16. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(11)

வரம் – 16

காவல் அதிகாரிகள் தங்களுடைய விசாரணையை முடித்துக் கொண்டதன் பின்னர் அந்தப் பார்ட்டி நடந்த ஹோட்டலை விட்டு மோஹஸ்திராவின் வீட்டிற்கு அரவிந்தனும் ஷர்வாவும் வந்து சேர்ந்தனர்.

மோஹியோ மிகவும் உடைந்து போயிருந்தாள்.

அத்தனை பேர் கூடியிருந்த ஒரு இடத்தில் ஒரு பெண்ணை நாசம் செய்வதற்கு எப்படி இவ்வளவு தைரியம் அந்தக் கயவனுக்கு வந்தது.?

அவளுக்கோ நினைக்க நினைக்க மனம் தாளவில்லை.

அந்தப் பெண்ணுடைய உயிரைக் கூட காப்பாற்ற முடியாமல் போனதை எண்ணி வெகுவாக காயப்பட்டுப் போயிருந்தாள் அவள்.

இத்தனை பாதுகாப்பு நிறைந்த இந்த நாட்டில் பெண்களுக்கு மட்டும் ஏன் பாதுகாப்பு கிட்டவில்லை..?

அவளுக்கு அருகே அமர்ந்திருந்த அரவிந்தனோ மெல்ல அவளுடைய கையைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான்.

“ப்ளீஸ் டோன்ட் க்ரை பேபி டால்…” என்ற அவனுடைய வார்த்தைகளில் அவளுக்கோ மேலும் விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது.

தனக்கு அருகே அமர்ந்திருந்தவனின் மார்பில் வேதனையோடு தன் முகத்தை புதைத்துக் கொண்டாள் அவள்.

அவர்கள் இருவருக்கும் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்திருந்த ஷர்வாவின் உடலோ இறுகியது.

அவளுடைய அழுகையைக் காணச் சகிக்காது மறுபுறம் தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்.

“சாரி ஷர்வா கடைசி நேரத்துல எல்லாத்தையும் சொதப்பிட்டேன்… அந்த இடத்துல அந்தச் சின்னப் பொண்ணுக்கு இப்படி ஆனதும் என்னால என்னோட கோபத்தை கண்ட்ரோல் பண்ணவே முடியல… அந்த நிமிஷம் டைமண்ட், டைமண்ட் திருடி திருடியவன் எதுவுமே எனக்கு மைண்டுக்கு எட்டவே இல்லை.. அந்த பொறுக்கிய தண்டிக்கணும்னு மட்டும்தான் நினைச்சேன்.. அந்த கோபத்துல அடுத்தடுத்து எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டேன்… ஐ அம் சோ சாரி… இதால இவ்வளவு நாளா நாம போட்ட பிளான் எல்லாமே சொதப்பிருச்சு…” எனக் கூறினான் அரவிந்தன்.

“நீ சாரி கேட்கணும்னு எந்த அவசியமும் இல்ல அரவிந்தா… ஒரு உயிரை விட நம்ம பிளான் ஒன்னும் அவ்வளவு முக்கியம் கிடையாது. அந்த சிட்டுவேஷன் ரொம்ப மோசமானது.. என்னால புரிஞ்சுக்க முடியுது… நீ ஒரு ஆபீஸரா உன்னோட கடமையதான் செஞ்சிருக்க…” என்றான் ஷர்வா.

தன்னுடைய விழிகளை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள் மோஹஸ்திரா.

“நி… நிச்சயமா அந்தத் திருடன் பார்ட்டி நடந்த இடத்துக்கு வந்திருப்பான்… அவன்தான் மிஸ்டர் பைரவ்வையும் கொலை பண்ணி இருப்பான்னு தோணுது… அவனுக்கு அரவிந்தன் சிபிஐ ஆபிஸர்னு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்… இனி நம்ம கிட்ட டைமண்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணுவான்னு எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை..” என வருத்தத்தோடு கூறினாள் அவள்.

“இட்ஸ் ஓகே மோஹி.. இனி அவன் நம்மள கண்டக்ட் பண்ணலேன்னா கூட போலீஸ் எப்படியும் அவனை கண்டுபிடிச்சிடும்… ஏன்னா அதே நாள்ல இன்னொருத்தங்களும் கழுத்து நரம்பு அறுபட்டு செத்துருக்காங்க.. அவங்களுக்கு கிட்டத்தட்ட 46 வயசு இருக்கும்னு போலீஸ் டிபார்ட்மெண்ட் சொல்லுது..”

“பைரவ் இறந்ததுக்கும் அவங்க இறந்ததுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா..?”

“ஆமா ரெண்டு பேரோட கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட விதமும் ஒரே மாதிரி இருக்குன்னு சொல்லி இருக்காங்க… அவங்க கிட்ட நகைகளை திருடிட்டு அவங்கள கொன்னுட்டு போயிருக்கான்… பைரவோட நகைகளும் ட்ரெஸ்ஸும் மிஸ்ஸிங்… அந்த ராஸ்கல்தான் ரெண்டு கொலையும் பண்ணி இருப்பான்னு கெஸ் பண்ணி இருக்காங்க…. எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்லையே இவன் நம்மகிட்ட மாட்டிருவான்..” என்றான் ஷர்வா.

“வாட்..? இவன் என்ன சைக்கோவா நகைக்காகவும் ட்ரெஸ்ஸுக்காகவும் கூட கொலையெல்லாம் பண்ணுவாங்களா…?” என அதிர்ந்து கேட்டாள் மோஹி.

“இப்போ பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க பேபிடால்…” என்றான் அரவிந்தன்.

“ஹ்ம்… இனி நம்ம நாடகத்தை நிறுத்திடலாமா…?” என நிதானமாகக் கேட்டாள் மோஹஸ்திரா.

ஆம் அனைத்தும் நாடகம்தான்.

ஷர்வாவோ தன்னுடைய வைரத்தைக் கண்டுபிடிப்பதற்காக சி.பி.ஐ ஆபீஸரான அரவிந்தனை நாடி இருந்தான்.

அரவிந்தனோ பல வழிகளில் முயன்று அந்த வைரத்தை கண்டுபிடிக்க முடியாது போக அதன் பின்னர் ஷர்வாவோடு இணைந்து அவர்கள் போட்ட திட்டமே ஷர்வா மோஹஸ்திராவின் பிஸ்னஸ் மோதல்.

அரவிந்தன் தன்னுடைய காதலியை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து இந்த கேஸில் தனக்கு உதவும் படி கோரிக்கை வைக்க அவன் மீது அதீத காதல் கொண்டிருந்த மோஹஸ்திராவோ வைரத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் இவர்களுடைய திட்டத்தில் இணைந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகியும் வைரம் வெளியே எங்கும் விற்கப்படவில்லை என்பதை அறிந்து வைத்திருந்த ஷர்வாவும் அரவிந்தனும் அதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஷர்வாவின் எதிரியாக மோஹியை உருவாக்கி அந்த எதிரியின் மூலம் வைரத்தை கைப்பற்றிக் கொள்ள இவர்கள் திட்டமிட்டனர்.

இவர்களுடைய திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் தொடங்கியதுதான் இந்த முயற்சி.

ஷர்வாவின் பரம எதிரியான மோஹஸ்திரா வைரத்தை தேடுவது போல இவர்கள் காட்சியை சித்தரித்து விட்டால் அந்தத் திருடன் நிச்சயம் ஷர்வாவின் எதிரியை நெருங்கக் கூடும் என இவர்கள் கணித்த கணிப்பு சரியாகவே இருந்தது.

ஷர்வாவுக்கு கொடுக்க வேண்டிய அவார்ட் மோஹஸ்திராவுக்கு கொடுக்கப்பட்டதற்கு காரணமே ஷர்வாதான்.

அவனுடைய அவார்டை அவளுக்கு கொடுக்கும்படி அவன் வேண்டிக் கேட்டுக் கொண்டதால்தான் அந்த நிறுவனம் கடைசி நேரத்தில் மோஹஸ்திராவுக்கு அந்த அவார்டை வழங்கியிருந்தது.

அங்கே இருவரும் சண்டையிட்டுக் கொண்டது,

வேண்டும் என்றே ஷோசியல் மீடியாவின் முன்பு சண்டையிட்டுக் கொண்டது,

ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தி திட்டிக் கொண்டது என அனைத்துமே திட்டமிட்ட செயல்கள்தான்.

அனைவரின் முன்பும் அடிக்கடி அவர்கள் மோதிக்கொண்டது அனைத்துமே முன்பே அவர்கள் திட்டமிட்டபடிதான் நடந்து முடிந்திருந்தது.

அது மட்டுமல்லாமல் மோஹி தன்னுடைய பிஸ்னஸ் சாம்ராஜ்யம் எனக் கூறி இருந்த அனைத்துமே ஷர்வாவின் சொத்துக்களே.

இன்றைய தினம் மீட்டிங் நிறுத்தப்பட்டது, உள்ளே சென்று அவளிடம் அத்துமீறி ஆடைகளை பறித்துக் கொண்டது அனைத்தும் அவர்களுடைய நாடகமே.

மோஹஸ்திராவின் ஆடைகள் அவளுடைய உடலில் இருந்து அகற்றப்படவே இல்லை.

அவள் அணிந்திருந்ததைப் போல இருந்த ஆடைகளைத்தான் எடுத்து வந்து வெளியே வீசி எறிந்திருந்தான் ஷர்வாதிகரன்.

அந்த மீட்டிங் நின்று போனதால் ஏற்பட்ட முழு நட்டமும் ஷர்வாவுக்குத்தான்.

இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமென்றால் ஷர்வாவுக்கும் மோஹஸ்திராவுக்கும் இடையில் எந்தவிதமான கோபதாபங்களோ பிரச்சனைகளோ இல்லவே இல்லை.

வைரத்தைக் கண்டுபிடிப்பதற்காக இவர்கள் மூவரும் இணைந்து நடத்திய நாடகமே இவையெல்லாம்.

“நோ… திடீர்னு எல்லாத்தையும் நிறுத்த வேண்டாம்… மீடியாக்கு பதில் சொல்ல வேண்டி வரும்… இப்போ இருக்கிற மாதிரியே இருக்கட்டும்… நமக்கு இடைல எந்த பிரச்சனையும் இல்லாம அமைதியா இருக்கிற மாதிரி இருந்துப்போம்… சம் டைம் அந்த திருடன் மறுபடியும் உன்னை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணலாம்…” என்றான் ஷர்வா.

“ஓகே ஷர்வா அவன் இதுக்கு முன்னாடி பேசின ஃபோன் நம்பரை ட்ரேஸ் பண்ணிப் பார்த்தோம்… யாரோ ஒருத்தரோட திருட்டு மொபைல்ல இருந்துதான் அவன் பேசி இருக்கான்னு தெரிய வந்தது..” என தனக்குத் தெரிந்த தகவலைக் கூறினான் அரவிந்தன்.

“ஓ காட்… இவன் திருடனா கொலைகாரனா இல்லன்னா சைக்கோவா..? எதுவுமே புரியல… போயும் போயும் ட்ரெஸ்ஸுக்காகவா பைரவ்வை கொண்டான்னு நினைக்கும்போது பயமாயிருக்கு… இவனோட நோக்கம் என்னன்னு புரிஞ்சுக்க முடியலையே…. எதுக்கும் இவன்கிட்ட நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்…” என்றாள் மோஹஸ்திரா.

“இதோ பாரு பேபி டால்… நீ எதை நினைச்சும் பயப்படாத… எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்… நீ டென்ஷன் ஆகாம தூங்கு…” எனக் கூறிக் கொண்டிருந்த அரவிந்தனின் அலைபேசி சத்தம் எழுப்ப,

“எக்ஸ்க்யூஸ் மீ கைஸ்…” என்றவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து சற்றே நகர்ந்து சென்று பேசத் தொடங்கினான்.

அடுத்த சில நொடிகளில் “சாரி கைய்ஸ் நான் இப்பவே கிளம்பி ஆகணும்… ஏதோ க்ளூ கிடைச்சிருக்குன்னு வர சொல்லி இருக்காங்க…” என்றவன் இருவரிடமும் அவசர அவசரமாக தலையசைத்து விடை பெற்று அங்கிருந்து சென்றுவிட பெருமூச்சோடு தன் தலையை இரு பக்கமும் அசைத்தாள் அவள்.

இருவரையும் தனிமை சூழ்ந்தது.
இப்போது ஷர்வாவின் பார்வையோ மீண்டும் அவளுடைய முகத்தில் ஆழ்ந்து பதிந்தது.

தனக்கு உதவி செய்வதாக வந்த பெண்ணிடம் மனதில் தோன்றிய ஆசையை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் அவன்.
அதுமட்டுமில்லாமல் அன்று அவளிடம் அத்துமீறி நடந்தது வேறு அவனை உறுத்தலாயிற்று.

“ஓகே மோஹி… நீ பத்திரமா இருந்துக்கோ… நானும் கிளம்புறேன்…” என்றவாறு இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் ஷர்வா.

“இனாஃப்… நல்லவர் மாதிரி நடிக்காதீங்க ப்ளீஸ்…” சீறினாள் மோஹஸ்திரா.

“வாட்….? புரியல…” என அவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன்.

“என்ன புரியல…? நீங்க பண்றது எல்லாமே நாம பிளான் பண்ற மாதிரி இல்லையே… அன்னைக்கு சைட்ல ஆக்சிடென்ட் ஆனப்போ எதுக்காக என்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டீங்க….? நான் அரவிந்தனோட காதலின்னு உங்களுக்கு தெரியும்தானே..? அப்புறம் எப்படி நீங்க என்ன தப்பா தொட்டு கிஸ் பண்ணலாம்…? அந்த உரிமையை யார் உங்களுக்குக் கொடுத்தது..?
இப்போ வரைக்கும் நான் அரவிந்தன்கிட்ட இதப் பத்தி பேசவே இல்ல… அவனுக்கு மட்டும் உண்மை தெரிஞ்சுதுன்னா என்ன நடக்கும்னு யோசிச்சீங்களா…?” என கோபத்தில் சீறியவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன்,

“நீ தான் அதை ஊருக்கே சொல்லிட்டியே… பத்தாததுக்கு என்ன காம அரக்கன்னு வேற சொல்லி இருந்த…” என அவளை இமைக்காது பார்த்தவாறு கூறினான் அவன்.

“இதுவும் பிளான் ல ஒரு பார்ட்டுன்னு அர்வி நினைச்சுட்டாரு… இல்லைன்னா…”

“ஸ்டாப்… நீ யாருக்கு வேணா சொல்லிக்கோ ஐ டோன்ட் கேர்…” அலட்சியமாக பதில் வந்தது அவனிடமிருந்து.

“த… தப்பு.. பண்றீங்க…” திணறினாள் அவள்.

அவளுடைய கலங்கிய விழிகளைக் கண்டதும் மீண்டும் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவன்,
“அன்னைக்கு நான் பண்ணது தப்புதான்… ஆனா அதே தப்பை மறுபடியும் பண்ணனும் போல இருக்கே..” என்றவன் அவளை நெருங்கி வந்துவிட அவளுக்கோ உடல் தூக்கி வாரிப் போட்டது.

“லிசின் மோஹி… பிளான் பண்ண மாதிரி மட்டுமே நடந்துக்கிறதுக்கு நான் ஒன்னும் உன்னோட கம்ப்யூட்டர் கிடையாது… எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு… சாரி டு சே திஸ்… எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு… இந்த பிடித்தம் எதனாலன்னு இப்போ வரைக்கும் எனக்கு சரியா தெரியல…” என்றவன் அதிர்ந்து விழிகள் கலங்கி நின்றவளைப் பார்த்து சட்டென பின்னால் நகர்ந்தான்.

“ஐ அம் சாரி பயப்படாத… எனக்கு ஹெல்ப் பண்ண வந்த உனக்கு எந்த தொந்தரவும் என்னால இனி இருக்காது… அன்னைக்கு என்ன மீறி நடந்துக்கிட்டேன்.. மறுபடியும் அதுக்கு சாரி கேட்டுக்கிறேன்… இனி இப்படி எப்பவுமே நடக்காது..” என்றவன் அங்கிருந்து கிளம்பி விட அவளுக்கோ புயல் அடித்து ஓய்ந்ததைப் போல இருந்தது.

எதற்குத்தான் இவர்களுடைய திட்டத்திற்கு ஒத்துக் கொண்டு நடிக்க வந்தோமோ என எண்ணி ஆயிரம் முறையாக தன்னையே நொந்து கொண்டாள் அவள்.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!