பரீட்சை – 56
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
நீ என்னிடம்
தினமும்
நயனங்களால்
மட்டுமின்றி
நாவாலும் காதல்
சொல்ல
என்னுடைய பாழும்
விதியிலிருந்து
என்னுயிர் உன்னை
காக்க
இனிமேல் என்னை
பார்க்கவும்
கூடாதென
இதயத்தை கல்லாக்கி
சத்தியம் வாங்க..
முகம் பாராமல் நீ
போக
மறைமுகமாய்
மனதிற்குள்
மறுகி உருகி
போகிறேனடி..
################
கல்லான இதயம்..!!
மருத்துவமனையில் இருந்து தேஜூ வீட்டிற்கு வந்திருந்தாள்.. அவள் கையில் இருந்த அடி கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி கொண்டிருந்தது.. ஒரு மாதம் கல்லூரி விடுமுறையில் இருந்தவள் கல்லூரி தொடங்கிய பிறகும் இன்னும் ஒரு மாதம் கல்லூரிக்கு வராமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள்..
ஆனால் அவளை பார்க்காமல் இங்கே அருணுக்கோ மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை.. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளைப் பார்த்து விட வேண்டும் என்று துடித்தான்.. ஆனால் அப்படி செய்தால் அவள் மறுபடியும் பழையபடி முருங்கை மரம் ஏறி விடுவாள் என்று தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்..
அந்தக் கல்லூரியில் என்னதான் அருண் இறுக்கமாக இருந்தாலும் அவன் அங்கு வரும்போது கல்லூரி படிப்பதற்கு ஏற்றார் போல் நாகரீகமாக உடை அணிந்து பல பெண்களின் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு அழகாகத்தான் இருப்பான்..
ஆனால் இந்த ஒரு மாதமாக அவன் முகத்தில் இறுக்கத்திற்கு பதிலாக சோகம் குடி கொண்டிருப்பதும்.. தனது தோற்றத்தில் சிறிதும் கவனம் இல்லாமல் தாடி வளர்த்துக்கொண்டு ஏதோ ஒரு தேவதாஸ் போல கல்லூரிக்கு வந்து கொண்டிருந்ததையும் பார்த்த பெண்கள் எல்லாம் “என்னடி ஆச்சு நம்ப ஹீரோவுக்கு? ஸ்மார்ட்டா இருப்பான் எப்பவும்.. இப்ப பாரு இப்படி டல்லடிக்கறானே.. ஏதோ பெரிய வியாதி வந்து ரெண்டு நாள்ல ஒரேயடியா போய் சேரப்போற மாதிரி சீன் போட்டுட்டு இருக்கான்..” என்று புலம்பி கொண்டு சென்றனர்..
ஆண்களோ “என்னடா.. ஏதாவது காதல் தோல்வியா? தேவதாஸ் மாதிரி திரிஞ்சுக்கிட்டு இருக்கே.. அந்த தேஜஸ்வினி வேற யாரையாவது பிக்கப் பண்ணிட்டாளா?” என்று கேட்டு அவனிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டு சென்றார்கள்.. என்னதான் அவன் எல்லோரிடமும் தான் அவளை காதலிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவர்கள் எல்லோரும் அவன் மனதில் தேஜூவிற்கு ஒரு பெரிய இடம் உண்டு என்பதை உணர்ந்தே இருந்தார்கள்..
அவன் தான் இறுக்கத்தில் இருக்கும்போதே யாருக்கும் பதில் சொல்லாதவன் ஆயிற்றே, இப்போது சோகத்தில் இன்னும் வாய் மூடி போனான்..
ஒரு மாதத்திற்கு பிறகு அன்று தேஜூ கல்லூரிக்கு வந்திருந்தாள்.. அவள் கை நன்கு குணமாகி இருந்தது.. ஏதோ தீர்மானித்தவளாய் சீக்கிரமாக கல்லூரிக்கு வந்து நேரே தன் வகுப்பிற்கு சென்று அமர்ந்து கொண்டாள்..
வகுப்பில் தனியே அமர்ந்திருந்தவள் அருகில் வந்த சுமி “என்னடி இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட காலேஜுக்கு..? உன் ஆளை பாத்தியா?” என்று கேட்க “இனிமேல் அவனை பார்க்க மாட்டேன்ன்னு அவன்கிட்ட சத்தியம் பண்ணி இருக்கேன் டி.. இனிமே நானா போய் அவனை பார்க்க மாட்டேன்.. அவனே என்னை தேடி வருவான்.. அது வரைக்கும் நான் அவனை பார்க்க மாட்டேன்.. அவன் என்னை காதலிக்கிறேனு ஒத்துக்கிட்டான்டி.. ஆனாலும் என்னை ஏத்துக்க முடியாதுன்னு சொல்றான்..” என்று சொன்னாள் தேஜு..
“ஓ… அப்படின்னா நீ சொன்னா மாதிரி அவன் நிஜமாவே உன்னை காதலிக்கிறானா? இது நானே எதிர்பாக்காத சூப்பர் ட்விஸ்ட்டா இருக்கே.. அப்புறம் அவனுக்கு என்னடி ப்ராப்ளம்..? உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணு.. அவனும் அழகா இருக்கான்.. ரெண்டு பேர் மனசிலயும் காதல் இருக்கு.. ரெண்டு பேரும் நல்லா படிக்கிறவங்க.. நிச்சயமா வாழ்க்கைலயும் நல்ல நிலைமைக்கு வருவீங்க.. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்றது நல்ல விஷயம் தானே? அப்புறம் அவன் உன்னை ஏத்துக்க வேண்டியது தானடி?” என்று அலுத்துக் கொண்டாள் சுமி..
“இல்லடி.. அவனுக்கு என்னை ஏத்துக்க முடியாதபடி ஏதோ பெரிய பிராப்ளம் இருக்குடி.. அதை சொல்லவும் மாட்டேன்கிறான்.. அவன் என்னை ஏத்துக்கலைன்னா கூட பரவால்ல.. அது என்ன பிராப்ளம்னு தெரிஞ்சுக்கணும்னு எனக்கு தோணுது.. மே பி அது நியாயமான ஒரு விஷயமாகவும் இருக்கலாம்.. ஆனா அது என்னன்னு தெரியாம அவன் என்னை ஏத்துக்கலைன்னு ஏதோ அப்படியே அவனை விட்டுட்டு போறதுக்கு எனக்கு மனசு வரல.. என் அருணுக்கு லைஃப்ல அப்படி என்ன கஷ்டம்னு எனக்கு தெரியணும் டி.. அதை தெரிஞ்சுக்கறதுக்காக தான் நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்..” என்றாள் தேஜூ..
“ம்ம்ம்ம்.. என்னவோ சொல்ற போ..” என்று சொல்லி “இந்த ஒரு மாசமா தந்த நோட்ஸ் எல்லாம் உனக்கு தரேன்.. கொஞ்சம் கொஞ்சமா ஃப்ரீ டைம்லயும் வீட்டிலேயும் போய் பாரு..” என்று சொன்னாள் சுமி..
“தேங்க்ஸ் டி” என்று தேஜூ சொல்ல வகுப்புக்குள் பேராசிரியர் வர எழுந்து நின்றவள் அவர் பின்னாலே அருண் அடுக்கி வைத்த நோட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வர அவனை பார்த்து தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்..
கல்லூரிக்கு வரும்போது தேஜுவின் வண்டியை பார்த்த அருண் அவளை எப்படி அவளுடைய வகுப்பிற்கு சென்று பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவள் வகுப்புக்கு செல்ல வேண்டிய ஆசிரியை அடுக்கி வைத்த நோட்டுப் புத்தகங்களை சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்தவுடன் ஓடி சென்று அவளிடம் இருந்து அவற்றை வாங்கி தேஜூவின் வகுப்புக்குள் அவரோடு நுழைந்தான்..
அவளை பார்த்தவன் முகம் கதிர் கண்ட மலர் போல் மலர்ந்து இருந்தது.. அதை கவனித்த சுமி தேஜூவிடம் “ரொம்ப நாளைக்கப்பறம் அந்த அருண் முகத்தில உன்னை பார்த்து தாண்டி சிரிப்பு வருது.. இத்தனை நாள் அவன் மூஞ்சில ஒரு மருந்துக்கு கூட சிரிப்பில்லடி.. சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கான் அவன்..” என்று சொன்னவளை “அழகு அது இதுன்னு ஏதாவது வர்ணிச்சிட்டு இருந்தே.. உன்னை அடிச்சே கொன்னுடுவேன்.. அதோட நிறுத்திக்கோ..” என்று சொன்னாள்..
“சரிமா.. உன் ஆளை நான் வர்ணிக்கல.. ஆனா அவனை பாருடி.. நீ தான் அவனை லவ் பண்றே இல்ல..? இப்படி சிரிச்ச முகமா அவனை பாக்கணும்னு உனக்கு தோணவே இல்லையா?” என்று கேட்டாள்..
“நான் தான் உன்கிட்ட சொன்னேனே நான் அவனை பார்க்க மாட்டேன்னு.. மறுபடியும் மறுபடியும் சொன்னதையே திரும்ப திரும்ப எத்தனை வாட்டி சொல்லுவாங்க உனக்கு..?” என்றாள் எரிச்சலுடன்..
“ஐயோ… உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தான் தெரியும்.. என்னை ஆளை விடு..” என்று சொல்லி தன் வேலையை கவனிக்க தொடங்கினாள் சுமி…
வகுப்பிற்குள் வந்த பேராசிரியர் அருணை பார்த்து “ரொம்ப தேங்க்ஸ் அருண்.. ஸ்டூடன்ட்ஸ்.. அருண் உங்க சீனியர்.. நான் கஷ்டப்பட்டு நோட்புக்ஸை தூக்கிட்டு வர்றதை பார்த்து ஓடி வந்து எனக்கு ஹெல்ப் பண்றான்.. இதெல்லாம் பாத்து நீங்கல்லாமும் கத்துக்கணும்.. உங்க சீனியரை பார்த்து ஏதேதோ கத்துக்கற நீங்க இந்த மாதிரி நல்ல குணங்களை கத்துக்க முயற்சி பண்ணுங்க.. ஓகே.. நீ உங்க கிளாசுக்கு போகலாம் அருண்..” என்று அவனை அவன் வகுப்புக்கு அனுப்பிவிட்டு பாடத்தை நடத்த தொடங்கினார்..
தன் வகுப்புக்கு வந்தவன் அதன் பிறகு தேஜூ தன்னிடம் பாராமுகமாய் இருந்தது பற்றி எண்ணிக்கொண்டிருந்தான்.. அவள் முகம் மட்டுமே அவன் கண்ணில் நிழலாடிக் கொண்டிருந்தது.. அன்று நடந்த பாடங்களில் அவன் கவனம் சிறிதும் செல்லவில்லை.. மாலையில் அவள் எப்படியும் தன்னை பார்க்க வருவாள் என்று எண்ணிக்கொண்டு அந்த மரத்தடியில் அமர்ந்து இருந்தான்.. கல்லூரி முடிந்ததும் சுமியுடன் வந்தவள் நேரே சென்று வண்டி எடுத்துக்கொண்டு புறப்பட திடுக்கிட்டவன் அதன் பிறகு அப்படியே அமர்ந்து விட்டான் அந்த மேடையில்..
அவன் அருகே வந்த நிலவழகன் “என்னடா ஒரே டல்லா இருக்க..? இன்னைக்கு தேஜூ காலேஜ்க்கு வந்துட்டாளே.. நீ ரொம்ப ஹேப்பியா இருப்பேன்னு நினைச்சிட்டு வந்தேன்..” என்று கேட்க “நான் எங்கடா ஹேப்பியா இருக்கிறது? அவ என்னை திரும்பி கூட பாக்கல டா.. என் மேல ரொம்ப கோவமா இருக்கா போல.. கஷ்டமா இருக்கு டா.. யாரோ என் மனசுல கத்தியால குத்தற மாதிரி ஒரு ஃபீலிங்..”
“நீயாவே வர வச்சுக்கிட்டது தானடா இது..? இப்படி அவ இருக்கணும்னு தானே நீ ஆசைப்பட்ட..? உனக்கும் கொஞ்சம் டைம் எடுக்கும்.. அவளோட இந்த ரியாக்ஷனை எல்லாம் ஜீரணிக்கறதுக்கு.. சரி வா.. நம்ம கேண்டீன் போய் ஒரு காபி குடிச்சிட்டு அப்புறம் வீட்டுக்கு போலாம்..” என்று சொன்னவன் அருணை கையை பிடித்து அழைத்துக்கொண்டு கேன்டீனுக்கு சென்றான்..
#################
அன்று உணவு இடைவேளையின் போது தேஜூவை பிடித்துக் கொண்டாள் நித்திலா..
“என்ன தேஜூ..? ஒரு வழியா அந்த அருண் மயக்கத்தில் இருந்து வெளியில வந்துட்ட போல இருக்கு.. இப்பல்லாம் அவனை கண்டுக்கிறதே இல்லை..”
“நான் அவனைத்தான் விரும்பினேன்.. அவனைத்தான் விரும்புறேன்.. அவனைத்தான் விரும்புவேன்.. அவன் என் வாழ்க்கையோட லட்சியம்.. ஆனா அவன் கிட்ட நான் ஒரு சத்தியம் பண்ணி இருக்கேன்.. அவனை பார்க்க மாட்டேன்னு.. அதுக்காக தான் நான் இப்படி நடந்துக்கிறேன்.. அவனுக்கான என் காதல் என்னைக்குமே மாறாது நித்திலா..”
“நீ இப்படியே இருந்தா அவன் எப்படி உனக்கு கிடைப்பான்..? அவனை கடைசி வரைக்கும் இப்படியே பாத்துட்டே இருந்துட்டு காலேஜ் முடிஞ்ச உடனே உங்க அப்பா சொல்ற ஏதோ ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்க போறியா?”
அவளை முறைத்தவள் “இங்க பாரு.. என்னை பாத்தா உனக்கு எப்படி தெரியுது? ஒருத்தனை லவ் பண்ணிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழற பொண்ணு மாதிரி தெரியுதா? அப்படியே நான் யாரையாவது கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருந்தாலும் என்னை அந்த கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அருண் விடமாட்டான்.. ஏன்னா அவனும் என்னை உயிருக்குயிரா காதலிக்கிறான்.. இதை அவன் வாயாலேயே என்கிட்ட அவன் சொல்லிட்டான்.. என்னதான் அவன் என்னை இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தினாலும் அவனால என்னை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுக்கவே முடியாது.. அவன் எனக்காக செய்யற விஷயங்களில் இருந்தே அவன் என்னை எவ்வளவு விரும்புறான்னு எனக்கு புரியுது..” என்று சொன்னவளை சிறிது பொறாமையுடன் பார்த்தாள் நித்திலா..
“சரி. நீ சொல்றதை நான் ஒத்துக்குறேன்.. அவன் உன்னை விரும்புறான்.. ஆனா அவனா உன்னை ஏத்துக்க போறதும் இல்ல.. நீயும் உன்னை ஏத்துக்க சொல்லி அவனை கேட்க போறதும் இல்ல.. அப்புறம் எப்படி நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கைல ஒன்னு சேர முடியும்? அவனை உன்னை ஏத்துக்க வைக்கிறதுக்கு நீ என்ன முயற்சி பண்ண? அதற்கு நீ ஏதாவது முயற்சி பண்ணா தானே அவனும் அதை பத்தி யோசிக்கவாவது செய்வான்?”
“தெரியல.. அவனை என்னை ஏத்துக்க விடாம எதோ ஒன்னு தடுக்குது.. அந்த தடை நீங்கிடுச்சுன்னா அவன் என்னை அவன் காதலியா ஏத்துப்பான்னு தோணுது.. அது வரைக்கும் காத்துக்கிட்டிருக்கிறதை தவிர எனக்கு வேற வழி என்ன இருக்கு? வேற என்ன பண்ணா அவன் என்னை ஏத்துப்பான்னு நீ நினைக்கிற?”
“அதுக்கான வழிய நீயேதானே இப்போ உன் வாயால சொன்ன? அதுக்குள்ள மறந்துட்டியா?” என்று நித்திலா கேட்க “என்ன.. என்ன சொன்னேன்..?” என்று புரியாமல் கேட்டாள் தேஜூ..
“நீதானே இப்ப சொன்ன? ஒரு வேளை நீயே யாரையாவது கல்யாணம் பண்ணிக்க ரெடியா ஆனாலும் அவன் அதை நடக்க விடமாட்டான்னு.. அவன் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்னு.. சொன்னே இல்ல? அந்த உணர்வையே தூண்டிவிடு.. நீ வேற யாருக்கோ சொந்தமாக போகுறதா அவன்கிட்ட காமிச்சிக்கோ.. அவன் கோபப்பட்டு அதை தடுக்க வந்தா நீ யாரு இதை தடுக்கறதுக்குன்னு கேளு.. தன்னால அவன் உன் வழிக்கு வந்துடுவான் இல்ல?”
அவள் சொல்வதை யோசித்துப் பார்த்தவள் “ம்ம்ம்ம்.. நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கு.. இது பத்தி நான் யோசிக்கிறேன்.. சரி.. கிளாஸ்க்கு டைம் ஆச்சு.. இன்னும் பாதி சாப்பாடு அப்படியே இருக்கு.. சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளாசுக்கு போகணும்..” என்று சொல்லிவிட்டு உணவு உண்பதில் கவனத்தை திருப்பினாள்… மனதிற்குள் “நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லிட்டு இருக்கேன்.. சாப்பாட்டுராமி.. சாப்பாடு தான் முக்கியம்னு இருக்கா பாரு.. சரி.. அதான் யோசிக்கிறேன்னு சொல்லி இருக்கா இல்ல? எப்படியும் நம்ம வழிக்கு வந்துருவா.. பாத்துக்கலாம்..” என்று எண்ணியவள் அவளும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து வகுப்புக்கு போய் விட்டாள்.. வகுப்புக்கு சென்றதும் அவசரமாக சரணுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள் நித்திலா..
அந்தக் குறுஞ்செய்தியை பெற்ற சரண் அதை படித்த அடுத்த நொடி ஒரு குரூர புன்னகையோடு “டேய் அருண்… அந்த தேஜூக்காக என்னை அடிச்ச இல்ல? உன் கண்ணு முன்னாடியே நீ உயிருக்கு உயிரா விரும்புற அந்த தேஜூவை நான் அடைஞ்சு காட்றேன் டா.. அவளை எனக்கு சொந்தமானவளா ஆக்குறேன்.. அதை பார்த்தும் ஒன்னும் செய்ய முடியாம நீ அப்படியே அணு அணுவா துடிச்சு போய் நிற்ப.. அந்த தேஜூவும் என்னை லவ் பண்ண மாட்டேன்னு சொல்லி அவமானப்படுத்தினா இல்ல? அவளும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் காதலும் கிடைக்காம என் கோபத்தை மட்டுமே சகிச்சுக்கிட்டு வாழ்க்கை முழுக்க தண்டனை அனுபவிக்க போறா… அதை பார்த்து பார்த்து நீ அழப்போற.. இது தாண்டா நான் உனக்கு கொடுக்குற தண்டனை..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..
தொடரும்..
கமெண்ட்ஸ் குடுக்க மறக்காதீங்கப்பா.. ஷேர் பண்ணுங்க🙏🙏🙏
உங்கள் பிரியமான தோழி
❤️❤️சுபா❤️❤️