இதயம் பேசும் காதலே..3

5
(8)

தமிழ்நாட்டில் உனக்கு யாரையாச்சும் தெரியுமா என்ற ரிஷி இடம் உங்களை தவிர எனக்கு வேற யாரையும் தெரியாது என்றாள் நிலா. என்னை உனக்கு தெரியுமா என்ற ரிஷி இடம் ஆமாம் உங்களை எனக்கு தெரியுமே  நேத்து நைட்ல இருந்து எனக்கு உங்களை தெரியும். நீங்க ரொம்ப நல்லவரு என்றாள் நிலா.

யார் சொன்னது நான் ரொம்ப நல்லவன் என்று நீ சின்ன பொண்ணா இருக்க அதனால உன்னை நான் ஒன்றுமே பண்ண வில்லை மத்தபடி  நான் நல்லன் எல்லாம் கிடையாது நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் என்றான் ரிஷி.

அப்படியா சரி மிஸ்டர்.கெட்டவன் என்று அவள் புன்னகைத்தாள் .இப்ப நீ எங்கே தங்க போற என்ற ரிஷி இடம் தெரியலையே நான் தங்குவதற்கு என்ன பங்களாவா கட்டிக்க முடியும் என்ற நிலாவை பார்த்து புன்னகைத்தவன் சரி உன்னை ஒரு ஹாஸ்டல்ல சேர்த்து விடுறேன் இல்ல வேலைக்கு போகிறியா இல்லை படிக்கிறாயா என்ற ரிஷி இடம் படிக்கிறதுக்கு என்னோட டிசி வேணுமே அதை என் சித்தி வேற எரிச்சிருப்பாளே அதனால படிக்க முடியாது நான் வேண்டும் என்றால் வேலைக்கு போகட்டுமா எதாச்சும் ஒரு பார்ட் டைம் ஜாப் இல்ல ஃபுல் டைம் ஜாப் உங்களால முடிஞ்சா எனக்கு ஏற்பாடு பண்ணி தர முடியுமா என்றாள் நிலா .

அப்படி என்ன பார்ட் டைம் போக போறிங்க  உனக்கு என்ன தெரியும் என்ற ரிஷி இடம் பெருசா ஒன்றும் தெரியாது ஆனால் ஸ்கூல்ல படிச்சப்ப கொஞ்சம் கம்ப்யூட்டர் நாலேஜ் இருக்கு எனக்கு இருக்கிற கம்யூட்டர் நாலேட்ஜ் வச்சு எந்த வேலையையும் பார்க்க முடியாது எனக்கு டெய்லரிங் தெரியும் என்றாள் நிலா.

டெய்லரிங் தெரியுமா ஒரு கார்மெண்ட்ஸ்ல வேலைக்கு சேர்த்து விடுறேன் என்றான் ரிஷி. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க என்ற நிலாவிடம் உன் தேங்க்ஸ் நீயே வச்சுக்கோ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் வேலைக்கு சேர்த்து விடுற இடத்துல என்னோட பெயரை காப்பாத்து என்றான் ரிஷி .அது எல்லாம் கண்டிப்பா காப்பாத்துவேன் என்றவள் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

பிளைட் லேண்டாக போகுது என்ற  ரிஷி இடம் கீழே இறங்கப் போகிறமா என்றாள் நிலா. ஆமாம் என்றவன் மௌனமாக இருந்தான்.

அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றான். அவனது டிரைவர் வாசலில் காத்திருக்க அவரிடமிருந்து சாவியை வாங்கியவன் நீங்க ஒரு கால் டாக்ஸி பிடித்து வீட்டுக்கு போயிருங்க காரை  நானே ஓட்டிட்டு போகிறேன் என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்.

இப்ப நம்ம எங்க போறோம் என்ற  நிலாவிடம் உனக்கு இது தவிர வேற டிரஸ் இல்லை உனக்கு நல்ல டிரஸ் எடுத்து விட்டு எனக்கு தெரிஞ்ச ஹாஸ்டலில் உன்னை தங்க வைக்கிறேன் நீ அங்கேயே தங்கிக்கோ என்றான் ரிஷி.

சரிங்க சார் என்றாள் நிலா. என்ன சார் என்றவனிடம் அங்கிள்ன்னு  சொன்னால் தான் உங்களுக்கு கோவம் வருகிறதே அதுதான் நான் உங்கள சார் என்று கூப்பிடட்டுமா என்றாள் நிலா. சார் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா என்ற ரிஷி இடம் ஸ்லேவ் ஐ ரிமெயின் (Slave I Remain) என்றாள் நிலா.

கரெக்ட் நீ என்ன என்னோட அடிமையா அதனால சார் எல்லாம் ஒன்றும் கூப்பிட வேண்டாம் கால் மீ மிஸ்டர்.ரிஷி என்றவனிடம் ஓகே என்ற நிலா  மிஸ்டர்.ரிஷி என்று அழைத்துப் பார்த்தாள்.

இப்படி என்னை விட வயதில் பெரியவங்களை பெயர் சொல்லி அழைப்பதற்கு பதிலாக சார் என்றே கூப்பிடலாம் என்ற நிலாவை  முறைத்தவன் என்கிட்ட வேலை பார்க்கிற ஸ்டாஃப் கூட என்னை மிஸ்டர்.ரிஷி என்று தான் சொல்லுவாங்க சார் என்று  கூப்பிட மாட்டாங்க என்னை பொருத்த அளவில் இந்த உலகத்துல யாருமே யாருக்கும் அடிமை கிடையாது ஓகே என்றான் ரிஷி.

ஓகேங்க என்றவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே வர ஆரம்பித்தாள் .சென்னை சூப்பரா இருக்கு என்ற நிலாவிடம் ஏன் நீ மும்பை முழுவதும் சுத்தி பார்த்து இருக்கியா என்ன என்ற ரிஷியிடம் சுத்தி பார்த்து இருக்கேன் ஸ்கூல் டூர் போனப்ப எனக்கு சென்னை தான் ரொம்ப புடிச்சிருக்கு என்றாள் நிலா .

சரி ஓகே என்றவன் அவளை முதலில் ஒரு துணி கடைக்கு அழைத்துச் சென்று அவளுக்காக சில உடைகளை வாங்கிக் கொடுத்தான். இதெல்லாம் கவுன் கிடையாது உனக்கு கரெக்டா தான் இருக்கும் என்ற ரிஷி இடம் ஆனால் விலை கொஞ்சம் அதிகமா இருக்கே இவ்வளவு காசு நான் எப்படி உங்களுக்கு திருப்பி தர முடியும் என்றாள் நிலா.

நீ ஏன் திருப்பி கொடுக்கணும் என்ற ரிஷி இடம் பிச்சையா எனக்கு எதுவுமே வேண்டாம் என்று கூறிவிட்டு ஆமாம் நீங்க என்னைய வேலைக்கு சேர்த்து விடப் போறீங்க தானே நான் மாசம் மாசம் சம்பளம் வாங்கி உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துவிடுகிறேன். எல்லாத்தையும் எழுதி வச்சுக்கோங்க ப்ளீஸ் என்றாள் நிலா.

எழுதி வைக்கிறதா நானா எனக்கு இருக்கிற வேலை டென்ஷன்ல நான் மறந்துவிடுவேன் குட்டி பொண்ணு நீ வேண்டும் என்றால் எழுதி வச்சு கொஞ்சம் கொஞ்சமா திருப்பிக் கொடு என்றான் ரிஷி. சரிங்க என்றவள் என் பெயர் நிலா குட்டி பொண்ணு இல்லை என்றாள்.

நீ பார்க்க குட்டியா அழகா டால் மாதிரி இருக்க அதனால தான் உன்னை குட்டி பொண்ணுன்னு சொன்னேன் அது உனக்கு பிடிக்கலையா சரி ஓகே உன்னை நான் நிலா என்றே  சொல்கிறேன் என்ற ரிஷி அவளை அடுத்த அவளை தங்க வைக்க அவன் ஏற்பாடு செய்திருந்த ஹாஸ்டலுக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்த வார்டனிடம் பேசி இவன் தான் கார்டியன் என்று கூறி அவளை அந்த விடுதியில் சேர்த்து விட்டவன் அலுவலகத்தின் முகவரியை கொடுத்து நாளைக்கு இந்த அட்ரஸ்க்கு வந்துரு என்றவன் உனக்கு பாதை தெரியுமா என்று கேட்டான். தெரியாதே மிஸ்டர் ரிஷி என்றாள் நிலா. சரி ஓகே விடு இது என்னோட போன் நம்பர் என்று தனது மொபைல் எண்ணை அவளிடம் கொடுத்தவன் நாளைக்கு காலைல ரெடி ஆகிட்டு எனக்கு போன் பண்ணு நானே உன்ன கூட்டிட்டு போறேன் இல்லை உன்னை கூட்டிட்டு போறதுக்காக ஆள் அனுப்புகிறேன் என்றான் ரிஷி. சரிங்க என்ற நிலா விடம் அவன் விடை பெற்று சென்றதும் அவள் விடுதிக்குள் சென்றாள்.

என்னடா இது புது பழக்கம் யார் அந்த பொண்ணு அவளுக்காக நீ ஏன் இவ்வளவு மெனக்கடனும் என்ற அசோக்கிடம் அந்த பொண்ணு பார்க்க அழகா குட்டியா டால் மாதிரி இருக்காள் அதனால தான் ஹெல்ப் பண்ணுனேன் என்ற ரிஷியிடம் என்ன மச்சான் கண்டதும் காதலா பார்க்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருக்காளே என்ற அசோக் இடம் புத்தி எப்படி போகுது பாரு காதலாம் முட்டாள் அந்த பொண்ணுக்கு ஏதோ ஹெல்ப் பண்ணனும்னு எனக்கு தோணுச்சு பண்ணுனேன் அவ்வளவுதான் அவள் நாளைக்கு கால் பண்ணினால் அவளை போய் ஹாஸ்டல்ல இருந்து கூட்டிட்டு வந்து நம்ம கார்மெண்ட்ஸ்ல வேலைக்கு சேர்த்து விடு ஓகேவா என்றான் ரிஷி.

ஓ நீ அவளுக்கு சேவகம் பண்றது பத்தாமல் நானும் சேவகம் பண்ணனுமா என்ற அசோக்கிடம் சொல்றதை செய்யுடா என்ற ரிஷி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

நீ சென்னை வந்து ஐந்து மணி நேரம் ஆச்சு இன்னும் வீட்டுக்கு போக வில்லை என்ற அசோக்கிடம் வீட்டுக்கு போனால் மட்டும் என்ன பெருசா நடக்க போகுது அந்த வீட்ல நடக்கிற டிராமா எல்லாம் பார்க்கிறதுக்கு நான் ஆபீஸ்ல கூட இருக்கலாம் என்றான் ரிஷி.

அம்மாவுக்காகவும் ,பாட்டிக்காகவும் போகணும் இல்ல என்றான் அசோக். ஏன்டா நீ வேற போனாலே கல்யாணம் பண்ணிக்க அங்கே பொண்ணு பார்த்து இருக்கேன் இங்கே பொண்ணு பார்த்து இருக்கேன் அப்படின்னு அம்மா ஒரு பக்கம் டார்ச்சர் பண்ணுவாங்க பாட்டியும் அதேதான் நீ எப்படா கல்யாணம் பண்ணிக்க போற உன்னோட தம்பிக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு என்று சொல்லிட்டு இருப்பாங்க விடு என்றான் ரிஷி. நீ ஏன் அவங்க ஆசையை  நிறைவேற்ற கூடாது உனக்கு பின்னாடி பிறந்த உன் தம்பிக்கு கல்யாணம் ஆயிருச்சு. தம்பி தங்கச்சி எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. உனக்கு மட்டும் இன்னும் ஒன்றும் அமைய வில்லை. நீ மட்டும் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கனும் என்றான் அசோக்.

எனக்கு கல்யாணத்துக்கு மேல நம்பிக்கை இல்லை இன்ட்ரஸ்ட் இல்லை அவ்வளவுதான் என்ற ரிஷி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

அதான் ஏன்டா நம்பிக்கை இல்ல என்ற அசோக்கிடம் உனக்கு தெரியாதா எங்க அப்பா ,அம்மாவும் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க .அப்பா இறந்ததும் அம்மா இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.   அப்போ அந்த கல்யாணத்துக்கு என்ன அர்த்தம் என்னோட ஸ்டெப் பாதர் கிட்ட வாழ்ந்த வாழ்க்கையை பற்றி நான் சொல்லித்தான் உனக்கு தெரியணும் என்று இல்லை .

அந்த ஆளு கூட தான் இன்னும் எங்க அம்மா இருக்காங்க என்னோட ஸ்டெப் பிரதர்ஸ் ,ஸ்டெப் சிஸ்டர் எல்லாருக்குமே கல்யாணம் ஆயிருச்சுடா அந்த வீட்ல உள்ள முக்காவாசி சொத்து என் அம்மா ஓடது என் அம்மாவோடதுன்னா என்னோட அப்பா என்னை பெத்த என் அப்பாவோடது அந்த சொத்துல இருந்துகிட்டு என்னையவே எவ்வளவு கொடுமை படுத்தினாங்க. இது நான் கொஞ்சம் பெரிய பையன் ஆனதுக்கப்புறம் சொத்தை எல்லாம் நான் டேக் ஓவர் பண்ணி இன்னைக்கு அவங்கள எனக்கு கீழ இருக்கிற மாதிரி வச்சிருக்கேன் .எதையும் நான் மறக்கல டா கல்யாணம் என்பது ஒரு நம்பிக்கை தான். ஒருத்தனுக்கு ஒருத்தி அப்படின்னு நான் இருக்க சொல்ல வில்லை பட் ஒரு குழந்தை இருக்கும்போது நீங்க ஏன் இன்னொரு வாழ்க்கை துணையை தேடுறீங்க. அப்படி நீங்க  தேடுன வாழ்க்கை துணையால நீங்க பெத்த குழந்தைக்கு ஆபத்து வரும்போது உங்களால காப்பாத்த முடியலைன்னா என்ன கல்யாணம் அது. அதனால தான் எனக்கு சப்போஸ் நாளைக்கு  கல்யாணம் ஆகி எனக்கு ஒரு குழந்தை பிறந்து நான் செத்துப் போயிட்டேனா என் வைஃப் இன்னொரு கல்யாணம் பண்ணி என் குழந்தையும் என்னை மாதிரி ஒரு சூழ்நிலைல தான் வளரும் அப்படின்னு நினைச்சாலே எனக்கு கல்யாணத்து மேல வெறுப்பு தான் வருது என்றான் ரிஷி.

நீ ஏன்டா அப்படி நினைக்கிற  உன்னோட லைஃப் வேற உங்க அம்மாவோட லைஃப் வேற அவங்க லைஃப்ல நடந்தது மாதிரி தான் உன் மனைவிக்கும் நடக்கும்னு நீ கற்பனை பண்ணிக்கிறது எல்லாம் டூ மச் என்றான் அசோக்.

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!