Mr and Mrs விஷ்ணு 1

4.8
(5)

பாகம் 1

முன் அந்தி மாலை பொழுது திருப்பதி ஃபுட் ப்ராக்டட் ப்ரைவேட் லிமிடெட் என மிகப்பெரிய பெயர் பலகையை தாங்கி இருந்தது.. அந்த இரண்டு அடுக்கு அலுவலகம்.. அலுவலகத்திற்கு வெளியே தனது இரு சக்கர வாகனத்தில் நின்று இருந்த விஷ்ணுப்ரியாவோ கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்து “ஊறுகாயும் மஞ்சப்பொடி மசாலா பொடியும் விற்கிறதுக்கு எதுக்குய்யா இவ்வளோ பெரிய பில்டிங் என மனதிற்குள் சலித்து கொண்டே கட்டிடத்துக்குள்  தனது இரு சக்கர வாகனத்தில் நுழைந்தாள்..

கேட்டின் முன்பு இருந்த செக்யூரிட்டியோ அவளை நிறுத்தி, “யாரு மேடம் நீங்க யாரை பார்க்கனும்” என கேட்க,

“உங்க எம்.டியை தான்” என்று அவள் கூறியதும்,

“சாரையா, அவரை அப்பாயின்மெண்ட் இல்லாமா பார்க்க முடியாதே, அப்பாயின்மெண்ட் இருக்கா”, என்று செக்யூரிட்டி கேட்க,

“ஆ… இருக்கு இருக்கு” என்று இவள் இழுத்து கூறவும்,

செக்யூரிட்டி இவளைபார்த்தார் இதுவரை அவரின் முதலாளியை பார்க்க வருபவர்கள் கோர்ட் சகிதமாக, ஸ்டைலாக, நேர்த்தியாக மட்டுமே வந்து இருக்கின்றனர்.. ஆனால் எதிரில் இருப்பவளோ டூவிலரில் வந்து இருக்க, ஆரெஞ்ச் கலர் குர்தியும், பச்சை கலர் பலாசோவும் அணிந்து தலைமுடி கூட சரியாக வாராமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கி கொண்டு இருந்தது.. பார்ப்பதற்கும் சின்ன பெண்ணாக இருக்க, இவங்களுக்கு சார் அப்பாயின்மெண்ட் கொடுத்து இருப்பாங்களா நம்பிக்கை வரவில்லை செக்யூரிட்டிக்கு, ரிசப்ஷனில் கேட்டுட்டு உள்ள விடலாமா என்று அவர் யோசித்து கொண்டு இருக்கும் போதே,
அந்த கேப்பில் வண்டியை ஆபிஸிக்குள் விட்டு இருந்தாள்..

“எம்மா பொண்ணே நில்லு” என்று செக்யூரிட்டி கத்தியதை எல்லாம் காதில் வாங்காதவள் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் ,
“உங்க எம்.டி ரூம் எது நான் அவரை பார்க்கனும்” கொஞ்சம் கோவமாவே கேட்டாள்..

ரிசப்ஷனில் இருந்த பெண்ணும் இவளை ஏற இறங்க பார்த்து விட்டு “அப்பாயின்மெண்ட் இருக்கா மேம், அப்பாயின்மெண்ட் இல்லாத யாரையும் சார் மீட் பண்ண மாட்டாங்க” என்று கூற பெண்ணவளுக்கோ எரிச்சலாக இருந்தது..

இவங்க சார் பெரிய ப்ரைம் மினிஸ்ட்ரு இவரை பார்க்க அப்பாயின்மெண்ட் போட்டு காத்து கிடக்க, இந்த ஊறுகாய் கம்பெனி ஓனருக்கு இது எல்லாம் ரொம்ப ஓவரு என்று மனதில் நினைத்தவள்,

“நான் யார் தெரியுமா? என்கிட்டயே நீங்க அப்பாயின்மெண்ட் கேட்கிறீர்களா, உங்க சார் தான் என்னை வர சொன்னதே, என்னை நிற்க வச்சு நீங்க இப்புடி கேள்வி மேல்ல கேள்வி கேட்டது உங்க சாருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? அவ்ளோ தான் அடுத்த செகண்டே உங்க வேலை அம்பேல் தான்” என்று இவள் பயமுறுத்தவும்

அதை நம்பிய அந்த அப்பாவி ரிசப்ஷனிஸ்ட் பொண்ணு,
“இல்ல சாரி மேம் சார் ஏதும் இன்ஃபார்ம் பண்ணிட்டு போகலை, அதோட இப்ப சார் பேக்டரி விசிட்டுக்கு போய் இருக்காங்க வர ஒன் ஹவர்க்கு மேலாகும் அதான்” என்று அந்த பெண் தயங்கியபடி கூற,

வரட்டும் வரட்டும் ஒன் ஹவர் என்ன நைட்டே ஆனாலும் அந்த கார மிளகாயை பார்த்துட்டு தான் கிளம்பனும் என்று மனதில் நினைத்தவள், “எனக்கு தெரியாதா ஃபேக்டரிக்கு போய் இருக்கிறது.. இப்ப தானே சொன்னேன் உங்க சார் தான் என்னை வர சொன்னதுன்னு”  என்று அந்த பெண்ணிடம் காய்ந்த விஷ்ணு அங்கு இருந்த ஷோபாவில் கோவமாக அமர்ந்தாள்..

அவளுக்கோ மனம் கொதித்தது கோவத்தில், என்னை பார்த்த எல்லாருக்கும் எப்புடி தெரியுது. நான் என்ன காய்கறி  கடையில்ல கடைசியாக வாங்குற கொத்தமல்லி கொசுறா, இல்ல ஆடி ஆஃபர்ல துணி கடையில்ல இலவசமாக கொடுக்குற ப்ளாஸ்டிக் டப்பா மாதிரி தெரியுதா, எப்புடி அவங்க இப்புடி கேட்கலாம்.. என்று புலம்பி கொண்டு இருந்த விஷ்ணுவை அந்த ரிசப்ஷனிஸ்ட் பொண்ணு இவள் என்ன பைத்தியமா என்னும் ரீதியில் பார்க்க, விஷ்ணுவும் அதை பார்த்து விட்டாள்..

டேய் பார்த்தி நீ தான்டா எல்லாத்துக்கும் காரணம்,   என்ன இப்புடி பைத்தியம் புலம்ப வச்சுட்டியேடா?  என்று மனதிற்குள் தன் உடன்பிறப்பை திட்டியவள் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்..

இரண்டு நாட்களுக்கு முன்பு சாயங்காலம் கல்லூரி முடிந்து வீடு வந்தவள் “அசைமெண்ட் வொர்க் நிறைய இருக்குமா, நான் போய் அதை பண்றேன்.. நைட்டு சாப்பிட மட்டும் கூப்பிடு அதுவரை என்னை டிஸ்டர்ப் பண்ணாத மா” என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் வந்தவள் லேப்டாப்பை ஆன் செய்து புது கொரியன் சீரிஸ் ஒன்றை பார்க்க தொடங்கி விட்டாள்..

இஞ்ஜீனியரிங் இறுதி ஆண்டில் விஷ்ணு இருந்தாள்.. லாஸ்ட் இயர் இது, படிக்க நிறைய இருக்கு, நிறைய அசைமெண்ட் வொர்க் இருக்கு என்று தினமும் ஒரு கதையை தன் தாய் கல்யாணியிடம் கூறி விட்டு அவள் செய்யும் வேலையே இது தான்.. கல்யாணியும் லாஸ்ட் இயர்ங்கிறதால்ல பொண்ணுக்கு பொறுப்பு வந்துருச்சு அதான் படிக்கிறா போல, வச்சு இருக்க அரியர் எல்லாம் பாஸ் பண்ணி நல்ல மார்க் எடுக்க போறா என நினைத்து கல்யாணியும் அவளை எந்த வித தொந்தரவும் செய்யாமல் இரவு சாப்பிட மட்டுமே அழைப்பார்.. இன்றும் அதே போல் கூறி விட்டு அறைக்குள் வந்த விஷ்ணு சீரிஸ் முழுவதையும் பார்த்து முடித்து விட்டு லேப்டாப்பை மூடி வைக்கவும் தான் வயிறு பயங்கரமாக பசிப்பது தெரிந்தது.. “என்ன இவ்வளோ பசிக்குது” என்று மணியை பார்க்க.. அது பத்து என்று காட்டியது..

“ஆ.. பத்து ஆகிருச்சா, இன்னுமா அம்மா டிபன் செய்யல, இல்லையே கல்யாணி கரெக்ட்டா 8 மணிக்கு எல்லாம் டிபன் செஞ்சிட்டு நம்மளை சாப்பிட கூப்பிடுருமே, அதுவும் இன்னைக்கு சப்பாத்தி சிக்கன் கிரேவி செய்ற போறதா வேற சொன்னுச்சே, என்னாச்சு, இந்த பார்த்தி இந்நேரத்திக்கு பாதியை காலி பண்ணி இருப்பான்” என்றபடி வெளியே வந்தாள்..

வீட்டு ஹாலில் “மா ப்ளீஸ் சொன்னா புரிஞ்சிகோங்கமா”, என்று அண்ணன் பார்த்திபன் கல்யாணியிடம் கெஞ்ச,

தாய் கல்யாணியோ ” நான் சொல்றதை நீ புரிஞ்சிக்கோ வேணாம் பார்த்தி இது எல்லாம் சரிப்பட்டு வராது, எனக்கு சரியா படலை” என்று ஏதோ வாக்கு வாதம் செய்ய,

பார்த்திபனோ “ச்சே” என்று தலையை பற்றியபடி  ஷோபாவில் அமர்ந்தான்.. தந்தை உதயகுமாரோ தீவிரமான யோசனையில் இருந்தார்..

கல்யாணி அருகே வந்த விஷ்ணுப்ரியா “மா டைம் பத்தாகுது என்ன ஏன் சாப்பிட கூப்பிடவே இல்லை.. டிபன் செஞ்சிட்டியா சூழ்நிலை தெரியாமல் கேட்ட மகளை கல்யாணி முறைத்த முறைப்பில்

“உன்கிட்ட கேட்டேன் பாரு நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன்” என்று பதிலுக்கு முறைத்தவள் கிச்சன் சென்று அங்கிருந்த ஹாட் பாக்சை திறக்க சப்பாத்தியும் இன்னோரு பாத்திரத்தில் சிக்கன் க்ரேவியும் இருந்தது.. அதுவும் நிறையவே இருந்தது.. இன்னும் யாரும் சாப்பிடவில்லை என்பதும், அவர்கள் பேசியதை வைத்தே ஏதோ பிரச்சினை என்பதும் புரிந்தது.. என்னவா இருக்கும் என்னன்னு கேட்டுட்டு வந்து சாப்பிடலாமா, சாப்பிட்டு போய் கேட்கலாமா என்று தனக்கு தானே கேட்டு கொண்டு, முதல்ல சாப்பிடுவோம் அப்புறம் போய் என்னன்னு கேட்போம் என்று இறுதி முடிவுக்கு வந்தவள்,
உடனே தட்டில் நான்கு  சாப்பாத்தியையும் க்ரேவியையும் வைத்தவள் டைனிங் டேபிளில் சென்று அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.. நான்கையும் உண்டு முடித்தவள் மீண்டும் கிச்சனுக்குள் சென்று இரண்டு சப்பாத்தியை தட்டில் எடுத்து வைத்து கிச்சனிலிருந்து வெளியே வந்தவள் கல்யாணி அருகே சென்று அமர்ந்தாள்…

“என்னமா என்னாச்சு இந்த பார்த்தி பையன் என்ன தப்பு பண்ணுனான்” என்று கேட்டாள் சப்பாத்தியை வாய்க்குள் அதக்கியபடி,
கல்யாணி அமைதியாக இருக்க, “அட சொல்லுமா” என்றதும்
“லவ் பண்றானாம்”  என்றார் கல்யாணி..

“டேய் அண்ணா சொல்லவே இல்லை” என்று அண்ணனை பார்த்து கேட்டவள்,

கல்யாணி புறம் திரும்பி “லவ் தானாமா பண்றான் ஏதோ அவன் கொலை பண்ணிட்டு வந்த மாதிரி ஏன் இவ்ளோ சத்தம் போடுற” என கேட்டதும்,

“எனக்கு அவன் லவ் பண்றது பிரச்சினை இல்லைடி, அவன் லவ் பண்ற பொண்ணு வீடு தான் பிரச்சினை.. இவன் காதலை அவங்க  ஏத்துக்க மாட்டாங்க. கல்யாணத்துக்கும் ஒத்துக்க மாட்டாங்க.. இவனுக்கு அவங்களா எந்த பிரச்சினையும் வந்துர கூடாது.. அதான் என் கவலையே” கல்யாணி வருத்தமாக கூற,

அம்மா அப்புடி எல்லாம் எந்த பிரச்சினையும் வராதுமா.. அவ அவங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்கிடுவா, நீங்களும் அப்பாவும் அவங்க வீட்டுக்கு போய் பேசுங்கமா அது போதும்” என்று பார்த்திபன் கெஞ்ச,

முடியாது பார்த்தி எல்லாம் தெரிஞ்ச நீயே இப்புடி பேசுற, அங்க அப்பாவுக்கு மரியாதை கிடைக்காது.. அவங்க வீட்டுக்கு போய் அப்பாவை அசிங்க பட நான் அனுமதிக்க மாட்டேன் கல்யாணி கோவமாக கூறினார்.

“மா அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்காதுமா, அப்புடி நடக்க அவ விட மாட்டாமா,  அவ என்னை ரொம்ப சின்சியரா லவ் பண்றாமா, நான் இல்லாமா பவித்ராவால் இருக்க முடியாது.. அதே போல் தான் எனக்கும் அவ இல்லாத லைஃப் நினைச்சு பார்க்கவே முடியலை புரிஞ்சிக்கோங்கமா பார்த்திபனும் தாய் தந்தையை சம்மத்திக்க வைக்கும் நோக்கோடு உருக்கமாக பேசினான்..

பவித்ரானா யாரு எதிர்த்த வீட்டு ஊறுகாய் ஃபேமிலி பவித்ராவாடா  உன் ஆளு என்று விஷ்ணு பார்த்திபனை பார்த்து அதிர்ச்சியுடன் கேட்க,

உதயகுமார் ப்ரியாமா அப்புடி எல்லாம் பேச கூடாதுன்னு நிறைய தடவை சொல்லி இருக்கேன் தானே என்று மகளை கண்டித்தார்..

சாரிப்பா என்றவளுக்கு எதிர்த்த வீடு என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருது அவன் தான்.. அவன் என்பதை விட அவன் இவள் கன்னத்தில் வைத்த அடி தான் நியாபகம் வந்தது.. அனிச்சையாக கைகள் இடது கன்னத்தை தொட்டது.. இரண்டு நாள் இடதுபக்க கன்னமே சிவந்து காது சரியாக கேட்காதபடி அப்புடி அடித்து இருந்தான்.. கன்னத்தில் என்னடி  காயம் என்று கேட்ட கல்யாணியிடம் ஏதேதோ கதை எல்லாம் அடித்து வைத்து இருந்தாள்.. “ச்சே அந்த வீட்டு பொண்ணையா இந்த பார்த்தி லவ் பண்றான்.. ஒருவேளை பவித்ராவை இவன் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த ஆறடி ஆந்திரா ஹல்க்கை அடிக்கடி நாமா பார்க்க வேண்டி வருமே, அய்யயோ என்று மனதிற்குள் பயந்தவள், நம்ம அண்ணன் லவ் பெய்லியர்ல தாடி வளர்த்து திரிஞ்சாலும் பரவாயில்லை இந்த கல்யாணத்தை மட்டும் நடக்க விடவே கூடாது என்று நினைத்தவள்,

“டேய் பார்த்தி உனக்கு ல்வ பண்ண வேற பொண்ணே கிடைக்கலையாடா,  இரண்டு வீட்டுக்கும்  ஏற்கெனவே பயங்கர சண்டை,  பல வருஷமா பேசிக்கவே மாட்டோம்.. இது எல்லாம் உனக்கும் தெரியும் தானே, அப்புறம் ஏன்டா அந்த பொண்ணை லவ் பண்ற, அவங்க நம்ம  குடும்பத்துக்கு எவ்ளோ பெரிய துரோகம் செஞ்சு இருக்காங்க அதை எப்புடிடா நீ மறந்த, நீ வாயை மூடிட்டு இருடி என்று பார்த்திபன் விஷ்ணுவை அடிக்க வர,

அவனை தடுத்த கல்யாணி, அவளை எதுக்குடா இப்ப அடிக்க வர, அவ சொல்றதும் சரி தானே,

ம்மா என்று ஏதோ சொல்ல வந்தவனை தடுத்த கல்யாணி

ஏங்க நீங்க என்ன அமைதியாகவே இருக்கீங்க,  எல்லாத்தையும் மறந்துட்டு இவனை வேற வேலையை பார்க்க சொல்லுங்க என்று கணவரிடம் முறையிட,

ப்பா ப்ளீஸ் என்ற மகன் முகத்தையே உற்று பார்த்த உதயகுமார் பெருமூச்சை விட்டபடி எழுந்தவர் “அந்த பொண்ணு வீட்டுல சம்மதம்னா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பார்த்தி.. பவித்ராவை வீட்டுல பேசிட்டு சொல்ல சொல்லு அவங்களுக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்” என்று உதயகுமார் கூறியதும் அவரை அணைத்த பார்த்திபன் தாங்க்ஸ்பா தாங்க்ஸ் யூ சோ மச் என கூற அவன் முதுகை சின்ன சிரிப்புடன் தடவினார் உதயகுமார்..

“ஏங்க என்ன இது”? என்ற கல்யாணியிடம் “அவன் ஒன்னும் சின்ன பையன் கிடையாது..  அவனுக்கு நல்லது கெட்டது தெரியும் கல்யாணி,  27 வயசு பையன் நம்ம சம்மதம் வேணும் வந்து கெஞ்சிட்டு இருக்கான்.. அவன் வாழ்க்கையை அவனுக்கு பிடிச்ச மாதிரி அமைச்சுக்கிட்டும்.. நாம ஏன் தடையாக இருக்கனும் என்று உதயகுமார் பேசவும் கல்யாணிக்கு மனதே இல்லை என்றாலும் கணவன் சரியாக தான் கூறுவார் என்று அமைதியாகி விட்டு சாப்பிடலாம் வாங்க என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.. உதயகுமாரும் பார்த்திபனும் சாப்பிட சென்றனர்..

இந்த அப்பா என்ன இப்புடி  சொதப்பிட்டாங்க.. போற போக்கை பார்த்தா கல்யாணம் நடந்திடும் போலயே, ச்சே ச்சே கண்டிப்பா அவங்க வீட்டுல ஒத்துக்க போறது இல்லை.. பார்த்தி லவ் ஊ..‌ஊ… தான் என்று நினைத்து விட்டு மீண்டும் சாப்பிட அவர்களுடன் போய் அமர்ந்தாள்..

ஆனால் அவள் நினைப்புக்கு மாறாக மறுநாளே பவித்ரா வீட்டிலிருந்து, நேரில் வந்து சம்மந்தம்  பேச சொல்லி அழைக்கப்பட, உதயமூர்த்தி, கல்யாணி, பார்த்திபன் மூவரும் கிளம்பி பவித்ரா வீட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வந்து இடியை இறக்கியது என்னவோ விஷ்ணுவின் தலையில் தான்…

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!