“ஆ… சின்ன பிள்ளவாடு நேனு பெல்லி சேஸ்க்கொன்ட்டானா? அதை நீங்க எப்புடி முடிவு பண்ணுவீங்க.. என் பர்மிஷன் இல்லாமா என் லைஃபை நீங்க எப்புடி டிசைட் பண்ணுவீங்க” கோவமாக ப்ரதாப் சத்தம் போட்டான்..
“ப்ரதாப் கண்ணா நீ தானே பவித்ரா மேரேஜை பத்தி பேச சொன்ன”,
“அவளோட மேரேஜை தான் பிக்ஸ் பண்ண சொன்னேன்.. என்னோடது இல்ல”..
“இல்ல கண்ணா அங்க போற நம்ம பவித்ராவுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாதுல்ல அதுக்கு தான்” ரங்க நாயகி தட்டு தடுமாறி சொல்ல
“அதுக்கு எனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத பொண்ணை நான் கல்யாணம் பண்ணனுமா”?
“ப்ரியாவுக்கு என்ன குறை பார்க்க நல்ல தானே இருக்கா”? என்ற பவித்ராவை முறைத்தவன் அவள் அருகே வந்து,
“அவளுக்கு குறை இருக்கு குறை இல்லை.. அது இப்ப மேட்டர் கிடையாது.. இரண்டு வீட்டுக்கும் இருக்க ப்ராப்ளம் தெரிஞ்சு தானே லவ் பண்ணுன, அப்புடி உனக்கு அங்க ஏதாவது ப்ராப்ளம் வந்தா அதை நீ தான் சமாளிக்கனும்.. உனக்காக அம்மாவுக்காக பாட்டிக்காகனு உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால்ல கல்யாணம் பண்ண முடியாது”
“நான் யாரை கல்யாணம் பண்ணனும் எப்ப பண்ணனுங்கிறது எல்லாம் என் முடிவு தான்.. என் லைஃப்பில் எல்லா முடிவும் நான் மட்டும் தான் எடுப்பேன்”, அழுத்தமாக கூறி விட்டு அங்கிருந்து வெளியேறினான்..
காரில் சென்று கொண்டு இருந்த ப்ரதாப்பிற்கு இன்னுமே கோவம் அடங்கவில்லை.. ஆட்டு குட்டி போல இருக்க அவ எனக்கு ஜோடியா, எப்புடி சம்மந்தம் பேசலாம் எரிச்சலாக வந்தது…
விஷ்ணுவை அடித்தது எல்லாம் அவனுக்கு நினைவிலே இல்லை.. எதிர்த்த வீட்டு பெண் என்பதால் பார்த்து இருக்கிறான்.. அவன் கவனத்தை அவள் ஈர்த்தும் இருக்கிறாள்.. ஆனால் நல்ல முறையில் இல்லை.. ஒரு வித எரிச்சல்படுத்தும் விதமாக,
வீட்டில் எப்போதாவது ஓய்வு எடுக்கலாம் என்று இருந்தால் இல்லை அவன் வீட்டை விட்டு வெளியேறும் சமயங்களில் அவள் வீட்டில் அவள் காச் மூச் என்று கத்தும் சத்தம் தான் கேட்கும்.. வீட்டில் மட்டுமா, வீட்டு முன்பு சின்ன சின்ன பசங்களோட கிரிக்கெட் விளையாடுவேன், நொண்டி ஆடுகிறேன் என்று கத்தி கொண்டு இருப்பாள்.. அது அவனுக்கு எரிச்சலை கொடுக்கும்.. காலணியின் கமொண்ட் சுவரில் ஏறி அமர்ந்து அவர்களோடு சேர்ந்து கதை பேசி கொண்டு இருப்பதை நிறைய முறை பார்த்து இருக்கின்றான்.. அப்போது எல்லாம் டிஸ்கஸ்டிங் என திட்டியும் இருக்கிறான்..
அவளை நான் எப்புடி? இதுவரை திருமணம் பற்றி வர போகும் மனைவி பற்றி எதிர்பார்ப்பு இல்லை.. ஆனால் விஷ்ணு போல் பொறுப்பு இல்லாத பொண்ணை ஏற்கவும் தயாரில்லை.. இது எப்பவும் நடக்காது என்ற உறுதியோடு அலுவலகம் சென்றான்..
பவித்ராவுக்கு தெரியும் தன் அண்ணன் 99 சதவிகிதம் இந்த பதிலை தான் சொல்வான் என்று, இருந்தும் ஒரு சதவிகிதம் தனக்காக ஒத்து கொள்வானோ என்று ஒரு சின்ன நப்பாசை இப்போது அது இல்லை என்று ஆனது.. இதற்கு மேல் பாட்டி என்ன செய்வோரோ என்று கவலையாக இருந்தது..
விஷ்ணுப்ரதாப் சின்ன வயதிலிருந்தே யார் சொல்வதையும் கேட்க மாட்டான்.. அவனுக்கு சரியயென்று தோன்றும் விஷயங்களை மட்டும் தான் செய்வான்.. படிப்பிலிருந்து போடும் டிரஸ் ஏன் சாப்பாடு முதற்கொண்டு அனைத்து அவன் விருப்பமே..
அவன் தாத்தா விஷ்ணுவரதன் இறந்த பிறகு திருப்பதி மசாலா கம்பெனி படு வீழ்ச்சி கண்டது.. அவன் அப்பாவால் அதை சமாளிக்க முடியவில்லை.. சித்தப்பாவிற்கு அந்த தொழிலில் பெரிதும் விருப்பமில்லை.. அதற்கு காரணம் ஊறுகாய் விற்கிறது எல்லாம் ஒரு தொழில்லா வெளியில் பெருமையா சொல்லிக்க முடியலை என்று மனைவி சொல்லி விட்டதால், தொழிலை போட்டி கம்பெனியிடம் விற்று விடலாம் என்று வெங்கடேஷ் முடிவு எடுக்க, ரங்கநாயகியும் ஒத்து கொண்டார்..
ஆனால் இஞ்ஜீனியரிங் இறுதி ஆண்டில் இருந்த ப்ரதாப்க்கு அதில் துளியும் விருப்பமில்லை.. தாத்தா கஷ்டப்பட்டு உருவாக்கிய சம்ராஜ்ஜியம்.. அவரின் கனவு அதை அப்படியே விட மனது இல்லாதவன்.. அப்போது தனக்கு இருந்த கன்ஸ்டரக்ஷன் கனவை ஒதுக்கி வைத்து விட்டு, வீட்டிலிருக்கும் அனைவரும் வேண்டாம் என்றும் தடுத்தும் கூட திருப்பதி மசாலா கம்பெனி பொறுப்பை ஏற்றான்.. இரா பகலாக உழைத்து நஷ்டத்தில் இருந்த கம்பெனியை மீட்டு எடுத்தான்..அவன் பொறுப்பு ஏற்ற பின்பு தான் திருப்பதி மசாலா, திருப்பதி ஃபுட் ப்ரொடக்டஸ் என்று பெயர் மாறியது..
மசாலா ஐட்டங்களை தொடர்ந்து நூடுல்ஸ் சாஸ் பாஸ்தா வரை அனைத்து உணவு பொருட்களையும் தயாரித்து மார்கெட்ற்கு கொண்டே வந்தவன்.. தொழிலை பல மடங்கு உயர்த்தி இந்தியாவுவில்லே நம்பர் ஒன் ஃபுட் ப்ரொடக்ஸ் என்ற அளவுக்கு கம்பெனியை உயர்த்தினான்.. வெளிநாடு வரை அவர்கள் ப்ரொடக்ஸை கொண்டு சேர்த்தான்.. தொழிலுமே அவன் முடிவே இறுதியானது.. அப்புடிபட்ட தன் அண்ணனை திருமண விஷயத்தில் மட்டும் அவரகள் வழிக்கு கொண்டு வர முடியுமா என்று நினைத்து கவலை பட்டாள் பவித்ரா..
என்னது எனக்கு கல்யாணமா,
அதுவும் எதிர்த்த வீட்டு லைட் ஹவுஸ் கூடயா என்று அதிர்ந்த ப்ரியா..
அம்மா என்னம்மா இது எல்லாம்.. அந்த கிழவி தான் அதோட பேத்தியை இங்க கல்யாணம் பண்ணி கொடுக்க அடமானமா என்னை கேட்குதுன்னா, நீங்களும் சரின்னு சொல்லிட்டு வந்து இருக்கீங்களா,
ப்ரியா எத்தனை தடவை சொல்லி இருக்கேன் பெரியவங்களை இந்த மாதிரி மரியாதை குறைவான வார்த்தையில் பேச கூடாதுன்னு என்று தந்தையின் கண்டிப்பு குரலில் அமைதியானாள்..
எதுக்குடி இப்ப வானத்துக்கும் பூமிக்கும் தைய தக்கன்னு குதிக்கிற, அந்த வீட்டு பெரியம்மா உன் பொண்ணு உன் பேச்சை கேட்க மாட்டாளா உன் வளர்ப்பு அவ்ளோதானான்னு நக்கலா உங்க அப்பாவா பார்த்து கேட்குது.. அதை பார்த்திட்டு சும்மா வர முடியுமா, எப்புடியும் 6 மாசத்துல உன் படிப்பு முடிஞ்சதும் உனக்கு கல்யாணம் தான் பண்ணி வைக்க போறோம்.. அது கொஞ்சம் முன்னாடி நடக்க போகுது அவ்ளோ தான்.. அதுவும் அந்த பையன் ஒத்துக்கிட்டா தான்.. இப்ப கத்தாம போய் உன் வேலையை பாரு என்று கல்யாணி கூறி விட்டு செல்ல,
உதயகுமாரும் அதையே தான் சொல்லி மகளை சமாதானப்படுத்தி விட்டு சென்றார்..
ச்சே என்றபடி ஷோபாவில் தலை மீது கை வைத்து அமர்ந்தாள் விஷ்ணு… ப்ரதாப்போட திருமணமா நினைக்கவே அவளுக்கு சற்று பயமாக தான் இருந்தது.. அவன் அன்று அவளை அடித்த காட்சி கண் முன்னே வந்து வந்து போனது.. இந்த காலனியில் இருக்கும் இளவயது பெண்கள் எல்லாருக்கும் கனவு நாயகன் ப்ரதாப் தான்.. அனைவரும் அவனை பார்க்க அவன் யாரையும் இதுவரை திரும்பி பார்த்ததில்லை.. விஷ்ணுவும் ப்ரதாப்பை சைட் அடித்து இருக்கின்றாள் தான் அவனிடம் அடி வாங்கும் முன்பு வரை, ஒரு நாள் சின்ன பசங்களோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடி அவன் கார் கண்ணாடியை உடைக்க, அதுவும் அவன் கண்ணில் பட்டுவிட, ஓங்கி ஒன்று கன்னத்தில் வைத்தான்.. அதன் பிறகு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க இல்லை.. இந்த நிலையில் அவனுடன் திருமணமா நினைத்தாலே உதறியது… அந்த ஊறுகாய் கடை முதலாளி ஓகே சொன்னா தானே கல்யாணம் ஓகே சொல்லைன்னா, சூப்பர் இந்த கல்யாணமே நடக்காது.. என்று யோசித்தவள் தான் அடுத்த நாள் கல்லூரி முடிந்ததுமே பிரதாப் பை நேரில் சந்தித்து பேச அவனின் அலுவலகத்துக்கு வந்து விட்டாள்..
இதை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டு இருக்கும் போதே அவள் காதில் டொக் டொக் என்ற சத்தம் விழ திரும்பி பார்த்தாள்..
அங்கு விஷ்ணு தான் காரிலிருந்து இறங்கி அலுவலகத்துக்குள் நுழைந்தான்.. மாலையின் இளவெயில் அவனின் முகத்தில் பட்டு ஜொலிக்க, வொயிட் கலர் சிலிம் சர்ட் அதற்கு மேல் லைட் மேரூன் கலர் ஓவன் கோர்ட் அணிந்து கம்பீரமாக நடந்து வந்தவனை இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் விஷ்ணு..
இவ எதுக்கு இங்க வந்தது இருக்கா, புருவத்தை சுருக்கி விஷ்ணுவை பார்த்தவன், என்ன இப்புடி பார்க்கிறா டிஸ்கஸ்டிங் என்று முணுமுணுத்தவாறு ரிஷப்சனில் இருந்தவளை கண்டுகொள்ளாமல் அவனின் அறைக்குள் சென்றான் விஷ்ணுப்ரதாப்..
டிஸ்கஸ்டிங்கா நானா, ஆமா இப்புடி பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை ஆ..ன்னு பார்த்த மாதிரி வச்ச கண்ணு வாங்காம அவனை பார்த்தா அப்புடி தான் உன்னை சொல்லுவான் என்று மனசாட்சி கூற, அது நான் சும்மா பார்த்தேன் அதுக்கு டிஸ்கஸ்டிங் சொல்லுவானா, அவன் தான் டிஸ்கஸ்டிங் என்று அவன் சென்ற திசையை பார்த்து திட்டியவள் திரும்ப, ரிசப்ஷனில் இருந்த பெண் விஷ்ணுவை ஒரு மாதிரியாக பார்த்தது..
அதை எல்லாம் கண்டு கொள்ளாத விஷ்ணு அந்த பெண் அருகில் சென்று இப்ப உங்க சார்க்கிட்ட நான் வெயிட் பண்றேன் சொல்லுங்க.. எனக்கு லேட் ஆகுது என்று விஷ்ணு கூறவும் அந்த பெண் பிரதாப்புக்கு கால் செய்தாள்..
ப்ரதாப் அறைக்குள் கல்யாண பேச்சை மட்டும் தான் ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க, ஆனா அதுக்குள்ளயே ஆபீஸ் வரை வந்து இருக்கா என்ன பொண்ணு இவ என்று விஷ்ணுவை குறைவாக எண்ணினான்..
அப்போது அவனின் ஆபிஸ் போன் அடிக்கவும் எடுத்தான்.. மறுமுனையில் இருந்த ரிசப்ஷனிஸ்ட் பெண்ணோ சார் உங்களை பார்க்கிறதுக்காக மேடம் ஒருத்தங்க வெயிட் பண்றாங்க சார்.. ஹுஸ் தட் என்று கேட்டான் ப்ரதாப் வேண்டுமென்றே,
அவன் கேட்டது விஷ்ணு காதிலும் விழுந்தது.. என்னை தெரியாதமா இவருக்கு ரொம்ப தான் என்றாள் மனதிற்குள்,
நேம் விஷ்ணுப்ரியான்னு சொன்னாங்க சார்..
அப்பாயின்மெண்ட் இருக்கான்னு கேட்டிங்களா அவங்ககிட்ட என்று ப்ரதாப் கேட்டதில் பயந்த போன ரிசப்ஷனிஸ்ட்,
சார் நான் கேட்டேன்.. ஆனா அவங்க தான் உங்களை நல்லா தெரியும். நீங்க தான் வர சொன்னீங்கன்னு ரிசப்ஷனிஸ்ட் பயத்தில் தட்டு தடுமாற கூற,
இடியட் இந்த பதில் சொல்லத்தான் நான் உன்னை வேலைக்கு வச்சு இருக்கானா, யார் என்ன கதை சொன்னாலும் உடனே நம்பி ஆபிஸ்க்குள்ள விடுவீங்களா, அப்பாயின்மெண்ட் இல்லாத யாரையாவது இதுவரை நான் மீட் பண்ணி இருக்கனா, ஆபிஸ் ரூல்ஸ் தெரியாதா உனக்கு என்று அந்த பொண்ணை திட்டி தீர்த்து விட்டு போனை வைத்தான்..
போதுமா மேடம் உங்களால் சார்க்கிட்ட நான் செம டோஸ் வாங்கிட்டேன்.. பர்ஸ்ட் இங்கிருந்து கிளம்புங்க மேடம் இல்லைன்னா என் வேலை தான் போகும் என்று அந்த பெண் கூறியதும் அவமானமாகி போனது விஷ்ணுவுக்கு,” சரியான சிடுமூஞ்சி சிதம்பரம்” என்று ப்ரதாப்பை திட்டியவள் அங்கிருந்து கிளம்பி
ஆபிஸ் வாயில் வரை செல்ல, “மேடம்” என்று மீண்டும் அவளை ரிசப்ஷனிஸ்ட் பெண் அழைத்தாள்.. நின்ற இடத்திலே திரும்பி என்ன என்று கேட்டாள் விஷ்ணு..
“சார் உங்களை உள்ள வர சொல்றாங்க” என்றாள் அந்த பெண்..
“இவர் போக சொன்ன போகனும் வான்னு சொன்னா வரணுமா எனக்கு இப்ப உங்க சாரை ஒன்னும் பார்க்க வேணாம்” என்று ரோஷமாக கூறி விட்டு அங்கிருந்து செல்ல தோன்றினாலும், ரோஷத்தை விட இந்த கல்யாணம் நடக்க கூடாது அது தானே அவளுக்கு வேண்டும் அதனால் அமைதியாக ப்ரதாப் அறைக்கு சென்றாள்..
கதவை தட்டி விட்டு உள்ளே செல்ல அங்கு ப்ரதாப் கால் மேல் கால் போட்டு நாடியில் கை வைத்தபடி கம்பீரமாக அமர்ந்து இருந்தவன் உள்ளே வந்தவளை அழுத்தமாக பார்த்தான்..
அவனின் பார்வையிலே பயம் தோன்ற தலையை குனிந்து கொண்டாள் விஷ்ணு.. இவ்வளவு நேரம் அவனை மனதிற்குள் திட்டி கொண்டு இருந்தவளுக்கு இப்போது அவன் முன்பு பேச வார்த்தைகள் வராமல் சதி செய்தது.. அவர் கேட்கட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்று அமைதியாக தலை குனிந்து நின்று இருக்க..
அவனா பேசுவான்?எவ்வளவு நேரமானாலும் நீ தான் பேசனும் என்று அப்புடியே அமைதியாக அவளை பார்த்தபடியே அமர்ந்து இருந்தான்..
பத்து நிமிடம் பொறுத்து பார்த்தவள் நிமிர்ந்து பார்க்க ப்ரதாப் அவளை பார்த்தபடி அதே நிலையில் இருந்தான்.. மீண்டும் தலையை குனிந்து கொண்டவள் சரியான முசடு என்ன விஷயம்ன்னு ஒரு வார்த்தை கேட்குதா பாரு என்று திட்டியவள், நமக்கு தேவைக்காக நாமா தான் பேசனும் என்று நினைத்த விஷ்ணு,
உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள் மெதுவாக தலையை குனிந்தபடியே,
பேசு அதுக்கு தானே வந்து இருக்க..
வாட் யூ வான்ட்? வந்த விஷயத்தை சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு என் டைம்மை வேஸ்ட் பண்ணாத, ஆல்ரெடி டென் மினிஸ்ட் வேஸ்ட் என்று அவன் கோவமாக பேசவும்,அதில் பயந்தவள் அவன் முகத்தை பார்த்து பேச தைரியம் இல்லாததால் கண்களை இறுக மூடி கொண்டு,
எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. நீங்களும் உங்க வீட்டுல கேட்டா விருப்பமில்லைன்னு சொல்லனும். மாத்தி எதுவும் சொல்ல கூடாது. இதை சொல்லிட்டு போக தான் வந்தேன் என்று ஒரே மூச்சாக கூறி முடித்தவள் கண்களை திறந்து எதிரில் இருந்தவனை பார்க்க,
அவனோ எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது, “நேத்து நைட்டே நான் எனக்கு இந்த மேரேஜ்ல இண்டரஸ்ட் இல்லைன்னு என் அம்மாகிட்ட சொல்லிட்டேன்” என்று அவன் கூற,
மகிழ்ச்சியானவள் “இது போதும் தாங்க் யூ தாங்க் யூ” என்று அவனிடம் கூறி விட்டு அந்த அறையை விட்டு கிளம்ப,
“ஒன் செகண்ட்” என்று அவன் சொடக்கிட, அதில் திரும்பி பெண்ணவள் அவனை பார்க்க, தனது மொபைல் போனை டைல் செய்து ஸ்பீக்கரில் போட்டான். மறுமுனையில் போனை அட்டன் செய்ததும்,
“ஆ… அம்மா நேனு ஆ.. அம்மாயினை பெல்லி சேஸ்கோ வாளன்கொட்டுனானு” என்று அவன் பேச பேச புரியாத பாவையவள் விழி விரித்து பார்க்க,
அதை புரிந்தவன் எஸ் நான் தான்மா சொல்றேன் “மேரேஜ்க்கு எனக்கு டபுள் ஓகே” என்று அவளுக்கு புரியும் பாஷையில் பேச அதிர்ச்சியில் இமை கொட்டாது பெண்ணவள் அவனை பார்த்திருக்க,
என்ன எனும் விதமாக போனை ஆஃப் செய்தவன் அவளை பார்த்து புருவம் உயர்த்த,
அதில் தெளிந்தவள் கொஞ்ச நேரம் முன்ன தானே சொன்னீங்க உங்களுக்கு மேரேஜ்ல இஷ்டமில்லைன்னு,
இப்பவும் சொல்றேன் எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை, அதை விட உன்னை சுத்தமா பிடிக்கலை
அப்புறம் ஏன் இப்புடி? புரியாமல் கேட்டாள் விஷ்ணு..
அம்மாயி எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு, யாராவது வந்து இதை நீ செய்ய கூடாதுன்னு ஆர்டர் போட்டா, அதை தான் முதல்ல செய்வேன்..
என் இடுப்பளவு கூட இருக்க மாட்ட, ஆனா நீ என் முன்னாடி வந்து உன்னை எனக்கு பிடிக்கலைடா, கல்யாணத்தை நிறுத்துடான்னு ஆர்டர் போடுற எவ்வளவு தைரியம் இருக்கனும் உனக்கு,
இந்த மேரேஜ் ஸ்டாப் ஆனா, அது எனக்கு மேரேஜ் பிடிக்காததால் நின்னா தா இருக்கனுமே தவிர உனக்கு பிடிக்காததால் நின்னா தா இருக்க கூடாது அம்மாயி, என்று கூறிய விஷ்ணு பிரதாப் தாடியை தடவ,
“அட ஈகோ பிடிச்ச எருமை உனக்கு தான் வேண்டாமே அதை யார் சொல்லி நின்னா என்ன,இதுல என்ன ஈகோ,
காலேஜ் முடிச்சு பேசாமா வீட்டுக்கு போய் இருந்திருக்கலாம்.. கல்யாணம் தானா நின்னு இருக்கும்… இப்ப பாரு பேசிறேன் சொல்லி வந்து வாயை விட்டு இப்புடி ஒரு ஈகோ பிடிச்ச எருமைக் கிட்ட வந்து மாட்டிகிட்டயேடி என்று தன்னை நொந்தபடி எதிரில் இருந்தவனை கலவரத்துடன் பார்த்தாள் விஷ்ணுப்ரியா…
“என்னங்க சொல்றீங்க அந்த பையன் கல்யாணத்திற்கு சம்மத்திச்சாட்டானா” அதிர்ச்சியாக கேட்டார் கல்யாணி..
“கலை நம்ம வீட்டுக்கு மாப்பிளையா வர போறவர் அவன் இவன்னு இனிமே சொல்லாத என்று கண்டித்தார் உதயகுமார்..
“இல்லைங்க அந்த பையன் ஒத்துக்க மாட்டார்னு நினைச்சு தான் அன்னைக்கு அப்புடி சொல்லிட்டு வந்தேன்.. இப்ப சரின்னு ஒத்துக்கவும் கொஞ்சம் தயக்கமா இருக்கு”என்று கல்யாணி கூறவும்
அதே தயக்கம் வெங்கடேஷ் வந்து பேசும் முன்பு வரை உதயகுமார்க்கும் இருந்தது.. சாயங்காலம் ப்ரதாப் திருமணத்திற்கு சம்மதம் கூறியதை பற்றி பேச வந்த வெங்கடேஷ் உதயகுமாரின் தயக்கம் புரிந்து.. ப்ரதாப் உன்னை என்னை விட ரொம்ப நல்ல டைப்.. அவனை நம்பி ஒரு சின்ன பொருளை கொடுத்தாலே அதை அவன் கண்ணும் கருத்துமா பார்த்துப்போம்.. சின்ன பொருளுக்கே அப்புடினா அவனை நம்பி வர அவன் மனைவியை ரொம்ப நல்லாவே பார்த்துப்பான்..
அவன் கோவக்காரனா இருந்தாலும் உறவுகளோட அருமை தெரிஞ்சவன்.. அது உடையாமா எப்புடி அரவணைச்சு கொண்டு போகனும்னு அவனுக்கு தெரியும்.. ப்ரியா அவன் வாழ்க்கைக்குள்ள வந்துட்டா, எந்த நிலைமிலும் ப்ரியாவை எந்த நிலையிலும் விட்டுர மாட்டான் நீ நம்பலாம் என்று கூறியது உதயகுமார்க்கு சற்று சமாதானமாக இருந்தது.. அதை கூறியே மனைவியையும் சமாதானப்படுத்தினார்..
ஷோபாவில் கன்னத்தில் கை வைத்தபடி இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாள் விஷ்ணு.. தங்கையை பார்த்த பார்த்திபனுக்கு வருத்தமாக இருந்தது…. ப்ரதாப்பின் கோவத்தை பற்றியும் பிடிவாதத்தை பற்றியும் அவனுக்கு தெரியும்.. அதை தன் தங்கையால் சமாளிக்க முடியுமா என்ற கவலையும் உண்டானது.. அவனுக்கு தான் சுயநலமாக நடப்பது புரிந்தது இருந்தும் பவித்ரா மீதான காதல் கண்ணை மறைத்தது..
தங்கை அருகே வந்து அமர்ந்தவன் அவள் தலையை தடவியவன் “ஏன் ப்ரியா இப்புடி அமைதியா இருக்க, ப்ரதாப் ரொம்ப நல்லவன்” என்று சொல்ல,
கன்னத்திலிருந்து கையை எடுத்து விட்டு அவனை திரும்பி ஒரு முறை பார்த்தவள் மீண்டும் அமைதியாக கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து விட்டாள்..
ஒரு பெருமூச்சு விட்ட பார்த்தி “ப்ரியா ப்ரதாப்க்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்குன்னு நினைக்கிறேன்” என்றவனை முறைத்த விஷ்ணு,”அந்த ஆளுக்கு என்னை ரொம்ப பிடிச்சு இருக்கு” அதை நீ பார்த்த போடா டேய் அசிங்கமா ஏதும் சொல்லிட போறேன்” என்றாள்
“பிடிக்க போய் தானடி கல்யாணம் பண்ண ஓகே சொல்லி இருக்கான்.. எனக்கு அவனை பத்தி நல்லா தெரியும்.. யாராலையும் அவனுக்கு பிடிக்காத வேலையை செய்ய வைக்க முடியாது ப்ரியா.. அவனுக்கு உண்மையாவே உன்னை பிடிச்சு இருக்கு.. ப்ரதாப் உன்னை நல்லா பார்த்துப்பான் என்றான் நம்பிக்கையாக,
“அச்சோ உண்மை என்னனு தெரியுமா பேசுற இந்த பைத்தியத்துக்கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க கடவுளே” என்று தனக்குள் கூறி கொண்டவள், பார்த்திபன் புறம் திரும்பி, பார்த்தி உன் மேல்ல செம கடுப்புல இருக்கேன்.. பேசாம போடா, சரியான சுயநலவாதி டா நீ என்னை பேச வைக்காத அப்புறம் அவ்ளோ தான் சொல்லிட்டேன் அந்த பக்கமா போய்டு” அண்ணனை முறைத்தபடி சொன்னாள் விஷ்ணு..
ப்ரியா நான் சொல்றதை”ய
டேய் என அவன் பேச்சை நிறுத்துமாறு கை காட்டியவள்”நீ சொல்ற எதுவும் நடக்காது.. நான் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ அது தான் நடக்க போகுது.. இன்னும் ஆறு மாசமோ இல்ல ஒரு வருஷமோ அதுக்குள்ள டைவர்ஸ் கேட்டு கோர்ட்ல தான் நிற்க போறோம் என்று பேசிய தங்கை தலையில் கொட்டிய பார்த்திபன், ச்சே வாயை நல்லா டெட்டால் போட்டு கழுவு, இன்னும் சேரவே இல்ல அதுக்குள்ள பிரியறதை பத்தி பேசுற லூசு என்று மறுபடியும் அவள் தலையில் கொட்டிய விட்டு கோவமாக சென்று விட்டான்..
ஆனால் விஷ்ணு கூறியது போன்றே சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விஷ்ணு நின்று இருந்தாள்.. இப்பவும் நீங்க விவாகரத்து வேணுங்கிறதில் உறுதியா இருக்கீங்களா என்ற நீ
நீதிபதி கேள்வியில் கண்களை இறுக மூடி வேண்டாம்னு சொல்லனும் கடவுளே விவாகரத்து வேண்டாம்னு சொல்லனும் கடவுளே என்று முணுமுணத்தபடி நின்று இருந்தாள்..
“எஸ் எனக்கு விவகாரத்து கண்டிப்பா வேணும் என்று எதிர்புறம் வந்த குரலில் கண்களை திறந்து எதிரில் இருந்தவர்களை பாவமாக பார்த்தாள் விஷ்ணு..
தொடரும்..
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.3 / 5. Vote count: 34
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,201
1 thought on “Mr and Mrs விஷ்ணு 4”
Lalitha Ramakrishnan
What ? Mr and Mrs Vishnu want to divorce each other?
What ? Mr and Mrs Vishnu want to divorce each other?