பரீட்சை – 58
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன்னை அடைவதற்காக
இன்னொருவனை நம்பி
ஏமாந்து போனேனடா
இருவரிடமும்..
என்னை ஏமாற்றி
அவன் தனக்காய்
என்னை
சொந்தமாக்கி கொள்ள
சூழ்ச்சி செய்ய
வந்தென்னை காத்து
உன்னவள்
ஆக்கிக்கொள்வாய் என
வழி பார்த்து
ஏங்கியவளை நீ
ஏமாற்றினாயே என்
காதல் கள்வா..!!
################
காதல் கள்வா..!!
தேஜூ சரணை ஏற்றுக் கொள்ளப் போவதாக சொன்னதைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்து போன அருண் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான்..
சரண் தேஜூவிடம் பேசுவதையெல்லாம் அவன் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.. அவன் மாறிவிட்டதாக அவன் ஆயிரம் தான் சொன்னாலும் அவன் இன்னும் அதே பழைய சரணாகவே தான் இருக்கிறான் என்று அருண் அறிந்திருந்தான்.. அவன் சிறிதும் மாறவில்லை என்று அவன் பார்வையிலிருந்தே தெரிந்தது..
அவன் தேஜூவை பார்க்கும் பார்வையில் வக்கிரமும் பழிவாங்கும் உணர்ச்சியும் காம வெறியும் அளவில்லாமல் இருப்பது அருணுக்கு தெரிந்தது.. ஆனாலும் இதை அறியாமல் தேஜூ அவன் வாய்மொழியாக சொன்னதை நம்பி அருண் அவளை ஏற்காவிட்டால் அந்த சரணையே ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னதுக் கேட்டு சிறிது அச்சப்பட்டு தான் போனான்..
ஆனால் தேஜு புத்திசாலி.. அவள் கண்ணுக்கு எப்படி சரணுடைய குரூர புத்தி தப்பி போனது என்று யோசித்துக் கொண்டிருந்தான் அருண்..
ஒருவேளை தான் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சரணின் காதலை ஏற்க போவதாக நடிக்கிறாளோ என்று யோசித்தான் அவன்..
அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவன் என்ன ஆனாலும் தேஜூவை ஏற்பதாக சம்மதம் தெரிவிக்கக் கூடாது என்று முடிவு எடுத்து தன் வகுப்பிற்கு சென்றான்..
மாலை அவன் வழக்கமாக அமரும் மரத்தடிக்கு வந்து அமர்ந்திருந்தான்.. அவனை தேடிக் கொண்டு அங்கே வந்தாள் தேஜு..
அவளைப் பார்த்தவன் “என்ன..? காலைல நீ கேட்ட கேள்விக்கு பதில் தேடி வந்திருக்கியா? நீ சரணை ஏத்துக்கோ… இல்ல வேற எவனை வேணா ஏத்துக்கோ.. எனக்கு அதைப் பத்தி கவலையே இல்லை.. நீ யாரை வேணா லவ் பண்ணிக்கோ.. ஆனா நான் உன்னை ஏத்துக்க முடியாது.. அப்ப சொன்ன பதில் தான் இப்போவும்.. உன்னை எனக்கு பிடிக்கும்.. நான் உன்னை லவ் பண்றேன்.. ஆனா உன்னை ஏத்துக்க முடியாது.. ஆனா நான் உன்னை லவ்வரா அக்ஸெப்ட் பண்ணனுங்கறதுக்காக அந்த சரண் எதோ ரொம்ப நல்லவனா மாறிட்ட மாதிரி நல்லாவே நடிக்கிறான்.. நீயும் அதுக்கு மேல அவனை ஏத்துக்கிட்டு அப்படியே அவனோட தெய்வீக காதலை அங்கீரிக்க போற மாதிரி நல்லாவே நடிக்கிற.. நீ எப்படி நடிச்சாலும் நான் உன்னை ஏத்துக்க மாட்டேன்.. இதுதான் உண்மை.. இதுக்கு மேல என் பின்னாடி வராம ஒழுங்கா அந்த சரணையும் நம்பி அவன் பின்னாடியும் போகாம படிச்சு முடிச்சு உனக்கு ஏத்த நல்லவனா பார்த்து கட்டிக்க.. என்னால நீ ஒரு நல்லவனோட வாழறதை பார்த்து சந்தோஷப்பட முடியுமே தவிர என்னோட வாழ்க்கை முழுக்க உன்னை ஏத்துக்க முடியாது.. நான் வரேன்..” என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்பி தன் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டான்..
மறுநாள் கல்லூரியில் அவன் நுழைந்து கொண்டிருந்தபோது எதிரில் தேஜூவும் சரணும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.. சரியாக அவர்களைக் கடக்கும் போது தேஜூ அவனிடம் பேசியது அருண் காதில் விழுந்தது..
“சரண் உன் லவ்வை அக்சப்ட் பண்ண சொல்லி கேட்டே.. ஆனா நான் அருணை சின்சியரா லவ் பண்றேன்.. அவன் என்னை ஏத்துக்க மாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டான்.. ஆனாலும் இன்னும் என் மனசுல அவன் தான் இருக்கான்.. என் மனசுலேர்ந்து அவன் உருவத்தை அழிச்சிட்டு உன் லவ்வை ஏத்துக்கிட்டு உன்னை லவ் பண்ணனும்னா எனக்கு நிறைய டைம் எடுக்கலாம்..” என்று சொன்னாள் தேஜூ..
“அதனால என்ன தேஜூ..? எவ்வளவு நாள் ஆனாலும் நான் காத்துகிட்டு இருக்கேன்..” என்று சொன்னான் சரண் கண்களில் ஆர்வம் மின்ன..
“நீ காத்துட்டு இருப்ப.. ஆனா நான் உன்னை காதலிக்கணும்னா அதுக்கு உனக்கும் எனக்கும் நடுவுல ஏதாவது ஒரு கனெக்ஷன்.. ஒரு ஸ்ட்ராங்க் ரிலேஷன்ஷிப் வேணும்.. அது மட்டும் இல்லாம நான் அருணை மறந்து அதுக்கப்புறம் உன்னை காதலிச்சு கல்யாணம் பண்றதுக்குள்ள இந்த ஜென்மமே முடிஞ்சுடுமோன்னு தோணுது.. ஏன்னா அருணை என் மனசுலருந்து இறக்கறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல..” என்றாள்..
அவள் சொன்னதை கேட்டு அருணுக்கும் அதற்கு மேல் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து நடக்க முடியவில்லை.. தன் கையில் வைத்திருந்த வண்டியின் சாவியை கீழே போட்டவன் அதை எடுப்பது போல் பாவனை செய்து அங்கேயே நின்று கொண்டிருந்தான்..
தேஜூ தொடர்ந்து பேசினாள்.. “அதனால அருணை மறந்துட்டு நான் உன்னை விரும்ப ஆரம்பிக்கணும்னா அதுக்கு ஒரே வழி.. உனக்கும் எனக்கும் இடையில் இருக்கிற உறவை அருண் கூட எனக்கு இருக்கிற உறவை விட ஸ்ட்ராங்கா ஆக்கறது தான்.. அப்படி ஆக்கணும்னா நீ என் புருஷன் ஆகணும்.. அதனால நம்ம காலேஜ் பக்கத்துல இருக்கற அம்மன் கோயிலுக்கு நாளைக்கு காலைல ஆறு மணிக்கு வந்துடு.. அங்க நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. வரும்போது ஒரு தாலி வாங்கிட்டு வா.. நாளைக்கு காலைல நான் உனக்காக அந்த அம்மன் கோயில்ல காத்துட்டு இருப்பேன்..” என்று சொன்னவள் அவனை விட்டு விலகி நேராக தன் வகுப்பிற்கு சென்றாள்..
அவள் சொன்னதை கேட்ட அருணுக்கு யாரோ தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.. “கல்யாணம் பண்ணிக்க போறாளா..? ஐயோ.. அஸ்வினி.. என் மனசை மாத்தணும்ங்கிறதுக்காக நீ எவ்வளவு தூரம் தான் இன்னும் போகப்போறே.. இதுவும் நீ நடிப்புக்காக தான் செய்யறேன்னு எனக்கு தெரியும்.. நிச்சயமா நான் உன்னை ஏத்துக்க மாட்டேன்.. நீ அவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னது தெரிஞ்சதும் நான் அப்படியே துடிச்சு போய் அந்த கல்யாணத்தை தடுக்க வருவேன்னு தானே நினைச்சுகிட்டு இருக்கே.. கல்யாணமே நடக்கப்போறதில்லை.. அப்பறம் நான் எதுக்கு தடுக்க வரணும்..? உன்னால என்னை தவிர வேற யாரையும் அவ்ளோ ஈஸியா முழு மனசோட கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.. போ போ.. நீ எவ்வளவு தூரம் தான் போறேன்னு பாக்குறதுக்காக நான் நிச்சயமா அந்த கோவிலுக்கு வருவேன்.. நாளைக்கு காலைல..” என்று மனதில் நினைத்துக் கொண்டான் அருண்..
நிலவழகன் வந்து அருணிடம் பேசும்போது அருண் நடந்தது முழுக்க அவனுக்கு சொல்லி “நாளைக்கு காலைல அவளை கல்யாணம் பண்ணிக்க அந்த சரணை வர சொல்லி இருக்கா.. அவ நிச்சயமா என்னை கடுப்பேத்தணும்ங்கிறதுக்காகவும் நான் எப்படியாவது அவளை என் லவ்வரா ஏத்துக்கணும்ங்குறதுக்காகவும் தான் இதை பண்றான்னு எனக்கு புரியுது.. ஆனா இதுவரைக்கும் ரொம்ப அமுக்கி வாசிச்சிட்டு இருக்கானே அந்த சரண்.. அவன் மேல தான் எனக்கு நம்பிக்கையே இல்லை.. அவன் நிச்சயமா மனசுல ஏதோ வச்சுக்கிட்டு தான் அவளோட இந்த டிராமா போட்டுட்டு இருக்கான்.. நான் நாளைக்கு நிச்சயமா அங்க போவேன்.. அவனை அஷ்வினி கல்யாணம் பண்ணிக்க போறான்றதுக்காக இல்ல.. அவளால அது முடியாதுன்னு எனக்கு தெரியும்.. ஆனா அவன் அவளை எதுவும் பண்ணிட கூடாதுங்கறதுக்காக..” என்றான் நிலவழகனிடம்..
“சரிடா.. நானும் வரவா உன்கூட..?” என்று கேட்க “சரி வாடா.. அவன் என்னதான் பண்றான்னு போய் பார்க்கலாம்.. அவனும் அந்த நித்திலாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் வாய் திறந்து பேசிக்கலையே தவிர கண்ணால ஏதோ பேசிக்கறாங்க.. அவங்க ரெண்டு பேரும் அஸ்வினிக்கும் எனக்கும் எதிரா ஏதோ சதி பண்றாங்கன்றது நல்லா தெரியுது.. அஸ்வினி தான் அந்த நித்திலாவை முழுசா மாறிட்டான்னு நம்பிட்டு இருக்கா.. அவளோட உண்மையான முகம் தெரியாம அவ சொல்றதெல்லாம் கேட்டுட்டு ஆடிட்டு இருக்கா.. சரி.. எப்படி இருந்தாலும் அவளுக்கு எதுவும் நான் ஆக விட மாட்டேன்… என்னை மீறி அந்த சரண் அவளை எதுவும் பண்ணிட முடியாது..” என்று சொன்னான் அருண்..
மறுநாள் காலை ஐந்து மணிக்கு தேஜு சொன்ன கோவிலுக்கு வந்திருந்தான் அருண் நிலவழகனுடன்.. கோவிலுக்கு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் இருவரும் மறைந்து கொண்டார்கள்..
5: 45க்கு கோவிலுக்கு சரண் வந்திருந்தான்.. கோவில் வாசலில் நின்றபடி தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.. எதிர் முனையில் அழைப்பை ஏற்றவுடன் “ஏய் நித்திலா.. எங்கே இன்னும் உங்களை எல்லாம் காணோம்..? நான் இங்க வந்தாச்சு.. இன்னும் தேஜூ வரலையே..” என்று கேட்டான்..
எதிர் முனையில் ஏதோ பதில் சொல்ல
“என்ன மெசேஜ் பண்ணனுமா? வாய்ஸ் சரியா கேக்கலையா? ஏன் தேஜூ பக்கத்துல இருக்காளா?” என்று கேட்டவன் கைபேசி இணைப்பை துண்டித்து அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தான்..
“ஓ.. தேஜு.. இங்கதான் வந்துட்டு இருக்கியா? வாடி மகளே வா.. என்னை அவமானப்படுத்தினதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு உன்னை வாழ்க்கை முழுக்க என் கூடவே வச்சிருந்து நரகம்ன்னா என்னன்னு உனக்கு காட்டுறேன்..” என்று கருவிக்கொண்டிருந்தான்..
அருண் அவனை கழுத்தை நெரித்துக் கொன்று விட வேண்டும் போன்ற கோபத்தோடு தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டு மரத்தின் பின்னால் நின்று நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்..
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தேஜூ மணப்பெண் போல பட்டுப்புடவையும் நகையும் அணிந்து கொண்டு தேவதையாய் காரிலிருந்து இறங்கி வந்தாள்..
அவளைப் பார்த்து அருண் அப்படியே மெய் மறந்து விட்டான். கண்ணை அவளிடமிருந்து அகற்றாது அவள் அழகையே தன் கண்களால் பருகிக் கொண்டிருந்தான்..
அதனை கவனித்த நிலவழகன் இதழில் சிறு புன்னகை மலர்ந்தது..
சரண் அருகில் வந்த தேஜூ “என்ன சரண்.. இன்னும் அவன் வரலையா?” என்று கேட்டாள் ரகசியமாய்..
“இல்ல தேஜூ.. அவன் இன்னும் வரல..” என்றான் சரண் மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் தான் சொன்னது கேட்குமாறு..
நித்திலா “தேஜூ.. நான் சொல்றதை கேளு.. நிச்சயமா அருண் இங்க தான் இருப்பான்.. எங்கேயாவது மறைஞ்சு உன்னை பார்த்துட்டு இருப்பான்.. நீ செய்ய வேண்டியது எல்லாம் செய்ய ஆரம்பி.. சரண் தாலி கட்டும்போது நிச்சயமா அருண் வந்து தடுப்பான்..” என்று ரகசியமாய் சொன்னாள்..
சரணை பார்த்து “சரண்.. நீ கையில தாலி வெச்சிருக்கிற இல்ல.. அதை அந்த ஐயர் கிட்ட குடுத்து சாமிகிட்ட மாலையோட வச்சு தர சொல்லு” என்றாள்..
தேஜுவோடு சுமியும் வந்திருந்தாள்.. அவள் தேஜூவை பார்த்து “தேஜு.. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.. இந்த நித்திலா சரணோட பேச்சை கேட்டு நீ பண்றது எதுவுமே எனக்கு சரியா படல.. இவங்களை நம்பி இப்படி ஒரு பிளான்ல இறங்கி இருக்கியே.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இவங்க உனக்கு என்ன எல்லாம் பண்ணி இருக்காங்கன்னு உனக்கு ஞாபகமே இல்லையா?” என்று கத்தினாள்..
நித்திலாவும் சரணும் அவளை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தார்கள்..
தேஜு அவள் பக்கம் திரும்பி “போதும்.. நிறுத்து சுமி.. அதெல்லாம் அப்போ.. இப்ப ரெண்டு பேருமே மாறிட்டாங்க.. திருந்தணும்னு நினைக்கிறவங்களுக்கு எப்பவுமே ஒரு வாய்ப்பு கொடுக்கணும்… இந்த மாதிரி பேசாத நீ..” என்று சொல்லிவிட்டு சரண் பக்கம் திரும்பி “சரண்.. நித்திலா சொன்னபடி ஐயர் கிட்ட எல்லாத்தையும் கொடுத்து சாமிகிட்ட வைக்க சொல்லு..” என்றாள்..
“சரி தேஜூ.. அப்படியே செய்றேன்..” என்று சொல்லி ஐயரிடம் தான் கொண்டு வந்த தாலியையும் மாலைகளையும் கொடுத்து அம்மன் முன்னால் வைக்கச் சொன்னான்..
அவரும் அப்படியே அம்மன் பாதத்தில் அவற்றை வைத்து மாலைகளை எடுத்துக் கொண்டு வந்து இருவர் கையிலும் கொடுத்து “இந்த மாலையை முதல்ல நீங்க போட்டுக்கோங்க” என்று சொல்ல இருவரும் தங்கள் கழுத்தில் அவர் கொடுத்த மாலையை போட்டுக் கொண்டார்கள்..
அதன் பிறகு தாலியை எடுத்துக் கொண்டு வந்து சரண் கையில் கொடுத்தார் ஐயர்..
சரண் தாலியை எடுத்துக்கொண்டு ஐயரை மந்திரம் சொல்ல சொல்லி அவள் கழுத்தில் கட்ட போக கழுத்தருகில் தாலியை கொண்டு வந்த நேரத்தில் “சரண்.. நிறுத்து அருணை காணோம்.. வேண்டாம்.. நீ எனக்கு தாலி கட்டாத..” என்று சொல்ல “உன் அருண் வர்றதுக்காக யார் காத்துகிட்டு இருந்தா..? உன்னை என் பொண்டாட்டி ஆக்கிக்கணும்னு தான் நான் இங்கே வந்தேன்.. உன்னை என் பொண்டாட்டியாக்காம விட மாட்டேன்.. மரியாதையா தாலியை கட்டிக்கோடி..” என்று சொன்னவன் ஒரு விசில் அடிக்க அங்கே மறைந்து இருந்த அத்தனை அடியாட்களும் அவர்களை சூழ்ந்து கொண்டார்கள்..
ஒரு அடியாள் வந்து சுமியை பிடித்துக் கொள்ள மற்றொரு அடியாள் நித்திலாவை பிடித்திருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தான்..
சரண் தேஜூவை நோக்கி தாலியை எடுத்துக் கொண்டு வந்தான்.. அவளோ அவனை அடித்து காயப்படுத்தி “அடப்பாவி.. உன்னை நம்பி என் அருண் என்னை ஏத்துக்கணும்னு இந்த நாடகத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. ஆனா நீ இப்படி எனக்கு ஒரு துரோகம் பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்ல.. எப்படியும் என் அருண் வந்து நீ எனக்கு தாலி கட்டறதை தடுத்துருவான்னு நினைச்சேன்.. என்னை ஏத்துப்பான்னு நினைச்சேன்.. அவன் வரல… அதுக்காக நீ எனக்கு தாலி கட்டுவியா? அவனைத் தவிர ஒரு காலத்திலயும் இன்னொருத்தனுக்கு நான் பொண்டாட்டியாக மாட்டேன்டா..” என்று சொன்னவள் அவன் கையில் இருந்த தாலியை பிடுங்கி கீழே விட்டெறிந்தாள்..
கோபம் வந்த சரண் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.. அதில் அவள் உதட்டில் இருந்து ரத்தம் வந்தது..
தொடரும்..
கமெண்ட்ஸ் குடுக்க மறக்காதீங்கப்பா.. ஷேர் பண்ணுங்க🙏🙏🙏
உங்கள் பிரியமான தோழி
❤️❤️சுபா❤️❤️