நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…1

4.2
(6)

அழகான காலை வேளையில் அந்த பேருந்து அந்த கிராமத்திற்குள் நுழைந்தது. செம்மன்குடி எல்லாம் இறங்குங்க என்ற நடத்துநரின் குரலில் கண் விழித்தனர் வேல்விழி, கயல்விழி இருவரும். ஏய் ஊரு வந்துருச்சுடி என்ற கயல்விழியைப் பார்த்து புன்னகை புரிந்தவள் வா போகலாம் என்று தங்களுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர்.

நம்ம ஊரு காத்தே தனிடி சிட்டியில் எப்போ பாரு பொல்யூசன், டிராபிக் என்ற கயல்விழியைப் பார்த்து சிரித்தவள் வாடி வீட்டுக்கு போகலாம் என்றாள் வேல்விழி.

வேல்விழி, கயல்விழி இருவரும் சகோதரிகள். வேல்விழியின் அப்பா ராஜசேகரனின் தம்பி விஜயசேகரனின் மகள் கயல்விழி. வேல்விழியின் சித்தப்பா மகள் தான் கயல்விழி.

இருவரும் அந்த வீட்டின் கதவைத் தட்டிட கதவைத் திறந்தார் ராஜேஸ்வரி. அம்மா என்று வேல்விழி தன் அம்மாவை கட்டிக் கொண்டாள். வாம்மா கயலு, வாடி வேலு என்றவர் மகள்கள் இருவரையும்  வரவேற்றவர் போங்க போயி குளிங்க குளிச்சுட்டு ரெடியாகுங்க கோவிலுக்கு போகனும்ல என்றதும் சரிமா என்று இருவரும் தங்களின் அறைக்கு சென்றனர்.

கயல் வந்துட்டியாடி என்று வந்தார் விஜயலஷ்மி. அம்மா என்று  வந்த கயல்விழியைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டவர் வாடி என்று அவளைக் கையோடு அழைத்துச் சென்றார்.

வேல்விழி குளிக்கச் சென்றாள். வேலு இங்கே புடவை , நகை எல்லாம் இருக்கு எடுத்து கட்டிக்கோ என்ற ராஜேஸ்வரி சமையலறைக்குள் நுழைந்தார். என்ன சமையல் என்று வந்த ராஜசேகரனிடம் வேலுவும், கயலும் வந்திருக்காங்களே அதான் பருத்திப்பால் செய்துட்டு இருக்கேங்க என்றவர் தம்பி சுரேந்திரா என்றிட என்னங்கம்மா என்று வந்தான் சுரேந்திரன். நான் கேட்டது என்றவரிடம்  கயலுக்கு பிடிக்குமேனு நாட்டுக்கோழியும், வேலுக்கு பிடிக்குமேனு ஆட்டுக்கறியும் ரெடி. சித்தப்பாவும், நரேந்திரனும் ஆடு உறிச்சுட்டு இருக்காங்க இந்தாங்க இரத்தம் என்று கொடுத்து விட்டு சென்றான் சுரேந்திரன்.

அத்தை முதல்ல இந்த காபியை மாமாவுக்கு கொடுங்க என்று வந்தாள் ரேணுகா. நீயே கொடு ரேணு என்ற ராஜேஸ்வரி மகள்களுக்கு இட்லிக்கு இரத்தக் கூட்டு ரெடி பண்ண ஆரம்பித்தார்.

மசாலா அரைத்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியிடம் இந்த வீட்டில் எல்லா வேளையும் நீங்க ஒருத்தங்க தான் பார்த்துட்டு இருக்கிங்க சின்ன அத்தையை என்னைக்காவது வேலை ஏவுறிங்களா என்று சலித்துக் கொண்ட ரேணுகாவைப் பார்த்து சிரித்த ராஜேஸ்வரி அதனால என்னம்மா நம்ம வீட்டு வேலை தானே. நான் பார்த்தால் என்ன விஜி பார்த்தால் என்ன என்ற ராஜேஸ்வரி வேலையை கவனிக்க என்ன இங்கே மாமியாரும், மருமகளும் என்னைப் பத்தி பேசிட்டு இருக்கிங்க போல என்று வந்தார் விஜயலஷ்மி.

ஒன்றும் இல்லை விஜி அத்தை இன்னும் அறையை விட்டு வரவில்லை கொஞ்சம் என்னனு பாரேன் என்ற ராஜேஸ்வரியிடம் நான் இன்னுமா எழுந்திருக்காம இருக்கப் போறேன் என்று வந்தார் வடிவுடைநாயகி. காலையிலே நம்ம கோவிலுக்குப் போயிருந்தேன் அந்த ஆத்தா அமோகமா வளர்ந்திருக்கா என்றவர் என் பேத்திங்க எங்கே என்றார்.

நானெல்லாம் உங்க பேத்தி இல்லையோ என்ற ரேணுகாவிடம் என்ன தான் மகள் வயிற்று பேத்தியா இருந்தாலும் என் வேல்விழி இடத்திற்கு யாரும் வர முடியாதுடி என்ற வடிவுடைநாயகியை முறைத்து விட்டு ரேணு காலை பிடிச்சு விடுத்தானு வா கிழவி உன் காலை உடைச்சு விடுறேன் என்று முறைத்த ரேணுகா தன் மாமியார் ராஜேஸ்வரியின் அருகில் சென்று விட்டாள்.

அப்பத்தா என்று வந்தாள் வேல்விழி. என் செல்லக்குட்டி என் ராசாத்தி என்று பேத்தியின் நெற்றியில் முத்தமிட்டவர் என்னத்தா சேலை கட்டலையா என்றார். ஐயோ பாட்டி பட்டுச்சேலை ரொம்ப கனமா இருக்கும் எனக்கு பாவாடை தாவணி தான் செட் ஆகும் என்றாள் வேல்விழி.

அம்மா நீங்க கொடுத்த புடவை நகை எல்லாம் பீரோவிலே வச்சுட்டேன் என்றவள் அப்பத்தா நான் எப்படி இருக்கேன் என்றாள் வேல்விழி. என் ராசாத்திக்கு என்ன குறைச்சல் நீ அழகுச் சிலைடி என் பெத்தாரு என்று கொஞ்சினார் வடிவுடைநாயகி.

என்ன கிழவி அவளை மட்டும் கொஞ்சுற என்று வந்தாள் கயல்விழி. வாயாடிக் கழுதை நீயும், உன் மாமன் மகளும் என்னைக்காவது அப்பத்தா, அம்மாச்சினு கூப்பிட்டு இருக்கிங்களாடி எப்ப பாரு கிழவி கிழவினு கிட்டு என் ராசாத்தி அப்பத்தானு கூப்பிடுறதுக்கு மறு வார்த்தை சொல்லிருக்காளா என்றவர் எப்பவுமே என் வேலு தான் என் செல்லப் பேத்தி என்றார் வடிவுடைநாயகி.

அண்ணி என்று ரேணுகாவைக் கட்டிப் பிடித்த வேல்விழியின் கன்னத்தில் முத்தமிட்டவள் என்னடி வாலு உன் அப்பத்தாவை கொஞ்சிட்டு தான் அண்ணியை பார்ப்பியோ என்றதும் சாரி அண்ணி என்றவள் எங்கே என் டார்லிங் என்றாள்.

விஷ்ணு என்றதும் அத்தை என்று ஓடி வந்து வேல்விழியைக் கட்டிக் கொண்டான் வேல்விழியின் அண்ணன் மகன் விஷ்ணு. அத்தை வா என் கூட என்று வேல்விழியை அழைத்துக் கொண்டு சென்றான்.

கயல்விழி தன் அம்மாவைப் பார்த்து என்னம்மா இவ்வளவு கோபமா இருக்கிங்க என்றதும் இந்த வீட்டில் எல்லாருக்கும் செல்லம் அந்த வேல்விழி தான் அந்த கிழவிக்கு நான் சொந்த அண்ணன் பொண்ணு ஆனாலும் அந்த ராஜி தான் செல்ல மருமகள் என்று குறை பட்டுக் கொள்ள அம்மா விடுங்க இதில் என்ன இருக்கு என்ற கயல்விழி நான் எப்படி இருக்கேனு சொல்லுங்க என்றாள்.

என் மகளுக்கு என்ன குறைச்சல் என்னோட கயலு அழகு தேவதை உன்னை விட அவள் அழகு கம்மி தான் என்றிட அம்மா நீங்க இருக்கிங்களே என்ற கயல்விழி வேல்விழியைத் தேடிச் சென்றாள்.

டேய் என்னடா இது குட்டி ரொம்ப அழகா இருக்கு என்றிட உனக்காக தான் நான் பொத்தி பொத்தி பாத்துகிட்டேன் அத்தை என்ற விஷ்ணு சின்ன அத்தை இந்தா உனக்கும் ஒன்று என்றான் விஷ்ணு. தாங்க்ஸ்டா குட்டி என்ற கயல்விழி முயல்குட்டி அழகா இருக்குல வேலு என்றாள். அது அழகா தான் இருக்கு இப்படி அழகான புடவை கட்டிட்டு இதை தொட்டுருக்க சித்தி பாத்தாங்கனா முயல் செத்துரும் என்றவள் அவளிடம் இருந்து குட்டி முயலை வாங்கி விஷ்ணு இதை கூண்டுக்குள்ள விடு என்றிட அதை அழகாக கூண்டுக்குள் விட்டான் அந்த ஐந்தரை வயது சிறுவன் விஷ்ணு.

வேலுமா, கயலுமா என்று வந்த ராஜசேகரனை அப்பா என்று வேல்விழியும், பெரியப்பா என்று கயல்விழியும் கட்டிக் கொள்ள இரண்டு பேரும் சாப்பிட்டிங்களாத்தா வாங்க போயி சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றார்.

முதல்ல பருத்திப்பாலை குடிங்கடி இரண்டு பேரும் என்ற ரேணுகாவிடம் தாங்க்ஸ் அண்ணி என்றனர் இருவரும். ஆமாம் காலையில் என்ன டிபன் என்ற வேல்விழியிடம் இட்லி இரத்தம், ஈரல் கூட்டு, நாட்டுக்கோழி குழம்பு என்றாள் ரேணுகா. ஐயோ அண்ணி இன்னைக்கு முளைப்பாரி தூக்கப் போறோம் அதனால நான் நைட்டு தான் கவுச்சி சாப்பிடுவேன் என்றாள்.

ஏன்டி பாரி தூக்கும் போது திரும்ப குளிச்சுக்கலாமே என்ற கயல்விழியைப் பார்த்து முறைத்தவள் என்னைப் பத்தி உனக்கு தெரியும் தானே என்றிட சரி சரி என்றாள் கயல்விழி.  வேல்விழி எனக்கு பருத்திப்பால் போதும் நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன் என்றாள். இருடி நானும் வரேன் என்ற கயல்விழியும் வந்து சேர இருவரும் ஜோடியாக கோவிலுக்குச் சென்றனர்.

என்னடி இன்னுமா கிளம்பாமல் இருக்க என்ற கதிரேசனிடம் இதோ கிளம்பிட்டேங்க என்ற தெய்வானை வெற்றி என்றிட என்னங்கம்மா என்று வந்தான் வெற்றிமாறன். என்னப்பா கோவிலுக்கு போகனும்ல என்ற தெய்வானையிடம் நான் ரெடிதான்மா என்றவன் வந்திட உங்க சித்தப்பா எங்கடா என்றார் தெய்வானை.

சித்தப்பா எங்கே வீடு தங்கிருக்காரு அவர் கோவில் வேலையா தான் அலைஞ்சுட்டு இருப்பாரு. திருவிழா ஆரம்பிச்சதில் இருந்தே சித்தப்பா வீடு தங்கவே இல்லையே என்றவனிடம் உங்க சித்தப்பா மட்டும் காலா காலத்தில் ஒரு கல்யாணம் பண்ணி இருந்தால் இந்நேரம் பத்து வயசுல ஒரு புள்ளை இருந்திருக்கும் என்னத்தை சொல்ல என்ற தெய்வானை உங்க அப்பத்தாவை அழைச்சுட்டு வா என்றார்.

அப்பத்தா என்று வந்த வெற்றிமாறனின் நெற்றியில் முத்தமிட்டார் தில்லைநாயகி. அய்யா எங்கப்பா என்றவரிடம் அய்யா மாடு கன்று போட்டுருக்கே அப்பத்தா அங்கே நிற்கிறாரு. கன்றுக் குட்டி கொடி சுத்தி பிறந்திருக்கு அது வீட்டுக்கு ஆகாதுனு மாட்டையும், கன்றுக்குட்டியையும் விலை பேசி வித்துட்டு இருக்காரு என்றவன் வாங்க கோவிலுக்கு போகலாம் என்றான்.

சரிய்யா உன் சித்தப்பன் எங்கே என்றவரிடம் அவரு கோவிலுக்குப் போயிட்டாரு என்றான் வெற்றி. அவனுக்கு அந்த ஆத்தா ஒரு நல்ல வழியை காட்ட மாட்டேங்கிறாளே என்று புலம்பிய தில்லைநாயகியைப் பார்த்து முப்பத்தைந்து வயசாகிருச்சு இனிமேல் உன் மகனுக்கு கல்யாணம் நடந்தால் என்ன நடக்காட்டி என்ன அவன் கொழுப்பு என்று வந்தார் துரைபாண்டியன். ஆமாம் இந்தாளுக்கு என் புள்ளையை எதாச்சும் சொல்லலைனா தூக்கமே வராது என்ற தில்லைநாயகி மாட்டை வித்துட்டிகளா என்றார். என்ன பண்ண லட்சுமியை கொடுக்க மனசே இல்லை கொடிசுத்தி பிறந்தால் கன்றுக்குட்டியா இருந்தாலும் குடும்பத்துக்கு ஆகாதே என்றவர் சரி வாங்க கோவிலுக்கு கிளம்பலாம் என்றிட அய்யா கவலைப்படாதிங்க என்றான் வெற்றிமாறன்.

சரிப்பா உன் அத்தைக்கு போன் பண்ணுனியா அவங்க வீட்டாளுங்க கோவிலுக்கு கிளம்பிட்டாங்க தானே என்றிட எல்லாரும் கிளம்பிட்டாங்கப்பா தங்கச்சி இப்போ தான் போன் பண்ணுச்சு என்று வந்தார் கதிரேசன்.

சரி கோவிலுக்குப் போயிட்டு அப்படியே என் மகள் வீட்டுக்கு போயிட்டு வருவோம் என்றவரிடம் ஏன் மாமா நம்ம வீட்டிலையும் கிடா விருந்து தானே என்றார் தெய்வானை. என் மகளை பார்க்க தான் ஆத்தா உன் அண்ணன் வீட்டுக்கு போறோம் கறிக்கஞ்சி குடிக்க இல்லைத்தா என்றார் துரைப்பாண்டியன்.
அனைவரும் சிரித்து விட்டு கோவிலுக்கு கிளம்பினார்கள்.

என்னடி நான் புடவை கட்டி இருக்கேன் நீ தாவணி கட்டி இரட்டை ஜடை போட்டுருக்க என்ற கயல்விழியிடம் நீ இப்படி டிரஸ் பண்ணலைனா சித்தி உன்னை திட்டுவாங்க. என் அம்மா என் விருப்பம்னு விட்ருவாங்க என்றாள் வேல்விழி. பேசாமல் நான் வேல்விழியா பிறந்திருக்கலாம் என்றாள் கயல்விழி. அவள் சிரித்து விட்டு போடி லூசு என்றாள். ஏய் வேலு, கயலு எப்ப வந்திங்க என்று வந்தாள் கலைவாணி. ஏய் கலை என்ற வேல்விழி காலையில் தான்டி வந்தோம் என்றாள். என்னடி கயல் நீ மட்டும் புடவையெல்லாம் கட்டி பெரிய மனுஷி மாதிரி இருக்க என்றிட எல்லாம் என் அம்மாவை சொல்லனும் என்று மனதிற்குள் நினைத்தாள் கயல்விழி. ஆனால் கயலு செம்ம அழகா இருக்க உன்னை திருவிழாவில் எவனும் கொத்திட்டு போயிராமா நாங்க தான் பாதுகாக்கனும் என்றாள் கலைவாணி.

போங்கடி லூசுங்களா என்ற கயல்விழி சிணுங்கிக் கொண்டாள். என் தங்கச்சியை எவன்டி கொத்திட்டு போவான் வேல்விழி கொன்னுருவாள் என்றதும் என் செல்லம் என்று தன் சகோதரியை கொஞ்சினாள் கயல்விழி.

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!