பரீட்சை – 57
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
ஒரு முடிவோடு
வந்திருந்தாள்
என்னவள்..
உளம் விரும்பாத
ஒருவனின் மனது
உடையாமல்
இருப்பதற்காக
குணம் இல்லாத
அந்த
கிராதகனின் காதலை
ஏற்றுக்கொள்ள
போவதாக
உரைத்த நொடி
உலகமே
சுழல்வதை
ஒரு நொடி நேரம்
நிறுத்தியது போல்
உணர்ந்தேன் நான்…!!
#################
உலகமே நின்றது.. உன்னால்..!!
அன்று முழுவதும் நித்திலா சொன்னதைப் பற்றி யோசித்தாள் தேஜூ..
மறுநாள் கல்லூரிக்கு வந்த தேஜூவை சந்தித்தான் சரண்.. அவன் கையிலும் காலிலும் கட்டுக்கள் இருந்தது.. ஆனால் அவனால் நடக்க முடிந்தது.. தேஜுவின் அருகே வந்தவனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு போனவளிடம் “ஒரு நிமிஷம் தேஜூ.. ப்ளீஸ். நான் சொல்றதை கேளு.. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வரல..” என்றான்..
“உன்னை மறுபடியும் நம்ப சொல்றியா? உன்னை நம்பறதும் நல்ல பாராங்கல்லா பார்த்து தலையை முட்டிக்கிறதும் ஒன்னு தான்..” என்று சொல்லிவிட்டு திரும்பப் போனவளை “இல்லை… நீ நினைக்கிற மாதிரி இல்லை.. நான் உனக்கு செஞ்சது எல்லாம் ரொம்ப தப்பு.. என்னை மன்னிச்சிடு தேஜூ.. நான் இனிமே உன்னை எந்த விஷயமாவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. உன் கிட்ட சாரி கேட்கலாம்னு தான் இப்ப கூட உன்னை கூப்பிட்டேன்.. ஐ அம் சாரி.. நான் உன்னை உண்மையா தான் காதலிச்சேன்.. ஆனா அந்த காதலை விட உன்னை எனக்கே எனக்கா சொந்தமாக்கிக்கணும்ன்ற வெறி எனக்குள்ள அதிகமா இருந்தது.. அதுதான் என்னை தப்பு பண்ண வெச்சது.. என்னை மன்னிச்சிடு.. ப்ளீஸ்” என்று சொன்னவன் “உனக்கு என்னை மன்னிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.. எனக்கு தெரியும்.. அவ்வளவு சீக்கிரம் என்னை மன்னிச்சுடுவேன்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை.. ஆனா அட்லீஸ்ட் உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுட்டேன்னு எனக்கு ஒரு திருப்தியாவது இருக்கும்.. அதுக்கு தான் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்..” என்று சொன்னவன் திரும்பி தன் வகுப்புக்கு போய் விட்டான் அவள் பதிலையும் எதிர்பாராமல்..
அப்போது அவன் வகுப்புக்கு சென்று கொண்டிருந்த சரணை பார்த்துக் கொண்டே வந்தாள் நித்திலா.. அவன் தேஜூவுக்கு தெரியாமல் கட்டை விரலைத் தூக்கி வெற்றி என்பது போல் நித்திலாவிடம் காட்டிவிட்டு இதழ் ஓரமாக ஒரு சதிகாரப் புன்னகையை தவழ விட்டுச் சென்றான்.. தேஜூவை எதிர் கொண்டு “என்ன தேஜூ.. நேத்து நான் சொன்னது பத்தி யோசிச்சியா?” என்று கேட்டாள் நித்திலா..
“யோசிச்சேன்.. ஆனா நீ சொன்ன மாதிரி அருணை என்னை ஏத்துக்க வைக்கிறதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. அவனுக்குள்ள என்னை இழந்துடுவோம்னு பயம் வந்தா தான் என்னை ஏத்துக்கறதை பத்தி யோசிப்பான்.. ஆனா அந்த பயத்தை எப்படி உருவாக்கறதுன்னு தெரியலியே..” என்று சொன்னவளிடம் “ரொம்ப சிம்பிள் நீ அருண் உன்னை ஏத்துக்காததுனால வேற யாரையோ காதலிக்கிற மாதிரி அவன் முன்னாடி நடி.. ஓரளவுக்கு மேல அவனால தாங்க முடியாம நிச்சயமா உன்னை அவனுக்கே அவனுக்கா சொந்தமாக்கிக்கறதுக்காக உன்னை ஏத்துப்பான்..” என்றாள் நித்திலா..
“அவன் என்னை ஏத்துக்கிட்டான்னா பரவால்ல.. ஒருவேளை ஏத்துக்கலைன்னா என்ன செய்யறது?” என்று கேட்க “அவன் ஏத்துக்கலைன்னா என்ன பண்றதுங்கறதை அப்புறம் பாத்துக்கலாம்.. முதலிலேயே நம்ம ஏன் ஏத்துக்க மாட்டான்னு நினைக்கணும்? அவன் நிச்சயமா உன்னை அவன் காதலியா ஏத்துப்பான்.. நான் சொல்ற மாதிரி நீ வேற யாரையாவது லவ் பண்ற மாதிரி நடி..” என்றாள் நித்திலா..
தேஜூ “சரி.. அப்படின்னா நான் நிலவழகன் கிட்ட கேட்டு பார்க்கிறேன்.. அவன் அருண் என்னை ஏத்துக்கறதுக்காக இப்படி நடிக்க நிச்சயம் ஒத்துப்பான்..” என்று சொல்லவும் நித்திலா “ஐயோ.. நான் போட்ட அத்தனை பிளானையும் இவ சொதப்பிருவா போல இருக்கே..” என்று எண்ணிக் கொண்டவள்.. “ம்கும்.. நீ சொல்றபடி செஞ்சா நிலவழகன் தான் உன்னை ஏத்துப்பான்..” என்றவளை எரிப்பது போல் பார்த்தாள் தேஜூ..
“சும்மா முறைக்காதே தேஜூ.. நீயே யோசிச்சு பாரு.. நிலவழகன் ரொம்ப நல்லவன்.. ஒருவேளை கடைசி வரைக்கும் உன்னை தன்னால ஏத்துக்க முடியாதுன்கிற சூழ்நிலை இருந்தால் அருண் நிச்சயமா நிலவழகனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருப்பன்னு விட்டுக்கொடுத்துருவான்.. அதனால நீ ஒருத்தரை காதலிச்சா அந்த பையன் உனக்கு சரியான ஆள் இல்லைன்னு அவனுக்கு தோணனும்.. அப்படி ஒருத்தனை தான் நீ காதலிக்கணும்.. எனக்கு தெரிஞ்சு அப்படி அவனுக்கு தோணற ஒரே ஆளு இப்போதைக்கு சரண் தான்.. அதனால நான் சொல்றதை கேளு.. பேசாம நீ சரணை காதலிக்கிற மாதிரி நடி..” என்றவளை கோவமாக பார்த்தாள் தேஜூ..
“என்ன விளையாடுறியா? எனக்கென்ன மூளை கீளை கெட்டு போச்சுன்னு நெனச்சியா? போயும் போயும் அந்த சரணை போய் காதலிக்கிற மாதிரி நடிக்க சொல்ற? ஓ.. உன்னோட டியரெஸ்ட் ஃப்ரெண்ட் இல்ல அவன்..?அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறியா?”
“அவன் ஃப்ரெண்ட்ஷிப்பை நான் எப்பவோ கட் பண்ணிட்டேன்.. ஆனா இப்ப சரண் தான் எனக்கு ஃபோன் பண்ணான்.. முதல்ல அவன் காலை எடுக்க வேண்டாம்ன்னு தான் நினைச்சேன்.. ஆனா பத்து தடவை ஃபோன் பண்ணவும் தான் மனசு கேட்காம எடுத்தேன்.. ஃபோன்லயே ரொம்ப அழுதான்.. நான் செஞ்சதெல்லாம் தப்பு.. நான் தப்பு செஞ்சதும் இல்லாம உன்னையும் நிறைய தப்பு செய்ய வச்சுட்டேன்.. இனிமே திருந்தி வாழணும்னு நினைக்கிறேன்.. இனிமே உங்க யாரையும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. அப்படின்னு அழுதான்.. ஆனா அப்பயும் நான் அவன்கிட்ட நீ இப்படி எல்லாம் அழறதுனால நான் உன்னோட மறுபடியும் ஃப்ரெண்டாவேன்னு கனவுல கூட நினைக்காதே.. மறுபடியும் நான் மாறினேன்னா எங்க அப்பா என்னை வெட்டியே போட்டுடுவாருன்னு சொல்லி வெச்சிட்டேன் ஃபோனை.. ஆனா இப்பவும் அவனுக்கு நல்லது நடக்கணும்ங்கறதுக்காக அவனை காதலிக்கிற மாதிரி நான் உன்னை நடிக்க சொல்லல.. உனக்கும் அருணுக்கும் நல்லது நடக்கணும்னு தான் அவனை காதலிக்கிற மாதிரி உன்னை நடிக்க சொல்றேன்.. நீ சரணை விரும்புறேன்னு தெரிஞ்சாதான் நீ சொல்ற மாதிரி அருணுக்கு கோவம் வரும்.. நிச்சயமா உன் வாழ்க்கையை சரண் கெடுத்துருவாங்கற பயத்துல அவன் உன்னை ஏத்துக்குவான்.. அதுக்கு தான் அப்படி சொன்னேன்..” என்றாள் நித்திலா..
“ஆனா சரணோட இந்த மாதிரி நடிக்கிறதுனால அவன் என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டான்னா..?” என்று தேஜூ கேட்க “நீ சொல்ற மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை தேஜூ.. எனக்கு என்னவோ சரண் இப்ப நிஜமாவே மாறிட்டான்னு தோணுது.. நீ அவன் கிட்ட சொன்னா அவன் நிச்சயமா உன்னை காதலிக்கற மாதிரி நடிக்க ஒத்துப்பான்.. அவனை காதலிக்கிற மாதிரி நடிக்கணும்ங்கறதுக்காக நீ அவனோட ரொம்ப க்ளோஸா பழக வேண்டி இருக்கும்.. ஆனா அவன் அத்து மீறினான்னா அந்த நிமிஷமே நீ அந்த நாடகத்தை நிறுத்திட்டு உன் வழியை பார்த்து போயிட்டே இருக்கலாம்.. அருணுக்கு நீ சரணை லவ் பண்றேங்கறதை தெரிய வச்சா போதும்.. அப்புறம் அவன் கோபமே அவன் மனசுல இருக்குற காதலை வெளிய கொண்டு வந்து உன்னை ஏத்துக்க வச்சுடும்.. நீ நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு..” என்றாள் நித்திலா..
“நான் யோசிக்கிறேன்.. ஆனா சரணை காதலிக்கிற மாதிரி நடிக்கிறது நிஜமாவே ஓகேவான்னு எனக்கு தெரியல.. நான் யோசிச்சு பார்த்து முடிவு எடுக்கிறேன்..” என்று சொன்னவள் “சரி.. நான் கிளாஸ்க்கு கிளம்புறேன்.. பாய்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டாள்..
அவள் சென்ற பிறகு நித்திலாவோ “போடி மகளே போ.. அந்த சரண் கையால உனக்கு வைக்கறேன் ஆப்பு.. உன்னை பழிவாங்க அவனுக்கும் இது நல்ல சான்ஸ்.. நிச்சயமா நீ பாசிட்டிவா ஒரு பதிலோட தான் வருவேன்னு எனக்கு தெரியும்.. ஏன்னா அந்த அருணை உன்னை ஏத்துக்க வைக்கிறது உனக்கு அவ்வளவு முக்கியம்.. ஆனா எனக்கு என்னவோ எது நடந்தாலும் அந்த அருண் உன்னை ஏத்துக்க மாட்டான்னு தோணுது.. அந்த சரணை உன் வாழ்க்கையில கொண்டுவந்து உன்னை ஒவ்வொரு நாளும் அழ வெக்கல.. நான் நித்திலா இல்ல..” மனதிற்குள் கருவிக்கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்..
அடுத்த நாள் காலை அருண் மரத்தடியில் அமர்ந்து கொண்டிருக்க தேஜூ கல்லூரியினுள் வந்தாள்.. தன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தவனின் பார்வை அவளையே தொடர அவளும் அதை உணர்ந்து இதழில் சிறு புன்னகையுடனே கல்லூரியின் உள்ளே வந்தாள்..
சிறிது தூரம் நடந்தவளை பின் தொடர்ந்து எங்கிருந்தோ வந்த சரண்.. “தேஜூ.. தேஜூ.. நில்லு.. ப்ளீஸ்..” என்று சொல்லிக்கொண்டே கால்களை நொண்டியபடி அவள் பின்னே வந்தான்.. அப்படி சொல்லிக்கொண்டே அவள் பின்னே அவன் வர தேஜூ நின்று அவன் புறம் திரும்பி பேசும்போது அருண் அமர்ந்திருந்த மரத்தடியிலிருந்து சிறிது தூரத்திலே தான் இருந்தார்கள்.. அவர்கள் இருவரும் பேசுவது அருணுக்கு நன்றாகவே கேட்டது..
அவளோ “என்ன சரண்? உனக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராதா? உன்னால நான் பட்டதெல்லாம் போதும்.. ப்ளீஸ்.. என்னை விட்டுடு.. ஏற்கனவே நீ செஞ்ச வேலைக்கு உன் மேல பயங்கர கோவத்துல இருக்கேன்.. என்னை மேல மேல டென்ஷன் பண்ணாதே..” என்றாள்..
“தேஜூ.. நான் செஞ்சதெல்லாம் தப்புதான்.. நான் அப்படில்லாம் பண்ணிருக்கவே கூடாது.. நீ அருண் கிட்டருந்து அவன் காதலை ஜெயிக்கறதுக்காக பொறுமையா அவனோட போராடற மாதிரி நானும் போராடி இருக்கணும்…. அதை விட்டுட்டு நான் உங்கிட்ட அப்படி எல்லாம் நடந்துக்கிட்டது ரொம்ப தப்பு.. நீ என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கலங்கற கோவத்துல நான் அப்படி எல்லாம் பண்ணிட்டேன்.. ஐயம் சாரி தேஜூ… நான் இப்படில்லாம் பண்ணிட்டேங்கறதுனால என் லவ்வை உண்மை இல்லன்னு நெனைச்சிடாத.. நீ அருணை உன் உயிருக்கும் மேல காதலிக்கறது எவ்வளவு சத்தியமோ அதே அளவு நான் உன்மேல வச்சிருக்கற காதலும் சத்தியம்..” என்றான்..
“சரி.. நீ ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்ட.. இப்ப உணர்ந்துட்டன்னு சொல்ற.. கொஞ்சம் நம்பறதுக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனாலும் நான் நம்பறேன்.. யாராயிருந்தாலும் திரும்பி மனுஷனா வாழறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்ன்னு எங்க அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்துருக்காரு..ஆனா மறுபடியும் நீ இந்த மாதிரி ஏதாவது தப்பு பண்ணினா நான் உன்னை இந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கமாட்டேன்..” என்றாள்..
“தேங்க்ஸ் தேஜூ.. நீ எப்படி அருண் உன் காதலை ஏத்துக்கணும்னு போராடறியோ அப்படியே நானும் என் காதலை நீ ஏத்துக்கணும்னு போராடுவேன்.. ஐ லவ் யூ தேஜூ.. இது உண்மை..” என்று சொல்லியவன் அவள் பதிலை கூட எதிர்பாபார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்..
அவன் சென்றதும் அருணை நோக்கி போனாள் தேஜு.. அருண் அவளிடம் காதல் சொல்லிவிட்டு போய் கொண்டிருந்த சரணையே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டு இருந்தான்.. தேஜூ ஏன் சரண் சொல்வதை காது கொடுத்து கேட்கிறாள் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.. திரும்பியவன் தேஜூ தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததை பார்த்ததும் அப்படியே மனதுக்குள் மத்தாப்பு பூத்தது போல் மகிழ்ந்தான்.. ஆனால் எப்போதும் போல வெளியே காட்டிக் கொள்ளவில்லை..
தேஜு முன்தின நாள் இரவே சரணுக்கு கைபேசியில் அழைத்து அருணின் காதலை பெறுவதற்காக சரணோடு சேர்ந்து ஒரு காதல் நாடகம் நடத்த விரும்புவதாக சொன்னாள்.. அதைக் கேட்ட சரண் தானும் நித்திலாவும் போட்ட திட்டம் குறி தவறாமல் நிறைவேறியதை நினைத்து உள்ளுக்குள் ஒரு குத்தாட்டமே போட்டான்..
அவன் தேஜூவுடன் நடிக்க ஒப்புக் கொள்ள அதன் பிறகு மறுநாள் கல்லூரியில் எப்படி எல்லாம் இருவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசி தீர்மானித்தனர் இருவரும்.. அதன்படியே இப்போது சரணும் தேஜூவும் நடந்து கொண்டார்கள்..
அருண் அருகில் வந்தவள் “அருண் நானும் உன்கிட்ட ரொம்ப நாளா என் காதலை சொல்லிக்கிட்டே தான் இருக்கேன்.. ஆனா நீ உன் மனசுல காதல் இருந்தும் என்னை ஏத்துக்க மாட்டேங்குற.. நீ என்னை உன் காதலியா ஏத்துக்காத வரைக்கும் என் காதல் ஒரு தலை காதலா தான் இருக்கும்.. அந்த சரண் என்கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டான்.. ஆனா இன்னைக்கு அவன் பேசினதுல இருந்த நியாயம் எனக்கு புரியுது.. அவன் அதெல்லாம் ஒரு கோவத்துல பண்ணிட்டான்.. ஆனா அவன் என்னை உண்மையா விரும்புறான்.. அதனாலதான் ஒவ்வொரு நாளும் நான் முடியாதுன்னு சொல்ல சொல்ல என்கிட்ட வந்து கெஞ்சிகிட்டு இருக்கான்.. நானும் இதே மாதிரி தான் உன் கிட்ட கெஞ்சிகிட்டு இருந்தேன்.. அதனால நான் அவன் காதலை ஏத்துக்காதப்போ அவனுக்கு எப்படி வலிக்கும்னு எனக்கு புரியுது.. இன்னைக்கு நீ எனக்கு ஒரு முடிவை சொல்லு.. இன்னைக்கு நீ என் காதலை ஏத்துக்கிட்டா அதுக்கப்புறம் நான் உனக்காகவே வாழ்ந்திடறேன்.. நீ என் காதலை ஏத்துக்கலைன்னா நான் அந்த சரணோட காதலை ஏத்துக்கறேன்.. அட்லீஸ்ட் அவன் காதல் நிறைவேறுன சந்தோஷத்தையாவது அவனுக்கு கொடுக்கறேன்.. இதுல நான் எதை பண்ணனுங்கறது உன் கையில தான் இருக்கு.. நான் சாயங்காலம் வரும்போது உன்னை வந்து பார்க்கிறேன்.. நீ என் காதலை ஏத்துக்கறயா இல்லையான்னு நல்லா யோசிச்சு சொல்லு..” என்று சொன்னவள் விடுவிடுவென தன் வகுப்பை நோக்கி நடந்தாள்..
அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து போன அருண் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான்..
தொடரும்..
கமெண்ட்ஸ் குடுக்க மறக்காதீங்கப்பா..
ஷேர் பண்ணுங்க🙏🙏🙏
உங்கள் பிரியமான தோழி
❤️❤️சுபா❤️❤️