மே பி நீ சொல்லுற மாதிரி என் வாழ்க்கை வேற என் அம்மாவோட வாழ்க்கை வேறாக கூட இருக்கலாம். நான் என் அப்பாவோட ஜீன் தானே அவருக்கு இருந்த அந்த பரம்பரை வியாதி எனக்கும் வரலாமே என் அப்பா, தாத்தா போல நானும் நாற்பதை தொடும் முன்பே மரணித்து விட்டால் என்ன செய்வது. நான் கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கையை வீணாக்க முடியுமா சொல்லு அதனால் தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்கிறேன் புரிஞ்சுக்கோ அசோக் என்றான் ரிஷி.
என்னத்தை புரிந்து கொள்ள ரிஷி சுத்த பூமரா இருக்கு நீ சொல்லுற ரீசன். உன் அப்பாவுக்கு இருந்த பரம்பரை வியாதி உனக்கும் வருமா. உன் அப்பா, தாத்தா நாற்பதை தொடும் முன்பே செத்துப் போயிட்டாங்க அப்படிங்கறதுக்காக நீயும் செத்து போயிடுவியா. இது ஒரு ரீசன் என்று நீ பொண்ணுங்க இருக்கிற பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டியா. நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இதுவரை எந்த பொண்ணை பார்த்துமே உன் மனசு சஞ்சலம் பட்டதே இல்லையா என்றான் அசோக்.
நேற்று இரவு நிலாவுடன் இருந்த நெருக்கம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்த பெண் தன் அருகில் இருந்த நேரத்தில் தன் உடலில் நிகழ்ந்த ரசாயன மாற்றங்களும் அதை கட்டுப்படுத்த அவன் பட்ட பாடும் நியாயம் வர அசோக் அறியாதவாறு சிரித்து விட்டு நிமிர்ந்த ரிஷி கிடையாது என்றான். சரியான சாமியாருடா நீ என்ற அசோக் சரி சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வீட்டு பக்கம் கிளம்பு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
என்ன ரோகினி வாசலை பார்த்துட்டு இருக்க என்று வந்தார் அவரது கணவன் மதிமாறன். இல்லங்க மும்பையில்இருந்து காலையிலே சென்னை வந்த ரிஷி வீட்டுக்கு வராமல் ஆபீஸ் போயிட்டானாம் அவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை அதான் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றார் ரோகிணி.
ஆமாம் அவன் அப்படியே உன் மேல பாசத்தை தான் கொட்டி தொலைய போகிறான். நீ இப்பதான் காத்துகிட்டு கிடக்க என்று முனங்கி விட்ட மதிமாறன் சரி என்று சென்றுவிட்டார்.
நீ சாப்டியா ரோகிணி என்று வந்தார் அவரது அன்னை பானுமதி .ரிஷி வரட்டுமே அம்மா அவன் கூட சேர்ந்து சாப்பிடணும்னு ஆசையா இருக்கு என்ற ரோகிணியிடம் நீ போய் சாப்பிடு டி அவன் வந்ததுக்கு அப்புறம் பரிமாறலாம் என்று மகளை அனுப்பி வைத்தார் பானுமதி. என்ன இந்த பையன் இவ்வளவு நேரமா வீட்டுக்கு வராமல் என்ன பண்ணுறான் என்று நினைத்த பானுமதி தன் பேரனின் மொபைல் எண்ணிற்கு ஃபோன் செய்தார்.
சொல்லுங்க பாட்டி என்ற ரிஷி இடம் எங்கே இருக்கிற ரிஷி என்றார் பானுமதி. வீட்டில் தான் என்றான் ரிஷி. அம்மா உனக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கிறாளே நீ வீட்டுக்கு வரலைன்னு சொன்னாள் என்ற பானுமதி இடம் பாட்டி அந்த வீட்டுக்கு நான் வரணும்னு எந்த அவசியமும் இல்லை நான் என்னோட வீட்டுக்கு வந்து இருக்கேன் என்றான் ரிஷி. என்ன ரிஷி இது உனக்காக உன் அம்மா இங்க சாப்பிடாமல் கூட காத்துட்டு இருக்கா நீ இப்படி பேசிட்டு இருக்க என்ற பானுமதி இடம் பாட்டி ப்ளீஸ் எனக்காக யாரும் சாப்பிடாமல் எல்லாம் காத்துட்டு இருக்க வேணாம் அவங்களை போய் சாப்பிட சொல்லுங்க என்னை என் போக்கில் விட்டுருங்களேன் ப்ளீஸ் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் ரிஷி. அவன் அவனுடைய வீட்டுக்கு போயிட்டானாம் அதனால நீ சாப்பிடு அவனுக்கு சாப்பிட்டு கொள்ள தெரியும் என்ற பானுமதி எப்போ தான் இந்த பையன் பொறுப்பா இருக்க போகிறானோ. வேலை விஷயத்துல மட்டும் தான் பொறுப்பு மத்தபடி வீட்டு விசயத்துல சுத்தம் என்று பேரனை திட்டிவிட்டு சென்றுவிட்டார் பானுமதி. ரோகிணிக்கு தான் மனம் கனத்தது.
அமைதியாக தனக்காக உணவை சமைத்துக் கொண்டிருந்தான் ரிஷி. சமைத்து முடித்தவன் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். எதார்த்தமாக திரும்பிட அவன் கண்ணில் ஒயின் பாட்டில் பட்டது .அந்த ஒயின் பாட்டிலை பார்த்தவனுக்கு நேற்றைய நிகழ்வு ஞாபகம் வர தன் தலையில் தானே தட்டிக் கொண்டு அந்த நினைவை அப்புறப்படுத்திவிட்டு படுத்து உறங்க ஆரம்பித்தான்.
உன் வாழ்க்கையில் இந்த ரெண்டு நாளைக்குள்ள என்னென்னமோ நடந்துருச்சே நிலா என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நிலா. ஹாய் என்று அவள் அருகில் ஒரு பெண் வர அவளைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள் நிலா. நான் சுவாதி என்ற பெண்ணிடம் நிலா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
நீ எங்க வேலை பார்க்கிற என்ற சுவாதியிடம் நான் எங்கேயுமே வேலை பார்க்க வில்லை . எனக்கு தெரிஞ்சவங்க மூலமா நாளைக்கு ஒரு இடத்துல வேலைக்கு போகலாம்னு இருக்கேன் என்றால் நிலா .அப்படியா சரி நிலா சப்போஸ் உனக்கு அந்த வேலை கிடைக்கல அப்படின்னா என்கிட்ட சொல்லு நான் வேலை பார்க்கும் என்னோட கார்மெண்ட்ஸ்லயே உனக்கு ஏதாவது வேலை வாங்கி தரேன் என்றாள் சுவாதி. சரிப்பா நானும் ஏதோ கார்மெண்ட்ஸ்ல தான் வேலைக்கு போக போகிறேன் என்ற நிலா தன் கையில் இருந்த விசிட்டிங் கார்டை சுவாதி இடம் காட்டினாள்.
இதே கார்மென்ட்ஸ்ல தான் நான் வேலை பார்க்கிறேன் என்றாள் சுவாதி. நிஜமா தானா என்ற சுவாதியிடம் ஆமாம் நிலா என்றவள் சரி ஓகே அப்போ நானே காலைல உன்னை கூட்டிட்டு போகட்டுமா என்றாள் சுவாதி. இல்லப்பா ஃபர்ஸ்ட் நாள் எனக்கு தெரிஞ்சவங்க வந்து சேர்த்து விடுறேன்னு சொல்லி இருக்காங்க என்ற நிலாவிடம் எங்க கார்மெண்ட்ஸ்ல இப்ப வேலைக்கு ஆள் எடுத்திட்டு தான் இருக்காங்க நானே உன்னை கூட்டிட்டு போனாலும் உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் பரவால்ல யாரோ தெரிஞ்சவங்க வந்து கூட்டிட்டு போறாங்கன்னு சொல்லுற சரி என்றாள் சுவாதி.
நம்ம ஏன் ஒரே தான் அவருக்கு பிரஷர் கொடுக்கணும் அதான் அந்த கார்மெண்ட்ஸ்ல யாரு போனாலும் வேலை உண்டுன்னு சுவாதி சொல்கிறாளே என்று நினைத்த நிலா சரி சுவாதி நான் உன் கூடவே வருகிறேன் என்றாள்.
என்னடா போன் பண்ணி வர சொல்லி இருந்த என்ற அசோக்கிடம் நீ அந்த லேடீஸ் ஹாஸ்டலுக்கு போயிட்டு அந்த பொண்ணு பெயர் என்ன என்னவோ சொன்னாளே ஹான் நிலா அவளை கூட்டிட்டு வந்து நம்ம கார்மென்ட்ஸ்ல ஏதாச்சும் வேலை போட்டு கொடு என்றான் ரிஷி. நான் ஏண்டா போய் அந்த பொண்ணை கூட்டிட்டு போகணும் என்ற அசோக்கிடம் நேத்தே சொன்னேன்ல நான் சொன்னதை மட்டும் செய் என்ற ரிஷி அவனுக்கு நிலாவின் மொபைல் எண்ணை கொடுத்தான் .அந்த பொண்ணு கிட்ட ஏது போன் என்ற அசோகிடம் நான் தான் வாங்கி கொடுத்தேன் இப்போ என்ன என்ற ரிஷி ஒழுங்கா நான் சொன்ன வேலைய மட்டும் செய் என்று சொல்லிவிட்டு கிளம்பி கொண்டிருந்தான். என்னடா அந்த பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா என்ற அசோக்கை பார்த்து கலகலவென சிரித்தான் ரிஷி. டேய் அந்த பொண்ணுக்கு பதினேழு , பதினெட்டு வயசு தான் இருக்கும் சின்ன பொண்ணுடா அவளைப் போய் நான் காதலிக்கிறேனா என்று சிரித்தான் ரிஷி.
நீ இதுவரை எந்த பொண்ணு கிட்டயும் நெருங்கினதே கிடையாது சிரிச்சு பேசி கூட நான் பார்த்ததில்லை. ஒரு நைட் முழுக்க ஒரு பொண்ணு கூட இருந்திருக்க அவளுக்காக என்னைய கூட கழட்டிவிட்டு அவள் கூட பிளைட்ல வந்து இருக்க அவளை ஹாஸ்டல்ல சேர்த்து விட்டு இருக்க. அவளுக்கு தேவையான எல்லாம் வாங்கி கொடுத்து இருக்க. இப்போ வேலையிலும் சேர்த்து விட சொல்லுற அதான் குழப்பமா இருக்கு எங்கே நீ அந்த பொண்ணை விரும்ப ஆரம்பிச்சுட்டியோ என்றான் அசோக். இதோ பாரு அசோக் அந்த பொண்ண ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாத்துனேன் வேணும்னு காப்பாற்ற வில்லை சூழ்நிலை அவளை காப்பாற்றியாச்சு. அவளுக்கு இங்கே யாரையுமே தெரியாது அதனால தான் அவளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன் என்ற ரிஷி கண்டதையும் நினைச்சு கற்பனை பண்ணிக்காம போய் வேலையை பாரு என்றான்.
அசோக் சென்ற பிறகு ரிஷி யோசித்து பார்த்தான் நான் ஏன் அந்த பொண்ணுக்கு இதை எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று நினைத்தவனின் மனமோ அவளுடன் இருந்த அந்த நெருக்கமான சூழ்நிலை ஞாபகத்துக்கு வர என்ன இது தப்பு தப்பா யோசிக்கிறேன். அன்னைக்கு நடந்தது அந்த பொண்ணு போதையில் ஏதோ தெரியாமல் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டிருந்தான். அவளுக்கு தான் போதை உனக்கு அவள் மேல போதையா என்ற மனசாட்சியை அடக்கியவன் வேலையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.
ஹாஸ்டல் வாசலில் தனது காரை நிறுத்திய அசோக் நிலாவின் எண்ணிற்கு போன் செய்து பார்க்க அவளோ போனை எடுத்த பாடு இல்லை. என்ன இது இந்த பொண்ணு என்ன போனை கூட எடுக்க மாட்டேங்குது என்று நினைத்த அசோக் ஹாஸ்டலில் சென்று விசாரிக்க அந்த பெண் தனது அறையில் கூட இருந்த தோழியுடன் வெளியே சென்று விட்டதாக கூறவும் இவன்தான் இந்த பொண்ணுக்காக மெனக்கெட்டுட்டு இருக்கான் . அந்த பொண்ணு பாரு வந்த மறுநாளே ரூம் மேட் கூட வெளியில போய்ட்டாள் என்று நிலாவை திட்டிக் கொண்டிருந்த அசோக் அவளது எண்ணிற்கு மீண்டும் மீண்டும் போன் செய்ய போனை அட்டென்ட் செய்தாள் நிலா.
ஹலோ என்ற நிலாவிடம் நிலாவா என்றான் அசோக். ஆமாம் நீங்க என்ற நிலாவிடம் ரிஷியோட ஃப்ரெண்ட். உனக்கு அன்னைக்கு டிரஸ் வாங்கி கொடுத்தேனே என்ற அசோக்கிடம் ஆமாம் சொல்லுங்க என்றாள் நிலா .
எங்கே இருக்கீங்க உங்க ஹாஸ்டல் வாசல்ல தான் நான் இருக்கேன் என்ற அசோக்கிடம் அவங்க கொடுத்த விசிட்டிங் கார்டுல உள்ள கார்மெண்ட்ஸ் ல தான் இருக்கேன் என்றாள் நிலா .
எப்படி போனீங்க என்ற அசோக்கிடம் என்னுடைய ரூம் மேட் கூட இங்கே தான் வேலை பார்க்கிறாங்களாம். அவங்கதான் இங்க வேலைக்கு ஆள் எடுக்குறாங்க நான் வேண்டும் என்றால் உன்னை சேர்த்து விடுகிறேன் என்று சொன்னாங்க ஏற்கனவே ரிஷி சாருக்கு நிறைய கஷ்டம் கொடுத்துட்டேன் .அதனாலதான் நான் என் பிரண்டு கூட வந்துட்டேன் என்றாள் நிலா. சரி பரவாயில்லை என்ற அசோக் போனை வைத்து விட்டான்.
…. தொடரும்….