பாகம் 5
“நீங்க சொல்லுங்க இப்பவும் நீங்க விவாகரத்து வேணுங்கிறதில் உறுதியா இருக்கீங்களா” என்ற நீதிபதி கேள்வியில் கண்களை இறுக மூடி வாய்க்குள் வேண்டாம்னு சொல்லனும் கடவுளே விவகாரத்து வேண்டாம்னு சொல்லனும் என்று வேண்டியபடி நின்று இருந்தாள் விஷ்ணு..
“எஸ் எனக்கு விவகாரத்து வேணும்”என்ற குரலில் கண்களை திறந்து பாவமாக பார்த்தாள் விஷ்ணு எதிரில் நின்று இருந்த பவித்ராவை,
“பவித்ரா விவாகரத்து வேணும்ங்கிறதில் உறுதியா இருக்காங்க.. உங்க முடிவு என்னனு சொல்லுங்க பார்த்திபன்” என்று கேட்டார் நீதிபதி..
பவித்ராவை ஒரு கணம் அழுத்தமாக பார்த்த பார்த்திபன் “கண்டிப்பா எனக்கும் விவாகரத்து வேணும்” என்று சொல்லவும் அவன் முகத்தையும் பாவமாக பார்த்து கொண்டு இருந்த விஷ்ணுவுக்கு எரிச்சல் வர விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினாள்..
கோர்ட் வளாகத்தில் இருந்த மரத்தின் அருகே சென்றவள் ச்சே என்றபடி அதை எட்டி உதைத்தாள்.. இரண்டும் சரியான லூசுங்க என்று நினைத்தபடி அங்கு போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்சில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்தாள்…
நடக்கும் எதையுமே தடுக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையும் கோவமும் எழுந்தது விஷ்ணுவுக்கு,
இதற்கு தான் இப்புடி வந்து கோர்ட் வாசற்படியை மிதிக்க தான் அவ்வளவு அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா,
ஒரு வருஷம் கூட ஒன்னா சேர்ந்து இருக்க முடியலை..அப்புடி என்ன தான் லவ் பண்ணி கிழிச்சாங்களோ தெரியலை, இருவரும் கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிறதில் எவ்வளவு பிடிவாதமா உறுதியா இருந்தாங்களோ, பிரியம்னுங்கிறதிலையும் அதே உறுதியோடும் பிடிவாதத்தோடும் இருக்காங்களே, யாரை பற்றியும் எந்த கவலையும் இல்லாத சுயநலவாதிகள் என்று பார்த்திபன் பவித்ரா இருவரையும் மனதிற்குள் திட்டி கொண்டு இருக்கும் போதே,பவித்ரா வக்கிலிடம் பேசியபடியே வெளியே வந்தாள்..
அவள் அருகே ஓடி சென்ற விஷ்ணு “அண்ணி” என்று அழைக்க அவளை பார்த்த பவித்ரா எதுவும் பேசாமல் நின்று இருக்க, “என்ன அண்ணி இது எல்லாம், கொஞ்சம் பொறுமையா உட்கார்ந்து பேசி இருந்தாளே எல்லாம் பிரச்சினையும் சரியாகி இருக்கும்.. இது எல்லாம் தேவையா கொஞ்சம் அவசரப்பட்டிங்கனு தோணுது அண்ணி” என்று விஷ்ணு கூறவும்,
“ஆமா அவசரப்பட்டேன் கொஞ்சம் இல்ல ரொம்ப அவசரப்பட்டு நான் சேத்தில்ல விழுந்தது மட்டுமில்லாம என் அண்ணனையும் சேர்த்து விழ வச்சிட்டேன்” என்ற பவித்ராவிடம் என்ன பேசுவது என தெரியாமல் விஷ்ணு நின்று இருக்க..
“நீயாவது சேத்தில்ல தான்டி விழுந்த, ஆனா நான் சாக்கடைன்னு தெரியமா விழுந்துட்டு இப்ப முழிச்சிட்டு இருக்கேன்” என்றான் பின்னால் வந்த பார்த்திபன்..
அவனை முறைத்த பவித்ரா “யாரை பார்த்து சாக்கடைன்னு சொல்ற”,
“உன்னை தான்டி”
“ஏய் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை குடும்பமா சந்தேகப்படற உன் குடும்பம் தான்டா சாக்கடை என்றாள்..
திரும்ப பார்த்திபன் திட்ட, பவித்ரா பதிலுக்கு பதில் பேச என் பொது இடம் என்பதை மறந்து இருவரும் சண்டை போட ஆரம்பித்தனர்..
இவர்கள் இருவரும் இப்புடி சண்டை போடுவதை நடுவில் நின்று பார்த்த விஷ்ணுவுக்கு மணந்தால் மகாதேவன் இல்லையேல் மரணதேவன் என்கிற அளவுக்கு இந்த காதல் கிளிகள் இருவரும் அன்று ஒற்றை காலில் நின்று பக்கம் பக்கமா பேசிய வசனம் தான் கண்முன் வந்து போனது..
ஏன்டி கேவலமான வேலை எல்லாம் நீ பண்ணிட்டு என் குடும்பத்தை பத்தியா பேசுற” என்று பவித்ராவை அடிக்க போனவனை விஷ்ணு கை பிடித்து தடுத்து நிறுத்தினாள்..
“உனக்கும் எனக்கும் நடுவுல்ல இப்ப எதுவுமே கிடையாது.. கோர்ட்டே சொல்லிருச்சு”என்று கையில் இருந்த பத்திரத்தை எடுத்து காட்டியவள், இனிமே அடிக்க வரது வாடி போடிங்கிற வேலை எல்லாம் வச்சுக்காத” என்ற பவித்ரா, மேலும் “இப்ப என்ன அடிக்க கை ஓங்குனதுக்கான விளைவு சீக்கிரம் உங்களை வந்து சேரும்” என்றாள் விஷ்ணுவை பார்த்தபடி,
அவள் எதை பற்றி சொல்கிறாள் என்பது விஷ்ணுவுக்கும் பார்த்திபனுக்கும் புரிந்தது.. “சரி தான் போடி உன்னால்ல என்ன கிழிக்க முடியுமோ போய் கிழிச்சுக்க.. இப்ப மட்டும் என்ன என் தங்கச்சி உன் வீட்டிலையா வாழ்ந்துட்டு இருக்கா, என் வீட்டுல தானே இருக்கா, இதுக்கு மேல்ல நீயும் உன் குடும்பமும் பண்ண என்ன இருக்கு” என்று பார்த்திபன் அலட்சியமாக கூறவும் பவித்ராவும் அங்கிருந்து கோவமாக கிளம்பினாள்..
“என்ன பார்த்தி ஏற்கெனவே இப்புடி பேசி பேசி சண்டை போட்டு தானே கோர்ட் வரை வந்து நிற்கிற, கொஞ்சம் பொறுமையா இருந்தா தான் என்ன” என்று விஷ்ணு பார்த்திபனிடம் கோவப்பட்டாள்..
ஒரு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தன் கோவத்தை கட்டுப்படுத்திய பார்த்திபன் “எவ்வளவு தூரம் தான் பொறுமையா இருக்கிறது ப்ரியா.. உனக்கே நல்லா தெரியும் தப்பு எல்லாம் அவ மேல்ல, செய்றதை எல்லாம் செஞ்சிட்டு டிவோர்ஸ் கொடு, உன் கூட வாழ முடியாதுன்னு முதலில்ல டிவோர்ஸ் கேட்டதும் அவ தான், ஆனா அப்ப கூட அவ பண்ணன எல்லாத்தையும் மன்னிச்சு, நானும் ரொம்ப பொறுமையா அவ கால்ல விழாத குறையா டிவோர்ஸ் எல்லாம் வேண்டாம் வீட்டுக்கு வான்னு எவ்வளவு கெஞ்சி இருப்பேன்,எதையுமே மதிக்காம திமிரா நடந்துக்கிட்டு கடைசி நாமா அவளை சந்தேகப்பட்டு கொடுமை பண்ண மாதிரி பேசுறா, எப்புடி பார்த்துக்கிட்டு இருக்க சொல்ற, மனசே விட்டு போயிருச்சுடாமா” என்று கவலைப்பட்டவன் பக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் முகத்தை மூடியபடி அமர்ந்தான்..
அவனின் மனநிலையும் கவலையும் விஷ்ணுவுக்கு புரிந்தது.. அவன் அருகே அமர்ந்தவள் அவனின் தோளை தொட்டு “விடு பார்த்தி எல்லாம் சரி ஆகிடும் கவலைபடாத”என்றதும், அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்த பார்த்தி “ஆட்டோ பிடிச்சு தரேன் வீட்டுக்கு கிளம்பு” என்றான்…
“ஆட்டோ எதுக்கு உன் வண்டி தான் இருக்குல்ல அதில்லே இரண்டு பேரும் போகலாம்” என்றாள்
“இல்ல ப்ரியாமா வீட்டுக்கு வந்து இப்ப அம்மா அப்பாவை என்னால்ல ஃபேஸ் பண்ண முடியாது, அத்தோடு இப்ப எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்னு தோணுது, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு வரேன் நீ இப்ப ஆட்டோவில் கிளம்பு என்றதும் மறுத்த விஷ்ணு, “இல்ல இல்ல உன்னை தனியா என்னால்ல விட முடியாது நானும் உன் கூட தான் வருவேன்”என்றாள்..
“ஏன் ப்ரியா நான் ஏதும் பண்ணிக்குவேன் பயப்படுறியா?, உன் அண்ணன் அவ்ளோ கோழை எல்லாம் கிடையாது,கண்டிப்பா நைட்டு வீட்டுக்கு வந்துருவேன்” என்ற பார்த்திபன் ஆட்டோவில் விஷ்ணுவை ஏற்றி விட்டான்..
ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த விஷ்ணுவுக்கு மனசே சரியில்லை.. விவாகரத்தை தடுக்க நினைத்தும் முடியவில்லை.. விவகாரத்து ஆகிவிட்டது.. இதற்கு அடுத்து என்ன? ஒன்றும் புரியவில்லை..
எதை எதையோ யோசித்து கொண்டு வந்தவள், யோசனையின் தீவிரத்தில் எப்பொழும் போல கழுத்தில் இருந்த செயினை நிரவி கொண்டு இருந்தவள் கடிக்க ஆரம்பித்தாள்.. அது அவள் பழக்கம் எதையாவது யோசிக்கும் போது செயினை விரலால் சுருட்டுவது அல்ல கடிப்பது என்பது.. எருமை எருமை தாலிச் செயினை இப்புடி கடிக்கிறியே விட்டுற போகுது அபசகுணமா என்ற தாயின் கண்டிப்பு நினைவு வர செயினை விட்டாள்..
அச்சோ என தலையில் அடித்து கொண்டவள் அதை வருடி சரி செய்தாள்.. அபசகுணம் தான் போல அதான் இப்புடி எல்லாம் நடந்து இருக்கின்றது என நினைத்து அதை வருடி கொடுத்தாள்.. வருடும் போதே அவள் கழுத்தில் அதை கட்டியவன் நினைவும் வந்தது.. ஏமி,ஏய், வெரிவாடு, இடியட், உனக்கு மூளை இருக்கா இல்லையா இந்த ஒரு வருடத்தில் அவனுடன் இருந்த ஐந்து மாத காலத்தில் அவன் அதிகமாக அவளிடம் பயன்படுத்திய வார்த்தைகள் இது தான்.. இப்போதும் கூட அவன் திட்டுவது அவள் காதில் விழுவது போன்று இருந்தது.. வெறும் ஐந்து மாதம் ஐந்தே மாதம் மட்டும் தான் ப்ரதாப்புடன் அவன் வீட்டில் இருந்தாள்.. அதன் பிறகு அவள் வீட்டில் தான் இருக்கின்றாள்.. தன் வீட்டிற்கு வந்து ஏழு மாதம் ஆகிறது.. கடந்த வாரம் தான் முதல் திருமண நாள் வந்தது.. நால்வரும் நாலு மூலையிலிருந்து முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.. இன்று மனம் ஏனோ அந்த ஐந்து மாத நினைவை மீட்டியது..
ஒரு வருடத்திற்கு முன் ப்ரதாப் திருமணத்திற்கு ஒத்து கொண்ட பின் இரு வீட்டிலும் சிறு சிறு நெருடல்கள் இருந்தாலும் அதை புறந்தள்ளி வைத்து விட்டு திருமண ஏற்பாட்டை செய்தனர்.. முதலில் பவித்ரா பார்த்திபன் திருமணம் அடுத்த முகூர்த்தத்தில் விஷ்ணுப்ரதாப் விஷ்ணுப்ரியா திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று பாட்டி ரங்கநாயகி கூற, அதை மறுத்த விஷ்ணு அன்னை கல்யாணியோ இரண்டு கல்யாணமும் ஒன்றாகவே வச்சிக்கலாம் என்றார்.. ஏனெனில் முன்பு மகா விஷயத்தில் ரங்கநாயகி நடந்து கொண்டது போல, விஷ்ணு விஷயத்தில் ஏதாவது தகடு தத்தம் செய்து விடுவாரோ என்று கல்யாணிக்கு பயம் அதனால் இரண்டு கல்யாணமும் ஒன்றாக தான் நடக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்ல அதன்படி இரண்டு திருமணமும் ஒரே நாளில் நிச்சயிக்கப்பட்டது..
திருமணத்திற்கு இடைப்பட்ட கால கட்டத்தை பவித்ரா பார்த்திபன் இருவரும் இனி எங்களுக்கு ஏது தடை எனும் ரிதியில் இதுவரை மறைந்து மறைந்து காதல் செய்தவர்கள் சுதந்திரமாக ஒன்றாக வெளியே சுற்றியும் மொபைல் போனே தீஞ்சு போகும் அளவு போனில் பேசியும் காதலை வளர்க்க, ப்ரதாப்போ முகூர்த்த டைம் எப்போன்னு சொல்லுங்க வந்து தாலி கட்டுறேன்.. வேற எதுக்கும் என்னை எதிர்பார்க்காதீங்க.. எனக்கு நிறைய வேலை இருக்கு பயங்கர பிசி என்று சொல்லிட்டு வேலையில் முழ்கி விட்டான்..
விஷ்ணுவும் கல்யாணமே எனக்கு பிடிச்ச மாதிரி இல்லை, இதில்ல வெட்டிங் கார்ட், புடவை, நகை மட்டும் எனக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கனுமா, நீங்களே எல்லாத்தையும் பார்த்துங்கோங்க எனும் ரிதியில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தாள்..
பார்த்திபன் பவித்ரா ஒன்றாக ஷாப்பிங் போவது, சுற்றி திரிவது, இரவு பகல் பாராமல் போனில் பேசி கொள்வது என இருக்க, அதை பார்த்த விஷ்ணு பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான் நமக்கு இது எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என ஏக்க பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டாள்..
திருமண நாளும் வந்தது..பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ என்று ஐயர் சொன்னதும் பச்சை பட்டுத்தி அலங்காரம் ஜொலிக்க அன்ன நடையிட்டு வந்த பவித்ராவை பார்த்திபன் கண்ணை சிமிட்டாமல் காதலுடன் பார்க்க அவளும் அதே போல் அவனையே பார்த்தபடி நடந்து வந்தாள்.. மற்றோரு மனையில் இருந்த ப்ரதாப்போ கருமமே கண்ணாக ஐயர் சொன்ன மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தான்.. விஷ்ணு குங்குமநிறத்தில் ஆங்காங்கே கற்கள் பதித்து அழகிய வேலைப்பாடு கொண்ட பட்டுத்தி மிதமான மேக்கப்பில் கூட அழகாகவே இருந்தாள்.. அவளை பார்த்த ரங்கநாயகி என் பேரன் பக்கத்தில்ல நிற்கும் போது எலிக்குட்டி மாதிரி இருப்பான்னு நினைச்சேன், பரவாயில்லை புடவை கட்டின அப்புறம் கொஞ்சம் பெரிய பொண்ணா தான் தெரியுறா அழகாகவும் தான் இருக்கா என்று தனக்குள் சொல்லி கொண்டார்..
விஷ்ணு ப்ரதாப் அருகே வந்து அமரவும் தான் ப்ரதாப் அவளை திரும்பி பார்த்தான்.. விஷ்ணுவும் அதே நேரம் அவனை திரும்பி பார்த்தாள்.. இருவர் விழியும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது.. ஒரு நொடிக்கும் குறைவான இருவரும் பார்வையை திருப்பி கொண்டனர்.. கோர்ட் சூட்டை விட வேஷ்டி சர்டில் இன்னும் அழகா கம்பீரமா இருக்கார் என்று மனதில் நினைத்து கொள்ள, விஷ்ணு உனக்கு இது பிடிக்காத கல்யாணம் அப்புறம் ஏன் அவரை ரசிக்கிற என்ற மனசாட்சி கேள்வி எழுப்ப ஆமால்ல அதை மறந்துட்டேன் என்றவள் அமைதியாக ஐயர் கூறிய மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தாள்.. கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் சொன்னவுடன் மாங்கல்யத்தை கையில் வாங்கிய ப்ரதாப் விஷ்ணு முகத்தை பார்த்து விட்டு மீண்டும் மாங்கல்யத்தை பார்த்தவன் கண்ணை மூடி பெரு மூச்சு ஒன்றை வெளி விட்டபின் கண்களை திறந்து கையில் இருந்த மாங்கல்யத்தை விஷ்ணு கழுத்தில் கட்டி தன்னவளாக்கி கொண்டான்..
பார்த்திபனும் பவித்ரா கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன் சரிபாதி ஆக்கி கொண்டான்.. அதன்பின்பான சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் மணமக்களை அவரவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.. முன்பு எதிரெதிர் வீட்டில் தான் இருந்தனர்.. கல்யாண பேச்சு வார்த்தை தொடங்கிய பின் ரங்கநாயகி கல்யாண ஆன பின்பு பக்கத்து பக்கத்தில் இருந்தா அவ்வளவா நல்லா இருக்காது என்று சொல்ல,
ப்ரதாப்புக்கும் அதான் சரியெனப்பட்டது.. உறவுகள் பக்கம் இருப்பதை விட தள்ளி இருப்பதே நல்லது என, அதனால் அவர்களின் இன்னோரு பங்களாவிற்கு சென்று விட்டனர்..
அங்கு தான் இப்போது விஷ்ணு அழைத்து செல்லப்பட்டாள்.. காரிலிருந்து இறங்கி பார்த்த விஷ்ணுவுக்கு பங்களாவே பயமுறுத்தியது.. ஆரத்தி எடுத்ததும் வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் சென்று விளக்கு ஏத்தி சாமி கும்பிடும் வரை விஷ்ணு அருகிலிருந்தான் ப்ரதாப்.. அதன்பின் பாலும் பழமும் சடங்கிற்கு எனக்கு பால் பிடிக்காது வேணாம் அவளுக்கு மட்டும் கொடுங்க என்றவன் மேலே உள்ள தன்னறைக்கு சென்று விட்டான்.. இது புதுசா கல்யாணம் பண்ணுவங்களுக்கான சடங்கு இதை கண்டிப்பா தம்பதிங்க செய்யனும் என்று அவனிடம் கூற யாருக்கு அங்கு தைரியம் உள்ளது.. அதனால் அவனை யாரும் எதுவும் சொல்லவில்லை.. ப்ரதாப் வேண்டாம் என்று கூறி விட்டதால் தனக்கும் வேண்டாம் என்று விஷ்ணு கூறி விட்டாள்..
பவித்ரா பார்த்திபனை விஷ்ணு வீட்டிற்கு அழைத்து செல்லபட்டதால் அங்கு இருக்க வேண்டும் என்பதால் உதயகுமார் கல்யாணி இருவரும் விஷ்ணுவை புகுந்த வீட்டிற்கு விட அவளுடன் வரவில்லை.. கல்யாணியின் தங்கை உறவு முறை பெண்கள் தான் விஷ்ணுவுடன் வந்து இருந்தனர்… தாய் தந்தை கூட வராதது விஷ்ணுவுக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது.. இங்கு வேறு அனைவரும் அவளுக்கு புரியாத தெலுங்கு பாஷையில் விஷ்ணுவுக்கு தான் ஏதோ வேற்று கிரக்த்தில் வந்து தனித்து விடப்பட்டது போன்று இருந்தது..
அந்த வீட்டில் யாருமே அவளை கண்டு கொள்ள வில்லை.. தேவகி வெங்கடேஷ் இருவரும் பவித்ராவை பார்த்திபன் வீட்டில் கொண்டு விடுவதற்காக விஷ்ணு வீட்டிற்கு சென்று இருந்தனர்.. ரங்கநாயகி நிறைய சொந்தங்கள் தியுமணத்திற்கு வந்து இருக்க அவர்களுடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்.. ப்ரதாப் சித்தி விசாலாட்சி வெளியே இருந்தால் வேலை செய்ய சொல்வார்களோ என்ற பயத்தில் அறைக்குள் அடைந்து கொண்டார்.. விஷ்ணு மட்டும் தனியாக ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து இருந்தாள்..
மதியம் சாப்பிட்ட பின்பு கீழேயுள்ள ஒரு அறையில் விஷ்ணுவை ஓய்வெடுக்க சொல்லி அனுப்பினர்.. அப்போது அங்கு ப்ரதாப்பின் சொந்தங்களில் சில தமிழ் தெரிந்த இளவயது பெண்கள் விஷ்ணுவுடன் பேசி கொண்டு இருக்கின்றேன் என்ற பெயரில் முதல் இரவை பற்றி மட்டுமே பேசி கேலி செய்து சிரிக்க விஷ்ணுவுக்கு தான் அதை எல்லாம் சகிக்க முடியவில்லை.. பிடித்த திருமணம் என்றால் ஒரு வேளை அவர்கள் பேச்சை எல்லாம் ரசித்திருக்க முடியுமோ என்னவோ? இப்போது இவர்கள் பேச்சு எல்லாம் விஷ்ணுவுக்கு நாணத்தை தரவில்லை.. ஏற்கெனவே ப்ரதாப் மீது பயத்தில் இருந்தவளுக்கு இப்போது அது இன்னும் அதிகரிக்க தான் செய்தது..
தொடரும்…
My goodness!! Both pairs separated ?? Hmm .
Yes separate than irukanga sis thanks for ur support sis♥️♥️♥️
Yes separate than irukanga sis thanks for ur support sis♥️♥️♥️