அருவி போல் அன்பை பொழிவானே : 16

5
(6)

அருவி : 16

அந்த சாலையிலேயே யுவராஜின் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது. வேகமாக போவதைப் பார்த்த கார்த்தியாயினிக்கு பயமாக இருந்தது. “மாமா பயமா இருக்கு… மெல்ல போங்க மாமா…” என்றாள். அவன், அவள் சொல்வதை கவனிக்காது தன் காரின் பின்னால் வந்து கொண்டிருக்கும் சுமோக்களையும், அதில் வரும் ரவுடிகளையும்தான் பார்த்தான். கார்த்தியாயினி பக்கத்தில் இல்லாவிட்டால் அவர்களை ஒரு வழியாக்கி இருப்பான் யுவராஜ். அவள் இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. 

கார்த்தியாயினியோ சீட்டின் மீது கால்களை வைத்து அதில் முகத்தை மறைத்துக் கொண்டு இருந்தாள். ஒரு கட்டத்தில் வேறு ஒரு வழியாக மேலும் சில வண்டிகள் வந்து யுவராஜ் வண்டியை சுற்றுப் போட, வேட்டையாடுவது என்ற முடிவுடன் தனது காரை ஒரு வெட்ட வெளியில் நிறுத்தினான். கார் நின்றதை உணர்ந்தவள், வீடு வந்து விட்டது என்று நினைத்து நிமிர்ந்து பார்க்க, அவர்களது காரைச் சுற்றி வண்டிகள் நிற்பதைப் பார்த்து திகைத்தாள். 

இதற்கிடையே யுவராஜ் தனது லொக்கேஷனை அமுதனுக்கு ஷேர் பண்ணிட்டு, எமர்ஜென்ஸி என்று ஒரு வார்த்தை சொல்லி, அவன் இருக்கும் இடத்தையும் சொல்லிவிட்டு போனை வைத்தான். திகைத்துப் போயிருக்கும் கார்த்தியாயினியின் கைகளை பிடித்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டு, “கார்த்தியாயினி என்ன நடந்தாலும் நீ காரை விட்டு வெளியே வரக் கூடாது.…….” 

காரை விட்டு இறங்க முயன்றவன் கைகளை இறுக்கிப் பிடித்தபடி, “பயமா இருக்கு மாமா…” என்றாள். அவளிடம், “மாமா சண்டை போட்டு ரொம்ப நாளாச்சுமா.. இன்னைக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு… எப்பிடி மிஸ் பண்ண முடியும்….? நீ பயப்படாத சரியா….?” என்றவனிடம், “பத்திரம் மாமா…..” என்றவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு காரை விட்டு வெளியே இறங்கினான். அங்கிருந்தவர்களை பார்த்தான். 

இவன் காரில் இருந்து இறங்கியதும் அவனை சுற்றி வளைத்தனர் அந்த கூலிப் படையினர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆயுதம் இருக்க, நிராயுதபாணியாக நின்றான் யுவராஜ். 

நிராயுதபாணியாக நின்றிருந்த யுவராஜ்ஜைப் பார்த்த கூலிப்படையினர் நக்கலாக தமது காவிப் பற்களைக் காட்டி சிரித்தனர். அவர்களின் சிரிப்பை பார்த்த யுவராஜ், சாகப்போறம்னு தெரியாமல் கடைசி நேரத்தில எப்பிடி சிரிச்சிட்டு இருக்கு இந்த லூசுகள். என்ற நினைத்தவனை நோக்கி ஒருவன், வழமையாக கூலிப்படையினர் கொடுக்கும் சத்தத்தோடு அதுதான்பா, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்றவாறு வந்தான். 

அவன் வந்த வேகத்தில் யுவராஜை அடித்து விடுவான் என்று எல்லோரும் நினைக்க, அவனோ அவர்களை தாண்டிச் சென்று விழுந்தான். காரினுள் இருந்தாலும் யுவராஜையே பார்த்துக் கொண்டு இருந்தாள் கார்த்தியாயினி. 

அதை நேரத்தில் மீனாட்சியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் செல்ல ரெடியாகிக் கொண்டு இருந்த அமுதன், யுவராஜிடம் இருந்து வந்த காலை அட்டென்ட் பண்ணி பேசியவன், மீனாட்சியிடம் சொல்ல, “ஐயோ மாமா அண்ணாக்கு ஏதும் பிரச்சினையாகிடப்போகுது…. நான் ஹாஸ்பிடலுக்கு தனியாக போயிடுவன்…. நீங்க முதல்ல போய் அண்ணாவை பாருங்க….” என்றாள். 

மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, “பத்திரமாக போயிட்டு வந்துடுடா…..” என்று சொல்லிவிட்டு தனது டீமிற்கு தகவல் சொல்லிவிட்டு வெளியே வந்து தனது வண்டியை எடுத்துக் கொண்டு, யுவராஜ் சொன்ன இடத்துக்கு வேகமாக வந்து கொண்டிருந்தான். 

கார்த்தியாயினி இமைக்கவும் மறந்து தன்னவன் சண்டையிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள். யுவராஜ் தன்னை நோக்கி வந்தவர்களை போட்டு அடியை இடிமாதிரி குடுத்துக் கொண்டு இருந்தான். அவன் எதிர்பார்க்காத நேரத்தில் பின்னால் இருந்து ஒருத்தன், கத்தியுடன் வந்தான். அதைப் பார்த்த அமுதன், வண்டியை கீழே போட்டு விட்டு வந்து அவனை அடித்தான். 

பின்னர் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அடிக்க வந்தவர்களைப் போட்டு இவர்கள் அடித்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு அடியாளின் போல் ஒலித்தது. அதை எடுத்து ஸ்பீக்கரை ஆன் பண்ணினான் அமுதன். “என்ன ராபர்ட், அந்த யுவராஜ்ஜை போட்டாச்சு….?” என்றார் ஜேபி. 

இந்தப்பக்கம் இருந்த அமுதன் சிரித்து விட்டு, யுவராஜிடம் போனை நீட்ட அதை வாங்கியவன், “என்ன ஜேபி என்னை கொல்லணும்னு நினைக்கிற நீ அதுக்கு சரியான ஆம்பளையா பார்த்து அனுப்பணும்…. அதை விட்டு பொட்டை பசங்களை அனுப்பி வைச்சிருக்க…. ஏய் இங்க பாரு, என்னை கொல்லணும்னா ஒருத்தன் பொறந்துதான் வரணும்…. நெக்ஸ்ட் டைம் முயற்சி பண்ணு…..” என்று போனை கட் பண்ணினான். 

அவர்களது டீம் வந்துவிட, அடியாட்களை அள்ளிக் கொண்டு சென்றனர். யுவராஜ் அமுதனுடன் கார் அருகே வந்து கதவைத் திறக்க, வெளியே வந்த கார்த்தியாயினி, “மாமா உங்களுக்கு அடிபட்டிருக்கா…? ஹாஸ்பிடல் போலாமா…..?, அண்ணா உங்களுக்கு அடிபட்டிருக்கா….?” என விசாரித்தாள். 

இருவரும் ஒரே நேரத்தில், “அடி ஒண்ணும் பெரிசா இல்லை….” என்றனர். பின் அமுதன், “யுவா, தங்கச்சி நீங்க வீட்டிற்கு போங்க…. நான் ஹாஸ்பிடலுக்கு போகணும்… உன்கிட்ட இருந்து கால் வந்ததும் பயந்து போய், அவளை தனியே ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டு வந்திருக்கேன்…. நீங்க போங்க, நான் போய் மீனாட்சியை பார்த்து செக்கப் முடிந்ததும் அங்கே கூட்டிட்டு வர்றன்…. அவளும் கார்த்தியாயினியை பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தா….” என்றான். 

உடனே கார்த்தியாயினி, “அப்பிடியா அண்ணா, கண்டிப்பாக அண்ணியை கூட்டிட்டு வாங்க…. உங்களுக்கு இன்னைக்கு எங்களோட வீட்டிலதான் சாப்பாடு….” என்றாள். யுவாவும் “மீனாட்சியை கூட்டிட்டு வந்திடு….” என்றான். அமுதனும் ஹாஸ்பிடலுக்கு சென்றான். 

யுவராஜ்ஜூம் கார்த்தியாயினியும் குவார்ட்டஸ்க்கு வந்து சேர்ந்தனர். வந்ததும் முகம் கழுவி விட்டு கிச்சனுக்குள் வந்தவள், வரும்போது வாங்கி வந்த சிக்கனை கொண்டு கிராமத்து ஸ்டைலில் விதவிதமாக சமைத்து வைத்தாள். 

குளித்து விட்டு யுவராஜ் வர அவனிடம் சென்று மாம்பழஜூஸை குடுத்தாள். அதை வாங்கி குடித்தவனுக்கு ஏதோ ஞாபகம் வர, கண்கள் கலங்கின. அதை அவளிடம் காட்டாது, கண்களை சிமிட்டிக் கொண்டான். குடித்து விட்டு கிளாஸை அவளிடம் குடுத்தான். அவள் வேலையை பார்க்கச் சென்றதும், போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். 

கார்த்தியாயினியின் பாடசாலை அதிபரான சதாசிவத்திற்கு போன் பண்ணினான். “சார் நல்லா இருக்கிறீங்களா….?” என்றான். அவரும், “நான் நல்லா இருக்கிறன் சார்… அங்க நீங்க கார்த்தியாயினி எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா….?” என்றான். அதற்கு யுவராஜ், “நாங்க நல்லா இருக்கிறம் சார்…. நான் மெடிக்கல் காலேஜ்ல கார்த்தியாயினியை சேர்த்திட்டேன்… அடுத்த வாரத்தில இருந்து அவள் காலேஜ் போகப்போறா…. அந்த சந்தோஷமான விசயத்தை உங்ககிட்ட சொல்லத்தான் போன் பண்ணேன்….” என்றான். 

மறுபக்கம் இருந்த சதாசிவம், “ரொம்ப சந்தோஷம் சார்…. எப்படியோ கார்த்தியாயினி நல்லா படிச்சு ஒரு டாக்டரா வரணும். அதுபோதும் எனக்கு….” என்றார். அதற்கு, “சார் இதுக்கு எல்லாம் நீங்கதான் காரணம்…. நீங்க இல்லாமல் இது சாத்தியமே இல்லை…” என்றான். “அப்படி எல்லாம் இல்லை சார்… ஏதோ என்னால முடிஞ்ச உதவி… நான் சென்னை வந்தால் கண்டிப்பா வந்து கார்த்தியாயினியை பார்க்கிறன்…” என்றார். மேலும் இருவரும் பேசி விட்டு போனை வைத்தனர். 

அன்பு பொழியும்….. 

உங்களோட கருத்துக்களையும் ரேட்டிங்கையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!