பரீட்சை – 76
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
எவ்வளவு சாட்சி
வேண்டுமடி உனக்கு..?
எவ்வளவு சான்று
தேவையடி உனக்கு..?
என்னை நம்ப
மறுக்கிறாய்.. நீ
உன்னையே நம்ப
மறுக்கிறாய்..
உன் மறதியால்
என்னை கொல்கிறாய்..
கேள்விகளால் என்னை
துளைக்கிறாய்..
உயிரை விட்டிடுவேன்
என்று சொல்லி
என் உயிரை
எடுக்க பார்க்கிறாய்..
###################
உயிரான உயிரே..!!
“ஒரு வேளை அருண் எழுந்து தேஜூ பத்தி கேட்டான்னா என்ன சொல்லுவீங்க?” என்று கேட்டார் அழகப்பன் அருணின் தாத்தாவிடம்….
“அதை நான் பார்த்துக்கிறேன்.. அப்படியே அருண் குணமானாலும் இப்போதைக்கு அருண் உங்க பொண்ணை சந்திச்சான்னா அது உங்க பொண்ணுக்கு பெரிய விபரீதத்தில போய் முடியும்.. அதனால உங்க பொண்ணு இன்னும் கொஞ்ச நாளைக்கு அருணை சந்திக்காம இருக்கறது தான் அவளுக்கு நல்லதா இருக்கும்.. நான் இதை அருணுக்கு சொல்லி புரிய வைக்கிறேன்.. ஒரு ஒரு வருஷம் கழிச்சு உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு தெரிஞ்சப்புறம் நான் அருணை வந்து அவளை பார்க்க சொல்றேன்..” என்று அவர் சொல்ல அழகப்பனுக்கு அவர் சொல்வதில் எந்த தவறும் இருப்பதாய் தெரியவில்லை.. அதனால் தேஜுவை கூட்டிக்கொண்டு அந்த ஊரை விட்டு புறப்பட்டு தன் வீட்டிற்கு சென்றார்..
########################
டைரியில் நடந்ததை எல்லாம் படித்த வைஷூ “விதி எவ்வளவு கொடுமையா விளையாடி இருக்குடா உங்க வாழ்க்கையில?! விதின்னு சொல்றதை விட அந்த சரணும் நித்திலாவும் பயங்கரமா விளையாடிட்டாங்க..” என்று சொல்ல தேஜுவோ அப்படியே உறைந்து நின்று இருந்தாள்..
பிறகு தன் உறைநிலையில் இருந்து வெளிவந்தவள் “இல்ல.. இது எல்லாமே பொய்.. நான் நம்ப மாட்டேன்.. எங்க அப்பா நிச்சயமா இவ்வளவு பெரிய பொய்யை என்கிட்ட சொல்ல மாட்டார்.. எங்க அத்தைக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்ற நியூஸ் கேட்டு நாங்க கார்ல போயிட்டு இருந்தப்ப கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. மத்தவங்களுக்கெல்லாம் சின்ன சின்ன அடி தான் பட்டது.. ஆனா எனக்கு தலைல பலமா அடிபட்டதனால ரெண்டு வருஷம் நான் கோமால இருந்தேன்.. அதுக்கப்புறம் நான் கோமால இருந்து வெளிய வந்தப்போ என்னை சென்னையில ஒரு காலேஜ்ல சேர்த்தார்.. எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் இருக்க கூடாதுன்னு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ்ல மேத்ஸ் குரூப் எடுத்தேன்.. அங்க ரெண்டாவது வருஷம் என் படிப்பை முடிக்கும் போது என்னை ராமோட அம்மா ஒரு கோவில்ல சந்திச்சு அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சு போச்சு.. அவங்க ராமை கூட்டிட்டு வந்து என்னை பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சாங்க.. இதுதான் உண்மை.. எங்க அப்பா நிச்சயமா பொய் சொல்லி இருக்க மாட்டாரு.. அந்த சமயத்துல என் உயிரை காப்பாத்த பொய் சொல்லி இருந்தாலும் நிச்சயமா ராமை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி அவர் என்கிட்ட உண்மையை சொல்லி இருப்பாரு.. இந்தக் கதை எல்லாமே பொய்.. இவன் ஏதோ நான் கொடைக்கானல் ஹாஸ்பிடல்ல கோமாவில இருந்தப்போ என்னை பார்த்துட்டு பிடிச்சு போய் என்னை அடையணும்ங்கிறதுக்காக இல்லாத கதை எல்லாம் எழுதி வச்சிருக்கான்.. நான் இதை நம்ப மாட்டேன்..” என்று சொன்னாள் அவள்..
“அஷ்ஷூமா.. நீ ரொம்ப அவசரப்படுற.. டைரியை முழுசா படி அஷ்ஷூமா.. உன் லைஃப்ல என்ன நடந்தது? ஏன் உங்க அப்பா உன்கிட்ட பொய் சொன்னாரு? இது எல்லாமே உனக்கு தெரியும்.. கொஞ்சம் பொறுமையா இரு.. அவசரப்படாதே..” என்று சொன்னவனை “டேய் ரொம்ப விளையாடுற டா என் வாழ்க்கையில நீ.. வேண்டாம்டா.. இப்படி எல்லாம் பண்றதுனால நீ என்னை அடைய முடியும்னு நினைச்சுட்டு இருக்கே.. ஆனா இப்படி எல்லாம் பண்றதுனால நான் யாருக்குமே இல்லாம போயிருவேன்.. செத்துப் போவேனே தவிர உன் கைக்கு கிடைக்க மாட்டேன்.. நான் என் ராமுக்கு மட்டும் தான் சொந்தம்..” என்று கத்தினாள் அவள்..
“சரி.. இவ்வளவு சொல்ற இல்ல? வா.. எங்க அப்பா கிட்ட போலாம்.. அவர்கிட்ட கேட்கலாம்.. உண்மையா என்ன நடந்ததுன்னு” என்று சொல்ல சத்தமாக சிரித்தான் அருண்..
“அஷ்ஷூமா.. நீ சொல்றது உனக்கே காமெடியா இல்ல..? உன் உயிர் போயிடுமேன்ற பயத்துல அப்ப எல்லா விஷயங்களையும் மறைச்சவரு.. இப்போ எல்லாத்தையும் சொன்னா உன் வாழ்க்கை பாழாயிடுமேன்னு தானே நினைப்பாரு.. இப்போவும் அவர் சொல்ல மாட்டார்.. இந்த மாதிரி எதுவுமே நடக்கலன்னு தான் சொல்லுவாரு.. ஏன்னா இது உனக்கு தெரிஞ்சா நீ தாங்க மாட்டேன்னு அவருக்கும் தெரியும்.. அதனால நிச்சயமா சொல்ல மாட்டார்.. நீ ஏதாவது பண்ணிக்குவன்ற பயத்துல உன் கிட்ட இருந்து அவர் நிச்சயமா இதை மறைப்பாரு.. ஆனால் அவருக்கு தெரியாத ஒரு விஷயம் என்ன தெரியுமா? என்னை மீறி எமன் கூட உன் கிட்ட வர முடியாதுங்கறது தான்.. அவன் கூட என்னை தாண்டி தான் உன்கிட்ட வரமுடியும்..” என்று சொன்னான் அருண்..
“இல்ல.. நான் எங்க அப்பாவை சொல்ல வைக்கிறேன்.. நீ வா..” என்று சொன்னவுடன் “அஷ்ஷூமா.. அதுக்கு பதிலா நான் உனக்கு வேற வழி சொல்றேன்.. நம்ம போலாம்.. கொடைக்கானலுக்கு போலாம்.. அங்க நான் உன்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறேன்.. நம்ம போன இடங்கள்.. நம்ம டேட்டூ போட்டுக்கிட்ட இடம்.. நம்ம கல்யாணம் நடந்த இடம்.. அங்க ஊர் சுத்துன இடம்.. நீ இருந்த வீடு.. நம்ம படிச்ச காலேஜ்.. எல்லா இடத்துக்கும் உன்னை கூட்டிட்டு போறேன்.. அங்க இருக்கிறவங்களோட நீ பேசு.. நான் ஒருத்தன் பொய் சொல்ல முடியும்.. அங்க இருக்குற நீ சந்திக்க போற கிட்டத்தட்ட 100 பேர் போய் சொல்லுவாங்களா? அந்த காலேஜ்ல அவ்ளோ பசங்க படிச்சாங்க.. எத்தனை பசங்களோட வேணா உன்னை பேச வைக்கிறேன்.. அவங்க எல்லாரும் நிச்சயமா பொய் சொல்ல மாட்டாங்க.. அதே மாதிரி நம்ம போன ஒவ்வொரு இடத்திலும் இருக்கிற அத்தனை ஆளுங்களும் பொய் சொல்ல மாட்டாங்க.. நீ என்னோட வா..” என்று சொன்னான் அவன்..
“நீ அங்க எத்தனை ஆளுங்களை செட் பண்ணி வச்சிருக்கியோ..? பணத்தை விட்டு எறிஞ்சா எவ்வளவு ஆளுங்க வேணா உனக்காக நடிக்கிறதுக்கு வருவாங்க இதோ இந்த கல்யாணி அம்மா மாதிரி.. அதை நம்பி நான் எதுக்கு உன்னோட வரணும்?” என்று சொன்னவுடன் “சரி.. மத்தவங்க எல்லாம் நான் செட் பண்ணி வச்சிருக்க ஆளா இருக்க வாய்ப்பிருக்கு.. உங்க அத்தை பொண்ணு நிவேதா இருக்கா இல்ல? அவ நான் செட் பண்ண ஆள் கிடையாது இல்ல? உன்னை அவகிட்ட கூட்டிட்டு போறேன்.. அவ கிட்ட கேளு..” என்றான் அருண்..
“நிவேதா இப்போ ரீசன்டா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு அவ புருஷனோட..” என்று தேஜூ இழுக்க “லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு அவ புருஷனோட கொடைக்கானல்ல இருக்கா.. அவகிட்ட கூட்டிட்டு போறேன்.. அவளோட பேசு.. அவ நிச்சயமா உன்கிட்ட உண்மையை தான சொல்லுவா.. அவளுக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லையே.. அப்ப நீ நம்புவே இல்ல..?” என்று கேட்டான் அருண்..
“இவ்வளவு பேசுறியே.. அங்க உனக்கு சரியா ஆனவுடனே உங்க தாத்தா எங்க அப்பாக்கு சொல்றேன்னு சொன்னாரு இல்ல..? நீ தான் இப்போ உயிரோட குத்து கல்லாட்டமா வந்து இருக்கியே.. அப்புறம் எங்க அப்பா கிட்ட உனக்கு சரியாயிடுச்சுன்னு சொல்லி நீ என்னை வந்து ஏன் பார்க்கவே இல்லை? இந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம் இல்லனா ஒன்றரை வருஷத்துல நீ வந்து பார்த்திருந்தேனா.. அப்ப இந்த கதை எல்லாம் சொல்லி இருந்தேனா.. நான் நம்பியிருப்பேன்.. ஆனா இவ்வளவு வருஷமா நீ எங்க போயிருந்த? இப்ப திடீர்னு வந்து என்கிட்ட இப்படி ஒரு கதையை சொல்றே.. நான் எப்படி உன்னை நம்பறது?” என்று கேட்டாள் தேஜூ..
“நான் முன்னாடியே சொன்னேன்.. அந்த டைரியை படின்னு.. டைரியை முழுசா படி அஷ்ஷூமா.. நீ கேட்கிற அத்தனை கேள்விக்கும் பதில் கிடைக்கும்..” என்றவன் “சரி என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..” என்றான் அவளிடம்..
“என்ன கேள்வி..?” என்பது போல அவனைப் பார்த்தவளிடம் “உங்க அப்பா ஜெனரலா எல்லா லவ் மேரேஜையும் எதிர்ப்பாரா?” என்று கேட்க “இல்லை அப்படியெல்லாம் இல்லை..” என்று சொன்னவுடன் “உங்க அப்பா நிவேதா தான் லவ் பண்ணின பையனை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னப்போ அதை ஏத்துக்கிட்டாரா?” என்று கேட்டான் அருண்..
அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.. நிவேதா காதலிக்கும் பையன் நல்லவன் கிடையாது அவனோடு அவள் கல்யாணம் நடக்க கூடாது என்று தன் அப்பா அவளிடம் வாக்குவாதம் செய்தது அவளுக்கு நினைவு வந்தது..
“நிவேதாவோட லவ்வை எங்க அப்பா ஏத்துக்காததுக்கு காரணம் அந்த பையன் நல்லவன் கிடையாதுன்கிறது தான்..” என்றாள்..
“அப்படி சொல்லி வெச்சிருக்கிறாரா உன்கிட்ட.. பாவம் டா சின்ன பையா நீ..” என்றான் அவன்..
“என்ன..? சின்ன பையனா..? நிவேதா கல்யாணம் பண்ணிக்கிட்ட பையன் பேரு கார்த்திக்..னு தானே சொன்னாங்க..” என்று சொல்ல “ஆமா.. அவன் எனக்கு, உனக்கு, நிவேதாக்கு, உங்க அப்பாக்கு தான் சின்ன பையன்.. மத்தவங்களுக்கு எல்லாம் கார்த்திக்.. அப்படித்தான் அவனோட அஃபிஷியல் நேமை நான் கொடுத்து வச்சிருந்தேன்..” என்றான் அருண்..
தேஜுக்கு தலை சுற்றியது.. இவன் சொல்வதெல்லாம் நிஜமா? இவனை நம்புவதா? வேண்டாமா? தன் தந்தையிடம் பேசுவதா இல்லை அவனோடு கொடைக்கானல் செல்வதா? என்று யோசித்துக் குழம்பிக் கொண்டே இருந்தாள்..
“சரி அஷ்ஷூமா.. ரொம்ப குழப்பிக்காத உன்னை நீயே.. அப்புறம் கேட்ட இல்ல ஒரு கேள்வி.. குத்துக்கல்லாட்டமா இருக்கேனே.. அப்பவே ஏன் உன்னை வந்து பார்க்கலைன்னு.. அதுக்கான பதில் அந்த டைரியில இருக்கு.. வைஷு.. அதை படி..” என்று தேஜூவை பார்த்துக் கொண்டே சொன்னான் அருண்..
வைஷுவும் தொடர்ந்து படிக்கலானாள்..
#######################
அழகப்பன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும் அப்படியே உயிரற்று போய் அமர்ந்திருந்தான் ராம்..”மாமா நீங்க தேஜூ கிட்ட ரெண்டு வருஷம் அவ கோமால இருந்தான்னு சொன்னதெல்லாம் சரிதான்.. அவ உயிரை காப்பாத்த தான் அப்படி சொல்லி இருக்கீங்க.. ஆனா என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாமே மாமா.. என்கிட்ட எதுக்கு மறைச்சீங்க? நான் அப்பவே அந்த அருணை தேடி போயி எப்படியாவது தேஜூவை அருணோட சேர்த்து வெச்சிருப்பேனே மாமா.. தப்பு பண்ணிட்டீங்க மாமா..” என்றான் ராம்..
“மாப்ள.. அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருந்தா நானே அதை பண்ணி இருக்க மாட்டேனா மாப்ள? என்னை மன்னிச்சிடுங்க மாப்பிளை.. நான் உங்ககிட்ட இதை மறைக்கணுங்கறதுக்காக மறைக்கல.. அதுக்கப்புறம் நடந்த சம்பவம் அப்படி.. உங்கம்மா வந்து என்கிட்ட ஃபோன் பண்ணி தேஜூவை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கேட்டப்போ நான் அருணை காதலிச்ச என் பொண்ணை உங்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்கறதுன்னு ரொம்ப யோசிச்சு அதுக்கப்புறம் இனிமே அவ வாழ்க்கையில அருண் வரப்போறதா இருந்தா தான் நான் அதை பத்தி கவலைப்படணும்னு நினைச்சேன்.. கொடைக்கானல்ல அந்த ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணேன் அருணுக்கு என்ன ஆச்சுன்னு கேக்குறதுக்கு..” என்று அவர் சிறிது நிறுத்தவும் “அருணுக்கு என்ன ஆச்சுன்னு சொன்னாங்க மாமா? அவன் பொழைச்சிட்டான்னு தானே சொல்லி இருப்பாங்க.. அவன் தான் இப்போ உயிரோட நல்லா இருக்கானே..?” என்று ராம் கேட்டான் பதட்டமாய்..
“அதான் இல்ல மாப்ள.. அருண் நாங்க கிளம்பின ஒரு வாரத்திலேயே இறந்து போயிட்டான்னு சொன்னாங்க..எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.. நல்லா யோசிச்சு அருணை பத்தி என் பொண்ணு கிட்டயும் உங்க கிட்டயும் சொல்றதுனால அவ வாழ்க்கை கெட்டு தான் போகப் போகுது.. அதுக்கு பதிலா அவ கோமாவில ரெண்டு வருஷம் இருந்ததாவே நினைச்சுக்கட்டும்னு நினைச்சு தான் நான் உங்ககிட்டயும் அவகிட்டயும் அவளோட அந்த கொடைக்கானல் வாழ்க்கையை மறைச்சிட்டேன்.. நான் சொல்லாததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.. தேஜூ கிட்ட உங்க கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி நான் இந்த விஷயத்தை சொல்லி இருந்தேனா அவ அருண் செத்து போயிருந்தாலும் அவனை தானே நான் விரும்பினேன்னு சொல்லி அவனுக்காக கல்யாணமே பண்ணிக்காம அப்படியே இருந்திருப்பா.. எனக்கு அதுல இஷ்டம் இல்லை.. செத்துப்போனவனை நினைச்சுக்கிட்டு அவ வாழறதுக்கு அட்லீஸ்ட் உயிரோட இருக்கிற உங்களோட தன் வாழ்க்கையை பகிர்ந்துக்கட்டும்னு நெனச்சேன்.. அவளை பொறுத்த வரைக்கும் அவ மனசுல அருண்கிற சாப்டரே இல்லை.. அருண்ன்னு ஒருத்தரை அவளை பொறுத்த வரைக்கும் அவளுக்கு தெரியாது.. அனாவசியமா எதுக்கு அவ மனசை குழப்பணும்னு தான் அவ கிட்ட நான் சொல்லல… உங்க கிட்ட சொன்னேன்னா கல்யாணத்துக்கு அப்புறம் ஏதோ ஒரு பிரச்சனை.. ஒரு வாக்குவாதம்னு உங்க ரெண்டு பேருக்குள்ள வரும்போது எங்கேயாவது தேஜு கிட்ட அதை சொல்லிட போறீங்களேன்னு ஒரு பயம் இருந்தது.. அப்படி சொன்னிங்கனா அவ அந்த நிமிஷமே உயிரை விட்டுடுவான்னு எனக்கு தெரியும்.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தரை காதலிச்சிட்டு உங்களை கல்யாணம் பண்ணதை அவளால நிச்சயமா தாங்கவே முடியாது.. அதனாலதான் உங்ககிட்டயும் சொல்லல.. ஆனா இப்போ உங்க குணத்தை பார்க்கிறப்போ உங்க கிட்ட சொல்லி இருக்கலாமோன்னு தோணுது மாப்பிள்ளை.. என்னை மன்னிச்சிருங்க மாப்ள..” என்றார் அழகப்பன்..
“எனக்கு புரியுது மாமா.. ஆனா ஹாஸ்பிடல்ல அருண் செத்துப் போனதா உங்களுக்கு ஏன் சொல்லணும்? அதுதான் எனக்கு புரியல..” என்றான் ராம்..
“அந்தக் கேள்விக்கு பதில் உங்க கல்யாணம் முடிச்சு ரெண்டு வருஷம் கழிச்சு எனக்கு கெடைச்சுது.. ஏன்னா அப்பதான் அருண் வந்து என்னை பார்த்தான்..” என்றார் அழகப்பன்..
தொடரும்.
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”