12. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.7
(60)

நெருக்கம் – 12

காருக்குள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தவள் வெகு நேரத்தின் பின்பே தன்னுடைய விழிகளை மலர்த்தினாள்.

அடுத்த கணமே அந்த இடம் அவளுக்கு பழக்கப்பட்ட தன்னுடைய அறையாக இல்லாது போக உடனடியாக வந்து ஒட்டிக்கொண்டது அதிர்ச்சியும் அச்சமும்.

தான் எங்கே இருக்கிறோம் எனப் பதறி எழுந்து கொள்ள முயன்றவள் அப்போதுதான் தனக்கு திருமணமானதும் குருஷேத்திரனுடைய நினைவுகளும் சட்டென மூளையை ஆக்கிரமிக்க நிதர்சனம் புரிந்து சற்று நிம்மதியாக ஆசுவாசமடைந்தாள் அவள்.

நீண்ட தூரப் பயணமாக இருந்ததால் அசந்து உறங்கி விட்டோம் என்பது புரிய எங்கே அவன் எனத் தன்னுடைய கணவனைத் தேடினாள் அபர்ணா.

குருஷேத்திரனைத் தேடியவளுக்கு தலை வலியே மிச்சம்.

காருக்கு வெளியே கைகளைக் கட்டியவாறு ஒருவன் நிற்பதைக் கண்டவள் மெல்ல எழுந்து காரைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

தன்னை இப்படியே காருக்குள் விட்டு அவன் எங்கே சென்று விட்டான்..?

அவன் எப்படி தன்னை தனியாக விட்டுச் செல்லலாம் என எண்ணி அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

முதல் முறையாக அவனுடைய வீட்டிற்கு வரும் என்னை இப்படித்தான் வரவேற்பானா..?

என்னை எழுப்பி அழைத்துச் சென்றிருக்கலாமே…

இங்கு எனக்கு என்ன தெரியும்..? என எண்ணியவளுக்கு தலை விண்ணென்று வலித்தது.

“வணக்கம் மேடம்…”

“வ… வணக்கம்…”

“நீங்க எழுந்ததும் செகண்ட் ப்ளோர்ல இருக்கிற ஃபர்ஸ்ட் ரூமுக்கு சார் உங்களை வரச் சொன்னாரு…” என தன்னுடைய வேலையை செவ்வனவே ட்ரைவர் செய்து முடிக்க சரி என்பது போல அவரிடம் தலையசைத்தவளுக்கு அவனுடைய வீட்டைப் பார்த்ததும் தலை சுற்றுவது போல இருந்தது.

மாளிகை மாதிரி இருக்கும் இந்த வீட்டுக்குள் அவனைக் கண்டுபிடிக்க வேறு வேண்டுமா..?
எந்த புதுமணப் பெண்ணும் இப்படி ஒரு வரவேற்பை அனுபவித்திருக்க மாட்டாள் என எண்ணியவள் பெரு மூச்சோடு அந்த வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஆங்காங்கே வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள் அவளுடைய கண்ணில் பட அவளுக்கு கூச்சமாக இருந்தது.

மேலே செல்வதற்கு மின் உயர்த்தி இருப்பதைக் கண்டவள் அதை தவிர்த்து விட்டு மெல்ல மெல்ல படிகளில் ஏறத் தொடங்கினாள்.

அங்கே ஒருத்தி நடந்து செல்வதையே கவனிக்காதது போல வேலையாட்கள் தங்களுடைய வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்க சட்டென அவளைத் தொற்றிக் கொண்டது தனிமை.

எவ்வளவோ திடப்படுத்த முயன்றும் மனம் சோர்வடைந்தது.

அவன் ஏன் தன்னைக் காரில் அம்போவென விட்டுச் சென்றான் என்ற கேள்வியே அவளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்க தலையைக் குலுக்கி அந்த சிந்தனைகளில் இருந்து வெளியே வந்தவள் இரண்டாவது தளத்திலிருந்த முதலாவது அறைக்கு முன்பு வந்து நின்றாள்.

அவனுடைய பணத்தின் செழிமை வீட்டின் ஆடம்பரத்தில் நன்றாகவே தெரிந்தது.

தயக்கத்தோடு அந்த அறையின் கதவைத் தட்டிப் பார்த்தாள் அவள்.

அவளுடைய மென்மையான தட்டுதலுக்கு எந்தப் பதிலும் கிடைக்காது போக,
‘நான் மட்டும் ஹல்க்கா இருந்தா ஒரே அடியில இந்தக் கதவை உடைச்சிடுவேன்…” என எரிச்சலோடு எண்ணிக் கொண்டாள் அவள்.

‘ஆண்டவா முதல் நாளே இவ்வளவு மோசமா இருக்கே… இவன் கூட என்னோட வாழ்க்கை எப்படி போகப்போகுதோ….

என்னைப் பாத்து பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவன் பண்ற வேலை மாதிரியா இருக்கு இது..?

சொல்லப்போனா அவன் என்ன பார்க்கிறதே கிடையாது…

ஆனா இன்னைக்கு அந்த ரூம்ல வச்சு கிஸ் பண்ணானே..!???

காதல் இல்லாம எப்படி கிஸ் பண்ண முடியும்..?

ஒருவேளை ரொம்ப டயர்டா இருக்குன்னு என்ன டிஸ்டர்ப் பண்ணாம அவன் அவனோட ரூம்ல வந்து தூங்கிட்டானோ..?

எஸ் அப்படித்தான் இருக்கும் அக்கறை இல்லாம விட்டுட்டு வந்துருக்க மாட்டான்… நான் நல்லா அசந்து தூங்கிட்டு இருக்கிறதால என்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சிருப்பான் போல..’ என தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவளுக்கு முகம் நொடியில் மலர்ந்தது.

இம்முறை சற்றே பலமாகக் கதவைத் தட்டியவள் அதற்கும் பதில் இன்றிப் போக கதவைத் தள்ளித் திறந்து பார்த்தாள்.

உள்ளே தாளிடப்படாத அவனுடைய அறைக் கதவு திறந்து கொள்ள உள்ளுக்குள் ஒரு பெரிய மாளிகையே விரிந்தாற் போல இருந்தது.

‘ஆத்தீஈஈ… இவன் என்ன ரூமுக்குள்ள இன்னொரு வீடு கட்டி வச்சிருக்கான்..?’ என அதிர்ந்தவாறு உள்ளே நுழைந்தவள் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்திருந்து குரு குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் இவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

‘இவன் குடிப்பானா..?’

‘அய்யய்யோ குடிகாரனையா நாம கல்யாணம் பண்ணி இருக்கோம்..?’

கலங்கிப் போனாள் அவள்.

மீண்டும் மனதை வெறுமை சூழ்ந்தது.

இனி என்ன செய்வது..?

மெல்ல நடந்து சென்று அவன் முன்னே நின்றாள் அபர்ணா.

அப்போதுதான் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“ஓ வந்…துட்டியா..?” எனக் கேட்டான்.

“ம்ம்…”

“குட்… குட்…”

“என்ன ஏன் கார்லயே விட்டுட்டு வந்துட்டீங்க..?” சற்றே கோபமாக வெளிவந்தன அவளுடைய வார்த்தைகள்.

“அப்போ அங்கேயே விட்டுட்டு வராம உன்ன அப்படியே தூக்கிட்டு வந்திருக்கணும்னு சொல்ல வர்றியா?” எனக் கேட்டவாறு தன் கரத்தில் இருந்த போத்தலை வைத்துவிட்டு எழுந்து நின்றான் குருஷேத்திரன்.

“இ.. இல்ல இல்லவே இல்ல..”

“தென்..?”

“என்ன எழுப்பி இருக்கலாமே..?”

“உன்ன எழுப்பாததால எதுவும் குறைஞ்சு போ… போகலையே…?”

அவனுடைய குரல் சற்று தடுமாறி ஒலித்தது.

வெறுத்துப் போனது அவளுக்கு.

இவ்வளவு ரணகளத்திலும் கேட்ட கேள்விக்கெல்லாம் ஒழுங்காக பதில் சொல்கிறானே என எண்ணியது அவளுடைய மனம்.

அடுத்த கணமே அவன் தெளிவில்லாமல் போதையில் இருப்பதால்தான் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறானோ என்றும் எண்ணியவள் இவனோடு போராடுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தன்னைக் கவனிப்போம் என நினைத்தாள்.

“அ….ப….ர்ர்….ணா….”

ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து அவளை அழைத்தான் குருஷேத்திரன்.

“ஹான்..?”

“ப்ரஷ் ஆகிட்டு வா…” என்றான் அவன்
சரி என தலையசைத்தாள் அவள்.

“அந்த வார்ட்ரோப்ல இருக்கிறதெல்லாம் உனக்குத்தான்..” என அவன் கூறியதும் புருவங்களை சுருக்கியவாறு அதன் அருகில் சென்று திறந்து பார்த்தவளுக்கு விழிகள் விரிந்தன.

ஒரு பெண்ணுக்குத் தேவையான அனைத்தும் அதனுள் இருந்தது.

தன்னுடைய உடல் அளவுக்கு ஏற்ற ஆடைகளை அவன் வாங்கி வைத்திருப்பதைக் கண்டு மனதிற்குள் மெச்சிக் கொண்டவள், அவனுக்கு என் மேல காதல் இருக்கு..” என சிறுபிள்ளைத்தனமாக எண்ணிக் கொண்டாள்.

உள்ளாடை தொடக்கம் இரவு உடை அழகிய புடவைகள் என அனைத்தும் இருப்பதைக் கண்டவர் அவற்றிலிருந்து சாதாரண இரவாடை ஒன்றை எடுத்துக் கொண்டாள்
வெகு சிரமப்பட்டு நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்தவள் தலை அலங்காரத்தை நீக்கிவிட்டுத் திரும்ப, அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் குருஷேத்திரன்.

அந்தப் பார்வையில் உள்ளூர பயம் பற்றிக்கொண்டது அவளுக்கு.

‘போடா அரைகிழவா…’ என ஏதோ ஒரு வேகத்தில் தனக்கு மட்டும் கேட்கும்படி அவனைத் திட்டிவிட்டு அந்த மிகப்பெரிய அறையில் நின்ற இடத்தில் இருந்தே சுற்றிவரப் பார்த்தவள் பாத்ரூமைக் கண்டு கொண்டதும் நேரே அங்கே சென்றாள்.

குளித்து முடித்து ஆடையை மாற்றிவிட்டு வெளியே வந்தவள் மிகப்பெரிய பஞ்சு மெத்தையில் படுத்திருந்த குருஷேத்திரனைக் கண்டதும் அவன் அருகிலா தூங்க வேண்டும் என்ற புதுக் கேள்வி எழுந்து அவளைக் குடையத் தொடங்கியது.

‘ஐயோ என்னால முடியாது..’ அலறியது அவளுடைய சிறுபிள்ளை மனம்.

சடாரென தன்னுடைய பார்வையை சோபாவை நோக்கித் திருப்பியவள் ‘இதுவே பெரிய பெட் மாதிரிதான் இருக்கு…. இதுலயே படுத்து தூங்கிடலாம்…” என நினைத்தவாறு படுக்கையைத் தாண்டி சோபாவை நெருங்கியவளை,

“நில்லு…” என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்தினான் அவன்.

“எ… என்ன..?”

“இங்க வா…”

“ஏ… ஏன்…?”

“என்ன ஏன்..? உனக்கு நான் எதுக்காக கூப்பிடுறேன்னு தெரியாதா..?”

“இ… இல்ல தெரியாது… எதுக்காக கூப்பிடுறீங்க…?” எனக் கேட்டவளுக்கு வார்த்தைகள் திக்கு முக்காடி வெளியே வந்தன.

“இனாஃப் இடியட்.. பேசிப் பேசி டைம் வேஸ்ட் பண்ணாம பக்கத்துல வந்து படு..” என அவன் கூறியதும் திணறிப் போனாள் அவள்.

அவன் இடியட் எனத் திட்டியது அவளுடைய மனதை வெகுவாக காயப்படுத்தியது.

அவளுடைய வீட்டில் கூட யாரும் இப்படி எல்லாம் அவளைத் திட்டுவதில்லை அல்லவா..?

பத்மாவின் திட்டில் அன்பு கலந்த கண்டிப்பு மட்டுமே இருக்கும் என்பதை உணர்ந்து வைத்திருந்தவளுக்கு கணவன் திட்டியதும் மனம் சற்றே சுணங்கியது.

அதற்குள் அவளுடைய மனசாட்சியோ,
‘அடிப்பாவி இப்போ அவன் உன்னை இடியட்னு திட்டியதா முக்கியம்..? அவன் உன்ன எதுக்கு கூப்பிடுறான்னு உனக்குப் புரியுதா இல்லையா..?’ என விம் போட்டு விளக்காத குறையாக அலறியவாறு கூறிவிட்டுச் சென்றது.

திருமணம் எனக் கூறியதில் இருந்து அவள் எதற்கு பயந்து கொண்டு இருந்தாளோ அது நடக்கப் போகின்றது எனப் புரிந்ததும் மூச்சடைத்துப் போனவளாய் அசையாமல் நின்றாள் அவள்.

அவனோ பொறுமை இழந்தவனாக எழுந்து அவள் அருகே வந்தவன் அழுத்தமாக அவளுடைய கரத்தைப் பிடித்துக் கொள்ள தடுமாறி அவனைப் பார்த்தவள்,

“எனக்கு ரொம்ப ப.. பயமா இருக்கு… கொஞ்சம் டைம் கொடுக்குறீங்களா..?” எனக் கேட்டாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளை இழுத்து வந்து படுக்கையில் தோள்களைப் பற்றி அமர வைத்தவன் தான் அணிந்திருந்த கையில்லாத ஆர்ம் கட் பனயனை தலை வழியே கழற்றத் தொடங்க இவளுக்கோ பயத்தில் இதயம் வாய்க்குள் வந்து துடிக்க தொடங்கியது.

“ப்… ப்ளீஸ்.. இப்.. இப்போ இதெல்லாம் வே.. வேணாமே… நான் நாளைக்கு காலேஜ் போ.. போகணும்…” என அவனுக்குப் புரிய வைத்துவிடும் வேகத்தோடு அவள் பேச,

அசைந்து அசைந்து பேசிக் கொண்டிருந்த அவளுடைய இதழ்களை தன்னுடைய விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டவன்,

“நீ மைனரா.. மேஜரா..?” எனக் கேட்டான்.

“ஹாங்..?” பதறினாள் அவள்.

“ப்ச்… நீ மைனரா மேஜரான்னு கேட்டேன்…” என அத்தனை போதையிலும் அவன் அழுத்தம் திருத்தமாகக் கேட்க,

“மே…மேஜர்..” என படபடப்போடு கூறியவளின் கன்னத்தில் மெல்லத் தட்டியவன்,

“மேஜர்தானே அப்புறம் என்ன..? பெட்ல படு…” என்றதும் அவளுக்கோ சட்டென கண்களில் கண்ணீர் ததும்பியது.

“வே… வேணாம்ம்… வேணாம்…”

“இட்ஸ் ஓக்கே படு…” என்றான் அவன்.

🔥🔥💜🔥🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 60

No votes so far! Be the first to rate this post.

1 thought on “12. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!