அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 32🔥🔥

5
(9)

பரீட்சை – 32

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

என்னவள் உன்னை 

எல்லோர் முன்னும் 

இழிவுபடுத்த 

பெண் என்ற 

உருவில் இருந்த 

பேயவள் 

திட்டமிட..

 

அவளிடம் இருந்து 

உன்னை காக்க 

ஏதேதோ செய்த 

என்னை 

எடுத்தெறிந்து 

பேசினாய்…

 

உளம் நோக 

பேசி உனக்கு 

பழக்கமில்லை

என்றாலும் 

என்னைப் பற்றிய 

உன் புரிதல் 

தவறாக 

போனதெண்ணி 

தவித்தேனடி 

பெண்மானே…

 

இந்த தவிப்பு 

தந்த வலிக்கு 

மருந்தாய் 

உன் 

தேன்குரல்

இசை வந்து

என் மனதை 

வருடியதே..

 

கலைவாணி 

வடிவமாய் நான் 

கண்டெடுத்த என் 

கண்ணானவளே..!!!

 

###############

 

கலைவாணியே..!!

 

நித்திலாவும் சரணும் பேசியதை எல்லாம் பின் இருக்கையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த அருண் கையை ஓங்கி அந்த மேஜையில் குத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தினான்..

 

கலை விழா நடக்கும் நாளும் வந்தது.. தேஜூவுக்கான பாட்டு போட்டி மதியம் 12 மணிக்கு தொடங்க இருக்க போட்டி தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருக்கவே சுமியுடன் ஏதாவது வாங்கி சாப்பிடலாம் என மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவு கடைகள் இருந்த பகுதிக்கு சென்றார்கள்..

 

அங்கு பானி பூரி சாப்பிட்டவர்கள் அதன் பிறகு ஒரு பழச்சாறு விற்றுக் கொண்டிருந்த கடைக்கு சென்று இரண்டு பழச்சாறு வாங்கினார்கள்..

 

அந்த பழச்சாறு கடையில் நின்றிருந்த சரண் ஏற்கனவே கலந்து வைத்திருந்த இரண்டு பழச்சாறு நிறைந்த குவளைகளை எடுத்து அவர்களிடம் கொடுத்தான்..

 

அப்போது சுமி “ஏன்..? ஃப்ரெஷ்ஷா எங்க எதிரே ஜூஸ் போட்டு கொடுக்க மாட்டீங்களா?” என்று கேட்க “இல்லை இப்பதான்.. டூ மினிட்ஸ் முன்னாடி போட்டேன்.. ஃபிரஷ்ஷா தான் இருக்கு..” என்றான் அவன்..

 

“ஓகே..” என்றவள் தன் கையில் இருந்த பழச்சாற்றைப் பருகினாள்..

 

தேஜுவும் அவள் கையில் இருந்த பழச்சாற்றை பருகப் போக சரியாக அப்போது அவர்களுடைய வகுப்பில் படிக்கும் ரித்தேஷ் ஓடி வந்தான் அவர்கள் அருகே..

 

“ஏய் ரித்தேஷ்.. எதுக்குடா இப்படி ஓடி வர?” 

 

 தேஜூ கேட்க “தேஜு.. இந்த ஜூஸை குடிக்காத.. இதுல ஏதோ கலந்து இருக்கு..” என்றான் ரித்தேஷ்..

 

“என்னடா சொல்ற? இப்பதான் இதோ இந்த ஸ்டால்ல இருக்கிற சரண் எனக்கு இந்த ஜூஸ் கொடுத்தான்.. அதுல எப்படிடா ஏதாவது கலந்து இருக்கும்..?” அப்பாவியாய் கேட்டாள் தேஜு..

 

சரணுக்கோ தான் மாட்டிக் கொண்டோமோ என்று அச்சம் பிறந்தது..

 

“இல்ல தேஜு.. நான் சரணை சொல்லல.. சரண் இங்க வச்சுட்டு அந்த பக்கம் போயிட்டு வரதுக்குள்ள இந்த ஜூஸ்ல அந்த அருண் ஒரு பாட்டில்ல இருந்து ஏதோ லிக்விட்ட கலந்ததை நான் பார்த்தேன்.. அதுல என்ன கலந்தான்னு அவனையே கேட்கலாம்னு தான் அவனை ஃபாலோ பண்ணி போனேன்.. ஆனா அவன் பின்னாடி தைரியமா போனேனே தவிர அவன் கோவமான முகத்தை பார்த்ததும் கொஞ்சம் பயம் வந்துருச்சு.. திரும்பி வந்துட்டேன்..” என்றான் ரித்தேஷ்..

 

“எனிவே.. தேங்க்ஸ் ரித்தேஷ்..” என்று சொன்னவள் “இரு சுமி.. நான் இப்ப வரேன்..” என்று சொல்லிவிட்டு வேக வேகமாக மைதானத்தை நோக்கி நடந்தாள்..

 

அங்கே எப்போதும் நிற்கும் மரத்தின் அடியில் அருண் நின்றிருந்தான்.. 

 

நேரே அவனிடம் சென்றவள் “என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க? நான் தான் அன்னைக்கு வந்து உங்க கிட்ட சாரி கேட்டுட்டேன் இல்ல? அப்புறமும் ஏன் எனக்கு தொல்லை கொடுக்குறீங்க..? இப்ப இதுல என்ன கலந்தீங்க..? என்னை மன்னிக்கவே மாட்டீங்களா? அன்னிக்கு தெரியாத்தனமா உங்களுக்கு ரோஸ் கொடுத்து ப்ரபோஸ் பண்ணிட்டேன்.. தப்புதான்.. நான் திரும்பவும் வேணா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. ஆனா அதுக்காக இப்படி சில்லியா ஏதாவது பண்ணி உங்க மதிப்பை நீங்களே கொறச்சுக்காதீங்க..” என்றாள் இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு..

 

அவள் கையில் இருந்த பழச்சாறை தன் கையில் வாங்கிய அருண் மரத்தில் எப்போதும் போல் சாய்ந்த படி நின்று கொண்டு அதை மெதுவாக ஒவ்வொரு வாயாக பருகியபடி தன் கையில் வைத்திருந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினான்..

 

அதைப் பார்த்தவள் துணுக்குற்றாள்.. அவள் பின்னாடியே வந்த சுமி “அந்த ரித்தேஷ் என்னத்தை பார்த்துட்டு உளறினான்னு தெரியல.. பாரு.. அவரே அந்த ஜூஸை குடிக்கிறாரு… அதுல ஏதாவது தப்பா கலந்து இருந்திருந்தா அவர் குடிச்சிருப்பாரா? உனக்கு என்னடி அவசரம்?” என்று கேட்டாள்..

 

உடனே தேஜூ “சாரி சார்.. எனக்கு இதே வேலையா போச்சு.. எப்ப பாரு உங்ககிட்ட சாரி கேட்டுட்டே இருக்கேன்.. நீங்க அதுல ஏதோ கலந்ததை பார்த்ததா அந்த ரித்தேஷ் சொன்னான்.. அதான் நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன்.. சாரி சார்..” என்றாள்..

 

அவனோ எதுவுமே நடக்காதது போல் அந்த பழச்சாற்றை முழுதாய் பருகியவன் காலி குவளையை அவள் கையில் திணித்துவிட்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய கண்ணாடி குடுவையை எடுத்தவன் சுமியின் கையைப் பிடித்து அதில் அந்த குடுவையை வைக்க அதை எடுத்து பார்த்தவள் அதன் மேல் ஹனி என்று எழுதி இருக்கவும் “தேன் தாண்டி கலந்து இருக்கிறார் அந்த ஜூஸ்ல..” என்றாள்..

 

அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் அங்கிருந்து திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டான் அருண்..

 

“இந்த ரித்தேஷை..” என்று பல்லை கடித்தாள் தேஜு..

 

“அவனை எதுக்குடி கோவிச்சுக்கிற? அவன் வந்து ஏதோ கலந்ததை பார்த்ததா தான் சொன்னான்.. அது என்னன்னு தெரியறதுக்கு முன்னாடியே நீ தானடி வந்து கத்துன..? உன் மேல தான் தப்பு.. இனிமே எதுவா இருந்தாலும் கொஞ்சம் விசாரிச்சிட்டு அப்புறம் முடிவு பண்ணு..” என்றாள் சுமி..

 

“ஆமாண்டி.. நீ சொல்றதும் கரெக்ட் தான்.. வரவர நான் ரொம்ப அவசர குடுக்கையா ஆயிட்டேன்..” என்று சொன்னவளிடம் சுமி “ஆனா எனக்கு ஒரு டவுட்டு..” என்றாள்..

 

“இப்ப கேக்கலேன்னா சொல்லாம விடவா போற? என்ன டவுட்டு?” என்றாள் தேஜு..

 

“இல்ல நம்ம துர்வாச முனிவருக்கு திடீர்னு உன் மேல என்ன அவ்வளவு அக்கறை..? ஜூஸ்ல தேனெல்லாம் ஊத்தி கொடுக்குறாரு..” என்று கேட்டவளை “ஆரம்பிச்சிட்டியா நீ..? அவர் ஆக்சுவலி தனக்காக தேன் ஊத்தி வச்சிருப்பாரு.. வேற ஏதாவது வேலையா போய் இருப்பாரு.. அதுக்குள்ள நாம வந்து வாங்கி அதை குடிக்க போனோம்.. அதான் இப்ப அதை எடுத்துட்டு வந்து நான் அவரைக் கேள்வி கேட்ட உடனே தானே அதை வாங்கி குடிச்சிட்டாரு.. அதனால நீ முதல்ல இந்த மாதிரி குறுக்கு புத்தியை யூஸ் பண்ணி கேள்வி கேட்கிறதை நிறுத்து.. வா போலாம்..” 

 

 இருவரும் சேர்ந்து மறுபடியும் அந்த பழச்சாறு விற்றுக் கொண்டிருந்த கடைக்கு சென்றார்கள்..

 

மறுபடியும் இன்னொரு பழச்சாறு கேட்க சரண் மறுபடியும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பழச்சாற்றை எடுத்து அவளுக்கு நீட்டினான்..

 

சுமி அவனிடம் “அது என்ன..? எப்ப வாங்க வந்தாலும் முன்னாடியே போட்டு வச்சிருக்க ஜூஸை?” என்று கேட்டாள்..

 

அவனோ “ஹி..ஹி..” என்று இளித்து விட்டு “ஜூஸை குடிங்க ஜூனியர்..” என்றான்..

 

மறுபடியும் தேஜு அவள் கையில் இருந்த பழச்சாற்றை பருகப் போக அவள் பக்கத்தில் வேகமாக வந்த அருண் அவள் கையில் இருந்து அதை பறித்து எடுத்துக் கொண்டு நேராக நடந்தான்..

 

தேஜூவுக்கோ அவன் என்ன செய்கிறான் என்றே புரியவில்லை.. கோவமாக அவனை பின் தொடர்ந்தாள் அவள்..

 

வேகமாக நடந்தவன் அதை நேரே எடுத்துக் கொண்டு நித்திலா இருக்கும் இடத்திற்கு சென்றான்.. அங்கு அவள் இரண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க அவள் பின் கழுத்தைப் பிடித்தவன் அவள் தலையை பின் பக்கமாய் சாய்த்து வாயில் அந்த குவளையை பொருத்தி அந்த பழச்சாறு முழுவதையும் பலவந்தமாக அவள் வாயில் ஊற்றி பருக வைத்து விட்டான்..

 

அவளோ என்ன நடந்தது என்று புரிவதற்குள் அந்த பழச்சாறு முழுவதையும் பருகி இருந்தாள்.. 

 

தேஜூ அவன் பின்னாலயே போய் “என்ன இப்படி அராஜகம் பண்றீங்க? என்னோட ஜூஸ்ல ஹனி கலந்தீங்க‌‌.. அதுக்கப்புறம் அதை பத்தி கேள்வி கேட்டப்போ நீங்களே குடிச்சிட்டீங்க.. இப்போ மறுபடியும் நான் குடிக்க போன ஜூஸை எதுக்கு வாங்கிட்டு வந்து இவங்களுக்கு அதை ஃபோர்ஸ் பண்ணி கொடுத்தீங்க.. பாருங்க.. அவங்க எவ்வளவு பயந்துட்டாங்கன்னு..”

 

 நித்திலாவுக்கு அவள் பரிந்து பேச கையை இறுக்கி பல்லை கடித்து தேஜுவை முறைத்தவன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்..

 

நித்திலாவை பார்த்தவள் “ஐயோ சாரி மேம்.. அவர் ஏன் இப்படி நடந்துக்கிட்டார்ன்னு தெரியலை.. உங்க மேல இன்னும் அவருக்கு கோபம் போகல போல.. என்னால தான் உங்க மேல அவரு கோபப்பட்டார்.. சாரி மேம்..” 

 

 அவள் அவசரமாய் மன்னிப்பு கேட்க “இட்ஸ் ஓகே..” என்று சொல்ல வந்த நித்திலாவின் குரலோ வெளியே வரவே இல்லை… வெகு நேரம் முயற்சி செய்து பேசவே முடியாமல் போக அப்போதுதான் தேஜுவுக்கு அந்த பழச்சாற்றில் ஏதோ கலந்திருந்தது என்பது புரிந்தது..

 

ஆனால் அதை ஏன் அருண் நித்திலாவுக்கு பலவந்தமாக கொடுக்க வேண்டும் என்று இப்போதும் அவளுக்கு புரியவில்லை.. 

 

“ஓ.. இதுல உங்க குரல் அஃபெக்ட் ஆகுற மாதிரி ஏதோ கலந்து இருக்கிறார் போல இருக்கு.. உங்களுக்கு கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்ததை நான் குடிக்க போனதுனால தான் அவர் உங்களுக்கு கொண்டு வந்து கொடுத்துட்டாரா? அவர் ஏன் இப்படி பண்றாரு..? என்னதான் உங்க மேல கோவம் இருந்தாலும் இப்படியா பண்ணுவாங்க.. பாவம்.. இப்போ உங்களால காம்படிஷன்ல கூட பார்ட்டிசிபேட் பண்ண முடியாது இல்ல..? ரொம்ப சாரி.. நித்திலா மேம்.. இவர் ஏன் இப்படி இருக்காருன்னு தெரியல..” என்று சொன்னவள் அங்கிருந்து நகர்ந்து செல்லவும் பல்லை கடித்துக் கொண்டு காலை எட்டி உதைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் நித்திலா..

 

அங்கிருந்து வெளியே வந்த தேஜு தூரத்தில் அருண் நின்று கொண்டிருப்பதை பார்த்தவள் நேரே அவனிடம் சென்று “உங்களுக்கு அவங்க மேல என்ன கோவம்ன்னு எனக்கு தெரியல.. எவ்வளவு கோவம் இருந்தாலும் அவங்க குரல் அஃபெக்ட்டாகற மாதிரி இப்படியா எதையோ ஜூஸ்ல கலந்து குடுப்பாங்க.. ரொம்ப தப்பு சார்.. பாவம்.. அவங்க இன்னைக்கு சிங்கிங் காம்பெட்டிஷன்ல வேற கலந்துக்கறதா இருந்தாங்க.. இப்ப அவங்களால பாடவே முடியாது.. ஏன் சார் இப்படி பண்றீங்க?” என்றவள் “இதுக்கும் கோச்சுக்காதீங்க சார்.. எனக்கு எதோ சொல்லணும்னு தோணுச்சு..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்..

 

###################

 

அருணின் டைரியிலிருந்து..

 

தனக்கு தீங்கிழைத்தவரின் துயரையும் பார்த்து வருத்தப்படும் மனம் என்னவளுடையது..

தும்பை பூ வெண்மையான நிறம் தான்.. அதை காட்டிலும் தூய வெண்ணிற மனத்தை உடையவள் என் தேவதை.. 

 

என்னிடம் அறிவுரை சொல்லிவிட்டு போனவள் பாட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட அப்படியே அவள் வெள்ளந்தியான மனத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்து வெகுநேரம் என் மனக்கண்ணில் அவள் முகம் பார்த்து அந்த இடத்திலேயே நின்றிருந்தேன் நான்..  அவள் இனிமையான குரலில் இசைத்து கொண்டிருந்த கீதம் காற்றிலே மிதந்து வந்து என் காதில் தேனாய் பாய்ந்தது..

 

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

 

அப்படியே மெய் மறந்து அந்த பாட்டு போட்டி நடக்கும் இடத்திற்கு தனிச்சையாக என் கால்கள் நகர்ந்து செல்ல ஒரு எந்திரனை போல் அந்த இடத்தை அடைந்திருந்தேன் நான்..

 

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பு அறியும்

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பு அறியும்

வருந்தும் உயிருக்கு

ஆ …

வருந்தும் உயிருக்கு

ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்

இசையின் பயனே இறைவன் தானே

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

 

அப்படியே அந்தப் பாட்டு போட்டி நடக்கும் அரங்கத்தில் நடுவே நடந்து சென்று முன் வரிசையில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன்.. என் கண்கள் காதுகள் என் உணர்வு மொத்தமும் அந்த மேடையில் தன் கண்களை மூடி பாடிக்கொண்டிருந்த அஷ்வினியின் மேலேயே இருந்தது..

 

சுற்றி இருந்தவர்கள் என்னை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்ததை  நான் அறியவில்லை.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்த இருக்கையில் சென்று அமர்ந்தவன் கன்னத்தை கையில் தாங்கிக் கொண்டு முழுவதுமாக என் தேவதையின் இசையில் மட்டுமே லயித்து அதில் தொலைந்து இருந்தேன்..

 

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்

அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் எது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா?

 

என்னையும் அறியாமல் என் கைகள் தட்டிக் கொண்டே இருந்தன.. சுற்றி இருந்தவர்கள் தங்கள் கைதட்டலை நிறுத்திய பிறகும் என் கை தட்டும் ஓசை மட்டும் தனியே அந்த அரங்கத்தில் கேட்டுக் கொண்டிருந்தது..

 

#################

 

இதை படித்து முடித்த வைஷு தேஜுவை கேள்வியாய் பார்க்க அந்த கேள்வியின் அர்த்தத்தை புரிந்து கொண்ட தேஜூ “நான் சின்ன வயசுல நல்லா பாட்டு கத்துக்கிட்டவ தான்.. எனக்கு நல்லா பாட வரும்..” என்று சொன்னதைக் கேட்டு வைஷுவும்  விஷ்வாவும் “அப்போ நிச்சயமா இதிலே இருக்கிற பொண்ணு நீங்கதான் கா..” அவர்கள் ஒன்றாக சேர்ந்தார் போல் கூற தேஜு அப்படியே அதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்..

 

“அந்தப் பொண்ணுக்கும் பாட தெரிஞ்சி இருந்தா அது நானுன்னு அர்த்தம் ஆயிடுமா? இன்னும் கூட.. என்னை பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கிட்டு இந்த மாதிரி தானே ஒரு கற்பனை கதையை எழுதி இருக்கான்னு எனக்கு தோணுது..” 

 

 “அக்கா நான் ஒன்னு சொல்லட்டுமா? நீங்க கொஞ்சம் கொஞ்சமா அவரை நம்ப ஆரம்பிச்சிட்டீங்க அக்கா.. இல்லனா இத்தனை நேரம் நீங்க இங்கிருந்து கிளம்பி போய் இருப்பீங்க.. இவ்வளவு நேரமா உட்கார்ந்து இந்த டைரியில என்ன என்ன எழுதி இருக்குன்னு படிக்க சொல்லி கேட்டுகிட்டு இருந்திருக்க மாட்டீங்க..” என்றாள் வைஷு..

 

அவள் சொன்னதில் எத்தனை உண்மை இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த தேஜூ அதை மறுக்கவும் முடியாமல் அதே சமயம் அவள் சொல்வது போல் அந்தப் பெண் தான் தான் என்று ஏற்கவும் முடியாமல் அவள் தொடர்ந்து படிப்பதை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு செல்லங்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!