அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 31🔥🔥

5
(10)

பரீட்சை – 31

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

அழகு ராணியை 

அவமானப்படுத்த 

அதிபயங்கரமாய் 

சூழ்ச்சி செய்தாள் 

அரக்கியவள்..

 

அப்போதே  அவள் 

கழுத்தை நெரித்து

அவள் கொண்ட 

அகந்தையை 

அடியோடு அழிக்க  

துடித்த என் 

கைகளை 

அடக்க முடியாமல் 

தவித்த நான்..

 

என் செய்வேன்..

என்

இனியவளை காக்க?!!

 

################

 

இனியவளே..!!

 

தேஜுவின் கையையும் சுமியின் கையையும் இரண்டு குடிகாரர்கள் பிடித்து இழுக்க அருகில் நடந்து வந்த அருணை பார்த்து தேஜு “சார்.. நாங்க உங்க காலேஜ் தானே சார்..? கொஞ்சம் காப்பாத்துங்க ப்ளீஸ்..” என்று கெஞ்ச அவனோ எதுவும் செய்யாமல் அப்படியே அவர்களைக் கடந்து சென்று விட்டான்..

 

“படுபாவி.. கிராதகன்.. பாக்குறதுக்கு தான் ஹீரோ மாதிரி உடம்ப வளர்த்து வச்சிருக்கான்.. எப்படி கண்டுக்காம போறான் பாரு..” என்று சொல்லிய தேஜு “டேய் கைய விடுடா..” என்று சொல்லி தன் தலையால் அந்த குடிகாரன் தலையிலேயே மோதி கீழே தள்ளினாள்..

 

“ஏய்.. என் தோஸ்தையா அடிச்சு தள்ளுன.. வரேன் இரு..” என்றபடி சுமியின் கையைப் பிடித்திருந்த ஆள் தேஜூ அருகில் வர அவன் கோபமாய் வருவதைக் கண்டு தேஜு பயந்து போனாள்.. ஆனால் அதற்குள் சுமி கீழே இருந்த ஒரு கல்லை எடுத்து அவன் மண்டையிலேயே ஒரு போடு போட்டாள்..

 

அவன் மயங்கி சரிந்து கீழே விழுந்திருந்தான்.. தேஜூ கீழே தள்ளிய ஆள் மறுபடியும் எழுந்து விடுவிடுவென  அவர்களை நோக்கி வர எத்தனிக்க அப்போது அந்த தெருமுனையில் போலீஸ் வண்டியின் சத்தம் கேட்டு “டேய் போலீஸ் வராங்க.. எந்திரிடா..” என்று தன் அருகில் மயக்கமாய் இருந்தவனை எழுப்ப முயல அவனோ அப்படியே எழுந்திருக்காமல் மயங்கி கிடந்தான்..

 

ஆனால் அதற்குள் போலீஸ் ஜீப் அவர்களை அடைந்திருந்தது.. அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் மயங்கி கிடந்தவனை தூக்கி வண்டியில் போட சொல்லி கான்ஸ்டபிளுக்கு உத்தரவளித்துவிட்டு அந்த இன்னொருவனை தன் லட்டியால் நன்றாக வெளுத்து வாங்கினார்..

 

“ஏண்டா.. குடிச்சிட்டு வந்து பொம்பளை பிள்ளைங்க கிட்ட வம்பு பண்ணுவீங்களா? உங்கள..” என்று அவனை ஜீப்பினுள்ளே ஏற்றியவர் “அம்மா.. நீங்க ரெண்டு பேரும் எங்களோட போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இவங்கள பத்தி ஒரு கம்ப்ளைன்ட் எழுதி குடுத்துட்டு போங்கம்மா..” என்றார்..

 

“ஓகே சார் வர்றோம்..” என்று சொல்லி அவர்கள் ஜீப்பில் ஏற போகவும் அப்போது அவர்களுடைய வண்டியை எடுத்துக் கொண்டு சின்ன பையன் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தான்..

 

“ஏய் சுமி.. நம்ப வண்டி டி..” என்று தேஜூ சொல்ல “ஏ ஆமா.. யார் இந்த பையன்? நம்ப வண்டிய எடுத்துட்டு வரான்?” என்று கேட்டாள் அவளும்..

 

“சார் எங்க வண்டி பஞ்சர் ஆயிடுச்சுன்னு தான் நாங்க நடந்து வந்துட்டு இருந்தோம்.. அந்த வண்டியை சரி பண்ணி அந்த பையன் கொண்டு வந்துட்டான்.. நாங்க எங்க வண்டியிலேயே உங்க வண்டி பின்னாடி வந்துடறோம் சார்..” என்று தேஜூ சொல்ல “ஓகே மா.. நோ ப்ராப்ளம்.. நீங்க அந்த பையனோட பேசி வண்டிய வாங்கிட்டு வாங்க.. நான் ஒரு ஃபைவ் மினிட்ஸ் இங்க வெயிட் பண்றேன்..” என்று சொல்லி ஜீப்பை ஓரமாக போட்டுவிட்டு காத்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்..

 

தேஜூவும் சுமியும் அந்த பையனிடம் சென்றவர்கள் “யாருப்பா நீ தம்பி..? எங்க வண்டிய பஞ்சர் ஒட்டிட்டு வந்திருக்கே?” என்று கேட்க “நீங்க எந்த கடைக்காரர் உங்க வண்டிய பஞ்சர் பண்ணி இருப்பாருன்னு சொன்னீங்களோ அந்த கடையில வேலை செய்றவன் நானு.. ஏன் கா.. ரோடுல எவனோ ஒருத்தன் கிளாஸ் துண்டை போட்டுட்டு போயிட்டான்.. அதுல உங்க வண்டி பஞ்சர் ஆயிடுச்சு.. அதுக்காக எதிர இருந்த மெக்கானிக் கடையில இருந்தவங்க தான் அந்த கிளாஸ் துண்டை போட்டு இருப்பாங்கன்னு ஒரு தீர்ப்பை சொல்லிட்டீங்களாமே.. எப்படிக்கா அது.. நீங்க இதுவரைக்கும் அந்த மெக்கானிக் கடை ஓனர் யாருன்னு பார்த்திருக்கீங்களா? இல்ல அந்த மெக்கானிக் கடையில் வேலை செய்ற என்னதான் பார்த்து இருக்கீங்களா? எங்கள பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அது எப்படிக்கா இப்படி நீங்களே முடிவு பண்ணி சொல்லுவீங்க?” என்று கேட்டான் சின்ன பையன்..

 

“ஆமா.. நாங்க பேசுனதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்று சுமி கேட்க “அதெல்லாம் ஆல் டீடெயில்ஸ் ஐ நோ.. அப்புறம் நீங்க ஒருத்தர் கிட்ட உங்களை காப்பாத்த சொல்லி கேட்டீங்க இல்ல.. அவர்தான் அந்த மெக்கானிக் கடைக்கும் ஓனரு.. அவர் தான் உங்க வண்டிய பஞ்சர் ஒட்டி.. கொண்டு வந்து கொடுக்க சொன்னாரு.. கூடவே இந்த மிளகாய் பொடி பாக்கெட்ட உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு..” என்று மிளகாய் பொடியை அவர்களிடம் நீட்ட “இது எதுக்குடா? எல்லாரும் முதல் தடவை மீட் பண்ணா ஸ்வீட் கொடுப்பாங்க.. உங்க அண்ணன் என்னடா மிளகாய் பொடி குடுத்து அனுப்பிச்சிருக்கறாரு..? “என்று கேட்டாள் சுமி..

 

“இந்த குசும்புக்கெல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்லை.. இத அந்த குடிகார பசங்க வந்தப்ப அவங்க கிட்ட காட்டி இருக்க வேண்டியதுதானே.. இந்த மாதிரி ஒரு மிளகாய் பொடி பாக்கெட்டை எப்பவும் உங்க பேக்ல வச்சுக்க சொன்னாரு.. அண்ணா.. இந்த மாதிரி யாராவது வந்தா அவங்க கிட்ட இருந்து உங்கள காப்பாத்திக்க உதவும்னு சொன்னார்.. அதுக்கப்புறம் இந்த நம்பர உங்க ஃபோன்ல ஸ்டோர் பண்ணி வச்சுக்க சொன்னாரு..” என்று அவன் கையில் குறித்திருந்த ஒரு எண்ணை காண்பித்தான் சின்ன பையன்..

 

“இது போலீஸோட எமர்ஜென்சி நம்பர்.. இந்த மாதிரி ஏதாவது நடந்துச்சுன்னா அவங்களுக்கு ஃபோன் பண்ணியோ மெசேஜ் பண்ணியோ உடனே கூப்பிட சொன்னாரு.. இப்போ உங்களை காப்பாத்த போலீஸ் வந்ததும் இந்த நம்பருக்கு அவர் ஃபோன் பண்ணுனதனாலதான்.. இந்த முறை அவர் ஃபோன் பண்ணிட்டாராம்.. அடுத்த முறைல இருந்து உங்களையே இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி கூப்பிட்டுக்க சொன்னாரு..” என்று அவன் சொல்ல “டேய்.. திரும்பத் திரும்ப நாங்க இந்த மாதிரி ஒரு கஷ்டத்துல மாட்டுவோம்னு உங்க அண்ணன் ஏன்டா எப்படி கெட்டதாவே நினைக்கிறாரு?” என்று கேட்டாள் தேஜு..

 

“அக்கா இந்த ஆபத்தெல்லாம் நமக்கு எப்போ எப்படி வரும்னு தெரியாது.. இந்த மாதிரி நம்மள நாமே காப்பாத்திக்குறதுக்கு என்ன என்ன உண்டோ அதெல்லாம் கத்து வச்சுக்கணும்.. அப்புறம் அண்ணன் இன்னொரு விஷயமும் சொல்ல சொன்னாரு.. அதாவது எப்பவுமே பொம்பளைங்க தங்களை காப்பாத்திக்கறதுக்கு ஒரு ஆம்பளய எதிர்பார்த்து நிற்கக் கூடாதாம்.. எங்கிருந்தாவது ஒரு வீரமான ஆம்பள வந்து தான் உங்களை காப்பாத்துவான்னு எதிர்பார்த்துட்டு நின்னுட்டு இருந்தீங்கன்னா அதுக்குள்ள உங்களை அழிக்க வந்தவன் அழிச்சிட்டே போயிடுவான்.. அதனால எதுவா இருந்தாலும் நீங்களே எதிர்த்து நிக்கறதுக்கு இந்த மாதிரி எல்லாம் ரெடியா இருக்கணும் எந்த நேரமும்..ன்னு சொல்ல சொன்னாரு.. அடுத்த முறை இந்த மாதிரி அவர் வரமாட்டார்ன்னு சொல்ல சொன்னாரு.. அப்புறம் முடிஞ்சா கராத்தே பாக்சிங் அந்த மாதிரி ஏதாவது கத்துக்க சொன்னாரு உங்கள..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான் சின்ன பையன்..

 

“டேய்.. உங்க அண்ணனுக்கு நாங்க தேங்க்ஸ் சொன்னதா சொல்லுடா..” என்று தேஜூ கத்த அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தன் வழியே நடந்து போய்க் கொண்டிருந்தான் சின்ன பையன்..

 

சுமி “அய்யய்யோ.. இவன் என்ன.. ஹெல்ப் செஞ்சாலும் செஞ்சான்.. அதுக்கு எவ்வளவு நேரம் அந்த பையன் கிட்ட லெக்சர் கேக்க வச்சிட்டான் பாத்தியா..? காலேஜ்ல கூட இவ்வளவு நேரம் நான் லெக்சர் கவனிச்சதில்லடி” என்று சொன்னாள்..

 

“ஏய்.. அவன் இந்த சின்ன பையன் கிட்ட சொல்லி அனுப்பிச்சது எனக்கும் புடிக்கல.. இத அவனே சொல்லிட்டு போய் இருக்கலாம்.. ரொம்ப திமிர் புடிச்சவனா தான் இருக்கான் அவன்.. ஆனாலும் அவன் சொன்னதெல்லாம் கரெக்டு தானடி..? ஒவ்வொரு இடத்திலும் இந்த மாதிரி யாராவது நம்பள ஆபத்திலிருந்து காப்பாத்த வருவான்னு நம்ப எதிர்பார்த்துட்டு இருக்க கூடாது இல்ல..? அதனால அவன் சொல்ற மாதிரி ஏதாவது செல்ப் டிஃபென்ஸ் கத்துக்கலாமான்னு நானும் யோசிக்கிறேன் டி..” என்று சொன்னாள் தேஜூ..

 

“என்னடி வண்டி ட்ராக் மாறுது? நீ ப்ரொபோஸ் பண்ண ஆளாச்சேன்னு ஒருவேளை மனசு மாறிட்டயோ..?” என்று சந்தேகத்துடன் சுமி கேட்க அவள் மண்டையிலேயே கொட்டினாள் தேஜு..

 

“உன் புத்தி எப்பவுமே நேராவே யோசிக்காதா?” என்று கேட்டவள்..”ஏ..சுமி.. நீ அந்த பையன் சொன்னத கேட்டியா? அந்த அருண் அந்த மெக்கானிக் ஷாப்போட ஓனர்ன்னு சொன்னான்.. அப்படின்னா அந்த மெக்கானிக் ஷாப்ப நடத்திக்கிட்டே அவன் காலேஜ்ல படிக்கிறான்.. அவன் காலேஜ்க்கான ஃபீஸ அவனே சம்பாதிச்சு கட்டி படிக்கிறான்.. அவன் கால்ல அவன் நிக்கிறான்.. எனக்கு என்னமோ அவன் நல்லவன்னு தான் டி தோணுது.. என்ன கொஞ்சம் கோவக்காரனா இருக்கான்.. கொஞ்சம் உம்மணாமூஞ்சியா இருக்கான்.. மத்தபடி அவன் செஞ்சதுல ஏதாவது ஒரு தப்பு உன்னால சொல்ல முடியுமா..? சொல்லு..” 

 

தேஜு கேட்க “நீ சொல்றதெல்லாம் கேட்டா சரின்னு தான் தோணுது.. ஆனா எனக்கு வேற ஒன்னும் தோணுது..” என்றாள் சுமி..

 

“என்னடி தோணுது..?” என்று தேஜு கேட்க “ம்ம்ம்ம்.. நீ அந்த மெக்கானிக்கிட்ட மொத்தமா விழுந்துட்டேன்னு தோணுது..” 

 

 அவள் கிண்டலாய் சொல்ல “நீ இப்படியே ஏடாகூடமா பேசிக்கிட்டிருந்த என்கிட்ட அடி வாங்கியே செத்துடுவே..  சரி.. வா இன்ஸ்பெக்டர் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. அவரு கூட போய் கம்ப்ளைன்ட் எழுதி குடுத்துட்டு வரலாம்..” என்று சொல்லி தன் வண்டியை எடுத்துக்கொண்டு சுமியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றாள்..

 

அதன் பிறகு தேஜு தன் கல்லூரிக்கு சந்தோஷமாக சென்று வந்து கொண்டிருந்தாள்.. இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன.. இப்போது அவள் கராத்தே வகுப்பிலும் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டு இருந்தாள்.. அவளுடைய கல்லூரியில் பல கல்லூரிகள் பங்கேற்கும் கலை விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்..

 

தேஜு அந்த கலை விழாவில் பாட்டு போட்டியில் கலந்து கொள்ள தன் பெயரை கொடுத்திருந்தாள்.. அவள் நன்றாக பாடுவாள்..  முறையாக சங்கீதம் பயின்றவள்.. 

 

அந்த கல்லூரியில் கலை விழா நிகழ்ச்சிகளை இரண்டாம் ஆண்டு மாணவர்களும் மூன்றாம் ஆண்டு மாணவர்களும் பொறுப்பெடுத்து நடத்த வேண்டும்.. எல்லா ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கிறதா என்று அவர்கள் தான் பார்க்க வேண்டும்..

 

முதலாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்க மட்டுமே செய்வார்கள்.. இதில் பாட்டு போட்டியை ஏற்பாடு செய்யும் பொறுப்பு நித்திலாவின் நண்பன் சரணுக்கு கொடுக்கப்பட்டிருந்தது..

 

நித்திலாவும் அந்த பாட்டு போட்டியில் கலந்து கொண்டிருந்தாள்.. கேன்டீனில் அமர்ந்து சரணுடன் சேர்ந்து பாட்டு போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களின் பட்டியலை பார்த்தவள் தேஜூவின் பெயரை பார்த்ததும் அவள் காதுகளில் புகை வந்தது..

 

தேஜு எல்லா பாடங்களிலும் முதன்மை மாணவியாக இருந்ததால் அத்தனை பேராசிரியர்களின் நாவிலும் அவள் பெயர் ஒட்டிக் கொண்டிருந்தது.. எல்லோருடனும் கலகலப்பாய் பேசும் அவள் சுபாவத்தினால் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பலரை தன் நண்பர்களாக பெற்றிருந்தாள் அவள்..

 

ஏற்கனவே அவள் மேல் கோபத்தில் இருந்த நித்திலா இப்படி கல்லூரி முழுவதும் அவள் புகழ் பரவி இருக்க இன்னும் பொறாமை தீயில் பற்றி எறிந்தாள்…

 

அந்தப் பட்டியலில் தேஜுவின் பெயரை பார்த்தவள் சரணிடம் “டேய்.. அந்த தேஜு இந்த போட்டியில ஜெயிக்க கூடாதுடா.. அவ மேடை மேல பாட முடியாம அவமானப்பட்டு நிக்கறத நான் பாக்கணும்” என்றாள்..

 

“அட நித்தூமா.. நீ ஏன் அந்த பொண்ணு மேல இன்னும் கோவமா இருக்க..? பாவம் அன்னைக்கு அப்புறம் அவ நம்ம வம்புக்கு வரவே இல்லையே..” 

 

 பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சரண் கேட்க “நான் கோபமா இருக்கிறது இருக்கட்டும்.. நீ என்ன திடீர்னு அவ மேல ரொம்ப பாசமா இருக்க..” புருவத்தை தூக்கிக் கொண்டு நித்திலா அவனை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள்..

 

அவனும் “ஹி..ஹி..” என்று தலையை சொரிந்து கொண்டு இளித்தவன் “அது.. வந்து.. இந்த காலேஜ்ல உனக்கப்புறம் செம்ம அழகா இருக்குற பொண்ணு அவ தான்.. நித்துமா.. அதனால..” என்று அவன் இழுக்க “அதனால சாருக்கு அவ மேல ஒரு கண்ணு.. சரி அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. நீ சொல்ற மாதிரி அன்னிக்கு அப்புறம் அவ என்கிட்ட வம்புக்கு வரல.. ஆனா அந்த அருணை என்னை லவ் பண்ண வச்சு என் பின்னாடியே சுத்த வைக்கணும்னு நெனச்சேன் நான்.. ஆனா என்னை அவன்கிட்ட அடி வாங்க வச்சவ அவ.. அவளை இந்த மூணு வருஷம் இல்ல.. இன்னும் 30 வருஷம் ஆனாலும் என்னால மன்னிக்க முடியாது.. நான் பட்ட அவமானத்துக்கு அவ இன்னும் எத்தனை தடவை அவமான பட்டாலும் என் மனசு ஆறாது.. அதனால இந்த போட்டியில அவ பாடாம இருக்குறதுக்கு ஏதாவது ஒரு ஐடியா சொல்லு..” என்று கேட்டாள் நித்திலா..

 

“ஐடியா தானே சொல்லிட்டா போச்சு.. பேசாம அந்த அருணுக்கும் இவளுக்கும் ஏதோ ராங் கனெக்சன்னு சொல்லி காலேஜ் முழுக்க பரப்பி விட்ரலாமா..?” 

 

“டேய்.. அவ போட்டியில் தோக்கறதுக்கு வழி சொல்லுன்னு சொன்னா.. நான் அந்த அருண் கிட்ட மறுபடியும் அடி வாங்குறதுக்கு வழி சொல்றியா நீ..?” முறைத்துக் கொண்டே கேட்டாள் அவனை…

 

இருவரும் தீவிரமாக யோசிக்க நித்திலா முகம் சட்டென பிரகாசமாகியது..

 

 “ஐடியா.. இப்படி பண்ணா நிச்சயமா அவளால போட்டியில் பாடவே முடியாது.. ஆமா நம்ம இவன்ட் அன்னைக்கு அந்த ஃபுட் ஸ்டால் எல்லாம் போடுறாங்க இல்ல.. அதோட இன்சார்ஜ் யாரு..?” 

 

“நம்ம தோஸ்த் சஞ்சீவ் தான்.. ஏன் கேக்குற?” 

 

 “அப்படின்னா நான் சொல்ற மாதிரி பண்ணு.. அவ மேடையிலே ஏறுவா.. ஆனா பாட மாட்டா…” என்று சொல்லி அவள் திட்டத்தை விளக்கினாள்..

 

அவள் சொல்ல சொல்ல அவன் முகமும் பிரகாசமானது.. “இந்த ஐடியா ஒர்க்கவுட் பண்ணா அவளால நிச்சயமா பாடவே முடியாது நித்திம்மா.. நான் இப்பவே போய் இதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரேன்” 

 

 நித்திலாவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் கிளம்ப இவர்கள் பேசியதை எல்லாம் பின் இருக்கையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த அருண் கையை ஓங்கி அந்த மேஜையில் குத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தினான்..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு செல்லங்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!