சொல்லலாம்னு ஃபோன் பண்ணேன்..”

 

அவர் சொன்னதை கேட்டு அவனுக்கு அவர்கள் இங்கே வந்தால் இங்கு நடக்கும் அத்தனை விஷயமும் தெரிந்து விடுமே என்று கவலையாக இருந்தது..

 

அவரை சமாளிக்கும் விதமாக “மாமா.. அது ஒன்னும் இல்ல.. இந்த வாரம் நாங்க ஆக்சுவலி ஒரு ட்ரிப் பிளான் பண்ணி இருக்கோம்.. கொடைக்கானல் போலாம்னு இருக்கோம்.. அதனால நீங்க வந்தாலும் நாங்க வீட்ல இருக்க மாட்டோம்.. மாமா.. நீங்க அடுத்த முறை வாங்க மாமா..  சாரி மாமா.. நீங்க ஆசையா வரேன்னு சொல்லும்போது நான் இப்படி சொல்றேன்..” குரலில் நிஜமான வருத்தம் தொனிக்க சொன்னான் அவன்..

 

“ஐயோ.. அதனால என்ன மாப்பிள்ளை..? பரவால்ல.. நாங்க இன்னொரு முறை வந்துக்கிறோம்.. இந்த ட்ரிப் போனா குழந்தைகளும் என்ஜாய் பண்ணுவாங்க.. சரி மாப்ள.. தேஜூவை கேட்டதா சொல்லுங்க.. சீக்கிரம் ஃபோனை ரிப்பேர் பண்ணி தேஜூவை எங்களோட பேச சொல்லுங்க.. அவ அம்மாக்கு என்னவோ அவ ஞாபகமாவே இருக்காம்…”

 

“நிச்சயமா சொல்றேன் மாமா.. சரி மாமா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் போகணும்.. நான் அப்புறம் பேசுறேன் மாமா..” என்று கைபேசியை வைத்து விட்டான்..

 

இந்த முறை சமாளித்து ஆகிவிட்டது.. அடுத்த முறை அவர் வருவதற்குள் தேஜு‌ கிடைத்து விட வேண்டும் என்று எல்லா இறைவனிடமும் வேண்டினான்..

 

###############

 

கல்யாணி அம்மாள் சொன்னதைக் கேட்டு தேஜு அப்படியே வாயடைத்து போய் நின்றாள்.. “உங்களுக்கும் அவருக்கும் அப்படி என்ன சம்பந்தம்? அவர் சொன்னா ஒருத்தரை கொல்றதுக்கு கூட தயங்க மாட்டேன்னு சொல்றீங்க..!!?” வியப்பும் அதிர்ச்சியும் கலந்த குரலில் கேட்டாள் அவள்..

 

“நான் இன்னைக்கு உன் முன்னாடி உயிரோட நின்னுட்டு இருக்கேன்னா அதுக்கு காரணமே அந்த புள்ள தான்.. என் புள்ளையும் மருமகளும் ஒரு ஆக்சிடன்ட்ல இறந்து போயிட்டாங்க.. அப்போ என் பேரனுக்கு அஞ்சு வயசு.. அவனுக்கு ஹார்ட்ல ஆப்ரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. அவன் ரொம்ப உடம்பு சரியில்லாம இருந்தான்.. அவனுக்கு ஆபரேஷன் பண்ண பைசா இல்லாம பிச்சை கூட எடுத்து பார்த்தேன்.. ஆனா யாரும் பணம் கொடுக்கல.. அவன் வயத்துக்கு உழைச்சு சம்பாதிச்சு சோறு போட்டேன்.. ஆனா அவன் உடம்பை சரி பண்றதுக்கு என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல.. அவனுக்கு ரெண்டு மாசத்துக்குள்ள ஆப்ரேஷன் பண்ணலேன்னா அவன் செத்துப் போய்விடுவான்னு டாக்டர் சொல்லிட்டாரு.. அவனையும் காவு கொடுத்துட்டு நான் என்னத்துக்கு உயிரோட இருக்கணும்னு நினைச்சேன்.. பணமும் இல்லாததுனால பேசாம அவனையும் கொன்னுட்டு நானும் செத்துப் போயிடலாம்னு நெனச்சு ஆத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்க போன என்னை காப்பாத்தி எதுவுமே கேட்காம என் பேரனுக்கு மூணு லட்ச ரூபாய் செலவு பண்ணி ஆபரேஷன் பண்ணி காப்பாத்தி இன்னி வரைக்கும் அவன் படிப்பு செலவையும் ஏத்துக்கிட்டு இருக்காரு இந்த புண்ணியவான்.. இப்ப சொல்லு நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா? அவர் உன்னை கொல்ல சொன்னா கூட நான் கொன்னுடுவேன்.. ஏன் தெரியுமா? அந்த தம்பி என்னை அப்படி செய்ய சொல்லுச்சுன்னா உன்  உயிர் போறதினால இன்னும் பல உயிர் வாழ போகுதுன்னு அர்த்தம்.. அதுக்காக தான் அப்படி சொல்லியிருப்பாரு.. அதனால அவர் சொன்னா யோசிக்க மாட்டேன்.. உடனே செஞ்சிடுவேன்..” புதிதாய் ஒரு கதையை சொன்னாள் அந்த அம்மாள்..

 

“அவன் என்னடான்னா என் குடும்பத்தை விட்டு என்னை பிரிச்சு என் சின்ன சின்ன குழந்தைகளை தவிக்க விட்டு என்னை இங்கே கொண்டு வந்து வச்சு சித்திரவதை செஞ்சுக்கிட்டிருக்கான்.. இந்த அம்மா என்னடான்னா அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சுக்கிட்டிருக்காங்க.. ஐயோ கடவுளே.. இவன் நாளுக்கு நாள் பெரிய புதிராய் போய்க்கிட்டிருக்கானே.. இவன் நல்லவனா? கெட்டவனா? நான் பார்த்த வரைக்கும் இவன் நிச்சயமா கேடு கெட்டவன் தான்.. இல்லனா.. ஒரு குடும்ப பொண்ணை இந்த மாதிரி கடத்தி கூட்டிட்டு வந்து வச்சு தன் பொண்டாட்டின்னு சொல்லிப்பானா..?” என்று யோசித்தாள் அவள்…

 

அப்போது அங்கே வந்த அருண் ” ஹாய் ஸ்வீட் ஹார்ட்.. எப்படி போச்சு டைம் கல்யாணி அம்மாவோட.. இன்ட்ரஸ்டிங்கா போச்சா? அப்புறம் கல்யாணி அம்மா சூப்பரா சமைப்பாங்க.. உனக்கு என்னென்ன ஐட்டம் வேணும்னு அவங்க கிட்ட கேட்டு பண்ணி தர சொல்லி சாப்பிடு..”

 

“இங்கே என் குழந்தைகளை பார்க்க முடியாம நாள் முழுக்க என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு அணு அணுவா செத்துகிட்டிருக்கேன்.. உனக்கு சாப்பாடு ரொம்ப முக்கியமா போச்சா? நான் என்ன இங்க வக்கேஷன்கா வந்திருக்கேன்.. சாப்பிட்டு என்ஜாய் பண்றதுக்கு?” என்று கேட்டவள் சற்று அமைதியாக “அருண்.. கல்யாணி அம்மா உன்னை பத்தி நிறைய விஷயங்கள் சொல்லி இருக்காங்க.. அவங்க சொல்றதை பார்த்தா நீ ரொம்ப நல்லவன்னு தோணுது.. அப்புறம் ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற? பேசாம என்னை என் ஃபேமிலியோட கொண்டு போய் விட்டுடு.. ப்ளீஸ்.. “என்று கெஞ்சினாள் அவள்..

 

“ஐயோ.. அஷ்ஷூ பேபி.. உனக்கு எத்தனை தடவை சொல்றது? நான்தான் உன்னோட ஃபேமிலி.. வேணும்னா நம்ம ஃபேமிலில உன் பசங்க பூஜா அஸ்வின் அவங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்துக்கிறேன்.. அது ஒன்னும் பிரச்சனை இல்ல.. உன் பிள்ளைங்க எனக்கும் பிள்ளைங்க தான்.. ஆனா அந்த ராமை இன்னொரு வாட்டி உன் ஃபேமிலின்னு சொல்லாதே.. சொன்னேன்னா விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை..” என்றான் அவன் கொஞ்சம் கோவச்சாயலோடு..

 

இப்போது பிடிவாதமாய் ராமை பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அவனிடம் எதையும் சாதிக்க முடியாது என்று அவள் புரிந்து கொண்டாள்..

 

“சரி.. ராமாவது சமாளிச்சுப்பாரு.. ஆனா என் குழந்தைங்க என்னை விட்டுட்டு எப்படி இருப்பாங்க? அவங்களை ஒரு நாள் ஃபுல்லா பார்க்காம இதுவரைக்கும் நான் இருந்ததே கிடையாது.. எனக்கு என்னவோ போல இருக்கு அவங்களை பார்க்காம… ப்ளீஸ் அருண்.. அவங்களுக்காகவாது என்னை என் வீட்டுக்கு அனுப்பு.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. எனக்காக இந்த ஒரு விஷயத்திலயாவது கொஞ்சம் விட்டுக் கொடு.. ப்ளீஸ்” பரிதாபமாக இறைஞ்சிக் கொண்டே அப்படியே கீழே மடிந்து உட்கார்ந்து அழ  ஆரம்பித்தாள் அவள் ..

 

“அஷ்ஷூம்மா.. ப்ளீஸ் நீ இவ்ளோ அழாதே.. என் மனசு தாங்காது.. நீ அழறதை பார்த்தா எனக்கு உயிரே போயிடும் போல இருக்கு… ப்ளீஸ் அஷ்ஷூமா..”

 

அவள் அருகில் அமர்ந்து கெஞ்சியவன் அவள் கன்னத்தில் கை வைத்து முகத்தை நிமிர்த்தி “இப்ப என்ன..? உனக்கு உன் குழந்தைகளை பார்க்கணும்.. அவ்வளவு தானே? சரி.. நாளைக்கு நான் உன் குழந்தைகளை உனக்கு காட்டுறேன்.. நீ போய் அவங்களை பார்க்கலாம்.. ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு..” மறுபடியும் புதிர் போட்டான் அவன்..

 

“கண்டிஷனா? என்ன கண்டிஷன்?” என்று கேட்டாள்.. அவள் முகத்தில் கேள்வியுடன் அவன் என்ன நிபந்தனை விதிக்க போகிறானோ என்ற கலவரமும் நிலவியது..

 

“நாளைக்கு உன் குழந்தைகளை பார்க்க கூட்டிட்டு போகும்போது அது என்னன்னு நான் உனக்கு சொல்றேன்.. ஆனா அதுல இருந்து நீ கொஞ்சம் மாறி நடக்கணும்னு நினைச்சாலும் என்னோட வேற முகத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. உனக்காக நான் என்ன வேணா செய்வேன் அஷ்ஷூமா.. ஆனா நீ யாராலயாவது மறுபடியும் என்னை விட்டு போயிடுவேன்னு தெரிஞ்சா உன்னை என்னோட இருக்க வெக்கிறதுக்கு நான் யாரை கொல்றதுக்கும் கூட தயங்க மாட்டேன்.. உன்னை இப்படியே காலம் பூரா பார்த்துகிட்டே இருந்தா கூட போதும் எனக்கு.. ஆனா உன்னை பாக்காம இனிமே ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது” இறுக்கமாக முகத்தை வைத்து சொன்னான் அவன்..

 

அவளோ தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்..

 

“சரி நீ சொல்ற படியே நான் நடந்துக்கிறேன்.. எனக்கு என் குழந்தைகளை பார்த்தா போதும்.. அவங்க நான் இல்லாம எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு தெரியல..” வேறு வழியில்லாமல் அவன் பேச்சுக்கு இணங்க முடிவெடுத்து இருந்தாள் அவள்..

 

“ஓகே தென்.. எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல.. சரி டைம் ஆயிடுச்சு.. நீ போய் படுத்து தூங்கு..” என்று சொன்னவன் அவள் கட்டிலில் போய் படுக்கவும் அங்கே இருந்த சோஃபாவில் அவன் படுத்தான்..

 

“நீ எதுக்கு இங்க படுத்துக்குற?”

 

அவள் புரியாத பாவனையில் கேட்கவும் “என்ன அஷ்ஷூம்மா.. நீ தனியா எப்படி தூங்குவ.. உனக்கு பயமா இருக்கும்ல? நான் இங்கே படுத்துக்கிறேன்.. நான் உன்னை ஒன்னும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. நான் இந்த சோஃபாலயே தூங்குறேன்.. நீ கட்டில்ல நிம்மதியா தூங்கு..” என்றான் அவன்..

 

“நீ இங்க சோஃபால படுத்து இருக்கும் போது நான் எப்படி கட்டில்ல நிம்மதியா தூங்க முடியும்?” என்று அவள் கேட்கவும் “ஓ.. சாரி அஷ்ஷூ பேபீ.. நீ இவ்ளோ ஃபீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியவே தெரியாது அஸ்வினி டியர்.. நான் வேணா உன் பக்கத்திலேயே வந்து கட்டில்ல..” என்று அவன் ஆரம்பிக்க “அ…ரூஊஊஊ…ண்…ண்ண்ண்…!!!” என்று கத்தினாள் அவள் அவனைப் பார்த்து தீயாய் முறைத்துக் கொண்டு..

 

தொடரும்…

 

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!