பரீட்சை – 49
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன்னிடம் இருந்து
ஒரு செய்தி
உளமாற ஏற்றுக் கொள்ள
யோசிக்கிறேன் என்று..
உலகமே மறந்து
போனதடா எனக்கு
அந்த
ஒரு சேதி கேட்டு
நெஞ்சம் முழுவதும்
நீயே நிறைய
நினைவெல்லாம்
உன்னை ஏந்தி
உன் அன்பை
பெற போகும்
உன்னதமான
நொடிக்காக
உயிர் காதலன்
நீ
அழைத்த இடத்திற்கு
உற்சாகமாக
துள்ளி வந்தேன்..!!
வந்த என்னை
ஏமாற்றாமல்
வாரி கொடுத்து
விட டா
உன் உள்ளத்தன்பை
என்
வடிவழகா..!!
##################
வடிவழகா..!!
தேஜூவின் கையைப் பிடித்த சரண் “அன்னைக்கு நான் பண்ணதுக்கெல்லாம் காரணம் நான் உன் மேல வச்சிருந்த காதல் தான்.. நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் தேஜூ.. அன்னைக்கு மட்டும் அருண் வரலைன்னா நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன்.. ப்ளீஸ் தேஜூ.. என் காதலை அக்சப்ட் பண்ணிக்கோ.. அந்த அருண் தான் உன்னை திரும்பி கூட பாக்க மாட்டேங்குறானே.. நீ ஏன் அவன் பின்னாடியே போயி கெஞ்சிட்டு இருக்கே?” என்று கேட்டான்…
இப்படி பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் வருவதை பார்த்த அருண் அவள் கையைப் பிடித்து இருந்த அவன் கையை வெறித்து பார்த்து பல்லை கடித்து கையை முறுக்கினான்..
“இதை பாரு.. அந்த அருண் என்னை லவ் பண்றான்.. லவ் பண்ணல.. அதெல்லாம் வேற விஷயம்.. ஆனா உன்னை மாதிரி ஒரு கேடு கெட்டவனை என்னால ஃப்ரெண்டா கூட அக்செப்ட் பண்ண முடியாது.. என்ன சொன்ன? அன்னிக்கு அருண் வரலைன்னா எனக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பியா? அதுக்கு முன்னாடி நான் டிரஸ் சேஞ்ச் பண்ணறதை பாத்துருப்ப இல்ல கதவிடுக்கு வழியா? அதை ஏன் சொல்ல மறந்துட்டே? ஒரு பொண்ணை உண்மையா லவ் பண்றவன் பண்ற வேலையா அது? மரியாதையா போயிரு..” அவள் கடுப்புடன் சொல்ல சட்டென அவள் கைகளை தன் கைகளுக்குள் இறுக்கமாய் பிடித்தான் சரண்..
“ப்ளீஸ் தேஜூ.. சொல்றதை கேளு.. ஐ லவ் யூ தேஜு..” என்று சொன்னவனிடம் “டேய்.. கையை விடுடா..”
அவன் கையிலிருந்து தன் கையை விடுவிக்க போராட அங்கு நடந்து கொண்டிருந்ததை பார்த்திருந்த அருணுக்கு விறுவிறுவென கோவத்தில் கால் முதல் தலை வரை ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது..
வெகு நேரம் தன் கையை விடுவிக்க முயன்றவள் தன் முழு பலத்தையும் உபயோகப்படுத்தி கையை விடுவித்துக் கொண்டு அவன் கன்னத்தில் பளாரென ஒரு அடி கொடுத்தாள்.. அதை எதிர்பார்க்காதவன் அடி விழுந்த வேகத்தில் அவள் கன்னத்தை தன் கையால் அழுத்தி பிடித்து “என்னையே அடிக்கிறியாடி நீ?” என்று கேட்டு அவள் தலை முடியை கொத்தாக பிடித்து அவள் இதழ் அருகில் குனிந்தவன் அப்படியே நாலு அடி பின்னே சென்று விழுந்தான்..
தேஜு நிமிர்ந்து பார்க்க சரண் நின்று இருந்த இடத்தில் அருண் ருத்ர மூர்த்தியாய் சரண் பக்கம் பார்த்தபடி நின்றிருந்தான்.. தேஜுவின் தலைமுடியை கொத்தாக பிடித்து அவளை முத்தமிட சென்றவனின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்து அப்படியே அவனை பின்னால் தள்ளி இருந்தான் அருண்..
அவன் இழுத்த வேகத்தில் நான்கு அடி தள்ளி போய் விழுந்த சரண் அங்கிருந்து மெதுவாக எழுந்து அவனை நோக்கி வர தன் காலாலேயே ஓங்கி அவன் வயிற்றில் எட்டி உதைத்தான் அருண்..
மறுபடியும் இரண்டடி தள்ளி விழுந்தவனை கழுத்தை நெறித்து அப்படியே அவன் கால்கள் காற்றில் ஆடிக்கொண்டிருக்க தனக்கு மேல் உயர தூக்கி பிடித்தவன் தன் சுட்டு விரலை அவன் முன்னால் காட்டி “கொன்னுடுவேன் உன்னை.. பார்த்து நடந்துக்க..” என்று சொல்லிவிட்டு அப்படியே அவனை அங்கேயே கீழே போட்டு விட்டுப் போனான்..
இதையெல்லாம் பார்த்த படி நின்றிருந்த தேஜூவின் பார்வையில் தனக்காக அருண் சரணிடம் சண்டை போடுவதை எண்ணி ஆனந்தத்துடன் கூடிய பெருமை இருந்தது..
அருண் முன்னால் வந்து நின்ற தேஜு “இப்ப எதுக்கு நீ அவனை அடிச்ச? அவன் எனக்கு என்ன பண்ணா உனக்கு என்ன? வந்ததும் எப்பவும் போல அந்த பக்கம் மூஞ்சை திருப்பிக்கிட்டு அந்த மரத்தடியில உட்கார வேண்டியதுதானே? அவன் என்னை கையை புடிச்சி இழுக்கிறான்.. முத்தம் கொடுக்கிறான்.. கட்டிப்பிடிக்கிறான்.. உனக்கு என்ன வந்தது?” என்று கேட்டாள் தேஜூ..
“ஓ.. அப்போ மேடம் எதுக்கு அவன் கிட்ட இருந்து கையை எடுக்கறதுக்கு அவ்வளவு முயற்சி பண்ணீங்க? அவ்வளவு புடிச்சிருந்தா முதல்ல ஐ லவ் யூ சொன்னவுடனேயே அவன் பின்னாடியே போய் இருக்க வேண்டியது தானடி? அப்படி போயிருந்தேன்னா நீ அவனை கட்டிப்பிடிச்சாலும் முத்தம் கொடுத்தாலும் ஏன் அவன் கூடவே ஏதாவது ஹோட்டல் ரூமுக்கு போய் தங்கி இருந்தாலும் நான் எதுவும் சொல்ல போறது இல்ல? சரி.. இஷ்டம் இல்லாம உன்னை தொடறான் போல இருக்குன்னு நெனச்சி அவனை அடிச்சேன்.. ஒன்னைன்னு இல்ல.. அவன் எந்த பொண்ணை தொட்டு இருந்தாலும் நான் இப்படித்தான் அடிச்சிருப்பேன்” என்றான் அருண்..
“அப்போ நீ என்னை லவ் பண்ணல?” என்று தேஜு கேட்க “உன்னை மாதிரி ஒரு ஆள் கூட எல்லாம் எனக்கு எப்படி லவ் வரும்? என்னை என்ன பாடு படுத்தி இருக்க நீ? உன்னை லவ் வேற பண்ணுவாங்களா? உன்னை கொலை பண்ணாம இருக்கேனேன்னு சந்தோஷப்பட்டுக்கோ..” என்று சொல்லிவிட்டு நேரே சென்று மரத்தடியில் இருந்த மேடையில் அமர்ந்தான்..
“இனிமே இந்த மாதிரி எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா நீ என்னை லவ் பண்றன்னா மட்டும் வந்து காப்பாத்து.. இல்லைனா நீ என்னை பத்தி கவலைப்பட வேண்டாம்.. அதை மீறி நீ என்னை வந்து காப்பாத்தினா நீ என்னை லவ் பண்ணுறேன்னு தான் எடுத்துப்பேன்.. அதுக்கப்புறம் நீயே நினைச்சாலும் உன்கிட்ட இருந்து என்னை பிரிக்க முடியாது..” என்று சொன்னவள் அவன் தோளில் கை போட்டு அவன் கன்னத்தில் தன் இதழால் ஒரு மென்முத்தம் பதித்து அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள்..
அவன் உடலோ அவள் தீண்டிய நொடி இறுகி போக அவள் நகர்ந்ததும் இயல்பு நிலைக்கு திரும்பியவன் அவளின் இதழ் தீண்டிய தன் கன்னத்தில் கையை வைத்து வருடியபடி அவள் போகும் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அவன் அருகே வந்த நித்திலா “உனக்கு தான் அவளை பிடிக்கல.. எப்படியும் அவளை ஏத்துக்கப் போறதில்லை.. அந்த சரண் அவ மேல உயிரையே வச்சிருக்கான்.. அவன் அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணி அவ ஏத்துக்கறா.. ஏத்துக்கல.. அது அவங்க பிரச்சனை.. அவன் ஏதோ பண்ணி அவளை கன்வின்ஸ் பண்ணி தன் லவ்வை ஏத்துக்க வச்சா உனக்கு என்ன வந்தது? நீ ஏன் இதுல தலையிடுற? நீ தேஜூவை லவ் பண்றியா? அப்ப அவ லவ்வை அக்செப்ட் பண்ண வேண்டியது தான..? நீயும் அவளை அக்செப்ட் பண்ண மாட்டே.. சரணையும் அவன் லவ்வை ஏத்துக்க சொல்லி அவளை கன்வின்ஸ் பண்ண விட மாட்டே.. ஏன் இப்படி நீயும் வாழாம அடுத்தவங்களையும் வாழ விடாம பண்ற அருண்..?” என்று கேட்டவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கழுத்தைப் பிடித்து நெறித்திருந்தான் அடுத்த நொடியில்..
“நானே செம கடுப்புல இருக்கேன்.. மேல மேல நீயும் பேசி கடுப்பேத்தாத.. அந்த சரண் அவளை உண்மையா லவ் பண்றானா? அவன் அவ மேல உயிரையே வெச்சிருக்கானா? அவனை பத்தி எனக்கு தெரியாதா.. அவ கூட ரெண்டு வாட்டி டேட்க்கு போயிட்டு அதுக்கப்புறம் அவன் என்ன பண்ணுவான்னு எனக்கு தெரியும்.. அடுத்த பொண்ணை தேடி போய்டுவான்.. அந்த பொறுக்கியை பத்தி தெரிஞ்சதுனால தான் நடக்க முடியாம அடிச்சு போட்டேன்.. ஆமா நீ என்ன அவனுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட வந்து பேசுற? அப்படியே அவங்களை எல்லாம் வெறுத்துட்ட மாதிரியும் அந்த அஸ்வினிக்கு ஏதோ நல்லது பண்ற மாதிரியும் உருகி உருகி நடிச்ச? நீ இப்படி என்கிட்ட வந்து பேசுறன்னு தெரிஞ்சா உன் நடிப்பெல்லாம் வீணா போயிடுமே.. பார்த்து நடந்துக்க.. உன்னால மறுபடி இந்த காலேஜ்ல யாருக்காவது ஏதாவது பிரச்சினை வந்துச்சுன்னு தெரிஞ்சது.. அந்த சரணுக்கு சொன்னது தான் உனக்கும்.. கொன்னு போட்டுடுவேன்..” அவளை பார்த்து மிரட்டி சொல்லிவிட்டு அங்கு இருந்து நகர்ந்தான் அருண்..
“இருடா.. வேட்டு வைக்கிறேன் உங்களுக்கு..” மனதிற்குள் நினைத்த நித்திலா சரணுடைய கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்..
அடிபட்ட நிலையிலும் நித்திலாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை கண்டு மெதுவாக தள்ளாடியபடி எழுந்தவன் முகத்தில் ஒரு புன்னகை எழுந்தது..
####################
அருண் சரணை அடித்து ஒரு மாதம் கடந்திருந்தது.. தேஜு தினமும் அருணுக்கு தன் காதலை சொல்லும் வழக்கத்தை தொடர்ந்து கொண்டு தான் இருந்தாள்.. ஆனால் அவன் அவளை அடிப்பதை நிறுத்தி இருந்தான்.. மாறாக அவள் கொடுக்கும் ரோஜாவை கசக்கி எறிவதை வழக்கமாக வைத்திருந்தான்.. தினமும் அவளுக்கு முறைப்பையே பதிலாக தந்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்..
அன்று மாலை ஒரு வகுப்பு முடியும் தருவாயில் தேஜுவின் கைபேசிக்கு அருணின் கைபேசியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.. அதைப் பார்த்தவள் வகுப்பு என்றும் பாராமல் அவள் முன்னே பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க சுற்றி மாணவர்கள் எல்லாம் அமைதியாக இருக்க எழுந்து குதித்து.. “ஹே…” என்று கத்தி விட்டாள்..
பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் அவள் சத்தத்தில் அதிர்ந்து திரும்பிப் பார்த்து அவளை முறைத்துக் கொண்டிருக்க மாணவர்கள் எல்லோரும் அவள் பக்கமே தலையை திருப்பி முழித்துக் கொண்டிருக்க அப்போதுதான் தான் கத்தியதை உணர்ந்தவள் திருத்திருவென விழித்துக் கொண்டு எல்லோரையும் பார்த்தவள் தன் பேராசிரியரை பார்த்து “சாரி மேம்..” என்றாள்..
“வாட் இஸ் திஸ் தேஜூ.. ஜஸ்ட் லீவ் மை கிளாஸ்..” என்று சொல்லியவரிடம் “சாரி மேம்.. ஒரு மெசேஜ் பார்த்து கொஞ்சம் எக்சைட் ஆயிட்டேன்..” என்று சொன்னவளை இன்னும் முறைத்தார் பேராசிரியர்..
“க்ளாஸ் டைம்ல ஃபோனை பார்த்ததே தப்பு.. அதுல வேற மெசேஜை பார்த்து எக்சைட் ஆகி இந்த மாதிரி குதிச்சிருக்க.. நான்சென்ஸ்.. முதல்ல வெளியில போ நீ…” என்று சொன்னவரை பாவமாக உதட்டை பிதுக்கிய படி பார்த்த தேஜு அப்படியே தலையை குனிந்து கொண்டு அந்த வகுப்பை விட்டு வெளியே வந்தாள்..
சுமிக்கோ அங்கே இருப்பே கொள்ளவில்லை.. இவள் எதற்காக அப்படி கத்தி இருப்பாள் என்று யோசித்து யோசித்து அவளுக்கு மண்டை வெடித்தது தான் மிச்சம்..
அந்த வகுப்பு முடிவதற்கான மணி அடிப்பதற்காக பல்லை கடித்துக்கொண்டு காத்திருந்தவள்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் மணி அடிக்கவும் பேராசிரியர் அந்த வகுப்பை விட்டு வெளியே போவதற்கு முன் வெளியே வந்தாள்..
பார்வையில் வியப்போடு அவளையும் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பேராசிரியர்.. அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் கூட சுமி இல்லை.. நேரே அங்கே கல்லூரி வாசலில் இருந்த படியில் அமர்ந்து கொண்டிருந்த தேஜூவிடம் வந்தவள் அவள் முகம் மலர்ந்திருப்பதை பார்த்து “என்னடி.. இங்க வந்து உட்கார்ந்து இருக்க.. ஆமா.. கிளாஸ்ல எதுக்கு அப்படி கத்தினே? என்னடி விஷயம்?” ஆர்வமாய் கேட்டவளை இழுத்து அணைத்துக் கொண்டாள் தேஜூ..
“ஒருவழியா அருண் என் லவ்வை அக்செப்ட் பண்ணிப்பான் போல இருக்குடி..” என்றவளை வினோதமாக பார்த்தாள் சுமி..
“நீ என்னடி சொல்ற? அருணா? எப்படி சொல்ற?” என்று கேட்க “இந்த மெசேஜை படி..” என்று அவளிடம் தன் கைபேசியை கொடுத்தாள்..
அந்தக் குறுஞ்செய்தி அருணிடமிருந்து வந்திருந்தது.. “நீயும் என் காதல் வேணும்னு ரொம்ப நாளா என் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க.. எனக்கும் உன்னை பார்க்க கொஞ்சம் பாவமா தான் இருக்கு.. ஆனாலும் அப்படி எல்லாம் உடனே உன் லவ்வை அக்செப்ட் பண்ணிக்க முடியாது.. உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்.. அதுக்கு நீ சரியா பதில் சொன்னா அப்புறம் உன் காதலை அக்சப்ட் பண்ணிக்கிறதா வேணாமான்னு நான் யோசிக்கிறேன்.. இன்னிக்கு சாயங்காலம் காலேஜ் முடிச்ச உடனே காலேஜுக்கு பின்னாடி இருக்கிற பழைய ஆடிட்டோரியத்துக்கு வந்துடு.. அங்க நான் உனக்காக வெயிட் பண்றேன்..” என்று அனுப்பி இருந்தான்..
“ஏய் பரவால்லடி.. நான் கூட எப்படியும் மூணு வருஷமும் அந்த அருண் உன்னை சுத்தல்ல தான் விட போறான்.. திரும்பி கூட பாக்க போறது இல்ல… நீ இப்படியே கெஞ்சி கெஞ்சி ஏமாந்து தான் போக போற.. மனசொடஞ்சு போக போறேன்னு நினைச்சேன்.. ஆனா பரவாயில்லை.. உன்கிட்ட சிக்கிருவான் போல இருக்கே அந்த மொரடன்..” என்று சொல்ல அவளை தீவிரமாக முறைத்தாள் தேஜூ…
“சரி முறைக்காத.. இதான் லாஸ்ட் ஹவர்.. அட்டென்ட் பண்ணிட்டு நீ அப்புறம் அருணை மீட் பண்ண போ.. ஆனாலும் ஒரு விஷயம்.. உன்னை மீட் பண்ணறதுக்கு அவனை மாதிரியே ஒரு இடத்தை சூஸ் பண்ணி இருக்கான்.. பாரு.. சான்ஸே இல்ல.. அவன் எப்படி யாரோடயும் பழகாம தனியா இருக்கானோ… அதே மாதிரி தான் அந்த பழைய ஆடிட்டோரியமும்.. எந்த புழக்கமும் இல்லாம தனியா ஒத்தையில கிடக்குது.. அந்த இடம் தான் கிடைச்சுதா உன்னை மீட் பண்றதுக்கு..? நீ எப்படித்தான் காலம் முழுக்க இவனல்லாம் வெச்சுட்டு..” என்றவளிடம் “அருண் என்னை அவரோட வாழறதுக்கு நரகத்துக்கே கூப்பிட்டா கூட நான் சந்தோஷமா போய்டுவேண்டி.. அந்த இடம் எனக்கு சொர்க்கமா தான் இருக்கும்..” என்று உறுதியாய் அவன் நினைவிலேயே சொன்னவளை தட்டி எழுப்பினாள் சுமி..
“ஏய்.. என்னடி.. கனவு காண ஆரம்பிச்சுட்ட.. வா.. கிளாஸ்க்கு போகலாம்..” என்றவளிடம் “இல்ல.. நீ போ.. நான் வரல..” என்றாள் தேஜூ..
“ஏண்டி.. இந்த ஹவர் முடிஞ்சப்பறம் தானே வந்து மீட் பண்ண சொல்லி இருக்கான்.. இப்ப என்ன பண்ண போற?” என்று கேட்க “ஏய்.. அவன் என் லவ்வை அக்செப்ட் பண்றேன்னு சொல்லி இருக்கான்.. இப்படியே அழுது வடிஞ்சுட்டா போவாங்க..? நான் ஹாஸ்டல்ல மகி ரூமுக்கு போய் கொஞ்சம் நல்லா ப்ரெசென்டபிளா மாறிட்டு அதுக்கப்புறம் போறேன்.. என் அருண் என்கிட்ட லவ் சொல்லும்போது நான் அழகா இருக்க வேண்டாமாடி?” என்று கேட்டவளை ஒரு மாதிரியாக பார்த்தாள் சுமி..
“உனக்கு மொத்தமா அருண் கிறுக்கு பிடிச்சிருச்சு.. இனிமே உன்னை எதுவுமே பண்ண முடியாது.. சரி.. நீ போ.. நான் கிளாசுக்கு போறேன்..” என்று சொன்னவளிடம் “பைய்” சொல்லிவிட்டு ஹாஸ்டலை நோக்கி நடந்தாள் தனக்கு வர போகும் ஆபத்தை உணராத தேஜு..
தொடரும்..