வயசு கம்மிதான் ஒரு 25 வயசு இருக்குமா என்ற பாரதியை பார்த்து சிரித்த அசோக் அந்த பொண்ணோட வயசு 18 இப்பதான் மேஜர் என்றான். என்ன 18 வயசு பொண்ணு இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாளா என்ன சொல்லுற அசோக் என்ற பாரதியிடம் நான் என்ன பொய்யாமா சொல்கிறேன் உண்மைதான் அந்த பொண்ணுக்கு இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டாள்.
இனி என் நண்பன் ரிஷி சிங்கிள் இல்லை ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு அங்கிள் ஆகப் போகிறான் என்ற அசோக்கை பார்த்து முறைத்த பாரதி நீ ஆல்ரெடி அங்கிள் தான் மூடிட்டு கல்யாண வேலையை பாரு என்றாள் .
இந்த பொண்டாட்டிங்களுக்கு எப்பவுமே புருஷனை டம்மி பீஸ் ஆகிறது தான் விருப்பம் போல என்ற அசோக்கை முறைத்த பாரதி ஏன் உன் மனசுல பெரிய டெரர் பீஸ்னு நினைப்பு வேற இருக்குதோ கும்மிருவேன் கும்மி என்றதும் வராத போனை அட்டன் செய்தவன் ஹான் சொல்லுங்க ஜி ரிஷிக்கு தான் கல்யாணம் நான் ஆல்ரெடி மேரீட் என்று சொல்லிக் கொண்டே இடத்தை காலி செய்தான் அசோக்.
என்ன நிலா ரெடியா என்ற அசோக்கிடம் போகலாமே என்ற நிலா ஆமாம் உங்க வொய்ப் எங்கே அவங்க வரவில்லையா அங்கிள் என்றாள் நிலா.
அவள் வீட்ல இருக்காள் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காள் போகலாமா என்ற அசோக்கிடம் ஓகே அங்கிள் போகலாம் என்றவள் அந்த காரில் அமர்ந்தாள்.
என்னது வார்த்தைக்கு வார்த்தை அங்கிள்னு கூப்பிட்டுட்டு இருக்க என்றான் அசோக். கல்யாணம் ஆன அங்கிளை அங்கிள்னு கூப்பிடாமல் பின்னே என்ன ட்விங்கிள்னா கூப்பிடுவாங்க என்ற நிலாவை முறைத்தவன் சரியான வாயாடியா இருப்ப போல என்றான் .
எஸ் அங்கிள் என்ற நிலாவை முறைத்தவன் வீடு வந்துருச்சு இறங்கு என்றான் . நீங்க தான் உள்ளே கூட்டிட்டு போகணும் இது உங்க வீடு தானே நானே உள்ள போனால் உங்க வொய்ஃப் என்னை பிச்சைக்காரின்னு நினைச்சு துரத்தி விட்டுட்டாங்கன்னா என்ற நிலாவை பார்த்து முறைத்தவன் நீ என்ன பிச்சைக்காரியா கோடீஸ்வரனோட பொண்டாட்டி ஆக போறவள் என்ற அசோக்கை பார்த்து சிரித்தவள் இன்னும் ஆக வில்லையே இப்போதைக்கு பிச்சைக்காரி தானே அதை தான் சொன்னேன் என்றாள் நிலா .
லூசு எறங்கு என்று அவளை அழைத்துக்கொண்டு வந்தான் அசோக். பாரதி என்று அழைத்திட வாசலுக்கு வந்த பாரதி நிலாவைக் கண்டு யார் இந்த பொண்ணு என்றாள் .
உன் அண்ணன் ரிசி காட்டிக்க போற பொண்ணு என்று அசோக் கூறியதும் பாரதி நிலாவை ஆச்சரியமாக பார்த்தாள்.
என்ன சொல்ற அசோக் நீ சொன்னதை விட இவள் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே. இவள் எப்படி ரிஷி அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க முடியும் என்றாள் பாரதி.
ஏன் முடியாது உங்க ரிஷி அண்ணா கூட பார்க்க சின்ன வயசு பையன் மாதிரி தான் இருக்காரு இந்த அங்கிள் மாதிரி வயசான ஆளைப் போலவா தெரியுறாரு என்று நிலா கூறியதும் பாரதி படக்கென்று சிரித்து விட்டாள் .
உன் தலையில் கொட்டிடுவேன் சும்மா சும்மா அங்கிள் அங்கிள் என்று அசிங்கப்படுத்தி கிட்டு இருந்தினா என்ற அசோக்கை பார்த்து முறைத்தவள் உங்க ஃப்ரெண்ட்டை கூட தான் நான் அங்கிள்னு கூப்பிடுவேன் அவரே ஒன்றும் சொல்ல மாட்டாரு இவ்ளோக்கும் அவர் கல்யாணம் ஆகாத அங்கிள். நீங்க கல்யாணம் ஆன அங்கிள் என்று மீண்டும் மீண்டும் அங்கிள் அங்கிள் என்று கூறியே அவனை சீண்டிக் கொண்டிருந்தாள் நிலா.
கரெக்டாதான் சொல்கிறாள் அசோக் நீ அங்கிள் தானே என்ற பாரதியை பார்த்து அவர் அங்கிள்னா அங்கிளோட மனைவி நீங்க ஆன்ட்டி தானே ஆன்ட்டி என்றாள் நிலா .
ஆண்ட்டியா அடிப்பாவி ஒழுங்கு மரியாதையா அக்கானு சொல்லு அது என்ன ஆன்ட்டி என்ற பாரதியிடம் உங்க ஹஸ்பண்ட்டை அங்கிள்னு சொல்லும் போது மட்டும் பெக்க பெக்குனு சிரிச்சீங்க உங்களை ஆன்டின்னு சொன்னால் மட்டும் கோவம் வருதா நீங்க ஆன்ட்டிதான் அப்படித் தான் நான் கூப்பிடுவேன் என்றாள் நிலா .
சரியான வாயாடி தான் வா உள்ள வா முதல்ல என்ற பாரதி ஒரு நிமிஷம் நில்லு என்று வீட்டுக்குள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தாள் . எதுக்கு ஆரத்தி நான் என் ஹஸ்பண்ட் கூட உங்க வீட்டுக்கு வருவேன் பாத்தீங்களா அப்போ ஆரத்தி எடுங்க இப்போ எல்லாம் எதுக்கு எடுக்குறீங்க என்ற நிலாவிடம் வாயை மூடிட்டு நில்லுடி என்றாள் பாரதி.
சரி சரி எடுத்துக்கோங்க என்ற நிலாவை பார்த்து சிரித்துவிட்டு ஆரத்தி எடுத்து அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் பாரதி.
உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றபடி அந்த வீட்டிற்குள் வந்தான் ரிஷி. யார்கிட்ட அங்கிள் என்ற நிலாவை முறைத்தவன் உன்கிட்ட தான் வேற யார்கிட்ட என்றான் ரிஷி கோபமாக.
சரி பேசுங்க என்றவனிடம் தனியா பேசணும் என்கூட வா என்று அவளை அழைத்துச் சென்றான். எங்கே போகிறோம் ஷாப்பிங் போகிறோமா என்ற நிலாவை முறைத்தவன் எதுக்கு ஷாப்பிங் என்றான்.
நம்ம கல்யாண பர்ச்சசிங் என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் நிலா .அவளை திட்ட கூட மனம் இல்லாதவன் காரை ஒரு பார்க்கில் நிறுத்தினான்.
சொல்லு எதுக்கு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்ச என்றான் ரிஷி. எதுக்கு சம்மதிச்சுன்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க தான் சம்மதிச்சேன் என்ற நிலாவை முறைத்தவன் உனக்கும் எனக்கும் பதினைந்து வயசு வித்தியாசம் நாம் எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது என்றான் ரிஷி .
அங்கிள் ஏஜ் இஸ் ஜஸ்ட் நம்பர் யூ லுக் ஷோ ஹாட் அண்ட் ஹேன்ட்சம் என்ற நிலாவை முறைத்தவன் ஏதோ சொல்ல வாய் எடுக்க இதோ பாருங்க எனக்கு உங்களை புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன் உங்களுக்கும் என்னை பிடிச்சதுனால தான் என்னையவே கல்யாணம் பண்ணிக்கணும்னு உங்க பிரண்டு கிட்ட சொல்லி இருக்கீங்க. அப்புறம் என்ன எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம் என்றாள் நிலா.
அவளை முறைத்து விட்டு கிளம்பு என்றான் . எங்கே ஷாப்பிங்கா என்ற நிலாவை மீண்டும் முறைத்து தள்ளினான் ரிஷி.
அவளை நேராக அசோக்கின் வீட்டில் இறக்கி விட்டவன் உன்னோட லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வா என்றான். எதுக்கு என்றவளிடம் சொன்னதை மட்டும் செய் என்று கூறினான்.
வீட்டிற்குள் வந்தாள் நிலா . என்ன நிலா நீ மட்டும் வந்திருக்க அண்ணா எங்கேஎன்ற பாரதியிடம் உங்க அண்ணா என்னோட லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வர சொன்னாரு என்றாள் நிலா . எங்கே வர சொன்னாரு என்ற பாரதி இரு நான் அவரை அழைச்சிட்டு வரேன் என்றாள் .
இல்லை பரவாயில்லை ஆன்ட்டி நீங்க இருங்க நான் போகிறேன் என்ற நிலா தனது லக்கேஜை எடுத்துக்கொண்டு சென்றாள்.
இப்போ என்னை எங்கே கூட்டிட்டு போக போறீங்க என்ற நிலாவை அமைதியாக பார்த்துவிட்டு திரும்பி சாலையில் கவனத்தை செலுத்தினான் ரிஷி.
திரும்ப என்னை ஹாஸ்டல்ல கொண்டு போய் விடப் போறீங்களா? அப்போ நிஜமாவே உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா என்று கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தாள் நிலா.
ஷட் அப் நிலா கொஞ்ச நேரம் வாயங மூடிட்டு வரியா எதுக்கு நோய் நொய்ன்னு பேசிட்டு இருக்க என்று கோபமாக கூறியவனை பாவமாக பார்த்து வைத்தாள் நிலா .
இந்த அங்கிள் நல்லவர் தானே என்ன திடீர்னு கோபக்காரரா மாறிட்டாரு என்று நினைத்துக் கொண்டு அமைதியாக வந்தாள் நிலா . இது ஹாஸ்டல் மாதிரி தெரியலையே ஏதோ அபார்ட்மெண்ட் மாதிரி இருக்கு என்ற நிலாவை முறைத்தவன் இறங்கி வருகிறாயா, இல்லையா என்றிட வரேன் வரேன் என்ற நிலாவும் அவனுடன் நடந்து சென்றாள் .
கல்யாணம் ஒரு வாரத்தில் இல்லை நாளைக்கே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் இது தான் நம்ம வீடு என்று கூறியவனிடம் நீங்க நம்ம கார்மெண்ட்ஸ் ஓனர் தானே என்றாள் நிலா.
ஆமாம் என்ற ரிஷியிடம் அப்போ உங்களுக்கு பெரிய பங்களா இருக்கும்ன்னு நான் நினைச்சேன் ஆனால் இது என்ன ஃப்ளாட்ல தங்கி இருக்கீங்க என்ற நிலாவை முறைத்தவன் இந்த பிளாட்டோட வேல்யூ என்ன தெரியுமா உனக்கு என்றான்.
தெரியாது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்ற நிலாவை முறைத்தவன் இது தான் இப்போதைக்கு உன்னோட ரூம் நாளையில் இருந்து அது நம்ம ரூம் இப்போ என்னுடைய ரூம் என்று கூறியவன் அவளை அந்த அறையில் இருக்க சொல்லிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டான்.
என்ன நிலா இந்த அங்கிள் ரொம்ப ஓவரா தான் பண்ணிக்கிட்டு இருக்காரு ஒரு வாரத்துல கல்யாணம்னு சொல்லிட்டு இப்போ நாளைக்கே கல்யாணம்னு சொல்லுறாங்க ஷாப்பிங் கூட போகலை ரொம்ப பேட் என்று கூறிக் கொண்டிருந்தவளின் முன்னே வந்து நின்றான் ரிஷி .
திடீரென்று அவனை கண்டவள் நாக்கை கடித்துக் கொண்டிருக்க ஷாப்பிங் போய் என்ன வாங்கணும் என்றான் ரிஷி நாளைக்கு கல்யாணம் அப்படி என்றால் புடவை, நகை என்று அவள் தயங்கிட நீ கேட்ட புடவை, நகை பிடி என்று ஒரு பார்சலை அவளிடம் கொடுத்தான் .
எப்போ வாங்குனீங்க என்று நிலாவிடம் அது உனக்கு அவசியம் இல்லை நாளைக்கு நமக்கு கல்யாணம் அப்போ இந்த காஸ்ட்யூம் எல்லாம் நீ போட்டுக்கோ அவ்வளவுதான் என்று கூறியவன் புடவை கட்ட தெரியும் தானே என்றான்.
தெரியாதே என்ற நிலாவை பார்த்து தலையில் அடித்தவன் காலையில் பாரதி வந்துருவாள். வந்து உனக்கு புடவை கட்டிவிடுவது மேக்கப் போடுவது எல்லாம் பார்த்துப்பாள் ஒன்னும் பிரச்சனை இல்லை என்ற ரிஷி தன்னறைக்கு சென்று விட அங்கிள் ஒரு நிமிஷம் என்றாள் நிலா .
என்ன என்றவனிடம் எனக்கு பசிக்குது என்றாள் நிலா. பசிச்சா போய் சமைச்சு சாப்பிடு கிச்சன்ல சமைக்க தேவையான எல்லா ஐட்டமும் இருக்கு என்ற ரிஷியை பாவமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் நிலா . என்ன இப்படி நின்றால் என்ன அர்த்தம் என்ற அ
ரிஷியிடம் சத்தியமா எனக்கு சமைக்க தெரியாது என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு.
… தொடரும்…