அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 41🔥

4.9
(7)

பரீட்சை – 41

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

கரடு முரடாய்

வெளிப்புறத்தில்

காட்சியளித்த 

நீ

 

பலா சுளையாய் 

இனிக்கும் 

பால் மனத்தை 

உனக்குள் 

பதுக்கி வைத்திருக்கிறாய் 

என 

புரிந்து 

கொண்டேனடா..

 

எப்போதும் அனல் 

கக்கும் உன் 

இரு விழிகளின்

ஆதூரமான 

ஒரு பார்வைக்காய்

ஏங்கி எந்தன்

உள்மனம் 

அலைபாயுதடா..

 

ஒரே நாளில் 

உள்ளுக்குள் 

நான் உணர்ந்த 

இந்த மாற்றம் 

உனக்குள்ளும் 

வருமோ..

 

உன் 

உக்கிர பார்வை 

மாற்றி என் 

உள்ளம் குளிர்விப்பாயோ 

என் உயிரே..!!

 

################

 

உக்கிரனே…!!

 

டிசம்பர் 31ஆம் தேதி.. கல்லூரி முதல்வரின் அலுவலகத்தில் அருண்.. தேஜு.. நிலவழகன்.. சுமி.. நித்திலா.. சரண்.. சஞ்சீவ்.. அனைவரும் கல்லூரி முதல்வரை சுற்றி நின்று கொண்டு அவர் என்ன பேசுகிறார் என்று கேட்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்..

 

 “என்ன அருண்.. திடீர்னு உன் டிஸ்மிஸலை கேன்சல் பண்ணிட்டேன்.. எப்படி காலேஜ்ல திருப்பி சேர்த்துக்கிட்டேன்னு குழப்பமா இருக்கா..? உன்னை டிஸ்மிஸ் பண்ணதுக்கு காரணமும் தேஜஸ்வினி தான்.. இப்போ மறுபடியும் நீ காலேஜ்ல ஜாயின் பண்ணறதுக்கு காரணமும் அதே தேஜஸ்வினி தான்..” 

 

 அவர் சொன்னதை கேட்டு அருண் தேஜுவை பார்க்க அவள் அவனை பார்த்த பார்வையில் ஒரு கனிவிருந்தது..

 

அவள் பார்வையால் அவன் பார்வையை சந்தித்து கண்களாலேயே தான் செய்த தவறுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள் தேஜு..

 

அவனோ படக்கென முகத்தை திருப்பிக் கொண்டவன் சகுந்தலா சொல்வதையே கவனித்துக் கொண்டிருப்பது போல் பாவனை செய்தான்..

 

“அட.. என்ன கண்ணுடா இது.. டேய் அருணு.. அஷ்ஷூ பக்கம் பார்க்காதே.. அவ கண்ணு இருக்கே.. அது கண்ணே இல்ல.. அது ஒரு கண்ணி வெடி.. அதை பார்த்தா ரொம்ப டேஞ்சர் ஆயிடும்.. உனக்கு மட்டும் இல்ல.. அவளுக்கும்.. வேண்டாம் அருண்..” 

 

தன் கைகளை இறுக்கி தன் கவனத்தை கஷ்டப்பட்டு அவள் புறமிருந்து வேறு புறமாய் திசை திருப்பி கொண்டிருந்தான்..

 

அவனிடம் நூலகத்தில் எடுத்திருந்த காணொளியை காட்டினார் சகுந்தலா..

 

 “நிலவழகன் சுமி தேஜஸ்வினி மூணு பேரும் சேர்ந்து நித்திலா வாயினாலேயே உண்மையை வரவழைச்சுட்டாங்க.. ஸ்மார்ட் பீப்புள்” 

 

நிலவழகனையும் சுமியையும் பார்த்து நன்றியுடன் சிரித்தவன் தேஜூ பக்கம் தன் பார்வையை கூட‌ திருப்பவில்லை..

 

 “ரொம்ப தேங்க்ஸ்..” என்று அவர்களைப் பார்த்து சொன்னவன்.. தேஜூவை முறைப்பாய் ஒரு பார்வை பார்த்து விட்டு  முகத்தை திருப்பி கொண்டான்.. அவன் அப்படி செய்ததில் தேஜூவின் முகம் சுண்டைக்காயாய் சுருங்கி போனது..‌ 

 

“இவனுக்காக கஷ்டப்பட்டு பிளான் பண்ணி எல்லாம் செஞ்சது நானு.. நம்மளை திரும்பியாவது பார்க்கிறானா பாரு.. ஒராங்குட்டான்.. அவங்களுக்கு மட்டும் தேங்க்ஸாம் தேங்க்ஸூ”

 

 மனதுக்குள் அவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாள் தேஜூ..

 

அருண் சகுந்தலா பக்கம் திரும்பினான்..

 

 “இப்போ நீங்க நித்திலாக்கு என்ன தண்டனை குடுக்க போறீங்க?” 

 

 “நீ ஏற்கனவே ஒரு தடவை நித்திலாவை மன்னிச்சு அவளை இந்த காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் ஆக விடாம பண்ணி இருக்கே.. போன தடவை அந்த மாதிரி ஒரு வாய்ப்பு கொடுத்தோம்.. நித்திலா இப்ப ரெண்டாவது தடவையா தப்பு பண்ணி இருக்கா.. இப்போ நீ அவளை டிஸ்மிஸ் பண்ணனும்னு சொன்னா நான் பண்ணிடறேன்.. உனக்கு கொடுத்த அதே பனிஷ்மென்ட் தான் அவளுக்கும் கொடுக்கணும் நியாயமா பார்த்தா.. இப்போ அவங்க அப்பாவை வர சொல்லி இருக்கேன்.. ஆனா அவளை காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்றது அவளுக்கு சரியான தண்டனையா இருக்குமானு எனக்கு தெரியல.. அவங்க அப்பா வரட்டும் பேசுவோம்..” 

 

அவர் நித்திலாவின் தந்தையின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்..

 

 “மே ஐ கம் இன்..?” என்று ஒரு கம்பீரமான குரல் கேட்க அனைவரும் அறையின் வாசல் பக்கம் திரும்பினர்.. அங்கே கோட் சூட்டுடன் பணக்கார தோரணையோடு நின்று கொண்டிருந்தார் நித்திலாவின் தந்தை ஈஸ்வரமூர்த்தி.. 

 

“எஸ் ப்ளீஸ்..” என்றார் சகுந்தலா..

 

சகுந்தலாவை சங்கடமான ஒரு பார்வை பார்த்துக் கொண்டே நித்திலாவை தீவிரமாக முறைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் ஈஸ்வரமூர்த்தி..

 

“வாங்க.. உட்காருங்க மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி..” 

 

 அவரை அமரச் சொல்லி “உங்க கிட்ட பேசுறதுக்கு முன்னாடி.. உங்க பொண்ணு செஞ்ச வேலைனால இங்க பல கொடுமைகளை அனுபவிச்சவன் இதோ இந்த பையன் அருண்.. இது தேஜஸ்வினி.. உங்க பொண்ணு தனக்கு நல்லது பண்றான்னு நம்பி அவ சொன்னதெல்லாம் உண்மைனு எடுத்துக்கிட்டு கம்ப்ளைன்ட் பண்ணதனாலதான் அருணை நான் காலேஜை விட்டு டிஸ்மிஸ் பண்ண வேண்டியதா போச்சு.. தேஜஸ்வினிதான் உங்க பொண்ணை பத்தியும் அருண் பத்தியும் இந்த நிலவழகன் சொல்லி புரிஞ்சுகிட்டதுக்கப்புறம் உங்க பொண்ணு பண்ண தப்பை எல்லாம் வெளியில கொண்டு வந்தா..”  என்று சொன்னார்..

 

ஈஸ்வரமூர்த்தி அருணை திரும்பி தலையில் இருந்து கால்வரை பார்த்து “ஐ அம் சாரி மிஸ்டர் அருண்.. என் பொண்ணால நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க.. இனிமே அவளால உங்களுக்கு ஒரு கஷ்டமும் வராது.. உங்களுக்கு ப்ராமிஸ் பண்றேன்.. அப்படி ஏதாவது கஷ்டம் வந்துச்சுன்னா நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.. ஆனா அந்த அளவுக்கு என் பொண்ணு கொண்டு போக மாட்டான்னு நான் நம்புறேன்..” என்று நித்திலாவை அர்த்தமாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சொன்னார் அவர்..

 

“இட்ஸ் ஓகே சார்.. யார் எது பண்ணாலும் நான் என்ன செய்யணும்னு நினைக்கிறேனோ அதை தான் செய்வேன்.. யாருக்காகவும் என் வாழ்க்கை குறிக்கோளையும் என் வாழ்க்கை முறையையும் என் குணத்தையும் நான் மாத்திக்க மாட்டேன்.. அதனால நீங்க உங்க பொண்ணுக்கு தண்டனை கொடுக்குறீங்களோ இல்ல மன்னிச்சு ஏத்துக்கிறீங்களோ அது உங்களோட இஷ்டம்.. அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவ மறுபடியும் எனக்கு எதிரா ஏதாவது சதி பண்ணாலும் அதை பத்தியும் எனக்கு கவலை இல்லை.. ஏன்னா எது பண்ணாலும் என் குணமும் மாறாது.. என் குறிக்கோளும் மாறாது.. எப்படியும் என் குறிக்கோளை நான் அடைஞ்சிடுவேன்.. என் குறிக்கோளை அடையறதுக்கு இந்த காலேஜ் ஒரு கருவி அவ்வளவுதான்.. இங்கே எனக்கு என் குறிக்கோள் அடையற பாதையில ஏதாவது பிரச்சனை வந்தா வேற பாதை மூலமா போவேனே தவிர என் கோலை என்னைக்குமே நான் மாத்திக்க மாட்டேன்..‌” உறுதியாய் பேசியவனை ஆச்சரியமாக பார்த்தாள் தேஜூ.. 

 

“என்ன மனிதன் இவன்.. எவ்வளவு அடி வாங்கினாலும் சிறிதும் அதை பற்றி கவலைப்படாமல் ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் துளிர்த்து எழுந்து நிற்கிறானே..” இப்படி எண்ணியபடி அவனை பிரமிப்பாய் பார்த்தவள் கண்களில் அவனுக்கான ஒரு பாராட்டும் தெரிந்தது.. 

 

எதை பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னோடு தனக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இப்படி ஒரு இறுக்கமான மனிதனை அவள் அதுவரை  கண்டதில்லை.. அவன் இறுக்கத்திற்கான காரணத்தை விரைவில் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவளுக்குள் ஒரு ஆர்வம் பிறந்தது..

 

அவனை தன் கண்களாலேயே விழுங்கி விடுபவள் போல் இமை கொட்டாமல் தேஜூ பார்த்திருக்க சுமி தன் தோளினால் அவள் தோளை இடித்தாள்.. தன்னை உணர்ந்த தேஜூ சட்டென புன்னகைத்து தலை குனிந்து நிற்க சுமிக்கோ அவள் வெட்க புன்னகையை பார்க்க புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது..

 

“ஓகே மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி.. அருண் தன்னோட முடிவை சொல்லிட்டான்.. உங்க பொண்ணுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அவனுக்கு ஓகேன்னு சொல்லிட்டான்.. தண்டனை கொடுக்கலைன்னா கூட அவன் எதுவும் சொல்ல மாட்டான்.. ஆனா எனக்கு உங்க கூட கொஞ்சம் பேசணும்.. நித்திலாக்கு அம்மா இல்ல.. அப்படி இருக்கும்போது அவ கூடயே இருந்து அவளை வழி நடத்த வேண்டிய நீங்களும் இப்படி பிசினஸ் விஷயமா ஊர் ஊரா போய்கிட்டு அவளை கவனிக்காம இருந்தா அவளை வளர்க்கறது யாரு? அவளை சுத்தி இருக்கிற ஃபிரெண்ட்ஸ்… அவளை சுத்தி இருக்கிற சமூகம்.. இதுதானே..? நீங்க அவ கூடவே இல்லனாலும் பரவால்ல.. ஆனா இப்படி அவளை வளர்க்கிற அவளை சுத்தி இருக்கிற ஃப்ரெண்ட்ஸும் சமூகமும் எப்படி இருக்குன்னு அப்பப்ப மானிட்டர் பண்ண வேண்டியது உங்களோட கடமை இல்லையா? நீங்க அதுல இருந்து தவறிட்டீங்க மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி..” என்று சொன்னார் அவர்..

 

“எனக்கு புரியுது மேடம்.. நான் அவளுக்காக பணம் சேர்க்கறது மட்டுமே குறிக்கோளா இருந்துட்டேன்.. அவளை வசதியா வாழ வைக்கணும்னு நினைச்சேனே தவிர அவளை நல்லவளா வளர்க்கணும்னு நான் கவலைப்படல.. அதுக்கு எனக்கு கிடைச்ச பரிசு தான் இது.. ஆனா இனிமே அந்த தப்பை நான் திருத்திக்கிறேன் மேடம்.. நீங்க இப்ப என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான்.. அவளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் எனக்கு ஓகே..” என்றார் அவர்..

 

“இப்போ அவளுக்கு தண்டனை கொடுக்கிறதுனால அவ திருந்த போறதில்ல.. அது மட்டும் நிச்சயம்.. இன்னும் மோசமா தான் நடந்துப்பா.. ஏற்கனவே போதுமான தண்டனையை உங்க அரவணைப்பு அவங்க அம்மாவோட அரவணைப்பு இரண்டுமே கிடைக்காம‌ அவ அனுபவிச்சுட்டா.. இனிமே அவளுக்கு அந்த அரவணைப்பு தான் தேவைப்படுது.. அவளுக்கு தேவைப்படறது பணம் வசதி இதெல்லாம் இல்ல.. அவளுக்கு தேவைப்படுறது அன்பும் அரவணைப்பும்.. தெரிஞ்சோ தெரியாமலோ அருணை பழி வாங்கறதுக்காக தேஜுவோட ஃப்ரெண்ட் ஆயிட்டா.. அவ ஒரு நல்ல வாழ்க்கையை வாழறதுக்கு.. நல்ல பாதையில போகிறதுக்கு ஹெல்ப் பண்ணனும்னா அதுக்கு சரியான ஆளு தேஜூதான்.. அவளோட ஃப்ரெண்ட்ஸ் சரண்,கோகுல், சஞ்சீவ்,சார்மி நாலு பேரையும் வேற காலேஜுக்கு ஷிஃப்ட் பண்ணிடறேன்.. அவங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசி இதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.. இது முதல் விஷயம்.. ரெண்டாவது விஷயம் நீங்க மாசா மாசம் நித்திலாவுக்கு எவ்வளவு பணம் கொடுக்குறீங்க செலவுக்கு..?” என்று கேட்டார் சகுந்தலா..

 

“அவளுக்குன்னு தனியா அக்கவுண்ட் இருக்கு மேடம்.. அதுல எவ்வளவு பணம் இருக்குன்னு எனக்கு கூட தெரியாது.. அவளுக்கு கிரெடிட் கார்டு டெபிட் கார்டு எல்லாம் இருக்கு.. அதை வச்சு செலவு பண்ணிட்டு இருக்கா..” 

 

 “நீங்க என்ன சொல்றீங்கன்னு உங்களுக்கு புரியுதா மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி..? ஒரு 20 வயசு பொண்ணுகிட்ட இவ்வளவு பணத்தை கொடுத்து செலவு பண்ணிக்கோன்னு சொன்னா அவ இப்படி இல்லாம வேற எப்படி இருப்பா.. ஒரு குழந்தைக்கு நம்ம ஒரு பொருளை கொடுக்கிறோம்னா அது எவ்வளவு கஷ்டத்துக்கு அப்புறம் அவ கையில கிடைச்சிருக்குதுன்னு சொல்லி தரணும்.. ஃப்ரீயா கெடைக்கிற எதுக்குமே மதிப்பே இருக்காது மிஸ்டர் ஈஸ்வரன்.. பிசினஸ் மேனான உங்களுக்கு இது புரியும்னு நினைக்கிறேன்..”

 

 ஈஸ்வரமூர்த்தி தலையைக் குனிந்து கொண்டிருந்தார்..

 

“சரி.. போனது போகட்டும்.. விடுங்க.. ஆனா இனிமே அவ அக்கவுண்ட் எல்லாம் க்ளோஸ் பண்ணிடுங்க.. ஒரு மாசத்துக்கு அவளுக்கு 1000 ரூபாய்க்கு மேல கொடுக்க வேண்டாம்.. அதையும் நீங்களே அவளை மீட் பண்ணி ஒவ்வொரு மாசமும் கொடுக்கணும்னு வழக்கத்தை வச்சுக்கோங்க.. வீக்கென்ட்ஸ்ல வந்து அவளை பார்க்கிறதை வழக்கமா வச்சுக்கோங்க.. அப்புறம் நீங்க ரிக்வெஸ்ட் பண்ணதனால தான் எல்லா ஃபெஸிலிட்டீஸோட அவளுக்கு ஸ்பெஷலா ரூம் போட்டு கொடுத்தேன்.. இனிமே அந்த ரூம் அவளுக்கு வேண்டாம்.. மத்தவங்களை மாதிரி சாதாரண ரூம்ல அவ இருக்கட்டும்.. அப்பதான் அவங்க கஷ்டம் அவளுக்கு புரியும்.. அந்த மாதிரி வாழறவங்களையும் மதிக்க கத்துக்குவா..” 

 

 “கரெக்ட் மேடம்.. அவ மத்தவங்களை மாதிரி சாதாரண ரூம்லயே இருக்கட்டும்.. அவளுக்கு நான் அனுப்பி வச்ச ரெஃப்ரிஜிரேட்டர்.. ஏசி.. எல்லாத்தையும் நான் எடுத்துட்டு போயிடுறேன்..” என்றார் ஈஸ்வரன்..

 

இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த நித்திலாவுக்கோ உள்ளுக்குள் தேஜுவின் மேல் வன்மம் கூடிக் கொண்டே போனது.. தன் தந்தையின் முன் தான் அவமானப்பட்டு நிற்பதற்கு காரணமே தேஜுதான் என்று மனதில் முடிவு கட்டிக் கொண்டாள் அவள்.. அவள் வாழப்போகும் கஷ்டமான கல்லூரி வாழ்க்கைக்கு காரணமானவளும் தேஜூ தான் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்..

 

“வேற ஒன்னும் எனக்கு சொல்றதுக்கு இல்ல.. நீங்க ஏதாவது கேட்கணுமா?” என்று கல்லூரி முதல்வர் கேட்கவும் “ஒன்னும் இல்ல மேடம்.. நான் நித்திலா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிடறேன்” என்று சொன்னார் ஈஸ்வரன்..

 

அவர்கள் அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே வர ஈஸ்வரமூர்த்தி அருணின் கையைப் பிடித்து “அருண்.. என் பொண்ணு சார்பா நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. அவ உன் வழியில இனிமே குறுக்கிடவே மாட்டா… அப்படி அவ குறுக்க வந்தானா அவ அன்னிலேர்ந்து என் பொண்ணே கிடையாது…” என்று சொல்ல “இருக்கட்டும்.. பரவாயில்லை சார்..” என்றவன் அங்கிருந்து தான் எப்போதும் அமர்ந்திருக்கும் ஆஸ்தான மரத்துக்கு அடியில் போய் அமர்ந்து கொண்டான் யோசனையாய்..

 

அதற்குப் பிறகு தேஜுவிடம் வந்த ஈஸ்வரன் “அம்மா தேஜூ.. இதுவரைக்கும் நித்திலா பண்ணதெல்லாம் தாண்டி நீ அவளுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா இருந்து இருக்கே.. எனக்கு ஒரே ஒரு ரெக்வஸ்ட் இருக்கும்மா உன்கிட்ட.. தயவு செஞ்சு இந்த ஃப்ரெண்ட்ஷிப்பை நீ கண்டினியூ பண்ணனும்.. அவ பண்ண தப்பு எல்லாம் மறக்க கூடிய தப்பு இல்ல.. ஆனா உன் மனசு நல்ல மனசு மா.. அதெல்லாம் மறந்துட்டு அவளுக்கு நல்ல வழி காட்டுறதுக்காகவாவது நீ அவளோட ஃப்ரெண்டா இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. ஒரு அப்பாவோட வேண்டுதலா இதை நினைச்சுக்கோம்மா..” 

 

தேஜூ “ஐயோ அங்கிள்.. நீங்க இவ்வளவு எல்லாம் பேசவே வேண்டாம்.. தப்பு பண்ணாதவன் மனுசனா இருக்க முடியாது.. அந்த தப்பை திருத்திக்கலன்னா தான் நம்மளுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும்.. நித்திலா நிச்சயமா மாறிடுவா அங்கிள்.. இந்த மாதிரி ஒரு நல்ல அப்பா கிடைச்சிருக்கும் போது அவ மாறாம இருக்கவே முடியாது..” என்று சொன்னவள் நித்திலாவின் அருகில் சென்று அவள் கண்ணில் வழிந்து கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து விட்டு அவளை இறுக்க அணைத்துக் கொண்டாள்..

 

நித்திலாவும் அவள் தந்தை எதிரில் கோபத்தை காட்ட முடியாமல் “தேங்க்ஸ் தேஜு” என்றாள்..

 

அதன் பிறகு ஈஸ்வரமூர்த்தி நித்திலாவை பார்த்து “நித்திலா.. உன்னோட ஹாஸ்டல் ரூமுக்கு போலாமா? எனக்கு உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றார்..

 

அவருடன் அவளுடைய அறை உள்ளே நுழைந்ததும் கதவை சாற்றி தாழிட்ட ஈஸ்வரமூர்த்தி நித்திலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தார்..

 

“நித்திலா.. இந்த அறை நீ செஞ்ச தப்புக்கு இல்ல.. தப்பு செஞ்சு மாட்டிக்கிட்ட பாரு.. அதுக்காக தான்.. நீயும் அவமானப்பட்டு நின்னு என்னையும் எல்லார் முன்னாடியும் தலை குனிய வச்ச பாரு.. அதுக்காக..” என்று சொன்னவரை நம்ப முடியாமல் பார்த்தாள் நித்திலா..

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!